பின்பற்றுபவர்கள்

2 ஏப்ரல், 2009

ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட் வைகோ ஆவேசம் !

கூட்டணி என்பதே மக்கள் ஆட்சித் தத்துவத்தின் மாபெரும் ஏமாற்று வேலை. மூன்று வேட்பாளர்கள் சம பலத்துடன் நிற்கும் தொகுதியில் முறையே 33, 33, 34 விழுக்காடுகள் பெரும் போது 34 விழுக்காடு பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்கப்படுகிறார். அதாவது 66 விழுக்காட்டினர் வாக்களிக்க விரும்பாத ஒருவர் அந்த தொகுதியின் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதை அரசியல் கட்சிகள் வெற்றிகரமாக முறியடிப்பது தான் கூட்டணியாக வேட்பாளரை நிறுத்துவது என்கிற முடிவுகள். மூன்று கட்சிகள் நிற்கும் இடத்தில் இருகட்சிகள் கூட்டணியாக இணைந்தால் இருகட்சியின் ஆதரளவாளர்களின் 66 விழுக்காடு பெற்று கூட்டணி உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேர்தல் முறைகளும் உறுப்பினர் வெற்றி பெறும் விதம் ஆகியவை குளறுபடிகளுடன் தான் நடக்கிறது.

இவர் பிரதமர் என்று சுட்டிக்காட்டி கூட்டணிகள் வாக்கு கேட்கும், வாக்குகளைப் பெற்றவுடன் குதிரை பேரத்தில் கூட்டணிகள் பிரியும், மக்கள் எதை நினைத்து வாக்களித்தார்களோ அவர்களுக்கு பட்டையும் நாமமும், குல்லாவும் தான். இதையெல்லாம் பார்க்கும் போது மன்னர் ஆட்சியும் சர்வாதிகார ஆட்சியும் எவ்வளவோ பரவாயில்லை என்ற மனநிலைக்கு நாளடைவில் மக்கள் வந்துவிடுவார்கள் போலும். எந்த சித்தாந்தமும் காலவெள்ளத்தில் நீர்த்துப் போகக் கூடியது என்பது மக்கள் ஆட்சித் தத்துவத்திற்கும் பொருந்தும்.

மக்கள் சேவை என்ற பெயரில் அரசியலில் நுழைபவர்கள் நாளடைவில் பதவி, அதற்குரிய மரியாதை, அதில் இருக்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்றம், ஊழல் செய்வது, குற்றங்களில் இருந்து தப்புதல், இனி வரும் அவர்களுடைய சந்ததிகளுக்கு வானளாவிய சொத்துக்களை சேர்த்து வைப்பதுடன், கட்சியின் வரும்கால தர்மகர்த்தாக்களாக அவர்களையே வைத்துவிடுவார்கள், முட்டாள் தொண்டனும், குடும்ப அரசியலுக்கு ஊது குழலாகவே இருப்பான். ஆதாயம் எதிர்ப்பார்க்காத தொண்டர்களே அரிது, ஆதாயம் எதிர்பார்க்காமல் தொண்டர்களாக இருப்பவர்கள் தலைமை தவறு செய்யும் போது தட்டிக் கேட்பார்கள், அப்படி செய்யாமல் தன்னை எந்தக் கட்சிக்கும் தொண்டன் என்று கூறிக் கொள்பவர்களை நன்றியுள்ள நாலுகால் விலங்கு என்று சொல்லலாம். ஏனெனில் இவர்கள் ஆதரவின்றி எந்த தலைவனும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது. நாயைப் பொருத்தவரையில் தன் எஜமானன் திருடனாக, கொலைகாரனாக இருந்தாலும் விசுவாசத்துடன் தான் இருக்கும்.

