பின்பற்றுபவர்கள்

27 ஏப்ரல், 2009

என் ஓட்டும் ஜெ-வுக்கே !

தேர்தல் நெருங்க யாருக்கு ஓட்டு என்கிற முடிவை எடுக்க வேண்டிய காலகட்டத்திற்குள் வந்தாச்சு. காங்கிரசுதான் தமிழர் எதிரி (கர்நாடகம் - தமிழகம் காவேரிப் பிணக்குகள், ஒக்கனேக்கல் பிணக்குகள், இராமேஸ்வரம் மீனவர் கொல்லப்படுவது ஆகியவற்றை இதுவரை காங்கிரசுவாதிகள் கண்டுகொண்டதில்லை, கூடுதலாக ஈழவிடுதலையை இராசீவ் காந்தி கொலையை சாக்கிட்டு நசுக்குவது) எனவே காங்கிரசை தேர்தலில் வீழ்த்துவதே சரியான முடிவு என்கின்றனர். கூடவே கருணாநிதியின் மீது இருக்கும் பழைய பாசம் காரணமாக திமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்கின்றனர். எது லாஜிக் படி எப்படி சரி என்று கேட்டால், தேர்தலுக்குப் பிறகு ஜெ எப்படி வேண்டுமானாலும் மாறுவாராம், காங்கிரசுக்கே ஆதரவு கொடுப்பாராம். இதே நிலையை திமுகவும் எடுத்திருக்கிறது, மதவாதக் கட்சி மதவாதக் கட்சி என்று பாஜக பற்றி கருத்துக் கூறி வந்த திமுக, பாஜக தமிழகம் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் வளர்ந்து ஏற்கனவே பிரதமர் பதவியில் அமர்ந்த பிறகு ஜெவினால் கவிழ்க்கப்பட்ட பாஜக அரசை காப்பாற்றி பதவி பெற வேண்டும் என்ற நோக்கில் திமுகவும் கொள்கைக்கு எதிராக, தொண்டர்களின் எதிர்ப்புக்கு எதிராக, திகவின் எதிர்ப்புக்கும் எதிராக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது.

ஐந்தாண்டு ஆட்சிக்கு பிறகு இந்திய அளவில் பாஜக செல்வாக்கு இழக்கவே காங்கிரசுடன் கைகோர்த்தது திமுக, அப்போதும் எப்போதும் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி ஏற்படாததற்குக் காரணம் ஜெ சோனியாவை பதிபத்தி இல்லாதவர், வெளிநாட்டைச் சேர்ந்தவர், ஆண்டனோ மொய்னோ என்ற தனிப்பட்ட விமர்சனங்கள் செய்தது தான், மேலும் 1992 தேர்தலில் இராசீவ் மரணத்தால் நான் வெற்றிபெறவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார், அதையும் மீறி காங்கிரசார் சிலர் அதிமுகவுடன் கூட்டணி தொடர முயன்ற போது மூப்பனார் தலைமையில் தமாக உருவாக திமுகவும் அதனை ஆதரிக்க சட்டமன்றத்தில் திமுக ஆட்சி தொடர்ந்தது, மீண்டும் தமாக, காங்கிரசு இணைந்தது. அந்த தேர்தலில் அதிமுக - காங்கிரசு கூட்டணி வெற்றிபெறவில்லை, ஜெ திடிரென்று பாஜகவை 13 மாதங்களுக்கு ஆதரித்தார், பிறகு கவிழ்த்தார். மேலே குறிப்பிட்ட படி பாஜகவை திமுக ஆதரித்தது. மற்றபடி தமிழக காங்கிரசு தலைவர்களும், மற்ற காங்கிரசு புள்ளிகளும் ஜெவுடன் கூட்டணி வைக்கவே விரும்பினர். அந்த கூட்டணி ஏற்படாமல் போனதற்கு சோனியா - ஜெவுக்கு இடையே நடந்த நீயா நானா போட்டிதான். மீண்டும் காங்கிரசு ஆட்சிக்கு ஜெவின் தயவு தேவைப்பட்டால் சோனியா இறங்கிவருவார். எந்த ஒரு நிபந்தனையுமின்றி ஜெ காங்கிரசுக்கு ஆதரவளிப்பார் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

*****

ஈழ விடுதலையை விடுதலை புலிகளைக் காரணம் காட்டி பேச மறுத்த காங்கிரசார், 'நான் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை, ஈழ விடுதலையை ஆதரிக்கிறேன்' என்று கூறிய ஜெ வை தேச தூரோகம், இறையாண்மைக்கு எதிரானவர் என்று விமர்சிக்கின்றனர். இதன் மூலம் ஈழத்தமிழர்களின் நலனில் காங்கிரசு அக்கரை கொண்டிருக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஈழ விடுதலைக்கு எதிராக இலங்கை அரசுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தமும் அதன் தொடர்பில் ஈழத்தில் இந்திய இராணுவம் அமைதி என்ற பெயரில் செய்த அட்டூழியங்களினால் இராசீவ் காந்தி படுகொலை வரை சென்ற பிறகு ஈழ விடுதலையே கேள்விக் குறியானது, காங்கிரசார் தமிழர்கள் விடுதலைப் பெற்றுவிடக் கூடாது என்கிற இராசீவின் நிலைப்பாட்டையே இன்றும் தொடர்கிறார்கள் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெரிந்துவிட்டது. காங்கிரசுவுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக 'ஈழ விடுதலை கிடைத்தால் மகிழ்வோம்' என்று ஒரு செய்தி விமர்சனம் என்ற அளவில் ஈழம் பற்றி பேசுகிறது. ஈழத்தின் உண்மை நிலை அனைவருக்கும் தெரியாமல் இல்லை, ஆனால் அதற்காக குரல் கொடுப்பவர் என்பதைப் பார்த்தால் ஜெ-வின் குரலே ஓங்கி ஒலிக்கிறது. ஜெ - செய்வாரா ? இல்லையா ? கூட்டணி மாறுவாரா ? என்ற கேள்விகளையும், ஊகங்களையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அப்படி ஒரு (ஆறுதல்) குரலை ஈழ ஆதரவாளர்கள் எதிர்நோக்கி இருந்தனர் என்பதே உண்மை.

ஒரு வேளை இது அரசியல் நாடகமென்றாலும் அதையும் செய்யத் துணியாத திமுகவிற்கு, தமிழர் நலனில் மெத்தனம் காட்டும் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவிற்கு , ஈழவிடுதலைக்கு எதிரான காங்கிசாருடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவிற்கு எதன் அடிப்படையில் இந்த தேர்தலில் ஆதரவு கொடுக்க முடியும் ? திமுக தமிழகத்தில் இலவசங்களை வழங்கி சிறப்பாக(?) செயல்பட்டது என்பதற்காக ? அப்படிப் பார்த்தால் ஜெவின் ஆட்சிக்கு பிறகு ஜெ மீது இதுவரை எந்த ஊழல் வழக்குகளும் பதியப்படவில்லை. ஐயா இது சட்டமன்ற தேர்தல் இல்லை என்றாலும் கூட, மத்திய ஆட்சியில் அமைச்சர் பதவியை அடைபவர்களில் தமிழர்களும் இருக்கிறார்களே. ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு அதிமுக காங்கிரசை ஆதரித்தாலும் காங்கிரசு சவாரி செய்யும் குதிரையாக இருக்காது, காங்கிரசு என்னும் குதிரையை இழுத்துப் பிடிக்கும் கடிவாளமாகவே இருக்கும், என்பதால் என் ஓட்டு ஜெ-கூட்டணிக்கே.

93 கருத்துகள்:

உடன்பிறப்பு சொன்னது…

//ஒரு வேளை இது அரசியல் நாடகமென்றாலும் அதையும் செய்யத் துணியாத திமுகவிற்கு//

கலைஞர் உண்ணாவிரதம் என்று செய்தி வந்துள்ளதே அதுக்கு என்ன சொல்றீங்க

அக்னி பார்வை சொன்னது…

தமிழ் நாட்டில் காங்கிரஸ் கூட்டணி 40 தோற்த்து, இந்திய அளவில் தத்கபித்தக வென்று ஒரு அளவு வென்று ஆட்சியமைத்தால் என்ன செய்வீர்கள்? அந்த நிலையில் தமிழகத்தில் வென்றிருக்கும் எந்த கட்சியும் மத்திய அரசுடன் உஅறவு வைக்கும்..

தோதாக காங்கிரஸ் தோத்தாலும் பாஜாக வெல்லும் அவர்கள் ஈழ பிரச்ச்னையில் என்ன செய்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

தமிழகத்தில் ஓட்டு போட போகும் 60-70% பேர் ஈழ பிரச்சனையை முன்னிருத்தி ஓட்டு போடமாட்டார்கள் என்பது நிதர்சன உண்மை..ஒரு 20 சதவீத ஓட்டை ஏன் இழக்க வேண்டும் வந்த வரை லாபம் என்று தான் இங்கிருக்கும் கட்சிகள் ஈழ ஆதரவி தெரிவிக்கின்ரன..

ஈழ பிரச்சனையை உன்மையக முன்னிருத்தும் ய்யரும் ஓட்டு போட மாட்டார்கள் என்பது தான் நிதர்சன உண்மை, மற்ற படி சந்தர்பவாத்மாக் ஜெவையோ,கலைஞரையோ ஆதரிப்பது முட்டாள்தனம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உடன்பிறப்பு said...
//ஒரு வேளை இது அரசியல் நாடகமென்றாலும் அதையும் செய்யத் துணியாத திமுகவிற்கு//

கலைஞர் உண்ணாவிரதம் என்று செய்தி வந்துள்ளதே அதுக்கு என்ன சொல்றீங்க
//

யாரை வழியுறுத்துகிறார் ? காங்கிரசையா ? அல்லது இராஜ பக்சேவையா ?

இருவருமே கண்டு கொள்ள மாட்டார்கள். காங்கிரசை என்றால் கூட்டணியில் இருந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்து கோரிக்கையை நிறைவேற்றச் சொல்வது எதற்கு ? நிபந்தனை அல்லவா வைக்க வேண்டும் ?

