பின்பற்றுபவர்கள்

17 நவம்பர், 2009

நோவா கப்பல் !

தமிழில் 'நாவாய்' என்ற சொல் மிகப் பழங்காலத்தில் கப்பலைக் குறிப்பதாகும், இதற்கும் ஆங்கிலத்தில் இருக்கும் 'Naval' , Navy போன்ற சொற்களுக்கும் அதன் வேர் தொடர்புடைய பிற மொழிச் சொற்களையும் ஆய்ந்தால், கப்பலும் கப்பல் வணிகமும் தொன்று தொட்டு தமிழர்கள் ஈடுபட்டு வந்திருப்பதையும், அந்த சொல்லின் தொடர்பில் பல்வேறு மொழிகளுக்கான கப்பல் பெயரும் இருப்பதை அறியலாம்

Naval

1602, from L. navalis "pertaining to a ship or ships," from navis "ship," from PIE *nau- "boat" (cf. Skt. nauh, acc. navam "ship, boat;" Arm. nav "ship;" Gk. naus "ship," nautes "sailor;" O.Ir. nau "ship;" Welsh noe "a flat vessel;" O.N. nor "ship").

''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)

நாவாய் என்கிற தமிழ் சொல்லே உலகெங்கிலும் பலமொழிகளில் உள்வாங்கப்பட்டதாகக் கூடச் சொல்கிறார்கள். அந்தச் சொல் தமிழ் சொல்லா பிற மொழிச் சொல்ல என்கிற ஆராய்ச்சியைவிட மிகவும் சுவையார்வமானது நோவா என்கிற விவிலியம் (பைபிள்) காட்டும் கப்பல், நாவாய்க்கும் நோவாவிற்கும் சொல்லளவில், பலுக்குதலில் (உச்சரிப்பு) பெரிய வேறுபாடு இல்லை என்பதால் கப்பலின் பழைய பெயரான 'நோவா' என்கிற பெயரிலேயே பைபிளில் சொல்லப்படு்ம் நோவா கப்பல், கிறித்துவுக்கு முன்பே நடந்ததாகச் சொல்லப்படும் யுக மாற்றம் (பிரளயம்) குறித்த கதையில் வழங்கும் பழைய சொல் என்று கருதுகையில் தமிழின் தொன்மையை ஒப்பீடு அளவில் அறிந்து கொள்ள முடியும்.

*****

இந்த நோவா கதையைப் படி நோவா என்பவர் ஆதாமின் எட்டாம் தலைமுறையாம். ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டு எட்டு தலைமுறைக் குள்ளாகவே உலகமெங்கும் பல்கி பெருகிவிட்டனரா ? ஏன் ஆண்டவர் உலகத்தை நீரால் அழிக்க முன்வந்தார் என்ற பகுத்தறிவு கேள்விகளெல்லாம் இருந்தால் அந்தக் கதை உங்களுக்கு இரண்டாம் வகுப்பு மாணவன் எழுதிய கதை போலவே இருக்கும். நோவா என்பவர் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார் என்றும் கதையில் சொல்கிறார்கள். தொள்ளாயிரம் ஆண்டுக்குள் பூமியை நிரப்பும் அளவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா என்ன ? நம்புவோமாக ? ! சரி நம்புவோம் என்று வைத்துக் கொள்வோம். கதை படி உலகம் நீரால் அழிக்கப்படும் முன் வாழும் உயிரினங்கள் அனைத்தும் இணை இணையாக (ஜோடிகள்) கப்பலில் ஏற்றப்பட்டதாம், அதன் பிறகு தண்ணீர் பெருக்கால் அழிந்ததாம். நீர்வாழ் உயிரினங்களையும், தாவரங்களையும், நூண்ணுயிரிகளையும் கப்பலில் ஏற்றியதாகக் கதையில் கூறப்படவில்லை. கரடிகளில் பல வகை உண்டு, யானைகளில் ஆப்ரிக்க யானை, ஆசிய யானை இரு பிரிவுகள் உண்டு, இதில் எதை ஏற்றினார்கள் என்றே தெரியவில்லை. டைனசர் பற்றி சொல்லப்படவே இல்லை. பாம்பு வகைகளில், பூச்சி இனங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உண்டு. உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் அதன் வகைகளும் முழுமையாக இன்றும் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவ்வளவு பெரிய கப்பல் ஆறே நாட்களில் கட்டப்பட்டதாகவும் கதையில் குறிப்பிடுகிறார்கள். இந்தக் கதையை சிறு வயதில் சனிக்கிழமை கிறித்துவ சிறப்பு பள்ளிகளில் கேட்டு இருக்கிறேன்.