*****


இடுகை தலைப்பை ஒட்டி வரவில்லையா ? பேரம் படியாமல் தானே கூட்டணி மாறுகிறார்கள், இதில் பரிதாபப் பட என்ன இருக்கிறது. வயிற்றெரிச்சலில், ஆதங்கத்தில் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் சாடுவர், அதுவும் ஒரே ஒரு தேர்தல் கால அளவுக்கு மட்டுமே, அடுத்த தேர்தலில் புகழ்மாலையுடன், பொக்கே புகைப்பட போஸ் கொடுப்பார்கள். இன்றோ, நாளையோ, மறுநாளோ.....வைகோ சொல்லப் போகும் வாக்கியங்கள் அவை என்பதைத் தவிற வேறு அதில் ஆராய ஒன்றுமே இல்லை. :)

31 கருத்துகள்:

பாண்டித்துரை சொன்னது…

ஏஞ்சாமி இப்படி!

ரொம்பதான் பாவம்ல

அப்பாவி முரு சொன்னது…

//மூன்று வேட்பாளர்கள் சம பலத்துடன் நிற்கும் தொகுதியில் முறையே 33, 33, 34 விழுக்காடுகள் பெரும் போது 34 விழுக்காடு பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்கப்படுகிறார். அதாவது 66 விழுக்காட்டினர் வாக்களிக்க விரும்பாத ஒருவர் அந்த தொகுதியின் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்//

வாக்கு என்பது தனக்கு பிடித்தவரை தேர்ந்தெடுப்பதற்க்கு மட்டுமே.

அதே வாக்காளரை பிடித்தவர்களுக்கு வாக்கும், பிடிக்காதவர்களை எல்லாம் பரி(Buri)பண்ணச்சொன்னால், அப்போது தான் எத்தனைபேர் காணாமல் போகிறார்கள் என்பது தெரியும்...

மீனாட்சி சுந்தரம் சொன்னது…

///முட்டாள் தொண்டனும், குடும்ப அரசியலுக்கு ஊது குழலாகவே இருப்பான்.///


யாரையோ பொடி வைத்து திட்டுவது போல உள்ளதே....கடும் கண்டனம்.!!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பின்னால் வருவதை அல்லது திரும்பத் திரும்ப வருவதை முன்னரே கணித்துச் சொல்லும் சோசியர் கோவியாருக்கு ஒரு பூந்தொட்டி! (:<>:)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:-))))

Unknown சொன்னது…

படத்துக்கு மேலே உள்ளவை அனைத்தும் என் மனத்திலுள்ளவையாகவே இருக்கிறது. ஒரு வேளை பலருடைய மனமும் இப்படித்தான் இப்போது சிந்திக்கிறதோ.

தற்போதைக்கு அம்மாவை விட்டால் அவருக்கு வேறு நாதியில்லை. இனி தனியே நின்று தலை நிமிர என்பது வைகோவைப் பொறுத்தவரை இயலாத காரியம். தாவிக் கொண்டே இருப்பவர்களுக்கு சரியன பாடம். மருத்துவர் ஐயா ஆப்பு வாங்கும் காலமும் அருகில்தான்.

நட்புடன் ஜமால் சொன்னது…

ஆமாங்க!

ஓநாய் ரொம்ப கெட்டது

சொன்னிச்சாம்

நரி (பழம் புளித்ததால்)

வேடிக்கை மனிதன் சொன்னது…

இன்றைய சூழ்நிலையில் வைகோவிற்கு அம்மாவை விட்டால் வேறு கதியில்லை அதனால் உங்கள் ஆருடம் பொய்யாகலாம்

எட்வின் சொன்னது…

//அதாவது 66 விழுக்காட்டினர் வாக்களிக்க விரும்பாத ஒருவர் அந்த தொகுதியின் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்//

பாயின்ட்ட பிடிச்சிட்டீங்களே!
என்ன அநியாயம் அய்யா இது.எல்லாம் பதவி மோகம் :(

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

நச்.. எல்லாமே இங்க வியாபாரம் தானே..

நையாண்டி நைனா சொன்னது…

இப்படி சொல்ல வில்லை. ஆனா நான் வேற மாதிரி போட்டுட்டேன் அன்னிக்கே.
ஆனா நான் வேற மாதிரி போட்டுட்டேன் அன்னிக்கே.

Vishnu - விஷ்ணு சொன்னது…

// கூட்டணி என்பதே மக்கள் ஆட்சித் தத்துவத்தின் மாபெரும் ஏமாற்று வேலை //

மிக சரியாக சொன்னீர்கள்.