இராசபக்சேவை என்றால் ஐநா சபையே அவர் கண்டு கொள்ளவில்லை, ஜெ - வுக்கான ஆதரவு ஈழ விடுதலையைப் பெற்றுத் தந்துவிடுவேன் என்று கூறும் நிரந்தர தீர்வுக்கு. திமுக அது போன்று எதும் சொல்லி இருக்கிறதா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// அக்னி பார்வை said...
தமிழ் நாட்டில் காங்கிரஸ் கூட்டணி 40 தோற்த்து, இந்திய அளவில் தத்கபித்தக வென்று ஒரு அளவு வென்று ஆட்சியமைத்தால் என்ன செய்வீர்கள்?

//

அந்த எண்ணத்தில் தமிழர் நலனை புறக்கணிக்கும் ஒரு கூட்டணிக்கு நம் வாக்கு தேவையா ?

//அந்த நிலையில் தமிழகத்தில் வென்றிருக்கும் எந்த கட்சியும் மத்திய அரசுடன் உஅறவு வைக்கும்..//

அதிமுக கூட்டணி வைத்தால் சவாரி செய்யும் குதிரையாக இருக்காது என்று சொல்லி இருக்கிறேன்

//ஈழ பிரச்சனையை உன்மையக முன்னிருத்தும் ய்யரும் ஓட்டு போட மாட்டார்கள் என்பது தான் நிதர்சன உண்மை, மற்ற படி சந்தர்பவாத்மாக் ஜெவையோ,கலைஞரையோ ஆதரிப்பது முட்டாள்தனம்.//

கொள்கை என்று பார்த்தாலும் ஊழல் ரவுடித்தனம் ஆகியவற்றில் அதிமுக பின் தங்கி இருப்பதாகவே நினைக்கிறேன்

உடன்பிறப்பு சொன்னது…

//இராசபக்சேவை என்றால் ஐநா சபையே அவர் கண்டு கொள்ளவில்லை//

ஐநா சபையையே கண்டு கொள்ளாதவர் ஜெயலலிதாவை மட்டும் கண்டு கொள்வார் என்பது உங்களுக்கே ஒவராக தெரியவில்லை. மேலும் ஜெயலலிதாவின் பேச்சுக்கு ராஜபக்சே அமைச்சர்களின் பதிலை நீங்கள் இன்னும் அறியவில்லை என்பது உங்கள் பதிலில் இருந்து தெரிகிறது. எல்லோரையும் போல் நீங்களும் கூட்டத்தில் சேர்ந்து கொண்டீர்கள் என்பது மட்டும் புரிகிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//உடன்பிறப்பு said...
//இராசபக்சேவை என்றால் ஐநா சபையே அவர் கண்டு கொள்ளவில்லை//

ஐநா சபையையே கண்டு கொள்ளாதவர் ஜெயலலிதாவை மட்டும் கண்டு கொள்வார் என்பது உங்களுக்கே ஒவராக தெரியவில்லை. மேலும் ஜெயலலிதாவின் பேச்சுக்கு ராஜபக்சே அமைச்சர்களின் பதிலை நீங்கள் இன்னும் அறியவில்லை என்பது உங்கள் பதிலில் இருந்து தெரிகிறது. எல்லோரையும் போல் நீங்களும் கூட்டத்தில் சேர்ந்து கொண்டீர்கள் என்பது மட்டும் புரிகிறது
//

நான் தெளிவாக பதில் சொல்லிவிட்டேன், ஜெ-வுக்கான ஆதரவு தனி ஈழம் நிரந்தர தீர்வு, அதைப் பெற்றுத்தருவேன் என்று கூறியதற்கு என்று.

உடன்பிறப்பு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
உடன்பிறப்பு சொன்னது…

//நான் தெளிவாக பதில் சொல்லிவிட்டேன், ஜெ-வுக்கான ஆதரவு தனி ஈழம் நிரந்தர தீர்வு, அதைப் பெற்றுத்தருவேன் என்று கூறியதற்கு என்று//

இதை தான் ஓவராக தெரியவில்லையா என்று கேட்டேன். போர் நிறுத்தத்துக்கே ஒபாமா முதல் எல்லோரும் என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கிறார்கள், இப்போ போய் காமெடி பண்ணிகிட்டு

கோவி.கண்ணன் சொன்னது…

//உடன்பிறப்பு said...

இதை தான் ஓவராக தெரியவில்லையா என்று கேட்டேன். போர் நிறுத்தத்துக்கே ஒபாமா முதல் எல்லோரும் என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கிறார்கள், இப்போ போய் காமெடி பண்ணிகிட்டு
//

ஓ அப்ப உண்ணா விரதத்தை சீரியசாக எடுத்துக்கனுமா ?

அப்பாவி முரு சொன்னது…

//ஜெ - செய்வாரா ? இல்லையா ? கூட்டணி மாறுவாரா ? என்ற கேள்விகளையும், ஊகங்களையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அப்படி ஒரு (ஆறுதல்) குரலை ஈழ ஆதரவாளர்கள் எதிர்நோக்கி இருந்தனர் என்பதே உண்மை.//

இது இருகொள்ளியில் நல்ல கொள்ளியை எடுத்து தலையை சொறிவது ஆகும்.

ஜே., ஊகங்களுக்கு அப்பாற்பட்டவர். ஈழ் எதிரிப்பிலிருந்து தேர்தலுக்காக ஈழ ஆதரவு முடிவை எடுத்தவர், தேர்தலுக்கு பின் மாற மாட்டார் என சொல்பவன் முட்டாள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...

முரு யாரு நாடகம் என்பது முக்கியமில்லை, ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு அதிமுக காங்கிரசை ஆதரித்தாலும் காங்கிரசு சவாரி செய்யும் குதிரையாக இருக்காது, காங்கிரசு என்னும் குதிரையை இழுத்துப் பிடிக்கும் கடிவாளமாகவே இருக்கும், என்பதால் என் ஓட்டு ஜெ-கூட்டணிக்கே.

உடன்பிறப்பு சொன்னது…

//கோவி.கண்ணன் 9:56 AM, April 27, 2009

//உடன்பிறப்பு said...

இதை தான் ஓவராக தெரியவில்லையா என்று கேட்டேன். போர் நிறுத்தத்துக்கே ஒபாமா முதல் எல்லோரும் என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கிறார்கள், இப்போ போய் காமெடி பண்ணிகிட்டு
//

ஓ அப்ப உண்ணா விரதத்தை சீரியசாக எடுத்துக்கனுமா ?
//

உங்கள் இடுகையில் நீங்களே பதில் சொல்லி இருக்கிறீர்கள்

//ஒரு வேளை இது அரசியல் நாடகமென்றாலும் அதையும் செய்யத் துணியாத திமுகவிற்கு//

உங்கள் இடுகையில் இருப்பதையே உங்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லையா

ரிஷி (கடைசி பக்கம்) சொன்னது…

//இதன் மூலம் ஈழத்தமிழர்களின் நலனில் காங்கிரசு அக்கரை கொண்டிருக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது//

u only realized now?

Atleast we should indicate that people never consider us will be defeated.

கோவி.கண்ணன் சொன்னது…

//உடன்பிறப்பு said...
//கோவி.கண்ணன் 9:56 AM, April 27, 2009

//உடன்பிறப்பு said...

இதை தான் ஓவராக தெரியவில்லையா என்று கேட்டேன். போர் நிறுத்தத்துக்கே ஒபாமா முதல் எல்லோரும் என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கிறார்கள், இப்போ போய் காமெடி பண்ணிகிட்டு
//

ஓ அப்ப உண்ணா விரதத்தை சீரியசாக எடுத்துக்கனுமா ?
//

உங்கள் இடுகையில் நீங்களே பதில் சொல்லி இருக்கிறீர்கள்

//ஒரு வேளை இது அரசியல் நாடகமென்றாலும் அதையும் செய்யத் துணியாத திமுகவிற்கு//

உங்கள் இடுகையில் இருப்பதையே உங்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லையா
//

ஐயா, எத்தனை முறை கேட்பீர்கள்,

ஈழ விடுதலையில் திமுகவின் நிலை என்ன ? இறையாண்மை பெரிய ஆமை இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், தேச துரோகம் என்கிற ஏச்சு வரும் என்று தெரிந்தே அந்த அம்மா, ஈழ விடுதலைப் பெற்றுத் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறாரே, அதைப் பற்றிதான் சொல்லி இருக்கிறேன். அந்த துணிவு ஏன் திமுகவிற்கு இல்லை ? காங்கிரசாரை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்பது மட்டும் தான் காரணமா ?

உடன்பிறப்பு சொன்னது…

//அந்த துணிவு ஏன் திமுகவிற்கு இல்லை ?//

இதை தானே காமெடி என்று சொன்னேன். போர் நிறுத்தத்துக்கே வழி இல்லாத போது இல்லாத ஊருக்கு வழி சொல்லும் ஜெயலலிதாவுக்கா உங்கள் ஆதரவு. கூட்டத்தோடு சேர்ந்து கும்மி அடிப்பது என்று முடிவு செய்துவிட்டீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//உடன்பிறப்பு 10:12 AM, April 27, 2009
//அந்த துணிவு ஏன் திமுகவிற்கு இல்லை ?//

இதை தானே காமெடி என்று சொன்னேன். போர் நிறுத்தத்துக்கே வழி இல்லாத போது இல்லாத ஊருக்கு வழி சொல்லும் ஜெயலலிதாவுக்கா உங்கள் ஆதரவு. கூட்டத்தோடு சேர்ந்து கும்மி அடிப்பது என்று முடிவு செய்துவிட்டீர்கள்
//

ஈழ விடுதலையில் திமுகவின் நிலை என்ன ? அதற்கு பதிலே வரவில்லை, மற்றவைகள் மற்றவர்கள் அனைத்தும் நாடகமாவே இருக்கட்டும் என்று தான் நான் பதிவிலேயே சொல்லிவிட்டேனே. இன்றைக்கு தேவை ஈழத்திற்கு விடுதலை ஆதரவு குரல். அது நாடகமென்றாலும் இவர்களும் கொடுத்தார்கள் வராலாற்றில் பதியப்படும்.