கப்பல், நல்லவர்களையும் உயிரினங்களையும் காப்பாற்றுவதாக நீதிக் கதைகள் என்ற அளவில் ஏற்றுக் கொண்டாலும், உலகையே ஆறு நாளில் படைத்த ஆண்டவன் இவை அனைத்தையும் அழித்துவிட்டு மீண்டும் வேறொரு நல்லப் படைப்பை செய்ய நினைக்காமல் ஏன் நோவிற்கு கட்டளை இட்டு கப்பல் செய்து கெட்டவர்களை அழித்தார் என்று தெரியவில்லை. திரிசங்கு உயிரோடு சொர்கம் செல்ல முயன்ற கதையை ஒப்பிடுக.

நோவா(noah's ark) கப்பல் கதை மட்டுமே ஒரு முடிவின் தொடக்கம் என்று சொல்ல முடியாது. இந்து மதத்திலும் கல்கி அவதாரத்திற்கு பிறகு கண்ணன் ஆல் இலையில் குழந்தையாக வந்து மறு உலகை (சுவர்கத்தை அல்ல) படைப்பானாம். ஆக மதங்கள் காட்டும் கதைகள் எதிலுமே உலகம் முற்றிலும் அழிந்து அதன் பிறகு இல்லாமல் போகும் என்று குறிப்பிட வில்லை. படைப்பும், அழிப்பும், படைப்பும் என மாறி மாறி பூமியில் நிகழ்ந்து (நிகழ்த்திக்) கொண்டிருக்க சுவர்க்கமும், நரகமும் எங்கே இருக்கிறது, அங்கு யார் யாரெல்லாம் செல்வார்கள், அழிவுக்கு பிறகு பூமியில் யார் யாரெல்லாம் பிறப்பார்கள் என்றே தெரியவில்லை.

நோவா கப்பலும் கல்கி அவதாரமும் தொடர்புடைய மதக் கதைகளைப் பார்த்தால் நிரந்தர சொர்கம், நரகம் பற்றிய கட்டுமானங்களில் கூறப்படும் மறு உலகம் என்பது பிரளயத்திற்கு பிறகு மறுபடி திருத்தி அமைக்கப்படும் பூமியா ? என்ற கேள்வியும் எழவே செய்கிறது. மறு உலகம் என்பது வேறோர் உலகம் அல்ல, மறுபடியும் உருவாகும் உலகம் என்று புரிந்து கொள்வதில் பிழையேதும் உள்ளதா ? ஆன்மிகவாதிகள் மற்றும் மதவாதிகளுக்கே வெளிச்சம். 2012 படக் கதை படி, உலக அழிவை ஒட்டி நோவா கப்பல் எங்காவது செய்யப்படுவது கேள்விப்பட்டால் துண்டு போட்டு வைப்போம்.
:)

ஆபரகாமிய மத நம்பிக்கையில் உலகம் அழிந்தாலும் மனித இனம், உயிரினங்கள் அழியக் கூடாது, காப்பாற்றப்படும் என்கிற அகலமான கற்பனை இருந்தது, கல்கி அவதாரக் கதையில் நாம கண்ணனை குழந்தையாக்கி ஆல் இலையில் அம்மணத்துடன் மிதக்க விடுவதுடன் உலகத்தை புதுப்பித்துக் கொள்கிறோம் :)

மேலும் நோவா கப்பல் படங்களுக்கு கூகுள்.

