பின்பற்றுபவர்கள்

1 ஏப்ரல், 2009

பிழைகளுடன் எழுதுபவர்கள் இனி எழுத வேண்டாம் ?

தமிழில் தவறுகள் இல்லாமல் எழுதுவது சிறிது கடினம் தான். தாய்மொழி என்றாலும் தகுந்த பயிற்சி இல்லை என்றால் எழுதும் போது தவறுகள் இயல்புதான். இது அனைத்து மொழிகளுக்கும் பொதுவான ஒன்று. தவறில்லாமல் எழுதுபவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

மற்ற மொழிகளைக் காட்டிலும் திராவிட மொழிகளில் சொற்பிழையை வெகுவாக குறைக்க முடியும், ஏனெனில் எழுதுவது போலவே எழுத்தின் ஒலியை வரிசையாக படிக்க சொல் ஒலி கிடைத்துவிடும். மற்ற மொழிகளில் எழுத்தின் ஒலியும், அதை சொற்களாக கோர்க்கும் போதும் ஒலி மாறுபடும். எடுத்துக்காட்டு ஆங்கில 'A', 'E', 'O','U' குறில் நெடில் இரண்டிற்கும் ஒரே எழுத்து தான். இடத்திற்கு ஏற்றார் போல் ஒலிக்க பழக்கப் படுத்தப்பட்டு
பேசப்படுகிறது. ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் இருக்கும் குறைபாடுகள் இவை, ஆங்கிலம் அல்லது பிறமொழிகளை கணிணியை படிக்க (பலுக்க / உச்சரிக்க) வைக்க அந்த முழுச் சொற்களின் ஒலியையும் பதிந்து வைத்து, சொற்களில் இருக்கும் எழுத்துக்களை ஒப்பிட்டுத்தான் படிக்க முடியும், ஒப்பீடு இல்லாமல் வெறும் எழுத்து ஒலியை மட்டும் வைத்து படிக்க வேண்டுமென்றால் TSunami என்ற சொல்லை 'டி எஸ் யூ என் அ எம் ஐ'
வெறும் எழுத்தொலி மட்டுமே வரும், பொருளற்ற சொல்லாக அமையும். திராவிட மொழிகள் மற்றும் இந்திய மொழிகளில் இந்த குறைபாடுகள் இல்லை. சொற்களை எழுத்தின் ஒலியை வைத்தே கணிணியால் படித்துவிட முடியும். ஆங்கிலம் சிறந்த மொழியன்று ஆனால் வணிகம் மற்றும் அரசியல் காரணமாகவும், கட்டாயத்தின் காரணமாக பரவியது என்பதே பொருத்தமானது, பரவலாக்கப்பட்டதால் அது முதன்மை வாய்ந்ததாக மாறிவிட்டது. கணிணி மொழி என்று எந்த மொழியையுமே சொல்லிவிட முடியாது, ஒவ்வொரு மொழிக்கும் சில குறைபாடுகள் உண்டு. சமஸ்கிரதம் கணிணிக்கு ஏற்ற மொழி என்ற கருத்து பரப்பப் பட்டுவருவது வெறும் மொழி அரசியல் தான். சமஸ்கிரதம் கணிணிக்கு ஏற்றமொழி என்று சொல்வதற்கு எந்த ஒரு சிறப்புக் காரணமும் கிடையாது, ஏற்கனவே அக்கருத்து மொழியாளர்களால் புறந்தள்ளப் பட்டுவிட்டது. இருந்தாலும் சிலர் ஏதோ புதுமையை அறிந்து அதைப் பிறகுக்குச் சொல்லி தனது மேதாவித்தனத்தை மெச்சவேண்டும் என்பதற்காக அவ்வப்போது சமஸ்கிரதம் கணிணிக்கு எற்ற மொழி என்று தெரியாமலோ, வேண்டுமென்றோ பரப்புவர்.

தமிழில் எழுதும் போது பயிற்சி இன்மை காரணமாக சொற்பிழைகள் நிகழ்வதுண்டு, தட்டச்சுக் காரணமாகவும், கவனமின்மையாலும் எழுத்துப் பிழைகள் நேருவதும் உண்டு, எனது இடுகைகளில் சொற்பிழைகள் இருக்கும், எழுதியதை மீண்டும் படிக்காமல் அப்படியே வெளி இடுவது, தட்டச்சுப் பிழையாக வருவதும் ஆக அவைகளை முடிந்த வரையில் களைவதற்கு முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன். சொற்ப் பிழைகளை வெகுவாக குறைத்துக் கொண்டு எழுதினால் வாசிப்பவர்கள் முகம் சுளிக்க மாட்டார்கள். 'என்னத்த எழுத வந்துட்டான், ஒரு வார்த்தையை சரியாக எழுதத் தெரியவில்லை... என்ற குறை கூறலில் எழுதியவற்றின் மையக்கருத்துக்கள் படிக்கப்படாமல் போக வாய்ப்புண்டு', கட்டுரையின் கருத்துக்களை ஏற்க விரும்பாதோர் சொற்பிழைக் குறித்து குறை கூறுவர். சொற்பிழையுடன் எழுதுவதால் வேறொன்றும் பெரிய இழப்பு இல்லை என்றாலும். மொழியை சரியாக எழுதவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

பொதுவாக 'ன,ண,ந' , 'ர,ற' மற்றும் 'ல,ள,ழ' கரங்களே குழப்பம் ஏற்படுத்தும் எழுத்துக்கள், அதில் கவனமாக இருந்தால் சொற் பிழையின்றி எழுத முடியும்

வீட்டில் உள்ள அறை (Room) பற்றி எழுதும் போது அறைக்கு எந்த 'ற,ர' எதைப் போடவேண்டும் என்று குழம்பி இருக்கிறேன். வீட்டில் பாதி(அரை, 1/2) அளவு இடம் குறித்த பொருளில் அரை என்றெல்லாம் ஊகமாக நினைத்து 'அறை'க்கு 'அரை' என்று தவறாகவும் எழுதி இருக்கிறேன்

முகம் சுளிக்க வேண்டாம், முகம் சுழிக்க வேண்டாம் என்பதில் சுளி அல்லது சுழி எது சரி ? இங்கு சுளிப்பது என்பதே சரி. 'சுளி' என்பது விரும்பத்தகாத என்ற பொருளில் உணர்வை வெளிக்காட்டுவது என்ற பொருளில் வரும், அதாவது வெறுப்பது. முகம் உணர்வின் மூலம் வெறுப்பைக் காட்டுவது முக சுளிப்பு, பிள்ளையார் சுழிக்கு வரும் 'சுழிப்பு' என்ற பொருளில் வராது. முகம் சுளிப்பு என்பதை பேசும் போது சரியாகவே சொல்லுவோம். எழுதும் போது தான் தவறாகிவிடும்.

அது போல் ஒளிந்து கொண்டு இருந்தான், ஒழிந்து கொண்டு இருந்தான் எந்த 'ழ' போடுவது என்பதும் குழப்பம் தான். 'ஒளி' என்றாலே வெளிச்சம், வெளிச்சமாக தொடங்கும் சொல் எப்படி மறைந்து கொள்வதை குறிக்கும் என்கிற ஊகத்தில் 'ஒழிந்து' என்று எழுதுவது பலரது வழக்கம் தான். ஆனால் 'ஒழிந்து' என்றால் இல்லாமல் போவது, ஒளிந்து என்பது தற்காலிமாக மறைவது. அவன் ஒழிந்தான் என்று சொல்லும் போது அவன் இனிமேல் வரமாட்டான் என்றும், அவன் ஒளிந்தான் என்று சொல்வது அவன் மறைவாக இருக்கிறான் என்ற பொருளைத்தரும்.

இனிமேல் 'ஒண்ணும்' சொல்லவேண்டாம் - என்ற வரியில் இருக்கும் 'ஒண்ணு' மூன்று சுழி 'ண்' சரியா ? சொற்கள் எடுக்கும் மாத்திரை (ஒலிக்கும் அளவு) என்ற அளவில் ஒண்ணும் (oNNum) என்ற சொல்லை நீட்டலாகவே ஒலிப்போம், 'ஒன்னும்' (onnum) என்று
குறுகலாக ஒலிப்பது இல்லை. ஒன்று என்று சொல்லில் இருந்து தானே வந்தது அப்படி என்றால் 'ஒன்னு' சரிதானே என்று நினைப்பது தவறு. ஒண்ணு என்பது பேச்சு வழக்குச் சொல், ஒண்ணு என்பதே சரி.

பழித்தான், பலித்தான் போன்றவைகளும் குழப்பம் ஏற்படுத்துபவை, ஒருவரை குறை கூறுவது 'பழி', பலித்தான் என்று எழுதுவது தவறு. என்னை பலி / பழி ஆக்கிடாதே - பலி / பழி ? 'பலி இடுதல்' என்றால் நேர்த்திக் கடனுகான உயிர் கொலை, இங்கே பலி என்ற சொல்லே சரி. Bali என்ற பலுக்களைத்தான் நாம் 'Pali' என்று எழுதுகிறோம், உச்சரிப்பில் Bali என்றே சொல்லுகிறோம். B/P ஒலிக் காரணமாக எழுதும் போது பலியா ? பழியா ? என்ற குழப்பத்தில் 'ழ' பயன்படுத்துவது இயல்பு. ஆனால் 'பலி' என்று எழுதுவதே சரி.

