பின்பற்றுபவர்கள்

25 நவம்பர், 2009

ஊருக்குள்ளே என்னைப் பற்றி...

எனது 1000 ஆவது பதிவை பாராட்டி வாழ்த்திய அனைத்து பதிவர் நண்பர்களுக்கும் மிக்க நன்றி !

தலைப்பில் பதிவர் பெயரை வைத்து இடுகைகள் எழுத எதேனும் கும்மி, கேள்வி, எதிர்வினை,பாராட்டு, நற்பெயர், கெட்டப் பெயர் அனைத்துக் காரணங்களும் இருக்கும், பிறப் பதிவரின் இடுகை தலைப்பில் இடம் பெறும் பதிவர்கள் பலர் உண்டு, பல்வேறு பதிவர்களின் இடுகைகளில் என்பெயர் 25க்கும் மேற்கண்ட இடுகைகளில் இடம்பெற்றிருக்கிறது.

பாராட்டு, புகழ்ச்சி...இகழ்ச்சி...எல்லாம் உண்டு, போற்றுவார்கள் போற்றலும் இருக்கிறது, தூற்றுயவர்கள் தூற்றியதும் இருக்கிறது....போகட்டும் கோவி.கண்ணனுக்கே ! :)
கூகுளாண்டவரின் உதவியுடன் முடிந்தவரை தேடிப் பிடித்து இணைத்திருக்கிறேன், முழுப்பட்டியல் இல்லை என்றாலும் கொஞ்சம் நிறைவான பட்டியல் தான்.

என் பெயர் (கோவி,கோவியார்,கோவி.கண்ணன்) தலைப்பில் இடம் பெற்ற பல்வேறு பதிவர்களின் இடுகைகள்:

1. பதிலிளிப்பாரா கோவி. கண்ணன்?
2. கோவி.கண்ணணுக்கு நடந்தது என்ன?
3. "கோவி.கண்ணன் அவர்களின் பார்வைக்கு... பெரியாரின் விளக்கம்"
4. கோவியார் செய்த மாபெரும் உதவி
5. கோவி கண்ணனும்,பதிவுகளும்
6. இடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா?
7. கோவியாருக்கு எச்சரிக்கை
8. ஆறு: கோவி கண்ணனுக்காக
9. 75. வீரமணியும் கோவி.கண்ணனும் "நைசாக" பாடிய கண்ணன் பாட்டு!
10. அன்புள்ள கோவி.கண்ணன் அவர்களுக்கு
11. "கோவி”யார்” பற்றி செந்தழலின் அதிரடி வாக்குமூலம்..."
12. காமெடி+ செண்ட்டிமெண்ட் கோவி.கண்ணனின் அழுகாச்சி காவியம்(கடிதம்)
13. கோவி. கண்ணன் அவர்களிடம் நறுக் என நான்கு கேள்வி !
14. அடித்து ஆடும் கோவி.கண்ணன் அலறித்துடிக்கும் ஆரியக்குஞ்சுகள்
15. பின்னூட்ட நாயகர் கோவி.கண்ணன்
16. "சும்மா ட்டமாஷ்-50: கோவி கண்ணன் பேட்டி, பாகம்-1"
17. "சும்மா ட்டமாஷ்-50: கோவி கண்ணன் பேட்டி, பாகம்-2"
18. Hate Hindi and யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் : கோவி.கண்ணன்
19. BlogOgraphy:கோவி.கண்ணன்
20. கோவி கண்ணனுக்கு கண்டனம்..
21. ”கோவியார் கேட்ட கொண்டைக்கடலை வற்றல் குழம்பு!”
22. கோடி மதிப்புள்ள கோவி.கண்ணன் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?
23. கோவி.கண்ணனும், நையாண்டியும் - சிக்கலின் நான்
24. காணவில்லை! காரணம் என்ன? - கோவியார் பெசல் கும்மி!
25. கோவி.கண்ணனைக் கண்டிக்கிறேன் !
26. "டேக் கேர் கோவி!!"
27. இதெல்லாம் ஒரு பிழைப்பா கோவி கண்ணன்?


மேலும்:
28. ஆயிரத்தில் ஒருவன் - கோவியார்.
29.கோவி.கண்ணனின் அட்டகாசங்கள்

21 கருத்துகள்:

கிரி சொன்னது…

கேட்டுப்பாருங்க அம்மம்மா இவர் தான் .............. [இதன் பிறகு வரும் வார்த்தை இவருக்கு பிடிக்காததால் உங்கள் ஊகத்திற்கு விடப்படுகிறது ;-)]

இது எப்படி இருக்கு! :-)

கிரி சொன்னது…

இந்த 1000 பதிவை வைத்து ஒரு இடுகை போட்ட இடுகை புயல் (சரியா! கவனிங்க பின்னூட்ட புயல் அல்ல) கோவி கண்ணன் வாழ்க :-)

Mahesh சொன்னது…

1000க்கு வாழ்த்துகள் கோவியாரே... (வேறு யாரேனும் 1000 இடுகைகள் எழுதியிருக்கிறார்களா? உங்களுக்குத் தெரியுமா?) குறை நிறைகள், பாராட்டுகள் குட்டுகள்.... எழுதும் எல்லாருக்கும்தான் கிடைக்கிறது. அதையும் வெளிப்படையாகப் போட்டதற்கு பாராட்டுகள்.

