1001ல் ஒருவன் படம் வன்முறை என்று சொல்லவில்லை. 1001 வன் படத்துக்கு 1002 ஆவது விமர்சனம் எழுதுவது பதிவுலக வன்முறை தான். இருந்தாலும் தம்பி பொடியன் சஞ்செய் (ஏழு கழுத வயசானாலும் சின்னப் பையன் என்று நம்பனும் என்று அவராகவே பொடியன் என்று பெயர் வைத்து ப்லிம் காட்டுகிறார், நம்பாதிங்க) சொன்னது போல் பதிவுலக வரலாற்றில் 1001 வன் படத்துக்கு விமர்சனம் எழுதாத பதிவர் என்று என் பெயரை அவப்பெயராக பதிய வைத்துவிடக் கூடாதே என்பதற்காக வரையறை இன்றி நானும் இந்த வன்முறையை செய்யத் துணிகிறேன். பொருத்தருள்க.
ஆங்கிலப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த காட்சி பிரமாண்டங்கள் இந்தப்படத்தில் இருக்கிறது. திரையில் பார்க்கும் போது உணர முடியும். நல்லவேளை இருவாரங்களாக சிங்கையில் ஒரு சிலக் காட்சிகளாக குறைக்கப்பட்டு ஓடுகிறது. 100 பேர் வரை அமர்ந்திருந்த காட்சிக்கு படத்தை நழுவ விடக் கூடாது என்று சென்றேன்.
படப்பிடிப்புக்கும் கருவி இயக்கியவருக்கும் 'ஓ' போட வேண்டும். காட்சிகள் வியப்பளிக்கும் வண்ணம் அமைந்திருந்தது. காளையாக அறிமுகம் ஆகும் கார்தி கடைசி வரை இயன்றதைத் சிறப்பாக செய்திருக்கிறார். அவரை அவ்வப்போது அவமானப்படுத்தி அடக்கும் ஆண்ட்ரியா, ரீமா நடிப்புகள் அமர்களம். குளிருக்கு இருவரும் கார்த்தியை கட்டிப்பிடித்து தூங்கும் காட்சி கிளுகிளு ரகம். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கன்னு நினைக்க வைத்தது. சில சொதப்பல்கள், ஆதிவாசித்தலைவனிடம் அவன் மொழியில் பேசி புரிய வைக்கும் ஆண்ட்ரியா சோழன் பார்த்திபனிடம் அவனுடைய தமிழில் பேச முடியாமல் திணறி ரீமா வில்லி என்பதை சொல்லத் தவிப்பதாக காட்டி இருக்கிறார்கள், சொதப்பல். ஆதிவாசி மொழியைவிட ஒரு தொல்பொருள் ஆய்வளருக்கு பழந்தமிழ் அவ்வளவு கடினமா ? இயக்கத்தில் ஓட்டை, அந்தக்காட்சியை எடுக்க திணறி இருக்கிறார்கள், சில இடங்களில் லாஜிக் இடிக்கிறது, அதில் இதுவும் ஒன்று.
அரசன் என்றாலே கம்பீரம், ராயல் என்பதாக பார்த்து பழகிவிட்ட நமக்கு சோழனாக பார்திபன் தோன்றும் காட்சிகளில் எதோ ஒரு ஆதிவாசித் தலைவன் போல் காட்சி படுத்தி இருப்பது திரைக்கதையின் தொய்வு. நமக்கு மனதிற்குள் ஒட்டாமல் செய்துவிடுகிறது. வீரவிளையாட்டு என்கிற பெயரில் அப்பாவிகளைக் கொல்லும் போட்டியை சோழன் ரசிப்பதாகக் காட்டும் போது அகதி அரசனாக இருக்கும் சோழன் மீது ஏற்பட்ட பரிதாபங்கள் குறைந்து போய்விடுகிறது என்பதால் அடுத்து நடப்பவைகளில் சுவையார்வம் குன்றி விடுகிறது. இவன் இருந்தால் என்ன செத்தால் என்பதாக நினைக்க வைத்தது திரைக்கதையின் பலவீனம்.
தமிழில் இது ஒரு மாறுபட்ட முயற்சி ஆங்கிலப்படங்களில் தான் இப்படிப்பட்ட வலுவான காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். சன் டிவி இந்தப் படத்தின் விமர்சனமாக டாப் டென்னில் 'ஏற்கனவே ஆங்கிலப்படங்களில் வந்த காட்சியை இவ்வளவு செலவு செய்து மறுபடி எடுத்திருக்க வேண்டுமா ?' படமே வீன் முயற்சி என்பதாக குறிப்பிட்டார்கள். அவர்களுக்கு பாவம் வேட்டைக்காரன் இன்னும் ஓட்டிக்காட்ட வேண்டிய தேவை இருக்கிறதே.
