மிதிவண்டி ஓட்டி நீண்ட நாளாகிவிட்டிருந்தது, அண்மையில் சென்ற சனிக்கிழமை (நேற்று) ஒரு நாள் முழுவதும், சிங்கையில் இருக்கும் 'புலாவ் உபின்' என்ற ஒரு தீவில் பதிவர்கள் சிலருடன் சைக்கிள் ஓட்டி சுற்றி வந்தோம். காலை 11 மணிக்கு தொடங்கிய மிதிவண்டி பயணம் இடை இடையே ஆன சிறு இளைப்பாறுதலுக்கு பிறகு மாலை 6 மணி அளவில் முடிவுக்கு வந்தது. நல்ல மகிழ்ச்சியான பொழுதாக அமைந்தது.
மிதிவண்டி பயணத்தின் போது தம்பி ஜகதீசன் ஐயர் தரையை முத்தமிட்டார்
டொன்லீ மற்றும் நிசமா நல்லவன் அசராமல் ஓட்டினார்கள்
வாவச இராம் அழகான புகைப்படங்களை சுட்டார்
கிரி இறக்கக் கட்டிப் பறக்குது அண்ணாமலை சைக்கிள் என்று பாடாத குறைதான். இடை இடையே பணியின் நினைவு வந்து சற்று சுணங்கினார் (நியாமான வேலைக்காரன்)
அதிரை ஜமால் (முதன்முறையாக கலந்து கொண்டார்) ,மிதிவண்டியை பலம் கொண்ட வரை மிதித்தார். மிதிவண்டி வழிக்கு வந்தது
பின்னூட்ட புயல் விஜய் ஆனந்த் விரைவாக செல்லும் இடங்களை கடந்தார்
என் பங்குங்கு ? இவர்களெல்லாம் காணமல் போகாமல் பார்த்துக் கொண்டேன்.
*****
மிதிவண்டிப் பயணத்துடன் அமைந்த சிற்றுலா பற்றி 'டொன் லீ' விரிவாக தனிப் பதிவாக எழுதி இருக்கிறார்...வண்ணப்படங்களுடன் சிற்றுலா பற்றி பயணக்கட்டுரையை இங்கே கண்டு களிக்கலாம்.
அதிரை ஜமால் முதன் முறையாக பதிவர்களுடன் சென்று வந்த அனுபவத்தை தனிப்பாதிவாக பகிர்வார்
நீண்ட நாள் கழித்து மிதிவண்டியை மிதியோ மிதி என்று மிதித்தால், இடுப்பில் இருந்து கால் வரை வலியோ வலி.
பின்னூட்டப் புயல், 'புதிய கேமரா'மேன், பதுங்கு குழி, நிஜமாகவே நல்லவன், சிங்கம்
இரண்டாவது உள்ளவர் மீ த பர்ஸ்ட் போடுபவர்
பின்பற்றுபவர்கள்
28 டிசம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
36 கருத்துகள்:
என் அனுமதியின்றி என் புகைப்படத்தை வெளியிட்டதற்கு கடும் கண்டனங்கள்!!!
(ஸ்மைலி இல்லை... எனவே இதை சீரியஸ் பின்னூட்டம் என எடுத்துக் கொல்லவும்.... :P)
//ஜெகதீசன் said...
என் அனுமதியின்றி என் புகைப்படத்தை வெளியிட்டதற்கு கடும் கண்டனங்கள்!!!
(ஸ்மைலி இல்லை... எனவே இதை சீரியஸ் பின்னூட்டம் என எடுத்துக் கொல்லவும்.... :P)
//
நேரில் வா கொல்லுகிறேன்.
இப்பிடில்லாம் எஞ்சாய் பண்ணியிருக்கெங்களேன்னு பொறாமையாக இருக்குப்பா.....
அன்புடன் அருணா
அருமையாக என்சாய் பண்ணி இருக்கியள்!
படங்கள் அருமை!!
என்னோட குளோசப் போட்டோ'வே எடுத்துருங்களேன்... பயமா இருக்கு... :)
கோவி கண்ணன் சுருக்கமா சொல்லிட்டீங்க உங்கள் பதிவுல..இருந்தாலும் நம் டொன் லீ விரிவா எழுதிட்டாரு.. படங்கள் அனைத்தும் அருமை.
எப்படியோ உங்களோட பழைய புகைப்பட கருவியில் இருந்து விடுதலை ஆகி விட்டோம் (ஆமாங்க கோவி கண்ணன் புதுசா புகைப்பட கருவி வாங்கி இருக்காரு)
என்னது கோவி அண்ணரும் புது கமெரா வாங்கிட்டாரா? அது புதுசா இல்ல ஜெகதீசனோட கமெராவா..?