மாபெரும் பணபுழக்கம் உள்ள ஒரு தொழில் தானே நவீன காலத்து அரசியல்.அரசை இதமாக நடத்தி செல்லும் பணியைவுடைய அரசியலை அரசை இழிவாக மாற்ற செய்த பெருமை தற்போது உள்ள அரசியல்வாதிகளையே சாறும். வெகுஜன மக்களும் அரசில் ஒரு அங்கம் என்பதை மறக்க செய்த மாபெரும் பணியின் பெருமைக்குரியவர்கள் நம்முடைய அரசியல்வாதிகள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//மக்கள் சேவை என்ற பெயரில் அரசியலில் நுழைபவர்கள் நாளடைவில் பதவி, அதற்குரிய மரியாதை, அதில் இருக்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்றம், ஊழல் செய்வது, குற்றங்களில் இருந்து தப்புதல், இனி வரும் அவர்களுடைய சந்ததிகளுக்கு வானளாவிய சொத்துக்களை சேர்த்து வைப்பதுடன், கட்சியின் வரும்கால தர்மகர்த்தாக்களாக அவர்களையே வைத்துவிடுவார்கள், முட்டாள் தொண்டனும், குடும்ப அரசியலுக்கு ஊது குழலாகவே இருப்பான். ஆதாயம் எதிர்ப்பார்க்காத தொண்டர்களே அரிது, ஆதாயம் எதிர்பார்க்காமல் தொண்டர்களாக இருப்பவர்கள் தலைமை தவறு செய்யும் போது தட்டிக் கேட்பார்கள், அப்படி செய்யாமல் தன்னை எந்தக் கட்சிக்கும் தொண்டன் என்று கூறிக் கொள்பவர்களை நன்றியுள்ள நாலுகால் விலங்கு என்று சொல்லலாம். ஏனெனில் இவர்கள் ஆதரவின்றி எந்த தலைவனும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது. நாயைப் பொருத்தவரையில் தன் எஜமானன் திருடனாக, கொலைகாரனாக இருந்தாலும் விசுவாசத்துடன் தான் இருக்கும்.//

அவர் தன் "பென்னாம்" பெரிய குடும்பத்துக்கு; நல்ல குடும்பத் தலைவராக தன்னாலானதை இந்த தள்ளாத வயதிலும் சக்கரநாற்காலியில் இருந்தும் செய்கிறார்.
இப்படி அவரை வறுக்கக் கூடாது.

குடந்தை அன்புமணி சொன்னது…

அரசியலில் இதெல்லாம் சகஜம்தான், மக்கள் ஏமாறும்வரை!

www.mdmkonline.com சொன்னது…

மதிமுக வையும் வைகோ அவர்களையும் பலவாறு விமர்சித்து செய்திகள் வருகிறதே ?

அவர்களுக்கெல்லாம் கீழே உள்ளதுதான் பதில்.

வைகோ தன் வாரிசுகளுக்காக கட்சியை நடத்தவில்லை.
வைகோ ,தனது சொந்தங்களுக்கும் பிள்ளய்களுக்கு மட்டுமே சிந்தனை அறிவு உள்ளது மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று சொல்லவில்லை.
வைகோ ,அரசியல் வியாபாரம் செய்து கோடிகளை குவிக்கவில்லை. கிடைத்த சந்தர்ப்பதை எல்லாம் பயப்படுத்தி மந்திரி ஆகத்தான் வேண்டும் என்று நினைக்கவில்லை.
வைகோ ,தனது சொந்த கட்சி கீழ்மட்டத் தலைவனையே ஆள் வைத்து கொள்ளவில்லை.
வைகோ ,பேருந்தையோ அல்லது பத்திரிகை அலுவலகத்தையோ எரித்து மூன்று பேரை கொன்றது போல் தனது தொண்டர்களை தயார்படுத்தவில்லை.
தனிமனித ஒழுக்கத்தை எப்பொழுதும் மீறியதில்லை.
வைகோ ,ஈழத்தமிழன் செத்தாலும் பரவாயில்லை எனக்கு பதவிதான் முக்கியம் என்று அவனை கொள்ள கூட்டு சதி செய்யவில்லை.
வைகோ, தன் பிள்ளையின் அமைச்சர் பதிவிக்காக ஈழத்தமிழன் செத்தாலும் பரவாயில்லை என்று கொள்கை வைக்கவில்லை.vaiko