இந்தப்படம் இப்போது பரபரப்பாக ஓடாவிட்டாலும் தமிழ் கூறும் நல்லுலகில் இது போன்ற படங்கள் வந்திருகிறது என்கிற பதிவை ஏற்படுத்தி இருக்கிறது, இந்தப்படத்தில் நட்டம் அடைந்திருந்தாலும் இயக்குனர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் அனைத்து உழைப்பாளிகளும் நன்கு பாராட்டப்பட வேண்டியவர்கள், இத்தகைய தீரமான முயற்சிக்கு செல்வ இராகவனை மனமாரப்பாராட்டுகிறேன்.
படம் பார்த்த பிறகு அன்மையில் வெளி வந்த 'அவதார்' படத்தின் இறுதி அழிப்பு காட்சிகளும், முள்ளி வாய்க்காலும் நினைவுக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை. இந்தப்படம் மெசேஜ் சொல்கிறதா என்பதைவிட சரித்திர நாவல்கள் போல் ஒரு திரை உலகில் ஒரு நல்லொதொரு பதிப்பைக் கொடுத்திருக்கிறது. மற்ற மெசேஜ் இது போன்ற முயற்சிகளில் இறங்காதீர்கள் என்று இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பாடம் கொடுத்து இருக்கிறது. பொழுது போக்கிற்காக இயங்கும் திரையுலகில் இதே போன்ற படத்தை வெள்ளையர் எடுத்து இருந்தால் நல்ல கலை முயற்சி என்று பாராட்டுவோம், நம்மவர்கள் என்பதால் முடிந்த வரை புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனை என்று விமர்சனம் செய்கிறோம். நட்டம் நமக்குத்தான், நல்லொதொரு படைப்புகளுக்கான ஊக்கம் கொடுக்க நாம் இன்னும் ஆயத்தம் ஆகவில்லை. ஏனெனில் நமக்கு தமிழ் படங்கள் பொழுது போக்கு சார்ந்தவையாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற மனநிலை அமையப் பெற்றிருக்கிறது.
கமர்சியல் ஹிட் என்னும் துவக்ககால பார்முலாவில் இருந்து விடுபட நினைக்கும் இயக்குனர், கலைப்படைப்பை தன்னால் அளிக்க முடியும் என்பதாக முயற்சி எடுக்க தமிழ் திரை ரசிகர்கள் அதை எப்போது முறியடித்திருக்கிறார்கள், மணிரத்னத்தின் இருவர், பாரதி இராஜாவின் காதல் ஓவியம், இந்த வரிசையில் இந்தப்படமும் சேர்ந்துள்ளது. மலையாள திரைரசிகர்கள் பரவாயில்லை அவர்கள் திரைப்படத்தை வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமே வெற்றியடைய செய்பவர்கள் இல்லை. நாம் செல்ல வேண்டிய தொலைவு வெகு தொலைவில் இருக்கிறது என்பதைத்தான் படம் குறித்த பார்வையாளர்களின் விமர்சனங்களில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இது போன்ற இயக்குனர்களின் முயற்சிகளை முறியடிப்பதினால் மாறுபட்டு சிந்திக்கலாம் என்று முயற்சிக்கும் ஒரு இயக்குனரை மசாலாத் தனமாகவே சிந்திக்கத் தூண்டும் நிலைக்கு நாமும் தள்ளிவிடுகிறோம்.
பின்பற்றுபவர்கள்
1 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
6 கருத்துகள்:
மிக நல்ல விமர்சனம்..
நல்வாழ்த்துகள் கோவி அண்ணன் ,
மிக நல்ல அலசல் தமிழ் சினிமா பற்றி
//செல்வ இராகவனை//
புதுப் பேரா இருக்கே...
ஹிஹி.. வரலாற்றில் உங்கள் பெயர் அழியாப் புகழ் பெற்றிருக்கும் கோவிஜி :))
வெல்கம் டு அவர் க்ளப் :))
பொழுது போக்கிற்காக இயங்கும் திரையுலகில் இதே போன்ற படத்தை வெள்ளையர் எடுத்து இருந்தால் நல்ல கலை முயற்சி என்று பாராட்டுவோம், நம்மவர்கள் என்பதால் முடிந்த வரை புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனை என்று விமர்சனம் செய்கிறோம்.
///
ஆமாண்ணே,, பதிவுலக வல்லுனர்கள் பலர் படம் சரியில்லைனு சொல்லுறாங்க
எனக்கு பிடிச்சிருக்கு
கருத்துரையிடுக