28 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

//ஆபரகாமிய மத நம்பிக்கையில் உலகம் அழிந்தாலும் மனித இனம், உயிரினங்கள் அழியக் கூடாது,//

நேற்று பாவ மன்னிப்பு என வம்புக்கு இழுத்தீர்கள் :)

நேற்றும் இன்று ஆபரகாமிய மதம் என பதிவில் கூறி இருந்தீர்கள்.

உங்க பேரை ”அ-னா நீ-னானு” மாத்திபுட்டீங்களா? :)

நிகழ்காலத்தில்... சொன்னது…

வர வர ரொம்ப ஆழமா எழுதறீங்க..

என்னை மாதிரி மெர்க்குரி லைட்களுக்கு புரிபடமாட்டீங்கிது.,

கடைசியில இரண்டுவரி என்ன சொல்ல வர்ரீங்க அப்படீன்னு சுருக்கமா எழுதிட்டீங்கன்னா நெம்ப ஒத்தாசையா இருக்கும் :))

Unknown சொன்னது…

அது சரி கோவி.இந்த தமிழ்ச் சொல்லை மட்டும் மற்ற சமுதாய்ங்கள் ஏன் உள் வாங்கின?இன்னும் ஒரு சில சொறகள் கூட உள்வாங்க தகுதி இல்லாத மொழியா தமிழ்.

அகல்விளக்கு சொன்னது…

ஆழமான இடுகை.

இந்த அளவிற்கு கூட ஆழமாக யோசிக்க முடியுமா என யோசிக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//maruthu said...
அது சரி கோவி.இந்த தமிழ்ச் சொல்லை மட்டும் மற்ற சமுதாய்ங்கள் ஏன் உள் வாங்கின?இன்னும் ஒரு சில சொறகள் கூட உள்வாங்க தகுதி இல்லாத மொழியா தமிழ்.
//

அந்த ரகசியம் 'தமிழ் சூத்திர பாஷை' என்று தூற்றிய பொறுக்கிகளுக்கு தெரியுமோ என்னவோ ? எதுக்கும் கேட்டு சொல்லுங்களேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...
வர வர ரொம்ப ஆழமா எழுதறீங்க..

என்னை மாதிரி மெர்க்குரி லைட்களுக்கு புரிபடமாட்டீங்கிது.,

கடைசியில இரண்டுவரி என்ன சொல்ல வர்ரீங்க அப்படீன்னு சுருக்கமா எழுதிட்டீங்கன்னா நெம்ப ஒத்தாசையா இருக்கும் :))
//

என்ன சொல்ல வருகிறேனா ?

உலகம் என்றுமே அழியாது, புதுப்பிக்கப்படும் என்று மதங்களே வேறொரு கருத்தும் சொல்லுது, சொர்கம் நரகம் என்று பிலிம் காட்டடதிங்க, மக்களை பயமுறுத்தி எதையும் திணிக்ககதிங்கன்னு சொன்னதாகத் தானே நான் நினைத்தேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அகல்விளக்கு said...
ஆழமான இடுகை.

இந்த அளவிற்கு கூட ஆழமாக யோசிக்க முடியுமா என யோசிக்கிறேன்
//

இடுகையில் கப்பல் இருந்தால் ஆழமான இடுகையா ?

:)

பாராட்டுக்கு நன்றி அகல்விளக்கு !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
//ஆபரகாமிய மத நம்பிக்கையில் உலகம் அழிந்தாலும் மனித இனம், உயிரினங்கள் அழியக் கூடாது,//

நேற்று பாவ மன்னிப்பு என வம்புக்கு இழுத்தீர்கள் :)

நேற்றும் இன்று ஆபரகாமிய மதம் என பதிவில் கூறி இருந்தீர்கள்.

