பின்பற்றுபவர்கள்

14 ஏப்ரல், 2009

அலுத் அவுரு(த்)து !

ஏப்ரல் 14 ல் சிங்களப் புத்தாண்டும் கொண்டாடப் படுகிறதாம், சிங்கள ஆண்டு ஹிந்து நாட்காட்டி சக ஆண்டை ஒட்டியே அமைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது 12 ராசி மண்டல அளவிடுகளில் மீன ராசியில் இருந்து மேச ராசிக்கு இடம் பெயரும் காலம் சக ஆண்டு புத்தாண்டு எனச் சொல்லப்படுகிறது. அறுவடை காலம் முடிந்ததும் வருமாம். தமிழர் - சிங்களர் என்றாலும் கொண்டாடும் முறைகள் வேறென்றாலும் ஒரே நாளில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகையாக இருந்திருக்கிறது. தனிப்பட்ட சிங்களர்களுக்கு தமிழர்கள் மீதான பகை இருந்திருக்காது. ஒட்டுமொத்த இனமாகவும் பெரும்பாண்மை இனமாகவும் போனதால் இயல்பாகவே அடக்குமுறையை செலுத்த வேண்டும், அதன் மூலம் சீரழித்து, சீரழியவேண்டும் என்பது உலகெங்கிலும் பெரும்பாண்மையாக சமூகம் மாறும் பொழுது நடை பெரும் நடைமுறை போலும். இன அரசியலைத் தவிர்த்து...தள்ளி வைத்துவிட்டு...



சிங்களப் புத்தாண்டின் போது சூரியன் சரியான சம அளவில் மேலே இலங்கைக்கு இருக்குமாம். பொங்கலைப் போல் வீடுகளில் பழையதை பயனற்றத்தை விலக்கிவிட்டு, விளக்கேற்றி, அடுப்பு மூட்டி பால் பொங்கல் வைத்து கொண்டாடுவதுடன் பெண்கள் கும்மி அடித்து சிங்கள புத்தாண்டை கொண்டாடும் முறையாம். சிங்களர்கள் புத்தாண்டை Aluth Avurudhu (in Sinhala) என்கிறார்கள்

மற்றவைகளை இங்கே படிங்க

(யாரோ சிங்களர் தான் அந்த கட்டுரையை தொகுத்திருக்க வேண்டும், தலைப்பில் சிங்களர் - தமிழர் புத்தாண்டு என்று போட்டிருந்தாலும் அங்கு இலங்கையில் உள்ள இருந்த தமிழர்கள் எப்படி கொண்டாடி வந்தார்கள் என்பதை தெரிவிக்கவில்லை.)

ஏப்ரல் 13 - 15 ல் புத்தாண்டு கொண்டாடும் பிற மொழி / நாடுகள்

தாய்லாந்து :
The Thai New Year (Thai: สงกรานต์ Songkran, from Sanskrit sankrānti "astrological passage"; Chinese: 潑水節) is celebrated every year from April 13 to April 15. It coincides with the New Year of many calendars of South and Southeast Asia.

லாவோஸ் :
The Lao New Year called "Bpee Mai" or "Songkan" (Lao: ປີໃໝ່) is celebrated every year from April 13 to April 15.

மியான்மர்(பர்மா) : Thingyan (Burmese: ; MLCTS: sangkran, from Pali sankanta, which translates 'transit [of the Sun from Pisces to Aries ]'[1]) is the Burmese New Year Water Festival and usually falls around mid-April (the Burmese month of Tagu).

வங்காளர் : (Bengali: নববর্ষ Nôbobôrsho) or Pohela Boishakh (পহেলা বৈশাখ Pôhela Boishakh or পয়লা বৈশাখ Pôela Boishakh or Poila Boishakh) is the first day of the Bengali calendar, celebrated in both Bangladesh and West Bengal, and in Bengali communities in Assam and Tripura. Pohela Boishakh connects all ethnic Bengalis irrespective of religious and regional differences. It falls on April 14 or April 15 of the Gregorian calendar depending on the use of the new amended or the old Bengali calendar respectively.

