பின்பற்றுபவர்கள்

5 மார்ச், 2009

ஜெ திடீர் உண்ணாவிரதம் ஏன் ?

தற்பொழுது ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு அலை தமிழகத்தில் வீசுகிறது. இலங்கைக்கு போர்தளவாடங்கள் வழங்கி ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மீது தமிழக மக்கள் எரிச்சல் அடைந்திருக்கிறார்கள், தேர்த்தல் தேதி அறிவிக்கும் முன், முன் அறிவிப்பாக பிராணாப் முகர்ஜி விடுதலை புலிகளின் போர் நிறுத்த ஒத்துழைப்பை இலங்கை அரசு மதித்து போரை நிறுத்த வேண்டும் என்பதை செய்தியாளர்களின் கூட்டத்தில் பேசினார். இது இந்திய அரசு சார்பிலான அறிவிப்பு அல்ல, காங்கிரஸ் புள்ளியின் கருத்தாக மட்டுமே பார்த்த இலங்கை அரசு பிராணாப்பின் பேச்சை நிராகரித்தது.

தற்பொழுது காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடரப் போவதாக அறிவித்துள்ளதால், காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என்கிற கையெழுத்து இயக்கமும் விரைவாக செயல்படுவதால் அந்த வாக்குகளை அள்ளும் பொருட்டு ஜெ... 'இலங்கை' தமிழர்களை காக்க போர் நிறுத்தம் வேண்டும் என்றும், இலங்கை தமிழர்களைக் காக்க தவறியதாக காங்கிரஸ் - திமுக அரசுகளை கண்டித்தும் விரதம் இருக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். இதே ஜெ ஒரு மாதத்திற்கு முன்பு 'போர் என்றால் அப்பாவிகள் பலியாவது இயற்கை' என்று திருவாய் மலர்ந்தவர் தான்.

எப்போதும் வெற்றிக் கூட்டணி பக்கமே இருக்க நினைக்கும் பாமக தலைமை, தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக விற்கு எதிரான அலையை புரிந்து கொண்டு கூட்டணி பற்றி முடிவெடுக்காமல் தயக்கம் காட்டி வருகிறது. ஈழத்தமிழர்களுக்க்கு ஆதரவாக அறிக்கை விட்டால் அதிமுக பக்கம் வருவதாக பாமக தரப்பு அதிமுக தரப்பிடம் தெரிவித்ததாகவும், கூட்டிக் கழித்துப் பார்த்துவிட்டு கூட்டணி பலம் தேவை என்பதால் ஜெ இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும் என்று தினமலர் பாணி அப்பாவிகளும், ஏழை எளியோரும் நினைக்கிறார்கள் :)

ஜெ வின் உண்ணாவிரத அறிவிப்பில் 'ஈழத்தமிழர்கள்' என்று எதுவும் குறிப்பிடப் படவில்லை, 'இலங்கை தமிழர்கள்' என்றே தெளிவாக குறிப்பிட்டு இருப்பதால் ஈழத்தமிழர்களின் தனிநாடு கோரிகையை ஜெ கண்டுகொள்ளவில்லை என்பதை அரசியல் நோக்கர்கள் (அவர்கள் எல்லாம் யாருன்னு கேட்காதிங்க) உறுதிப்படுத்துகிறார்கள்.

ஆக ஈழ ஆதரவு, காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளை குறிவைத்து அதிமுக - பாமக நெருங்கிவருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவர் ஐயாவிடம் இருந்து காட்டமான விமர்சனங்கள் திமுக மீது வீசப்படும், அதன் பிறகு மக்கள் நல அமைச்சர் சின்ன ஐயா பதவி விலகுவார். திமுக கூட்டணியில் இருந்து விலக மக்கள் நல அமைச்சர் மட்டும் பாமக தரப்பில் தயக்கம் காட்டி வருகிறாராம்.

பாமக கூட்டணியில் இருந்து விலகியதும் அந்த இடத்தை நிரப்ப காங்கிரஸ் தேமுதிகவிடம் பேச்சு நடத்துவதாக சொல்கிறார்கள்.

***

எது எப்படியோ, ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பெருகுவது மகிழ்ச்சியளிக்கிறது, பிஜேபி ஈழத்தமிழர்களுக்காக பாரளுமன்றத்தில் பேசியதால் பிஜேபி தமிழ்நாட்டுக்கு ஆகாது என்று சொன்ன திமுக அனுதாபிகாள் பலரும் கூட பிஜேபி - திமுக கூட்டணி உருவாக வேண்டும் என்று ஈழ நலனை முன்னிறுத்தி கருத்து கூறி இருந்தனர். ஜெவின் திடீர் உண்ணாவிரதம் தேர்தலை முன்னிறுத்தியது என்று அறிந்தாலும் ஈழத்தமிழர்களை நசுக்கும் இலங்கை அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் என்பதால் வரவேற்கத் தக்கதே.

