பின்பற்றுபவர்கள்

9 நவம்பர், 2009

பிள்ளையார் பிடிக்க...புலிவால் தொட்ட பதிவு !

பிடித்தது பிடிக்காது பற்றிய தொடர் பதிவில் வெளிச்சபதிவரும், தம்பி ஸ்டார் ஜானும், அண்ணன் உலகநாதனும் ஒரே நேரத்தில் அழைக்க மகிழ்ச்சியுடன் பிடித்த பிடிக்காத அறியபட்டவர்கள் பற்றிய தகவலாக எழுதுகிறேன்.

பிடித்த கடவுள் : முருகன் தமிழக இந்து ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் அவர் தான் தெய்வம்
பிடிக்காத கடவுள் : அவருடைய அண்ணன் பிள்ளையார், மதக்கலவரங்களுக்கு அண்ணன் தான் தலைமை தாங்குகிறார்.

பிடித்த நாவல் ஆசிரியர்கள் : சு.சமுத்திரம், சாண்டில்யன், சுஜாதா, கி.ராஜ்நாராயணன் மற்றும் பலர் ஆனாலும் உயிரோடு இருப்பவர்களில் சுபா மற்றும் இராஜேஸ் குமார் (Mr No கவனிக்கவும்)
பிடிக்காத நாவல் ஆசிரியர் : பலரும் வெறுத்தும் ஒரு சிலர் துதிபாடும் "பாலகுமாரன்" ஒரே ஒரு நாவல் தவிர மற்றதைப் படிக்க விரும்பியதில்லை. உதவி இயக்குனர்களைப் பற்றி இழிவாக பேசு வாங்கிகட்டிக் கொண்டவர் என்கிற கூடுதல் சிறப்பும் அண்ணாருக்கு உண்டு. எழுத்தாளர்களில் ஒரு சு.ஸ்வாமி

பிடித்த பாடகர் : எஸ்பிபி, மனோ, சின்னக் குயில் சித்ரா மற்றும் பலர்
பிடிக்காத பாடகர் : சங்கர் மகாதேவன் ( ஓவர் கத்தல்... அலட்டல் இல்லே ?)

பிடித்த பட்டிமன்ற பேச்சாளர்கள் : சாலமன் பாப்பையா குழுவினர்
பிடிக்காத பட்டிமன்ற பேச்சாளர்கள் : திண்டுக்கல் லியோனி குழுவினர் ( பாட்டுமன்றம், வழக்காடு மன்றம் ஆகியவற்றில் நகைச்சுவை என்கிற பெயரில் பல்வேறு தரப்புகளை கிண்டல் அடிக்கும் விவேக், எஸ்விசேகர் பாணி)

பிடித்த நடிகர் : அஜித், கமல், ரஜினி மற்றும் பலர்
பிடிக்காத நடிகர் : பரத் (இன்னும் வளரவே இல்லை அதுக்குள்ள...பஞ்ச் டயலாக்கெல்லாம் தாங்க முடியல தம்பி)

பிடித்த அரசியல் தலைவர் : திருமா ( ஈழம் மேட்டரில் ஸ்டண்ட் அடித்தாலும், தன் முயற்சியால் வளர்ந்தவர்)
பிடிக்காத அரசியல் தலைவர் : விஜயகாந்த் கொள்கை இருப்பதாகக் கூறிக் கொண்டு எல்லாவற்றிலும் பிறழ்ந்தே பேசுவது. ஓவர் பில்"டப்" வாய்ஸ் கொடுப்பது.

பிடித்த பிரபல பதிவர் : செந்தழல் ரவி (இயல்பான நகைச்சுவை பதிவுகள்)
பிடிக்காத பிரபல பதிவர் : 'அவதூறு ஆறுமுகம்' என்கிற அவருடைய அவதாரம் (எதையும் ஆராயாமல் யார் மீதாவது மன அளவில் ஏற்படும் ஐயங்களையெல்லாம் பதிவில் எழுதி வெளிப்படுத்தி, அவர்களை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்வது...புழுதிவாரித் தூற்றுவது குறிப்பாக இட்லி வடை பதிவைப் படிப்பவர்களின் கணிணி தகவல்களை குக்கீஸ் வழியாக இட்லி வடை குழுமம் திருடுவதாக கிளப்பி விட முயற்சித்தது உட்பட.....தம்பி திருந்தனும்...... )