நசரேயன் சொன்னது…

வாழ்த்துக்கள்

ராஜவம்சம் சொன்னது…

முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்துகள்

உங்கள் பதிவுகளை சமிபகாலமாகதான் வாசிகிறேன்

பல விசயங்கள் பயனுல்லதாகவும் சில கருத்துவேருபாடுகலாவும்

கருத்துக்களுக்குதான் மோதேலே தவிர தனிமனிதனுடன் (கோவி)இல்லை

நன்றி

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

ஆயிரத்தில் ஒருவனுக்கு வாழ்த்துக்கள்.

உங்களை பற்றி நான் எழுதிய இடுக்கையை இங்கே வெளியிட்டாததற்கு அன்பு கண்டனம்.

http://vediceye.blogspot.com/2009/01/blog-post_30.html

ஒரு தனி நபர் பற்றிய பதிவு உங்களை பற்றி மட்டும்தான் நான் எழுதி இருக்கிறேன் என்பது கூடுதல் தகவல்...!

முரளிகண்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள் கோவிஜி

அக்பர் சொன்னது…

என்னோட இடுகையையும் இணைத்ததற்கு நன்றி.

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

வாழ்த்துக்கள் தலைவரே...,

இனியா சொன்னது…

வாவ்!!! ஆயிரம் பதிவுகளா? ஆச்சர்யமாக இருக்கின்றது!!! வாழ்த்துகள் நண்பரே!!!

விஜய் ஆனந்த் சொன்னது…

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...!!!

ஜோ/Joe சொன்னது…

அதெல்லாம் சரி ..கரகாட்டகாரன் சண்முக சுந்தரம் பழைய போட்டாவ இந்த பதிவுல ஏன் போட்டிருக்கீங்க? :)

புரட்சிகர தமிழ்தேசியன் சொன்னது…

தோழர் ..

மாவீரர் நாளுக்கு வீரவணக்கம் செலுத்தி பதிவிடவில்லையா?நாம் இந்த வகையிலாவது அவர்களுக்கு மரியாதை செலுத்துவோம்..நன்றி

..:: Mãstän ::.. சொன்னது…

அடடா இவர்தான் சூப்பர்ஸ்டாருங்க :)

உண்மையிலே ரெம்ப சந்தோசமா இருக்கு கோவிஜி. நீங்க இன்னும் அதிககமா எழுதனும். நீங்க 5000 பதிவு போடும்போது நேரடியா வந்து வாழ்த்தனும்.

யாசவி சொன்னது…

what a long journey Kovi.

Keep going

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//"ஊருக்குள்ளே என்னைப் பற்றி..."

//

ஏய்!மிஷ்ட்டர்!இன்னா மேன் சர்கஸ் காட்டுறே??!!?

:))))

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

ஆயிரம் இடுகைகள் கண்ட அபூர்வ பதிவர் கோவியார் வாழ்க :)

கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

நூறாவது நாள், வெள்ளி விழா மாதிரி ஆயிரம் பதிவுகளை எழுதியது நிச்சயமாக, ஒரு சாதனைதான்!

ஊருக்குள்ளே என்னைப் பற்றிக் கேட்டுப் பாரு என்று சுட்டி கொடுத்ததற்குப் பதிலாக, இந்த ஆயிரத்தில் எனக்குப் பிடித்தது இது, பிடித்த விஷயங்களாகப் பார்த்துப் பதிந்தது இது என்று சுட்டி கொடுத்திருந்தால், இன்னும் கொஞ்சம் அதிகமான சுட்டிகளைக் கொடுத்திருக்க முடியுமோ?

பத்தோடு பதினொன்று, அத்தோடு இத்தொன்று என்பது போல ஆயிரம் என்பது வெறும் எண்ணிக்கையாக மட்டுமே நின்று விடாமல்,புதிய சிகரங்களைத் தொட வேண்டிய நேரம் இது.

வாழ்த்துக்களுடன்!

துளசி கோபால் சொன்னது…

அட! இது நல்லா இருக்கே:-))))))

ஜெகதீசன் சொன்னது…

அதெல்லாம் சரி ..கரகாட்டகாரன் சண்முக சுந்தரம் பழைய போட்டாவ இந்த பதிவுல ஏன் போட்டிருக்கீங்க? :)

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

வாழ்த்துக்கள்..

இந்த பேர் வந்த லிங்க்களை சேமிக்கிற விசயம் நல்லா இருக்கு.. :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்