பின்பற்றுபவர்கள்

11 நவம்பர், 2009

குலத்தளவே !

மன்னர் ஆட்சி முறை ஒழிந்து மக்கள் ஆட்சி முறையில் உலகம் திரும்பி நூற்றாண்டுகள் ஆகின்றன. மன்னர் ஆட்சிமுறைகள் ஒருகாலத்தில் நல்லவையாகவே இருந்திருக்கலாம், ஆனால் இந்தியாவைப் பொருத்த அளவில் சாதிமுறைகள் தோன்றிய பிறகு மன்னர் ஆட்சிமுறைகள் அனைத்துமே சாதிமேலாண்மைக்கும் சாதிய தலைமைத்துவத்திற்குமே பயன்பட்டு வந்திருக்கிறது. மன்னர் ஆட்சி முறை என்பதே வாரிசு முறைதான். பிறர் படையெடுத்து வந்து வீழ்த்தாதவரை அந்த ஆட்சி தொடர்ந்து கொண்டே இருக்கும். நோஞ்சான் அல்லது கோழை வாரிசுகளை உற்சாகமூட்ட 'உன் குலமென்ன கோத்திரமென்ன்ன' என்கிற தூபம் போட்டு போட்டு அவனை வீரனாக்குவார்கள் அல்லது தோல்வியுற்று ஓடிய ஒளிந்து கொண்டிருக்கும் இளவரசனுக்கு அவனைச் சார்ந்தோர் 'குலம் கோத்திரம் சொல்லி சொல்லி' மீண்டும் இழந்த மண்ணை கைப்பெற்ற நினைப்பார்கள். பரம்பரைத் தன்மை மரப்புக் கூறுகள் என்பது உடல் கடத்தும் நோய்களுக்கும், உடல் தோற்றம் மற்றும் நிற அமைப்புகளில் மட்டுமே ஆளுமை செலுத்துகிறது. மற்றபடி தாத்தாவின் அறிவை பேரன் பெறுவானா என்பது எந்த ஒரு ஆராய்ச்சியாலும் நிருபனம் செய்ய முடியாதது என்பதைவிட குறிப்பிட்ட சூழலில் வளரும் ஒருவர் அந்த சூழலின் அறிவைப் பெறுவான் என்பதைத் தவிர்த்து பரம்பரைத் தன்மை அவன் மீது அறிவு, குணம் சார்ந்த எந்த ஒரு ஆளுமையையும் ஏற்படுத்திவிடாது என்பதே உண்மை.

புலிக்கு பிறந்த பூனையாகுமா ? நரியாகுமா ? நாய் ஆகுமா ? என்கிற பழைய பழமொழிகள் மரபுக் கூறுகளின் சித்தாந்தம் என்றாலும் அது வெறும் தோற்றம் குறித்து தான் அன்றி அறிவு சார்ந்த ஒன்றே அல்ல, புலிக்கு பிறந்த புலிக் குட்டி வீட்டில் வளர்க்கப்பட்டால் அதற்கு வேட்டையாடுதலின் நுட்பம் எதுவுமே தெரியாமல் போக வாய்ப்பு உண்டு, அப்போது அது வெறும் (பெரிய)பூனைதான். ஒருவரின் திறமை என்பது கற்றுக் கொள்ளல் அல்லது பயிற்சியினால் வருவாதேயன்றி பிறப்பு அதனை முடிவு செய்துவிட முடியாது. 'குலத் தொழில்' என்று சொல்வழக்கில் குறிப்பிடும் குலம் சார்ந்த தொழில்கள் அனைத்துமே அந்த குலத்தினரால் மட்டுமே அவர்களுக்குள் கற்றுக் கொடுக்ககப்பட்ட ஒன்று தான். எடுத்துக்காட்டிற்கு ஒரு சிற்பி இருக்கிறார் என்றால் அவர் மகன் அவரிடம் கற்றுக் கொண்டால் மட்டுமே அவன் சிற்பி ஆவான், அந்த சிற்பத்தொழிலை வேறொரு சாதியில் உள்ளவர்களால் கற்றுக் கொள்ள முடியாது என்பது பொருளே அல்ல, அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை என்பதே சரி. இவை பார்பனர் செய்யும் புரோகிதம், சோதிடம் போன்ற தொழில்களுக்கும் பொருத்தமானதே.