நாம் எதிர்பார்த்த ஒரு படம் மிஸ்ஸிங்...
எதிர்பார்த்த படத்தைப் போடாததற்கு கண்டணங்கள்.... இதுக்கும் ஸ்மைலி இல்லாததால் சிரியஸ் பின்னூட்டமாக கருதவும் :P
//அன்புடன் அருணா said...
இப்பிடில்லாம் எஞ்சாய் பண்ணியிருக்கெங்களேன்னு பொறாமையாக இருக்குப்பா.....
அன்புடன் அருணா
//
வேலையின் அலுப்பை சரிசெய்ய இது போன்ற சிற்றுலாக்கல் தேவைப்படுகிறது.
நன்றி அன்புடன் அருணா அவர்களே
//ஜோதிபாரதி said...
அருமையாக என்சாய் பண்ணி இருக்கியள்!
படங்கள் அருமை!!
//
வந்திருக்கலாம்ல....... :(
அடுத்த முறை வெற்றிலைப் பாக்குடன் அழைப்பு செய்துட வேண்டியதுதான்.
:)
//இராம்/Raam said...
என்னோட குளோசப் போட்டோ'வே எடுத்துருங்களேன்... பயமா இருக்கு... :)
//
மிரட்டலா.....யோவ் நல்லா பாருய்ய்யா....சும்மா சிங்கம் சிங்கம்னு சொல்றவங்க அந்தப் புகைப்படம் பார்த்தால் சிங்கம் சிங்கம் தாம்பாங்க.
//கிரி said...
கோவி கண்ணன் சுருக்கமா சொல்லிட்டீங்க உங்கள் பதிவுல..இருந்தாலும் நம் டொன் லீ விரிவா எழுதிட்டாரு.. படங்கள் அனைத்தும் அருமை..//
ரஜினி கிரி,
நன்றி !
//எப்படியோ உங்களோட பழைய புகைப்பட கருவியில் இருந்து விடுதலை ஆகி விட்டோம் (ஆமாங்க கோவி கண்ணன் புதுசா புகைப்பட கருவி வாங்கி இருக்காரு)//
ஏழைக்கேற்ற பொறி உருண்டை, நிக்கான் D60 வாங்கும் அளவுக்கு வசதியும் இல்லை, புகைப்படம் எடுக்கவும் தெரியாது. நிறைய கோணம் பார்க்கனுமாமே
//
//'டொன்' லீ said...
நாம் எதிர்பார்த்த ஒரு படம் மிஸ்ஸிங்...
//
:) அது ஆபாசப் படம் !
//'டொன்' லீ said...
என்னது கோவி அண்ணரும் புது கமெரா வாங்கிட்டாரா? அது புதுசா இல்ல ஜெகதீசனோட கமெராவா..?
//
ஜெகதீசனை கூட்டிட்டுப் போனால் ஜெகதீசன் கேமரா ஆகிடுமா. அவரு வச்சிருக்கிறதும் நான் கூடச் சென்று வாங்கியது தான். :)
//VIKNESHWARAN said...
எதிர்பார்த்த படத்தைப் போடாததற்கு கண்டணங்கள்.... இதுக்கும் ஸ்மைலி இல்லாததால் சிரியஸ் பின்னூட்டமாக கருதவும் :P
//
விக்கி,
அதுதான் தனியாக பார்த்தாச்சே அப்பறம் என்ன. ஊரே பார்க்கனுமா ?
கொடுமைய்யா
படங்கள் அனைத்தும் அருமை..
பேர் + ஒரு கமெண்ட் போட்டு இருக்கலாமே.. இன்னும் அருமையா இருந்திருக்கும்.
நல்லாவே அனுபவிக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்..
அனுபவி ராஜா அனுபவி..
:)
/ஜோதிபாரதி said...
அருமையாக என்சாய் பண்ணி இருக்கியள்!
படங்கள் அருமை!!/
ஆமா...நீங்க ஏன் வரலை?????
/கோவி.கண்ணன் said...
//ஜெகதீசன் said...
என் அனுமதியின்றி என் புகைப்படத்தை வெளியிட்டதற்கு கடும் கண்டனங்கள்!!!
