பின்பற்றுபவர்கள்

12 ஏப்ரல், 2009

தமிழ் 'விரோதி' குறித்து ...

இந்த வேளையில் இந்தத் தலைப்பு ஈழத்துடன் தொடர்பு படித்தி கலைஞரையோ, காங்கிரசாரையோ நினைக்க வைக்கலாம், ஆனால் அது பற்றியல்ல ( 'அது பற்றி' என்பதை பொதுவாக விஷயம், விசயம், விடயம் என்று எழுதுவர், விஷயம் என்பது வடச் சொல் ஆகையால் தமிழில் அதை விடயம். விசயம் ஆக்கிப் பயன்படுத்துவர், ஒன்றைப் பற்றிப் பேசுவது விசயம் என்று பொருள் படும் ஆதலால், அவற்றை முறையாக 'பற்றியம்' என்று சொல்வாதே பொருத்தமானது, தூய தமிழ்ச் சொல்லாகும் என்பது பாவணர் வழக்கு, இங்கு பற்றியம் 'விஷ'யம் பற்றியதல்ல, சொற் புழக்கத்திற்காக 'பற்றியம்' பற்றினேன்)

தமிழாண்டுகள் என நம்பவைக்கப் பட்டவற்றில் சாலிவாகன அல்லது சக ஆண்டாக அறுபது ஆண்டுகள் சொல்லப்படுகிறது, அவற்றில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை என்பது பழைய தகவல், ஆனால் தமிழரைத் தவிர வேறொ எவரும் அந்த அறுபது ஆண்டு முறைகளைப் பயன்படுத்துவதில்லை என்பது தெரியுமா ? இந்த ஆண்டு 'விரோதி' ஆண்டாமே ? ஒரு தெலுங்கரிடமோ, கன்னடரிடமோ கேட்டால், எழுத்தாளர் இராஜேந்திர குமாரின் 'ங்கே' என விழிப்பார்கள். பாம்பு பஞ்சாங்கங்கள் பயன்படுத்தி சோதிடம் சொல்லுவது / கேட்பது (இன்னும்) தமிழர்களிடத்தே தான் இருக்கிறது என்பதை உணர்த்துவதாக தமிழ் ஆண்டு என்ற பெயரில் 60 ஆண்டுகளில் வடமொழிப் பெயர்கள் புழங்கி வருகின்றன. அறுபது ஆண்டுகள் எப்படி தோன்றின என்கிற 'ஆய்' கதைகள் பலரும் அறிந்திருப்பதால் சொல்லத் தேவை இல்லை, அழுக்கில் தோன்றியதாக சொல்லப்படும் பிள்ளையார் கதை போன்றதே. இதற்கெல்லாம் யாரு கவலைப்படப் போகிறார்கள் ? பிள்ளையார் அழுக்கில் தோன்றி இருந்தாலும் பிள்ளையாருக்கு வைக்கப்படும் கொழுக்கட்டை சுவையானது தான், எனவே கவலை இல்லைதான்.

இதோ இங்கே தினமலரின் நாற்றத்தில் ( மணம் என்ற பொருளும் உண்டு) நான் கண்டது, தமிழ் பற்றில் பணம் செலவு செய்து தமிழ் நாட்காட்டி அச்சடித்தவர் ஓட்டாண்டி யானாராம். இதை தனக்கே உரிய கேலியும், கிண்டலும் மற்றும் தமிழ் வெறுப்பு மூலம் தினமலர் சொல்ல வருவது, தமிழ் பற்று என்ற பெயரில் ஒருவர் நட்டப்பட்டுவிட்டார், மற்றவர்களும் தமிழ் பற்றி அது இது என்றெல்லாம் இருக்காதிர்கள் என்பதை மறைமுகமாக அறிவுறுத்துகிறது. தினமலர் மற்றும் ஏனைய பார்பன ஊடகங்களைப் பார்த்து நாம் பரிதாபப் படாமல் இருக்கவே முடியவில்லை. பெரியாரின் சீர்திருத்த எழுத்துகளை எம்ஜிஆர் அரசு, அரசு ஆணையாக வெளியிட்டப் பிறகும் கூட அவற்றை ஏற்காமல், கொம்பு வைத்த 'லை, ளை' யும், பழைய சுழித்த றா, னா போன்றவற்றையே பயன்படுத்தி வந்தனர். காரணம் தமிழுக்கு சீர்த்திருத்தம் என்றால் அதை பார்பன ஊடகங்கள் தான் முடிவு செய்ய முடியும், இராமசாமி நாயகர் அல்ல என்பது இவர்களின் எண்ணம். ஆனால் அப்படி அவர்களால் தொடர்ந்து இருக்க முடியவில்லை. பெரியாரின் சீர்த்திருத்த எழுத்துக்களுக்கு விரைவாகவே மாறினார்கள். அதற்கு முன்பு இவர்களின் வாதம் வழி வழி வந்த தமிழ் எழுத்தை மாற்றக் கூடாது என்னும் வரட்டு வாதமே. மாற்றியதும் தமிழ் தட்டச்சுப் பொறியில் பல எழுத்துக்கள் குறைக்கப்பட்டு விரைவாக தட்டச்சுவதற்கு பெரும் பயனாக அமைந்தது. மற்ற இந்திய மொழிக்காரர்கள் இன்னும் கூட்டெழுத்துக்களை வைத்திருக்கிறார்கள். ஏனைய இந்திய மொழிகளைக் காட்டிலும் தமிழ் மொழி அனைத்து இலக்கிய வளங்களையும் மிகுதியாகவே பெற்றுள்ளது என்பதற்கு எண்ணிக்கையில் மிகுதியாக இருக்கும் இணைய தளங்களே சான்று.

