பின்பற்றுபவர்கள்

26 நவம்பர், 2009

தமிழர்களின் தாகம் !

கடமை போல் நடப்பு நிகழ்வுகளை வைத்து எழுதுவதில் அவ்வளவாக விருப்பம் இல்லை, சில முதன்மை நிகழ்வுகளின் அடைப்படையில் அது போல் எழுதுவதும் மன ஆறுதலைத் தருகிறது.

மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் சென்ற ஆண்டுகளில் நடக்கும் பொழுது அதை ஒரு நிகழ்வு என்பதாக ஊடகத் தலைப்புகளைப் படிப்பதுடன் சரி. இன்று இலங்கையின் நிலவரங்கள் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியும், திணித்தும் வைத்திருக்கின்றன. ஈழத் தமிழர் தமிழக "அகதி" முகாம்களைப் படங்களாகவும், இராமேஸ்வரம் கடற்பகுதிக்கு அவர்கள் படகில் வந்து தஞ்சம் புகும் படங்களே நமக்கு மிகப் பெரிய சோகக் காட்சிகளாக இருந்தது, அதையெலாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு உலக மதங்கள் காட்டும் நரகக் கூடங்களாக கம்பி வேலிக்குள் லட்சக்கணக்கில் சதையோடும், உடலோடும், உயிர் "சித்திர" வதைகளின் காட்சிகளாக ஈழமக்கள் நிற்கும் படங்களைப் பார்க்கும் போது உணவும், உறக்கமும் வெறுமையாகிப் போகிறது. வசதியான, பாதிப்பு இல்லாத இடத்தில் இருந்து கொண்டு அறிவுரை கூறும் ஆளும்வர்க அறிவாளிகள் 'இப்படி நடந்திருக்கலாம், அப்படி நடந்திருக்கலாம்...' என்ற காலம் கடந்த அறிவுரைகள் நிகழ்கால உண்மைகளை முடிந்த மட்டில் மறைக்கவே முயல்கின்றன.



ஈழமண்ணில் போராடி இறந்தவர்களைப் போல் ஈழத்தமிழர்களுக்காக மனதையும் உயிரையும் கொடுத்து தன்னை மாய்த்துக் கொண்ட முத்து குமார் போன்ற மாந்தர்கள் நம் தமிழக மண்ணில் இருந்திருக்கிறார்கள். இன விடுதலைக்காக போராடி வரலாற்றில் வாழும் அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் வீர வணக்கம் !

எந்த ஒரு விடுதலையும் ஓர் இரவில், இரத்தம் சிந்தாமல் கிடைத்தது இல்லை என்பதே உலக நாடுகளின் விடுதலை வரலாறு. எந்த ஒரு போராட்டத்திற்கான காரணங்கள் தொடந்து இருக்கும் போது போராடுபவர்களை ஒழித்துவிட்டால் போராட்டம் ஓய்ந்துவிடும் என்று தப்பாக நினைத்து தவறான முடிவெடுக்கும் ஆட்சியாளர்களின் அடக்கு முறைகள் உலகெங்கிலும் நடந்தவையே.

உலகெங்கிலும் யூதர்கள் உண்டு, யூதர்களுக்கென தனி நாடு இல்லை, என்கிற கருத்து இஸ்ரேல் தோன்றுவதற்கு முன்பு இருந்தது. யூதர்களைப் போல தமிழர்களையும் உலகம் வருங்கால வரலாற்றில் எழுதிக் கொள்ளும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன், சொல்லுவோம்

மாவீரர்கள் மரணித்ததே இல்லை !

9 கருத்துகள்:

குடுகுடுப்பை சொன்னது…

உலகெங்கிலும் யூதர்கள் உண்டு, யூதர்களுக்கென தனி நாடு இல்லை, என்கிற கருத்து இஸ்ரேல் தோன்றுவதற்கு முன்பு இருந்தது. யூதர்களைப் போல தமிழர்களையும் உலகம் வருங்கால வரலாற்றில் எழுதிக் கொள்ளும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன், சொல்லுவோம்//

தமிழர்களின் துயருக்கு முடிவு கிட்டட்டும்
யூத இனம் போல் ஒரு நாள் வெல்லட்டும்.

