பின்பற்றுபவர்கள்

8 டிசம்பர், 2008

நடுநிலையைக் காப்பாற்ற ஒரு பதிவு !

அன்பு தம்பி ஒருவர், "அண்ணே...பக்ரீத்துக்கு ஒரு வாழ்த்துப் பதிவு போட்டு உங்க நடுநிலைமையை மெய்ப்பிங்கன்னு" சொன்னாரு,

தன்மானச் சீண்டல்.... சரி போடுகிறேன் என்றேன்.

*****

இந்தப் படத்தில் சிந்தும் இரத்தம் அனைத்தும், மதவெறிகளாலோ, பிறர் தாக்கியதாலோ வந்தது அல்ல.







தியாகமாம் !

தீமிதி, அலகு குத்திக் கொள்ளுதல் (இந்து மதம்), சிலுவையில் அறைந்து கொள்ளுதல்(பிலிப்பைன்ஸ் கிறித்துவர்கள்), தன்னைத்தானே எரித்துக் காட்டுதல் (புத்த பிட்ச்சுகள்), இவர்களைப் போல் இறைவனுக்காக இரத்தம் சிந்தும் வழக்கம் இஸ்லாம் சமயத்திலும் இருக்கிறது. சிறுவர்கள் கூட ஆயுதங்களால் கிழித்துக் கொண்டு இரத்தம் சிந்தி முகமது நபியின் தியாகங்களை நினைத்துப் பார்க்கின்றனராம். இந்தியாவில், சென்னையில் ஐஸ் ஹவுஸ் பகுதியில் இரத்தம் சிந்தும் ஊர்வலம் நடக்கும், நேரடியாக பார்த்திருக்கிறேன். எனக்காக இரத்தம் சிந்துங்கள் என்று எந்த கடவுளும் சொன்னது கிடையாது. ஒரு பகுத்தறிவாளனாக பார்த்தால் கண்டிப்பாக இவை அறிவற்ற செயல், இரத்தம் தேவைப்பட்டு கிடைக்காமல் எவ்வளவோ நோயாளிகள் உயிரிழக்கின்றனர். அவர்களுக்கு கொடுத்து தியாகம் செய்யலாம்.


இஸ்லாமியர் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள் !

70 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

ஒட்டக பிரியாணி வேண்டாமா?

பகுத்தறிவுக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம், கண்ண மூடிகிட்டு எல்லாத்தையும் நம்புன்னு சொல்றது தானே மதம்.
அ(து)தை பிடித்தவர்களுக்கு நம்ம கட்டுரை எல்லாம் வெறும் உளரல் தான்

வால்பையன் சொன்னது…

அட நாந்தான் ஃபர்ஸ்டா?

வால்பையன் சொன்னது…

சிங்கையில ஒட்டக பிரியாணி உண்டா

வால்பையன் சொன்னது…

இங்கே விஜயகாந்த் அவர் செலவில் பிரியாணி போடுராராம்

ஓட்டு பொறுக்கிங்க

வால்பையன் சொன்னது…

ஒரு நாள் பிரியாணி போட வேண்டாம் வாழ் நாள் வெறும் சோத்துக்கு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு வழி சொல்லட்டும் முதலில்

வால்பையன் சொன்னது…

தீபாவளி கொண்டாடக்கூடாது காரணம் அது உண்மையில்லை ஆனால் பக்ரீத், கிரிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மட்டும் தவறாமல் வந்து விடும் நம்ம பகுத்தறிவு தலைவரிடமிருந்து

தமிழ் ஓவியா சொன்னது…

முட்டாள்தனமான மூடத்தனமான பண்டிகைகள் எதுவா இருந்தாலும் அது ஒழிக்கப்படவேண்டும்.

அக்னி பார்வை சொன்னது…

/// இரத்தம் தேவைப்பட்டு கிடைக்காமல் எவ்வளவோ நோயாளிகள் உயிரிழக்கின்றனர். அவர்களுக்கு கொடுத்து தியாகம் செய்யலாம்.
///

வழி மொழிகிறேன்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அன்பு தம்பி ஒருவர், "அண்ணே...பக்ரீத்துக்கு ஒரு வாழ்த்துப் பதிவு போட்டு உங்க நடுநிலைமையை மெய்ப்பிங்கன்னு" சொன்னாரு, //

இந்த வரியை வைத்து அந்த தம்பியைத் தெரிந்து கொண்டேன். அருமைத் தம்பியின் நல்லெண்ணத்திற்கு நன்றி!


//தீமிதி, அலகு குத்திக் கொள்ளுதல் (இந்து மதம்), சிலுவையில் அறைந்து கொள்ளுதல்(பிலிப்பைன்ஸ் கிறித்துவர்கள், தன்னைத்தானே எரித்துக் காட்டுதல் (புத்த பிட்ச்சுகள்), இவர்களைப் போல் இறைவனுக்காக இரத்தம் சிந்தும் வழக்கம்
இஸ்லாம் சமயத்திலும் இருக்கிறது. சிறுவர்கள் கூட ஆயுதங்களால் கிழித்துக் கொண்டு இரத்தம் சிந்தி முகமது நபியின் தியாகங்களை நினைத்துப் பார்க்கின்றனராம். //

இங்கே நடுநிலையைக் கண் கூடாகப் பார்க்கிறேன்!

படங்களைப் பார்த்து கருத்து தெரிவிக்க இயலவில்லை.

nadodi சொன்னது…

இந்த பைத்தியக்காரத்தனமான செயலுக்கும் இஸ்லாமிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.இது ஈரானில் உள்ள ஷியாக்களின் பழக்கம்.பக்தி முற்றி மறை கழண்ற செயல்.முஹம்மது நபி இதை செய்ய சொன்னதாக இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.செய்பவர்கள் எல்லாம் முட்டாள்கள்.ஐதீகம் என்ற பெயரில் கப்ஸாக்கள் எல்லாம் இஸ்லாத்தில் கிடையாது.

கார்க்கிபவா சொன்னது…

அய்யோ அய்யோ (இத வடிவேலு மாதிரி படிக்கனும்)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

மூடப்பழக்க,வழக்கங்கள் எல்லா மதத்திலும் இருக்கின்றன...பிற மதங்களில் இருப்பதை சொல்ல சிலருக்கு பயம்..அவ்வளவுதான்..
ஆனால்..ஒன்று..எந்த ஒரு இறை சக்தியும் உயிர் பலியோ..ரத்த தியாகமோ கேட்டிருக்காது.சாமி பெயரைச் சொல்லி ஆசாமிகள் சொன்னதே எல்லாம்.

enRenRum-anbudan.BALA சொன்னது…

நல்ல நடுநிலையான பதிவு :) இஸ்லாமியர் அனைவருக்கும் எனது தியாகத் திருநாள் வாழ்த்துகள் !

//எனக்காக இரத்தம் சிந்துங்கள் என்று எந்த கடவுளும் சொன்னது கிடையாது.
//
பொதுவாகச் சொல்கிறேன். கடவுள் பெயரால் செய்யப்படும் மிருக பலியையும் சேர்த்தே தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

இரத்தம் சிந்தும் இந்த ஊர்வலங்கள் எல்லாம் மிலாடி நபிக்குத்தானே நடக்கும்? இது பக்ரீத்தின் போதா நடக்கும்?
ஆனாலும் இந்த செயலைப் பற்றி எனது இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்ட போது அவர்கள் சொன்னது இது இஸ்லாமியக் கோட்பாடு கிடையாது என்றும், சிலரது மூடப் பழக்கங்கள் தான் என்றும் சொன்னார்கள். எனினும் நடுநிலை தவறாது பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்ட பெருவள்ளல் வால்பையன் நன்றி !

