வாயில் காவலர் : அரசே உங்களைப் பார்க்க வேற்றுநாட்டு மருத்துவர் வந்திருக்கிறார்
இம்சை அரசன் : வரச்சொல்லு
வாயில் காவலர் : தங்கள் உத்தரவு அரசே
*****
மருத்துவர் : அகிலண்டம் ஆளும், பார்போற்றும் மன்னா, தார் நிறக் கண்ணா
இம்சை அரசன் : எங்கே பரிசு பெரும் பாட்டை பாடும்
மருத்துவர் : மன்னா நான் புலவனல்ல மருத்துவன்
இம்சை அரசன் : மருத்துவரா ? அப்படியென்றால் அந்தப்புரத்தையே குலுங்கவைக்கும் இளமை துடிப்பு தரும் மருந்தைக் கொண்டு வந்திருக்கிறீர்களா ?
மருத்துவர் : ஆம் மன்னா !
இம்சை அரசன் : நல்லது, எங்கே இதன் மகத்துவத்தைச் சொல்லும்
மருத்துவார் : மன்னா இது மருந்து இல்லை
இம்சை அரசன் : அப்ப என்ன ம... த்துக்கு இங்கே வந்தே ?
மருத்துவர் : மன்னிக்க வேண்டும் மன்னா, இது மருந்து அல்ல அருமருந்து சூரணம் என்று சொல்ல வந்தேன்
இம்சை அரசன் : இத மொதலிலேயே சொல்லி இருக்கக் கூடாதா ?
மருத்துவர் : மன்னிக்கவேண்டும் மன்னா, இது சாதா சூரணம் இல்லை, சூரனையே சுக்குத் தண்ணீராக்கிய சூரணம்
இம்சை அரசன் : இப்ப இத சாப்பிட்டா நான் சுக்குத் தண்ணி ஆகிவிடுவேனா ?
மருத்துவர் : மன்னனுக்கு குறும்பு, நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன்,
இம்சை அரசன் : பேச்சுக்கு சொன்னியோ, பேதிக்கு சொன்னியோ இதன் மகத்துவத்தைச் சொல்லு
மருத்துவர் : மன்னா இது ஆயிரம் வேர் அபூர்வ சூரணம்,
இம்சை அரசன் : அப்படியா, இதன் பெயர் என்ன ?
மருத்துவர் : அதான் தலைப்பிலேயே எழுதி இருக்கே, 'சூரணம் ஆயிரம்'... சாப்பிட்ட ஒடனேயே எழுந்து அந்த புறம் ஓடுவீர்கள்
இம்சை அரசன் : சபை கலையட்டம், மருத்துவரே எனக்கு இப்பவே அந்தப்புரம் போகனும், சூரனத்தைக் கொடுங்கள்
மருத்துவர் : தருகிறேன் மன்னா, ஆனால் சாப்பிட்ட உடன் உங்களுக்கு ஓடத் தோன்றும், அதனால் பரிசு பணத்தை இப்போதே கொடுத்துவிடுங்கள்
இம்சை அரசன் : யாரங்கே மருத்துவருக்கு 1000 பொற்காசுகளை உடனடியாகக் கொடுங்கள், எல்லோரும் செல்லுங்கள் ஏன் இங்கே நிற்கிறீர்கள்
மருத்துவர் : மன்னா எல்லோரும் சென்றுவிட்டார்கள், பொற்காசும் கொடுத்துவிட்டீர்கள், நன்றி, இதோ இந்த சூரணத்தில் தேன் கலந்து ஐந்து நிமிடத்தில் சாப்பிடுங்கள், நான் வருகிறேன்.
*****
ஐந்து நிமிடம் சென்று சாப்பிட்ட இம்சை அரசன் வயிறு கடமுடானு சத்தம் வர பாத்ரூமை நோக்கி ஓடுகிறார்.