நான் யாரையும் நிரந்தர பகைவராகவே நினைக்கக் கூடிய தகுதியை யாருக்கும் கொடுப்பது இல்லை......ஐ மீன் எனக்கு எதிரியாகும் தகுதி யாருக்கும் இல்லை :)

பிடித்த பதிவர்கள் குழு : வினவு. (அருமையான விவாதங்கள், சான்றுகளுடன் தகவல்கள், சிந்தனையைத் தூண்டும் ஆக்கங்கள், பக்க சார்ப்பு என்றாலும் நிற்கும் இடம் ஆளுமைகளுக்கு எதிராக என்பதால்)
பிடிக்காத பதிவர்கள் குழு : இட்லி வடை பல கட்டுரைகள் பக்க சார்ப்போடு எழுதப்படுகிறது, சமய, உயர்சாதி சார்புள்ளது என்கிற குற்றச் சாட்டு உண்டு....மாறனும் .......எல்லாமும் மாறனும் :)

பிடித்த செய்தியாளர்கள் குழு : தட்ஸ் தமிழ் (பின்னூட்டத்தில் பலர் எவ்வளவு திட்டினாலும் தாங்குறாங்க .......ரொம்ப நல்லவங்க)
பிடிக்காத செய்தியாளர்கள் குழு : தினமலர் (சாதி மற்றும் மத பக்க சார்ப்புள்ள செய்தி குழுமம்...முகமது நபி கார்டூன் வெளி இட்டு தனது இந்து வெறியை வெளிச்சப்படுத்திக் கொண்டது)

பிடித்த அரசியல் கட்சிகள் : கொள்கைகளே நீர்த்து போய் இருந்தாலும் அம்மா கட்சி உட்பட திராவிடக் கட்சிகள்
பிடிக்காத அரசியல் கட்சிகள் : போங்...கிரஸ், பிஜே...பி உட்பட தமிழக தேசிய வியாதி கட்சிகள்

தொடரை தொடர அழைக்கும் பிரபல பதிவர்கள்

1. நண்பர் பெரியவ திருவாளர் ஆத்திகம் சங்கர் குமார்
2. நண்பர் ஆன்மிக பதிவர் திருவாளர் கூடல் குமரன்
3. ந்ண்பர் முற்போக்கு பதிவர் திருவாளர் டிபிசிடி (புதசெவி)
4. நண்பர் முற்போக்கு குறள்(ல்) திருவாளர் ஜெகதீசன்

இவர்கள் தற்போது மிகுந்து எழுதுவதில்லை, அதற்காக இவர்களை அழைக்கிறேன்.

*****

தொடரின் விதிமுறை :

1. பிடித்தவர்கள் பிடிக்காத அறியப்பட்டவர்கள் (பிரபலம்) பற்றி ஏன் பிடித்தது, பிடிக்கவில்லை பற்றிய குறிப்புகளுடன் 10 பட்டியல் இட வேண்டும்
2. பிரபலங்கள் தமிழகத்தில் பலரும் அறிந்தவர்களாகவும், உயிருடன் இருப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
3. நான்கு பதிவரை அழைத்து தங்க சங்கிலி இல்லை இல்லை இணைப்பு சங்கிலி ஏற்படுத்த வேண்டும்

43 கருத்துகள்:

எம்.எம்.அப்துல்லா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கோவி.கண்ணன் சொன்னது…

அப்துல்லா........

பதிவுக்கும் பாத்வாவுக்கும் சாரி பின்னூட்டத்திற்கும் தொடர்பே இல்லையே

:)

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

சாரி இடம் மாறி இங்கு விழுந்துவிட்டது :)

Sri சொன்னது…

//பிடிக்காத கடவுள் : அவருடைய அண்ணன் பிள்ளையார், மதக்கலவரங்களுக்கு அண்ணன் தான் தலைமை தாங்குகிறார்.