ஜோதி.பாரதி நன்றி !
அந்த தம்பி யாருன்னு தெரிஞ்சிக்கிட்டிங்களா ?

//வால்பையன் said...
தீபாவளி கொண்டாடக்கூடாது காரணம் அது உண்மையில்லை ஆனால் பக்ரீத், கிரிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மட்டும் தவறாமல் வந்து விடும் நம்ம பகுத்தறிவு தலைவரிடமிருந்து
//

பழக்கமாக இருப்பதும் வரலாறாக இருப்பதும் ஒன்று என்கிறீர்களா ?

// nadodi said...
இந்த பைத்தியக்காரத்தனமான செயலுக்கும் இஸ்லாமிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.இது ஈரானில் உள்ள ஷியாக்களின் பழக்கம்.பக்தி முற்றி மறை கழண்ற செயல்.முஹம்மது நபி இதை செய்ய சொன்னதாக இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.செய்பவர்கள் எல்லாம் முட்டாள்கள்.ஐதீகம் என்ற பெயரில் கப்ஸாக்கள் எல்லாம் இஸ்லாத்தில் கிடையாது.
//

சமயப்பழக்கம் இல்லை என்று நீங்கள் சொல்லலாம், ஷியாக்களிடம் சென்று நீங்கள் அவ்வாறு சொல்லி, நீங்கள் இஸ்லாமியர் இல்லை என்று சொல்லிவிட முடியாது. எந்த ஒரு மதத்திலும் மூடப்பழக்கவழக்கம் சிலரால் கடைபிடிக்கப் படுகிறது, ஆனால் அடுத்த மதத்தைக் குறித்துச் சொல்லும் போது மட்டும் அது மதம் உண்மையானது அல்ல என்று கூசாமல் சொல்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்

//கார்க்கி said...
அய்யோ அய்யோ (இத வடிவேலு மாதிரி படிக்கனும்)

10:49 PM, December 08, 2008
//

கார்க்கி,
இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி ?

// T.V.Radhakrishnan said...
மூடப்பழக்க,வழக்கங்கள் எல்லா மதத்திலும் இருக்கின்றன...பிற மதங்களில் இருப்பதை சொல்ல சிலருக்கு பயம்..அவ்வளவுதான்..
ஆனால்..ஒன்று..எந்த ஒரு இறை சக்தியும் உயிர் பலியோ..ரத்த தியாகமோ கேட்டிருக்காது.சாமி பெயரைச் சொல்லி ஆசாமிகள் சொன்னதே எல்லாம்.
//

இராதாகிருஷ்ணன் ஐயா,

உங்கள் கருத்தைச் சுறுக்கமாகச் சொல்லனும் என்றால் எல்லாம் வேறு வேறு குட்டையில் ஊரும் ஒரே விதமான மட்டைகள் தான் :)

//enRenRum-anbudan.BALA said...
நல்ல நடுநிலையான பதிவு :) இஸ்லாமியர் அனைவருக்கும் எனது தியாகத் திருநாள் வாழ்த்துகள் !
//
வழிமொழிவதற்கு நன்றி

//பொதுவாகச் சொல்கிறேன். கடவுள் பெயரால் செய்யப்படும் மிருக பலியையும் சேர்த்தே தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
//

அப்படி என்றால் வெட்டிய எருமைத் தலையுடன் இருக்கும் துர்க்கையை நீங்கள் புறக்கணிச்சிடுவிங்களா ? நைசாக ஆடுகோழி பலி தடைக்கு ஆதரவான கருத்து தானே இது, சாமியே ஆயுதங்களுடன் இருக்கும் போது பக்தன் விலங்கு பலிக்காக ஆயுதம் தூக்கக் கூடாது என்பது என்ன ஞாயம், அந்த சாமிகளுக்கு அதைப் படைப்பதாகத் தானே அவர்களது வழக்கம் இருக்கிறது. அதுச்சேரி இப்போது சைவ சாமிகளாக இருப்பவை அனைத்துமே புத்தர்காலத்தில் நரபலியும் கேட்டவை தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
இரத்தம் சிந்தும் இந்த ஊர்வலங்கள் எல்லாம் மிலாடி நபிக்குத்தானே நடக்கும்? இது பக்ரீத்தின் போதா நடக்கும்?
ஆனாலும் இந்த செயலைப் பற்றி எனது இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்ட போது அவர்கள் சொன்னது இது இஸ்லாமியக் கோட்பாடு கிடையாது என்றும், சிலரது மூடப் பழக்கங்கள் தான் என்றும் சொன்னார்கள். எனினும் நடுநிலை தவறாது பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.
//

யூசுப் பால்ராஜ் ஐயங்கார், தகவல்களுக்கு நன்றி !

காரூரன் சொன்னது…

மதம்பிடித்து விட்டது போலும்..., நம்ப முடியவில்லை,

அக்னிக்குஞ்சு. சொன்னது…

இது போன்ற மூட பழக்க வழக்கங்களை எதிர்ப்பதில் மத , சாதி வேறுபாடுகளை நாம் எப்போதும் பார்க்கவே கூடாது.

அனைத்து மூடநம்பிக்கைகளையும் , மதங்களையும் , கடவுளையும் ஒழிப்பதன் மூலமே ஒழிக்க முடியும் என்ற பெரியாரின் கருத்தினை ஒட்டி பகுத்தறிவாளர்கள் பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.!!!!!

CA Venkatesh Krishnan சொன்னது…

இந்தப் பதிவின் மூலம் அனைவருக்கும் தியாகத் திரு நாள் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.

வால்பையன் சொன்னது…

//பழக்கமாக இருப்பதும் வரலாறாக இருப்பதும் ஒன்று என்கிறீர்களா ?//

புனைவால் புனையப்பட்ட புனைவே வரலாறு.

மாற்று கருத்து இருந்தால் விளக்கவும்.
வெறும் புத்தகத்தில் இருப்பதையெல்லாம் உண்மை என்று நம்ப என் மூளை இன்னும் உறைந்து விடவில்லை.
உதாரணமாக சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வை சொல்கிறேன்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கருணாநிதி கைது செய்ய பட்டபோது
ஒவ்வோரு தொலைக்காட்சியும் ஒவ்வோரு விதமாக காட்டியது.
வரலாறும் அப்படி ஒவ்வொருவரும் தனது தேவைக்கேற்ப மாற்றி கொள்வார்கள்.

இதில் எதை நம்ப

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...
//பழக்கமாக இருப்பதும் வரலாறாக இருப்பதும் ஒன்று என்கிறீர்களா ?//

புனைவால் புனையப்பட்ட புனைவே வரலாறு.

மாற்று கருத்து இருந்தால் விளக்கவும்.
வெறும் புத்தகத்தில் இருப்பதையெல்லாம் உண்மை என்று நம்ப என் மூளை இன்னும் உறைந்து விடவில்லை.
உதாரணமாக சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வை சொல்கிறேன்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கருணாநிதி கைது செய்ய பட்டபோது
ஒவ்வோரு தொலைக்காட்சியும் ஒவ்வோரு விதமாக காட்டியது.
வரலாறும் அப்படி ஒவ்வொருவரும் தனது தேவைக்கேற்ப மாற்றி கொள்வார்கள்.

இதில் எதை நம்ப
//

தீபாவளி இந்துக்களுக்கான பொதுவழிபாடு என்பதில் எனக்கு ஒப்புதல் இருந்தாலும் அதற்கு காரணமாகச் சொல்லப்படும் நரகாசூரன் கதை புராண அடிப்படையிலானது, அது நடந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. (வெறும்) நம்பிக்கை தான்.