உடன்பிறப்பு சொன்னது…

//ஈழ விடுதலையில் திமுகவின் நிலை என்ன ? அதற்கு பதிலே வரவில்லை, மற்றவைகள் மற்றவர்கள் அனைத்தும் நாடகமாவே இருக்கட்டும் என்று தான் நான் பதிவிலேயே சொல்லிவிட்டேனே. இன்றைக்கு தேவை ஈழத்திற்கு விடுதலை ஆதரவு குரல். அது நாடகமென்றாலும் இவர்களும் கொடுத்தார்கள் வராலாற்றில் பதியப்படும்//

அதை தானே கலைஞர் செய்து வருகிறார், கலைஞர் செய்தால் நாடகம் மற்றவர் செய்தால் தியாகமா. எங்கே தனிமைபட்டு விடுவோமோ என்ற ஆதங்கமே தெரிகிறது உங்கள் பதிவில்

கோவி.கண்ணன் சொன்னது…

//எங்கே தனிமைபட்டு விடுவோமோ என்ற ஆதங்கமே தெரிகிறது உங்கள் பதிவில்//

உளராமல் பதில் சொல்லுங்க, இதன் பொருள் என்ன ? யார் யாரை தனிமை படுத்துறாங்க ? என்னையா ? என்னை எதுக்கு ? நான் எந்தக் கட்சிக்கு தொண்டன் ? என்னை தனிமை படுத்தி என்ன செய்யப் போகிறார்கள் ? நான் இப்பவும் தனிமையில் தானே இருக்கிறேன்.

உடன்பிறப்பு சொன்னது…

//கோவி.கண்ணன் said...

//எங்கே தனிமைபட்டு விடுவோமோ என்ற ஆதங்கமே தெரிகிறது உங்கள் பதிவில்//

உளராமல் பதில் சொல்லுங்க, இதன் பொருள் என்ன ? யார் யாரை தனிமை படுத்துறாங்க ? என்னையா ? என்னை எதுக்கு ? நான் எந்தக் கட்சிக்கு தொண்டன் ? என்னை தனிமை படுத்தி என்ன செய்யப் போகிறார்கள் ? நான் இப்பவும் தனிமையில் தானே இருக்கிறேன்//

ஜெயலலிதா ஈழத்துக்காக போலியான ஆதரவே கொடுத்தாலும் ஆதரிப்பேன் என்று எழுதி இருக்கிறீர்கள். இப்ப்போது கலைஞரும் உண்ணாவிரதம் அறிவித்துவிட்டு ஈழ ஆதரவு அளித்துவிட்டார். ஆனாலும் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள உங்களால் முடியாமல் போவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். கொஞ்சம் உணர்ச்சி வசப்படாமல் எதையும் எழுதவும்

பழமைபேசி சொன்னது…

ஆதரவளிப்பது அவரவர் உரிமை!

ஈழம் என்ற வார்த்தையே இல்லை என்று சொல்லிவிட்டு, தனி ஈழம் பெற்றுத்தருவேன் எனச் சொல்வதுதான் மகா நகைச்சுவை!!

காணொளிகளுக்கும் ஊடகங்களுக்கும் மயங்கக்கூடாது என்று உங்கள் இடுகையொன்றில் சில வாரங்களுக்கு முன்னர் பின்னூட்டம் இட்டதாய் நினைவு நண்பரே!

வருண் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வருண் சொன்னது…

கோவி,

ராமதாசுக்கும், வைகோவிற்கும், சாதாரண பாமர திராவிட விசிலடிச்சாங்குஞ்சிக்கும்உங்களுக்கும் என்ன வித்தியாசம்?ஒண்ணுமே இல்லை!

***'நான் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை, ஈழ விடுதலையை ஆதரிக்கிறேன்'***

எப்படி இதை நீங்களும் ஜெயலலிதாவும் சாதிக்க போறீங்கனு சொல்லாமல் சும்மா ஓட்டக்கூடாது.

சொல்லுங்க?

அப்போ விடுதலைப்புலிக்கு நீங்களும் ஜெயலலிதாவும் எதிரியா?

இல்லையா??

கோவி.கண்ணன் சொன்னது…

// உடன்பிறப்பு said...
//கோவி.கண்ணன் said...

//எங்கே தனிமைபட்டு விடுவோமோ என்ற ஆதங்கமே தெரிகிறது உங்கள் பதிவில்//

உளராமல் பதில் சொல்லுங்க, இதன் பொருள் என்ன ? யார் யாரை தனிமை படுத்துறாங்க ? என்னையா ? என்னை எதுக்கு ? நான் எந்தக் கட்சிக்கு தொண்டன் ? என்னை தனிமை படுத்தி என்ன செய்யப் போகிறார்கள் ? நான் இப்பவும் தனிமையில் தானே இருக்கிறேன்//

ஜெயலலிதா ஈழத்துக்காக போலியான ஆதரவே கொடுத்தாலும் ஆதரிப்பேன் என்று எழுதி இருக்கிறீர்கள். இப்ப்போது கலைஞரும் உண்ணாவிரதம் அறிவித்துவிட்டு ஈழ ஆதரவு அளித்துவிட்டார். ஆனாலும் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள உங்களால் முடியாமல் போவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். கொஞ்சம் உணர்ச்சி வசப்படாமல் எதையும் எழுதவும்
//

கொள்கை புண்ணாக்கு மட்டை இதையெல்லாம் விட நட்பு பெரிதென்று நினைப்பேன். அந்த நினைப்பு சிறிதும் அற்றவர்கள் பெயருக்கு நண்பர்களாக இருப்பார்கள் பிறகு சாயம் வெளுத்துவிடும்.

எந்த ஒரு கட்சிக்கார நாய்களிடமிருந்தும் எனக்கு ஒரு பைசா லாபம் இல்லை, எனது ஆதரவு எதிர்ப்பு நிலை அரசியல் சூழலால் அமைவது, நான் ஆட்டு மந்தையில் இருக்கும் ஒரு ஆடு அல்ல
***

இங்கே தனிமை படுத்தப்படுவோம் என்ற அச்சமும் அதற்கு வேறு காரணங்கள் இருக்கும் என்கிற ஊகம் எவ்வாறு வந்தது. அல்லது வேறு காரணங்களின் ஊகம் தனிமை படுத்தபடுவோம் என்கிற அச்சத்தை எனக்கு கொடுத்ததா ? இரண்டையும் இணைப்பது எது ? தெளிவாக சொல்லுங்க

இவ்வளவு சொல்லும் உங்களுக்கு, நீங்கள் ஊகித்த வேறு காரணங்கள் என்ன வென்று எனக்கு தெரிந்தால், அதன் வழியாக நான் அச்சம் அடைந்திருப்பதாக நீங்கள் சொல்வதையும் விளங்கிக் கொள்வேன்.

உடன்பிறப்பு சொன்னது…

நல்ல கேள்விகள் வருண், கோவியார் எப்பவுமே லேட்டஸ்ட் டிரெண்டை கடைப்பிடிப்பவர் அதனால் தற்போதைய கலைஞர் எதிர்ப்பு டிரெண்டை பிடித்துக் கொண்டுவிட்டார்

உடன்பிறப்பு சொன்னது…

//இவ்வளவு சொல்லும் உங்களுக்கு, நீங்கள் ஊகித்த வேறு காரணங்கள் என்ன வென்று எனக்கு தெரிந்தால், அதன் வழியாக நான் அச்சம் அடைந்திருப்பதாக நீங்கள் சொல்வதையும் விளங்கிக் கொள்வேன்//

உங்கள் கேள்விக்கு வருணுக்கு பதிலாக நான் சொல்லி இருக்கிறேன்

உடன்பிறப்பு சொன்னது…

//பழமைபேசி said...

ஆதரவளிப்பது அவரவர் உரிமை!

ஈழம் என்ற வார்த்தையே இல்லை என்று சொல்லிவிட்டு, தனி ஈழம் பெற்றுத்தருவேன் எனச் சொல்வதுதான் மகா நகைச்சுவை!!//

இதையே தான் நானும் சொல்கிறேன் ஆனால் நான் உளறுகிறேன் என்று உணர்ச்சி வசப்பட்டு எகிறுகிறார் கோவியார். அவரிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் 10:36 AM, April 27, 2009
கோவி,

ராமதாசுக்கும், வைகோவிற்கும், சாதாரண பாமர திராவிட விசிலடிச்சாங்குஞ்சிக்கும்உங்களுக்கும் என்ன வித்தியாசம்?ஒண்ணுமே இல்லை!

***'நான் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை, ஈழ விடுதலையை ஆதரிக்கிறேன்'***

எப்படி இதை நீங்களும் ஜெயலலிதாவும் சாதிக்க போறீங்கனு சொல்லாமல் சும்மா ஓட்டக்கூடாது.

சொல்லுங்க?

அப்போ விடுதலைப்புலிக்கு நீங்களும் ஜெயலலிதாவும் எதிரியா?

இல்லையா??
//

வருண்,
விடுதலைப்புலிகளின் நோக்கம் ஈழ விடுதலை, மற்றவர்களின் அதே நோக்கதை ஆதரிப்பவர் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்றாலும் என்றாலும் சரிதானே ?

காந்தி போராடினாலும், நேதாஜி போராடினாலும் போராட்டம் இந்திய விடுதலைக் குறித்ததாக இருந்தது. காந்தி நேதாஜியை ஆதரிக்கவில்லை, நேதாஜியும் காந்தியை ஆதரிக்கவில்லை. பொதுமக்கள் இருவரையும் விடுதலை போராட்ட ஆதரவாளர்களாகத் தான் பார்த்தார்கள்.

தேவை ஈழ விடுதலை அது விடுதலைப் புலிகள் இன்றி அமைத்துக் கொடுக்க சாத்தியம் இருந்தால் அதையும் பலர் வரவேற்பார்கள், நானும் வரவேற்பேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//உடன்பிறப்பு said...
நல்ல கேள்விகள் வருண், கோவியார் எப்பவுமே லேட்டஸ்ட் டிரெண்டை கடைப்பிடிப்பவர் அதனால் தற்போதைய கலைஞர் எதிர்ப்பு டிரெண்டை பிடித்துக் கொண்டுவிட்டார்
//

இதுக்கும் தனிமை படுத்தப்படுவேன் என்று சொல்வதற்கும் என்ன தொடர்பு ? நீங்கள் திமுக தொண்டர், திமுகவின் எந்த முடிவையும் சிரமேற்பவர், எனக்கு அந்த கட்டுபாடுகள் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//இதையே தான் நானும் சொல்கிறேன் ஆனால் நான் உளறுகிறேன் என்று உணர்ச்சி வசப்பட்டு எகிறுகிறார் கோவியார். அவரிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை//

உளறுகிறேன் என்று சொன்னது என்னைப் பற்றி 'தனிமை படுத்த' என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியதற்காக, நான் என்ன நினனக்கிறேன் என்பதை என்னை விட நீங்கள் நன்று அறிந்திருப்பீர்களோ ?

