பின்பற்றுபவர்கள்

2 நவம்பர், 2009

சர்வேசனுக்காக நஒக : பயணிகள் கவனிக்கவும் (சிறுகதை) !

நேற்று இரவு 'டிஸ்கோத்தே பார்டியில்' க்ளாசுடன் போட்ட ஆட்டம் செந்தில்வேலனை காலை 9 மணி வரையில் அசதியில் கிடத்திவிட்டது, எழுந்து நேரம் பார்த்தான் 9.05. பதறி அடித்து கிளம்பிக்க் கொண்டே இன்னும் 45 நிமிட நேரத்தில் விமானத்தைப் பிடிக்க வேண்டும், கல்கத்தா செல்லும் காலை விமானம் அது ஒன்று தான். இல்லை என்றான் இன்னும் ஒரு நாள் காத்திருக்க வேண்டும், அன்றைக்கு மதியம் கல்கத்தா அலுவலக கான்பிரன்சில் அவன் கலந்து கொண்டே ஆகவேண்டும். என்ன செய்வது என்று யோசித்தான். இங்கிருந்து விமான நிலையம் செல்ல எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும். எல்லா உடைமைகளையும் எடுத்துக் கொண்டு ஒரு ஓட்டல் பில் மற்றும் அனைத்தையும் நடைமுறைகளையும் முடித்து நகத்தைக் கடித்துக் கொண்டே பரபரப்புடன் வெளியே நடந்தான்.

*****

விமான நிலையத்தை அடைந்த போது விமான நிலையம் பரபரத்துக் கொண்டிருந்தது, அனைத்து விமானங்களும் காலதாமதமாக புறப்படுவதாக "பயணிகள் கவனிக்கவும்..." அறிவிப்புகள் காட்சி பெட்டிகளில் ஓடிக் கொண்டிருந்தனர். உள்ளே செல்லும் பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை கடுமையாக செய்தே அனுமதித்தனர். தான் செல்லும் விமானமும் தாமதமாக புறப்படும் என்கிற அறிவிப்பைப் பார்த்ததும் செந்தில் வேலனுக்கு மனம் நிம்மதியாக இருந்தது.

நுழைவாயில் செக்கியூரிட்டியிடம் விமானச் சீட்டைக் காட்டிவிட்டு உள்ளே சென்றான், அடுத்து உள் நுழையும் இடத்தில் போர்டிங் பாஸ் வழங்கும் இடத்தின் நுழைவாயில் அருகில் இருந்த காவலர் செந்தில் வேலனின் பயணச் சீட்டை பார்த்ததும் அதிர்ந்தவராக அவன் கைகளை அழுத்தமாகப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு அப்படியே கண்டோர்ல் அறைக்கு அழைத்துச் சென்றார்.

"நீ ஏன் லேட்டு......."

ஒருமையில் உரிமை இல்லாக் குரல் அதிர்ந்தான்

"அது வந்து......."

அவர் அவன் குரலை உறுதிப் படுத்திக் கொண்டதும், டேப்பை ஓடவிட்டார்

செந்தில் வேலனின் கைகளை பின்பக்கமாக முறுக்கி பிணைத்துக் கொள்ள

"கல்கத்தா செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருக்கு..........."
பதட்டத்துடன் செந்தில்வேலன் ஓட்டல் அருகில் இருந்த எஸ்டிடி பூத்தில் பேசிய அவன் குரலே செந்தில் வேலனுக்கு கேட்டது

'வாயல பேசியதும் இல்லாமல், சிக்குவோம் என்று தெரியாமல்.....இப்படி வசமாக சிக்கி இருக்கக் கூடாது' நினைத்துக் கொண்டே, வேறு வழி இன்றி உண்மையை ஒப்புக் கொண்டவனாக

"விமானம் புறப்படுவதைத் தள்ளிப் போட முயன்று முன்யோசனை இல்லாமல் இப்படிச் செய்துவிட்டேன்.....என்னை மன்னிச்சிடுங்க..."

அவன் முகத்தில் விழுந்த குத்து அதற்கு மேல் அவன் பேசமுடியாமல் சுய நினைவை இழக்க வைத்தது.

24 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ஆகட்டும்...

அப்பாவி முரு சொன்னது…

இந்த கதை யாருக்காகவென எனக்குத் தெரியும்!!!


:)

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இது உண்மை சம்பவம் மாதிரி இருக்கே.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கோவி அண்ணா கலக்குறீங்களே ...

எப்படி இதெல்லாம் ....

யாரையோ குறி வச்சமாதிரி இருக்கே ...

பித்தனின் வாக்கு சொன்னது…

good story, and good imagination.

சிங்கை நாதன்/SingaiNathan சொன்னது…

//பதட்டத்துடன் செந்தில்வேலன் ஓட்டல் அருகில் இருந்த எஸ்டிடி பூத்தில் பேசிய அவன் குரலே செந்தில் நாதனுக்கு கேட்டது//

செந்தில்வேலன் பேசியது செந்தில் நாதனுக்கு கேட்டதா ?