உங்க பேரை ”அ-னா நீ-னானு” மாத்திபுட்டீங்களா? :)
//

அவரு வேறங்க. நானும் சார்ட்ஸ் போடுவேன்.

Unknown சொன்னது…

//அந்த ரகசியம் 'தமிழ் சூத்திர பாஷை' என்று தூற்றிய பொறுக்கிகளுக்கு தெரியுமோ என்னவோ ? எதுக்கும் கேட்டு சொல்லுங்களேன்.//

என்ன கோவி,இப்படி திசை திருப்பறீங்க?பொறிக்கிகள், "தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி" என்று தானே காறி உமிழ்ந்தனர்.மேலும் அது ரகசியம் ஒன்றும் அல்லவே.

கோவி.கண்ணன் சொன்னது…

// maruthu said...
//அந்த ரகசியம் 'தமிழ் சூத்திர பாஷை' என்று தூற்றிய பொறுக்கிகளுக்கு தெரியுமோ என்னவோ ? எதுக்கும் கேட்டு சொல்லுங்களேன்.//

என்ன கோவி,இப்படி திசை திருப்பறீங்க?பொறிக்கிகள், "தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி" என்று தானே காறி உமிழ்ந்தனர்.மேலும் அது ரகசியம் ஒன்றும் அல்லவே.
//

தமிழ் காட்டு மிராண்டிகளின் கையில் சிக்கி மொழி பாழ்பட்டு இருந்த போது அவ்வாறு சொல்லப்பட்டது உண்மைதான். வடமொழி கலந்து செய்யப்பட்ட பழைய மனிப்ப்ரளவ எழுத்து நடை காட்டுமிராண்டி வடிவம் தான். பெரியாருக்கு பாராட்டுகள்.

வால்பையன் சொன்னது…

எல்லா மதத்திலும் இப்படியொரு டுபாக்கூர் கதை இருக்கும் போல!

Unknown சொன்னது…

//தமிழ் காட்டு மிராண்டிகளின் கையில் சிக்கி மொழி பாழ்பட்டு இருந்த போது அவ்வாறு சொல்லப்பட்டது உண்மைதான். வடமொழி கலந்து செய்யப்பட்ட பழைய மனிப்ப்ரளவ எழுத்து நடை காட்டுமிராண்டி வடிவம் தான். பெரியாருக்கு பாராட்டுகள்//

மீண்டும் திசை திருப்பலா?கம்ப இராமாயண்ம்,சிலப்பதிகாரம்,பெரிய புராணம் போன்ற நூல்கள் தமிழில் இருந்ததால் தானே பெரி(ய பொறிக்கி)யார், காட்டு மிராண்டி மொழி என்று வசை பாடினார்.
இப்படி சளைக்காம, நீங்க ரீல் விடுவதால், "எங்கே, உண்மையான திராவிடத் தமிழன்" என்று தேடி அலைந்து வரும் குஞ்சுகளுக்கு,நீங்க தான் அவங்க தேடும் உண்மையான திராவிடன் என்ற உண்மையைப் போட்டு உடைத்து, உங்களுக்கு டபுள் அண்ணா பெரியார் விருது வழங்க வகை செய்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மீண்டும் திசை திருப்பலா?கம்ப இராமாயண்ம்,சிலப்பதிகாரம்,பெரிய புராணம் போன்ற நூல்கள் தமிழில் இருந்ததால் தானே பெரி(ய பொறிக்கி)யார், காட்டு மிராண்டி மொழி என்று வசை பாடினார்.
இப்படி சளைக்காம, நீங்க ரீல் விடுவதால், "எங்கே, உண்மையான திராவிடத் தமிழன்" என்று தேடி அலைந்து வரும் குஞ்சுகளுக்கு,நீங்க தான் அவங்க தேடும் உண்மையான திராவிடன் என்ற உண்மையைப் போட்டு உடைத்து, உங்களுக்கு டபுள் அண்ணா பெரியார் விருது வழங்க வகை செய்கிறேன்.//