உங்க கேனதனத்துக்கு இது ஒரு புதிய அளவு

கோவி.கண்ணன் சொன்னது…

// Sri said...
//பிடிக்காத கடவுள் : அவருடைய அண்ணன் பிள்ளையார், மதக்கலவரங்களுக்கு அண்ணன் தான் தலைமை தாங்குகிறார்.

உங்க கேனதனத்துக்கு இது ஒரு புதிய அளவு
//

8 ஆம் நம்பர் நூல்கண்டால் அளவிட்டு தெரிந்து கொண்டீர்களா ?

அவ்வ்வ்வ்

பூங்குன்றன்.வே சொன்னது…

அண்ணே வணக்கம்..நான் பதிவு உலகத்திருக்கு ரொம்ப புதுசு..அதனால இந்த 'இட்லி வடை' சமாசாரம் எல்லாம் புரிய மாட்டேங்குது. அதனால இட்லி வடை' பற்றிய 'பிடிக்காதவங்க' லிஸ்ட் சரியாய் புரியல.ஆனா மத்தபடி உங்க பாணியில் ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க.ரொம்ப அருமையா இருக்கு.

நிகழ்காலத்தில்... சொன்னது…

சாண்டில்யன் எனக்கும் பிடிக்கும்.,

பாலகுமாரனின் உடையார் நாவல் ஆறுபாகம் ஓய்வாக இருக்கும் போது படித்து பாருங்கள்,

தங்களைப் பற்றி கூடுதலாக் அறிந்து கொள்ள முடிந்தது..

வாழ்த்துக்கள்

Raju சொன்னது…

பேச்சாலர்கள் ?!?!?

கோவி.கண்ணன் சொன்னது…

//♠ ராஜு ♠ said...
பேச்சாலர்கள் ?!?!?
//
தவறுக்கு மன்னிக்கவும்.

பேச்சாளர்கள் என்பதே சரி

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...
சாண்டில்யன் எனக்கும் பிடிக்கும்.,

பாலகுமாரனின் உடையார் நாவல் ஆறுபாகம் ஓய்வாக இருக்கும் போது படித்து பாருங்கள்,

தங்களைப் பற்றி கூடுதலாக் அறிந்து கொள்ள முடிந்தது..

வாழ்த்துக்கள்
//

கல்கியின் பொன்னியின் செல்வன் - இன்னும் படித்ததில்லை. பிறகு எங்கே பாலகுமாரனுக்கு நேரம் ?
:)

நன்றி சிவா

அறிவிலி சொன்னது…

புலிவால் எங்கே?

கோவி.கண்ணன் சொன்னது…

// பூங்குன்றன் வேதநாயகம் said...
அண்ணே வணக்கம்..நான் பதிவு உலகத்திருக்கு ரொம்ப புதுசு..அதனால இந்த 'இட்லி வடை' சமாசாரம் எல்லாம் புரிய மாட்டேங்குது. அதனால இட்லி வடை' பற்றிய 'பிடிக்காதவங்க' லிஸ்ட் சரியாய் புரியல.ஆனா மத்தபடி உங்க பாணியில் ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க.ரொம்ப அருமையா இருக்கு.//

இட்லி வடைக்குழுமத்தில் திராவிட அரசியல்வாதிகளை எள்ளும் அளவுக்கு இந்து அரசியல்வாதிகளைப் பற்றி விமர்சனம் செய்வது கிடையாது, துக்ளக் போன்று அரசியல் சார்பு உடையது

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவிலி said...
புலிவால் எங்கே?
//

பின்னூட்டம் நீண்டால் தெரியும் !
:)

அறிவிலி சொன்னது…

துக்ளக் ,தினமலர்,ஹிந்து எல்லாம் அரசியல் சார்புடைய பத்திரிக்கைகள் என்றால் சார்பில்லாத பத்திரிக்கைகள் எவை?

அரசியல்வாதிகள் பத்திரிக்கைகள் சாதகமான விஷயங்களை எழுதும்போது கொண்டாடுவதும் பாதகமான விஷயங்களை எழுதும்போது கொளுத்துவதும் தானே வழக்கம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவிலி said...
துக்ளக் ,தினமலர்,ஹிந்து எல்லாம் அரசியல் சார்புடைய பத்திரிக்கைகள் என்றால் சார்பில்லாத பத்திரிக்கைகள் எவை?