யப்பா சாமி நான் இல்ல ;)

அன்புடன்
சிங்கை செந்தில் நாதன்

நிகழ்காலத்தில்... சொன்னது…

//singainathan


//பதட்டத்துடன் செந்தில்வேலன் ஓட்டல் அருகில் இருந்த எஸ்டிடி பூத்தில் பேசிய அவன் குரலே செந்தில் நாதனுக்கு கேட்டது//

செந்தில்வேலன் பேசியது செந்தில் நாதனுக்கு கேட்டதா ?

யப்பா சாமி நான் இல்ல ;)

அன்புடன்
சிங்கை செந்தில் நாதன்//


இல்லை எனக்கு சந்தேகமாகத்தான் உள்ளது :))

வாழ்த்துக்கள் சிங்கைநாதன்:))

கோவி.கண்ணன் சொன்னது…

/ singainathan said...
//பதட்டத்துடன் செந்தில்வேலன் ஓட்டல் அருகில் இருந்த எஸ்டிடி பூத்தில் பேசிய அவன் குரலே செந்தில் நாதனுக்கு கேட்டது//

செந்தில்வேலன் பேசியது செந்தில் நாதனுக்கு கேட்டதா ?

யப்பா சாமி நான் இல்ல ;)

அன்புடன்
சிங்கை செந்தில் நாதன்
//

செந்தில்
கதையில் செந்தில் நாதன் என்று போட்டு எழுதிவிட்டு கடைசியில் மாற்றினேன். ஒண்ணு விட்டுவிட்டது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

/\திகழ் said...
வாழ்த்துகள்
/\

நன்றி திகழ்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
ஆகட்டும்...
//

:) பார்க்கலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

// அப்பாவி முரு said...
இந்த கதை யாருக்காகவென எனக்குத் தெரியும்!!!


:)
//

உஷ்....!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...
இது உண்மை சம்பவம் மாதிரி இருக்கே.
//

உண்மையிலே யாரும் அவ்வளவு அப்பாவியாக இருக்க மாட்டாங்க. போன் பண்ணிட்டு போய் யாராவது மாட்டிக் கொள்வார்களா ?
:)

மணிகண்டன் சொன்னது…

செய்தி துணுக்க கதையா மாத்தி இருக்கலாம் :)-

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கோவி அண்ணா கலக்குறீங்களே ...

எப்படி இதெல்லாம் ....
//

நன்றி

//யாரையோ குறி வச்சமாதிரி இருக்கே ...
//

உஷ்.... நீங்களும் சொல்லாதிங்க!

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...
good story, and good imagination.
//

:)

கோவி.கண்ணன் சொன்னது…

// நிகழ்காலத்தில்... said...
//singainathan


//பதட்டத்துடன் செந்தில்வேலன் ஓட்டல் அருகில் இருந்த எஸ்டிடி பூத்தில் பேசிய அவன் குரலே செந்தில் நாதனுக்கு கேட்டது//

செந்தில்வேலன் பேசியது செந்தில் நாதனுக்கு கேட்டதா ?

யப்பா சாமி நான் இல்ல ;)

அன்புடன்
சிங்கை செந்தில் நாதன்//


இல்லை எனக்கு சந்தேகமாகத்தான் உள்ளது :))

வாழ்த்துக்கள் சிங்கைநாதன்:))

8:01 PM, November 02, 2009
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
செய்தி துணுக்க கதையா மாத்தி இருக்கலாம் :)-
//

:)))) இதெல்லாம் வெளியே சொல்லி வியாபாரத்தை கெடுத்துடாங்கோ !

ராமலக்ஷ்மி சொன்னது…

இந்தப் புரளிக் callகாரர்களை எப்படிப் பிடிப்பதென்பதில் ரொம்பத்தான் உஷாராகி விட்டார்கள் அதிகாரிகள்:))! நல்ல கதை. வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

What a third rate son of a bitch you are kannan.The story and the style is pathetic.

வேடிக்கை மனிதன் சொன்னது…

கதையின் முதல் பத்தியை படித்து முடித்த உடனே முடிவை என்னால் ஊகிக்க முடிந்தது. தலைப்பு தான் புரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// வேடிக்கை மனிதன் said...
கதையின் முதல் பத்தியை படித்து முடித்த உடனே முடிவை என்னால் ஊகிக்க முடிந்தது. தலைப்பு தான் புரியவில்லை.
//

நான் ரொம்ப நல்லவன், யோசிக்க வைத்து கஷ்டப்படுத்துவதில்லை. அதனால் தான் உடனே யோசித்துவிட்டீர்கள்

:)

பெயரில்லா சொன்னது…

இனிமே ஜாக்கிரதையாத்தான் இருக்கணும் லேட்டானா :)
நல்ல கதை , வெற்றி பெற வாழ்த்துக்கள்

Prabhu சொன்னது…

நல்லா இருக்கு!

SurveySan சொன்னது…

இதை போட்டிக்கு அனுப்பாததற்கு என் கண்டனங்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்