அதுபோல் பளிங்கு...பழிங்கு எது சரி ? பளிங்கு என்பதே சரி

குளைத்தல், குலைத்தல், குழைத்தல் - இதில் குளைத்தல் என்பது பயன்பாட்டில் இல்லாச் சொல், குலைத்தல் குரைத்தல் என்றாலும் பொருள் ஒன்றுதான். குலை நடுக்கம், வாழைக் குலை, கொப்பும் குலையுமாக. கூட்டம், தொகுதி, ஒன்றிணைந்த தொகுப்பு என்ற பொருளில் 'குலை' வரும். குழை என்றால் குழைவு, குழைந்த சோறு, எல்லாம் குழைந்து விட்டது என்றால் முற்றிலும் சேதமடைந்த பொருளில் சொல்லுவதாகும். நாமக்கட்டியை குழைத்து இட்டான் (யாருக்கு என்பது கேள்வியல்ல), நன்றாக சேரும் படி கலக்குவது என்ற பொருளில் சொல்லுவதே குழைத்தல். வலையல், வளையல் ? வளைவு வளை என்கிற வேரைக் கொண்டுள்ள பொருளுடையதால் பெண்களின் கையணிக்கு வளையல் என்ற
சொல்கிறார்கள். வலை என்றால் மீன் பிடிக்கும் வலை, எனவே வலையல் என்று சொல்வது தவறான சொல்.

அலைதல், அழைதல் ? அழைதலுக்கு பொருள் கிடையாது, அழைப்பு என்பதைக் குறிக்கும், மற்றபடி புழக்கத்தில் இல்லை. அலைச்சல்..அங்கும் இங்குமாக அலைபோல் நிலையற்ற என்ற பொருளில் வரும் அலைதல் என்பது சரி. 'நன்றாக அலைந்தேன்....நேர விரயம் தான்' என்று அலுப்பாக சொல்கிறோமே.....சிலர் அலுப்பு என்பதை அலும்பாக அழுப்பு என்று எழுதிவிடுவார்கள். சரியான சொல் தேடி எடுத்து பயன்படுத்துவதில் அலுப்பா ? அஞ்சால் அலுப்பு மருந்து என்று கேட்டுவாங்கி பயன்படுத்துங்கள் (நான் முகவராக இல்லை)

குளியலுடன் தொடர்புடைய குளித்த என்பதை சிலர் குழித்த என்று எழுதுவார்கள், குழிப் பணியாரம், பல்லாங்குழி போன்ற சொற்களை எழுதும் போது குழிப்பனியாரம் மற்றும் பள்ளாங்குழி என்று தவறாக எழுதிவிடுவோம்

பல்லிக் கூடம் என்று எழுதினால் பல்லிகள் மாநாடு நடத்தும் இடம், பள்ளிக் கூடம் என்பதே சரியானச் சொல் மலைத்தேன் இவளென மலைத்தேன்..... என்ன ஒரு சுவையான சொற்ச் சிலம்பம் ? மலைப்பு என்றால் பெரும் வியப்பு

சிறிய பெரிய இதை எழுதும் போது என்ன 'றி' போடுவது என்கிற குழப்பம் வாடிக்கையானது தான். நினைவில் வைக்க வேண்டியது 'சிறிய' சொல்லுக்கு பெரிய 'றி'. 'பெரிய' சொல்லுக்கு சிறிய 'ரி' :)

ஒரு சில இடங்களைத் தவிர்த்து 'ந' கரம் 'த'கரத்துடன் இணைந்தே வரும். வந்தான், பைந்தமிழ், அருந்தவன்...போன்றவை. மிக மிக குறைவான சொற்களாக மெய், உயிர் மெய்யுடன் இணைந்து வரும் பொழுது மட்டுமே அதாவது, சொன்னது, என்னது போன்ற சொற்களில் 'ன' கரம் 'த'கரத்துடன் இணைந்து வரும்

கன்னம், மன்னன், மன்னிப்பு, புண்ணியம், வண்ணம், எண்ணம், திண்ணம் (உறுதிபட கூறுதல்) ஆகிய சொற்களை எழுதும் போதும் 'ன'கர, 'ண'கர குழப்பம் வரும்.

சொல்ல விளைந்தான், சொல்ல விழைந்தான் ? விழைந்தான் என்பதே சரி, செயலைச் செய்ய முனைவதற்கு விழைதல் என்ற பொருள்,

விழைவு, விளைவு ? செயல் குறித்த பலன்களில் பின்'விளைவு'கள் உண்டு. விளைவு (விளைச்சல்) என்பதே சரி.

***

குழப்பமான சொற்களைப் பற்றி நீங்களும் பகிர்ந்து கொள்வீர்கள் என்பதை இந்தப் பதிவின் பின் விளைவாக நான் எதிர்பார்க்கிறேன்

இந்தப் பதிவை எழுதத்தூண்டி உரையாடியில் சொற்களைக் குவித்து அளவளாவிய நம்ம வலையுலக நிழல்பட நிபுணர் ஜீவ்ஸ் க்கு நன்றியோ நன்றி !

பின்குறிப்பு : பிழையுடன் எழுதுபவர்கள் எழுதுவதற்கு பதில் 'சும்மா' இருக்கலாம் போன்ற கருத்துக்களை நான் எப்போதும் புறந்தள்ளுவதுண்டு. ஏனெனில் வலையில் எழுத வருபவர்களில் பெரும்பாண்மையினர் 10 ஆம் வகுப்பு, +2 வுக்கு பிறகு தமிழில் எழுதுவது தற்பொழுதுதான், எனவே பிழைகள் இயல்பானது என்று கருதுவதுடன், ஆர்வமுடன் தமிழில் எழுத வருகிறார்கள் என்று நினைப்பு இருந்தால், ஒருவரின் எழுத்துப் பிழைக்காக அவரது கருத்துக்களை பறக்கணிப்பது குறையும், அவ்வாறு செய்வது தவறான அணுகுமுறை. தமிழில் பிழையாக எழுதுபவர்களை எழுதக் கூடாது என்று சொல்வதை விட அவர்களுடைய எழுத்துக்களை சீரமைக்க உதவுவதே தமிழுக்கான நற்பணி.

90 கருத்துகள்:

Iyappan Krishnan சொன்னது…

நன்றி அண்ணே!

நான் படிக்கும் பதிவுகளில் எனக்குத் தெரிந்த அளவு பிழைகளைச் சொல்லி வருகிறேன்.

எழுதுவது வரவேற்கத்தக்கது. "செய்வனத் திருந்தச் செய்" என்பது போல, முடிந்த வரையிலும் பிழைகளை குறைத்துக் கொள்ளுதல் தான் நம் எழுத்தை வளர்த்துக் கொள்ள உதவும்.

மீண்டும் நன்றிகளுடன்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//தமிழில் பிழையாக எழுதுபவர்களை எழுதக் கூடாது என்று சொல்வதை விட அவர்களுடைய எழுத்துக்களை சீரமைக்க உதவுவதே தமிழுக்கான நற்பணி//

இது நூத்துல ஒரு வார்த்த!

இது வட்டார வழக்கு இதுல பிழை கண்டு பிடிச்சிடாதீங்க சாமியோவ்!
!

தமிழ் சொன்னது…

அருமையான இடுகை

அழ‌காக‌ எழுதியுள்ளீர்க‌ள்

என‌க்கு தாய்மொழி த‌மிழ் இல்லையென்றாலும்
இவ்வ‌ளவு தெளிவாக‌ நேர்த்தியாக‌ எழுத‌த் தெரியாது

எல்லாம் ஒரு ப‌யிற்சி தான்

வாழ்த்துகள்

கோவி.கண்ணன் சொன்னது…

// திகழ்மிளிர் said...
அருமையான இடுகை

அழ‌காக‌ எழுதியுள்ளீர்க‌ள்

என‌க்கு தாய்மொழி த‌மிழ் இல்லையென்றாலும்
இவ்வ‌ளவு தெளிவாக‌ நேர்த்தியாக‌ எழுத‌த் தெரியாது

எல்லாம் ஒரு ப‌யிற்சி தான்

வாழ்த்துகள்
//

உங்கள் பதிவின் பதிவுக் குறிப்பில் ( எப்பொழுதுமே பெங்களூர் ,ஆனால் இப்பொழுது சிங்கப்பூரில் ) என்று இருக்கிறது.

தற்போதும் சிங்கையில் இருந்தால் சிங்கைப் பதிவர்களை சந்திக்க முடியுமே. ஆர்வம் இருந்தால் சொல்லுங்கள், நண்பர்களுடன் கலந்தாலோசித்து ஒரு சந்திப்பு போட்டுவிடுவோம்

தமிழ் சொன்னது…

/Jeeves said...

எழுதுவது வரவேற்கத்தக்கது. "செய்வனத் திருந்தச் செய்" என்பது போல, முடிந்த வரையிலும் பிழைகளை குறைத்துக் கொள்ளுதல் தான் நம் எழுத்தை வளர்த்துக் கொள்ள உதவும். /

உண்மை தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//Jeeves said...
நன்றி அண்ணே!

நான் படிக்கும் பதிவுகளில் எனக்குத் தெரிந்த அளவு பிழைகளைச் சொல்லி வருகிறேன்.

எழுதுவது வரவேற்கத்தக்கது. "செய்வனத் திருந்தச் செய்" என்பது போல, முடிந்த வரையிலும் பிழைகளை குறைத்துக் கொள்ளுதல் தான் நம் எழுத்தை வளர்த்துக் கொள்ள உதவும்.