மொத்தமாக வேறு யார் யாரெல்லாம் இதே நாளில் கொண்டாடுகிறார்கள் :

Songkran is also celebrated in Laos (called pi mai lao), Cambodia (called Chaul Chnam Thmey, Cambodian New Year), Myanmar (called Thingyan), and by the Dai people in Yunnan, China. The same day is celebrated in South Asian calendars as well: the Assamese (called Rongali Bihu), Bengali (called Pohela Boishakh), Oriya (called Maha Visuba Sangkranti), Malayali, Punjabi, Sinhalese, and Tamil New Years fall on the same dates, based on the astrological event of the sun beginning its northward journey. It occurs at the same time as that given by Bede for festivals of Eostre—and Easter weekend occasionally coincides with Songkran (most recently 1979, 1990, and 2001, but not again until 2085). [2] ... விக்கிப் பீடியா தகவல்

இந்த நாளை புத்தாண்டாகக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள் !

பின்குறிப்பு : இது வெறும் தகவலுக்காக எழுதப்பட்டது வேறெந்த அரசியலும் கிடையாது.

எழுதப்பட்ட வரலாற்றுத் தொடக்கம் முதலே தமிழர்களுக்கென தனித்தன்மையும், பண்டிகை விழக்கள் இருந்திருக்கின்றன. தீபாவளியை இந்துக்களுக்கான பொதுப் பண்டிகையா(க்)கியது போல், சித்திரை 1 ஐ தமிழ் புத்தாண்டு ஆக்கி இருக்க வேண்டும். ஏனெனில் தமிழர்கள் அறுவடை நாளான தைத் திங்களைத்தான் சிறப்பாக கொண்டாடியதாக சங்க இலக்கியங்கள் அனைத்தும் கூறுகின்றன.

39 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\இலங்கையில் உள்ள இருந்த தமிழர்கள் \\

வருத்தமாயிருக்கு


(வேறு ஒன்றும் செய்ய தெரியலை)

cheena (சீனா) சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

வேத்தியன் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

priyamudanprabu சொன்னது…

///
உள்ள இருந்த தமிழர்கள்
///

எங்கடா குத்து ஏதும் இல்லையேனு பார்த்தேன்

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\சிங்களப் புத்தாண்டின் போது சூரியன் சரியான சம அளவில் மேலே இலங்கைக்கு இருக்குமாம்.\\

இந்த அறிவியலை ஒரு கொண்டாட்டம் ஆக்கியிருக்கின்றனர் நம் முன்னோர்கள்.
அதைக் கண்டிப்பாக நாம் கொண்டாடுவோம். மகிழ்ச்சியோடு இருப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Subankan சொன்னது…

\\இலங்கையில் உள்ள இருந்த தமிழர்கள் \\

:(

அக்னி பார்வை சொன்னது…

என்ன விஷ்யம் தெரியம பதிவு போட்றீங்க தமிழ் புத்தாண்ட தான் தை 1 மாற்றியாச்சே

சி தயாளன் சொன்னது…

நாங்கள் வழமை போல் சுபநேரம் மருத்து நீர் வைத்து தலையில் குளித்து, கைவிசேடம் வாங்கி, கோயிலுக்கு போய், பொங்கல் சாப்பிட்டு, கூடவே கிராமிய விளையாட்டுகள் (பெயர் எல்லாம் மறந்து விட்டது, நினைவுக்கு வந்தா பிறகு எழுதுகிறேன்) விளையாடி....அவ்வளவு தான்

ராபான் எல்லாம் நாம் அடிப்பதில்லை...:-)

சி தயாளன் சொன்னது…

விளையாட்டுகள் : கிளித்தட்டு, கிரிக்கெட் ( தென்னம் மட்டை பேட்டில்)

Sanjai Gandhi சொன்னது…

அதானே.. தினமும் பதிவு போட உதவும் சிங்களனுக்கு வாழ்த்து சொல்லலைனா வரலாறு மன்னிக்குமா? :))

அப்பாவி முரு சொன்னது…

மன்னிக்கவே மன்னிக்காது., சிங்களவனையும், காலமான காங்கிரஸையும் வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது.