ஆனால் பிறமதத்தினர் குறிப்பாக கிறிஸ்துமஸ் ஏசுவின் பிறந்தநாளாக வரலாற்று அடிப்படையில் கொண்டாடப்படுகிறது, இஸ்லாமியர்களின் பண்டிகைகளும் முகமது நபிக்கு பிறகான பண்டிகைகள், அதன் வரலாற்று அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

இதைத்தான் பழக்கம் மற்றும் வரலாறு என்று குறிப்பிட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

காரூரான், அக்கினிகுஞ்சு மற்றும் இளைய பல்லவன் ஆகியோருக்கு நன்றிகள் !

வால்பையன் சொன்னது…

//ஆனால் பிறமதத்தினர் குறிப்பாக கிறிஸ்துமஸ் ஏசுவின் பிறந்தநாளாக வரலாற்று அடிப்படையில் கொண்டாடப்படுகிறது, இஸ்லாமியர்களின் பண்டிகைகளும் முகமது நபிக்கு பிறகான பண்டிகைகள், அதன் வரலாற்று அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

இதைத்தான் பழக்கம் மற்றும் வரலாறு என்று குறிப்பிட்டேன். //


நூல் பிடித்து கடைசி வரை ஆராய்ந்தால் பூனையை தூணில் கட்டிய கதை தான் எல்லாமுமாக இருக்கும். இயெசு டிசம்பர் 25 ம் தேதி தான் பிறந்தார் என்பதற்க்கு எதாவது பர்த் சர்டிபிகேட் இருக்கா?
இல்லை அவர் தனது பிறந்த நாளை கொண்டாட சொன்னாரா?

எதோ நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டா அவுங்க தான் கடவுள்.
இப்போ கூட சாய்பாபா, குரு வாசுதேவ்னு நிறைய கடவுள்கள் அல்லது அவதாரங்கள்.

இயற்கைக்கு நன்றி செலுத்த ஆரம்பித்த பண்டிகைகள் நாளடைவில் மதத்துடன் இணைக்கப்பட்டது. உதாரணம் இன்று பொங்கலை இந்துக்கள் மட்டும் கொண்டாடுவது.

என்னை பொறுத்தவரை கடவுள் என்று எதுவுமில்லை, பின் மதம் எப்படி வரும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...

//நூல் பிடித்து கடைசி வரை ஆராய்ந்தால் பூனையை தூணில் கட்டிய கதை தான் எல்லாமுமாக இருக்கும். இயெசு டிசம்பர் 25 ம் தேதி தான் பிறந்தார் என்பதற்க்கு எதாவது பர்த் சர்டிபிகேட் இருக்கா?
இல்லை அவர் தனது பிறந்த நாளை கொண்டாட சொன்னாரா?//

கிறித்துவர்கள் ஆதாரமின்றி கொண்டாடுகிறார்கள் என்று நினைப்பதற்கு இல்லை. இயேசுவுக்கு முன்பே பிறந்தவர்களான அரிஸ்டாட்டில், டைகிரிஸ், சாக்ரட்டீஸ், மற்றும் அலெக்சாண்டருக்கான துல்லியமான வரலாறுகள் இருக்கின்றன. நான் இயேசு கடவுளா ? தூதரா ? மற்றும் புனிதத்தன்மைக் குறித்த கேள்விக்குச் செல்லவில்லை. கிறிஸ்த்மஸ் கொண்டாடும் பழக்கம், ஏசுவின் பிறந்தநாளை முன்னிட்டே கொண்டாடுகிறார்கள். இஃதாவது 2000 ஆண்டுகளாக இருந்துவரும் நம்பிக்கை, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ஏனைய ஜெயந்திகள் வெறும் நட்சத்திர அடிப்படியில் கொண்டாடும் புராண பழக்கவழக்கம் மட்டுமே, இதற்கு பர்த் சர்டிபிகேட் கேட்கவே முடியாது

//எதோ நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டா அவுங்க தான் கடவுள்.
இப்போ கூட சாய்பாபா, குரு வாசுதேவ்னு நிறைய கடவுள்கள் அல்லது அவதாரங்கள்.//

அவர்களெல்லாம் வாழும் கடவுள்கள் அதாவது ஜீவன் முக்தர்கள் என்பார்கள். சர்கர நாற்காலியில் வந்து நோயுற்ற பக்தர்களை குணப்படுத்துவாங்க, அவர்களை இங்கே கொண்டுவராதிங்க, சாமி கண்ணை குத்திடும் (மூக்கு காது குத்தினாலும் எதாவது ஆபரணம் போட்டுக்கலாம்)

//இயற்கைக்கு நன்றி செலுத்த ஆரம்பித்த பண்டிகைகள் நாளடைவில் மதத்துடன் இணைக்கப்பட்டது. உதாரணம் இன்று பொங்கலை இந்துக்கள் மட்டும் கொண்டாடுவது.///

தவறு தமிழர் பண்டிகை, அதை இந்துக்கள் பண்டிகையாக்கி அவமானப்படுத்தாதீர்கள், இந்துக்களின் பூசை போல் வழிபாட்டு முறை மாற்றப்பட்டதேயன்றி, பொங்கல் இந்துக்க்கள் பண்டிகை கிடையாது

//என்னை பொறுத்தவரை கடவுள் என்று எதுவுமில்லை,//

தெரிந்து கொள்ள எதும் முயற்ச்சி எடுத்து தோல்வியுற்றீர்களா ? முடிவாகத் தெரிந்து வெற்றியடைந்தீர்களா ?

கடவுளை விடுங்கள், சென்ற நூற்றாண்டுவரை முக அமைப்பில் ஒற்றுமை இல்லை என்றால் இன்னார்க்கு இன்னார் அப்பா என்பதே நம்பிக்கையாகத் தானே இருந்தது, நமக்கு தெரியவில்லை என்பதால் ஒன்றை நிராகரிப்பதும் சரியான ஒன்றா ?

வால்பையன் சொன்னது…

//அவர்களெல்லாம் வாழும் கடவுள்கள் அதாவது ஜீவன் முக்தர்கள் என்பார்கள். சர்கர நாற்காலியில் வந்து நோயுற்ற பக்தர்களை குணப்படுத்துவாங்க, அவர்களை இங்கே கொண்டுவராதிங்க, சாமி கண்ணை குத்திடும்//

அப்புறம் எதுக்கு டாக்டருங்க!
இவுங்களே மக்கள காப்பாத்த வேண்டியது தானே!
இவனுங்க கண்ணயே இவனுங்களால பார்த்துக்க முடியாது என் கண்ன குத்துவானுங்கள
போங்க கோவிஜி ரொம்பவே தமாஷ் பண்ரிங்க

வால்பையன் சொன்னது…

//தவறு தமிழர் பண்டிகை, அதை இந்துக்கள் பண்டிகையாக்கி அவமானப்படுத்தாதீர்கள், இந்துக்களின் பூசை போல் வழிபாட்டு முறை மாற்றப்பட்டதேயன்றி, பொங்கல் இந்துக்க்கள் பண்டிகை கிடையாது//

நான் அவமான படுத்தியதால் அது கோவிச்சிகிட்டு போயிருச்சா என்ன?
ஒரு பண்டிகையின் மேல் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பை வியக்கிறேன்.
அது இயற்க்கைக்கு நாம் நன்றி சொல்லும் விழா, உண்மையில் இயற்கை நம்மிடம் நன்றியெல்லாம் எதிர்பார்க்கவில்லை, அதை நோண்டாமல் இருந்தாலே போதும்.

என் கேள்வி மற்ற மததினரும் பொங்கலை பொது பண்டிகையாக பார்கிறார்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...