தந்தை தருமம், தானம் செய்யும் வள்ளத்தன்மை கொண்டவராகவும் நல்ல அறிவாளியாகவும், தொழிலில் முன்னோடியாகவும் இருந்து அவரது மகன் மருத்துவமனையில் அல்லது எதோ சதிகாரர்களின் சூழ்ச்சியினால் ஒரு திருடன் வீட்டில் வளர்க்கப்பெற்றால் ஒருகாலமும் அவனுக்கு தந்தையின் குணங்கள் வந்து சேராது. ஒருவனின் குண நலன்கள் என்பது அவன் வளரும் சூழலால், எதிர்கொள்ளும் நிகழ்வுகளால் ஏற்படுவதேயன்றி வெறும் பிறப்பு அதனை முடிவு செய்துவிடாது. எனக்கு தெரிந்து மூன்று மகன்கள் உள்ள பல வீடுகளில் ஒருவர் படிப்பறிவு அற்றவராக படிப்பை விரும்பாதவராகக் கூடப் பார்த்திருக்கிறேன். தந்தை தாய் நன்கு படித்தவர்களாகக் கூட இருப்பார்கள், இருந்தும் அவர்களின் மகன்களில் ஒருவருக்கு படிப்பு ஏறவில்லை என்றால் புலிக்கு பிறந்த பழமொழிகளையெல்லாம் அங்கே எடுபடவே படாது.

பரம்பரைப் பெருமை, குலப் பெருமை இவையாவும் சாதியக் கட்டுமானங்களை தாங்கிப் பிடிக்க சொல்லப்பட்டு வந்த பழ(கிழ) மொழிகள். அவை எந்த காலத்திலும் உண்மை இல்லாத பழைய மொழிகள்.பண்பாட்டுக் கூறுகளும் பரம்பரை குணங்கள் என்று கட்டமைக்கப்படுவது ஒன்று அல்ல. இனம் சார்ந்த செயல் முறைகள், பண்டிகைகள், குல தெய்வம், பழக்க வழக்கங்கள் இவை பண்பாட்டுக் கூறுகள் அவைகள் இனங்கள் கட்டமைத்த ஒன்று, ஆனால் வெறும் பயல்கள் பேசும் குலப்பெருமை என்பது தனிமனிதர்களுக்கு தானாக அமைவது கிடையாது. முன்னோர்களின் புகழில் குளிர்காய நினைப்பவர்கள் தனக்கென தனிப்பெருமை இல்லாத போது அதனை ஒட்டவைத்துக் கொள்வார்கள் அதுவே குலப்பெருமை என்பதாகும்.

எனக்கு தெரிந்து வீட்டில் இருந்த தாய் பசுமாடு எவரையுமே அண்டவிடாது கிட்டே சென்றால் கூட முட்டுவதற்கு முயற்சிக்கும் அதன் கன்று வளர்ந்த பிறகு தாயின் தன்மையான முட்டும் குணம் இல்லாத இருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் தாய் வளர்ந்தது மாடுகள் நிறைந்த ஒரு இடத்தில் பிற மாடுகள் தாக்கும் போது பதிலுக்கு தாக்கி தாக்கி அல்லது பயந்து முட்டுவதை தனது பாதுக்காப்பு செயலாக மாற்றிக் கொண்டிருந்தது கன்றுகுட்டி வளர்ந்த சூழல் மிகத் தனியானதும் அச்சுறுத்தல் இல்லாத சூழலும் ஆகும். மாடுகளுக்கே குணங்கள் வளரும் சூழலுக்கு ஏற்றது என்றால் எதையும் பார்த்து விரும்பியதை அல்லது தள்ளப்பட்ட சூழலை ஏற்று வளரும் மனிதர்களுக்கு பரம்பரை குணங்கள் உண்டு என்பவை கூறுகள் அற்றதேயாகும். பார்பனர் வீட்டில் பறையரின் குழந்தை வளர்ந்தாலும் பறையர் வீட்டில் பார்பனர் குழந்தை வளர்ந்தாலும் அதன் உணவு முறை பழக்க வழக்கங்கள் அங்கு ஊட்டப்படும் சூழலால் ஏற்பட்டு அந்த குழந்தையின் குணம் அதற்கேற்றவாறு மாறும்.

