பின்பற்றுபவர்கள்

17 டிசம்பர், 2008

சென்னை விமான நிலைய காமடி - மெய்ப்புலம் அறைகூவலர் !

சென்னை: சென்னை விமான நிலையத்தின் கழிவறைக்குச் செல்வோரை தலை சுற்றி கிறுகிறுக்க வைக்கும் வகையில் ஒரு தமிழ்ப் பலகையை வைத்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் உடல் ஊனமுற்றோர்களுக்காகவே சிறப்பு கழிப்பறை ஒன்று உள்ளது. அதன் வெளிக் கதவின் மேல் வைக்கப்பட்டுள்ள பலகையில், மெய்ப்புலம் அறைகூவலர் என்று எழுதி வைத்துள்ளனர்.

இதைக் காணும் பலருக்கும் இதன் அர்த்தம் சுத்தமாக புரியாமல் குழம்பியபடியே உள்ளே சென்று திரும்புகின்றனர்.

மெய்ப்புலம் அறைகூவலர் என்றால் உடல் ஊனமுற்றோர்

பிசிகலி சேலஞ்ச்ட் என்று எழுதாமல் தமிழில் எழுத வேண்டியதுதான். உடல் ஊனமுற்றோர் என்றே எழுதி வைக்கலாம். அதை விடுத்து வள்ளுவர், கம்பர் போன்ற தமிழ்ப் புலவர்களுக்கு மட்டுமே புரியும் வகையிலான படு சுத்தத் தமிழில் எழுதி வைத்தால் யாருக்காவது புரியுமா?

நல்ல வேளையாக மெய்ப்புலம் அறைகூவலர் என்ற வார்த்தைக்கு அருகில் உடல் ஊனமுற்றோருக்கான படத்தைப் போட்டு வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் இது ஏதோ தமிழ் சங்கத்தின் அலுவலகம் என்று நினைத்து யாரும் இப்பக்கமே வராமல் திரும்பிப் போகக் கூடும்.

தமிழ்ப்படுத்த வேண்டியதுதான், அதற்காக இப்படியெல்லாமா 'படுத்துவது'?

- தட்ஸ் தமிழ்

************

இதைச் அனுகூலம் ஆக்கிக் கொண்டு தமிழ் எதிர்பாளர்கள்...நக்கலாக சிரித்து...'பாருங்கய்யா தமிழை' என்று சொல்ல ஆரம்பித்துவிடுவர்.

இதுபோன்று ஆங்கிலத்தை தமிழ்படுத்தும் போது, சங்க(கால)ச் சொற்களுக்கு பதிலாக புழக்கத்தில் இருக்கும் சொற்களை பயன்படுத்துவதே நல்லது. இல்லாவிடில் விளங்காமல் போகும்.

சிங்கையில் உடல் ஊனம் பற்றிய சொற்களாக பயன்படுத்துவது

குருடர் - பார்வையற்றோர், பார்வையிழந்தோர், பார்வை குறைபாடு உடையோர்

"குருட்டுப்பயலா நீ" என்று பிறரை கேலி செய்ய "குருடு" என்பதன் பொருள் திரிக்கப்பட்டத்தால் பார்வை குறைபாடுகளை சொல்வதற்கு அந்த 'குருடு' என்ற சொல்லைப் பயன்படுத்துவது தற்போதைய பண்பாடு அல்ல. குரு என்ற சொல்லுக்கு ஒளி என்றே பொருள், ஒளியிலார், ஒளியிழந்தோர் என்ற பொருளில் தான் குருடர் என்ற தமிழ் சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்தது. குரு என்பது தமிழ்ச் சொல்லே, Kuru என்று எழுதாமல் Guru என்று ஆங்கிலத்தில் எழுதுப்படுவதால் நாம் அதை வடச்சொல் என்று தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம். குரு என்ற தமிழ் சொல்லுக்கு நேரடியான வடச் சொல் 'ஆச்சார்ய'

செவிடு - இதற்கு காது கேளாதவர், செவிக் குறையுடையோர், ஒலி கேளாதவர் என்று சொல்லலாம்

ஊமை - பேச இயலாதோர்,

இது போல் உடல் ஊனமுற்றோர் என்று எழுதினால் அந்த குறையுடையோரின் இதயத்தை காயப்படுத்துவதாகவே அந்தச் சொல்லின் பொருள் ஆகிவிட்டது. 'ஊனம்' என்பது குறை என்ற பொருளுடைய சொல். ஒருவரின் ஊனம் என்பது அவரே வாங்கி வந்த வரமல்ல, அவருடைய இயற்கை அமைப்பின் படி அப்படி அவர் இருக்கிறார்.