எந்த ஒரு சீர்திருத்தத்தின் போதும் நலிவடைகிறோம் (பாதிப்பு) என்று நம்புபவர்கள் அல்லது அவ்வாறு எண்ணிக் கொள்வோர் எதிர்ப்பு தெரிவிப்பது இயல்புதான். அவர்களின் கருத்துக்களை எண்ணங்களை மதிக்கலாம், அதற்காக தமிழருக்கும், தமிழுக்கும் நன்மை அளிப்பவற்றை நிறுத்தி வைக்கத் தேவையில்லை. அதே போல் இவையெல்லாம் அவர்களுக்கு புரியாமல் இல்லை, ஆனாலும் முத்தாய்ப்பாக அவர்கள் கூறுவது, இந்த சீர்த்திருத்ததின் மூலம் கருணாநிதி வரலாற்றில் இடம் பெறத் துடிக்கிறார்' என்கிற குற்றச் சாட்டு. இந்த குற்றச் சாட்டில் இருக்கும் ஒப்புதல் என்ன என்றால் 'தமிழ் சீர்த்திருத்தம் அடைவதை ஒப்புக் கொள்கிறோம், ஆனால் அதன் பெருமை கருணாநிதிக்குச் செல்வதைத் தான் எங்களால் ஏற்க முடியவில்லை' என்பவை தான்.

இப்போதும் கூட ஆவணி அவிட்டம் போன்றவை நாள்காட்டியில் இருந்தாலும், அந்த நாளில் பூணூல் அணிந்து கொள்பவர்கள், அதனைக் கொண்டாடுபவர்கள் ஆசாரி, பத்தர் மற்றும் பார்பனர் மட்டுமே அனைவரும் அல்ல. அது போல் சித்திரையை முதல் தேதியை விருப்பப் பட்டவர்கள் கொண்டாட யார் தடையாக இருக்கப் போகிறார்கள் ? பிறகு எதற்கு தேவையற்ற ஓலம் ? அரசு அறிவிப்பு தமிழ் புத்தாண்டின் தேதி மாற்றம் குறித்து மட்டுமே. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அறியப்படதா 'அட்சய திரிதியை' என்ற நுடபமாக நுழைக்கப்பட்ட நகை நம்பிக்கைளை எல்லாம், பழங்காலத்தை ஒப்பிட்டு 'அட்சய திரிதியை போன்ற பரபரப்பு' நம்மிடையே தேவையே இல்லாத பரபரப்பு, இவற்றை தமிழர்கள் தவிர்க்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் என்று சொல்லத் துணிவு கொள்ளாதோர், தமிழ் புத்தாண்டின் தேதி குறித்து எதிர்ப்பு தெரிவிப்பது வெறும் வீம்பு அரசியல் மட்டும்தான்.

19 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

மாற்றங்கள் எப்பொழுதுமே வரவேற்கப்படும். சில சமயங்களில் காலத்தின் கட்டாயத்தால் மாறும். அவற்றை ஏற்றுகொள்வதால் பாதிப்பு இல்லை என்றால் நல்லதுதான்..

பழமைபேசி சொன்னது…

தமிழில் எழுதிபேசி காசாக்கிக் கொள்,
தமிழையும் தமிழனையும் இழித்துப்பேசி!
இது அவர்களது அறம். (நன்றி: சிதறல்கள்)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

'ஙே'

NO சொன்னது…

Dear Kovi Kannan,

Would you believe if I tell you now that I was expecting you to publish me on the front page of your rag of a blog!

