பின்பற்றுபவர்கள்

25 செப்டம்பர், 2008

பகவானுக்கு அபச்சாரம் செய்தால் மோட்சமாம் !

யாருக்கு பகவானால் வதம் (மரணம்) ஏற்படுகிறதோ, அவனுக்கு மோட்சம் கிடைக்கிறதாம். பகவானுடைய பார்வை விசேஷம் அப்படி! ராமனோடு போரிட்டு ராவணன் உயிர் துறந்தான் என்பது ராமாயண கதை. ராமனாக வந்திருப்பது நாராயணன் தான் என்று தெரிந்திருந்தும் ராமனோடு போர் புரிந்தான் ராவணன். அவன் கையால் தான் வதம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பி போர் செய்தான். பகவானுக்கு அபசாரம் செய்தால் அவர் கையால் வதம் ஏற்படும் என்று தெரிந்து, எதை செய்தால், பெரிய அபசாரமாக இருக்கும் என்று விசாரித்த ராவணன், சீதையை அபகரித்துச் சென்றான். ராமனாக வந்த நாராயணனால் வதம் செய்யப்பட்டான்; மோட்சம் பெற்றான் என்பது சுருக்கமான கதை. மோட்சம் கிடைக்க இப்படி ஒரு வழி, அப்படி ஒரு வழி இருக்கிறது. ஏதோ ஒரு வழியில் அதை அடைந்து விட்டால் போதும் என்கின்றனர். அவரவர் சாமர்த்தியத்தைப் பொறுத்த விஷயம் இது!.

மோட்சம் பெற இன்னும் சாமார்த்தியமான பலவழிகளைக் கண்டு கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.

- கோவிலை விபச்சாரக் கூடம் ஆக்கினால் பகவானுக்கு கோபம் வரும், இறந்த உடனேயே சொர்கம் சென்றுவிடலாம் என்பதற்காக தேவதாசிகளை உருவாக்கினர், பின்பு கருவாக்கினர்.

- கோவில் சொத்தை மொத்தமாக தின்றால் பகவானுக்கு கோபம் வரும், செத்தா சொர்கம் தான்

- கோவில் உண்டியலை பங்கமில்லாமல் பங்கு பிரித்துக் கொண்டால் 'ஏண்டா எனக்குன்னு 10 பைசா கூட இல்லையா ?' பகவானுக்கு கோபம் வரும், என்னிக்கு செத்தாலும் அன்னிக்கே சொர்கம் தான்.

- இதெல்லாம் விட கோவிலுக்குள் கொலைப் பண்ணி, இரத்தக்கரையாக்கினால் கொலையானவனுக்குக் சொர்கம் கிடைக்கும் முன்பே கொன்றவர்களுக்கு கிடைத்துவிடும்

"நந்தனாரை இறைவன் உள்ளேயே அழைத்திருக்கலாமே, யாரால் தடுக்க இயலும் என்ற கேள்வி இங்கு இயல்பாகவே எழும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு இன்னும் முக்கியத்துவம் அளிக்க இறைவன் விரும்பியதே இதற்கு காரணம்.

ஒருநாள், அந்த ஆசை நிறைவேறியது. சிதம்பரத்துக்கு அவர் நடந்தே சென்றார். அவரது உள்ளத்தில், நடராஜப் பெருமானை உள்ளே சென்று தரிசித்தே தீர வேண்டும் என்ற பக்தி வெறி ஏற்பட்டது. கோவில் மதில் சுவர் ஓரமாக படுத்துக் கொண்டார். வந்த களைப்பில் உறங்கி விட்டார். அப்போது, அவரது கனவிலும், தில்லை வாழ் அந்தணர்கள் கனவிலும் தோன்றிய சிவன், நந்தனாரை கோவிலுக்குள் அனுமதிக்கும்படி வேண்டினார்.இறைவனே சொன்ன பிறகு அந்தணர்கள் என்ன செய்ய இயலும்? அவர்கள் நந்தனாரை தேடி வந்து வணங்கி, இறைவனின் உத்தரவைத் தெரிவித்தனர். அவரை கோவிலுக்குள் மேளதாளம் முழங்க அழைத்துச் சென்றனர். அங்கே சென்ற நந்தனார் இறைவனைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினார். இறைவனோடு ஒன்றிப் போனார். அந்த நிலையிலேயே அவர் ஒளிப் பிழம்பாக மாறி, இறைவனுடன் கலந்து விட்டார். "

- தீண்டாமையை அப்படியே விட்டு வைத்திருப்பது சிவபெருமானின் திருவிளையாடல் மகிமையாம். அதன் பிறகு கோவிலுக்குள்ளேயே அவனை (எரித்து) ஜோதியாக்கியதும் இறைவனின் மகிமையாம். அடப்பாவிகளா, உங்கள் ஈனச் செயலுக்கு இறைவன் துணை இருப்பதாக்க அள்ளிவிடுகிறீர்களே, கடவுளுக்கு இப்படியும் அபச்சாரம் செய்து சொர்கம் செல்லும் திட்டமா அது. இந்த பாவிகள் செல்ல இருக்கும் சொர்கத்தின் பெயர் சொர்கமா ? சிதம்பரம் கோவிலுக்குள் தனியாளாகப் போய் இருந்தால் ஓதுவார் ஆறுமுகசாமியும் 'ஜோதியில்' கலந்திருப்பார், அவர்தான் பகவானுக்கு அபச்சாரம் பண்ணவில்லையே, பின்பு அவருக்கு எப்படி அந்த பாக்கியம் கிடைக்கும் ?

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நானும் அந்தச் செய்தியப் படிச்சேன் கோவி. கடுப்பா இருந்தது. பகவான் பெயரில் இவர்கள் அடிக்கும் லூட்டி அளவில்லாதது.

tamilraja சொன்னது…

சவுக்கடி!
சவுக்கடி!
சவுக்கடி!

கோவி.கண்ணன் சொன்னது…

//tamilraja said...
சவுக்கடி!
சவுக்கடி!
சவுக்கடி!

2:09 PM, September 26, 2008
//

அதெல்லாம்,
கொசுக்கடி அளவுக்கு கூட உறைக்காது !

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்