அப்புறம் எதுக்கு டாக்டருங்க!
இவுங்களே மக்கள காப்பாத்த வேண்டியது தானே!
இவனுங்க கண்ணயே இவனுங்களால பார்த்துக்க முடியாது என் கண்ன குத்துவானுங்கள
போங்க கோவிஜி ரொம்பவே தமாஷ் பண்ரிங்க//

டாக்டர்கள் நோயை மட்டுமே குணப்படுத்துவார்கள், அடியார் அப்படியா ? ஜென்ம ஜென்மத்திற்கும் பிடித்திருக்கும் நோயைக் குணப்படுத்துவார்கள். அதனால் டாக்டரை இவர்களுடன் ஒப்பிடுவதற்கு கடுமையன கண்டனம் தெரிவிக்கிறேன். ஏனெனில் டாக்டர்களும் இவர்களிடம் தான் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். சாமியார்களின் சேவை அமைப்பில் 'டாக்டர்ஸ் விங்க்ஸ்' கேள்வி பட்டது இல்லையா ?

வால்பையன் சொன்னது…

//தெரிந்து கொள்ள எதும் முயற்ச்சி எடுத்து தோல்வியுற்றீர்களா ? முடிவாகத் தெரிந்து வெற்றியடைந்தீர்களா ?//

சினிமாவுல காட்டுற மாதிரி காட்டுக்கு போய் தவம் பண்ண சொல்றிங்களா!
இவனுங்க பண்ற கூத்தே சொல்லுதே கடவுள் வெறும் கற்பனை தான்னு

கோவி.கண்ணன் சொன்னது…

//என் கேள்வி மற்ற மததினரும் பொங்கலை பொது பண்டிகையாக பார்கிறார்களா?//

கொண்டாடும் முறைதான் காரணம், பொங்கல் தமிழர் பண்டிகை என்பற்காக போற்றிக் கொண்டாடும் கத்தோலிக்க கிறித்துவர்களை நீங்கள் பார்த்தது இல்லையா ?

பொங்கலுக்கு பானைக்கு பொட்டு வைப்பது சூரியனுக்கு படையல் போடும் வழக்கமெல்லாம் இருக்கு, தீப ஆரதனைப் போன்ற இந்து சமய சடங்குகள் அதனால் பிறமதத்தினர்களுக்கு கொண்டாட தயக்கம், இவை இல்லாமல் இருந்தால் அவர்களும் கொண்டாடுவாங்க.

வால்பையன் சொன்னது…

//சென்ற நூற்றாண்டுவரை முக அமைப்பில் ஒற்றுமை இல்லை என்றால் இன்னார்க்கு இன்னார் அப்பா என்பதே நம்பிக்கையாகத் தானே இருந்தது, நமக்கு தெரியவில்லை என்பதால் ஒன்றை நிராகரிப்பதும் சரியான ஒன்றா ? //

அப்பாவாக இருக்க முக அமைப்பு முக்கியமா? புதிய தகவல் இது எனக்கு.

எனக்கு தெரியவில்லை தான், சரி நிராகரிக்கவில்லை. தெரிந்தவர்கள் புரியவையுங்கள். என்னை நம்பவைக்கும் வாதங்களை முன்னிருத்துங்கள்.

காற்று, மின்சாரம் கண்ணுக்கு தெரிவதில்லை அதனால் அது இல்லை என்றாகிவிடுமா போன்ற சிறுபிள்ளை வாதத்தை விட்டு ஆரோக்கியமான விவாதத்திற்க்கு வர சொல்லுங்கள், அவர் எந்த மத்தை சேர்ந்தவராக இருந்தாலும்.

என் வாதம் இதே தான் கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
சினிமாவுல காட்டுற மாதிரி காட்டுக்கு போய் தவம் பண்ண சொல்றிங்களா!
இவனுங்க பண்ற கூத்தே சொல்லுதே கடவுள் வெறும் கற்பனை தான்னு
//
அப்போ காட்டுக் போய் கடவுளை பார்த்தேன் என்று சொல்வதையெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா ?

சோ.....பத்தியாளர்களின் கூத்துதான் உங்களின் நம்பிக்கை நிராகரிப்பின் அளவு கோலாக இருக்கிறது. சரிதானே ?

அதாவது உங்கள் சிந்தனைகளை தீர்மாணிப்பவர்கள் உங்கள் பிரியமான எதிரிகள். சரியா ? அவங்க இருக்குன்னு சொன்னா ஆதாரம் கேட்டு அது சேதாரமாக இருந்தால் இல்லைன்னு சொல்லுவிங்க, சரியா ?

வால்பையன் சொன்னது…

//டாக்டர்களும் இவர்களிடம் தான் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். //

டாக்டருகள் எல்லோரும் புத்திசாலியாக தான் இருக்க வேண்டுமா என்ன?
இதன் மூலம் முட்டாள் டாக்டருகளும் இருக்கிறார்கள் எண்பது நிறூபணமாகிறது

மதிபாலா சொன்னது…

நடுநிலையை நாம் காப்பாற்றுவது ஒருபுறம் இருக்கட்டும்..நாம் காப்பாற்றும் நிலையிலா நடுநிலை இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

வால்பையன் சொன்னது…

//தீப ஆரதனைப் போன்ற இந்து சமய சடங்குகள் அதனால் பிறமதத்தினர்களுக்கு கொண்டாட தயக்கம், இவை இல்லாமல் இருந்தால் அவர்களும் கொண்டாடுவாங்க. //

இதைத்தான் சொன்னேன், அது இந்து பண்டிகையாகவே மாற்ற பட்டு விட்டது

வால்பையன் சொன்னது…

//அப்போ காட்டுக் போய் கடவுளை பார்த்தேன் என்று சொல்வதையெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா ?//

சினிமாவில் நீங்கள் பார்த்ததில்லையா!
தவம் இருந்தால் கடவுள் நேரில் வந்து காட்சியளிப்பார்.
நம்பியிருந்தால் நானும் காட்டுக்கு போயிருப்பேனே.
இல்லை என்பதை எப்படி சொன்னாலும் இல்லை தானே

வால்பையன் சொன்னது…

//பத்தியாளர்களின் கூத்துதான் உங்களின் நம்பிக்கை நிராகரிப்பின் அளவு கோலாக இருக்கிறது. சரிதானே ?//

இதில் அளவுகோலல்லாம் இல்லை.
நான் பொதுவாக எல்லா கடவுள்களையும் சித்திரிக்கபடுவதாக கருதுகிறேன்.
பத்தியாளர்கள் பல கோணத்தில் இருக்கிறார்கள், நான் ஒரே கோணம் தான் அது கடவுள் இல்லை

துளசி கோபால் சொன்னது…

டிசம்பர் மாசம் வடகோளத்தில் பனிக்காலம். பனிக்காலம் முடிஞ்சு வசந்த காலம் ஆரம்பிக்கும்போதுதான் ஆடுகளின் பிரசவ காலம்.

இயேசு நாதர் பிறந்தப்ப, ஆட்டுக்குட்டிகளை அன்பளிப்பாகக் கொண்டுவந்து கொடுத்தாங்கன்னு பைபிளில் கதை இருக்குது.

டிசம்பரில் ஆட்டுக்குட்டிகள் எங்கே வந்துச்சு?

ஆகவே இயேசு டிசம்பர் மாதம் பிறக்கவில்லை.

ஜெஹோவா விட்னஸ் ன்னு ஒரு கிறிஸ்துவப் பிரிவு ஆட்கள் சொன்னது இது.