கம்பராமயண வால்மீகி இராமனை பெரியார் செருப்பால் அடித்ததைச் சொல்லி இருக்கலாம். கற்பு பேசும் பெண்ணடிமைத்தனம் சிலப்பதிகாரத்திலும், பார்பனர்கள் பலரை நாயன்மார்களாக குறிப்பாக 8 ஆயிரம் சமணர்களை கழுவேற்றக் காரணமானவன் என்று கூறப்படும் ஞானசம்பந்தன் போன்றோரை புனிதம் படுத்தி உயர்வு படுத்திய பெரிய புராண புளுகுகளைப் பெரியார் எதிர்த்ததில் தவறில்லை. பெரியார் தந்தை பெரியர் என்று தமிழகத்தில் புகழப்படுவதை உங்களைப் போன்ற பார்பனர்கள் என்றுமே தடுக்க முடியாது, முகமூடிப் போட்டுக் கொண்டு (புரொபைல் இல்லா ப்ளாக்கர் முகவரியுடன்) வசை பொழியத்தான் முடியும்

Unknown சொன்னது…

அதுக்குள்ளயுமா???

ஒரு புது உண்மை தமிழன் உருவாகிறார் :D

<<<
ஸ்வாமி ஓம்கார் said
நேற்று பாவ மன்னிப்பு என வம்புக்கு இழுத்தீர்கள் :)

நேற்றும் இன்று ஆபரகாமிய மதம் என பதிவில் கூறி இருந்தீர்கள்.

உங்க பேரை ”அ-னா நீ-னானு” மாத்திபுட்டீங்களா? :)
>>>

ஹிஹி... ரீப்பீட்டு... வேற வழி. :D

Unknown சொன்னது…

சபாஷ்.மீண்டும் ஜாதி வெறியோடு பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//maruthu said...
சபாஷ்.மீண்டும் ஜாதி வெறியோடு பதில் சொல்லியிருக்கிறீர்கள்.
//

ஆமாம் சாதி வெறியர்கள் மீது வெறி !

கோவி.கண்ணன் சொன்னது…

//..:: Mãstän ::.. said...
அதுக்குள்ளயுமா???

ஒரு புது உண்மை தமிழன் உருவாகிறார் :D

//

குறும்படமெல்லாம் எடுக்கும் எண்ணம் இல்லை :)

பித்தனின் வாக்கு சொன்னது…

மரணத்தின் பயத்தைக் கொண்டு மதத்தை வளர்க்க கூறும் கட்டுக்கதைகள் உலகம் அழியும் என்பதும் மனிதனின் வளர்ச்சியும், மதங்கள் கூறும் இந்தக் கருத்துக்கள் ஏற்ப்புடையன அல்ல.
நன்றி. கடைசி ரெண்டு வரிகளில் உங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைத்துருக்கும் என்று நினைக்கின்றேன். திட்டினாலும் சந்தோசப் படுவபன் கண்ணன் (கோ வி அல்ல). நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...
மரணத்தின் பயத்தைக் கொண்டு மதத்தை வளர்க்க கூறும் கட்டுக்கதைகள் உலகம் அழியும் என்பதும் மனிதனின் வளர்ச்சியும், மதங்கள் கூறும் இந்தக் கருத்துக்கள் ஏற்ப்புடையன அல்ல.
நன்றி. //

நன்றி !

//கடைசி ரெண்டு வரிகளில் உங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைத்துருக்கும் என்று நினைக்கின்றேன். திட்டினாலும் சந்தோசப் படுவபன் கண்ணன் (கோ வி அல்ல). நன்றி.
//
ஒப்புக் கொள்கிறேன்.
அவன் மகிழ்ச்சியடைவானா இல்லையயன்னு ஐயப்பன் கூட இருப்பது போல் கூடவே குந்தி இருக்கும் உங்களுக்குத்தான் நல்லா தெரியும் !
:)