தமிழினியன் சொன்னது…

//எந்த ஒரு போராட்டத்திற்கான காரணங்கள் தொடந்து இருக்கும் போது போராடுபவர்களை ஒழித்துவிட்டால் போராட்டம் ஓய்ந்துவிடும் என்று தப்பாக நினைத்து தவறான முடிவெடுக்கும் ஆட்சியாளர்களின் அடக்கு முறைகள் உலகெங்கிலும் நடந்தவையே.
//

சத்தியமான வார்த்தைகள்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

உண்மையான கருத்துக்கள்.

நியாயம் ஒரு நாள் வென்றே தீரும்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல கருத்துக்கள் ஆழமானது

ராஜரத்தினம் சொன்னது…

//உலகெங்கிலும் யூதர்கள் உண்டு, யூதர்களுக்கென தனி நாடு இல்லை, என்கிற கருத்து இஸ்ரேல் தோன்றுவதற்கு முன்பு இருந்தது. யூதர்களைப் போல தமிழர்களையும் உலகம் வருங்கால வரலாற்றில் எழுதிக் கொள்ளும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன்//
உலகில் எந்த யூத இயக்கமும் ஆயுத போரட்டத்தில் இறங்கவில்லை. மாறாக அவர்கள் அறிவை பயன்படுத்தி ஒவ்வொரு நாட்டிலும் நல்ல பெயரை வைத்திருந்தார்கள். ஜெர்மனியில் 60 லட்சம் பேர் (படுகொலை செய்யப்பட்டு)இறந்தார்கள். அதற்காக அந்த நாட்டு அதிபரை அவர்கள் ப்டுகொலை செய்து அதை துன்பியல் என்று துப்பவில்லை. ஆகையால் தமிழர்களை(?) யூதர்களுடன் ஒப்பிடாதீர்கள். வேண்டுமானால் பாலஸ்தீன இயக்கத்துடன் ஒப்பிடலாம். அங்கு அவர்களுக்கு நடப்பதுதான் இங்கு இவர்களுக்கு.

தமிழ் உதயம் சொன்னது…

ஐ.நாவே தமிழ் ஈழ தேசத்தை நிர்மாணிக்கும். அது வரை தமிழர்கள் உறுதி குலையாமல் இருக்கவேண்டும்.

ராஜ நடராஜன் சொன்னது…

மௌனத்தை பதிவு செய்கிறேன்.

அது சரி(18185106603874041862) சொன்னது…

//
உலகெங்கிலும் யூதர்கள் உண்டு, யூதர்களுக்கென தனி நாடு இல்லை, என்கிற கருத்து இஸ்ரேல் தோன்றுவதற்கு முன்பு இருந்தது. யூதர்களைப் போல தமிழர்களையும் உலகம் வருங்கால வரலாற்றில் எழுதிக் கொள்ளும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன், சொல்லுவோம்
//

யூதர்களைப் போல நட்பு என்று எதுவுமில்லை, தன் கையே தனக்குதவி என்று விழிப்புடன் இருந்தால் என்றாவது ஒரு நாள் தமிழர்களின் வரலாறும் மாற்றி எழுதப்படும்...

//
மாவீரர்கள் மரணித்ததே இல்லை
//

உண்மை...வீரர்கள் புதைக்கப்படுவதில்லை...விதைக்கப்படுகிறார்கள்...மறைந்து நூறு வருடங்கள் ஆனாலும் வரலாறு அவர்களை என்றைக்கும் பதிவு செய்யும்...அல்லக்கைகளும் பதவிக்காக எச்சிலை பொறுக்கும் துரோக நாய்களும் வரும் சந்ததிகளால் உமிழப்படும்....

ஆ.ஞானசேகரன் சொன்னது…

தமிழர்களையும் உலகம் வருங்கால வரலாற்றில் எழுதிக் கொள்ளும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன், சொல்லுவோம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்