உடன்பிறப்பு சொன்னது…

//இதுக்கும் தனிமை படுத்தப்படுவேன் என்று சொல்வதற்கும் என்ன தொடர்பு ? நீங்கள் திமுக தொண்டர், திமுகவின் எந்த முடிவையும் சிரமேற்பவர், எனக்கு அந்த கட்டுபாடுகள் இல்லை//

தி.மு.க.வை விமர்சித்து எத்தனையோ இடுகைகள் நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் அதை பற்றி எனக்கு கவலை இல்லை ஆனால் ஜெ.வுக்கு ஓட்டு கேட்கும் உங்கள் நிலை மற்றவர்களோடு உங்களை அடையாளம் காட்டுவதாகவே அமைந்து இருக்கிறது. இதை தான் நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இதற்கு நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு பதில் அளிப்பது அதை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//தி.மு.க.வை விமர்சித்து எத்தனையோ இடுகைகள் நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் அதை பற்றி எனக்கு கவலை இல்லை ஆனால் ஜெ.வுக்கு ஓட்டு கேட்கும் உங்கள் நிலை மற்றவர்களோடு உங்களை அடையாளம் காட்டுவதாகவே அமைந்து இருக்கிறது. இதை தான் நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இதற்கு நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு பதில் அளிப்பது அதை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது

10:48 AM, April 27, 2009
//

தேவையற்ற கற்பனை, நான் உங்களைப் போல் தொடர்ந்து திமுக ஆதரவாளனாக இருக்க எந்த தேவையும் இல்லை. நான் யாரை ஆதரிக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மாணிக்க முடியாது, உங்களையும் நான் தீர்மாணிக்க முடியாது. தேவையற்ற தூற்றல் அருவெருப்பானது. நான் எழுதுவது எனது எண்ணங்களை பிறருடன் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே, இதில் பலரோடு ஒத்துப் போகவேண்டும், எதிர்த்து போகவேண்டுமா ? என்றெல்லாம் நான் நினைப்பது இல்லை. சரி திமுக தொண்டராக இல்லாமல் ஒரு தமிழனாக கருணாநிதியின் செயல்கள் அனைத்தும் உயர்ந்தது, தமிழர்களுக்கு நன்மை அளிப்பது என்று உங்களால் சொல்ல முடியுமா ? சொல்ல முடியாது விசுவாசம் தடுக்கும், என்கிட்ட அந்த கட்டுபபாடு இருக்க வேண்டும் என்பதும், எதிர்பார்பதும் தேவையற்றது. திராவிட சித்தாந்தம் என்கிற காரணங்களால் ஆதரவு நிலை இருந்தது. இன்றைய குடும்ப அரசியல் சூழலிலும் அதை மட்டுமே நினைத்து ஆதரவாக இருப்பதற்கு நான் திமுக தொண்டன் இல்லை

உடன்பிறப்பு சொன்னது…

உங்களை நான் எந்த கட்சியையும் ஆதரிக்க சொல்லவில்லையே, மற்றவர்களை விமர்சிக்கும் உங்களை நான் விமர்சித்தேன் அவ்வளவே. கலைஞர் உண்ணாவிரதம் அறிவித்த பிறகும் ஏன் நீங்கள் தொடர்ந்து உங்கள் கருத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி. மேலும் ஜெ.வுக்கு ஓட்டு கேட்கும் உங்கள் நிலை பதிவுலகில் அதிகரித்து வரும் ஒரு டிரெண்டை பிரதிபலிப்பதாக இருப்பதாகவே இருக்கிறது

தீப்பெட்டி சொன்னது…

///அதிமுக காங்கிரசை ஆதரித்தாலும் காங்கிரசு சவாரி செய்யும் குதிரையாக இருக்காது, காங்கிரசு என்னும் குதிரையை இழுத்துப் பிடிக்கும் கடிவாளமாகவே இருக்கும், என்பதால் என் ஓட்டு ஜெ-கூட்டணிக்கே///

ஜெ-தனது கருத்தில் உறுதியாகவும் பிடிவாதமாகவும் இருப்பவர்.ஆன்டனோ மைனோ காந்தியை எதிர்த்ததிலாகட்டும், முதல் திராவிட கட்சியாய் பி.ஜெ.பி -யிடம் கூட்டணி வைத்தாகட்டும். அவரது கருத்தை வலியுறுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. கலைஞர் அன்றும் இன்றும் வழ வழா.. கொழ கொழா...
கலைஞர் அன்று பிஜெபி கூட்டணி தொடங்கி இன்றைய உண்ணாவிரதம் வரை ஜெ வை Follow பண்ணி வருகிறார். தனித்தன்மை, சுயபுத்தி இவற்றை மற்ற அரசியல்வாதிகளிடம் தேடித்தேடி காப்பி அடித்துவருகிறார்.

மோகன் கந்தசாமி சொன்னது…

/////அப்படி ஒரு (ஆறுதல்) குரலை ஈழ ஆதரவாளர்கள் எதிர்நோக்கி இருந்தனர் என்பதே உண்மை.////

ஆம் இதுவே உண்மை. கூடவே இன்னொரு உண்மையும் உள்ளது. கருணாநிதியை இன்னமும் ஆதரிப்பவர்கள் பிரதிபலனுக்காகத்தானே ஒழிய அவரது திராவிட அரசியலுக்காக அல்ல என்பதுதான் அது. அறிவாலய குரங்கு ஒவ்வொரு கொள்கை மரமாகத் தவ்வும்போது அவர்களின் வாலைப்பிடித்துக் கொண்டு கூடவே தவ்வும் குட்டிகள் இவர்கள். கருணாநிதியிடமிருந்து வரவேண்டிய குரல் இன்னொரு அரசியல் குரங்கிடமிருந்து வருவது காலக்கோடு என்றால் திமுக கட்சி ஆபிசில் பிரியாணி பட்டுவாடா செய்பவர்களுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல நேர்வது சாபக்கேடு. கோவி, உங்களுக்கும் அந்த சாபத்தை யாரோ இட்டுவிட்டார்கள் போலிருக்கு. :-))

வருண் சொன்னது…

***தேவை ஈழ விடுதலை அது விடுதலைப் புலிகள் இன்றி அமைத்துக் கொடுக்க சாத்தியம் இருந்தால் அதையும் பலர் வரவேற்பார்கள், நானும் வரவேற்பேன்***

அது சாத்தியம்???

நீங்க,ஜெ ஜெ எல்லாம் வி பு களை ஒதுக்கி ஈழ விடுதலைக்கு போராடப்போறீங்க?

அதுபோல் எதுவும் பதிவு போட்டீர்களா?

இல்லை துரோகி பட்டம் கிடைக்கும் என்ற பயத்தில் அப்படிப்பதிவு இதுவரை எதுவும் போடவில்லையா?

இதே நிலைதான் கருணாநிதியுடையதும்?

கருணாநிதி விடுதலைபுலிகளுக்குத்தான் எதிரியாக இருக்கிறாரே ஒழிய தமிழ் ஈழத்திற்கு அல்ல என்பது உங்களுக்கு தெரியாதா? நெஜம்மா தெரியாதா? இல்லை நடிக்கிறீங்களா?

உடன்பிறப்பு சொன்னது…

//தீப்பெட்டி 11:07 AM, April 27, 2009

ஜெ-தனது கருத்தில் உறுதியாகவும் பிடிவாதமாகவும் இருப்பவர்.ஆன்டனோ மைனோ காந்தியை எதிர்த்ததிலாகட்டும், முதல் திராவிட கட்சியாய் பி.ஜெ.பி -யிடம் கூட்டணி வைத்தாகட்டும். அவரது கருத்தை வலியுறுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. கலைஞர் அன்றும் இன்றும் வழ வழா.. கொழ கொழா...
கலைஞர் அன்று பிஜெபி கூட்டணி தொடங்கி இன்றைய உண்ணாவிரதம் வரை ஜெ வை Follow பண்ணி வருகிறார். தனித்தன்மை, சுயபுத்தி இவற்றை மற்ற அரசியல்வாதிகளிடம் தேடித்தேடி காப்பி அடித்துவருகிறார்.
//

மதமாற்ற தடைச்சட்டம், அரசு ஊழியர் வேலை நிறுத்தம் அதிகாரிகளை மாற்றி மாற்றி ஓடவிட்டது அகியன எல்லாம் நினைவில்லையா நண்பரே

உடன்பிறப்பு சொன்னது…

கூட்டத்தோடு கூட்டமாக் கூவும் ஒருவர் இங்கு வந்து பிரியாணி பொட்டலம் பற்றி பேசுவது மிகப் பெரிய நகைச்சுவை

கோவி.கண்ணன் சொன்னது…

//கருணாநிதி விடுதலைபுலிகளுக்குத்தான் எதிரியாக இருக்கிறாரே ஒழிய தமிழ் ஈழத்திற்கு அல்ல என்பது உங்களுக்கு தெரியாதா? நெஜம்மா தெரியாதா? இல்லை நடிக்கிறீங்களா?//

கருணாநிதி சொன்னது, 'தமிழ் ஈழம் அமைந்தால் மகிழ்வோம்'

ஜெயலலிதா சொன்னது 'தனி ஈழமே தீர்வு, போராடி பெற்றுத் தருவேன்' என்பது.

கோவி.கண்ணன் சொன்னது…

// மோகன் கந்தசாமி said...
/////அப்படி ஒரு (ஆறுதல்) குரலை ஈழ ஆதரவாளர்கள் எதிர்நோக்கி இருந்தனர் என்பதே உண்மை.////

ஆம் இதுவே உண்மை. கூடவே இன்னொரு உண்மையும் உள்ளது. கருணாநிதியை இன்னமும் ஆதரிப்பவர்கள் பிரதிபலனுக்காகத்தானே ஒழிய அவரது திராவிட அரசியலுக்காக அல்ல என்பதுதான் அது. அறிவாலய குரங்கு ஒவ்வொரு கொள்கை மரமாகத் தவ்வும்போது அவர்களின் வாலைப்பிடித்துக் கொண்டு கூடவே தவ்வும் குட்டிகள் இவர்கள். கருணாநிதியிடமிருந்து வரவேண்டிய குரல் இன்னொரு அரசியல் குரங்கிடமிருந்து வருவது காலக்கோடு என்றால் திமுக கட்சி ஆபிசில் பிரியாணி பட்டுவாடா செய்பவர்களுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல நேர்வது சாபக்கேடு. கோவி, உங்களுக்கும் அந்த சாபத்தை யாரோ இட்டுவிட்டார்கள் போலிருக்கு. :-))
//

மோகன்,

நீங்களும் தனிப்படுத்தப்படும் அச்சத்தில் இருப்பதாக நண்பர் விமர்சிக்கப் போகிறார்.

