பின்பற்றுபவர்கள்

2 பிப்ரவரி, 2010

சாரு, ஜெமோ !

பெரியாரும் நித்யானந்தரும் : ஞாயிற்றுக் கிழமை நீயா நானா நிகழ்ச்சி, சிறப்பு விருந்தினராக சாரு, அவரிடம் கோபி நாத் கேட்ட கேள்வி, 'பெரும் மாற்றம் ஏற்படுத்திய பேச்சுகள் என்றால் இந்திய வரலாற்றில் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன ?' அதற்கு சாரு, 'ஆதி சங்கரர் இந்தியா வெங்கும் பயணம் செய்து இந்து சமயம் வளர்ந்ததற்கு அவர் பேச்சு பயன்பட்டது, பெரியார் நிறைய பேசினார், தமிழகத்தில் மாற்றம் வரவழைத்தார், தற்போது நித்யானந்தர் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் பேசுகிறார்'

என்ன கொடுமை சார், மாற்றம் ஏற்படுத்தும் பேச்சுக்கும் நித்தியா நந்தருக்கும் என்ன தொடர்பு, நித்யானந்தர் 20 மணி நேரம் நாள் ஒன்றுக்கு பேசுவதால் தமிழக மக்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன ? சாருவுக்கு நித்யானந்தருக்கு எல்லாவகையிலும் வேண்டியப்பட்டவராகவோ ஒருவருக்கொருவர் ஆதாயம் அடைவதாகவே வைத்துக் கொள்வோம், இருந்தாலும் பெரியார் பேச்சுடன் ஒப்பிடும் அளவுக்கு நித்யானந்தரின் பேச்சில் என்ன இருக்கிறது ? ஜெமோ குமரி மைந்தனையும் பெரியாரையும் ஒப்பிட்டார் என்று குதித்தவர்கள் சாருவுக்கு கண்டனம் தெரிவிப்பார்களா ? தெரிவிக்க வேண்டும் இல்லை என்றால் ஜெமோ குறித்த சாடல் வெறும் பக்க சார்ப்பு என்றே கொள்ளப்படும், கொள்ள வேண்டும்.

*****

ஜெமோவும் திராவிட இயக்க எதிர்ப்பும் : திராவிட இயக்கம் தமிழ் வளர்ச்சிக்கு ஒன்றும் செய்ய வில்லை என்பதாக நெடிய கட்டுரை ஒன்றை ஜெமோ எதோ எதோ மேற்கோளுடன் எழுதி இருக்கிறார். அதில் வைக்கும் முதன்மை குற்றச் சாட்டு, உவேச உட்பட பல தமிழறிஞர்களின் உழைப்பை எல்லாம் மறைத்து தமிழ் வளர்ச்சியின் ஒட்டுமொத்தத்தையும் திராவிட இயக்கம் தனதாக்கிக் கொள்ளப் பார்க்கிறது என்பது.

ஜெமோவின் கட்டுரையில் திராவிட இயக்கம் என்பதில் எம்ஜிஆர் ஜெயலிதா பெயரைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை. ஒருவேளை அவர்களை திராவிட இயக்கத்தை சேர்ந்தராக ஜெமோ பார்க்கவில்லையா என்று தெரியவில்லை. தனித் தமிழ் என்று பல இடங்களில் குறிப்பிடும் கட்டுரையில் தேவ நேயப் பாவாணர் என்கிற ஒற்றைச் சொல்லையோ, அவருக்கு பிறகு பெருஞ்சித்திரனார் போன்றவர்களைப் பற்றி ஒற்றை வரியையோ காண முடியவில்லை. இன்றைய தேதிக்கு பாவேந்தர் பாரதி தாசன், பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்ற மூன்னோடிகள் இல்லை என்றால் கலைச் சொற்கள் திரும்ப திரும்ப எழுதப்பட்டு தமிழின் தரம் மாறி இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய் இருக்கும். அண்மையிலும் சமகாலத்திலு வாழ்ந்த இவர்களையெல்லாம் விட்டு தனித்தமிழ் ஆர்வலராக ஜெமோ குறிப்பிடுவது பரிதிமார் கலைஞர் மற்றும் மறைமலையடிகளாரை மட்டுமே.