மீண்டும் நன்றிகளுடன்
//

எல்லா புகழும் ஜீவ்ஸுக்கே :)

கோவி.கண்ணன் சொன்னது…

//இது நூத்துல ஒரு வார்த்த!

இது வட்டார வழக்கு இதுல பிழை கண்டு பிடிச்சிடாதீங்க சாமியோவ்!
!//

எந்த வட்டாரம் சாமியோவ்.....!

அப்பாவி முரு சொன்னது…

தலைப்பைப் பார்த்ததும் ஆடிப் போய்விட்டேன்.

குற்ற உணர்ச்சிதான் காரணம்.

ஆனாலும், ஏற்றுக்கொள்ள முடியாது!

திருவிளையாடல் படத்தில் நக்கீரன் - புலவர் வேடத்தில் சிவனுக்கிடையேயான சண்டையில் நக்கீரர் சொல்ல்வதான வசனம் “சொல்லில் குற்றமில்லை, இருந்தாலும் மன்னிக்கப்படலாம். பொருளில் தான் குற்றம்” என சொற்குற்றத்தை மன்னிப்பார்.

அத தைரியத்திலேயே நானெல்லாம் எழுதுகிறேன். ஆனாலும், சுட்டிக்காட்டப்படும் எழுத்துப்பிழைக்கு வருந்துவேன். திருத்தப்பார்க்கிறேன்.

அக்னி பார்வை சொன்னது…

நன்றி தல...

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\'என்னத்த எழுத வந்துட்டான், ஒரு வார்த்தையை சரியாக எழுதத் தெரியவில்லை... என்ற குறை கூறலில் எழுதியவற்றின் மையக்கருத்துக்கள் படிக்கப்படாமல் போக வாய்ப்புண்டு', கட்டுரையின் கருத்துக்களை ஏற்க விரும்பாதோர் சொற்பிழைக் குறித்து குறை கூறி மன அரிப்பை தீர்த்துக் கொள்வர்.\\

கட்டுரையைமுழுமையாக படித்துவிட்டேன்.

அருமையான பதிவு, பதிவுலகினருக்கு
உதவியாக இருக்கும்.

ஒரு கட்டுரை வாசிக்கப் படும்போதே
அது தேறுமா? தேறாதா? என மனதில்
பட்டுவிடுவதால் சொற்பிழைகளை நான் கடைசியாக குறிப்பிடுவேனெ தவிர படிக்காமல் விடுவதில்லை.

கட்டுரையின் கருத்துக்களை ஏற்க விரும்பாதோர் பின்னூட்டத்தில் தெரிவிப்பார் அல்லது தனிப்பதிவே போடுவார்.

அப்படி சொற்பிழைகளை சுட்டிக் காட்டுவோர் மன அரிப்பை தீர்த்துக் கொள்வர் என்பதில் என்க்கு உடன்பாடு
இல்லை.

வாழ்த்துக்கள்...

கார்க்கிபவா சொன்னது…

//சிறுது//

சிறிது

//மொழிக்களுக்கும்//

மொழிகளுக்கும்

//மற்றொமொழிகளில்//

மற்றமொழிகளில்

இது முதல் ஆறு வரிகளில் நான் கண்ட பிழைகள் :))))))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமையாக‌ எழுதியுள்ளீர்க‌ள்

குடந்தை அன்புமணி சொன்னது…

பயனுள்ள பதிவு தோழரே! பிழைகளையெல்லாம் நானும் முடிந்தவரையில் சுட்டிகாட்டிதான் வருகிறேன். நானும் பிழையின்றி எழுதவே முயற்சி செய்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

எல்லோருக்குமே சரியாக எழுத வேண்டுமெனும் எண்ணம் இருந்தும்; தவறு என்று தெரியாமல் எழுதுவோரே பலர். ஆனால் எழுத வேண்டுமெனும் ஆர்வத்துடன் செயல்படுமவர்களை ஊக்கப்படுத்துவதே கடமை.அதனால் தவறு காணும் போது சுட்டிக்காட்டுவதில் தவறில்லை.
எனக்குப் பலர் பல தடவை அந்த உதவி செய்துள்ளார்கள்.
சிலருக்கு நான் செய்துள்ளேன். பெரும்பாலும் "பிரசுரத்துக்கல்ல" எனும் குறிப்புடனே இட்டுள்ளேன்.
சில எழுத்துப்பிழைகளுக்காக ஒரு நல்ல விடயத்தைப் படிக்காமல் விடுவது. புத்திசாலித் தனமில்லை.
இச்சந்தர்ப்பத்தில் இந்த பகிடிக் கதைதான் ஞாபகம் வந்தது.
ஒரு தமிழறிஞர் எதிலும் எழுத்துப்பிழை இலக்கணப் பிழை கண்டால் அட்டகாசப்படுத்துவார்.
இவர் மகள் ;காதலித்தவனுடன் கடிதமெழுதி வைத்து விட்டு ஓடிவிட்டாள்.
வீடே அல்லோகல்லப்பட்டுதாம்....இவர் பங்குக்கு இவரும் கூச்சலிட்டாராம்.
என்னென்று "அந்த கடிதத்தில் பல எழுத்துப் பிழை" உண்டாம்.

ராமலக்ஷ்மி சொன்னது…

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

//ஆர்வமுடன் தமிழில் எழுத வருகிறார்கள் என்று நினைப்பு இருந்தால், ஒருவரின் எழுத்துப் பிழைக்காக அவரது கருத்துக்களை பறக்கணிப்பது குறையும், அவ்வாறு செய்வது தவறான அணுகுமுறை. தமிழில் பிழையாக எழுதுபவர்களை எழுதக் கூடாது என்று சொல்வதை விட அவர்களுடைய எழுத்துக்களை சீரமைக்க உதவுவதே தமிழுக்கான நற்பணி.//

அப்படியே வழிமொழிகிறேன்.

நானும் பதிவுலக நண்பர்கள் பலருக்கு தனிமடலில் அவர்கள் பிழைகளைத் திருத்த உதவி வருகிறேன். யாராவது அவர்களைக் கிண்டல் செய்திருந்தால் ’சொல்ல வரும் கருத்துக்கள் முன் சின்ன சின்னப் பிழைகள் பெரிது படுத்தப் படக் கூடாது’ என அங்கேயே ஆதரவும் தெரிவித்ததுண்டு.

Athisha சொன்னது…

இந்த வருடத்தின் ஆகச்சிறந்த பதிவுண்ணா இது.தேவையானதும் தெரிந்துகொள்ள வேண்டியதும் தொகுத்துத்தந்தமைக்கு நன்றிகள் பல.

வால்பையன் சொன்னது…

பல்லி
பள்ளி

இதில் உச்சரிப்பு மாறுவது
”ப” விலா இல்லை “ல்”.”ள்”லிலா

நன்றாக நான்கு முறை சொல்லி பார்த்து பதில் சொல்லவும்!

Vishnu - விஷ்ணு சொன்னது…

//கட்டுரையின் கருத்துக்களை ஏற்க விரும்பாதோர் சொற்பிழைக் குறித்து குறை கூறி மன அரிப்பை தீர்த்துக் கொள்வர்//

கண்முடித்தனமாக எதிர்பவர்களின் செயல் என்பது என் கருத்து.

அருமையான சிந்தனை.

ராஜ நடராஜன் சொன்னது…

என்னுடைய முந்தைய பின்னூட்டம் உங்களது இன்னொரு பதிவில் சரணடைந்து விட்டது.தேடிக் கண்டு பிடியுங்கள்.

மணிகண்டன் சொன்னது…

நல்ல கட்டுரை கோவி.

பல பிழைகளோட இருந்தா படிக்கறது சிரமம். அதுனால பலபேர் கரு பத்தியெல்லாம் யோசிக்காம எரிச்சல்ல போய்டுவாங்க.

அதே சமயம், யாராவது பிழைய சுட்டிக்காட்டினா அது மன அரிப்புன்னு யோசிக்கறது எனக்கு சரியா படல. கட்டுரைய படிச்சா அதோட கருவ பத்தி தான் பேசனும்ன்னு யார் சொன்னது ? இந்த மனப்பான்மை பலவருடம் எழுதினா தானா வரும் போல.

அதே சமயம் பல பிழைகளுக்கு காரணம் Google Transliterate மாதிரியான கருவிகளும் கூட. அளவுக்கு அதிகமா பொறுமை தேவையா இருக்கு.

ஒரு ஆறு மாசம் எழுதினா பிழைகள் தானா குறையும். மொழி சம்பந்தப்பட்ட அனைத்தும் பழக்கத்தால் வரவேண்டும். படிப்பால் அல்ல ! இதுக்கு என்னைய கும்மாதீங்க. என்னோட தனிப்பட்ட கருத்து அது. அவ்வளவே !

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

இப்படியெல்லாம் சொன்னீங்கண்ணத்தான் எங்களுக்கும் மன ஆறுதலா இருக்கும்

வாசகன் சொன்னது…

உங்கள் பதிவுகளிலேயே பல எழுத்துப் பிழைகள்-இந்தப் பதிவில் அல்ல,வேறு பல பதிவுகளில்-இருக்கின்றன.

எழுதிய பின் மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்த பின் வெளியிடுவதை வழமையாக்கிக் கொள்ளவும்.