வருண் சொன்னது…

***கருணாநிதி சொன்னது, 'தமிழ் ஈழம் அமைந்தால் மகிழ்வோம்'

ஜெயலலிதா சொன்னது 'தனி ஈழமே தீர்வு, போராடி பெற்றுத் தருவேன்' என்பது.***

நீங்க ஜெயலலிதாவைன் இந்த "போராட்டத்தை" நம்புறீங்க???

இந்தப்போராட்டத்தை ஜெ ஜெ, அவருடையை கடந்த ஆட்சியின் (முதல்வராக இருக்கும்) போது செய்தாரா??

* எப்படி எப்படி போராடினார்?

* ஏதாவது ஞாபகம் இருக்கா?

இல்லைனா இப்போதான் போராடப்போறீங்களா ஜெ ஜெ யும், நீங்களும்???

உடன்பிறப்பு சொன்னது…

//கோவி.கண்ணன் 11:20 AM, April 27, 2009

மோகன்,

நீங்களும் தனிப்படுத்தப்படும் அச்சத்தில் இருப்பதாக நண்பர் விமர்சிக்கப் போகிறார்//

நன்றி கோவியாரே, இந்த பின்னூட்டத்துக்காக தான் இவ்வளவு நேரம் காத்துக் கொண்டு இருந்தேன். இதோ உங்கள் வாயாலேயே அது வந்துவிட்டது. உங்களுக்கு "செட்" அமைந்துவிட்டது, இந்த குழுவில் சேர்வதற்கான முயற்சி தான் உங்கள் இடுகை என்பது தான் நான் சொல்ல வந்தது. இதை தான் நான் விளக்குவதற்கு முயற்சி செய்தேன் அதை செயலில் காட்டியதற்கு நன்றி.

அக்னி பார்வை சொன்னது…

தல திமுக ஆதிமுகவிற்க்கு பெரிய வித்தியாசமில்லை.

மோகன் கந்தசாமி சொன்னது…

///கூட்டத்தோடு கூட்டமாக் கூவும்///

கட்சிக் மீட்டிங்கிற்கு கூட்டம் சேர்ப்பவர் பதிவெழுதுவது நகைச்சுவை அல்ல. இங்கு பின்னூட்டமிடுவதுதான் நகைச்சுவை!

உடன்பிறப்பு சொன்னது…

//கருணாநிதி சொன்னது, 'தமிழ் ஈழம் அமைந்தால் மகிழ்வோம்'

ஜெயலலிதா சொன்னது 'தனி ஈழமே தீர்வு, போராடி பெற்றுத் தருவேன்' என்பது
//

ஒருவர் சின்னக் குழந்தையிடம் போய் நான் நிலவை பிடித்து இரண்டாக உடைத்து உனக்கு ஒரு பாகம் தருவேன் என்கிறார், இன்னொருவர் வந்து நான் உனக்கு முழு நிலவையும் தருவேன் என்கிறார்

ஆனால் கோவியார் இன்னும் சின்னக் குழந்தை அல்லவே

உடன்பிறப்பு சொன்னது…

// மோகன் கந்தசாமி said...
கட்சிக் மீட்டிங்கிற்கு கூட்டம் சேர்ப்பவர் பதிவெழுதுவது நகைச்சுவை அல்ல. இங்கு பின்னூட்டமிடுவதுதான் நகைச்சுவை!//

அந்த மீட்டிங்குக்கு வந்து கைதட்டி காசு வாங்கிவிட்டு போனவர் வந்து பின்னூட்டமிடுவது அதைவிட நகைச்சுவை

கோவி.கண்ணன் சொன்னது…

//நன்றி கோவியாரே, இந்த பின்னூட்டத்துக்காக தான் இவ்வளவு நேரம் காத்துக் கொண்டு இருந்தேன். இதோ உங்கள் வாயாலேயே அது வந்துவிட்டது. உங்களுக்கு "செட்" அமைந்துவிட்டது, இந்த குழுவில் சேர்வதற்கான முயற்சி தான் உங்கள் இடுகை என்பது தான் நான் சொல்ல வந்தது. இதை தான் நான் விளக்குவதற்கு முயற்சி செய்தேன் அதை செயலில் காட்டியதற்கு நன்றி.//

உங்க திட்டப்படி 40 பின்னூட்டங்களுக்கும் மேல் ஆகி பின்னூட்டம் தமிழ்மணம் முகப்பில் இருந்து காணமல் போய்விட்டது, வாழ்க உங்களுது திமுக தொண்டு !

திரும்ப மலையில் இதையே புதிதாக போடுவேன். அப்ப தூங்கி இருப்பிங்க

உடன்பிறப்பு சொன்னது…

//உங்க திட்டப்படி 40 பின்னூட்டங்களுக்கும் மேல் ஆகி பின்னூட்டம் தமிழ்மணம் முகப்பில் இருந்து காணமல் போய்விட்டது, வாழ்க உங்களுது திமுக தொண்டு !//

ஆனாலும் இன்னும் உங்கள் கருத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்களே

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒருவர் சின்னக் குழந்தையிடம் போய் நான் நிலவை பிடித்து இரண்டாக உடைத்து உனக்கு ஒரு பாகம் தருவேன் என்கிறார், இன்னொருவர் வந்து நான் உனக்கு முழு நிலவையும் தருவேன் என்கிறார்

ஆனால் கோவியார் இன்னும் சின்னக் குழந்தை அல்லவே

11:29 AM, April 27, 2009//

ஈழம் பிரச்சனையை அரசியலில் கலக்ககமல் பார்த்தாலும் திமுக அரசு பொற்கால ஆட்சியெல்லாம் நடத்தவில்லை. வாரிசு அரசியல், மதுரை தினகரன் அலுவலக ஊழியர் கொலைகள் இவையெல்லாம் திமுக தொண்டன் தவிர வெறும் திராவிட உணர்வாளனால் சகித்துக் கொள்ள முடியாது. ஒரு பாப்பாத்தி சங்கர ராமன் கொலையில் முனைப்புக் காட்டியதைக் கூட ஒரு திராவிடக் கட்சியால் முனைப்புடன் எடுத்துச் செல்ல முடியவில்லை

மோகன் கந்தசாமி சொன்னது…

////மோகன்,
நீங்களும் தனிப்படுத்தப்படும் அச்சத்தில் இருப்பதாக நண்பர் விமர்சிக்கப் போகிறார்.////

இன்று தனிமைப் படுத்தப் பட்டவர்கள் இவர்கள்தான். எண்ணிலடங்கா திமுக ஆதரவு பதிவுகள் வந்துகொண்டிருந்த வலைப்பூவில் இவரையும் இன்னொரிரு பதிவர்களையும் தவிர்த்து எவரும் திமுக ஆதரவு பதிவை இடுவதில்லை. இவரும் கூடிய சீக்கிரம் நிறுத்திவிடுவார் என்றே நினைக்கிறேன். என்ன இருந்தாலும் சிந்திச்சாதான் மனுஷன்!! இல்லாவிட்டாலும் மனுஷன் தான். ஆனா வேற பேர், எஸ் மேன்!!

உடன்பிறப்பு சொன்னது…

//ஈழம் பிரச்சனையை அரசியலில் கலக்ககமல் பார்த்தாலும் திமுக அரசு பொற்கால ஆட்சியெல்லாம் நடத்தவில்லை. வாரிசு அரசியல், மதுரை தினகரன் அலுவலக ஊழியர் கொலைகள் இவையெல்லாம் திமுக தொண்டன் தவிர வெறும் திராவிட உணர்வாளனால் சகித்துக் கொள்ள முடியாது. ஒரு பாப்பாத்தி சங்கர ராமன் கொலையில் முனைப்புக் காட்டியதைக் கூட ஒரு திராவிடக் கட்சியால் முனைப்புடன் எடுத்துச் செல்ல முடியவில்லை//

அதை தான் சொல்லிவிட்டேனே, தி.மு.க. பற்றிய உங்களின் பல இடுகைகள் பற்றி எனக்கு கவலை இல்லை என்று. ஆனால் இந்த இடுகை ஈழம் சம்மந்தமானது அதை பற்றி தானே விவாதித்து கொண்டு இருக்கிறோம்

கோவி.கண்ணன் சொன்னது…

//இன்று தனிமைப் படுத்தப் பட்டவர்கள் இவர்கள்தான். எண்ணிலடங்கா திமுக ஆதரவு பதிவுகள் வந்துகொண்டிருந்த வலைப்பூவில் இவரையும் இன்னொரிரு பதிவர்களையும் தவிர்த்து எவரும் திமுக ஆதரவு பதிவை இடுவதில்லை. இவரும் கூடிய சீக்கிரம் நிறுத்திவிடுவார் என்றே நினைக்கிறேன். என்ன இருந்தாலும் சிந்திச்சாதான் மனுஷன்!! இல்லாவிட்டாலும் மனுஷன் தான். ஆனா வேற பேர், எஸ் மேன்!!

11:37 AM, April 27, 2009
//

என்னது யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துறாங்களா ?

உடன்பிறப்பு சொன்னது…

//மோகன் கந்தசாமி said...