திருட்டு என்பது குற்றமாக கருதாமல் தொழிலாகவே அமைந்த இல்லச் சூழலில் வளரும் ஒரு குழந்தை திருட்டு என்பது தொழில் என்ற அளவில் புரிந்து வைத்திருக்கும். நல்ல உடல் நிலையில் உள்ள ஒருவர் சோம்பலாக இருந்தால் பிச்சை எடுப்பது அவரது குணமாகவே மாறிவிடும், அங்கே பிச்சை என்பது இயலாமையின் காரணம் அல்ல, அது சோம்பலான ஒருவரின் குணம் என்றாகிவிடும், இந்த குணத்திற்கு உரிமை உடைய எதாவது சாதி இனம், பரம்பரைத் தன்மை என்று எதையும் பொதுப்படுத்த முடியாது, மற்ற நல்ல குணங்களுக்கும், ஒருவரின் தனிச்சிறப்புக்கும் இது பொருந்தும்.

தனது முயற்சியினால் மேலே வந்து புகழடையும் ஒருவரின் தனிச் சிறப்பு போற்றப்பட வேண்டும், ஆனால் அதன் பெருமை அனைத்தும் அவருக்கு மட்டுமே உரிமை உடையது, அது அவருக்குப் பின்னால் அவரது வாரிசுகளுக்கு சூட்டப்பட்டால் அவருக்கு கிடைத்த பெருமையை, தனித்திறமையை அவமானப்படுத்துவதாகும். நடிகர் திலகத்தின் மகன்கள் நடிகர் திலகங்கள் கிடையாது, அவர்கள் நடிகர் திலகத்தின் வாரிசுகள் மட்டுமே. வாரிசுகளுக்கு அவருடைய வாரிசுகள் என்பதற்காக மரியாதை செய்யப்படுமேயன்றி அவர்களையும் நடிகர் திலகங்களாக போற்ற மாட்டார்கர்கள். இது இசையமைப்பாளர்கள் பல்வேறு கலை வித்தகர்கள், அரசியல், அறிவியல் சாதனையாளர்கள் அனைவருக்குமே பொருந்தும். தந்தையையும் மிஞ்சி புகழைடையும் வாரிசுகள் உண்டு அது அவர்களது தனித்திறமை.

தினமலர் வாரமலரில் ஆன்மிகம் என்ற பெயரில் வைரம் இராச கோபால் என்கிற ஆசாமி ஆன்மிகம் என்ற பெயரில் உயர்சாதி மேலாண்மை கருத்துகளையே எழுதிவருகிறார். ஒருவரின் குணம் அவரின் பிறப்பினால் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக உளறிக் கொட்டி அதற்கு ஆதரவாக ஒரு அரசியின் நடத்தையை இழிவு படுத்தி ஒரு அரசனின் பிறப்பை கேவலமாக சித்தரித்து அபத்தமாக ஒரு கதையை அதில் சொருகி இருக்கிறார். அந்த அபத்தக் கதைக்கு மாற்றாக 1000க் கணக்கான கதைகள் உண்டு, குறிப்பாக செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் தன் தொழில் செருப்பு தைப்பது என்று மட்டுமே நினைத்திருந்தால் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம்லிங்கன் உயர்ந்திருக்க முடியாது, ஒருவரின் செயல் பிறப்பை ஒட்டியே இருக்கும் என்கிற தகரம் இராசகோபாலின் அபத்தாந்தப்படி திருலிங்கன் அமெரிக்க முழுவதும் செருப்புக் கடைகளை திறந்து வைக்கவில்லை.

தகரம் இராச கோபாலின் ஆன்மிக அபத்தங்களை அடிக்கடி படித்து மனம் நொந்து வரும் ஆன்மிக பதிவர் ஒருவர் தான் மேற்கண்ட தகரம் இராசகோபாலின் சுட்டியை எனக்கு கொடுத்து படிக்கச் சொன்னார்.