ARV Loshan சொன்னது…

அருமையான பதிவு..தேவையான கருத்துக்கள்..

சில எழுத்துப் பிழையான பதிவுகளைப் பார்க்கும்போது எரிச்சல் எழுந்தாலும் அவர்களைப் புறந்தள்ளக் கூடாது என்பதில் நானும் உடன்படுகிறேன்..

(தெரிந்தோ தெரியாமலோ எனக்கும் சில வேளைகளில் அவ்வாறு எழுத்துப் பிழைகள் வருவதுண்டு.. தட்டச்சினால் கூட)

பதிவர்களுக்கு அடிப்படையான பதிவு..

அகநாழிகை சொன்னது…

கோவி, அவசியமான, அருமையான பதிவு. தொடர்ந்து எழுதும் ஆர்வம் இருந்தாலே மொழியில் புலமை வாய்க்கும். ‘சித்திரமும் கைப்பழக்கம்.. செந்தமிழும் நாப்பழக்கம்‘ என்பது போலத்தான். மொழியார்வம் இருந்தால் பிழையின்றி எழுதுவது கடினமல்ல. தெரியாவிட்டாலும் கற்றுக் கொள்ளலாம்.

வடுவூர் குமார் சொன்னது…

கட்டுரையின் கருத்துக்களை ஏற்க விரும்பாதோர் சொற்பிழைக் குறித்து குறை கூறி மன அரிப்பை தீர்த்துக் கொள்வர்
அப்படியா? புதிய கண்டுபிடிப்பாக இருக்கு.
எனக்கு தெரிந்த பிழைகளை ஓரளவு தெரிந்தவர்களிடமே சொல்லுவேன் அதுவும் சில சமயம் திரு யோகன் பாரீஸ் சொன்னது போல்.
பலர் பதிவுகளில் எழுத்து சீராக ஓடிக்கொண்டிருக்கும் போது ஆணி மாதிரி இந்த எழுத்துக்கள் காலை குத்தும் அதை நேர்ப்படுத்தவே சொல்லப்படுகிறது.அதை நானே உங்கள் பதில் சொல்லி இதே கருத்தை அங்கும் சொல்லியிருந்தீர்கள்.
மற்றபடி உங்கள் வலது கை/இடது கை மற்றும் அப்பா பதிவு போல் இதுவும் அருமையாக அமைந்துள்ளது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் 8:09 PM, April 01, 2009

குமார் அண்ணா, முதலில் பாரட்டுக்கு நன்றி, தமிழ் மட்டுமல்ல, ஆங்கிலத்தில் பிழையுடன் எழுதுவதைக் கூட சிலர் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். ஆங்கிலம் பேசத் தொடங்கிய காலத்தில் 'சரியா பேசத் தெரிஞ்சா பேசு....இல்லாட்டி பேசாமல் இரு' என்று தான் பலருக்கு உற்சாகம் கொடுக்கப்படும், அதையும் அறைகூவலாக எடுத்துக் கொண்டே தமிழ்வழிக் கல்வி பயன்ற மாணவர்கள் வெற்றிகரமாக பேச பயிற்சி பெறுவர். இங்கே வலைப்பதிவிலும் எழுத்துப் பிழையை கருத்துடன் ஒப்பிட்டு மறுக்கும் பழக்கம் இருக்கிறது. அதற்காகக் தான் குறிப்பிட்டேன். பலருக்கும் தாம் பிழையுடன் எழுதுகிறோம் என்கிற வருத்தம் உண்டு.

கோவி.கண்ணன் சொன்னது…

//அகநாழிகை said...
கோவி, அவசியமான, அருமையான பதிவு. தொடர்ந்து எழுதும் ஆர்வம் இருந்தாலே மொழியில் புலமை வாய்க்கும். ‘சித்திரமும் கைப்பழக்கம்.. செந்தமிழும் நாப்பழக்கம்‘ என்பது போலத்தான். மொழியார்வம் இருந்தால் பிழையின்றி எழுதுவது கடினமல்ல. தெரியாவிட்டாலும் கற்றுக் கொள்ளலாம்.
//

அகநாழிகை, பாராட்டுக்கு மிக்க நன்றி !

Unknown சொன்னது…

நல்ல முயற்சி. ஆனாலும் பதிவில் நிறைய தவறுகள் இருக்கிறது ஜிகே.
//மழைத்தேன் இவளென மலைத்தேன்..... //
அது "மலைத் தேன் (Honey from Hill) இவளென மலைத்தேன்" என வருமென்று நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
நல்ல முயற்சி. ஆனாலும் பதிவில் நிறைய தவறுகள் இருக்கிறது ஜிகே.
//மழைத்தேன் இவளென மலைத்தேன்..... //
அது "மலைத் தேன் (Honey from Hill) இவளென மலைத்தேன்" என வருமென்று நினைக்கிறேன்.
//

சுல்தான் ஐயா, தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி, நீங்கள் சொல்வது சரிதான். சரி செய்துவிட்டேன்

Unknown சொன்னது…

மடற்குழுக்களில் நான் எழுத ஆரம்பித்த காலங்களில் எனக்கு தமிழில் ரகர றகரம், னகர ணகரம், லகரம் ளகரப் பிழைகள் அடிக்கடி வரும். பல நண்பர்கள் திருத்தி இருக்கிறார்கள். இன்றும் ஒற்றுப்பிழைகள் அறியாமல் வந்துவிடுகிறது, ஆனாலும் கற்றுக்கொண்டு திருத்திக்கொள்கிறேன். இணையத்தில் நான் தமிழ் கற்றது அதிகம் (நண்பர் ஜீவ்ஸும் இந்தக் கருத்தில் ஒத்துப் போவார் என்று நம்புகிறேன்).

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

நல்லதொரு அருமையான முயற்சி! நண்பரே!

உங்கள் பதிவில் சில பிழைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..

இதில் பல கவனக்குறைவினால் நேர்ந்தவைகள் என்றே அறிகிறேன்.

பதிவு திருத்தப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே!

_______________________

சிறுது - சிறிது!

மொழிக்களுக்கும் - மொழிகளுக்கும்

எதோ புதுமையை - ஏதோ புதுமையை

கவன மின்மையாலும் - கவனமின்மையாலும்

எழுத்துகள் - எழுத்துக்கள்

வாய்ந்தாக - வாய்ந்ததாக

தவறாக எண்ணவேண்டாம் நண்பரே!
உங்கள் பதிவு ஒரு நல்ல முயற்சி!

Tech Shankar சொன்னது…

நீண்ட நாட்களாக யோசித்து இப்போது பதிவெழுதியிருக்கிறீர்கள்.

உங்கள் பதிவு அபாரமாக அமைந்துள்ளது.

தவறாக எழுதியவர்கள் - வேண்டும் என்று அப்படிச் செய்வதில்லை. அவர்களுக்கே தெரியாததாலேயே அப்படிச் செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய எழுத்தார்வத்தாலேயே எழுதத் துணிகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தப் பதிவு ஒரு சர்க்கரைப் பொங்கல்.

உங்களது இந்தப் பதிவை தினமும் படித்து மனதில் கொள்ள வேண்டும்.

நன்றி
த.நெ.

மங்கை சொன்னது…

கோவி

"பிழைகளுடன் எழுதுபவர்கள் இனி எழுத வேண்டாம் ?"

அப்போ நான் தான் முதலில் நிறுத்தனும்..

இவன்... சொன்னது…

நன்றி நண்பரே!!!!!

மணிநரேன் சொன்னது…

அருமையானதொரு பதிவு.
திரு. அகநாழிகை கூறியதை

//தொடர்ந்து எழுதும் ஆர்வம் இருந்தாலே மொழியில் புலமை வாய்க்கும். ‘சித்திரமும் கைப்பழக்கம்.. செந்தமிழும் நாப்பழக்கம்‘ என்பது போலத்தான். மொழியார்வம் இருந்தால் பிழையின்றி எழுதுவது கடினமல்ல. தெரியாவிட்டாலும் கற்றுக் கொள்ளலாம்.//

வழிமொழிய விரும்புகிறேன்.

Thekkikattan|தெகா சொன்னது…

//"பிழைகளுடன் எழுதுபவர்கள் இனி எழுத வேண்டாம் ?"

அப்போ நான் தான் முதலில் நிறுத்தனும்..//

ஏன் நிறுத்தணும், மங்கை?

அட வைச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றீங்க :-))?

எழுத்துப் பிழை அய்யோ நடக்குதேன்னு மனசு கெடந்து அடிச்சிக்கிட்டாலும் நாம நினைச்சதை வெளியில சொல்லி பகிர்ந்துக்காம இருந்தாத்தான் வஞ்சகம் பண்றோமின்னு பொருள்.

விடுங்க, விடுங்க எழுத எழுத பிழைகள் மட்டுப்பட்டு விடும்.

selventhiran சொன்னது…

அன்பின் கோவி, பதிவுலகில் அதிகமான சந்திப்பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகளோடு எழுதுகிறவன் என்ற முறையில் எனக்கு பெரும் அவமானம் உண்டு. கால் நூற்றாண்டு காலமாய் பேசியும், படித்தும், எழுதியும், சிந்தித்தும் வரும் மொழியிலேயே இத்தனைப் பிரச்சனைகளெனில் புதிய மொழிகளைக் கற்பதும், புழங்குவதும் எத்தனைச் சிரமம்?!