இவர்கள் இருவரது பங்களிப்புகள் முதன்மையானது என்றாலும் தனித் தமிழ் என்றாலே நினைவுக்கு வரவேண்டியவர்கள் பாவாணர் வழித்தோன்றல்களே, அவர்களுக்கு போதிய ஊக்கம் கொடுத்தது அண்ணாவிற்கு பிறகான திராவிட இயக்கம், அதனால் தான் பாவாணர் பெயரில் மிகப் பெரிய நூலகம் ஒன்று சென்னையில் இருப்பதை நாம் அறிகிறோம்.

தமிழ்நாடு என்று தமிழகத்திற்கு பெயர் கிடைக்கச் செய்தவர்களே திராவிட இயக்கத்தினர் தான். அதுமட்டுமில்லாமல், திராவிட நாடு போன்ற கட்சி சார்பு இதழ்களில் தனித்தமிழில் எழுதியும் மேடையில் பேசியும் வந்ததால் தான் முன்பு நடைமுறையில் இருந்த மணிப்பவளத் தமிழ் என்பது திருத்தி அமைக்கப்பட்டு ஓரளவு தனித்தமிழ் ஆனது.

தமிழ் வளர்ச்சிக்கு திராவிட இயக்கத்தினர் உரிமை கோருகிறார்கள் என்கிற தலைப்பில் திராவிட இயக்கத்தினர் எதுவுமே செய்யவில்லை என்பதாகவே ஜெமோ எழுதி இருக்கிறார். இவரே தான் முன்பு பெரியாருக்கும் வைக்கம் போராட்டத்திற்கும் தொடர்பில்லை என்றும் பெரியார் அதில் கலந்து கொண்டார் மற்றபடி அவர் வழிநடத்தலில் வைக்கம் போராட்டம் நடக்க வில்லை என்பதாக எழுதினார். பெரியாருக்கு வைக்கம் வீரர் என்ற பெயரை திருவிக முன்மொழிந்ததற்குக் காரணமே பெரியார் போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்கு என்றே ஜெமோவுக்கு மறுப்பு எழுதினார்கள்.

உ வே ச ஏடுகளை திரட்டினார் பிழை திருத்தினார் என்று சொல்கிறார். உண்மை, பிழை திருத்துவதற்கான காரணம் பற்றி விரிவாக அல்லது ஒரு சில வரிகள் கூடச் சொல்லப்படவில்லை. பிழை திருத்தியதற்கு வேறு சில காரணங்கள் உண்டு. அது மட்டுமில்லாமல் சைவ வைண இலக்கியங்கள் ஓரளவு முற்றாக கிடைத்தது போல் ஐம்பெரும் காப்பியங்கள் ஏன் கிடைக்கல, அல்லது கிடைத்ததை மறைத்துவிட்டார்களான்னு தெரியாது.

அண்ணாவின் பேச்சும் கருணாநிதியின் பேச்சும் மக்களை கவர்ந்திருந்தது என்றால் அதில் அவர்கள் புகுத்திய நடையும் சொல்லும் தகவலுமே ஆகும். அண்ணாவின் தமிழைக் கேட்ட பிறகு தமிழில் மேடைப் பேச்சு என்பது சிறப்பு பெற்றதாகவும் அதன் பிறகு பட்டிமன்றங்கள் புகழ்பெறவும் தொடங்கின. ஆனால் ஜெமோ சொல்லும் குற்றச் சாட்டு "ஆனால் சி.என்.அண்ணாத்துரை, மு.கருணாநிதி போன்றவர்களின் மொழிநடையில் தனித்தமிழ் மிகக்குறைவே என்பதை பலர் கவனிப்பதில்லை. "
அதுமட்டுமின்றி அவர்களின் பேச்சு "ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்களின் அடுக்குமொழிப் பாணியில் இருந்து கடன்பெற்றது " என்பதை நாம் காணலாம்.