Sanjai Gandhi சொன்னது…

எலேய்.. யோக்கியன் வரார்.. சொம்ப எடுத்து வைங்களேய்.. :))

Sanjai Gandhi சொன்னது…

எங்க இருந்து தான் முளைக்கிறாங்களோ.. புதுசு புதுசா .. திணுசு திணுசா.. கொசுத் தொல்லை தாங்க முடியலைடா நாராயணா.. :(

அப்பாவி முரு சொன்னது…

பழுத்த அரசியல்வா(வியா)தி தானோ??

எவ்வ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்களே???

கால் நடுங்குணாலும், மூஞ்சியை வெறப்பா வச்சே காலத்தை ஓட்டுறாங்கயா...

வலசு - வேலணை சொன்னது…

\\இலங்கையில் உள்ள இருந்த தமிழர்கள் \\

போகிற போக்கைப் பார்த்தால் இன்னும் சிறிது காலத்தில் “இலங்கையில் இருந்ததாய்ச் சொல்லப்படும் தமிழர்கள்” என்றுகூட ஆகலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ 8:58 PM, April 14, 2009
அதானே.. தினமும் பதிவு போட உதவும் சிங்களனுக்கு வாழ்த்து சொல்லலைனா வரலாறு மன்னிக்குமா? :))
//

SanjaiGandhi யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ளே வைய்யின்னு பழமொழி சொல்லுவார்கள். காங்கிரஸ் அயோக்கியர்கள் என்று சொன்னால் ஐயோ...நானும் அதில் இருக்கேன் மரியாதையாக பேசுங்க என்கிறீர்கள்.

ஆனால் இங்கே சிங்களர் என்று ஒட்டுமொத்த சிங்களர்களையும் நீங்கள் குறிப்பிடுவது எதற்காக. நான் சிங்களர்கள் அனைவரையும், கன்னடர் அனைவரையும் தமிழர்களின் எதிரிகள் என்று கருதவில்லை. சிங்களனுக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தவறு ? காங்கிரஸ் காரனுக்கு ஓட்டுக் போடக் கூடாது என்பதில் என்ன தவறு ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

டொன்லீ கருத்துப் பகிர்வுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

ஜமால் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
//

எங்க புத்தாண்டு ஏற்கனவே முடிஞ்சிட்டு. வாழ்த்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வேத்தியன் said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
//

வேத்தியன் உங்களுக்கும் வாழ்த்துகள்

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவே தெய்வம் said...
\\சிங்களப் புத்தாண்டின் போது சூரியன் சரியான சம அளவில் மேலே இலங்கைக்கு இருக்குமாம்.\\

இந்த அறிவியலை ஒரு கொண்டாட்டம் ஆக்கியிருக்கின்றனர் நம் முன்னோர்கள்.
அதைக் கண்டிப்பாக நாம் கொண்டாடுவோம். மகிழ்ச்சியோடு இருப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//

நீங்க ரொம்ப வெள்ளந்தியாக இருக்கிங்க. வாழ்த்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரியமுடன் பிரபு said...
///
உள்ள இருந்த தமிழர்கள்
///

எங்கடா குத்து ஏதும் இல்லையேனு பார்த்தேன்
//

மெசேஜ் இல்லாமல் பதிவு எழுதுவது வீண்

கோவி.கண்ணன் சொன்னது…

//Subankan said...
\\இலங்கையில் உள்ள இருந்த தமிழர்கள் \\

:(
//

:( :(

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்னி பார்வை said...
என்ன விஷ்யம் தெரியம பதிவு போட்றீங்க தமிழ் புத்தாண்ட தான் தை 1 மாற்றியாச்சே
//

தெரியுமே, பின்குறிப்புக்கு கீழே எழுதி இருக்கேனே.

