பின்பற்றுபவர்கள்

19 டிசம்பர், 2008

திரட்டிகள் ரேஸ்... யாருக்கு முதலிடம் !

வலைப்பதிவுகள், வலைப்பதிவாளர்கள் எண்ணிக்கை மிகுதியாக மிகுதியாக திரட்டிகளின் (தமிழ்பதிவுகள் தமிழ்வெளி சங்கமம் தமிழிஷ் தமிழ் கணிமை திரட்டி.காம் ) எண்ணிக்கையும் மிகுந்து கொண்டே வருகிறது.... தற்பொழுது தமிழ் பதிவு திரட்டியாக 10க்கு மேற்பட்ட திரட்டிகள் இயங்குகின்றன.

திரட்டிகள் புதிதாக எதுவும் செய்தால் தான் பதிவர்களை ஈர்க்குமா ? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனெனில் தமிழ்மணத்தை விட பதிவர்களுக்கு பலவசதிகளை செய்து தந்ததாகச் சொல்லப்பட்ட தேன்கூடு தமிழ்மணத்திற்கு அடுத்த நிலையில் தான் இருந்தது. தற்பொழுது தேன்கூடு திரட்டி செயலில் இல்லை.

புதிதாக தமிழிஷ் பல வசதிகளைத் தருவதாக அறிவித்திருக்கிறது, பல பதிவர்கள் அதில் இணைத்திருக்கின்றனர். தமிழிஷ் வாக்குகள் பதிவர்களை ஊக்கப்படுத்துவதாக பதிவர்கள் பலர் நினைக்கின்றனர். வாக்கு எண்ணிக்கை பதிவில் தெரியாவிட்டாலும் வாக்கு அடிப்படையில் வாசகர் பரிந்துரையை தமிழ்மணமும் வைத்திருக்கிறது.




தமிழிஷ் போலவே புதிதாக இன்னொரு திரட்டியும் வந்திருக்கிறது. இன்னும் பெயர் வைக்கவில்லை போலும், நெல்லைதமிழ்.காம் என்ற இணையத் தளம் நடத்துபவர்களே இதையும் நடத்துகிறார்கள், வால் பையனைத் தவிர வேறு யாரும் இதுவரை இணைக்கவில்லை. தமிழிஷ்க்கும், நெல்லை திரட்டிக்கும் அட்டைப் பலகைத் தவிர வேறு பெரிய வேறுபாடு தெரியவில்லை.



******

தமிழ் திரட்டி ஆரம்பிக்கும் தமிழார்வளர்கள் பதிவர் ஒவ்வொருவருக்கும் மின் அஞ்சல் மூலமாகவே, தனிப்பட்ட நண்பர்கள் வழியாகவோ சொல்லி அறிமுகப் படுத்துகிறார்கள். 10க்கு மேற்பட்ட திரட்டி இருந்தால் ஒரு பதிவர் ஒவ்வொரு திரட்டியிலும் பதிவை இணைப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. பதிவர்களின் வலைப்பதிவும், உள்ளிடும் காப்புரிமை உடையது அல்ல. எனவே திரட்டிகள் பதிவை திரட்டும் வேலையை தானாகவே செய்யலாம். ஒவ்வொரு திரட்டியிலும் இணைத்துவிடுவது பதிவர்களுக்கு நேர விரையாமாகும் வீன் வேலை.

திரட்டிகள் புகழடைய பதிவர்களை ஊக்கப்படுத்தினால் தான் உண்டு, அதைத் தமிழ்மணம் சரியாக செய்கிறது. நட்சத்திர தேர்வுகளில் குளறுபடிகள் இருப்பதாக பலர் சொல்கின்றனர். என்னுடன் எழுத வந்த பதிவர்கள் சிலருக்கு இன்னும் நட்சத்திர வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. குலுக்கல் முறையில் நட்சத்திரம் யார் என்று தேர்ந்தெடுத்தால் மட்டுமே நீண்ட காலப் பதிவர்கள் விடுபட காரணம் உண்டு எனலாம். நீண்ட காலப் பதிவர்களில் இன்றும் எழுதிக் கொண்டு இருப்பவர்களில் யார் யார் தமிழ்மணம் நட்சத்திரம் ஆகவில்லை என்ற கணக்கை தமிழ்மணத்தால் எடுக்க முடியும்.