அரசியல்வாதிகள் பத்திரிக்கைகள் சாதகமான விஷயங்களை எழுதும்போது கொண்டாடுவதும் பாதகமான விஷயங்களை எழுதும்போது கொளுத்துவதும் தானே வழக்கம்.
//

அண்ணே,

முரொசொலி, நமது எம்ஜிஆர் கட்சி இதழ்கள், கட்சி அபிமானிகள் விரும்பியவர்கள் வாங்கி படிக்கலாம்.

ஆனால் துக்ளக் ,தினமலர்,ஹிந்து இவை எல்லாம் அப்படி சொல்லிக் கொள்வதில்லை ஆனாலும் சார்பு அரசியலைத்தானே செய்கிறார்கள். காசு கொடுத்து வாங்கிப் படிப்பவர்களுக்கு கண்கட்டி வித்தையாக இவர்கள் ஆதரவு எதிர்ப்பு அரசியல்களைத் தானே செய்தியாக தருகிறார்கள்

பித்தனின் வாக்கு சொன்னது…

உங்களுக்கு புடிச்சதுனால அவா பெரியவாளும் இல்லை, புடிக்கலைனாலும் அவங்க மாறப் போறது இல்லை. மூத்த பதிவர்கள் நல்லதா நாலு பதிவு போடறதை விட்டு, என்ன இது சின்னப் புள்ளைங்க விளையாட்டு? (கொஞ்சம் வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்) நன்றி.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/பிடிக்காத கடவுள் : அவருடைய அண்ணன் பிள்ளையார், மதக்கலவரங்களுக்கு அண்ணன் தான் தலைமை தாங்குகிறார்./

அடப்பாவமே! தேமேன்னு குலத்துக் கரியிலோ, அரசமரத்தடியிலோ, பிடிச்சு வச்சது வச்சபடி இருக்கிறவர் மீது இப்படி ஒரு அபாண்டமா?

மராத்திய மண்ணில், தேசபக்தியை ஊட்டுவதற்காக கணேஷ் சதுர்த்தியை கொஞ்சம் தடபுடலாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். அது அந்தக்காலம்!

இப்போது பிள்ளையார் சிலை ஊர்வலம் என்பது, அடுத்தவன் வீட்டு வாசலில் கொண்டுபோய் நிறுத்தி, மேளம் அடித்து வம்புக்கு வருகிறாயா என்று கேட்பது மாதிரி, ஒரு சில இடங்களில் மட்டுமே கற்பிக்கப்படுகிறது! மற்றபடிக்கு, இப்போது கூட பிள்ளையார், சமர்த்தாகப் பிடிச்சது பிடிச்சு வச்ச மாதிரியே அமைதியாகத் தான் இருக்கிறார்!

ஒரு கை தட்ட மட்டுமே ஓசை எழுவதில்லை என்பதும், முக்கியமாகப் பிள்ளையார் மேல் எந்தக் குற்றமும் இல்லை என்பதற்காகவும் தான் இது!

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

எழுத்துப்பிழைக்கு மன்னிக்க... இரண்டாவது பத்தி ....

அடப்பாவமே! தேமேன்னு குளத்துக் கரையிலோ, அரசமரத்தடியிலோ, பிடிச்சு வச்சது வச்சபடி இருக்கிறவர் மீது இப்படி ஒரு அபாண்டமா?

என்று இருக்க வேண்டும்!