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்கிறார்கள். கண்ணில் புரையோடிப் போயிருந்தால் ஒத்துக்கொள்கிறாமோ? அதற்காக கண்ணையே பிடுங்குதலும் ஆகாது. இயன்றவரை பிழைகள் இல்லாமல் எழுதப் பழகுவது மொழியின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் உதவும். தமிழாய்ந்த தமிழர்கள் பிழையோடு எழுதுபவர்களைக் கண்டால் தாயன்போடு திருத்துவதும், பிழைஞர்கள் அதை பெருமகிழ்வோடு கற்றுக்கொள்ளுதலும் அவசியம்.

தங்களது பதிவு அருமையானது. ஆனால், பிழைகள் மலிந்திருக்கின்றன.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

பழூர் கார்த்தி சொன்னது…

நல்ல இடுகை :-)

சுஜாதா கேட்டது: கொலையாளி என்கிறோம், கொலையாளன் என்பதில்லை ஏன்?

ராம்.CM சொன்னது…

அருமையான இடுகை.............

அழ‌காக‌ எழுதியுள்ளீர்க‌ள்..!

Jackiesekar சொன்னது…

பின்குறிப்பு : பிழையுடன் எழுதுபவர்கள் எழுதுவதற்கு பதில் 'சும்மா' இருக்கலாம் போன்ற கருத்துக்களை நான் எப்போதும் புறந்தள்ளுவதுண்டு. ஏனெனில் வலையில் எழுத வருபவர்களில் பெரும்பாண்மையினர் 10 ஆம் வகுப்பு, +2 வுக்கு பிறகு தமிழில் எழுதுவது தற்பொழுதுதான், எனவே பிழைகள் இயல்பானது என்று கருதுவதுடன், ஆர்வமுடன் தமிழில் எழுத வருகிறார்கள் என்று நினைப்பு இருந்தால், ஒருவரின் எழுத்துப் பிழைக்காக அவரது கருத்துக்களை பறக்கணிப்பது குறையும், அவ்வாறு செய்வது தவறான அணுகுமுறை. தமிழில் பிழையாக எழுதுபவர்களை எழுதக் கூடாது என்று சொல்வதை விட அவர்களுடைய எழுத்துக்களை சீரமைக்க உதவுவதே தமிழுக்கான நற்பணி.//

தங்கள் கருத்து மிகச்சரியானதே

ஆ.ஞானசேகரன் சொன்னது…

எனக்கு அதிகமாக பிழை வந்த இடம் அதற்க்கு-பிழையானது (சரியானது அதற்கு...)
ற்-க்கு பின் ஒற்று வராது என்பது இலக்கணம்... இதை புரிந்துகொண்டபின் தவறுகள் குறைந்தது...

துளசி கோபால் சொன்னது…

செல்வி ஷங்கர் (தமிழ்ப் பண்டிதர்) ஒருமுறை 'ஒன்னு' சரின்னாங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
தலைப்பைப் பார்த்ததும் ஆடிப் போய்விட்டேன்.

குற்ற உணர்ச்சிதான் காரணம்.

திருவிளையாடல் படத்தில் நக்கீரன் - புலவர் வேடத்தில் சிவனுக்கிடையேயான சண்டையில் நக்கீரர் சொல்ல்வதான வசனம் “சொல்லில் குற்றமில்லை, இருந்தாலும் மன்னிக்கப்படலாம். பொருளில் தான் குற்றம்” என சொற்குற்றத்தை மன்னிப்பார்.

அத தைரியத்திலேயே நானெல்லாம் எழுதுகிறேன். ஆனாலும், சுட்டிக்காட்டப்படும் எழுத்துப்பிழைக்கு வருந்துவேன். திருத்தப்பார்க்கிறேன்.

4:12 PM, April 01, 2009

ஆனாலும், ஏற்றுக்கொள்ள முடியாது!
//

முரு, நன்றி ! பதிவை முழுசாப் படிச்சிங்களான்னு தெரியல. குறிப்பாக பின்குறிப்பு !

கோவி.கண்ணன் சொன்னது…

// அக்னி பார்வை said...
நன்றி தல...

4:23 PM, April 01, 2009//

நன்றி நண்பரே !

கோவி.கண்ணன் சொன்னது…

// அறிவே தெய்வம் said...
\\'என்னத்த எழுத வந்துட்டான், ஒரு வார்த்தையை சரியாக எழுதத் தெரியவில்லை... என்ற குறை கூறலில் எழுதியவற்றின் மையக்கருத்துக்கள் படிக்கப்படாமல் போக வாய்ப்புண்டு', கட்டுரையின் கருத்துக்களை ஏற்க விரும்பாதோர் சொற்பிழைக் குறித்து குறை கூறி மன அரிப்பை தீர்த்துக் கொள்வர்.\\

கட்டுரையைமுழுமையாக படித்துவிட்டேன்.

அருமையான பதிவு, பதிவுலகினருக்கு
உதவியாக இருக்கும்.//

மிக்க நன்றி நண்பரே !

//ஒரு கட்டுரை வாசிக்கப் படும்போதே
அது தேறுமா? தேறாதா? என மனதில்
பட்டுவிடுவதால் சொற்பிழைகளை நான் கடைசியாக குறிப்பிடுவேனெ தவிர படிக்காமல் விடுவதில்லை.//

அதுதான் சரியான அணுகும் முறை !

//கட்டுரையின் கருத்துக்களை ஏற்க விரும்பாதோர் பின்னூட்டத்தில் தெரிவிப்பார் அல்லது தனிப்பதிவே போடுவார்.

அப்படி சொற்பிழைகளை சுட்டிக் காட்டுவோர் மன அரிப்பை தீர்த்துக் கொள்வர் என்பதில் என்க்கு உடன்பாடு
இல்லை.

வாழ்த்துக்கள்...//

வாழ்த்துக்கு நன்றி, 'அரிப்பு' என்று எழுதியது தேவையற்றச் சொல்லாகத்தான் தெரிகிறது, அதை சரி செய்கிறேன். சுட்டியதற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// கார்க்கி said...
//சிறுது//

சிறிது

//மொழிக்களுக்கும்//

மொழிகளுக்கும்

//மற்றொமொழிகளில்//

மற்றமொழிகளில்

இது முதல் ஆறு வரிகளில் நான் கண்ட பிழைகள் :))))))))))))))))

5:03 PM, April 01, 2009//

தட்டச்சுப் பிழைகளை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி கார்க்கி, சரி செய்துவிடுகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...
அருமையாக‌ எழுதியுள்ளீர்க‌ள்

5:09 PM, April 01, 2009//

பாராட்டுக்கு நன்றி ஐயா !

கோவி.கண்ணன் சொன்னது…

// குடந்தைஅன்புமணி said...
பயனுள்ள பதிவு தோழரே! பிழைகளையெல்லாம் நானும் முடிந்தவரையில் சுட்டிகாட்டிதான் வருகிறேன். நானும் பிழையின்றி எழுதவே முயற்சி செய்கிறேன்.

5:11 PM, April 01, 2009//

கருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி அன்புமணி அவர்களே !

கோவி.கண்ணன் சொன்னது…

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
எல்லோருக்குமே சரியாக எழுத வேண்டுமெனும் எண்ணம் இருந்தும்; தவறு என்று தெரியாமல் எழுதுவோரே பலர். ஆனால் எழுத வேண்டுமெனும் ஆர்வத்துடன் செயல்படுமவர்களை ஊக்கப்படுத்துவதே கடமை.அதனால் தவறு காணும் போது சுட்டிக்காட்டுவதில் தவறில்லை.
எனக்குப் பலர் பல தடவை அந்த உதவி செய்துள்ளார்கள்.
சிலருக்கு நான் செய்துள்ளேன். பெரும்பாலும் "பிரசுரத்துக்கல்ல" எனும் குறிப்புடனே இட்டுள்ளேன்.
சில எழுத்துப்பிழைகளுக்காக ஒரு நல்ல விடயத்தைப் படிக்காமல் விடுவது. புத்திசாலித் தனமில்லை.
இச்சந்தர்ப்பத்தில் இந்த பகிடிக் கதைதான் ஞாபகம் வந்தது.
ஒரு தமிழறிஞர் எதிலும் எழுத்துப்பிழை இலக்கணப் பிழை கண்டால் அட்டகாசப்படுத்துவார்.
இவர் மகள் ;காதலித்தவனுடன் கடிதமெழுதி வைத்து விட்டு ஓடிவிட்டாள்.
வீடே அல்லோகல்லப்பட்டுதாம்....இவர் பங்குக்கு இவரும் கூச்சலிட்டாராம்.
என்னென்று "அந்த கடிதத்தில் பல எழுத்துப் பிழை" உண்டாம்.

5:15 PM, April 01, 2009//
யோகன், சிறப்பான உதாரணத்துடன் எழுதிய தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// ராமலக்ஷ்மி said...
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். //

மிக்க நன்றிங்க ராமலஷ்மி !

//ஆர்வமுடன் தமிழில் எழுத வருகிறார்கள் என்று நினைப்பு இருந்தால், ஒருவரின் எழுத்துப் பிழைக்காக அவரது கருத்துக்களை பறக்கணிப்பது குறையும், அவ்வாறு செய்வது தவறான அணுகுமுறை. தமிழில் பிழையாக எழுதுபவர்களை எழுதக் கூடாது என்று சொல்வதை விட அவர்களுடைய எழுத்துக்களை சீரமைக்க உதவுவதே தமிழுக்கான நற்பணி.//

அப்படியே வழிமொழிகிறேன்.