ஈழத்தமிழனுக்காக உண்ணாவிரதம் இருந்து , அதே ஈழதமிலனை போர் கொண்டு அளிக்கும் கட்சியோடும் அதற்க்கு துணை நின்ற கட்சியோடும் கூட்டு சேரவில்லை.

www.mdmkonline.com


நன்றி . தோழர் நாகராஜ் , காஞ்சிபுரம்

Jackiesekar சொன்னது…

வைகோ சொல்லப் போகும் வாக்கியங்கள் அவை என்பதைத் தவிற வேறு அதில் ஆராய ஒன்றுமே இல்லை. :)//

சரியாக சொன்னீர்கள் கோவி

கோவி.கண்ணன் சொன்னது…

தோழர் நாகராஜ், வைகோ அவர்களின் நடவடிக்கை என பொடா வாசத்திற்குப் பிறகு ஜெவுடன் இணைந்ததை மானமுள்ள எந்த தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டான், அதுவரை வைகோ மீது வைத்திருந்த மதிப்பும், நம்பிக்கையும் சரிந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும், நேற்று கட்சித் தொடங்கிய விஜயகாந்திற்கும் இருக்கும் தனித்து நிற்கும் துணிவு கூட வைகோவிற்கு இல்லை. ஈழ ஆதரவு என்ற கொள்கை மட்டும் இல்லை என்றால் தமிழக அரசியலுக்கு வைகோ தேவையற்ற ஒருவர் என்ற அளவில் தான் சொல்லுவார்கள், இன்று கட்சியில் இருந்து பிரிந்த செஞ்சி இராமகிருஷ்ணன் உட்பட்ட தலைவர்களுக்கு வைகோ பற்றி தெரியாத ஒன்றா உங்களுக்கும் பிறருக்கும் தெரியப் போகிறது ?

அவர்கள் எலும்புத் துண்டுக்கு ஓடியவர்கள் என்று அவதூறு சொல்லலாம், ஆனால் அதே அவதூறில் நாங்களும் எலும்புத் துண்டை இது நாள் வரை போட்டு வந்தோம் என்று மறைமுக ஒப்புதலும் உண்டு.

கருணாநிதியிடம் சேர்ந்தால் காணாமல் போய் இருப்போம் என்று சொல்லுவீர்கள், காணாமல் போனாலும் ஆடையுடன் தான் காணாமல் போய் இருப்பீர்கள், ஆனால் தற்போது காணாமல் போகாமல் இருந்தாலும் ஆடை இருக்கிறதா என்பதை சொல்லுங்கள். மற்ற படி மேலே நீங்கள் குறிப்பிட்ட இல்லைகள் எல்லாம் அதற்கு பிறகே.

நான் எந்த கட்சியைச் சேர்ந்தவனும் அல்ல

கோவி.கண்ணன் சொன்னது…

//பாண்டித்துரை said...
ஏஞ்சாமி இப்படி!

ரொம்பதான் பாவம்ல
//

அதை அவரே நினைக்கலையே :(

கோவி.கண்ணன் சொன்னது…

அப்பாவி முரு, நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
பின்னால் வருவதை அல்லது திரும்பத் திரும்ப வருவதை முன்னரே கணித்துச் சொல்லும் சோசியர் கோவியாருக்கு ஒரு பூந்தொட்டி! (:<>:)
//

:) நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//meenachisundram said...
///முட்டாள் தொண்டனும், குடும்ப அரசியலுக்கு ஊது குழலாகவே இருப்பான்.///

யாரையோ பொடி வைத்து திட்டுவது போல உள்ளதே....கடும் கண்டனம்.!!!!
//

தலைமையின் செயல் அனைத்துக்கும் தலையாட்டுபவர்கள் அனைவருமே முட்டாள் தொண்டர்கள் தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
:-))))
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// சுல்தான் said...
படத்துக்கு மேலே உள்ளவை அனைத்தும் என் மனத்திலுள்ளவையாகவே இருக்கிறது. ஒரு வேளை பலருடைய மனமும் இப்படித்தான் இப்போது சிந்திக்கிறதோ.//

அப்படித்தான் இருக்கும் !