தமிழ்மணம் போல் பதிவர்களை ஊக்கப்படுத்தினால் தான் பிறதிரட்டிகளும் புகழ்பெற முடியும். அங்கிருக்கிறது இங்கும் இருக்கு...அதுல என்ன இருக்கு ? என்பதெல்லாம் பதிவர்கள் அனைவரையும் சென்றடையும் விளக்கம் அல்ல. தமிழ்மணம் வார நட்சத்திரம் நடத்துவது போல், பதிவர்களை தொடர்ப்பு படுத்தி திரட்டிகள் ஏதும் செய்தால் அது பதிவர்களிடையே பேசப்பட்டு புகழடையும். இன்றும் கூட 'தினமலரின் எனது சிறுகதை' என்று சிற்றிதழில் படைப்புகள் வெளிவந்ததை பதிவர்கள் பெருமையாக நினைத்து அந்த தகவலை பதிவு செய்கிறார்கள், தான் பாராட்டப்பட வேண்டும் என்பதே பதிவர்களின் விருப்பம். புரிந்து கொண்டால் திரட்டிகள் தமிழ்மணம் போல் புகழடையும்.

பதிவர்களால் பாராட்டி பேசப்படும் திரட்டியே முதலிடத்திற்கு வரும். அந்த வகையில் தமிழ்மணம் சன் டிவி போல முதலிடத்தில் தொடர்ந்து இருக்கிறது

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து...நீங்களும் அப்படிச் சொல்லுங்க என்று வலியுறுத்தல......டிஸ்கி போடாமல் எதையுமே எழுத முடியல... :(

19 கருத்துகள்:

Tech Shankar சொன்னது…

நல்ல ஆழமான நுட்பமான பதிவு.

வாழ்க வளமுடன்

ILA (a) இளா சொன்னது…

சரியான ஆய்வுதான். இன்னும் கொஞ்சம் யோசிச்சிருக்கலாம். தமிழ் கணிமை செயலற்று இருக்கே அதையும் சொல்லி இருக்கலாம்

இளா

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA said...
சரியான ஆய்வுதான். இன்னும் கொஞ்சம் யோசிச்சிருக்கலாம். தமிழ் கணிமை செயலற்று இருக்கே அதையும் சொல்லி இருக்கலாம்

இளா
//

இளா, பாராட்டுக்கு நன்றி தேன் கூடு யூஆர்எல் பயன்பாட்டில் இல்லை, அதனால் தான் செயல்படவில்லை என்று குறிப்பிட்டேன், தமிழ்.கணிமை இயங்குகிறது பதிவுகள் Dec 06 க்கு பிறகு திரட்டப்படவில்லை

மக்கள் குரல் சொன்னது…

தமிழ்மணத்தை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு திரட்டியுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால் ஒப்பிடும் திரட்டியைக் காட்டிலும் தமிழ்மணம் அதிக பலத்துடன் மீண்டும் வருவது தான் தமிழ்மணத்தின் சிறப்பாக உள்ளது. தமிழ்மணம் தன்னை காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பத்துடன் மாற்றிக்கொள்வது காரணமாக இருக்கிறது

தமிழ்மணத்திற்கு போட்டியாக தேன்கூடு, கில்லி, தமிழ்வெளி, திரட்டி, சங்கமம், தமிழ் கணிமை என பல திரட்டிகள் கருதப்பட்டன. ஆனால் எப்பொழுதுமே தமிழ்மணம் தனித்துவத்துடன் உள்ளது. மற்ற திரட்டிகள் வந்த சூட்டோடு அப்படியே தேங்கி விடும்.