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\அடப்பாவமே! தேமேன்னு குளத்துக் கரையிலோ, அரசமரத்தடியிலோ, பிடிச்சு வச்சது வச்சபடி இருக்கிறவர் மீது இப்படி ஒரு அபாண்டமா?\\

ஏழை என்றாலே எல்லோருக்கும் கிண்டல்தான், அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதியான கோவியாரை கண்டிக்கிறேன் :)))))))

-பொன்னுச்சாமி

நிகழ்காலத்தில்... சொன்னது…

கூடவே பிரம்மச்சாரி என்பதையும் சேர்த்துக் கொள்ளவும் :))

பொன்னுச்சாமி

ஹுஸைனம்மா சொன்னது…

//பிடிக்காத கடவுள் : அவருடைய அண்ணன் பிள்ளையார், மதக்கலவரங்களுக்கு அண்ணன் தான் தலைமை தாங்குகிறார்.//

தவறு தெய்வங்களிடம் இல்லை; பக்குவப்படாத மனிதர்களிடம்தான்!!

iniyavan சொன்னது…

நான் தான் உங்களை முதலில் அழைத்திருந்தேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//என். உலகநாதன் said...
நான் தான் உங்களை முதலில் அழைத்திருந்தேன்.
//

மிக்க நன்றி, இடுகையிலும் சேர்த்துவிட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஹுஸைனம்மா said...
//பிடிக்காத கடவுள் : அவருடைய அண்ணன் பிள்ளையார், மதக்கலவரங்களுக்கு அண்ணன் தான் தலைமை தாங்குகிறார்.//

தவறு தெய்வங்களிடம் இல்லை; பக்குவப்படாத மனிதர்களிடம்தான்!!
//

:)

கருத்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...
\\அடப்பாவமே! தேமேன்னு குளத்துக் கரையிலோ, அரசமரத்தடியிலோ, பிடிச்சு வச்சது வச்சபடி இருக்கிறவர் மீது இப்படி ஒரு அபாண்டமா?\\

ஏழை என்றாலே எல்லோருக்கும் கிண்டல்தான், அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதியான கோவியாரை கண்டிக்கிறேன் :)))))))

-பொன்னுச்சாமி//

நான் 'செல்வ' விநாயகரைச் சொன்னேன். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...
/பிடிக்காத கடவுள் : அவருடைய அண்ணன் பிள்ளையார், மதக்கலவரங்களுக்கு அண்ணன் தான் தலைமை தாங்குகிறார்./

அடப்பாவமே! தேமேன்னு குலத்துக் கரியிலோ, அரசமரத்தடியிலோ, பிடிச்சு வச்சது வச்சபடி இருக்கிறவர் மீது இப்படி ஒரு அபாண்டமா?

மராத்திய மண்ணில், தேசபக்தியை ஊட்டுவதற்காக கணேஷ் சதுர்த்தியை கொஞ்சம் தடபுடலாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். அது அந்தக்காலம்!

இப்போது பிள்ளையார் சிலை ஊர்வலம் என்பது, அடுத்தவன் வீட்டு வாசலில் கொண்டுபோய் நிறுத்தி, மேளம் அடித்து வம்புக்கு வருகிறாயா என்று கேட்பது மாதிரி, ஒரு சில இடங்களில் மட்டுமே கற்பிக்கப்படுகிறது! மற்றபடிக்கு, இப்போது கூட பிள்ளையார், சமர்த்தாகப் பிடிச்சது பிடிச்சு வச்ச மாதிரியே அமைதியாகத் தான் இருக்கிறார்!

ஒரு கை தட்ட மட்டுமே ஓசை எழுவதில்லை என்பதும், முக்கியமாகப் பிள்ளையார் மேல் எந்தக் குற்றமும் இல்லை என்பதற்காகவும் தான் இது!

4:08 PM, November 09, 2009
//

பிள்ளையார் மேல எப்படி குறை சொல்லமுடியும். நான் பிள்ளையாரை வைத்து/வதைத்து செய்யப்படும் அரசியலைத்தான் குறிப்பிட்ட்டேன் :)

என்ன இருந்தாலும் பானை வயிறு பிள்ளையார் சின்ன ஒரு எலி மீது ஏறி உட்காருவது மிருக வதைச் சட்டத்தில் தண்டனை இல்லையா ?
:)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல கருத்துக்கள் அண்ணே ...

பிடித்தது

வால்பையன் சொன்னது…

//எனக்கு எதிரியாகும் தகுதி யாருக்கும் இல்லை :)//

என்னன்ன தகுதி என பட்டியலிட்டால் வளர்த்து கொள்ள வசதியாக இருக்கும்!