//தற்போதைக்கு அம்மாவை விட்டால் அவருக்கு வேறு நாதியில்லை. இனி தனியே நின்று தலை நிமிர என்பது வைகோவைப் பொறுத்தவரை இயலாத காரியம். தாவிக் கொண்டே இருப்பவர்களுக்கு சரியன பாடம். மருத்துவர் ஐயா ஆப்பு வாங்கும் காலமும் அருகில்தான்.

11:40 AM, April 02, 2009
//
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
ஆமாங்க!

ஓநாய் ரொம்ப கெட்டது

சொன்னிச்சாம்

நரி (பழம் புளித்ததால்)
//

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் தகுதியானவனா? said...
இன்றைய சூழ்நிலையில் வைகோவிற்கு அம்மாவை விட்டால் வேறு கதியில்லை அதனால் உங்கள் ஆருடம் பொய்யாகலாம்
//

:) பொய்த்தாலும் மெய்தாலும் எனக்கு எந்த பலனும் இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//எட்வின் said...
//அதாவது 66 விழுக்காட்டினர் வாக்களிக்க விரும்பாத ஒருவர் அந்த தொகுதியின் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்//

பாயின்ட்ட பிடிச்சிட்டீங்களே!
என்ன அநியாயம் அய்யா இது.எல்லாம் பதவி மோகம் :(

1:02 PM, April 02, 2009
//

அதுதான் அவங்களுக்கு அமோகம் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// கார்த்திகைப் பாண்டியன் said...
நச்.. எல்லாமே இங்க வியாபாரம் தானே..
//

ஆனால் வி.காந்து உட்பட எல்லாம் பழைய சரக்கு கடையாகவே இருக்கு

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
இப்படி சொல்ல வில்லை. ஆனா நான் வேற மாதிரி போட்டுட்டேன் அன்னிக்கே.
ஆனா நான் வேற மாதிரி போட்டுட்டேன் அன்னிக்கே.
//

பார்த்தாச்சு ..... போட்டாச்சு !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//விஷ்ணு. said...
// கூட்டணி என்பதே மக்கள் ஆட்சித் தத்துவத்தின் மாபெரும் ஏமாற்று வேலை //

மிக சரியாக சொன்னீர்கள்.

மாபெரும் பணபுழக்கம் உள்ள ஒரு தொழில் தானே நவீன காலத்து அரசியல்.அரசை இதமாக நடத்தி செல்லும் பணியைவுடைய அரசியலை அரசை இழிவாக மாற்ற செய்த பெருமை தற்போது உள்ள அரசியல்வாதிகளையே சாறும். வெகுஜன மக்களும் அரசில் ஒரு அங்கம் என்பதை மறக்க செய்த மாபெரும் பணியின் பெருமைக்குரியவர்கள் நம்முடைய அரசியல்வாதிகள்.
//

ஆமாங்க விஷ்ணு,

அரசியலும், ஆசிரமும் இன்னிக்கு நெ.1 கார்ப்ரேட் பிஸ்னஸ் !

கோவி.கண்ணன் சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அவர் தன் "பென்னாம்" பெரிய குடும்பத்துக்கு; நல்ல குடும்பத் தலைவராக தன்னாலானதை இந்த தள்ளாத வயதிலும் சக்கரநாற்காலியில் இருந்தும் செய்கிறார்.
இப்படி அவரை வறுக்கக் கூடாது.
//

மக்கள் சேவையே மகேசன் சேவை, தமிழில் மக்கள் என்றால் தன்னுடைய குழந்தைகள் என்கிற பொருளும் இருக்கு !

கோவி.கண்ணன் சொன்னது…

//jackiesekar said...
வைகோ சொல்லப் போகும் வாக்கியங்கள் அவை என்பதைத் தவிற வேறு அதில் ஆராய ஒன்றுமே இல்லை. :)//

சரியாக சொன்னீர்கள் கோவி
//
jackiesekar நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்