இப்பொழுது தமிழிஷ் வந்துள்ளது. தமிழிஷ் அதிக பரப்பரப்புடன் பேசப்பட்டாலும், தமிழ்மணத்தில் இருக்கும் சிறப்புகள் தமிழிஷ் திரட்டியில் இல்லை. தமிழிஷ் போலவே இன்னும் பல திரட்டிகள் உள்ளதால் (http://www.thamilbest.com/, http://india.nellaitamil.com/) தமிழ்மணத்திற்கு இருக்கும் தனித்துவம் தமிழிஷ்ற்கு இல்லை.

யார் வேண்டுமாலும் இன்னொரு தமிழிஷ் திரட்டியை உருவாக்கி விட முடியும். ஏற்கனவே உருவாக்கியும் இருக்கிறார்கள். ஆனால் இன்னொரு தமிழ்மணத்தை உருவாக்குவது கடினம் என்பதால் தான் தமிழ்மணம் அப்படியே உள்ளது

CA Venkatesh Krishnan சொன்னது…

பதிவு முழுவதும் உண்மைதான்.

ILA (a) இளா சொன்னது…

//திரட்டிகள் பதிவை திரட்டும் வேலையை தானாகவே செய்யலாம்//
நன்றிங்க. அநேகமா தமிழுல சங்கமம் மட்டுமே அதைச் செய்து வருது. கூகிள் முன்ன அதுக்காக ஓடை குடுத்துட்டு வந்தாங்க. இப்ப அதை நிறுத்தியதாலே கணிமை நிக்குது.

நிழல்-உண்மைங்க, தமிழ்மணத்தை அசைக்கிற வித்தை இன்னும் யாருக்கும் வரலை.அதே போல தமிழ்மணம் சுணங்கியதும் இல்லே.காரணம் தமிழ்மணத்தை நடத்துவது பதிவர்கள்தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//My Shadow said...
தமிழ்மணத்தை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு திரட்டியுடன் ஒப்பிடுகிறார்கள்.
//

:)

உங்கள் அனைத்துக் கருத்துக்கும் நன்றி ! நான் இங்கு தமிழ்மணத்தை மற்ற திரட்டிகளுடன் ஒப்பிடவில்லை. செயல்பாடுகள் மற்றும் பதிவர்களிடம் விருப்பம் அறிந்து இயங்குகிறது, ஊக்கப்படுத்துகிறது என்ற அளவில் எனக்கு தமிழ் மணம் பெஸ்டாக தெரிகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA said...
//திரட்டிகள் பதிவை திரட்டும் வேலையை தானாகவே செய்யலாம்//
நன்றிங்க. அநேகமா தமிழுல சங்கமம் மட்டுமே அதைச் செய்து வருது. கூகிள் முன்ன அதுக்காக ஓடை குடுத்துட்டு வந்தாங்க. இப்ப அதை நிறுத்தியதாலே கணிமை நிக்குது. //

சங்கமம் பற்றிய புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி. பதிவை இணைக்க கடவுச் சொல் மற்ற வழிமுறைகள் இவையெல்லாம் பதிவர்களுக்கு அயற்சியையே ஏற்படுத்தும். தமிழ்மணத்தில் ஏற்கனவே பதிவை பதிவர்களே இணைப்பது பழகி இருப்பதால் பெரிதாக தெரியவில்லை. மற்றபடி பதிவர்களே இணைப்பது பதிவர்களுக்கு எக்ஸ்ட்ரா வேலைதான்.

//நிழல்-உண்மைங்க, தமிழ்மணத்தை அசைக்கிற வித்தை இன்னும் யாருக்கும் வரலை.அதே போல தமிழ்மணம் சுணங்கியதும் இல்லே.காரணம் தமிழ்மணத்தை நடத்துவது பதிவர்கள்தான்.
//

:) மூத்தப் பதிவர் நீங்கள். சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Sharepoint the Great said...
நல்ல ஆழமான நுட்பமான பதிவு.

வாழ்க வளமுடன்
//

பாராட்டுக்கு நன்றி !