Samuel | சாமுவேல் சொன்னது…

//அவ்வளவு பெரிய கப்பல் ஆறே நாட்களில் கட்டப்பட்டதாகவும் கதையில் குறிப்பிடுகிறார்கள்//
என்னது ஆறே நாட்களில் கட்டுனாங்களா ? ( .."ஆயிரம் பொய் சொல்லி கருத்தும் சொல்லலாம்" போல இருக்கே. )

//கதை படி உலகம் நீரால் அழிக்கப்படும் முன் வாழும் உயிரினங்கள் அனைத்தும் இணை இணையாக (ஜோடிகள்) கப்பலில் ஏற்றப்பட்டதாம்//
அப்புறம் எதுக்கு டினோசர் பத்தி கேள்வி ...ஏன் அனைத்து உயிரினங்கள் லிஸ்டில் டினோசர் வராதுன்னு "பெரியார்" சொல்லிட்டாரா ???

பயங்கர டரர்ரா கேள்வி கேட்கறீங்க ? நீங்க நோவா சம்பந்தமா கேட்ட கேள்வி எல்லாத்துக்கும் எளிதா பதில் சொல்லலாம், முதலில் நீங்க அவர் எவ்வளவு நாள்ல கட்டினாருன்னு படிச்சு பாருங்க, உங்க எல்லா கேள்விக்கும் பதில் அதில் இருக்கலாம்.

சேவியர் சொன்னது…

//நாவாய் என்கிற தமிழ் சொல்லே உலகெங்கிலும் பலமொழிகளில் உள்வாங்கப்பட்டதாகக் கூடச் சொல்கிறார்கள்.//

யார் என்றும் சொன்னால் கொஞ்சம் பயனுள்ளதாய் இருக்கும் :D

கோவி.கண்ணன் சொன்னது…

/சேவியர் said...
//நாவாய் என்கிற தமிழ் சொல்லே உலகெங்கிலும் பலமொழிகளில் உள்வாங்கப்பட்டதாகக் கூடச் சொல்கிறார்கள்.//

யார் என்றும் சொன்னால் கொஞ்சம் பயனுள்ளதாய் இருக்கும் :D
//

பயனுள்ளதாக இருக்கும் சரி. அதற்கு சிரிப்பான் எதற்கு ? புரியல

1. http://groups.google.co.ve/group/tamil_wiktionary/msg/a662c657ee19d151

2. நாவுதல் = நீரைத் தள்ளுதல். அது துடுப்பாலும் இருக்கலாம், கையாலும் இருக்கலாம். நாவிப் போகும் கலம் நாவாய். கடலோடுவது பற்றிய தமிழ்ச் சொற்களை நான் இங்கு அடுக்கினால் அது விரியும். அதற்கு இது இடமல்ல. நாவிகன்>நாய்கன் = கடலோடி, மாநாய்கன் = பெரும் கடலோடி, பெரும் நாவாய்களுக்குச் சொந்தக்காரன். மாநாய்கனின் இயற்பெயரும் சிலம்பில் கிடையாது.
- இது இராமகி ஐயாவின் கூற்று.
http://valavu.blogspot.com/2009/03/4.html

3. " ஆம் ! தமிழ்தான் உலகின் முதல் மொழி எல்லா மொழிகளிலும் தமிழ் சொற்களின் ஆதிக்கம் இருக்கிறது. ' நேவி ' என்கிறார்கள். 'நாவாய் ' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து போனதுதான்!" என்றான் கபிலன்.

- இது அந்திமழை இணையப்பக்கத்தில் இடம் பெற்றிருந்த ஒரு ஆக்கம்
http://www.andhimazhai.com/news/viewmore.php?id=8861

*****
நான் குறிப்பிட்டிருந்த புறநானூற்றுப் பாடல் சங்க இலக்கியம் (கிமு காலத்தைச்) சேர்ந்தது.

குப்பத்து ராசா சொன்னது…

//அவ்வளவு பெரிய கப்பல் ஆறே நாட்களில் கட்டப்பட்டதாகவும் கதையில் குறிப்பிடுகிறார்கள்//

நோவா கப்பல் 77 கட்டப்பட்டது நாட்களில்

வால்பையன் சொன்னது…

//நோவா கப்பல் 77 கட்டப்பட்டது நாட்களில் //

இது என்ன ஜுனூன் தமிழா!?