ஒளயாரின் பாடல்கள், ஒளயார் வாழ்ந்த சூழல் சாதிமேலாண்மை வளரத் தொடங்கிய காலம், அவருடன் பழகியவர் குறிப்பாக கடையேழு வள்ளல் எனப்படுவோர், ஆகியோரைப் பற்றிப் பாடுகின்ற சூழலில் கொடையை வழியுறுத்தும் விதமாக சாதி மறுப்பு, வள்ளல் தன்மை போற்ற மன்னர்களை ஊக்குவிக்கும் குலப் புகழ்பாடல்கள் நிறைய பாடப்பட்டது. அதில்,

நல்வழி என்ற தலைப்பில்,

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட் டாங்கில் உள்ள படி .


மூதுரையில்

அட்டாலும் பால்சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்று
நுலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்.

ஒளயார் சுட்டும் சாதியும் குலமும் ஒன்று அல்ல. அதில் குலம் எனப் பொதுப்படையாக குறிப்பது எந்த ஒரு குலத்தின் தனிப்பெருமை, தனிப்புகழ் குறித்ததும் அல்ல. இவர்கள், இந்த குலத்தினர் அனைவருமே மிகவும் மோசமானவர்கள், கேடுகெட்டவர்கள் என்பது இந்தக்காலத்திற்கு பொருந்தாது, அல்லது எல்லோருக்கும் பொதுவானது. எல்லா சாதியினருமே, இனத்தினருமே பிழைப்புவாதிகள், பிழைப்பு தான் முதலில் அதில் நல்ல குணத்தை எங்கே தேடுவது, பிறகு எங்கே, எப்படி பொதுப்படுத்துவது ? ஒருவரின் தந்தை தாயின் நல்ல /கெட்ட குணம் அவர்களை பின்பற்றினால் அன்றி தானாக ஏற்பட்டுவிடாது.

33 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

::))))

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

சூப்பர் பதிவு

ஜோதிஜி சொன்னது…

இத்தனை ஆழமான கருத்துக்களை படிக்கும் போது உள்ளம் கதறுகிறது. நானும் இது போல படித்துக்கொண்டு இருக்கின்றேன். ஆனால் உங்கள் அளவில் விமர்சனப் பார்வையில் அதைப் பார்ப்பது இல்லை. காரணம் தவறான எழுத்துக்கள் கருத்துக்கள் நமக்கு நல்லவற்றை விட மிக நல்ல விசயங்களை கற்றுத் தருகிறது என்பது என் எண்ணம்.

இன்று வரையிலும் இந்த ஆதிக்கம் நாகரிகமான முறையில் உள்ளே இருக்கும் அத்தனை பேர்களையும் இழுத்து பிடித்துக்கொண்டு தான்இருக்கிறது.

சர்ச்பார்க் கான்வெண்ட் என்பது இன்று வரையிலும் உயர்வுக்குறி.

ஆனால் கன்யாகுமரியில் உள்ள மீன் விற்பவர் பையன் பெற்ற 494 மதிப்பெண் என்பது நீங்கள் சொன்னது போல் அத்தனையும் உடைத்து தன்னை நிரூபிக்கச் சொன்னது.

இது ஒரு பார்வை.

பிசிஆர் ஆக்ட் என்பது நீங்கள் அன்றாடம் படிக்கும் செய்திகள் மூலம் எதை உணர்த்துகிறது. இது திருப்பூர் மாவட்டத்தில் கொங்கு நாடு என்ற ஒரு இயக்கம் உருவானதுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று.

உங்கள் கருத்து மூலம் ஒன்று மட்டும் எனக்கு புரிகிறது.

தீதும் நன்றும் பிறர் தர வரா.

நம்முடைய குணங்கள், சிந்தனைகள், நாம் தேர்ந்து எடுக்கும் விசயங்கள் நம்மை வழிநடத்த வேண்டும். இல்லை என்றால் விழி இருந்தும் இல்லாத குருட்டு வாழ்க்கை தான்.

கருத்தை நகர்த்தியாச்சு. வாழ்த்துக்கள் ஐயா.