அரசியல், நடப்புகளில் இன்றைய தலைமுறைகள் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை, அவர்களுக்கு ஜெமோ போன்றவர்கள் எழுதுவது தான் அரசியல் மற்றும் வரலாறு,
சமகால வரலாறுகள் ஜெமோ போன்றவர்களாலும் புனையப்படுகிறது என்பதைத்தான் கட்டுரையை வாசித்த பிறகு உணர்ந்தேன்.

திராவிட இயக்கம் தலித்துகளுக்கு ஒன்றும் செய்யவில்லை என்கிறார், தலித் விழிப்புணர்வு இதை திராவிட இயக்கத்தினர் கம்யூனிசத்துடன் இணைந்து நன்றாகவே செய்தார்கள், மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தலித்துகளின் நிலை தமிழகத்தில் நன்றாகவே இருக்கிறது, அவர்களால் தனிக் கட்சி தொடங்கி வளரும் நிலை தமிழகத்தில் இருப்பது போல் பிற தென்னிந்திய மாநிலங்களில் கூட கிடையாது.
நான் குறிப்பிடுவது பொதுவான திராவிட இயக்கம், மற்றபடி நான் திமுக-வையோ, திகவையோ குறிப்பிடவில்லை. எனக்கு தெரிந்த அளவிற்கு சொல்லிவிட்டேன். ஜெமோவுக்கு விளக்கமாக மறுப்பு தெரிவிக்க வேண்டியவர்கள் திராவிட இயக்கத்தின் ஒரே நம்பிக்கையான இயக்கம் என்று கூறிக் கொள்ளும் திமுகவினர் தான்.

சோ இராமசாமி துக்ளக் வழியாகவும், தினமலரும் செய்வது தான் தமிழ் சேவை என்று சொல்லாமல் விட்டாரே ஜெமோ என்று மகிழ்வோம்.

21 கருத்துகள்:

அப்பாவி முரு சொன்னது…

//சோ இராமசாமி துக்ளக் வழியாகவும், தினமலரும் செய்வது தான் தமிழ் சேவை என்று சொல்லாமல் விட்டாரே ஜெமோ என்று மகிழ்வோம்.//

இது கோவி பஞ்ச் - ஆ?

Robin சொன்னது…

//சோ இராமசாமி துக்ளக் வழியாகவும், தினமலரும் செய்வது தான் தமிழ் சேவை என்று சொல்லாமல் விட்டாரே ஜெமோ என்று மகிழ்வோம்.//சொன்னாலும் சொல்வார்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

இது எனக்கு கொஞ்சம் பெரியா விடயமுனு நினைக்கின்றேன்...

செந்தில் நாதன் Senthil Nathan சொன்னது…

//பெரியாரும் நித்யானந்தரும்//

போற போக்குல என்ன வேணா சொல்லலாம்னு ஒரு அகம்பாவம்....

//ஜெமோவும் திராவிட இயக்க எதிர்ப்பும்//

இது கொஞ்சம் தெரிஞ்சே செய்யுற மாதிரி தோணுது..

பித்தனின் வாக்கு சொன்னது…

// அதனால் தான் பாவாணர் பெயரில் மிகப் பெரிய நூலகம் ஒன்று சென்னையில் இருப்பதை நாம் அறிகிறோம். //
// தமிழ்நாடு என்று தமிழகத்திற்கு பெயர் கிடைக்கச் செய்தவர்களே திராவிட இயக்கத்தினர் தான். //
இதைத்தான் அண்ணா நாங்களும் சொல்றேன் இந்த பேரு வச்சு ஊரை ஏமாத்த கழகங்களை விட்டால் ஆள் கிடைக்காது என்று.

// அண்ணாவின் தமிழைக் கேட்ட பிறகு தமிழில் மேடைப் பேச்சு என்பது சிறப்பு பெற்றதாகவும் அதன் பிறகு பட்டிமன்றங்கள் புகழ்பெறவும் தொடங்கின //
பேச்சைத் தவிர உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. தமிழுக்கு அகராதி போன்று எதாவது தயாரித்தார்களா.
தமிழில் படிப்பவர்களுக்கு சலுகைகள்,ஊக்கத் தொகை கொடுக்கப் பட்டதா? என்பது போன்ற பதில்கள் இல்லாது பேரு வச்சேம், ஊரு பார்த்து சிரித்தது என்று கூறுவது முடி இல்லாதவன் மொட்டை தலை சிரய்த்து போல இருக்கு. உங்களை சொல்லி என்ன பயன் எதாது செய்தால் தான சொல்ல முடியும்.