வால்பையன் சொன்னது…

தமிழ்மணம் சிறப்பாக செயல்படுகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை!

மற்ற படி உங்கள் கருத்துகளுடன் ஒத்து போகிறேன்!

புருனோ Bruno சொன்னது…

திரட்டி (aggregator) என்றால் என்ன

இனைய புத்தகக்குறி (Web Book mark)
என்றால் என்ன
--

SP.VR. SUBBIAH சொன்னது…

////பதிவர்களால் பாராட்டி பேசப்படும் திரட்டியே முதலிடத்திற்கு வரும். அந்த வகையில் தமிழ்மணம் சன் டிவி போல முதலிடத்தில் தொடர்ந்து இருக்கிறது
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து./////

இன்றைய நிலவரப்படி அதுதான் உண்மை!
அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை!

Athisha சொன்னது…

Ungal pathivai appadiyae repeetugiren

சயந்தன் சொன்னது…

இங்கே புருணோ கேட்டதப் போன்றே
தமிழ்மணம் ஒரு திரட்டியாகவும் தமிழிஸ் ஒரு Bookmark ஆகவும் செயற்படுகிறது. அதிலும் தமிழ்மணம் தனியே வலைப்பதிவுகளின் திரட்டி.
தமிழிஸ் அப்படியல்ல! அதில் பிபிசி செய்தியையும் இணைக்கலாம்.

தமிழிஸ் படித்துச் சுவைத்தவையை மற்றவரும் பகிரும் ஒரு புத்தகக்குறி ஆகத்தான் செயற்படுகிறது.

தமிழ்மணமும் ஆரம்பத்தில் தானியங்கி முறையில் பதிவுகளை திரட்டியதுதான். பின்னாளில் பதிவுகளின் எண்ணிக்கை காரணமாக ஏற்படும் தாமதத்த போக்க அது தன்னை மாற்றிக் கொண்டது.

தமிழிஸ் போன்ற புத்தகக் குறிகளை இலகுவாக செய்யலாம். எல்லாமே ரெடிமேட்டாக அடைப்பலகையுடன் சேர்த்துக் கிடைக்கின்றன.

விளையாட்டு விளையாட்டாக நான்கூட ஒரு bookmark செய்திருந்தேன். (திரட்டி அல்ல)
www.thamildigg.com

நட்புடன் ஜமால் சொன்னது…

புதிய விஷயங்கள்

புரியும்படியாக ...

நன்றி அண்ணா...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//என்னுடன் எழுத வந்த பதிவர்கள் சிலருக்கு இன்னும் நட்சத்திர வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.//

எனக்கு பல மூத்த பதிவர்கள் வாழ்த்து சொல்லாதது..ஏன்..என்று ..இப்போது புரிகிறது.

Venkatesh சொன்னது…

//திரட்டிகள் பதிவை திரட்டும் வேலையை தானாகவே செய்யலாம்//

திரட்டி.காம் பதிவுகளை தானாகவே திரட்டுகிறது manual ping செய்யும் முறை இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை 3000 பதிவுகளை திரட்டுவதற்கே server தொங்கிவிடுகிறது. இப்போது அடுத்த கட்ட aggregation technology ஒன்றை உருவாக்குவதில் முனைப்பாக உள்ளோன் விரைவில் அதை மேலும் பல வசதிகளோடு வெளியிட முடிவுசெய்துள்ளோம்.

வெங்கடேஷ்
thiratti.com

✪சிந்தாநதி சொன்னது…

தமிழ்.கணிமை மறுபடியும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆலோசனைகளும் வரவேற்கப் படுகின்றன :-)

http://tamil.kanimai.com/

பெயரில்லா சொன்னது…

மிகவும் நல்லதொரு பதிவு.... திரட்டிகளில் பலவிதம் இருந்தும் தகவல்.நெட் திரட்டி தனித்துவமாக செய்திகளை திரட்டி தருகிறது.....எனப்தில் ஐயமில்லை

www.thakaval.net

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்