வால்பையன் சொன்னது…

//சாரி இடம் மாறி இங்கு விழுந்துவிட்டது :)//

அப்ப ஒரு கை குனிஞ்சு அதை எடுக்குது,

அங்க வைக்குறோம் ஒரு சாங்கு

ஓ சாரி,
பானி பூரி
பம்பாய் நாறி
நகுமா நகுமா நகுமா!

வால்பையன் சொன்னது…

பாலகுமாரன் நல்ல எழுத்தாளர் தான் ஆனால் இந்த்துவாவாதி!

பாலுவும் சரி, நமணி சந்திரனும் சரி, பெரிதாக பெண் விடுதலை வியாக்கியானம் பேசினாலும் கடைசியில் அவளது கணவணுக்கு அடங்கி போவது போலயே முடிப்பார்கள்!

அப்ப எரியும் பாருங்க உடெம்பெல்லாம்!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

திரியை கொளுத்தி போட்டிட்டிங்க.

குமரன் (Kumaran) சொன்னது…

அழைப்பிற்கு நன்றி கண்ணன். ஆனால் எழுதும் எண்ணம் இல்லை. இது தான் என் பதிலாக இருக்கும் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும். :-) எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று தெரிந்து கொண்டு பதிவுலகம் என்ன செய்யப்போகிறது?

ஒரு வேளை என்ன எழுதுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறேன் என்று நினைத்து அழைத்தீர்களோ? :-) அப்படியில்லை. நிறைய எழுத இருக்கிறது; முன்பு போல் அதிகாலை உறக்கத்தை விட்டு எழுந்து எழுதும் அளவிற்கு ஊக்கமில்லாமல் போனதே காரணம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
அழைப்பிற்கு நன்றி கண்ணன். ஆனால் எழுதும் எண்ணம் இல்லை. இது தான் என் பதிலாக இருக்கும் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும். :-) எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று தெரிந்து கொண்டு பதிவுலகம் என்ன செய்யப்போகிறது?

ஒரு வேளை என்ன எழுதுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறேன் என்று நினைத்து அழைத்தீர்களோ? :-) அப்படியில்லை. நிறைய எழுத இருக்கிறது; முன்பு போல் அதிகாலை உறக்கத்தை விட்டு எழுந்து எழுதும் அளவிற்கு ஊக்கமில்லாமல் போனதே காரணம்.
//

குமரன் நன்றி, இந்தப் பதிவை படிப்பதற்கு கூட உங்களுக்கு நேரமில்லாமல் போய் இருக்கலாம் என்றே நினைத்தேன். இருந்தாலும் படித்தீர்கள் என்று அறியும் போது மகிழ்ச்சியே.

பதிவுலகம் அறிகிறதா இல்லையா என்பது பற்றிக் கவலை இல்லை. 10000 பேர் வரை பதிவுகளை நாள் தோறும் படிக்கிறார்கள், அதுல என் பக்கத்துக்கு ஒதுங்குபவர்கள் சுமார் 500 தான் இருக்கும் (அதுவும் அன்று புது இடுகைகள் இருந்தால் இல்லாவிடில்300,200,100 என்று குறையும்), அதனால் நான் என்னைப் படிப்பவர்களுக்காக மட்டுமே எழுதுவதாகத்தான் நினைப்பேன். நீங்களும் அப்படி நினைத்து எழுதலாம். நம் பதிவுகள் நம்மை படிப்பவர்களுக்கு மட்டும் தான் பதிவுலகத்துக்கு அல்ல :)

அழைக்கத் தோன்றியது ஆனால் வற்புறுத்தல் எதுவும் இல்லை என்று பின்குறிப்பில் குறிக்காமல் மறந்து விட்டுவிட்டேன்.

உங்கள் இடுகை வரத்துகள் குறைந்தது எனக்கும் இழப்பாகவே உணர்கிறேன். தமிழ்மண முகப்பில் படிப்பதால் அறியப்பட்டவர்கள் பெயர் என்றால் உடனே ஈர்த்துவிடும். நான் ரீடரில் படிப்பது இல்லை.