////மோகன்,
நீங்களும் தனிப்படுத்தப்படும் அச்சத்தில் இருப்பதாக நண்பர் விமர்சிக்கப் போகிறார்.////

இன்று தனிமைப் படுத்தப் பட்டவர்கள் இவர்கள்தான். எண்ணிலடங்கா திமுக ஆதரவு பதிவுகள் வந்துகொண்டிருந்த வலைப்பூவில் இவரையும் இன்னொரிரு பதிவர்களையும் தவிர்த்து எவரும் திமுக ஆதரவு பதிவை இடுவதில்லை. இவரும் கூடிய சீக்கிரம் நிறுத்திவிடுவார் என்றே நினைக்கிறேன். என்ன இருந்தாலும் சிந்திச்சாதான் மனுஷன்!! இல்லாவிட்டாலும் மனுஷன் தான். ஆனா வேற பேர், எஸ் மேன்!//

கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கூவுறதுக்கு எதுக்கு சிந்திக்கனும் இதில் நக்கல் வேறு வேண்டி இருக்காக்கும்

உடன்பிறப்பு சொன்னது…

//என்னது யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துறாங்களா ?//

நல்லா செட் சேர்க்கறீங்க. நான் சொன்ன மாதிரியே தான் நடக்குறீங்க

மோகன் கந்தசாமி சொன்னது…

////அந்த மீட்டிங்குக்கு வந்து கைதட்டி காசு வாங்கிவிட்டு போனவர் வந்து பின்னூட்டமிடுவது அதைவிட நகைச்சுவை////

ஆமாம், காச கொடுத்துட்டு எங்க டவுசருக்குள்ள அவங்க கைய விடும்போதே நாங்க எஸ்கேப் ஆயிட்டோம். டவுசர் அவுத்தாலும் இடத்த விட்டு நகர மாட்டோம்னு அடம்பிடிக்கிறீங்களே! கொஞ்சம் குனிஞ்சு பாத்துட்டாவது யோசிங்க மக்களே!

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//கலைஞர் உண்ணாவிரதம் என்று செய்தி வந்துள்ளதே அதுக்கு என்ன சொல்றீங்க //

அடங்கொக்கா மக்கா, இந்த தேர்தல் வந்தாலும் வந்துச்சு, இன்னும் என்னா என்னா கூத்து நடக்கப்போவுதுன்னு தெரியல.
இந்த கூத்துனால பிரணாப் வேணும்ணா இன்னொரு தபா இலங்கைக்கு போயிட்டு வருவாரு. அதத் தவிர வேற ஒன்னியும் நடக்காது. அவரு இலங்கைக்கு பேறேன்னு சொன்னதும் இவரு உண்ணாவிரதப் போராட்டம் மாபெரும் வெற்றின்னு சொல்லிட்டு ஜீஸ் குடிச்சுருவாரு.

மோகன் கந்தசாமி சொன்னது…

////கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கூவுறதுக்கு எதுக்கு சிந்திக்கனும்////

நான் கூவுவதும் கூட்டம் கூவுவதும் ஒன்றென்றாலும் நான் குந்தி யோசித்துவிட்டுத்தான் கூவுகிறேன். உங்களைப் போல முன் வரிசையில் அல்லக்கைகள் கூவுவதை அப்படியே பின் வரிசையில் நின்றுகொண்டு 'போடுங்கம்மா ஒட்டு' என்று கூவுவதில்லை. பிரியாணிக்காக கூவுபவர்கள் கூப்பாடெல்லாம் லெக் பீஸ் கிடைக்கும் வரைதான்.!!!

மோகன் கந்தசாமி சொன்னது…

////நல்லா செட் சேர்க்கறீங்க. நான் சொன்ன மாதிரியே தான் நடக்குறீங்க///

எக்ஸ்கியூஸ் கிடைத்துவிட்டது போலிருக்கு.!!! எனினும் உமக்கெதிராக செட் சேர்த்தே ஆக வேண்டியிருக்கிறது. கருணாநிதியின் தற்போதைய சறுக்களுக்கு முன்பு வரை ஒரு பெரிய செட் சேர்ந்து கொண்டு நியாயமான விமர்சகர்களை எல்லாம் விரட்டிக் கொண்டிருந்தீர்கள்!!! தலை குப்புற விழுந்த பிறகாவது கொஞ்சம் அடங்குங்கள்!!! கருணாநிதியின் ஸ்டண்ட் ஒரு மகா எரிச்சல் என்றால் உங்களது சப்பை கட்டுகள் வயிற்றெரிச்சலாக இருக்கிறது!!!

உடன்பிறப்பு சொன்னது…

//மோகன் கந்தசாமி 11:57 AM, April 27, 2009

////கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கூவுறதுக்கு எதுக்கு சிந்திக்கனும்////

நான் கூவுவதும் கூட்டம் கூவுவதும் ஒன்றென்றாலும் நான் குந்தி யோசித்துவிட்டுத்தான் கூவுகிறேன். உங்களைப் போல முன் வரிசையில் அல்லக்கைகள் கூவுவதை அப்படியே பின் வரிசையில் நின்றுகொண்டு 'போடுங்கம்மா ஒட்டு' என்று கூவுவதில்லை. பிரியாணிக்காக கூவுபவர்கள் கூப்பாடெல்லாம் லெக் பீஸ் கிடைக்கும் வரைதான்.!!!
//

இப்போது கூட்டத்தோடு கூட்டமா சேர்ந்து கூவுவது யாருங்க

உடன்பிறப்பு சொன்னது…

// மோகன் கந்தசாமி said...

எக்ஸ்கியூஸ் கிடைத்துவிட்டது போலிருக்கு.!!! எனினும் உமக்கெதிராக செட் சேர்த்தே ஆக வேண்டியிருக்கிறது. கருணாநிதியின் தற்போதைய சறுக்களுக்கு முன்பு வரை ஒரு பெரிய செட் சேர்ந்து கொண்டு நியாயமான விமர்சகர்களை எல்லாம் விரட்டிக் கொண்டிருந்தீர்கள்!!! தலை குப்புற விழுந்த பிறகாவது கொஞ்சம் அடங்குங்கள்!!! கருணாநிதியின் ஸ்டண்ட் ஒரு மகா எரிச்சல் என்றால் உங்களது சப்பை கட்டுகள் வயிற்றெரிச்சலாக இருக்கிறது!!!//

உங்களுக்கெல்லாம் கலைஞரை விமர்சிக்க ஒரு எக்ஸ்கியூஸ் கிடைத்துவிட்டது

கூட்டத்தோடு சேர்ந்து கூவுபவருக்கு பிரியாணி பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது

உடன்பிறப்பு சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
அடங்கொக்கா மக்கா, இந்த தேர்தல் வந்தாலும் வந்துச்சு, இன்னும் என்னா என்னா கூத்து நடக்கப்போவுதுன்னு தெரியல.
இந்த கூத்துனால பிரணாப் வேணும்ணா இன்னொரு தபா இலங்கைக்கு போயிட்டு வருவாரு. அதத் தவிர வேற ஒன்னியும் நடக்காது. அவரு இலங்கைக்கு பேறேன்னு சொன்னதும் இவரு உண்ணாவிரதப் போராட்டம் மாபெரும் வெற்றின்னு சொல்லிட்டு ஜீஸ் குடிச்சுருவாரு//

அண்ணே! அம்மையார் உண்ணாவிரதம் இருக்கும் போது அமுக்கி கொண்டு இருந்தீங்களே அதுக்கு என்னண்ணே காரணம்

மோகன் கந்தசாமி சொன்னது…

நான் கூட்டத்தோடு கூட்டமாக கூவுவதாக ஒரு சிந்தனைவாதி எடுத்தியம்பி விட்டு தற்காலிகமாக எங்கோ ஓடியிருக்கிறார். அவர் மீண்டும் பிரசன்னமாவதற்குள் ஒரு தன்னிலை விளக்கம்: கருணாநிதி எதிர்ப்பை வலையுலகில் தொடங்கியவர்களுள் ஒருவன் நான். (ஆர்வமிருந்தால் உடன்பிறப்பு அவர்கள் 'டேட் லைனை' சரிபார்த்துக் கொள்ளலாம்.) சமீப கால தீவிரவாத பெருகலுக்கும் பாபர் மசூதி இடிப்பிற்கும் உள்ள தொடர்பை ஒரு 'ஹைபோதீசிசாக' விவாதித்துள்ளேன். இதையே சில நாட்களுக்குப் பிறகு ஞானி மொட்டை மாடியில் சொன்னபோது நெடு நாட்களுக்கு அத்தலைப்பில் பலர் விவாதித்தனர்.

ஆகவே பதிவுகளுக்கு சிரத்தை எடுக்கும் பல பதிவர்கள் போலத்தான் நானும். ஆனால் உடன்பிறப்பை பாருங்கள், முரசொலியோ அல்லது வசவு அறிக்கையோ வெளிப்படுத்தும் கூப்பாட்டை அடி மாறாமல் கூவிக்கொண்டிருப்பார். அல்லது சப்பை கட்டிக்கொண்டிருப்பார்.

(கோவி, இது தனிநபர் விமர்சனம் அல்ல. தன்னிலை விளக்கம்)

மோகன் கந்தசாமி சொன்னது…

அடடே! வந்தாச்சு போலிருக்கு!!

மோகன் கந்தசாமி சொன்னது…

////கூட்டத்தோடு சேர்ந்து கூவுபவருக்கு பிரியாணி பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது////

இந்த கூப்பாட்ட நிறுத்தறீங்களா!! காது புளிக்கிறது!! குறைந்த பட்சம் பின்னூட்டத்தில் வசவுவதற்காகவாவது புதிதாக யோசியுங்களேன்! பரிதாபமாக இருக்கிறது.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//அண்ணே! அம்மையார் உண்ணாவிரதம் இருக்கும் போது அமுக்கி கொண்டு இருந்தீங்களே அதுக்கு என்னண்ணே காரணம்
//
அம்மையார் இப்போ எதிர்கட்சி, அதோட மத்தியில ஆளும் கூட்டணியிலயும் அவங்க இல்ல. அதுனால அவங்களுக்கு உண்ணாவிரதத்த தவிர வேற வழியில்ல. ஆனா இவரு அப்டியா?
இந்த உண்ணாவிரதம் யாரை நோக்கி ? மத்திய அரசை நோக்கி என்றால் இவர் கூட்டணியில் இருக்கும் அரசை நோக்கி உண்ணாவிரதமும், வேலை நிறுத்தமும் செய்து மக்களை ஏன் ஏமாற்ற வேண்டும்?
இலங்கை அரசை நோக்கி என்றால், இந்த உண்ணாவிரதத்தைப் பார்த்து உடனே போர்நிறுத்தம் செய்ய இலங்கை முன்வருமா?
ஆடுற மாட்ட ஆடிகறக்கனும், பாடுற மாட்ட பாடிக்கறக்கனும். இது தேவையே இல்லாத ஒன்று என்பதே என் வாதம்.