(ஸ்மைலி இல்லை... எனவே இதை சீரியஸ் பின்னூட்டம் என எடுத்துக் கொல்லவும்.... :P)
//
நேரில் வா கொல்லுகிறேன்./
நேரில் பார்க்கும் போது அப்படியே எனக்கும் சொல்லி அனுப்புங்கள்.....ஜெக் டார்ச்சர் தாங்க முடியலை...:)
சற்றே உலா வருவோம் என்று உங்களோடு வந்த சிற்றுலா அருமையாக இருந்தது.
முதல் அனுபவம் - பகிர்ந்தே ஆகவேண்டும் என்று நமது அண்ணன் கோவி.கண்ணன் சொல்லிவிட்டதால் செய்கிறேன்.
ஒரு வாரம் அலுவலகத்தில் கடப்பாறை புடுங்கோனும் ஆதலால் அடுத்த வாரம் ...
//இராகவன் நைஜிரியா said...
படங்கள் அனைத்தும் அருமை..//
நன்றி !
//பேர் + ஒரு கமெண்ட் போட்டு இருக்கலாமே.. இன்னும் அருமையா இருந்திருக்கும்.
//
சேர்த்துவிட்டு பார்த்தேன் உங்கள் பின்னூட்டம் வந்திருக்கிறது
கோவியாரே! கடைசி போட்டோவில் இருக்கும் பதிவர் கோவக்கார பதிவரோ:-)))
அன்புடன்
அபிஅப்பா
//அபி அப்பா said...
கோவியாரே! கடைசி போட்டோவில் இருக்கும் பதிவர் கோவக்கார பதிவரோ:-)))
அன்புடன்
அபிஅப்பா
//
அதுவா சிங்கப்பூர் தெருநாய்.
ஐயோ.....அது பெண் நாயி
//நிஜமா நல்லவன் said...
:)
//
பர்சை பழுக்க வச்சோம்ல, நிஜமாவே நல்லவன்.
அடுத்த முறை வரும் போது ஏடி எம் அட்டை உட்பட அனைத்தையும் வீட்டில் வைத்து வரவும். :)
//அதிரை ஜமால் said...
சற்றே உலா வருவோம் என்று உங்களோடு வந்த சிற்றுலா அருமையாக இருந்தது.
முதல் அனுபவம் - பகிர்ந்தே ஆகவேண்டும் என்று நமது அண்ணன் கோவி.கண்ணன் சொல்லிவிட்டதால் செய்கிறேன்.
ஒரு வாரம் அலுவலகத்தில் கடப்பாறை புடுங்கோனும் ஆதலால் அடுத்த வாரம் ...
//
ஜமால்,
எழுத முடிந்தால் எழுதுங்கள், வலியுறுத்தல் எதுவும் இலலை.
//மிரட்டலா.....யோவ் நல்லா பாருய்ய்யா....சும்மா சிங்கம் சிங்கம்னு சொல்றவங்க அந்தப் புகைப்படம் பார்த்தால் சிங்கம் சிங்கம் தாம்பாங்க.//
Grrrrrrr....
அண்ணே,
கடைசி போட்டோ இடப்பட்ட நுண்ணரசியல் காரணங்கள் என்னனென்ன?? :) :)
மிதிவண்டி பயணத்திற்கு பிறகு உடம்பு எப்படி இருந்தது பற்றி பதிவு போடலாமே (அடுத்த நாள் பற்றி) கோவி
//இராம்/Raam 12:14 PM, December 29, 2008
This post has been removed by the author. //
ஆபாச பின்னூட்டம் போட்டு அவசரமாக நீக்கிய இராமை கண்டிக்கிறேன்.
இதுதான் நுண் அரசியல்.
:))))))
// இராம்/Raam said...
அண்ணே,
கடைசி போட்டோ இடப்பட்ட நுண்ணரசியல் காரணங்கள் என்னனென்ன?? :) :)
//
எனக்கு நாய் என்றால் கொள்ளை பிரியம்னு பொருள் !
:))
//RAHAWAJ said...
மிதிவண்டி பயணத்திற்கு பிறகு உடம்பு எப்படி இருந்தது பற்றி பதிவு போடலாமே (அடுத்த நாள் பற்றி) கோவி
//
மறுநாள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை, சாபிட்டுவிட்டு தூக்கம் தூக்கம்.....தூக்கம் !
ஊர் நாயை தெருநாய் என்று கிண்டல் செய்பவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்..
கடைசி போட்டோவில் இருக்கும் பதிவர் பெயர் குறிப்பிடவில்லையே
:)
அருமையான படங்கள், அழகான பயணம் :)
அப்படியே யார் யார் எந்தப் படத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
கோவி.கண்ணன்,ராம்,ஜமால் தவிர வேறு யாரையும் தெரியவில்லை :(
கருத்துரையிடுக