பின்பற்றுபவர்கள்

8 டிசம்பர், 2008

மும்பை தாக்குதல் பொதுமக்களின் கவனம் பெற்றதா ?

மும்பைத் தாக்குதல் குறித்து நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது, 'எனக்கு சிம்பத்தி வரலைங்க' என்றார், எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியும் வியப்புமாக இருந்தது, ஏனெனில் அதைப்பற்றி விவாதங்களை தமிழ்பதிவர்கள் நாள்தோறும் எழுதிக் கொண்டு இருந்தனர். நண்பர் பதிவர் அல்ல, தொலைகாட்சி வழியாக மும்பை தாக்குதல் குறித்து அறிந்து கொண்டவர்.

'ஏன் அப்படி சொல்றிங்க ? 200 பேர் வரை இறந்திருக்கிறார்களே ?' என்று கேட்டேன்.

'அதெல்லாம் வாஸ்தவம் தான் ?' 'பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால் இது போன்றவை அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டது, 'அண்மையில் பீகாரிலும் அது போன்று நடந்து முடிந்துவிட்டது, அதுபற்றி பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மும்பை பணக்காரர்கள் வாழும் இடம் மற்றும் முக்கிய வியாபர தலமாக இருப்பதாலும், பாதிக்கப்பட்டவர்கள் பணக்கார முதலைகள் என்பதாலும் பத்திரிக்கைகள் இந்தியாவே தீவிரவாதப் பிடியில் இருப்பது போல் ஒரு மாயையைக் கிளப்பிவிட்டனர். அதுமட்டுமின்றி, நடந்த தாக்குதல் உளவு துறையின் அலட்சியத்தால் ஏற்பட்ட பெரும் தோல்வி. அதையெல்லாம் சுட்டாமல் தாஜ் ஹோட்டல் எரிந்ததையும், ஓபுராய் ஓட்டலில் நடந்த தாக்குதலையும், இஸ்ரேலியர்களை தாக்கியதையும் மட்டுமே காட்டிக் கொண்டு இருந்தனர். செத்துப் போனவர்களில் அப்பாவி பொதுமக்கள் இருந்திருப்பதால் வறுத்தம் ஏற்பட்டது, இவர்களின் அரசியல் நிலைப்பாடுகளால் அச்சமோ கவலையோ ஏற்படவில்லை... இதை அரசியல் லாபமாகப் பயன்படுத்தலாமா என கட்சிகள் முயன்றதைப் பார்த்தும் எப்படி சிம்பத்தி வரும் ?"

யோசித்துப் பார்த்தால் நண்பர் சொல்வது சரியெனவே பட்டது, முழுக்க முழுக்க உளவுத் துறை தோல்வியால் நடந்திருக்கிறது, இதில் ஒட்டுமொத்த இந்தியாவே சோகத்துக்கு உள்ளாகவேண்டும் என்று சொல்லும் எதிர்ப்பார்ப்பு அடிபட்டு போய் இருக்கிறது. ஊடகங்களின் ப்ரேக்கிங் நியூஸ் என்ற பரபரப்பு செய்திக்கு தீணி போட்டதைத் தவிர மும்பை தாக்குதல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை, ஏனெனெனில் தமிழ் தொலைக்காட்சிகளில் வழக்கமான செய்திகளில் இதனைத லைப்புச் செய்தியாக்கி சில அசைப்பட துண்டுகளை (க்ளிப்பிங்) காட்டியதைத் தவிர்த்து, மாநிலங்கள் பெரிதாக அலட்டிக் கொண்டது போல் தெரியவில்லை.

பாகிஸ்தானும், லஸ்கர் இ தொய்பா என்னும் தீவிரவாத அமைப்பின் கைங்கரியமான இச்செயலை வழக்கமாக இஸ்லாம் தீவிரவாதமாக வகைப்படுத்திப் பார்த்து பலர் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றன. அப்பாவிகளுக்காக இவர்களின் ஆவேசம் வேஷமாகவும், கண்ணீர் முதலைக் கண்ணீராக இருந்ததும் கண்கூடு.

"சுதந்திர தினத்தில் கொடி ஏற்றி, 'நான் இந்தியன்....' என்ற உறுதி மொழி எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து எவருக்கும் அந்த உணர்வே இல்லிங்க, என்றாவது இது போல் அசம்பாவிதம் நடந்தால் அன்று தான் இந்தியன், இந்தியா என்றே நினைக்கிறார்கள், பொருளாதாரத்தை சீர்குழைப்பதில் தீவிரவாதிகளின் செயலும், நலத்திட்டம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் அரசுகளின் செயலும் ஒன்றுதான். இரண்டுமே தன்னிச்சையாக செயல்படுகிறது. அரசை நாமே தேர்ந்தெடுப்பதால் அரசியல்வாதிகளை திருத்திவிட முடியும் என்று நம்பி ஒவ்வொரு முறையும் மாறி மாறி வாய்ப்புக் கொடுக்கிறோம்" அவ்வளவுதான் என்று நண்பர் முடித்துக்கொண்டார்.

நாட்டில் ஊழலின்மையும், அமைதியும், மகிழ்ச்சியும் இருந்திருந்தால் அதெல்லாம் தீவிரவாதிகளால் சீர்கெடுகிறது என்ற கோபம் பொதுமக்களுக்கு வருமோ ?

2 கருத்துகள்:

மங்களூர் சிவா சொன்னது…

//
ரசியல்வாதிகளை திருத்திவிட முடியும் என்று நம்பி ஒவ்வொரு முறையும் மாறி மாறி வாய்ப்புக் கொடுக்கிறோம்" அவ்வளவுதான்
//

கரிக்ட்டு

அத்திரி சொன்னது…

//மும்பை பணக்காரர்கள் வாழும் இடம் மற்றும் முக்கிய வியாபர தலமாக இருப்பதாலும், பாதிக்கப்பட்டவர்கள் பணக்கார முதலைகள் என்பதாலும் பத்திரிக்கைகள் இந்தியாவே தீவிரவாதப் பிடியில் இருப்பது போல் //ஒரு மாயையைக் கிளப்பிவிட்டனர். அதுமட்டுமின்றி, நடந்த தாக்குதல் உளவு துறையின் அலட்சியத்தால் ஏற்பட்ட பெரும் தோல்வி. அதையெல்லாம் சுட்டாமல் தாஜ் ஹோட்டல் எரிந்ததையும், ஓபுராய் ஓட்டலில் நடந்த தாக்குதலையும், இஸ்ரேலியர்களை தாக்கியதையும் மட்டுமே காட்டிக் கொண்டு இருந்தனர்.//

ஒரு செய்தி மீடியாவுல வரணும்னாலே பணக்கார வர்க்கமா இருக்கனும் போல.
இந்தியாவுல சனநாயகம் நல்லாவே இருக்கு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்