பீர் | Peer சொன்னது…

மேலதிக தகவல்,

அண்டை நாடு நேபாளமும் இன்று தான் புத்தாண்டு கொண்டாடுகிறது. தொடங்குவது 2066 ஆம் ஆண்டாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு 9:11 PM, April 14, 2009
மன்னிக்கவே மன்னிக்காது., சிங்களவனையும், காலமான காங்கிரஸையும் வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது.
//

ஆமாம், இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு சீக்கியர்கள் துயரம் தாங்கமல் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொன்னாலும் வியப்படைய ஒன்றும் இல்லை

அறிவிலி சொன்னது…

//இது வெறும் தகவலுக்காக எழுதப்பட்டது வேறெந்த அரசியலும் கிடையாது.//

சுவாரசியமான இடுகைக்கும், தகவல்களுக்கும் நன்றி.

பதி சொன்னது…

//ஆமாம், இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு சீக்கியர்கள் துயரம் தாங்கமல் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொன்னாலும் வியப்படைய ஒன்றும் இல்லை//

ஓ.. அப்ப அவங்க தற்கொலை பண்ணிக்கலையா?

பழுத்த மரம் (வெங்காயம்) வீழும் பொழுது அதிர்வுகள் ஏற்படத்தான் செய்யும்னு ஒரு தறுதலை அதுக்கு சப்பக் கட்டு கட்டுச்சுனு எங்கேயோ படிச்சேனே...

Unknown சொன்னது…

விரோதி வருடம் விரோதியற்ற வருடமாக இருக்க வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நல்ல பதிவு.


//கோவி.கண்ணன் 9:42 PM, April 14, 2009

//cheena (சீனா) said...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
//

எங்க புத்தாண்டு ஏற்கனவே முடிஞ்சிட்டு. வாழ்த்துக்கு நன்றி !//



சித்திரைத் திருநாள் வாழ்த்தா வச்சுக்குங்களேன்!
அல்லது
விடுமுறைத் திருநாள் வாழ்த்தா வச்சுக்குங்களேன்!
போனாபோவுது ஸ்டார் கப்க்கு பணம் கொடுக்குறியள்னா?
சன் டிவி பிறந்தநாள் பெருவிழா வாழ்த்தா வச்சுக்குங்களேன்!
புத்தாண்டு மாற்றம் முழு வெற்றி பெற்றிருக்கிறது!!! :PPPPPPPPPPP!!!

NO சொன்னது…

Anbana Thiru Govi Kannan Avargale ,

Parthen ungal netriya release. Something about it below dear friend!

Yesterday’s matinee show from you it seems was a documentary, unlike the deeply researched political / historical / religious / social / linguistic /anthropological and ultimately nonsensical cinematic productions that you dish out every day!

Annan avaragal has mentioned that this is not political, as if your fans were eagerly waiting to see your clear commentaries on contemporary politics! Also you have said that this post is about various New Year days’ and is only for information!

For this great information dear Govi avargal has done a simple cut and paste job from various internet resources!

While this crap is something that one could always expect from our dear Singai Annan, and karpanai mannan, what is truly astonishing is, one of the comments that had been posted!

For this mindless copy job, one Mr. Jyothi Bharathi has given a highly appreciative two words commendation - “Nalla Padhivu”!!!!
This is what this highly discerning blog reader has commented!

If one thought Dr. Govi Annan - PHD (in 20+ subjects), was extraordinary in his inanity, his audiences are two steps ahead!

Thiru Jyothi avargal, it looks like squiggles in more than a couple of blogs which he uses to demonstrate to the world his affliction to this disease of blogomania!