// நான் குறிப்பிடுவது பொதுவான திராவிட இயக்கம், மற்றபடி நான் திமுக-வையோ, திகவையோ குறிப்பிடவில்லை. //
அண்ணா பெரியாருக்கு விளக்கம் கொடுத்து விட்டு பின்னால் வந்த தி முக இல்லாமல் திராவிட இயக்கம் ஏது? ஒருவேளை கொளத்தூர் மணிக்கு சப்போர்ட் பண்ணுகிறீர்களா? அவர்தான் தீவீர அரசியலில் இல்லையே.

// மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தலித்துகளின் நிலை தமிழகத்தில் நன்றாகவே இருக்கிறது, அவர்களால் தனிக் கட்சி தொடங்கி வளரும் நிலை தமிழகத்தில் இருப்பது போல் பிற தென்னிந்திய மாநிலங்களில் கூட கிடையாது. //
அதற்க்கு திராவிட கட்சிகள் பங்களிப்பு மிகவும் குறைவுதான். கிறிஸ்தவ மிஷனரிகள் தான் படிப்பு மற்றும் வாழ்க்கை அளிப்பு போன்றவற்றை செய்தார்கள். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் படித்தவர்கள் மற்றும் பெருந்தன்மையானவர்கள் அதிகம். கட்டுரை ஆசிரியர் சொன்னது போல வேளாளர் மற்றும் வன்னியர்கள் பலர் ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை. முழுப் பூசனைக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்று கேள்விப் பட்டு இருக்கின்றேன். ஆனால் ஒரு போர்கப்பலையே மறைக்கும் கலையை உங்களிடம்தான் கத்துக் கொள்ள வேண்டும்.
சரி சரி இதுக்கு எனக்கு ஜாதி வர்ணம் தான் பூசுவீர்கள். உண்மை மறைக்க உங்களுக்கு இதை விட்டால் வேற வழி. நன்றி.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/அது மட்டுமில்லாமல் சைவ வைண இலக்கியங்கள் ஓரளவு முற்றாக கிடைத்தது போல் ஐம்பெரும் காப்பியங்கள் ஏன் கிடைக்கல, அல்லது கிடைத்ததை மறைத்துவிட்டார்களான்னு தெரியாது./

இது ஜெயமோகன் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டை விட, ரொம்பவே அ'சிங்கமாக இருக்கிறது!

தேவநேயப்பாவாணரையும் பெருஞ்சித்திரனாரையும் எத்தனை திராவிட இயக்கக் குஞ்சுகள் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லது அவர்கள் அடியொற்றித் தனித்தமிழ் இயக்கத்தை முன்னேடுத்துகொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

தமிழ்நாடு என்ற கோரிக்கை திருவிக அவர்களிடம் இருந்து வந்தது. தமிழ்நாட்டின் எல்லைகளை இழந்து விடாமல் போராடியதில், ம பொ சி, ஜீவானந்தம், நேசமணி போன்றோர் தான் முன்னால் நின்றார்கள்.

வரலாற்றைத் திரித்தல் ஒன்று தான் திராவிட இயக்கங்களும், அதன் முன்னோடிகளும் செய்த ஒரே திருப்பணி!

குட்டிபிசாசு சொன்னது…

//அரசியல், நடப்புகளில் இன்றைய தலைமுறைகள் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை, அவர்களுக்கு ஜெமோ போன்றவர்கள் எழுதுவது தான் அரசியல் மற்றும் வரலாறு,
சமகால வரலாறுகள் ஜெமோ போன்றவர்களாலும் புனையப்படுகிறது என்பதைத்தான் கட்டுரையை வாசித்த பிறகு உணர்ந்தேன்.//

உண்மையில் இது தான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. நாளை இதை மேற்கோள் காட்டி பேசகூடிய நிலையும் வரும். திராவிட இயக்கப் பதிவர்கள் சரியான தரவுகளுடன் விவாதித்தால் சரியாக இருக்கும்.