Dear Friend, one hates the most a person that concludes one to be an idiot!

That too when self constructed hallows gets punctured, like what I did to you dear Kovi for the past few days, the man starts believing that he is victimized and forgets all his inadequacies!

Like a politician, who thinks his problems are the problems of a society rather than the other way round, your effort and speed to pull others into the conflict by claiming how this “No” man abuses other bloggers, puts you on the same pedestal as of those politicians whom you write about in your intellectually clogged blog!

By doing this, Mr. Kovi, you are trying to dilute your own internal turmoil by building a myth of how this idiot Mr. No, is not only bad to me but also towards others!

By doing this you are hoping, the core subject, which is the utter shallowness and incomplete knowledge level of yours, which makes you completely unfit to write about most of the things that you keep writing, to disappear.

Dear Kovi, Madame JJ and Monsieur KK will need to take a lesson from you as to how to nationalize your personal problem!

You will not accept this, but let me please tell you that you would have come into your own blog atleast twenty times to see if I have responded in any way for your headline post.

What ever you try to do dear Kovi, your writings are nothing but an illegitimate child of half baked knowledge and a lust for unjustified popularity, however miniscule it maybe!

I gave this definition about Religion’s when someone asked me what actually it was!
I said that it’s the revenge of Man on God! When he persisted and asked what then was God, I said he’s the revenge of religion on Man!

Similarly dear Kovi, you are a product of half baked people’s revenge on web and your writings are the web’s revenge on Tamil pesum Nalulagam!

Keep it up buddy and the day you decide to close down the scrap yard blog of yours, I can say that the grandiose delusion will not be problem for you to worry!

Thanks

Bye

As a foot note, there were a few others that I took on, namely Thiru Tharumi, Thiru Manikandan, Thiru TBCD and Thiru Viknesh. I think I missed Mr. Kudukuduppai and especially Thiru Bruno, whom I think would be an excellent material to dissect as he is the same league as Thiru TBCD! I thank you friends a lot since you confirmed my conclusion that even the worst of the fool, will somehow find companionship!

Unknown சொன்னது…

நாங்கள் 1980ல் மேனிலைப் பள்ளியிலேயே சீர்திருத்த தமிழுக்கு மாறி விட்டோம்.
பெரியார் நாயக்கரா(யிருந்து) நாயகரா(னார்). காலம் அனைவரையும் ஏற்கச் செய்யும். :)

priyamudanprabu சொன்னது…

///
'ஆய்' கதைகள்
///


உவ்வே......

மாண்புமிகு பொதுஜனம் சொன்னது…

.......//இங்கு பற்றியம் 'விஷ'யம் பற்றியதல்ல, சொற் புழக்கத்திற்காக 'பற்றியம்' பற்றினேன்)//..

பத்த வச்சிட்டீங்களே!

சி தயாளன் சொன்னது…

ங்

ராம்.CM சொன்னது…

அய்யய்யோ....

Krish சொன்னது…

தமிழ் புத்தாண்டு தை மாதமே என்பதற்கு ஆதரமாக தரவுகள் இல்லை. ஆனால் சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப் பட்டதற்கு சில சான்றுகள் உள்ளன.
இந்த கட்டுரையை படியுங்கள்:

http://sishri.org/puthandu.html

புருனோ Bruno சொன்னது…

கோவியாரே, நீங்கள் இதை ஏற்கனவே படித்திருந்தாலும், மற்றவர்களுக்கா மீண்டும் இங்கு அதே மறுமொழி !!

சித்திரை முதல் நாள் - கொல்லம் ஆண்டின் புத்தாண்டு

தை முதல் நான் - திருவள்ளுவர் ஆண்டின் புத்தாண்டு

தமிழக அரசின் அதிகார பூர்வ நாட்காட்டி திருவள்ளுவர் ஆண்டு என்பதால் தை முதல் 1 தமிழ் புத்தாண்டு

அவ்வளவு தான்

இது போல் சனவரி முதல் நாள் - கிரேகிரியன் நாட்காட்டியின் புத்தாண்டு. அதை ஆங்கில புத்தாண்டு என்று கூறுவது நாம் தான்

புருனோ Bruno சொன்னது…

சித்திரை 1 - கொல்லம் புத்தாண்டு
தை 1 - திருவள்ளுவர் புத்தாண்டு
ஜனவரி 1 - கிரேகிரியன் புத்தாண்டு

இதில் கிரேகிரியன் புத்தாண்டை ஆங்கில புத்தாண்டு என்று அழைப்பது போல் எந்த புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என்று அழைக்க வேண்டும்