ஊடல் ஊனமுற்றோர் - "உடல் குறையுற்றோர்", "உடலியல் மாறுபட்டோர்" என்று சொல்லலாம், ஊனம் என்பதை விட குறை என்று எழுதினால் பொருள் மாறாது, சொல்லின் தாக்கமும் குறைவு

ஒரே சொல்லால் சொல்லப்படும் பண்பு பெயர்ச் சொற்களின் (Vocabulary) பொருள் எதிர்காலத்தில் திரிந்து போனால், இரு அல்லது மேற்பட்ட சொற்களில் (DECOMPOSE OR CONVERT IN TO MEANING) அந்த பொருளை எழுத முடியும் என்றால் எழுதலாம் தவறு அல்ல. அல்லது முற்றிலும் புதிய ஒற்றைச் சொல்லை உருவாக்கி பயன்படுத்தலாம். ஆரம்பத்தில் Latrine பின்னர் Toilet ஆகி அதன் பிறகு அந்த சொல்லின் பொருளும் அருவெறுப்பாய் ஆனதால் தானே Rest Room என்று மாற்றிக் கொண்டார்கள்.

கழிவறை என்று சொல்வதைத் தவிர்த்துவிட்டு தளர்வறை (கழிவு இறுக்கம் தளர்த்த...) அல்லது வேறு எதாவது புதிய சொற்களை பயன்படுத்தலாம்.

ஆங்கிலத்தில் இருந்து நேரடி மொழிப்பெயர்ப்பு எல்லா மொழிகளுக்கும் சிக்கலான ஒன்று தான். மொழிப்பெயர்ப்பு சொற்களை பொதுப்படுத்தும் முன் தமிழார்வளர்களிடமும், தமிழாராய்ச்சியாளர்களிடமும் கலந்து பேசி முடிவு செய்தால் நல்லது.

20 கருத்துகள்:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

me the first

தமிழில் எழுதும்போது..பாமரனுக்கும் புரியுமாறு எழுத வேண்டும் என்பதில் ஏள்ளளவும் சந்தேகமில்லை

ஆளவந்தான் சொன்னது…

முதலில் பதிவு/கணிணி/இணையம் என்ற வார்த்தைகளும் கடினமாகத் தான் இருந்தது. ஆனால், அதிகமாக புழங்குவதால்/பழகியதால் அவ்வாறு தெரிவதில்லை..

”சித்திரமும் கைப்பழக்கம்,
செந்தமிழும் நாப்பழக்கம்” இல்லையா?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆளவந்தான் said...
முதலில் பதிவு/கணிணி/இணையம் என்ற வார்த்தைகளும் கடினமாகத் தான் இருந்தது. ஆனால், அதிகமாக புழங்குவதால்/பழகியதால் அவ்வாறு தெரிவதில்லை.. //

ஆரம்பத்தில் கணிப்பொறி என்று எழுதினார்கள், எலிப்பொறி போல இருக்கிறது என்று பலரும் பயன்படுத்த விரும்பவில்லை, பிறகு தான் எளிதாக கணிணி என்று வந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
me the first

தமிழில் எழுதும்போது..பாமரனுக்கும் புரியுமாறு எழுத வேண்டும் என்பதில் ஏள்ளளவும் சந்தேகமில்லை
//

நீங்கள் எழுத்தாளர் பாமரனைச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.
:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//ஆரம்பத்தில் கணிப்பொறி என்று எழுதினார்கள், எலிப்பொறி போல இருக்கிறது என்று பலரும் பயன்படுத்த விரும்பவில்லை, பிறகு தான் எளிதாக கணிணி என்று வந்தது.//


கணினி என்கிற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர்கள் சிங்கைத் தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அதையே பின்னர் அனைவரும் பயன்படுத்தினர் என்பதும் நினைவு கூறத்தக்கது.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\உடல் ஊனமுற்றோர் என்றே எழுதி வைக்கலாம்.\\

ஆம்

நட்புடன் ஜமால் சொன்னது…

\\தமிழ்ப்படுத்த வேண்டியதுதான், அதற்காக இப்படியெல்லாமா 'படுத்துவது'?\\


நல்ல “படு”த்துறாய்ங்கப்பா

நட்புடன் ஜமால் சொன்னது…

\\ஒரே சொல்லால் சொல்லப்படும் பண்பு பெயர்ச் சொற்களின் (Vocabulary) பொருள் எதிர்காலத்தில் திரிந்து போனால், இரு அல்லது மேற்பட்ட சொற்களில் (DECOMPOSE OR CONVERT IN TO MEANING)\\

இப்படியாக ஆங்கிலப்படுத்தி தான் தமிழை விளங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

CA Venkatesh Krishnan சொன்னது…

நான் இதே கருத்தைத்தான் 19.10.2008 அன்று என் "மெய்ப்புல அறைகூவலர்-னா இன்னாங்க?" என்னும்
பதிவில் வெளியிட்டேன். இலவசக் கொத்தனாரும் இதை அதற்கு முன் சுட்டிக் காட்டியுள்ளார்.