மோகன் கந்தசாமி சொன்னது…

////கூட்டத்தோடு சேர்ந்து கூவுபவருக்கு பிரியாணி பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது////

நீங்கள் தனிமைப்படுத்தப் பட்டால் மற்றவர்களெல்லாம் கூட்டமாகி விடுவார்களா! நீங்கள் கூட்டம் போட்டு கும்மிய கதைகள் எல்லாம் நினைவு படுத்திப் பாருங்கள்!

Sanjai Gandhi சொன்னது…

//கொள்கை என்று பார்த்தாலும் ஊழல் ரவுடித்தனம் ஆகியவற்றில் அதிமுக பின் தங்கி இருப்பதாகவே நினைக்கிறேன்//

ரத்தத்தின் ரத்தமே கோவி.கண்ணன்.

Sanjai Gandhi சொன்னது…

//நான் தெளிவாக பதில் சொல்லிவிட்டேன், ஜெ-வுக்கான ஆதரவு தனி ஈழம் நிரந்தர தீர்வு, அதைப் பெற்றுத்தருவேன் என்று கூறியதற்கு என்று.//

அதாவது, டயலாக் விட்டா போதும்னு சொல்ல வரீங்க.

Sanjai Gandhi சொன்னது…

//உங்கள் இடுகையில் இருப்பதையே உங்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லையா//

:)

Sanjai Gandhi சொன்னது…

//அது நாடகமென்றாலும் இவர்களும் கொடுத்தார்கள் வராலாற்றில் பதியப்படும்.//

ஸ்ஸ்ஸ்ஸபாஆஆஆஆ.. :(

அப்பாவி முரு சொன்னது…

காங்கிர்ஸ் ஆட்களெல்லாம் கிண்டல் பண்ணுற மாதிரி ஆகிப்போச்சே தமிழனோட நிலமை!!!

என்ன கொடுமை சார் இது????

Darren சொன்னது…

///நான் தெளிவாக பதில் சொல்லிவிட்டேன், ஜெ-வுக்கான ஆதரவு தனி ஈழம் நிரந்தர தீர்வு, அதைப் பெற்றுத்தருவேன் என்று கூறியதற்கு என்று///

தமிழனின் அரசியல் அறிவு மெய்சிலிர்க்க வைக்குதய்யா!!!!

Darren சொன்னது…

///நான் தெளிவாக பதில் சொல்லிவிட்டேன், ஜெ-வுக்கான ஆதரவு தனி ஈழம் நிரந்தர தீர்வு, அதைப் பெற்றுத்தருவேன் என்று கூறியதற்கு என்று///

ஒரு சிடி யில் செயலலிதா மாறிட்டாங்களாக்கும்...காமெடி..நாளைக்கு சுப்பிரமணிய சாமி புலிகளுக்கு எதிரா ஒரு சிடி காண்பித்தார் அதனால் ஈழ கோரிக்கையை கைவிட்டேன் என்பார்...ம்...தமிழனின் அரசியல் அறிவு மெய்சிலிர்க்க வைக்குதய்யா!!!!ஈழம் அமைய ஒரே தேவை ஈழப்போராளிகளே தவிர வேறு ஒருவரும் இல்லை..ஆயுத பலமே அமைதியை கொடுக்கும்

Sanjai Gandhi சொன்னது…

காங்கிர்ஸ் ஆட்களெல்லாம் கிண்டல் பண்ணுற மாதிரி ஆகிப்போச்சே தமிழனோட நிலமை!!!//

:))))

கோவி.கண்ணன் சொன்னது…

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
காங்கிர்ஸ் ஆட்களெல்லாம் கிண்டல் பண்ணுற மாதிரி ஆகிப்போச்சே தமிழனோட நிலமை!!!//

:))))
//

அரசு பணத்தில் உண்ணா விரத வெற்றி விழாவுக்கு ஏற்பாடு பண்ணுங்க ஸ்வாமியோவ்.........

Darren சொன்னது…

//ஜெ-வுக்கான ஆதரவு தனி ஈழம் நிரந்தர தீர்வு, அதைப் பெற்றுத்தருவேன் என்று கூறியதற்கு என்று//

சரி சரி...நம்புங்க..இந்தம்மா மேல இருக்கிற கேஸ மட்டும்தான் வாபஸ் வாங்கும்..வேற ஒரு புண்ணாக்கும் நடக்காது..இந்தம்மா புலிகளை எதிர்பாங்களாம்..பிரபாகரனை பிடிக்கனும்னு சொல்லுவாங்களாம்..அப்புறம் யார் தலைமையிம் ஈழம் அமைப்பாங்களாம்?? சசிகலாவின் தலைமையிலா???

abhara சொன்னது…

please see abhara.blogspot.com

ராவணன் சொன்னது…

சிங்கப்பூரில் இருந்துகொண்டு எப்படி ஓட்டு போடுவீர்கள்.சரி ஓட்டுப் போட ஊருக்குச் செல்வீர்களானால்,உங்களுக்கு முன்பே, கள்ளவோட்டு புகழ் கருணாநிதியின் அடிவருடிகள் போட்டுவிடுவார்கள் போட்டுவிடுவார்கள்.
கள்ளவோட்டிலே சாதனை படைப்பது கருணாநிதி கும்பல் என்பது ஊருக்கே தெரிந்த செய்தி.

கள்ளவோட்டு அடிவருடி கும்பலைச் சேர்ந்த ஒரு அதிஷ்டமான பதிவர் சுண்ணாம்பை முன்னாலும் பின்னாலும் பூசிக்கொண்டு எழுதிய பதிவைப் படிக்கவில்லையா?

கருணாநிதி இப்போதல்ல,1969-லேயே
இந்திராவின் காலை அடிவருடும் போதே தமிழினத்தை அடகு வைத்துவிட்டார்.மானமில்லதா ஒரு நபரை இத்தனை காலம் தமிழினத் தலைவர் என்று கொண்டாடுவது ஏனோ?

இதற்கு விரிவான விளக்கம் வேண்டுமாயின் கருணாநிதியின் சாதி என்னவென்று பாருங்கள்,அந்த சாதியின் பாரம்பரியம் என்னவென்று பாருங்கள்.கருணாநிதியிடம் தமிழின எதிர்ப்பு,வெறுப்பு என்றுமே அணையாத நெருப்பாக கனன்றுகொண்டே இருக்கும்.ஓட்டுப் பொறுக்குவதற்காக சிலநேரம் ஏதாவது உளருவது உண்டு.

உடன்பிறப்பு சொன்னது…

//மோகன் கந்தசாமி 12:33 PM, April 27, 2009

////கூட்டத்தோடு சேர்ந்து கூவுபவருக்கு பிரியாணி பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது////

நீங்கள் தனிமைப்படுத்தப் பட்டால் மற்றவர்களெல்லாம் கூட்டமாகி விடுவார்களா! நீங்கள் கூட்டம் போட்டு கும்மிய கதைகள் எல்லாம் நினைவு படுத்திப் பாருங்கள்!
//

நீங்கள் அப்போது எங்களுடன் சேர்ந்து கூவினீர்கள் இப்போது இடம் மாறி இருக்கிறீர்கள் அவ்வளவு தான் ஆனால் கூவுவதை நிறுத்தவில்லை, கூட்டம் அதிகமாக இருக்கும் இடம் எதுவோ அங்கே சென்றுவிடுவீர்கள் நாங்கள் அப்படி இல்லை

லக்கிலுக் சொன்னது…

//ராவணன் 6:30 PM, April 27, 2009
சிங்கப்பூரில் இருந்துகொண்டு எப்படி ஓட்டு போடுவீர்கள்.சரி ஓட்டுப் போட ஊருக்குச் செல்வீர்களானால்,உங்களுக்கு முன்பே, கள்ளவோட்டு புகழ் கருணாநிதியின் அடிவருடிகள் போட்டுவிடுவார்கள் போட்டுவிடுவார்கள்.
கள்ளவோட்டிலே சாதனை படைப்பது கருணாநிதி கும்பல் என்பது ஊருக்கே தெரிந்த செய்தி.//

இதென்னவோ தன் பதிவுக்கு தானே போட்ட பின்னூட்டம் மாதிரி இருக்கே? :-))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//இதென்னவோ தன் பதிவுக்கு தானே போட்ட பின்னூட்டம் மாதிரி இருக்கே? :-))))))//

அரண்டவன் கண்ணுக்கு...
என் பதிவில் எல்லாவற்றையும் வெளிப்படையாகத்தான் எழுதி இருக்கிறேன். எனக்கு நானே வேறு பெயர்களில் பின்னூட்டம் இட்டுக் கொள்ளத் தேவை எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

அவதூறுகள் தொடரட்டும்...

கோவி.கண்ணன் சொன்னது…

//அந்த சாதியின் பாரம்பரியம் என்னவென்று பாருங்கள்.கருணாநிதியிடம் தமிழின எதிர்ப்பு,வெறுப்பு என்றுமே அணையாத நெருப்பாக கனன்றுகொண்டே இருக்கும்.ஓட்டுப் பொறுக்குவதற்காக சிலநேரம் ஏதாவது உளருவது உண்டு//

இராவணன் இந்த வரிகளை கடுமையாக எதிர்க்கிறேன். அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம் தவறே இல்லை, சாதி ரீதியான விமர்சனம் தேவை அற்றது. கருணாநிதி சாதிப் பெயரைப் பயன்படுத்தாத போது அதுக் குறித்து பேசுவதும் சரி இல்லை. சாதியின் பாரம்பரியம் பார்த்து தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்குபவர்களுக்குத்தான் இது போன்ற கீழான எண்ணம் தோன்றும். எனது இடுகைக்க்கு ஆதரவென்றாலும், தரமற்ற வரிகள் ஏற்புடையது அல்ல

கோவி.கண்ணன் சொன்னது…

//Dharan said...
///நான் தெளிவாக பதில் சொல்லிவிட்டேன், ஜெ-வுக்கான ஆதரவு தனி ஈழம் நிரந்தர தீர்வு, அதைப் பெற்றுத்தருவேன் என்று கூறியதற்கு என்று///

ஒரு சிடி யில் செயலலிதா மாறிட்டாங்களாக்கும்...காமெடி..நாளைக்கு சுப்பிரமணிய சாமி புலிகளுக்கு எதிரா ஒரு சிடி காண்பித்தார் அதனால் ஈழ கோரிக்கையை கைவிட்டேன் என்பார்...ம்...தமிழனின் அரசியல் அறிவு மெய்சிலிர்க்க வைக்குதய்யா!!!!ஈழம் அமைய ஒரே தேவை ஈழப்போராளிகளே தவிர வேறு ஒருவரும் இல்லை..ஆயுத பலமே அமைதியை கொடுக்கும்
//

நாலே நாலு மணி நேரத்தில் போர் முடிவுக்கு வந்ததாக ஊடகங்கள் வழியாக பரப்புவது காமடியாக தெரியலையா ?