16 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஈழத்தமிழர்களை வைத்து பிணந்திண்ணி அரசியல் நடத்தி, தனது நாடகத்தின் முதல் அத்தியாயத்தை கருணாநிதி சிறப்பாக முடித்துவிட்டார். இரண்டாவது அத்தியாயத்திற்கு ஜெயலலிதாவா? ஐயகோ நாடு தாங்காதுடா சாமி! போரியல் சிந்தனை விதைத்த போறச்சி தலைவிதானே இந்தத் தாய்! பாவம் தமிழனை ஏமாற்ற இத்தனை பேர் களமிறங்கி இருக்கிறார்களே? இந்த நாய்கள் உருப்படுமா? ஒரு கேடும் வராதா இவர்களுக்கு?

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

நேற்று இரவு சன் தொலைகாட்சியில பதவி படுத்தும் பாடு அப்டின்னு ஒரு படம் பார்த்தேன். இன்னைக்கு சன் செய்தியில அம்மாவோட உண்ணாவிரத அறிவிப்பு செய்திய சொன்னதும் கருமம் நேற்று பார்த்த படத்து தலைப்புத் தான் நினைவுக்கு வருது.

நாமக்கல் சிபி சொன்னது…

//வின் திடீர் உண்ணாவிரதம் தேர்தலை முன்னிறுத்தியது என்று அறிந்தாலும் ஈழத்தமிழர்களை நசுக்கும் இலங்கை அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் என்பதால் வரவேற்கத் தக்கதே.//

வேற வழி!

நட்புடன் ஜமால் சொன்னது…

சுகர் ஜாஸ்தியாயிடிச்சுன்னு இரண்டு நாள் பட்டினி இருக்க சொல்லி ‘டொக்டர்’ சொன்னாராம்

வால்பையன் சொன்னது…

எலக்‌ஷன் வந்துருச்சேசேசேசேசே!!!!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
எலக்‌ஷன் வந்துருச்சேசேசேசேசே!!!!!!!
//

வாங்க நட்சத்திர பதிவரே.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இவர் இதை எப்போதோ கடைப்பிடித்திருந்தால்.....
அவர் உடல் நிலைக்கு உவப்பாக இருந்திருக்கும்.
அடடா?? தேர்தல் வருகுதல்லோ!!! இனிக் கூத்துத்தான்..
இந்த முட்கிரீடம் போன்ற பதவிக்கு இவங்க அடிக்கும் கூத்து
ஒண்டு ஆசுப்பத்திரியில....அடுத்தது உண்ணா விரதமாம்.
தமிழ்நாட்டு மக்கள் உலகில் மிகக் கொடுத்துவைத்தவர்கள்;
இப்படிக் கோமாளிகள் கிடைக்க வேண்டுமே!!!சிரிப்பூட்ட

ILA (a) இளா சொன்னது…

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்
http://www.writermugil.com/?p=415

பழூர் கார்த்தி சொன்னது…

தொடர் உண்ணாவிரதாமா? ஒருநாள் அடையாள உண்ணாவிரதமா??

கோவி.கண்ணன் சொன்னது…

//பழூர் கார்த்தி said...
தொடர் உண்ணாவிரதாமா? ஒருநாள் அடையாள உண்ணாவிரதமா??
//

ஈழ தமிழர்களுக்காக உண்ணாவிருதம் இருந்தார் என்று சொல்லும் ஒரு வரலாற்று அடையாளத்துக்கு தொடர்ந்த உண்ணாவிருதம்.

:)

சொல்லரசன் சொன்னது…

ஆடு நனைகிறதுனுன் ஓநாய் வருத்தபட்டத போல இருக்கு

மருதநாயகம் சொன்னது…

உண்ணாவிரதத்துக்கு இந்த முறையும் கேரவன் வருமா?

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//ஜெ திடீர் உண்ணாவிரதம் //

ha...haa..haaa..

நையாண்டி நைனா சொன்னது…

இனி நீங்க, மதிப்பிற்கு உரிய TVRK, குசும்பன், மற்றும் பல பதிவர்கள் கொஞ்ச காலத்திற்கு அரசியல் காமடி எழுத வேண்டாம். அந்த வேலையை இந்த அரசியல்வாதிகளே செய்து கொள்வார்கள். மீறி எழுதினால் உங்கள் டெபாசிட் காலி தான்.

ராம்.CM சொன்னது…

//ஜெ திடீர் உண்ணாவிரதம் //

ha...haa..haaa..

enRenRum-anbudan.BALA சொன்னது…

//எது எப்படியோ, ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பெருகுவது மகிழ்ச்சியளிக்கிறது,
//
//ஜெவின் திடீர் உண்ணாவிரதம் தேர்தலை முன்னிறுத்தியது என்று அறிந்தாலும் ஈழத்தமிழர்களை நசுக்கும் இலங்கை அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் என்பதால் வரவேற்கத் தக்கதே.
//
அவ்வளவு தான் மேட்டர்! போர் நிறுத்தம் வர வேண்டும், அது மிக மிக அவசியம், உடனடியாக !!!

மற்றபடி, அரசியல் அளவில், மிகச் சிலரைத் தவிர ஈழத் தமிழர் பால் உண்மையான அக்கறை கொண்டவர் இங்கு இல்லை என்பது வேதனை. அவர்கள் அவலத்தை வைத்து அரசியல் செய்வது கொடுமை, கேவலம் :-(

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்