"இது தமிழ்ப் படுத்துவதா தமிழைப் படுத்துவதா " என்று கேட்டிருந்தேன்.

என் பதிவிற்கான சுட்டி:
http://ilayapallavan.blogspot.com/2008/10/blog-post_7520.html

ஒரு வேளை என் பதிவிலிருந்து சுட்டிருப்பார்களோ?:((

பிறன் மணை நோக்காதவன் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Expatguru சொன்னது…

இதாவது பரவாயில்லை. பன்னாட்டு விமான நிலையத்தின் கழிப்பறை வாசலில் பலகையில் "ஒப்பனை" என்று எழுதியிருக்கிறார்கள். நாடக கம்பெனியா நடத்துகிறார்கள்? அல்லது பெண்களை போல ஆண்களும் கழிவறைக்கு சென்று 'மேக் அப்' செய்து கொள்கிறார்களா?

இது ஒரு பக்கம் இருக்கட்டும். பன்னாட்டு விமான நிலையத்தின் கழிவறைக்குள் ஒரு முறை நீங்கள் சென்று வந்தால் காலையில் சாப்பிட்டது எல்லாம் வெளியே வந்து விடும். அந்த அளவுக்கு அசுத்தமாக இருக்கிறது. பல குழாய்களில் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்கிறது. கறைகளுடன் கழிவறையை பார்க்கவே கேவலமாக இருக்கிறது. இந்த அழகில் விமான நிலையத்தை "மேம்படுத்த" போகிறார்களாம்!

ஆ.சுதா சொன்னது…

'நம்' பாமரர்கள் யாரும் விமானநிலையம் செல்லும் அளவிற்க்கு வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டதா? தெறியவில்லை.
'நம்' பாமரர்கள் விமானநிலையமெல்லாம் செல்வதில்லை என்று என்னுகின்றேன்.

எல்லா இடங்களிளுமின்றி இப்படி சில (படித்த... பன்பட்டவர்கள் செல்லும்)
இடங்களின் தூயதமிழில் எழிதிவைத்தால் தப்பில்லை என்று எண்ணுகின்றேன். தெறியாவிட்டாலும் ஒரு தூயதமிழை தெறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்குமல்லவா.

புருனோ Bruno சொன்னது…

தற்சமயம் பயன்படுத்தப்படும் வார்த்தை - மாற்றுத்திறனுடையோர்

differently abled

கல்வெட்டு சொன்னது…

Bruno is right ... How to address is changed now.

from... Handicapped to Differently abled

handicapped ->
Disabled ->
Physically challenged (visually challenged, hearing challenged..etc)->
Differently abled > (different from majority of people)

By saying "Differently abled " we try to say they are different not
Disabled.

"மாற்றுத் திறனுடையோர்" என்று சொல்லாலாம்.

கண் பார்வை ‍ என்பது பொதுவான திறன் என்றால், அது இல்லாமல் குச்சி வைத்து நடப்பது மாற்றுத் திறன் என்ற பொருளில்.

நசரேயன் சொன்னது…

ரெஸ்ட் ரூம் ன்னு சுத்த தமிழ்ல வைக்கலாம்

வால்பையன் சொன்னது…

//ஆரம்பத்தில் Latrine பின்னர் Toilet ஆகி அதன் பிறகு அந்த சொல்லின் பொருளும் அருவெறுப்பாய் ஆனதால் தானே Rest Room என்று மாற்றிக் கொண்டார்கள்.//

நாங்கள் கக்கூஸ்ன்னு தான் சொல்லுவோம்.
அது என்ன மொழி?

பிறன் மணை நோக்காதவன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மங்களூர் சிவா சொன்னது…

/
மெய்ப்புலம் அறைகூவலர்
/

ச்சும்ம்ம்மா அதிருதுல்ல்ல்ல்ல்ல





கொய்ய்ய்ய்ய்ய்ய்யால

ஆளவந்தான் சொன்னது…

ஏதோ என்னால முடிஞ்சது
மெய்ப்புலம் அறைகூவலர்

ஆளவந்தான் சொன்னது…

ஏதோ என்னால முடிஞ்சது
மெய்ப்புலம் அறைகூவலர் http://amarkkalam.blogspot.com/2008/12/cinema-paradiso.html

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்