நானும் பதிவுலக நண்பர்கள் பலருக்கு தனிமடலில் அவர்கள் பிழைகளைத் திருத்த உதவி வருகிறேன். யாராவது அவர்களைக் கிண்டல் செய்திருந்தால் ’சொல்ல வரும் கருத்துக்கள் முன் சின்ன சின்னப் பிழைகள் பெரிது படுத்தப் படக் கூடாது’ என அங்கேயே ஆதரவும் தெரிவித்ததுண்டு.

5:17 PM, April 01, 2009//

சரியான, பயனுள்ள தகவல் !

கோவி.கண்ணன் சொன்னது…

// அதிஷா said...
இந்த வருடத்தின் ஆகச்சிறந்த பதிவுண்ணா இது.//

அதிஷா, இப்படியெல்லாம் அதிர்ச்சிக் கொடுக்கக் கூடாது ! :)

//தேவையானதும் தெரிந்துகொள்ள வேண்டியதும் தொகுத்துத்தந்தமைக்கு நன்றிகள் பல.

5:54 PM, April 01, 2009//
பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...
பல்லி
பள்ளி

இதில் உச்சரிப்பு மாறுவது
”ப” விலா இல்லை “ல்”.”ள்”லிலா

நன்றாக நான்கு முறை சொல்லி பார்த்து பதில் சொல்லவும்!

6:01 PM, April 01, 2009//

சென்னையில் பல்லியை Balli ம்பாங்க, பல்லி என்பதே சரியானச் சொல், பள்ளி > பள்ளியறை, பள்ளிக் கூடம்

கோவி.கண்ணன் சொன்னது…

// விஷ்ணு. said...
//கட்டுரையின் கருத்துக்களை ஏற்க விரும்பாதோர் சொற்பிழைக் குறித்து குறை கூறி மன அரிப்பை தீர்த்துக் கொள்வர்//

கண்முடித்தனமாக எதிர்பவர்களின் செயல் என்பது என் கருத்து.

அருமையான சிந்தனை.

6:01 PM, April 01, 2009//

விஷ்ணு, பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//// ராஜ நடராஜன் said...
என்னுடைய முந்தைய பின்னூட்டம் உங்களது இன்னொரு பதிவில் சரணடைந்து விட்டது.தேடிக் கண்டு பிடியுங்கள்.

6:09 PM, April 01, 2009//
ராஜ நடராஜன் to me
show details 6:05 PM (16 hours ago) Reply

ராஜ நடராஜன் has left a new comment on your post "இறைவன் இருக்கின்றானா ? எங்கே வாழ்கிறான் ?":

நான் தமிழைத்தான் படித்துக் கொண்டிருந்தேன்.திடீரென்று இறைவன் வந்துவிட்டான்!

சொல்வது புரிகிறதா? //

கண்டு பிடிச்சிடேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

// மணிகண்டன் said...
நல்ல கட்டுரை கோவி.

பல பிழைகளோட இருந்தா படிக்கறது சிரமம். அதுனால பலபேர் கரு பத்தியெல்லாம் யோசிக்காம எரிச்சல்ல போய்டுவாங்க.

அதே சமயம், யாராவது பிழைய சுட்டிக்காட்டினா அது மன அரிப்புன்னு யோசிக்கறது எனக்கு சரியா படல. கட்டுரைய படிச்சா அதோட கருவ பத்தி தான் பேசனும்ன்னு யார் சொன்னது ? இந்த மனப்பான்மை பலவருடம் எழுதினா தானா வரும் போல.//

மிகச் சரிதான், வடுவூர் குமார் அண்ணனுக்கு இட்ட மறுமொழியைப் படிங்க மணி.

//அதே சமயம் பல பிழைகளுக்கு காரணம் Google Transliterate மாதிரியான கருவிகளும் கூட. அளவுக்கு அதிகமா பொறுமை தேவையா இருக்கு.
//

இதுவரை பயன்படுத்திப் பார்க்கல, இனி முயற்சிக்கனும்.

//ஒரு ஆறு மாசம் எழுதினா பிழைகள் தானா குறையும். மொழி சம்பந்தப்பட்ட அனைத்தும் பழக்கத்தால் வரவேண்டும். படிப்பால் அல்ல ! இதுக்கு என்னைய கும்மாதீங்க. என்னோட தனிப்பட்ட கருத்து அது. அவ்வளவே !

6:22 PM, April 01, 2009//

சொற்பிழையை எழுத்துப் பயிற்சியினால் குறைக்க முடியும், எழுத்துப் பிழையைக் குறைக்க தமிழுக்கும் ஆங்கிலத்துக்கு இருப்பது போல் எழுதியில் (எடிட்டர்) சொற்திருத்தி மென்பொருள் இருந்தால் குறைத்துக் கொள்ளலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

// SUREஷ் said...
இப்படியெல்லாம் சொன்னீங்கண்ணத்தான் எங்களுக்கும் மன ஆறுதலா இருக்கும்

6:24 PM, April 01, 2009//

சுரேSH மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// வாசகன் said...
உங்கள் பதிவுகளிலேயே பல எழுத்துப் பிழைகள்-இந்தப் பதிவில் அல்ல,வேறு பல பதிவுகளில்-இருக்கின்றன.

எழுதிய பின் மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்த பின் வெளியிடுவதை வழமையாக்கிக் கொள்ளவும்.

6:45 PM, April 01, 2009//

சுட்டிக்காட்டுவதற்கு நன்றி, 15 பிழைகள் இருந்தால் எழுதியவர்களுக்கு அதில் 10 பிழைகள் தான் கண்ணுக்கு தெரியும், மீதம் 5 படிப்பவர்களுக்குத்தான் தெரியும். முடிந்தவரையில் குறைத்துக் கொள்ள முயல்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

// LOSHAN said...
அருமையான பதிவு..தேவையான கருத்துக்கள்..

சில எழுத்துப் பிழையான பதிவுகளைப் பார்க்கும்போது எரிச்சல் எழுந்தாலும் அவர்களைப் புறந்தள்ளக் கூடாது என்பதில் நானும் உடன்படுகிறேன்..

(தெரிந்தோ தெரியாமலோ எனக்கும் சில வேளைகளில் அவ்வாறு எழுத்துப் பிழைகள் வருவதுண்டு.. தட்டச்சினால் கூட)

பதிவர்களுக்கு அடிப்படையான பதிவு..

6:53 PM, April 01, 2009//

லோஷன், கருத்துகளுக்கும், பாராட்டுக்கும் நன்றி !

Sanjai Gandhi சொன்னது…

/பின்குறிப்பு : பிழையுடன் எழுதுபவர்கள் எழுதுவதற்கு பதில் 'சும்மா' இருக்கலாம் போன்ற கருத்துக்களை நான் எப்போதும் புறந்தள்ளுவதுண்டு. ஏனெனில் வலையில் எழுத வருபவர்களில் பெரும்பாண்மையினர் 10 ஆம் வகுப்பு, +2 வுக்கு பிறகு தமிழில் எழுதுவது தற்பொழுதுதான், எனவே பிழைகள் இயல்பானது என்று கருதுவதுடன், ஆர்வமுடன் தமிழில் எழுத வருகிறார்கள் என்று நினைப்பு இருந்தால், ஒருவரின் எழுத்துப் பிழைக்காக அவரது கருத்துக்களை பறக்கணிப்பது குறையும், அவ்வாறு செய்வது தவறான அணுகுமுறை. தமிழில் பிழையாக எழுதுபவர்களை எழுதக் கூடாது என்று சொல்வதை விட அவர்களுடைய எழுத்துக்களை சீரமைக்க உதவுவதே தமிழுக்கான நற்பணி.//

அதே.

கோவி.கண்ணன் சொன்னது…

// ராஜா said...
மடற்குழுக்களில் நான் எழுத ஆரம்பித்த காலங்களில் எனக்கு தமிழில் ரகர றகரம், னகர ணகரம், லகரம் ளகரப் பிழைகள் அடிக்கடி வரும். பல நண்பர்கள் திருத்தி இருக்கிறார்கள். இன்றும் ஒற்றுப்பிழைகள் அறியாமல் வந்துவிடுகிறது, ஆனாலும் கற்றுக்கொண்டு திருத்திக்கொள்கிறேன். இணையத்தில் நான் தமிழ் கற்றது அதிகம் (நண்பர் ஜீவ்ஸும் இந்தக் கருத்தில் ஒத்துப் போவார் என்று நம்புகிறேன்).

9:19 PM, April 01, 2009//

நண்பர் ராஜா, கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி, 90 விழுக்காடு எல்லோருமே இணையத்தில் தான் தமிழை கற்றுக் கொண்டோம், பள்ளிப் படிப்பில் தமிழ் படித்திருந்தாலும் நேரடியாக மதிப்பெண் எதிர்பாராது தற்பொழுதுதான் தமிழை முறையாக பயன்படுத்துகிறோம்

கோவி.கண்ணன் சொன்னது…

// ஷீ-நிசி said...
நல்லதொரு அருமையான முயற்சி! நண்பரே!

உங்கள் பதிவில் சில பிழைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..

இதில் பல கவனக்குறைவினால் நேர்ந்தவைகள் என்றே அறிகிறேன்.

பதிவு திருத்தப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே!

_______________________

சிறுது - சிறிது!