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல கருத்துக்கள் கோவியார். பண்புகள் குலத்தால் வருவது அல்ல, குணத்தால் வருவது. பழகும் சூழ்னிலையால் வருவது. அல்லது தம் அறிவால் மேம்படுத்திக் கொள்வது என்பது சரியான விளக்கம். சாதியின் முறையில் ஒரு இனம் ஓரிடத்தில் குவிக்கப் பட்டால் அந்த சுற்றுப்புறம் காட்டும் அறிவு வரும். சூழ்னிலை மாறும் போது அதன் தாக்கமும் மாறும். மக்கள் தனியாக குவிக்கப் பட்ட அந்த காலத்திற்க்கு இந்த பழமொழிகள் பொருந்தும். ஆனால் இப்போது பொருந்தா. பழமை பேசி பிரிந்து இருப்பதை வீட புதுமையில் இணைதல் நலம். இதோ பழமொழிகள் வாத்தியார் மகன் மக்கு என்றும் போலிஸ் மகன் திருடன் என்றும் கூறுவது இழுக்கு.
நன்றி கோவி அண்ணா.

தேவன் சொன்னது…

/// தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம். ///

ஒளவையின் ஞானத்தில் உங்கள் சோதனை வேண்டாம் என்று நினைக்கிறேன்.
இங்கு அவர்கள் குலத்தளவு என்று கூறுவது வேறு ஏதேனும் பொருள் இருக்கலாம். (நான் எதற்கும் அதன் பொருள் தேடி பார்கிறேன்) ஏன் என்றால் மேலே உள்ள வரியை பார்த்தீர்களா? யார் இன்று தவம் புரிகிறார் தவத்தால் யார் பயன் பெற்றார்.

ஆனால் தகரம் இராச கோபாலின் ஆன்மிக அபத்தங்களை நானும் ஒத்துக்கொள்ள மாட்டேன்.

வால்பையன் சொன்னது…

புரியுது! புரியுது!

vasu balaji சொன்னது…

அருமை கோவி.

முகவை மைந்தன் சொன்னது…

//செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் தன் தொழில் செருப்பு தைப்பது என்று மட்டுமே நினைத்திருந்தால் அமெரிக்க அதிபர் ரீகனாக உயர்ந்திருக்க முடியாது//

அது திரு.லிங்கன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஒரு வேளை இப்ப மாத்திருப்பாங்களா இருக்கும்.

ஷண்முகப்ரியன் சொன்னது…

உங்கள் ஆய்வின் ஆழமும்,சிரத்தையும் என்னையும் சிந்திக்கத் தூண்டுகிறது,கன்ணன்.

எதிர்காலத்தின் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் மனித மனத்தின் அறியாமையே இத்தனை சாதிகளும்,பிறப்பால் கற்பிக்கப் படும் ஏற்ற தாழ்வுகளும்.

ஒரு குழந்தை பின்னால் எப்படி இருக்கப் போகிரது எனபதை அதனுடைய உடற்கூற்றியல்,மரபணுவியல்,சமூகவியல்,பொருளாதரவியல், இன்னும் புரிந்து கொள்ள முடியாத சோதிடவியலின் நுட்பங்கள் அனைத்துக்கும் மேலே உயிர்கள் தங்களுக்கென்றே வைத்திருக்கும் மர்மங்கள் இப்படி ஓராயிரம் காரணிகள் இருக்க, ஒட்டு மொத்தமாகச் சுருக்கிச் சாதி,மதம்,இனம் போன்ற செயற்கை பெயரால் அதனுடைய தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அவலங்கள் காலம் தோறும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

கூட்டமாக வாழ்ந்தாக வேண்டியதற்குத்,தனிமனிதன் அநியாயமாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை இது.

முகவை மைந்தன் சொன்னது…

//அட்டாலும் பால்சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.//

செப்பலோசை தெறிக்குதுல்ல இந்தப் பாட்டுல. இரண்டாவது அடில மூணு சீர்தான் இருக்கு, பாத்தீங்களா? இது மாதிரி சீர்கள் குறையும் பாட்டை சவலை வெண்பான்னு சொல்வாங்க.

அட்டாலும் - அடுதல் - காய்ச்சினாலும்னு பொருள் போட்டிருக்கு.