இம்சை அரசன் : யாரடா அங்கே, உடனே அந்த மருத்துவனை இழுத்துவாருங்கள், உண்மையிலேயெ பேதி மருந்தைக் கொடுத்துட்டான்....தாங்க முடியலையே...
அவ்வ்வ்வ்
வேகவேகமாக ஓடி பாத்ரூமுக்குள் சென்றவர் அதன் பிறகு மாலைவரை வரவேயில்லை
இம்சை அரசன் : அப்பாடா.....எலே எடுபட்ட பசங்களா இன்னுமாடா இங்கே நிக்கிறிங்க, மருத்துவன் எங்கேடா
காவலர் : மன்னிக்க வேண்டும் மன்னா, அவன் ஏற்கனவே வாயில் காவலர்களுக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து தான் உள்ளே வந்திருக்கிறான். அவன் வெளியே ஓடியபோது அவனை தடுப்பதற்குள் நான் உட்பட எல்லோரும் தடுமாறி மயங்கி விழுந்துட்டோம்
இம்சை அரசன் : அடப்பாவிகளா......இதைத்தான் மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்கிறார்களோ........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
காவலர் : மன்னா நீங்கள் சாப்பிட்டது ஆயிரம் வேர்(விழுது) கொண்ட ஆலம் மரப்பட்டை அதில் பேதி மருந்து கலந்துதான் உங்களை ஏமாற்றி இருப்பதாக நம் அரண்மனை மருத்துவர் கூறுகிறார். மாற்று மருந்து தருகிறாராம்
இம்சை அரசன் : வேணாம்யா, அவனாவது பேதியோட விட்டான், இவன் மருந்த சாப்பிட்டா சோளி முடிஞ்சிடும்...கண் எதிரே நிற்காதீர்கள்....
(தனக்குள்)யப்பா ஒரு சுக்கு காப்பி சாப்பிட்டதான் மயக்கம் தீறும். இன்னும் கிறுகிறுக்குது வயுத்துக்குள்ள டர்ரு புர்ருன்னு சத்தம் கேட்குதே...அவன் அந்த புறம் ஓடுவீர்கள் என்பதை என்பதை நான் தான் அந்தப்புரம் என்று நினச்சிக்கிட்டேனா ? அம்புட்டும் களவானி பசங்க... பக்கத்து நாட்டுக்காரனுக்கும் நாம இளிச்சவாயின்னு தெரிஞ்சிருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்......
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
29 கருத்துகள்:
நான் தான் முதல்
நாந்தான் முதல் வாசகன்!
அடச் சே, தளபதி சதி செய்துட்டாரு!
இம்சை அரசன் இரண்டாம் பாகத்திலே வச்சா நிச்சியம் 200 நாள் தான்
/*
அடச் சே, தளபதி சதி செய்துட்டாரு!
*/
எப்படி?
பின்னூட்ட சூரவளிகளான நசரேயன் மற்றும் நட்சத்திர பதிவர் பழமை பேசி ஆகியோருக்கு நன்றி !
:-)))...
//நசரேயன் said...
/*
அடச் சே, தளபதி சதி செய்துட்டாரு!
*/
எப்படி?
//
என்ன எப்பிடி, கிப்பிடி? கோவி ஐயா, இனியொரு பதிவு போடாமலா போயிடப் போறாரு?! உங்களுக்கு முன்னாடியே வந்து குந்திக்கிறேன், இருங்க!
சீரணம் ஆயிரம் ஒரு மாற்று மருந்துதான் சாப்பிடனும்.
பழமை,நசரு,குகு - ஒரு மார்க்கமுவுள்ள திரியராங்க மூனு பேரும்.
/*
பழமை,நசரு,குகு - ஒரு மார்க்கமுவுள்ள திரியராங்க மூனு பேரும்.
*/
எல்லாம் சூரணம் மருந்து சாப்பிட்டா சரியாப்போகும்
:-))))))
ஆஹா கோவி. என்னதிது? அடுத்த பாகம் உண்டா? ஆவலா இருக்கேன்.