--

தமிழக அரசு ஆணை கொல்லம் புத்தாண்டின் முதல் நாளை மாற்ற வில்லை

தமிழக அரசு ஆணை திருவள்ளுவர் புத்தாண்டின் முதல் நாளை மாற்ற வில்லை

புருனோ Bruno சொன்னது…

சக ஆண்டு (இந்தியாவின் அதிகார பூர்வ நாள்காட்டியின்) முதல் நாள் - அதாவது இந்திய புத்தாண்டு என்று தெரியுமா

இந்திய அரசு கூட கொல்லம் ஆண்டை கடைபிடிக்க வில்லை

கொல்லம் ஆண்டை தவிர வேறு ஒரு ஆண்டுமுறையை (சக வருடம்) கடைபிடிக்கும் உரிமை இந்திய நடுவண் அரசிற்கு உள்ளது

கொல்லம் ஆண்டை தவிர வேறு ஒரு ஆண்டுமுறையை கடைபிடிக்கும் உரிமை ஆந்திர மாநில அரசிற்கு உள்ளது

கொல்லம் ஆண்டை தவிர வேறு ஒரு ஆண்டுமுறையை (திருவள்ளுவர் ஆண்டு) கடைபிடிக்கும் உரிமை தமிழக அரசிற்கு மட்டும் இல்லையா

புருனோ Bruno சொன்னது…

சக ஆண்டு (இந்தியாவின் அதிகார பூர்வ நாள்காட்டியின்) முதல் நாள் - அதாவது இந்திய புத்தாண்டு என்று தெரியுமா

மார்ச் 22 (லீப் வருடங்களில் மார்ச் 21) !!! ஏப்ரல் 15 அல்ல !! (1956 முதல் இது தான் இந்திய புத்தாண்டு) இதை அறிமுகப்படுத்தப்பட்டது நேருவின் ஆட்சியில்.

புருனோ Bruno சொன்னது…

தமிழர்களுக்கு எப்படி திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாள் புத்தாண்டோ அதே போல் தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டும் உகாதிதான். அது ஏப்ரல் 14 அல்ல (உகாதி ஏப்ரல் 3,4,5,6,7 வரலாம்)

புருனோ Bruno சொன்னது…

இது தவிர ”இந்து புத்தாண்டு” என்று பாசகவினரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அது கூட ஏப்ரல் 14 கிடையாது.

http://www.rediff.com/news/mar/31cong.htm
Hindu new year’s day which is being observed on April 8 and 9.

http://www.rediff.com/news/apr/09flip.htm
The Hindu New Year’s Day fell on April 8 this year. The Bharatiya Janata Party celebrated appropriately.

புருனோ Bruno சொன்னது…

சித்திரை 1 - கொல்லம் புத்தாண்டு
தை 1 - திருவள்ளுவர் புத்தாண்டு
ஜனவரி 1 - கிரேகிரியன் புத்தாண்டு

இதில் கிரேகிரியன் புத்தாண்டை ஆங்கில புத்தாண்டு என்று அழைப்பது போல் எந்த புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என்று அழைக்க வேண்டும் ???

---

பின் குறிப்பு

அலோபதி ஆங்கில மருத்துவம் - சித்தா தமிழ் மருத்துவம் ஆனது போல்

கிரேரியன் ஆண்டு ஆங்கில ஆண்டாக மாறியபோது தவறுதலாகவே கொல்லம் ஆண்டை தமிழ் புத்தாண்டாக பழக்க வழக்கத்தில் மாற்றிவிட்டார்கள்

தற்பொழுது திருவள்ளுவர் ஆண்டை தமிழ் ஆண்டாக கருத கூறுகிறார்கள். அவ்வளவு தான்

புருனோ Bruno சொன்னது…

ஆக பாரதிய ஜனதா கூட ஏப்ரல் 14லை கொண்டாத போது, ஏதோ ஏப்ரல் 14ஐ தமிழ் புத்தாண்டு என்று கூறாவிட்டால் தெய்வ குற்றம் வந்து விடும் என்று சில “அறிஞர்கள்” ஊடகங்களில் பரப்புவது கண்டு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை

இந்தியாவிற்கு தனி புத்தாண்டு இருக்கிறது
இந்து புத்தாண்டு என்று தனியாக இருக்கிறது
தெலுங்கு புத்தாண்டு என்று தனியாக இருக்கிறது

இவ்வளவும் இருக்கும் போது தமிழர்கள் திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடினால் அது தவறு கொல்லம் ஆண்டு தான் முக்கியம் என்று கூறுகிறார்களே, ஏன் ????

சத்தியமாக புரியவில்லை.

Rajaraman சொன்னது…

தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்