Sanjai Gandhi சொன்னது…

//அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம் தவறே இல்லை, சாதி ரீதியான விமர்சனம் தேவை அற்றது. கருணாநிதி சாதிப் பெயரைப் பயன்படுத்தாத போது அதுக் குறித்து பேசுவதும் சரி இல்லை. சாதியின் பாரம்பரியம் பார்த்து தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்குபவர்களுக்குத்தான் இது போன்ற கீழான எண்ணம் தோன்றும்//

சபாஷ் கோவியாரே.

இந்த ராவணன் என்பவர், சீல் பிடித்த மூளைக்கு சொந்தக்காரர் போல. என் பதிவில் ஒரு முறை என் தாயை பழித்து ஒரு பின்னூட்டம் போட்டார். அப்போதே எச்சரித்தேன். ஆனாலும் இந்த மூளையில் வடியும் சீலை குணமாக்கிக் கொள்ளவில்லை போல.

உடன்பிறப்பு சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் 12:30 PM, April 27, 2009

//அண்ணே! அம்மையார் உண்ணாவிரதம் இருக்கும் போது அமுக்கி கொண்டு இருந்தீங்களே அதுக்கு என்னண்ணே காரணம்
//
அம்மையார் இப்போ எதிர்கட்சி, அதோட மத்தியில ஆளும் கூட்டணியிலயும் அவங்க இல்ல. அதுனால அவங்களுக்கு உண்ணாவிரதத்த தவிர வேற வழியில்ல. ஆனா இவரு அப்டியா?
இந்த உண்ணாவிரதம் யாரை நோக்கி ? மத்திய அரசை நோக்கி என்றால் இவர் கூட்டணியில் இருக்கும் அரசை நோக்கி உண்ணாவிரதமும், வேலை நிறுத்தமும் செய்து மக்களை ஏன் ஏமாற்ற வேண்டும்?
இலங்கை அரசை நோக்கி என்றால், இந்த உண்ணாவிரதத்தைப் பார்த்து உடனே போர்நிறுத்தம் செய்ய இலங்கை முன்வருமா?
ஆடுற மாட்ட ஆடிகறக்கனும், பாடுற மாட்ட பாடிக்கறக்கனும். இது தேவையே இல்லாத ஒன்று என்பதே என் வாதம்//

ஒபாமாவாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை என்னும் போது கலைஞரால் உண்ணாவிரதம் தான் இருக்க முடியும். இங்கே பலர் கலைஞரை மட்டும் குறை சொல்வது வேறு சில உள்நோக்கம் இருப்பதாலேயே

உடன்பிறப்பு சொன்னது…

//கோவி.கண்ணன் said...
நாலே நாலு மணி நேரத்தில் போர் முடிவுக்கு வந்ததாக ஊடகங்கள் வழியாக பரப்புவது காமடியாக தெரியலையா ?//

கோவியார் இப்போதெல்லாம் காமெடியை கூட தரம் பிரித்து தான் பார்க்கிறார் போலும்

G.Ragavan சொன்னது…

ஜெயை நம்ம முடியாது. ரவிசங்கர் சொல்லித்தான் அவருக்கு ஈழம் பத்தித் தெரிஞ்சிருக்குன்னு சொல்றதே பெரிய காமெடி. அவ்ளோ அரசியல் அறிவு.

ஆனா தனி ஈழம்... அதை இலங்கையிலேயே வாங்கித் தருவேன்னு சொல்றப்போ.. கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா ஜெயலலிதா பேசி எவ்ளோ கேட்டுருக்கோம்.

இந்தம்மா நடிக்க.. அத விட தனக்கு நடிக்க வரும்னு ஐயா நடிக்க.... உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்னு எம்.ஜி.ஆர் பாடுனதுதான் நினைவுக்கு வருது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

எவ்வளவு சீரியசான விஷயத்தை போய்.... இவ்வளவு நகைக்ச்சுவையாவா விவாதம் பண்ணுவீங்க!
ஈழம் வாங்கித் தர்றேன்ன ஜெயலலிதாவுக்கு நன்றி!
உண்ணாவிரதம் இருந்த கலைஞருக்கு நன்றி!
உரத்த குரல் கொடுக்கும் மன்சூர் அலிகானுக்கு நிறைந்த மனதுடன் நன்றி!
மன்சூர் அலிகானின் குரல் நான்கைந்து மாதமாக ஒரே அளவில் தான் ஒலிக்குது.
இவங்களுக்கு அவர் பரவாயில்லை!

இந்தியாவின் பாரிய உதவியுடன் உக்கிர போர் தொடக்கி நான்கைந்து மாதங்கள் ஆகின்றன. எப்போதே செய்திருக்க வேண்டியதை தேர்தல் நெருங்கியதும் செய்யத் துணிவது ஏன்? இதுவரை கொல்லப்பட்ட குழந்தைகளுக்கும், விலைமதிப்பற்ற தங்களது உடல் உறுப்புகளை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கும் இவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
எதிர்ப்பாகவும், விளக்கெண்ணை போலும் இருந்த குரல் தேர்தல் நெருங்கியதும் ஆதரவாக உரக்க ஒலிப்பது ஏன்?

அதை சிந்தித்திருந்தால் இவ்வளவு பெரிய விவாதமே இங்கு நடந்திருக்காது.

அபி அப்பா சொன்னது…

நான் இங்க வந்து பார்த்துவிட்டு பதில் சொல்ல வரும் போதும் என் உடன்பிறப்பு பதில் சொல்வது எனக்கு மனதுக்கு திருப்தியாக இருந்தது. இங்கே உக்கிரமாக அவர் ஒரு போர் புரிந்து கொண்டிருந்த காரணத்தால் தான் அவரால் கலைஞருக்கு நன்றி சொல்லி பதிவு போட நேரமில்லை என் உணந்து நான் பதிவு போட வேண்டியதாயிற்று!

மிக்க நன்றி உடன்பிறப்பு! உங்க எல்லா மதிலுக்கும் ரிப்பீடேய்!

Unknown சொன்னது…

எனக்கு கலைஞரின் நாடகம் பிடிக்க வில்லை தான் ஆனால் அதற்காக ஜெயலலிதாவிற்கு ஒட்டு கேட்கும் கோவியாரின் செயல் வன்மையாக கண்டிக்க தக்கது 1 மாதத்திற்கு முன்னால் வரையிலும் kaza வில் போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்ட அம்மையார் இப்பொழுது தனி ஈழம் அமைப்போம் என்கிறாராம் அதை நம்பி கோவியார் அம்மையாருக்கு ஓட்டு போடுவாராம் என்ன கொடுமை சரவணன் இது

கோவி.கண்ணன் சொன்னது…

//அபி அப்பா said...
நான் இங்க வந்து பார்த்துவிட்டு பதில் சொல்ல வரும் போதும் என் உடன்பிறப்பு பதில் சொல்வது எனக்கு மனதுக்கு திருப்தியாக இருந்தது. இங்கே உக்கிரமாக அவர் ஒரு போர் புரிந்து கொண்டிருந்த காரணத்தால் தான் அவரால் கலைஞருக்கு நன்றி சொல்லி பதிவு போட நேரமில்லை என் உணந்து நான் பதிவு போட வேண்டியதாயிற்று!//

உண்ணாவிரதம் இருக்க சில ஆயிரம் உயிர்கள் போய் இருக்க வேண்டும் என்று நினைப்பதை நானும் பாராட்டுகிறேன். வாழ்க கருணா நிதி.

அப்படியே அரசு செலவில் உண்ணாவிரதம் வெற்றி வெற்றி வெற்றி என்று கொண்டாடும் விழா ஏற்பாடு செய்யச் சொல்லுங்கோ !

கோவி.கண்ணன் சொன்னது…

//Maithili said...
எனக்கு கலைஞரின் நாடகம் பிடிக்க வில்லை தான் ஆனால் அதற்காக ஜெயலலிதாவிற்கு ஒட்டு கேட்கும் கோவியாரின் செயல் வன்மையாக கண்டிக்க தக்கது 1 மாதத்திற்கு முன்னால் வரையிலும் kaza வில் போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்ட அம்மையார் இப்பொழுது தனி ஈழம் அமைப்போம் என்கிறாராம் அதை நம்பி கோவியார் அம்மையாருக்கு ஓட்டு போடுவாராம் என்ன கொடுமை சரவணன் இது

4:11 AM, April 29, 2009
//

கருணாநிதி விசுவாசம் திராவிடக் கொள்கைகளால், தமிழ் பற்றால் ஏற்பட்டது, தற்பொழுது இரண்டையுமே அங்கே காணும்,

உழல், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் கூடுதலாக வாரிசு அரசியல் என கருணாநிதி ஜெ வை விட எந்த விதத்தில் குறைந்தவர் என்று சொன்னால் நானும் ஜால்ரா தட்டுவேன்.

சேது திட்டத்தைவிட ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படனும், இராமேஷ்வரம் தமிழர்கள் காப்பாற்றப்படனும், தமிழ் ஈழம் கிடைக்கனும் என்பதைத்தான் விரும்புகிறேன்.

உடன்பிறப்பு சொன்னது…

தூங்குறவனை எழுப்பலாம் ஆனால் கோவியாரை எழுப்ப முடியாது.

அபி அப்பா உங்கள் நன்றிக்கு நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//உடன்பிறப்பு said...
தூங்குறவனை எழுப்பலாம் ஆனால் கோவியாரை எழுப்ப முடியாது.

அபி அப்பா உங்கள் நன்றிக்கு நன்றி
//

தூங்குவது போல் நடிப்பவனைக் கூட தண்ணீரைக் கொட்டினால் எழுப்பலாம்ம்.

செத்தவனையும், கோமாவில் இருப்பவனையும் எப்போதுமே எழுப்ப முடியாது என்பது... ஐயோ பாவம், தேர்தல் முடிந்ததும் தெரியும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்