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நாம் அந்த காலத்தில் இருந்தோமில்லையே ! என்ன !!! சே ....

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//2012 படக் கதை படி, உலக அழிவை ஒட்டி நோவா கப்பல் எங்காவது செய்யப்படுவது கேள்விப்பட்டால் துண்டு போட்டு வைப்போம்.
:)//

எனக்கொன்னு சொல்லி வையுங்கள்

சேவியர் சொன்னது…

//ஆம் ! தமிழ்தான் உலகின் முதல் மொழி எல்லா மொழிகளிலும் தமிழ் சொற்களின் ஆதிக்கம் இருக்கிறது//

தமிழ் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, இலக்கியச் செழுமை மிக்கது, மூத்த மொழி... எல்லாம் உண்மை தான். அதற்காக ஒத்த ஒலியுடைய பிற மொழி வார்த்தைகளெல்லாம் தமிழிலிருந்து போனவை என்பது அர்த்தமற்றது.
"பயில் பூஞ்சோலை மயில் எழுந்து ஆலவும்" என்பது ஒரு கையறு நிலைப் பாடல். அதுக்காக ஆலன் பார்டர் - எனும் பெயரிலுள்ள ஆலன் புறநாநூற்றிலிருந்து சொல்ல முடியாதில்லையா !

கோவி.கண்ணன் சொன்னது…

//சேவியர் said...
//ஆம் ! தமிழ்தான் உலகின் முதல் மொழி எல்லா மொழிகளிலும் தமிழ் சொற்களின் ஆதிக்கம் இருக்கிறது//

தமிழ் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, இலக்கியச் செழுமை மிக்கது, மூத்த மொழி... எல்லாம் உண்மை தான். அதற்காக ஒத்த ஒலியுடைய பிற மொழி வார்த்தைகளெல்லாம் தமிழிலிருந்து போனவை என்பது அர்த்தமற்றது.
"பயில் பூஞ்சோலை மயில் எழுந்து ஆலவும்" என்பது ஒரு கையறு நிலைப் பாடல். அதுக்காக ஆலன் பார்டர் - எனும் பெயரிலுள்ள ஆலன் புறநாநூற்றிலிருந்து சொல்ல முடியாதில்லையா !

10:30 PM, November 18, 2009
//

சேவியர் நான் அப்படி எதுவும் சொல்லி இருந்தால் குறிப்பிடுங்கள். இங்கு கப்பலைப் பற்றிய ஒத்த ஒலிப்புடைய ஒரே ஒரு பொருளைக் குறிக்கும் சொல்லாக வேறு வேறு மொழிகளில் வழங்கப்படுகிறது என்பதற்காக இங்கே குறிப்பிட்டேன்.

"பேச்சு" என்ற ஒலியில் இருந்து (S)peech வந்திருக்கலாம் என்று கூட நினைப்பதுண்டு.

பஞ்சு > ஸ்பாஞ்ச்(Sponch)
பொட்டு(திடல்) > ஸ்பாட் (Spot) என்று திரிந்திருப்பதாக இராமகி ஐயா எழுதும் போது ஏற்றுக் கொள்ளவே வேண்டி இருக்கிறது

மொழிகள் மூலம் என்று பார்த்தால் அவை ஒரே மொழியில் இருந்து கிளைத்தவையாகவே இருந்திருக்கலாம் என்கிற கூற்று இருக்கிறது. அந்த முதல் மொழி பழந்தமிழாக இருக்க கூறுகள் இருப்பதாக தேவநேயப்பாவாணர் போன்றோர்கள் ஆய்ந்து சொல்கிறார்கள், அவர்களை மறுக்கும் அளவுக்கு எனக்கு மொழி அறிவு கிடையாது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்