கலக்கல்..
ஆமா.. ஏன் இப்படி ஆய்ட்டீங்க?
:-))))
நல்லாயிருக்கு..என்ன தீடிரென்று பகிடியா எல்லாம் எழுதிறீங்க..? என்னது இதிலும் ஏதாவது சமூக கருத்து, அரசியல் எல்லாம் இருக்கா..?ஆ....
// குடுகுடுப்பை said...
சீரணம் ஆயிரம் ஒரு மாற்று மருந்துதான் சாப்பிடனும்.
பழமை,நசரு,குகு - ஒரு மார்க்கமுவுள்ள திரியராங்க மூனு பேரும்.
//
:)
சிக்கன் பிரியாணி சாப்பிட்டு செறிக்காதவர்களுக்கு கொடுக்கலாம் !
//விஜய் ஆனந்த் said...
:-)))...//
நன்றி !
T.V.Radhakrishnan said...
:-))))))
//
நன்றி !
//வடகரை வேலன் said...
ஆஹா கோவி. என்னதிது? அடுத்த பாகம் உண்டா? ஆவலா இருக்கேன்.
//
அண்ணாச்சி, இம்சை அரசன் டவுசரை கழட்ட அம்புட்டு ஆசையா !
:) பாவம் விட்டுடுவோம் !
//பரிசல்காரன் said...
கலக்கல்..
ஆமா.. ஏன் இப்படி ஆய்ட்டீங்க?
:-))))
//
என்ன ஏன் இப்படி ஆயிட்டிங்களாம் ?
(வடிவேலு ஸ்டையிலில் படிக்கவும்)
//'டொன்' லீ said...
நல்லாயிருக்கு..என்ன தீடிரென்று பகிடியா எல்லாம் எழுதிறீங்க..? என்னது இதிலும் ஏதாவது சமூக கருத்து, அரசியல் எல்லாம் இருக்கா..?ஆ....
//
'டொன்' லீ, நன்றி !
இதுல சல்லடை போட்டு இருக்கான்னு பாருங்க :)
:-))))))))))))
super koviji
கோவியார் பகிடியிலும் கலக்குகிறார்!
சூப்பர்!
என்ன வேற கருத்து எதுவும் தோனலியா கருத்து கந்தசாமி ?
காமெடி செய்யறீங்க ?
உங்க வாழ்க்கை கதையை எழுதுங்களேன், நல்லா காமெடியா இருக்கும்
//செந்தழல் ரவி said...
என்ன வேற கருத்து எதுவும் தோனலியா கருத்து கந்தசாமி ?
காமெடி செய்யறீங்க ?
உங்க வாழ்க்கை கதையை எழுதுங்களேன், நல்லா காமெடியா இருக்கும்
//
ம், எழுதலாமே, மும்மூர்த்திகளில் ஒருவரான அவதூறு ஆறுமுகத்தைப் பற்றியும், வாயால் மலம் கழியும் மும்மூர்த்திகள் பற்றியும், எனக்கு சாதி ஒட்ட வைத்தவன் மூர்த்தி பற்றியும் எழுதலாம். படிக்கிறவர்கள் பாவம் இல்லையா ?
//திபாரதி said...
கோவியார் பகிடியிலும் கலக்குகிறார்!
சூப்பர்!
//
எழுத்தில் எல்லாம் ஒன்றுதானே.
//முரளிகண்ணன் said...
:-))))))))))))
super koviji
//
முரளி சார்,
நன்றி !
நல்ல பதிவு. நகைச்சுவை உங்களுக்கு இயல்பாக வருகிறது.
:-)))...
//பாலு மணிமாறன் said...
நல்ல பதிவு. நகைச்சுவை உங்களுக்கு இயல்பாக வருகிறது.
//
பாலு மணிமாறன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
//ஜெகதீசன் said...
:-)))...
//
நன்றி !
கருத்துரையிடுக