Sanjai Gandhi சொன்னது…

ஆகவே மகா ஜனங்களே , நாம் தினமலர் செய்தித்தாளை புறக்கணித்துவிட்டு இணையத்தில் மட்டுமே படிப்போம்..

கோவி.கண்ணன் சொன்னது…

/அத்திவெட்டி ஜோதிபாரதி said...
::))))
//

ந...ன்...றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
சூப்பர் பதிவு
//
நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
.
.
.
நம்முடைய குணங்கள், சிந்தனைகள், நாம் தேர்ந்து எடுக்கும் விசயங்கள் நம்மை வழிநடத்த வேண்டும். இல்லை என்றால் விழி இருந்தும் இல்லாத குருட்டு வாழ்க்கை தான்.

கருத்தை நகர்த்தியாச்சு. வாழ்த்துக்கள் ஐயா.//

சிறப்பாக சொல்லி உள்ளீர்கள். பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...
நல்ல கருத்துக்கள் கோவியார். பண்புகள் குலத்தால் வருவது அல்ல, குணத்தால் வருவது. பழகும் சூழ்னிலையால் வருவது. அல்லது தம் அறிவால் மேம்படுத்திக் கொள்வது என்பது சரியான விளக்கம். சாதியின் முறையில் ஒரு இனம் ஓரிடத்தில் குவிக்கப் பட்டால் அந்த சுற்றுப்புறம் காட்டும் அறிவு வரும். சூழ்னிலை மாறும் போது அதன் தாக்கமும் மாறும். மக்கள் தனியாக குவிக்கப் பட்ட அந்த காலத்திற்க்கு இந்த பழமொழிகள் பொருந்தும். ஆனால் இப்போது பொருந்தா. பழமை பேசி பிரிந்து இருப்பதை வீட புதுமையில் இணைதல் நலம். இதோ பழமொழிகள் வாத்தியார் மகன் மக்கு என்றும் போலிஸ் மகன் திருடன் என்றும் கூறுவது இழுக்கு.
நன்றி கோவி அண்ணா.
//

ந ன் றி ங் கோ !

கோவி.கண்ணன் சொன்னது…

//கேசவன் .கு said...
/// தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம். ///

ஒளவையின் ஞானத்தில் உங்கள் சோதனை வேண்டாம் என்று நினைக்கிறேன்.
இங்கு அவர்கள் குலத்தளவு என்று கூறுவது வேறு ஏதேனும் பொருள் இருக்கலாம். (நான் எதற்கும் அதன் பொருள் தேடி பார்கிறேன்) ஏன் என்றால் மேலே உள்ள வரியை பார்த்தீர்களா? யார் இன்று தவம் புரிகிறார் தவத்தால் யார் பயன் பெற்றார்.

ஆனால் தகரம் இராச கோபாலின் ஆன்மிக அபத்தங்களை நானும் ஒத்துக்கொள்ள மாட்டேன்.
//

கேசவன், நான் ஒளவையார் வாக்கைக் குறைச் சொல்லவில்லை. அதனால் தான் அவர் எழுதிய சூழலைச் சேர்த்துச் சொல்லி இருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
புரியுது! புரியுது!
//
'வால்'மட்டும் தான் நுழையலையா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// வானம்பாடிகள் said...
அருமை கோவி.
//

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...


அது திரு.லிங்கன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஒரு வேளை இப்ப மாத்திருப்பாங்களா இருக்கும்.
//

:) மாற்றிவிட்டேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//கூட்டமாக வாழ்ந்தாக வேண்டியதற்குத்,தனிமனிதன் அநியாயமாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை இது.//

சிறப்பாக சொல்லி இருப்பதுடன் உங்கள் பாராட்டும் மிக மகிழ்ச்சியை தருகிறது திரு ஷண்முகப்ரியன் ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

// முகவை மைந்தன் said...


செப்பலோசை தெறிக்குதுல்ல இந்தப் பாட்டுல. இரண்டாவது அடில மூணு சீர்தான் இருக்கு, பாத்தீங்களா? இது மாதிரி சீர்கள் குறையும் பாட்டை சவலை வெண்பான்னு சொல்வாங்க.