இங்கிலாந்து /ஐரோப்பா நாடுகளில் வசதியை முன்னிட்டு எப்பவோ ஒரு காலக்கட்டத்தில் 'டிசம்பர் 25 க்கு இயேசு ஜெனித்த விழா' கொண்டாட முடிவு ஆனதாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...
//சென்ற நூற்றாண்டுவரை முக அமைப்பில் ஒற்றுமை இல்லை என்றால் இன்னார்க்கு இன்னார் அப்பா என்பதே நம்பிக்கையாகத் தானே இருந்தது, நமக்கு தெரியவில்லை என்பதால் ஒன்றை நிராகரிப்பதும் சரியான ஒன்றா ? //

அப்பாவாக இருக்க முக அமைப்பு முக்கியமா? புதிய தகவல் இது எனக்கு.//

சென்ற நூற்றாண்டு வரை ஒரு பெண்ணுக்கு குழந்தை கொடுத்துவிட்டு வாய்கூசமல் இது என்னுடையது இல்லை என்று சொல்லி அவளுக்கு அவுசாரி பட்டம் கட்டிவிட்டிருக்காங்க, ஆனால் இப்போது அப்படி செய்ய முடியுமா ?

மரபணு சோதனை மூலம் நிரூபணம் செய்துவிட முடியும்.

//எனக்கு தெரியவில்லை தான், சரி நிராகரிக்கவில்லை. தெரிந்தவர்கள் புரியவையுங்கள். என்னை நம்பவைக்கும் வாதங்களை முன்னிருத்துங்கள்.
//

உங்கள் உணவில் உப்பு இருக்கிறதா என்று பிறரைப் பார்க்கச் சொல்லி தான் நீங்கள் சாப்பிடுவிங்களா ? கடவுளை கண்டுகொள்ளும் முறையையை யாருக்காவது ஏகபோக உரிமையாகவும் அவர்கள் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடியும் என்று யாராவது சொல்லி இருக்கிறார்களா ? உங்கள் இறை மறுப்புக்கு ஆதாரமாக இருப்பவை புராணகட்டுக்கதைகளும், நம்பிக்கையாளர்களின் போலித்தனம் மட்டும் தான்.

//காற்று, மின்சாரம் கண்ணுக்கு தெரிவதில்லை அதனால் அது இல்லை என்றாகிவிடுமா போன்ற சிறுபிள்ளை வாதத்தை விட்டு ஆரோக்கியமான விவாதத்திற்க்கு வர சொல்லுங்கள், அவர் எந்த மத்தை சேர்ந்தவராக இருந்தாலும்.//

கடவுளுக்கு மதத்திற்கும் தொடர்பே இல்லை என்றே பலர் சொல்லும் போது கடவுளைக் காட்டுங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவரென்றாலும் என்று சொல்லி நீங்கள் மீண்டும் மதத்தை அங்கு ஒட்டவைக்கப் பார்க்கிறீர்களே :)

//என் வாதம் இதே தான் கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை//

உலகத்திலேயே மிகவும் சுவையான பழம் ஒன்று சென்ற நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் இருந்தது என்று ஒருவர் சொன்னால், அப்படி ஒரு பழம் இல்லை, சும்மா அந்த நாட்டின் பெருமைக்காக அவ்வாறு சொல்கிறார் என்று நாம் நினைப்போம்.

வால்பையன் சொன்னது…

//அதாவது உங்கள் சிந்தனைகளை தீர்மாணிப்பவர்கள் உங்கள் பிரியமான எதிரிகள். //

என் சிந்தனை என்னிடம் தான் இருக்கிறது, அதை மேலும் மெருகேற்றுவது நீங்கள் சொன்ன எதிரிகளின் முட்டாள்தனமான வாதம் தான். அதற்கு நான் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்

வால்பையன் சொன்னது…

//அவங்க இருக்குன்னு சொன்னா ஆதாரம் கேட்டு அது சேதாரமாக இருந்தால் இல்லைன்னு சொல்லுவிங்க, சரியா ? //

வாத்தின் காரணம் முதலில் அவர்களுது குருட்டு தனமான நம்பிக்கையை அசைக்க வேண்டும் என்பது தான்.
நான் என்னளவில் தெளிவாக தான் இருக்கிறேன்.

வால்பையன் சொன்னது…

//உங்கள் உணவில் உப்பு இருக்கிறதா என்று பிறரைப் பார்க்கச் சொல்லி தான் நீங்கள் சாப்பிடுவிங்களா ? கடவுளை கண்டுகொள்ளும் முறையையை யாருக்காவது ஏகபோக உரிமையாகவும் அவர்கள் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடியும் என்று யாராவது சொல்லி இருக்கிறார்களா ? உங்கள் இறை மறுப்புக்கு ஆதாரமாக இருப்பவை புராணகட்டுக்கதைகளும், நம்பிக்கையாளர்களின் போலித்தனம் மட்டும் தான்.
//


வாழ்வியல் உதாரணங்கள் வேண்டாம்.
நான் சொல்ல வருவது கடவுள் என்பது ஒரு போதை தனமான தேவையாக இருக்கிறது,
கடவுள் இல்லாமலும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறேன். கடவுள் தேவையின் அடிப்படை காரணங்களை அவர்களே யோசித்தால் போதும், நான் கூட தேவையில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
டிசம்பர் மாசம் வடகோளத்தில் பனிக்காலம். பனிக்காலம் முடிஞ்சு வசந்த காலம் ஆரம்பிக்கும்போதுதான் ஆடுகளின் பிரசவ காலம்.

இயேசு நாதர் பிறந்தப்ப, ஆட்டுக்குட்டிகளை அன்பளிப்பாகக் கொண்டுவந்து கொடுத்தாங்கன்னு பைபிளில் கதை இருக்குது.

டிசம்பரில் ஆட்டுக்குட்டிகள் எங்கே வந்துச்சு?

ஆகவே இயேசு டிசம்பர் மாதம் பிறக்கவில்லை.

ஜெஹோவா விட்னஸ் ன்னு ஒரு கிறிஸ்துவப் பிரிவு ஆட்கள் சொன்னது இது.


இங்கிலாந்து /ஐரோப்பா நாடுகளில் வசதியை முன்னிட்டு எப்பவோ ஒரு காலக்கட்டத்தில் 'டிசம்பர் 25 க்கு இயேசு ஜெனித்த விழா' கொண்டாட முடிவு ஆனதாம்.
//

துளசி அம்மா,

நீங்கள் சொல்வது ஆராய்ந்து சொல்வதன் முடிவு என்றாலும்.

பருவகாலங்கள் 2000 ஆண்டுகளாக மாத மாற்றம் இல்லாமல் அப்படியே தொடர்ந்து வருவதாகச் சொல்வதற்கு இல்லை. டிசம்பர் மாதம் ஒருகாலத்தில் வேனிர்காலமாகவோ, குளிர்காலமாகவோ, கோடைகாலமாகவோ கூட இருந்திருக்கலாம். பொங்கல் பண்டிகை மற்றும் தை பிறப்பு ஆகியவற்றின் காலங்கள் சங்ககாலத்திற்கும் தற்காலத்திற்கும் ஒரே தேதியில் இருந்தாலும் தட்பவெப்பா சூழல் இரண்டுக்கும் வேறு வேறு. காலத்தின் பெருசுழற்சியில் பருவகாலங்கள் கூட நகரும்.

சித்திரை வெயிலையே எடுத்துக் கொள்ளுங்கள், முன்பெல்லாம் மே மாதத்தைக் கணக்கிட்டு பள்ளிவிடுமுறை இருக்கும் இப்போதெல்லாம் ஏப்ரல் மாதத்தின் அனல் தாங்க முடிவதில்லை, இந்த ஆண்டு ஐப்பசிக்கு தப்பிய மழை கார்த்திகை நடுவில் பொழந்து கட்டுது.