Also, its clear from his blogs that his forte is poetry. Let me come to it in a minute before which I want to talk about his primary occupation in his blog. His sole purpose of writing can be told in one sentence.

Diatribe at its worst!

He seems to love abuse and his tirade is so obtuse, one could only imagine what happens when he chooses to use his hands instead of his mouth. Of course, as they say, generally, foul mouths do not convert their aggression into action. But if I were Govi Annan, I would be a bit cautious. It’s a question of time before this obnoxious rancor raiser comes out of his cosy furniture and gets into live action! Remember only a few predicted Hitler’s megalomania just after he wrote Mein Kamf!

This being apart, nanbar Thiru Jyothi writes great poetry!!! Maybe somebody seems to have wrongly told him that breaking sentences into short meaningless lines and making them come one after another automatically makes those lifeless prose a poetry!

Any way, I close this by giving dear Thiru Jyothi back atleast something that he has given so far to the blog world!

Kavidhai Ezhudum Annan peyar Jyothi
Avar Ezhudhuvadhai paddithal ellarukkum varum Beeedhi **
Avar kavidhaiyil endrum kidyadhu nalla seidhi
Enendral Annannukku peddithiruppadhu Kavidhai kirukkum Vyadhi
Mothathill indha Anbar Govi Annannil Padhi!

**not Bedhi as Nanbar Thiru. TBCD gets this credit for inducing this action when one reads his blog!


Thanks

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

திரு நோ ஐயா,

இறுதியாக என்னைத் தொட்டிருக்கிறீர்கள். நன்றி!

தங்களுடைய ஆங்கில விமர்சனத்திற்கு தமிழில் பதில் தருகிறேன் ஐயா,
நான் எழுதியவற்றை விமர்சிப்பவர் பெரிய சிந்தனை சிற்பியாக இருக்க வேண்டும் என்று நான் என்றும் எதிர்பார்ப்பதில்லை.இருப்பினும் உங்களுக்கு இருக்கும் தகுதியை எண்ணி மெச்சுகிறேன்.


This being apart, nanbar Thiru Jyothi writes great poetry!!! Maybe somebody seems to have wrongly told him that breaking sentences into short meaningless lines and making them come one after another automatically makes those lifeless prose a poetry!

அர்த்தமில்லாத வரிகளைச் சுட்டி அதன் பொருள் கேட்டால் அதை எழுதியவன் என்ற வகையில் அதற்கு பதில் அளிக்கக் கடைப் பட்டிருக்கிறேன். கவிதைகள் தவிர விமர்சனம், துணுக்குகள், நகைச்சுவை போன்றவற்றைக் கூட படிக்க எளிதாக இருக்கும் என்று வரிகளை மடக்கிப் போட்டு எழுதியிருப்பேன். நீங்கள் எந்த விமர்சனத்தை, துணுக்கை, நகைச்சுவையை கவிதை என்று சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.
நிற்க.
கவிதை என்பதைப் பற்றிய உங்கள் புரிந்துணர்வை அறிய விழைகிறேன் திரு நோ ஐயா,
நிற்க.
அதற்கு முன் என்னுடைய புரிந்துணர்வைத் தருகிறேன்.
ஒரு கவிதை உங்களுக்குப் புரியவில்லை என்றால் அது உங்களுக்கான கவிதை அல்ல. வேறோருவருக்கானது. எல்லா கவிதைகளும் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு கவிஞனையோ அல்லது அந்த கவிதையை வாசிப்பவனையோ கட்டுப் படுத்துதல் பொருளின்றி போகும்.
மரபுக் கவிதைகள் மரபைப் பின்பற்றி வரவேண்டும் என்பது விதி.
புதுக்கவிதைக்கான இலக்கணத்தைக் கூறுங்கள் நான் தெரிந்து கொள்கிறேன்.