மொழிக்களுக்கும் - மொழிகளுக்கும்

எதோ புதுமையை - ஏதோ புதுமையை

கவன மின்மையாலும் - கவனமின்மையாலும்

எழுத்துகள் - எழுத்துக்கள்

வாய்ந்தாக - வாய்ந்ததாக

தவறாக எண்ணவேண்டாம் நண்பரே!
உங்கள் பதிவு ஒரு நல்ல முயற்சி!

10:03 PM, April 01, 2009//

ஷீ-நிசி, எழுத்துப் பிழையைச் சுட்டிக் காட்டி திருத்துவதற்கு உதவுவதற்கு மிக்க நன்றி, நான் இருமுறை சரி பார்த்தும் எப்படியோ விடுபட்டு இருக்கிறது. நீங்கள் சுட்டிய பிழைகளை சரி செய்துவிட்டேன்

கோவி.கண்ணன் சொன்னது…

// தமிழ்நெஞ்சம் said...
நீண்ட நாட்களாக யோசித்து இப்போது பதிவெழுதியிருக்கிறீர்கள்.//

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, இரு நாள் முன்புதான் நண்பர் ஜீவ்ஸ் உரையாடியில் இதுபற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

//உங்கள் பதிவு அபாரமாக அமைந்துள்ளது.//

பாராட்டுக்கு நன்றி

//தவறாக எழுதியவர்கள் - வேண்டும் என்று அப்படிச் செய்வதில்லை. அவர்களுக்கே தெரியாததாலேயே அப்படிச் செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய எழுத்தார்வத்தாலேயே எழுதத் துணிகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தப் பதிவு ஒரு சர்க்கரைப் பொங்கல்.

உங்களது இந்தப் பதிவை தினமும் படித்து மனதில் கொள்ள வேண்டும்.

நன்றி
த.நெ.

10:12 PM, April 01, 2009//

மிகச் சரியான கருத்து, யாருமே வேண்டுமென்று பிழையுடன் எழுதுவதில்லை என்பதைச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

// மங்கை said...
கோவி

"பிழைகளுடன் எழுதுபவர்கள் இனி எழுத வேண்டாம் ?"

அப்போ நான் தான் முதலில் நிறுத்தனும்..

10:28 PM, April 01, 2009//

தலைப்பை மட்டும் படித்து பின்னுட்டாமா ? பின்குறிப்பைப் பாருங்கள் ! :)

கோவி.கண்ணன் சொன்னது…

// Evanooruvan said...
நன்றி நண்பரே!!!!!

10:29 PM, April 01, 2009//

மிக்க நன்றி

ச.பிரேம்குமார் சொன்னது…

//பிழைகளுடன் எழுதுபவர்கள் இனி எழுத வேண்டாம் ?"//

இதை படித்ததும் முதலில் பகீரென்று இருந்தது. முழுக்க படித்ததும் தான் மூச்சு வந்தது :)

ஏன்னா நானும் இந்த ‘ன’,’ண’ மற்றும் ஒற்றுப்பிழைகள் நிறைய செய்பவன். முடிந்த அளவு திருத்திக்கொள்ள முயல்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

/ Thekkikattan|தெகா said...
//"பிழைகளுடன் எழுதுபவர்கள் இனி எழுத வேண்டாம் ?"

அப்போ நான் தான் முதலில் நிறுத்தனும்..//

ஏன் நிறுத்தணும், மங்கை?

அட வைச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றீங்க :-))?

எழுத்துப் பிழை அய்யோ நடக்குதேன்னு மனசு கெடந்து அடிச்சிக்கிட்டாலும் நாம நினைச்சதை வெளியில சொல்லி பகிர்ந்துக்காம இருந்தாத்தான் வஞ்சகம் பண்றோமின்னு பொருள்.

விடுங்க, விடுங்க எழுத எழுத பிழைகள் மட்டுப்பட்டு விடும்.

11:22 PM, April 01, 2009//

தெகா, சரிதான், முதலில் நம்மால் எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்து பதிவர்கள் எழுதுவதே பாராட்டத்தக்கது, சிலர் தனக்கு தமிழ் அவ்வளவாக எழுதவராது என்று நினைத்தாலும் எழுத வேண்டும் என்ற ஆரவத்துடன் வந்து எழுதுவார்கள், அவர்களுடைய எழுத்துப் பிழைகளை சுட்டிக்காட்டி திருத்த உதவுவதே நாம் அவர்களுடைய எழுத்தின் கருத்துக்கு கொடுக்கும் மதிப்பு.

கோவி.கண்ணன் சொன்னது…

// செல்வேந்திரன் said...
அன்பின் கோவி, பதிவுலகில் அதிகமான சந்திப்பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகளோடு எழுதுகிறவன் என்ற முறையில் எனக்கு பெரும் அவமானம் உண்டு. கால் நூற்றாண்டு காலமாய் பேசியும், படித்தும், எழுதியும், சிந்தித்தும் வரும் மொழியிலேயே இத்தனைப் பிரச்சனைகளெனில் புதிய மொழிகளைக் கற்பதும், புழங்குவதும் எத்தனைச் சிரமம்?!//

செல்வேந்திரன், நற்சிந்தனை. இங்கே தமிழில் எழுதுபவர்கள் எதும் லாப நோக்கத்தில் எழுதுவதில்லை, முடிந்தவரையில் ஒருவருக்கொருவர் பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ள உதவுவதும் நல்லொதொரு தமிழ் சூழலை உருவாக்கும்.

//எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்கிறார்கள். கண்ணில் புரையோடிப் போயிருந்தால் ஒத்துக்கொள்கிறாமோ? அதற்காக கண்ணையே பிடுங்குதலும் ஆகாது. இயன்றவரை பிழைகள் இல்லாமல் எழுதப் பழகுவது மொழியின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் உதவும். தமிழாய்ந்த தமிழர்கள் பிழையோடு எழுதுபவர்களைக் கண்டால் தாயன்போடு திருத்துவதும், பிழைஞர்கள் அதை பெருமகிழ்வோடு கற்றுக்கொள்ளுதலும் அவசியம்.//

அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் !

//தங்களது பதிவு அருமையானது. ஆனால், பிழைகள் மலிந்திருக்கின்றன.//

தயங்காமல் சுட்டிச் சொல்வதற்கு மிக்க நன்றி, குறைத்துக் கொள்ள பயிற்சி எடுத்துக் கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// பழூர் கார்த்தி said...
நல்ல இடுகை :-)

சுஜாதா கேட்டது: கொலையாளி என்கிறோம், கொலையாளன் என்பதில்லை ஏன்?

12:19 AM, April 02, 2009//

பதிவிற்கும் இதற்கும் எதுவும் தொடர்பிருக்கிறதா ? எனக்கு புரியவில்லை. மலையாளி என்கிறோம், ஏன் மலையாளன் என்பதில்லை ? அது போலத்தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

// ராம்.CM said...
அருமையான இடுகை.............

அழ‌காக‌ எழுதியுள்ளீர்க‌ள்..!

1:10 AM, April 02, 2009//

ராம்.CM மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// jackiesekar said...
பின்குறிப்பு : பிழையுடன் எழுதுபவர்கள் எழுதுவதற்கு பதில் 'சும்மா' இருக்கலாம் போன்ற கருத்துக்களை நான் எப்போதும் புறந்தள்ளுவதுண்டு. ஏனெனில் வலையில் எழுத வருபவர்களில் பெரும்பாண்மையினர் 10 ஆம் வகுப்பு, +2 வுக்கு பிறகு தமிழில் எழுதுவது தற்பொழுதுதான், எனவே பிழைகள் இயல்பானது என்று கருதுவதுடன், ஆர்வமுடன் தமிழில் எழுத வருகிறார்கள் என்று நினைப்பு இருந்தால், ஒருவரின் எழுத்துப் பிழைக்காக அவரது கருத்துக்களை பறக்கணிப்பது குறையும், அவ்வாறு செய்வது தவறான அணுகுமுறை. தமிழில் பிழையாக எழுதுபவர்களை எழுதக் கூடாது என்று சொல்வதை விட அவர்களுடைய எழுத்துக்களை சீரமைக்க உதவுவதே தமிழுக்கான நற்பணி.//

தங்கள் கருத்து மிகச்சரியானதே

1:23 AM, April 02, 2009//

jackiesekar, மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// ஆ.ஞானசேகரன் said...
எனக்கு அதிகமாக பிழை வந்த இடம் அதற்க்கு-பிழையானது (சரியானது அதற்கு...)
ற்-க்கு பின் ஒற்று வராது என்பது இலக்கணம்... இதை புரிந்துகொண்டபின் தவறுகள் குறைந்தது...

2:12 AM, April 02, 2009// ஞானசேகரன், பகிர்வுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// துளசி கோபால் said...
செல்வி ஷங்கர் (தமிழ்ப் பண்டிதர்) ஒருமுறை 'ஒன்னு' சரின்னாங்க.

10:22 AM, April 02, 2009

Results 1 - 10 of about 81,200 for ஒண்ணும். (0.50 seconds)

Results 1 - 10 of about 57,000 for ஒன்னும். (0.55 seconds)

துளசி அம்மா, இரு சொற்களையும் கூகுளில் தேடியபோது, பெருவாரியான மக்கள் 'ஓண்ணும்' என்பதற்கே மிகுதியாக (81,200)வாக்களித்துள்ளனர், 'ஒன்னும்' நிறைய (57,000) வாக்குகள் பெற்றிருக்கிறது, டெபாசிட் வாங்கிட்டு, இருந்தாலும் மிகுந்த வாக்குகள் பெற்ற வேட்பாளர்தானே முறைப்படி வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ நன்றி !