வால்பையன் சொன்னது…

//கடவுளுக்கு மதத்திற்கும் தொடர்பே இல்லை என்றே பலர் சொல்லும் போது கடவுளைக் காட்டுங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவரென்றாலும் என்று சொல்லி நீங்கள் மீண்டும் மதத்தை அங்கு ஒட்டவைக்கப் பார்க்கிறீர்களே :)//

இது பொதுபுத்தி கருத்து,
தனக்கென கடவுளை உருவாக்கி கொண்ட மனிதன் தான் இந்த குழுவை சேர்ந்தவன் என்று அதற்கு பெயரும் இட்டு கொண்டான்.
அதுவே மதமாகவும் சிலருக்கு மார்க்கமாகவும் ஆயிற்று.

நான் ஒட்ட வைக்க என்ன இருக்கு.
அதான் அவங்கள புடிச்சி ஆட்டுதே!

நான் கடவுளை நம்புகிறேன் ஆனால் இந்த குழுவை அல்லது மதத்தை அல்லது மார்க்கத்தை சேர்ந்தவன் இல்லை என்று சொல்ல சொல்லுங்கள் யாரையாவது

வால்பையன் சொன்னது…

//உலகத்திலேயே மிகவும் சுவையான பழம் ஒன்று சென்ற நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் இருந்தது என்று ஒருவர் சொன்னால், அப்படி ஒரு பழம் இல்லை, சும்மா அந்த நாட்டின் பெருமைக்காக அவ்வாறு சொல்கிறார் என்று நாம் நினைப்போம். //

இது ஆப்பிரிக்காவுக்கு மட்டுமில்லை,
எல்லா நாட்டுக்கும் பொருந்தும்.
ஏன்,எப்படி, எதற்கு என்று கேள்வி கேட்க்காமல் என்னால் இருக்க முடியாது.
என் அறிவு கண்கள் கட்டப்படவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//
கடவுள் இல்லாமலும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறேன். //

இதைத்தான் பக்தியாளர்கள் புரிந்தும் புரியாதது போல் பிதற்றுகிறார்கள். விதைகள் சரியான சூழலில் முளைக்கும் என்பதை பக்தியாளர்கள் நம்புவதே இல்லை.

//கடவுள் தேவையின் அடிப்படை காரணங்களை அவர்களே யோசித்தால் போதும், நான் கூட தேவையில்லை
2:44 PM, December 09, 2008
//

மனித குழுக்கள் இடப்பெயற்சி செய்யாவிட்டால் கடவுள் என்ற நம்பிக்கை மதம் என்பதாக வளர்ந்திருக்காது. மனிதன் குழுக்களாக இடம் பெயராவிட்டால் மதச் சண்டைகளே வந்திருக்காது. அப்போது கடவுள் நம்பிக்கை என்பது 'அவர்களை அனைவரும் ஒரே கடவுளை' வழிபடும் குழுவாகவும், கடவுள் அவர்களை வழிநடத்தும் மேலான ஒருவராகவும், தவறுகளை குறைத்துக் கொள்ள கடவுள் நம்பிக்கை நல்லதொரு செயலாக இருந்திருக்கும்.

இப்போதும் கூட மதப்பற்று இல்லாத கடவுள் நம்பிக்கை உடையவர்கள் சிறந்த மனிதர்கள் என்று நான் சொல்வேன். மற்றவர்கள் மீது அன்பும் கருணையும் பொழிய கடவுள் நம்பிக்கை அவர்களுக்கு பயனளிக்கிறது. பகுத்தறிவாளரான நீங்கள் கருணையினால் பிறருக்கு உதவுவீர்கள், உண்மையான ஆன்மிகவாதிகள் துன்பப்படும் மற்றவர்களைப் பார்க்கும் போது கூடவே இவர்களும் கடவுளின் பிள்ளைகள், என்னுடைய சகோதரன் என்ற அன்பும் இருக்கும்.

துளசி கோபால் சொன்னது…

கோவியாரே,

இப்பத்தான் க்ளோபல் வார்மிங் ன்னு சூடாகிக்கிட்டே போய்தான் பருவகாலங்களில் மாற்றம் வருதாம்.
2000 வருசம் முன்பு உலகம் சூடாக என்ன காரணம் இருக்கக்கூடும்?
அப்போது உலக மக்கள் தொகையும் குறைவாத்தானே இருந்துருக்கணும்?

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் கடவுளை நம்புகிறேன் ஆனால் இந்த குழுவை அல்லது மதத்தை அல்லது மார்க்கத்தை சேர்ந்தவன் இல்லை என்று சொல்ல சொல்லுங்கள் யாரையாவது//

எனக்கு சர்டிபிகேட்டில் மதம் இருக்கிறது, மனதளவில் நான் அந்த மதத்தைச் சேர்ந்தவன் அல்ல

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
கோவியாரே,

இப்பத்தான் க்ளோபல் வார்மிங் ன்னு சூடாகிக்கிட்டே போய்தான் பருவகாலங்களில் மாற்றம் வருதாம்.
2000 வருசம் முன்பு உலகம் சூடாக என்ன காரணம் இருக்கக்கூடும்?
அப்போது உலக மக்கள் தொகையும் குறைவாத்தானே இருந்துருக்கணும்?
//

துளசி அம்மா,

அதை நாம் சரியாகச் சொல்ல முடியாது பல எரிமலை வெடிப்புகள் கூட அப்போது தொடர்ச்சியாக நடந்திருக்கலாம், டெட் எரிமலைகளெல்லாம் ஒருகாலத்தில் வெடித்தவை தானே.

வால்பையன் சொன்னது…

//இதைத்தான் பக்தியாளர்கள் புரிந்தும் புரியாதது போல் பிதற்றுகிறார்கள். விதைகள் சரியான சூழலில் முளைக்கும் என்பதை பக்தியாளர்கள் நம்புவதே இல்லை.//

சரியாக சொன்னீர்கள்,
வாழும் வாழ்க்கையை விட்டுவிட்டு
இறந்த பின் சொர்க்கம் என்று போலித்தனமாக வாழ்கிறார்கள்.
சரி அப்படியாவது ஒழுக்கத்தை காப்பாற்றுகிறார்களா என்றால், தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டு அதையும் மறந்து விடுகிறார்கள்

வால்பையன் சொன்னது…

//இப்போதும் கூட மதப்பற்று இல்லாத கடவுள் நம்பிக்கை உடையவர்கள் சிறந்த மனிதர்கள் என்று நான் சொல்வேன். //

நானும் ஒத்து கொள்கிறேன்

வால்பையன் சொன்னது…

//உண்மையான ஆன்மிகவாதிகள் துன்பப்படும் மற்றவர்களைப் பார்க்கும் போது கூடவே இவர்களும் கடவுளின் பிள்ளைகள், என்னுடைய சகோதரன் என்ற அன்பும் இருக்கும். //

ஆம் இதை தான் எல்லா மத கோட்பாடுகளும் கூட சொல்கிறது, அதைவிட்டு விட்டு என் மதம் தான் பெரியது என்று நினைக்கும் போது தான் மதக்கலவரம் உருவாகிறது

வால்பையன் சொன்னது…

//எனக்கு சர்டிபிகேட்டில் மதம் இருக்கிறது, மனதளவில் நான் அந்த மதத்தைச் சேர்ந்தவன் அல்ல //

என் மகளுக்கு எதையும் குறிப்பிட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்

வால்பையன் சொன்னது…

நீண்ட நாட்களுக்கு பிறகு மொக்கையில்லாமல் ஒரு நல்ல உரையாடல், ரொம்ப நன்றி கோவிஜி

மனிதம் காப்போம்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆம் இதை தான் எல்லா மத கோட்பாடுகளும் கூட சொல்கிறது, அதைவிட்டு விட்டு என் மதம் தான் பெரியது என்று நினைக்கும் போது தான் மதக்கலவரம் உருவாகிறது

3:00 PM, December 09, 2008
//

மதங்கள் அவ்வாறு சொல்வது இல்லை, வள்ளலார், இராமகிருஷ்ணர், அன்னை தெரசா போன்ற நல்ல ஆன்மிக அறிஞர்கள் தான் அவ்வாறு சொல்கின்றனர்.