//பெரியார் பேச்சுடன் ஒப்பிடும் அளவுக்கு நித்யானந்தரின் பேச்சில் என்ன இருக்கிறது ?//

திருந்தமாட்டாங்க இவங்க.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Present govi

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு

அதற்க்கு திராவிட கட்சிகள் பங்களிப்பு மிகவும் குறைவுதான். கிறிஸ்தவ மிஷனரிகள் தான் படிப்பு மற்றும் வாழ்க்கை அளிப்பு போன்றவற்றை செய்தார்கள். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் படித்தவர்கள் மற்றும் பெருந்தன்மையானவர்கள் அதிகம். கட்டுரை ஆசிரியர் சொன்னது போல வேளாளர் மற்றும் வன்னியர்கள் பலர் ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை. முழுப் பூசனைக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்று கேள்விப் பட்டு இருக்கின்றேன். ஆனால் ஒரு போர்கப்பலையே மறைக்கும் கலையை உங்களிடம்தான் கத்துக் கொள்ள வேண்டும்.
சரி சரி இதுக்கு எனக்கு ஜாதி வர்ணம் தான் பூசுவீர்கள். உண்மை மறைக்க உங்களுக்கு இதை விட்டால் வேற வழி. நன்றி.//

வழக்கமான உங்கள் உள........ !

கோவி.கண்ணன் சொன்னது…

//முழுப் பூசனைக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்று கேள்விப் பட்டு இருக்கின்றேன்//

முழுப் பூசனிக்காயை சாம்பாரில் துண்டு துண்டாக்கி மறைக்கும் பக்கவும் சோற்றில் மறைக்க முயற்சிப்பவர்களுக்கு இருக்காது !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

// கிருஷ்ணமூர்த்தி said...

இது ஜெயமோகன் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டை விட, ரொம்பவே அ'சிங்கமாக இருக்கிறது!
//

கிருஷ்ண மூர்த்தி ஐயா,

தந்தை பெரியார் என்று எழுதினால் கூட 'தந்தை' என்பதற்கு விளக்கி பொருள் கூறி நக்கல் அடிக்கும் சிகாமணிகள் உண்டு, ஆனால் அவர்களெல்லாம் உவேசா 'தாத்தா' ன்னு தான் சொல்லுவாங்க.

அரசியல் எல்லோருக்கும் பொதுவானது !

கோவி.கண்ணன் சொன்னது…

//chinnappenn2000 has left a new comment on your post "சாரு, ஜெமோ !": //

chinnappenn2000 என்ற பெயரில் போடும் வெண்ணை, உன் பின்னூட்டங்கள் ரிஜெக்ட் செய்யப்படுகின்றன, வீன் முயற்சி.

ஜமாலன் சொன்னது…

நண்பர் கோவிக்கு..

பதிவு பற்றிய கருத்தல்ல.. 2 திருத்தங்கள் மட்டுமே.. 1. 500 மென்நூல் என்பது மின்நூல் என்று இருக்க வேண்டும். 2. மணிப்பவளத் தமிழ் - மணிப்பிரவாளத் தமிழ் என்பதுதான் சரி என நினைக்கிறேன்.

நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜமாலன் said...

நண்பர் கோவிக்கு..

பதிவு பற்றிய கருத்தல்ல.. 2 திருத்தங்கள் மட்டுமே.. 1. 500 மென்நூல் என்பது மின்நூல் என்று இருக்க வேண்டும். 2. மணிப்பவளத் தமிழ் - மணிப்பிரவாளத் தமிழ் என்பதுதான் சரி என நினைக்கிறேன்.

நன்றி.//

ஜெமாலன்,

மென் நூல் - நேரடி தமிழாக்கம், சாப்ட்வேர் என்பதன் தமிழ் மென்பொருள், சாப்ட் புக் என்பதன் தமிழ் ஆக்கம் மென் நூல் என்பதாக சிலர் பயன்படுத்துகிறார்கள்.