அட்டாலும் - அடுதல் - காய்ச்சினாலும்னு பொருள் போட்டிருக்கு.
//

நண்பா, வெண்பா குறிப்பு சிறப்பு. தெரிந்து கொள்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™ said...
ஆகவே மகா ஜனங்களே , நாம் தினமலர் செய்தித்தாளை புறக்கணித்துவிட்டு இணையத்தில் மட்டுமே படிப்போம்..
//

நான் அப்படிச் சொல்லவில்லை. விருந்தில் வைத்திருப்பதை எல்லாம் உண்ணலாம் என்பதை விட உடல் நலத்திற்கு ஏற்றதை உண்ணலாம். தினமலர் தரும் மற்ற தகவல்களை படிக்கலாமே.

Sanjai Gandhi சொன்னது…

//விருந்தில் வைத்திருப்பதை எல்லாம் உண்ணலாம் என்பதை விட உடல் நலத்திற்கு ஏற்றதை உண்ணலாம்//

Don't u know about the table manners? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™ said...
//விருந்தில் வைத்திருப்பதை எல்லாம் உண்ணலாம் என்பதை விட உடல் நலத்திற்கு ஏற்றதை உண்ணலாம்//

Don't u know about the table manners? :)
//

அதெல்லாம் பழைய காலம், சர்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு உணவு நாகரீகம் பேசி பாயாசம் சாப்பிடச் சொல்லி கொன்னுடக் கூடாது
:)

ஆ.ஞானசேகரன் சொன்னது…

என்னதான் மரபியல் பண்புகள் இருந்தாலும் வளரும் சூழல்கள் என்பதும் முக்கியமே! நல்ல இடுகை

S.Gnanasekar சொன்னது…

குலப்பெருமை என்பது தனிமனிதர்களுக்கு தானாக அமைவது கிடையாது. முன்னோர்களின் புகழில் குளிர்காய நினைப்பவர்கள் தனக்கென தனிப்பெருமை இல்லாத போது அதனை ஒட்டவைத்துக் கொள்வார்கள் அதுவே குலப்பெருமை என்பதாகும். நல்ல கருத்துக்கள் கோவியார் அவர்களே.
நன்றி.
சோ.ஞானசேகர்.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

கண்ணன்,
சாதீயத்தையும் அதன் மூலம் உயர்வு தாழ்வு பேசுவதையும் அடிப்படையிலேயே ஒத்துக் கொள்ள முடியாது.

ஆனால் இந்தப் பதிவில் நீங்கள் ஒப்புமைப் படுத்துவது திறனையா அல்லது குணத்தையா?

குலமளவே ஆகுமாம் குணம் என்பது செய்தொழில் நேர்த்தியை குறிக்க உபயோகிக்கப் பட்டது என்பது என் புரிதல்.

காட்டாக போர்த்தொழில் புரிபவனின் மகன் போர்த்தொழிலில் இயல்பாகவே திறன் கொண்டிருப்பான்;கைத்தொழிலாளியின் மகனுக்கு இயல்பான கைத்தொழில் திறன் இருக்கும்.வியாபாரியின் மகன் இயல்பான வியாபாரியாக இருப்பான்.

ஆனால் கைத்தொழிலாயின் மகன் போர்த்தொழிலுக்கோ அல்லது லிங்கன் போல இக்கால ஆட்சித் தொழிலுக்கோ போகக் கூடாது என்று பொருள் எங்காவது -குலத்தளவே ஆகுமாம் குணம்-என்பதில் வருகிறதா?

கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.....

பதி சொன்னது…

நல்ல கருத்துக்கள்...

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால் கைத்தொழிலாயின் மகன் போர்த்தொழிலுக்கோ அல்லது லிங்கன் போல இக்கால ஆட்சித் தொழிலுக்கோ போகக் கூடாது என்று பொருள் எங்காவது -குலத்தளவே ஆகுமாம் குணம்-என்பதில் வருகிறதா?

கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.....//

அறிவன் சார், நான் இணைத்திருக்கும் தினமலர் சுட்டியைப் பாருங்கள், அதில் வைரம் இராஜகோபால் ஒருவரின் எண்ணம் அவரின் பிறப்பினால் அமைவது என்று எழுதி இருக்கிறார். அதற்கு மாற்றாகத்தான் மறுப்பாகத்தான் இதை எழுதி இருக்கிறேன்.

இன்றைக்கு பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்களும் கணிணி துறையில் கொடிகட்டிப்பறக்கிறார்கள், பரம்பரைக்கும் செய்தொழிலுக்கும் எதுவும் தொடர்பில்லை என்னும் நிருபனம் தானே இவை.

எந்த ஒரு சாதி அல்லது இனத்திற்கு பிறர் பின்பற்ற வேண்டிய தனிச் சிறப்பான குணம் எதுவும் இல்லை என்பதே நான் இங்கே சொல்ல விழைவது. ஒருவன் குணத்தில் எப்படிப் பட்டவன் என்பதை அவன் வளரும் சூழலே முடிவு செய்கிறது பிறப்பு அல்ல என்றே சொல்லி இருக்கிறேன்.

ஒன்றை எளிதாகக் கற்றுக் கொள்ள அந்த சூழலில் அதைத் தொடர்ந்து பார்த்து வந்தால் முடியும் அதற்கும் மரபுக் கூறுகளுக்கும் தொடர்பே இல்லை. தையல் என்பது கலைதானே அதைக் கற்றுக் கொள்ள அல்லது விரைவாக கற்றுக் கொள்ள பரம்பரைத் தன்மை என்னும் அளவுகோல் எதுவும் கிடையாது, தையல் கடைக்காரரின் மகன் நாள்தோறும் பார்த்து வந்தால் ஒருநாள் தைக்கத் தொடங்கிவிடுவான், அதை அவன் கவனித்து வந்த காலமும் கணக்கில் கொள்ளவேண்டியது உள்ளது பொதுவாக நாம் அதை கணக்கில் வைத்துக் கொள்ள மாட்டோம். இயல்பாக வந்ததாகவே நினைப்போம்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள்.

பரம்பரை தொழில் என்று ஒதுக்கித்தான் ஜாதிய பிரிவுகளை அதிகமாக வளர்த்தார்கள்.

எந்த தொழிலுமே இழிவு கிடையாது.

தகப்பனின் குணங்களான கோபம், இரக்கம் வேண்டுமென்றால் அவரைப்போலவே இருக்கலாம். ஆனால் தொழில் அறிவு என்பது கற்று அறிந்துகொள்வது. அது அவரவரின் திறமையையும் முயற்சியையும் பொறுத்தே அமைகின்றன.

உதாரணமாக நமது பள்ளிப்படிப்பை சொல்லலாம். நல்ல தொழில் செய்பவர்களை விட , கஷ்டப்படுபவர்களின் குழந்தைகள் நன்றாக படிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

Test சொன்னது…

ரெண்டு நாளா பதிவே இல்லையே? எதாவது அமெரிக்க சுற்று பயணமா?

மணிகண்டன் சொன்னது…

இன்னிக்கும் புது பதிவு இல்லை. சூப்பர் :)- வினவு வாழ்க.

KarthigaVasudevan சொன்னது…

//ஒருவனின் குண நலன்கள் என்பது அவன் வளரும் சூழலால், எதிர்கொள்ளும் நிகழ்வுகளால் ஏற்படுவதேயன்றி வெறும் பிறப்பு அதனை முடிவு செய்துவிடாது.//

இது மிக எளிமையான வார்த்தை ...புரிந்து கொள்வதற்கு தான் ஆட்கள் குறைவு இங்கே.

ஜாதி நிச்சயம் ஒருநாள் ஒழிந்து விடும் என்று நம்பலாம் ...அதற்குள் ஜாதி,மதம் என்ற பெயரில் மக்கள் மாக்களாகி சண்டையிட்டு தம்மைத் தாமே அழித்துக் கொள்வார்கள்,மனிதன் இருந்தால் தானே ஜாதியும் அதனால் உண்டாகும் பீதியும் ,மனித இனமே தனக்குத் தானே மாண்ட பின் ஜாதி எங்கே? மதம் எங்கே ? கலவரம் எங்கே?!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்