ஆன்மிகத்தின் மிகப் பெரிய குழப்பம் என்ன தெரியுமா ?

'எல்லாம் அவன் செயல்' என்று சொல்வது தான்.

இறைவன் இருப்பதாக வைத்துக் கொண்டால், இயற்கையில் இயக்கத்துக்கும் அவனுக்கும் தொடர்பே இருக்க முடியாது.

பருவமழைக்கு காரணமாக இறைவனைச் சொல்பவர்கள், இயற்கை பேரிடர் சுனாமி, பெரும் தீ சம்பவங்களைப் பற்றிச் சொல்லும் போது சாத்தானின் செயல், தீய சக்தி என்று பல்டி அடித்துவிடுவார்கள்.

இறை நம்பிக்கை மனமாற்றம் தான் தரும்.

பெரும் செல்வமோ, புகழோ அதாவது மனிதனால் தன்னால் முடிந்த எதையுமே இறை நம்பிக்கை தந்துவிடாது.

மணிகண்டன் சொன்னது…

வழக்கம் போல ஆரம்பிச்சுடானுங்கையா !

வால்பையா :- நீரு நல்லா தான இருந்தீரு ! ஒவ்வொரு பதிவுலையும் 17 பின்னூட்டம் போட்டு உங்க கடமைய செவ்வனே செஞ்சு வந்தீரு ! இப்ப ஏன் திடீர்னு இப்படி ? சகவாசம் சரி இல்ல. !

கோவி :- ஒரு 200, 300 வருஷம் முன்னாடி காலாண்டர்லேந்து ஒரு பதினைந்து நாட்கள் தூக்கிட்டாங்களே ! அதுனால கூட இந்த பருவ நிலை மாற்றம் இருந்து இருக்கலாம்.

மணிகண்டன் சொன்னது…

*******மனிதம் காப்போம்*******

இந்த மாதிரி உரையாடல் மூலமாவா ? இதுக்கு நான் குருவி மாதிரி படம் எடுத்து மனிதத்த காப்பேன்.

மணிகண்டன் சொன்னது…

************** கிறித்துவர்கள் ஆதாரமின்றி கொண்டாடுகிறார்கள் என்று நினைப்பதற்கு இல்லை. இயேசுவுக்கு முன்பே பிறந்தவர்களான அரிஸ்டாட்டில், டைகிரிஸ், சாக்ரட்டீஸ், மற்றும் அலெக்சாண்டருக்கான துல்லியமான வரலாறுகள் இருக்கின்றன. நான் இயேசு கடவுளா ? தூதரா ? மற்றும் புனிதத்தன்மைக் குறித்த கேள்விக்குச் செல்லவில்லை. கிறிஸ்த்மஸ் கொண்டாடும் பழக்கம், ஏசுவின் பிறந்தநாளை முன்னிட்டே கொண்டாடுகிறார்கள். இஃதாவது 2000 ஆண்டுகளாக இருந்துவரும் நம்பிக்கை, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ஏனைய ஜெயந்திகள் வெறும் நட்சத்திர அடிப்படியில் கொண்டாடும் புராண பழக்கவழக்கம் மட்டுமே, இதற்கு பர்த் சர்டிபிகேட் கேட்கவே முடியாது ***************

நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படுவது அனைத்து பண்டிகைகளும். இயேசுவின் பிறப்பு மேரி மாதா ஒரு VIRGIN ஆக இருக்கும் போது ஏற்பட்டது. இதை நம்புவதற்கு ஆதாரங்கள் தேவை இல்லை. நம்பிக்கை மட்டுமே போதுமானது.

மணிகண்டன் சொன்னது…

நம்பிக்கைக்கள் வரும்காலத்தில் ஆதாரமாகலாம்.

http://news.nationalgeographic.com/news/2008/10/081010-shark-virgin-birth-2.html

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் 5:30 PM, December 09, 2008
வழக்கம் போல ஆரம்பிச்சுடானுங்கையா !

வால்பையா :- நீரு நல்லா தான இருந்தீரு ! ஒவ்வொரு பதிவுலையும் 17 பின்னூட்டம் போட்டு உங்க கடமைய செவ்வனே செஞ்சு வந்தீரு ! இப்ப ஏன் திடீர்னு இப்படி ? சகவாசம் சரி இல்ல. !

கோவி :- ஒரு 200, 300 வருஷம் முன்னாடி காலாண்டர்லேந்து ஒரு பதினைந்து நாட்கள் தூக்கிட்டாங்களே ! அதுனால கூட இந்த பருவ நிலை மாற்றம் இருந்து இருக்கலாம்.
//

மணிகண்டன்,

அந்த மாற்றம் அமெரிக்க காலண்டர் முறைகளில் செய்யப்பட்ட மாற்றம் என்றே நினைக்கிறேன். அண்மையில் யாரோ பதிவிட்டு இருந்தார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
நம்பிக்கைக்கள் வரும்காலத்தில் ஆதாரமாகலாம்.

http://news.nationalgeographic.com/news/2008/10/081010-shark-virgin-birth-2.html
//

கன்னிமேரிமாதா கதை போலவே, கிருஷ்ணன் கதையில் வரும் பலராமன் பிறப்பும் சொல்லப்படுகிறது,

தேவகியின் கரு இரவோடு இரவாக அவளது அக்கா ரோகினிக்கு மாற்றப்பட்டதாம். அதாவது பலராமன் பிறப்பு வசுதேவரும், ரோஹினியும் உடலுறவு கொள்ளமல் பிறந்த பிறப்பு.

தற்பொழுது இவை சாத்தியம் தானே. பருவமடைந்த பெண்ணின் சினை முட்டையை வெளியே எடுத்து ஆணின் விந்தனுவில் சேர்த்து கருவான பிறகு மீண்டும் கருப்பையில் வைக்கலாம். இந்த முறையில் அந்த பெண் கன்னித்தன்மை (Not talking about hymen) உடையவளாகவே இருப்பாள்

தருமி சொன்னது…

துளசி, கோவி,
கிறித்துவர்களின் பண்டிகைகள்- கிறிஸ்துமஸ், ஈஸ்டர் எல்லாமே கிறிஸ்துவிற்குப் பின் சில நூற்றாண்டுகள் கழித்தே, ஏற்கெனவே இருந்த பாகன் மதப் பண்டிகைகளை அனுசரித்து புதிதாக தேதியிடப்பட்ட விஷயங்கள்தானேயொழிய கிறிஸ்து 24ம்தேதி ராத்திரி பிறந்தார் என்பதெல்லாம் சரியான தகவல்கள் இல்லை. ஏசு பிறந்ததாகச் சொல்லப்படும் பெத்லேகம் என்ற ஊர் கூட கிறித்துவின் காலத்தில் இல்லை. - இவையெல்லாம் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எழுதப்பட்ட ' HOLY GRAIL; HOLY BLOOD என்ற நூலில் உள்ளது.