மணியும் பவளும் சேர்த்த நடையாம், மணி தமிழ், பவளம் வடமொழி, அதைத்தான் மணிப்பவளம் என்று தமிழிலும், வடமொழியில் மணிப்ரளவம் என்றும் சொல்லப்படுகிறது. நீங்கள் சொல்லி இருப்பது மணிப்பவளத்தின் வடமொழிப் பெயர் !
:)

ஜமாலன் சொன்னது…

நன்றி.. உங்கள் விளக்கங்களுக்கு. 1. நான் ஈ-புக் என்பதை மின்நுல் என்பது வழுங்குச் சொல்லாக உள்ளதை பாவிக்கலாம் என்பதால் சொன்னேன். 2. மணிப்பிரவாளம் என்பதாகத்தான் நான் கேள்விப்பட்டுள்ளேன். மணிப்பவளம் மற்றும் உங்கள் விளக்கம் புதிது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வரலாற்றைத் திரித்தல் ஒன்று தான் திராவிட இயக்கங்களும், அதன் முன்னோடிகளும் செய்த ஒரே திருப்பணி!//

வரலாறு திருத்தப்படாத காலம், பொற்காலம் என்று நம்பும் காலத்தில் சுப்பனும் குப்பனும் அடிமையாகவும், தீண்டத்தகாதவனாகவும் தானே இருந்தான் ஐயா.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சாரு கொடுக்குற மோருல விஷம்(மம்) இல்லையே!?(ஒரு திராவிடத் தலைவரக் கொண்ணது இப்படித்தான்னு பேசிக்கிட்டாங்க அதேன்!)

அப்...பாவித் தனமா இருக்கு!

யாரு அது நித்தியானந்தர்!

புதுசு புதுசா ஆள் எரக்குறாங்க...?

எனக்கு சத்தியமா தெரியாது!?

பெரியாரை திட்டுகிறவர்களுக்கும் பெரியாரை புகழ்கிறவர்களுக்கும் மட்டும் பெரியாரைத் தெரியாது, ...!

அப்பறம் சாருவோட கொள்கை...! அவ்வ்வ்வ்!

ஒரு நாள் புல்லா பிரியாணி உண்ணும் போராட்டம் பண்ண வேண்டியிருக்கும்!

priyamudanprabu சொன்னது…

சாருவுக்கு நித்யானந்தருக்கு எல்லாவகையிலும் வேண்டியப்பட்டவராகவோ ஒருவருக்கொருவர் ஆதாயம் அடைவதாகவே வைத்துக் கொள்வோம்,
///


அண்னே இதில் உள்குத்து ஏதாச்சும் இருக்கா?
????????
?
?
?
?

வேல்பாண்டி சொன்னது…

//மணிப்பவளம்//

இதை இன்னும் சரியா சொல்லனும்ன்னா "மணியிடை பவழ நடை" ன்னு சொல்லாம்

-- வேல் --

priyamudanprabu சொன்னது…

இது எனக்கு கொஞ்சம் பெரியா விடயமுனு நினைக்கின்றேன்...
///

என் இனமையா நீ

K.R.அதியமான் சொன்னது…

////அது மட்டுமில்லாமல் சைவ வைண இலக்கியங்கள் ஓரளவு முற்றாக கிடைத்தது போல் ஐம்பெரும் காப்பியங்கள் ஏன் கிடைக்கல, அல்லது கிடைத்ததை மறைத்துவிட்டார்களான்னு தெரியாது./
////

கோவி,

சீவக சிந்தாமணி என்ற சமண காப்பியத்தை தேடி பதிபித்து அதை மீட்டவர் உ.வே.சா. அவரிடம் சாதிய உணர்வு இருந்தது உண்மைதான். (19ஆம் நூற்றாண்டு வளர்பு) ; ஆனால் அவரின் பங்களிப்பை மறக்க முடியாது. சமண, பவுத்த காப்பியங்களையும் தொடர்ந்து தேடினார். அவ்வளவுதான் கிடைத்தது.
அவரின் சுயசரிதையை முழுவதுமாக படிக்கவும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்