குமரன் (Kumaran) சொன்னது…

படிப்பது குறையவில்லை கண்ணன். வழக்கம் போல் நிறைய படித்துக் கொண்டு தான் இருக்கிறேன். உங்கள் இடுகைகளையும் ரீடரில் பார்ப்பேன். என் சுவைக்கேற்றதாகத் தோன்றினால் நாட்கள் சென்றாவது படிப்பேன். உங்கள் ஐரோப்பிய பயணக்கட்டுரைகளைப் படித்துவிட்டேன்.

ஜெகதீசன் சொன்னது…

This post has been removed by the blog administrator.

ஜெகதீசன் சொன்னது…

என் கமெண்ட் ஏன் டெலிட் பண்ணீங்க?
:P

ஜெகதீசன் சொன்னது…

ஆறிப்போன புண்ணை சொறியுறதுன்னா என்ன?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
என் கமெண்ட் ஏன் டெலிட் பண்ணீங்க?
:P
//

தம்பி,

நான் டெலிட் பண்ணியிருந்தால்

"Comment deleted
This post has been removed by the administrator." என்று வரும்

உன் பேரு தலையில் இருக்காது. நீயே தட்டச்சு செய்து போட்டால் தான் நீ எழுதியது போல் வரும்
:)

Subbiah Veerappan சொன்னது…

//////பிடிக்காத கடவுள் : அவருடைய அண்ணன் பிள்ளையார், மதக்கலவரங்களுக்கு அண்ணன் தான் தலைமை தாங்குகிறார்.////

ஊருணி, குளக்கரைகளிலும், அரசமரத்தடியிலும், தேமே என்று அமைதியாக உட்கார்ந்திருப்பவர் அவர்தான். யார் வேண்டுமென்றாலும், அவரைக் கட்டிப் பிடித்துக் கண்ணீர் விட்டு தத்தம் குறைகளைச் சொல்லலாம். அவரைப் போய் பிடிக்கவில்லை என்கிறீரே? சிங்கப்பூரை விட்டு உம்மை நைஜீரியாவிற்கு பணிமாற்றம் செய்வதுதான் அதற்குப்
பரிசு!(த....னை...என்றால் குற்றமாகத்தெரியும்.அதனால் பரிசு என்று எழுதியிருக்கிறேன்)
வாழ்க பிள்ளையார். வளர்க அவர் புகழ்!:-)))))))))))))))))))))

Sanjai Gandhi சொன்னது…

//பிடித்த பிரபல பதிவர் : செந்தழல் ரவி (இயல்பான நகைச்சுவை பதிவுகள்)//

நம்தன நம்தன நம்தன.. :))

//பிடித்த அரசியல் கட்சிகள் : கொள்கைகளே நீர்த்து போய் இருந்தாலும் அம்மா கட்சி உட்பட திராவிடக் கட்சிகள்//

கருணாநிதி கட்சி உட்பட என்றும் சொல்லி இருக்கலாமே.. :)
அது சரி.. கொள்கைகளே நீர்த்துப் போய் இருந்தாலும் பிடிக்கிறதா? இதற்கு நீங்க வேற பேர் சொல்விங்க. நினைவிருக்கா? ..அ....டி...*....ரு....டி....

//பிடிக்காத அரசியல் கட்சிகள் : போங்...கிரஸ், பிஜே...பி உட்பட தமிழக தேசிய வியாதி கட்சிகள்//

இந்தக் கொசுத் தொல்லைத் தாங்க முடியலைடா நாராயணா.. :)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பிடித்த நடிகர் : அஜித், கமல், ரஜினி மற்றும் பலர்//

கலைஞரக்கேட்டாலும் இப்படி எல்லா முண்ணனி நடிகர்களையும் தான் சொல்லுவார்!

அவார்டு கூட அவங்களுக்கு கிடைக்கும்னா பாத்துக்குங்களேன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பிடித்த அரசியல் கட்சிகள் : கொள்கைகளே நீர்த்து போய் இருந்தாலும் அம்மா கட்சி உட்பட திராவிடக் கட்சிகள்
//

அது என்ன அம்மா கட்சிய மட்டும்..!
சும்மான்னாச்சுக்குமா?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பதிவுக்கு நன்றி கோவியாரே!~

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்