பட்டாம் பூச்சி விருது இருமுறை கிடைச்சுதா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// மணிநரேன் said...
அருமையானதொரு பதிவு.
திரு. அகநாழிகை கூறியதை

//தொடர்ந்து எழுதும் ஆர்வம் இருந்தாலே மொழியில் புலமை வாய்க்கும். ‘சித்திரமும் கைப்பழக்கம்.. செந்தமிழும் நாப்பழக்கம்‘ என்பது போலத்தான். மொழியார்வம் இருந்தால் பிழையின்றி எழுதுவது கடினமல்ல. தெரியாவிட்டாலும் கற்றுக் கொள்ளலாம்.//

வழிமொழிய விரும்புகிறேன்.

10:58 PM, April 01, 2009//

மணிநரேன், மிக்க நன்றி, உங்கள் திருப்பெயரும் மாறுபட்டதாக இருக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

// பிரேம்குமார் said...
//பிழைகளுடன் எழுதுபவர்கள் இனி எழுத வேண்டாம் ?"//

இதை படித்ததும் முதலில் பகீரென்று இருந்தது. முழுக்க படித்ததும் தான் மூச்சு வந்தது :)

ஏன்னா நானும் இந்த ‘ன’,’ண’ மற்றும் ஒற்றுப்பிழைகள் நிறைய செய்பவன். முடிந்த அளவு திருத்திக்கொள்ள முயல்கிறேன்
//

பிரேம்குமார், கருத்துக்கு மிக்க நன்றி !

மங்கை சொன்னது…

கோவி கண்ணன்

எல்லாமே படிச்சிட்டு..சந்தோஷத்துல போட்ட பின்னூட்டம் தான் அது.. பின்னூட்டம் சந்தோஷத்தை வெளிப்படுத்தலை... அவசரத்துல நன்றி கூட சொல்ல்லை.. ரொம்ப நாளா மனசுக்குள்ள உறுத்தீட்டு இருந்த விஷயம் இது..

நான் பிழையா எழுதறதாலேயே அந்தப் பக்கம் வருவதை நிறுத்திக்கிட்டவுங்களும் உண்டு..

நன்றி கோவி...

சரவணன் சொன்னது…

வலைப்பதிவு ரொம்பவும் அருமையாக இருந்தது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//日本 1:14 PM, April 02, 2009

வலைப்பதிவு ரொம்பவும் அருமையாக இருந்தது.//

சீனர்களும் வந்து படிக்கும் புகழை உங்கள் பதிவு பெற்றிருக்கிறது!
வாழ்த்துகள் கோவியாரே!

சரவணன் சொன்னது…

சீனாகாரன் இல்லபா. தமிழன். இங்கே ஜப்பான் ல வெலை.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

மிகவும் அருமையான இப்பதிவின் மூலம் தமிழ் கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள்.
சமீபத்தில் மதுபானக் கடையின் (டாஸ்மாக்) அருகில் ஒரு மிகச் சிறிய உணவகத்தைப் பார்த்தேன். அங்கிருந்த விலைப் பட்டியலில் "கள் தோசை" என்று இருந்தது. அப்போதுதான் எனக்கு ஐயம் ஏற்பட்டது. இது கல் தோசையா? இல்லை கள் தோசையா என்று. போதை தரும் தோசையோ?? (இன்னும் சொல்லப்போனால், சென்னையில்தான் நான் கல்தோசை என்று ஒன்று இருப்பதைக் கண்டேன்.) அதனால், தெரிந்தவர்கள் யாராவது, இது கல் தோசையா? இல்லை கள் தோசையா என்பதைத் தெளிவுபடுத்தவும்.
நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

// மங்கை said...
கோவி கண்ணன்

எல்லாமே படிச்சிட்டு..சந்தோஷத்துல போட்ட பின்னூட்டம் தான் அது.. பின்னூட்டம் சந்தோஷத்தை வெளிப்படுத்தலை... அவசரத்துல நன்றி கூட சொல்ல்லை.. ரொம்ப நாளா மனசுக்குள்ள உறுத்தீட்டு இருந்த விஷயம் இது..

நான் பிழையா எழுதறதாலேயே அந்தப் பக்கம் வருவதை நிறுத்திக்கிட்டவுங்களும் உண்டு..

நன்றி கோவி...
//

மங்கை, மீண்டும் வந்து ஐயம் தீர்த்ததற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//日本 said...
வலைப்பதிவு ரொம்பவும் அருமையாக இருந்தது.
//

நன்றி !

இந்த சீன எழுத்துக்குப் பொருள் ஜப்பானாமே ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
//日本 1:14 PM, April 02, 2009

வலைப்பதிவு ரொம்பவும் அருமையாக இருந்தது.//

சீனர்களும் வந்து படிக்கும் புகழை உங்கள் பதிவு பெற்றிருக்கிறது!
வாழ்த்துகள் கோவியாரே!

1:17 PM, April 02, 2009
//

ஆஹா, என் பதிவை ஜப்பானில் ஜாக்கிசான் படிச்சாக, அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சன் படிச்சாகன்னு நானும் சொல்லிக்கலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//சரவணன் said...
சீனாகாரன் இல்லபா. தமிழன். இங்கே ஜப்பான் ல வெலை.
//

தீர்ந்தது சந்தேகம் ! இருந்தாலும் அப்படியே விட்டிருக்கலாம், என் பதிவை சீனர்களெல்லாம் தமிழ் கற்றுக் கொண்டு படிக்கிறார்கள் என்று விளம்பரத்துக்கு பயன்படுத்தி இருப்பேன்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//" உழவன் " " Uzhavan " said...
மிகவும் அருமையான இப்பதிவின் மூலம் தமிழ் கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள்.
சமீபத்தில் மதுபானக் கடையின் (டாஸ்மாக்) அருகில் ஒரு மிகச் சிறிய உணவகத்தைப் பார்த்தேன். அங்கிருந்த விலைப் பட்டியலில் "கள் தோசை" என்று இருந்தது. அப்போதுதான் எனக்கு ஐயம் ஏற்பட்டது. இது கல் தோசையா? இல்லை கள் தோசையா என்று. போதை தரும் தோசையோ?? (இன்னும் சொல்லப்போனால், சென்னையில்தான் நான் கல்தோசை என்று ஒன்று இருப்பதைக் கண்டேன்.) அதனால், தெரிந்தவர்கள் யாராவது, இது கல் தோசையா? இல்லை கள் தோசையா என்பதைத் தெளிவுபடுத்தவும்.
நன்றி.
//

உழவன், எனக்கும் கள் தோசையா ? கல் தோசையான்னு தெரியல. சற்று புளிப்பாக இருக்கும் அதனால் 'கள்' தோசைங்கிறாங்களா ? (தோசைக்) கல்லில் சுடுவதால் (அப்பறம் என்னத்துல சுடுவாங்கனு கேட்கக் கூடாது) கல் தோசைங்கிறாங்களா ன்னு சரியாக தெரியல, ஆனா இரண்டு தோசை வைப்பாங்க, மென் மஞ்சள் நிறத்தில் இருக்கும், தொட்டுக் கொள்ள புளிக் குழம்பு அல்லது கார குழம்பு கொடுப்பாங்க

சரவணன் சொன்னது…

//日本
இந்த சீன எழுத்துக்குப் பொருள் ஜப்பானாமே ?//

ஆமாம். 日本 - நிஹோன் என்று சொல்லலாம்.

Desperado சொன்னது…

//சுல்தான் 8:33 PM, April 01, 2009
நல்ல முயற்சி. ஆனாலும் பதிவில் நிறைய தவறுகள் இருக்கிறது ஜிகே.
//மழைத்தேன் இவளென மலைத்தேன்..... //
அது "மலைத் தேன் (Honey from Hill) இவளென மலைத்தேன்" என வருமென்று நினைக்கிறேன்.
//

//மலைத்தேன் இவளென ம'ழை'த்தேன்..... //

even after Mr.sultan ponited out this mistake, you haven't corrected it yet.

அபி அப்பா சொன்னது…

எனக்கும் இந்த பதிவுக்கும் சாம்மந்தமில்லைன்னு நினைக்குறேன்! வர்ட்டா!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//Desperado said...
//சுல்தான் 8:33 PM, April 01, 2009
நல்ல முயற்சி. ஆனாலும் பதிவில் நிறைய தவறுகள் இருக்கிறது ஜிகே.
//மழைத்தேன் இவளென மலைத்தேன்..... //
அது "மலைத் தேன் (Honey from Hill) இவளென மலைத்தேன்" என வருமென்று நினைக்கிறேன்.
//

//மலைத்தேன் இவளென ம'ழை'த்தேன்..... //

even after Mr.sultan ponited out this mistake, you haven't corrected it yet.
//

மன்னிக்கவும், உடனடியாக பின்னூட்டம் வெளியாகவேண்டும் என்பதற்காக மட்டுறுத்தலை எடுத்துவிட்டதால் பல சமயங்களில் பின்னூட்டங்களுக்கு உடனடியாக பதில் அளிக்க முடியாமல் போனது.

சரி செய்துவிட்டேன், சுட்டியதற்கு நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்