தருமி சொன்னது…

பின்னூட்ட பெருவள்ளல் வால்பையன்

ஆஹா .. பேஷ் .. பேஷ்!!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஆகா கோவி, வாலு சபாஷ் சரியானப் போட்டி!
நீங்கள் கணவனும் மனைவியையும் போல,
எவ்வளவு அனல் பறக்க விவாதம் செய்தாலும் கடைசியில் ஒருவர் கருத்தை மற்றவர் பலமாக ஆமோதிக்கிறீர்களே அது எப்படி?
வாலுக்கும் கோவிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
தனது கருத்துக்கள் விமர்சனம் செய்யப் படும் போது டக்கு டக்குன்னு உடனடி பதில் அளிப்பவர்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நான், வால்பையன் இறை நம்பிக்கை உடையவர் என்றும், கோவி இறைமறுப்பாளர் என்றும் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.
அது தவறான புரிதலாகிவிட்டது.

கண்ணியமான விமர்சனங்கள். ஆரோக்கியமான விடயங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி 10:52 PM, December 09, 2008
நான், வால்பையன் இறை நம்பிக்கை உடையவர் என்றும், கோவி இறைமறுப்பாளர் என்றும் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.
அது தவறான புரிதலாகிவிட்டது.

கண்ணியமான விமர்சனங்கள். ஆரோக்கியமான விடயங்கள்.
ஜோதிபாரதி 10:52 PM, December 09, 2008
நான், வால்பையன் இறை நம்பிக்கை உடையவர் என்றும், கோவி இறைமறுப்பாளர் என்றும் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.
அது தவறான புரிதலாகிவிட்டது.

கண்ணியமான விமர்சனங்கள். ஆரோக்கியமான விடயங்கள்.
ஜோதிபாரதி 10:52 PM, December 09, 2008
நான், வால்பையன் இறை நம்பிக்கை உடையவர் என்றும், கோவி இறைமறுப்பாளர் என்றும் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.
அது தவறான புரிதலாகிவிட்டது.

கண்ணியமான விமர்சனங்கள். ஆரோக்கியமான விடயங்கள்.
ஜோதிபாரதி 10:52 PM, December 09, 2008
நான், வால்பையன் இறை நம்பிக்கை உடையவர் என்றும், கோவி இறைமறுப்பாளர் என்றும் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.
அது தவறான புரிதலாகிவிட்டது.

கண்ணியமான விமர்சனங்கள். ஆரோக்கியமான விடயங்கள்.
//

ஜோதிபாரதி,

நான் மதமறுப்பாளன், மூடநம்பிக்கை எதிர்ப்பாளன். பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
ஆகா கோவி, வாலு சபாஷ் சரியானப் போட்டி!
நீங்கள் கணவனும் மனைவியையும் போல,
எவ்வளவு அனல் பறக்க விவாதம் செய்தாலும் கடைசியில் ஒருவர் கருத்தை மற்றவர் பலமாக ஆமோதிக்கிறீர்களே அது எப்படி?
வாலுக்கும் கோவிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
தனது கருத்துக்கள் விமர்சனம் செய்யப் படும் போது டக்கு டக்குன்னு உடனடி பதில் அளிப்பவர்கள்.
//

ஜோதிபாரதி,
விவாதம் என்றாலே மறுத்துப் பேசுவது மட்டுமே விவாதம் அல்ல. அப்படி செய்வது எதுவுமே முடிவுக்கு வராது. பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
துளசி, கோவி,
கிறித்துவர்களின் பண்டிகைகள்- கிறிஸ்துமஸ், ஈஸ்டர் எல்லாமே கிறிஸ்துவிற்குப் பின் சில நூற்றாண்டுகள் கழித்தே, ஏற்கெனவே இருந்த பாகன் மதப் பண்டிகைகளை அனுசரித்து புதிதாக தேதியிடப்பட்ட விஷயங்கள்தானேயொழிய கிறிஸ்து 24ம்தேதி ராத்திரி பிறந்தார் என்பதெல்லாம் சரியான தகவல்கள் இல்லை. ஏசு பிறந்ததாகச் சொல்லப்படும் பெத்லேகம் என்ற ஊர் கூட கிறித்துவின் காலத்தில் இல்லை. - இவையெல்லாம் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எழுதப்பட்ட ' HOLY GRAIL; HOLY BLOOD என்ற நூலில் உள்ளது.
//

தகவலுக்கு நன்றி !

நல்ல வேளை நீங்கள் கிறிஸ்துவின் காலம் என்று குறிப்பிட்டு இருப்பதால் அப்படி ஒருவர் இல்லவே இல்லை என்போரில் பட்டியலில் நீங்கள் இல்லை.

தருமி சொன்னது…

//அப்படி ஒருவர் இல்லவே இல்லை என்போரில் பட்டியலில் நீங்கள் இல்லை.//

அடப்பாவி மனுஷா! முழுப்பூசணிக்காயை பிரியாணியில மறைக்கிறது எல்லாம் எதுக்குங்க?

துளசி கோபால் சொன்னது…

//ஏற்கெனவே இருந்த பாகன் மதப் பண்டிகைகளை அனுசரித்து புதிதாக தேதியிடப்பட்ட விஷயங்கள்தானேயொழிய......//

ஆமாங்க தருமி. எல்லா மதத்தினர் பண்டிகைகளும் ஒரே சமயத்துலே அடுத்தடுத்து வர்றதைப் பார்த்தா அப்படித்தான் தோணுது.
எப்படியோ எல்லாரும் மகிழ்ச்சியாக் கூடி இருக்க இதெல்லாம் ஒரு சந்தர்ப்பங்கள்தானே?

பொழுதன்னிக்கும்தான் வேலைவேலைன்னு கிடக்கறோம். உறவுகள்கூட சேர்ந்துருக்க ஏது நேரம் இந்த இயந்திர வாழ்க்கையில்?

அதுக்குதான் விழாக்கள்:-)

Javed சொன்னது…

கொஞ்சம் லேட்டா வந்திருக்கிறேன்.

இஸ்லாத்தைப்பற்றியும், இஸ்லாத்தின் அடிப்படை இறைவேதமான குரானும், நபி அவர்களின் வாழ்கை நெறி (ஹதீத்) என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன் (வேறொரு பதிவில் இஸ்லாத்தை பற்றி மிகவும் அழகாக விளக்கினீர்கள், நன்றி).

குரானிலும், ஹதீத்களிலும் இல்லாதது இஸ்லாத்தில் கிடையாது. இவற்றில் இல்லாததை பின்பற்றுகிறவர்கள் நிச்சயமாக தாமாக கண்டுபிடித்தவை தான். இஸ்லாத்தில் எந்த ஒரு ஜாதியோ, பிரிவ்னையோ இல்லை. ஆனால் சிலர் அதை தாமாக கண்டுபிடிதுகொள்கிறார்கள்.

இறைவன் ஒருபோதும் மனிதனை அவன் சக்திக்கு மீறி சோதிப்பது இல்லை என்று குரான் கூறுகிறது. இஸ்லாத்தில் மதுப்பழக்கமும், போதை வஸ்துக்களும், சிகரட் போன்றவைகளும் மிகக்கடுமையாக தடை செய்யப்பட்டிருக்கும் காரணம் அவை உடல்நலத்துக்கு தீங்கானது என்பதால் தான். இறைவன் தன வேதத்தின் மூலம் என்ன கூறுகிறான் என்பதை மறந்து விட்டு தன்னையே துன்புறுத்திக்கொள்ளும் அறிவீனர்கள் இவர்கள்.


குரான் 4:29: நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.

மதத்தின் (இஸ்லாத்தை நாங்கள் மார்க்கம் என்று தான் கூறுவோம்) பெயரால் பல அறிவுக்கெட்டதனமான செயல்களை பலர் செய்கின்றனர். அவர்களில் இவர்களும் ஒருவர்.

இஸ்லாத்தில் இல்லாத மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று (மந்திரித்து தாயது கட்டுதல், தர்கா வழிபாடு, போன்றவைகள்) இதை எடுதுக்காடியதற்கு நன்றி சகோதரரே.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்