Any way, I close this by giving dear Thiru Jyothi back atleast something that he has given so far to the blog world!

நன்றி நோ ஐயா!

Kavidhai Ezhudum Annan peyar Jyothi
Avar Ezhudhuvadhai paddithal ellarukkum varum Beeedhi **

யாரும் பீதி அடையவேண்டாம். பிடித்தால் மட்டும் படிக்கலாம். நான் யாரையும் கட்டாயப் படுத்தியதில்லை. நான் கவிஞன் என்று ஒரு போதும் சொல்லிக் கொண்டதில்லை. பெரிதாக எழுதியதாக நினைப்பும் கிடையாது.

Avar kavidhaiyil endrum kidyadhu nalla seidhi

உங்களுக்குச் செய்தி இல்லையென்றால் யாருக்கும் செய்தியில்லை என்று நினைத்துக் கொள்வீர்கள். சிந்தனையை சிறகடிக்க விடுவது தான் கவிஞனின் வேலை. செய்தி சொல்வதற்கு நிறைய செய்தி இதழ்கள் இருக்கின்றன.


Enendral Annannukku peddithiruppadhu Kavidhai kirukkum Vyadhi

நன்றி! உண்மை!
மகாகவி பாரதியைக் கூட இப்படித்தான் சொன்னார்கள்.
இதைத் தான் எதிர்பார்த்தேன்.

Mothathill indha Anbar Govi Annannil Padhi!

எகனை மொகனையா?
விஜய டி.ராஜேந்தரோட தாக்கம் உங்களுக்கு அதிகமா இருக்கு ஐயா!

கோவி.கண்ணன் சொன்னது…

//No said...
Anbana Thiru Govi Kannan Avargale ,
//

மிஸ்டர் நோ இன்னும் கான்பிரன்ஸ் முடியலையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோதிபாரதி,

ஒரு குவிஸ்,

இரண்டு இடத்தில் கல் எறிந்தால் நமக்குத்தான் கெடுதல்னு சொல்லுவாங்க.

1. தேன்கூடு
2. ?

கோவி.கண்ணன் சொன்னது…

//Peer said...
மேலதிக தகவல்,

அண்டை நாடு நேபாளமும் இன்று தான் புத்தாண்டு கொண்டாடுகிறது. தொடங்குவது 2066 ஆம் ஆண்டாம்.
//
Peer தகவலுக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவிலி said...
//இது வெறும் தகவலுக்காக எழுதப்பட்டது வேறெந்த அரசியலும் கிடையாது.//

சுவாரசியமான இடுகைக்கும், தகவல்களுக்கும் நன்றி.
//

பாராட்டுக்கு நன்றி அறிவிலி சார்

கோவி.கண்ணன் சொன்னது…

//பதி said...
//ஆமாம், இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு சீக்கியர்கள் துயரம் தாங்கமல் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொன்னாலும் வியப்படைய ஒன்றும் இல்லை//

ஓ.. அப்ப அவங்க தற்கொலை பண்ணிக்கலையா?

பழுத்த மரம் (வெங்காயம்) வீழும் பொழுது அதிர்வுகள் ஏற்படத்தான் செய்யும்னு ஒரு தறுதலை அதுக்கு சப்பக் கட்டு கட்டுச்சுனு எங்கேயோ படிச்சேனே...
//

தொண்டர்கள் தலைவர்களைப் பின்பற்றி சொன்னதைக் காற்றில் விடுவதில் தவறென்ன ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Mãstän said...
விரோதி வருடம் விரோதியற்ற வருடமாக இருக்க வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்
//

விரோதி ஆண்டில் விரோதிகளையும் வாழ்த்தலாம்

Sudhar சொன்னது…

Hi

This 12 RASI, is the exact way of KERALITE celebrating VISHU. (12 RASI is equal to 12 malayalam month ) So they are following similar (indian hindu) style.

Regards

Sudharsan

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்