பின்பற்றுபவர்கள்

4 செப்டம்பர், 2008

இவர்களின் தொடர் டார்சரால் வலைப்பதிவை விட்டு விலகுகிறேன்...

எழுதவந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது, இதற்கும் முன்பு எப்போதும் இல்லாத தொல்லை, முடியல...இதுக்கும் மேல என்னால் தாங்கிக் கொள்ள முடியல.

போறத்துக்கு முன்னால தெளிவாக வாக்கு மூலம் கொடுத்துவிடுகிறேன். போவதற்கு இருவர் தான் காரணம்

மலேசிய மாரியாத்தா துர்கா : துர்காவுக்கு பல் ஆப்புரேசன் நல்ல படியாக நடந்ததுக்கு நான் ட்ரீட் கொடுக்கனுமா ? அது நடந்து ஒரு மாதம் ஆகுது, போனவாரம் அலுவலகத்தில் மீட்டிங்கில் இருந்த போது போன் செய்து 'எனக்கு ட்ரீட்டாக மசாலா தோசை வாங்கித்தர முடியுமா ? முடியாதா ? மூன்று தடவை அன்றே போன் செய்து ... மீட்டிங்கில் என்னைப் பலரும் திரும்பிப் பார்க்கும் படி செய்துவிட்டாள்

அடுத்து

சிங்கை சின்னச் சிங்கம் ஜோசப்.பால்ராஜ் : இவரோட டார்சர் மகா கொடுமை, இவரோட பதிவுக்கு 20,000 ஹிட் வரப் போகுதாம், அதுக்காக நான் ட்ரீட் கொடுக்கனுமாம். எவ்வளவு செய்யனும் என்று எதிர்ப்பார்க்கிறார் தெரியுமா ? 6000 சிங்கை வெள்ளி. என் ஒரு மாத சம்பளம் அளவைவிட கூடுதல். நானும் சொல்லிப் பார்த்துட்டேன், உங்க ஒருவருக்கே இம்புட்டுன்னா...இது தெரிஞ்சி மத்த தம்பிகளெல்லாம் அதே போல கேட்டால் என்ன செய்றது ? அதெல்லாம் எனக்கு கவலை இல்லைங்கிறார். நான் கவலைப் படவேண்டி இருக்கு !

ஆகவே பதிவர்களே...வலைப்பதிவில் எழுதுவதால் எனக்கு வெள்ளிகளாகவே ஆயிரக்கணக்கில் நட்டம் ஆகும் போலத் தெரிகிறது, நான் வலைப்பதிவில் தொடர்வது தேவைதானா ? சம்மணமிட்டு அமர்ந்து யோசித்தேன். ஒன்னும் சரிவருவது போல தெரியல.

அதனால் இன்று ஒருநாள் மட்டும் வலைப்பதிவை விட்டே செல்கிறேன்.
:)))

கும்மிகள் வரவேற்கப்படுகின்றன......

40 கருத்துகள்:

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

சாருவுக்காக ஒருத்தாரு 60 ஆயிரம் ரூபா செலவு பண்றப்ப, நீங்க எனக்காக 6 ஆயிரம் வெள்ளி செலவு செய்யக் கூடாதா?

வால்பையன் சொன்னது…

சேவிங் பண்ண ஆயிரம் ரூபா கொடுப்பாராம் நமக்கு ட்ரீட் வைக்க மாட்டாரமா,
அதெல்லாம் முடியாது ட்ரீட் கொடுத்தே ஆகணும்

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//சேவிங் பண்ண ஆயிரம் ரூபா கொடுப்பாராம் நமக்கு ட்ரீட் வைக்க மாட்டாரமா,
அதெல்லாம் முடியாது ட்ரீட் கொடுத்தே ஆகணும் //

மறுக்கா சொல்லேய்ய்ய்ய்ய்
உரக்க சொல்லேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

வெளிநாட்டுப்பதிவர்கள் சிங்கை வந்து செல்ல ஆகும் செலவையும் அண்ணண் கோவி.க வே ஏற்பார்.

சேவிங் பண்ண ஆயிரம் ரூவா கொடுத்துட்டு டிப்ஸ் 100 ஆ வேற கொடுத்துருக்காரு, பார்ட்டிக்கு வந்துட்டு போறவங்களுக்கு செலவு செய்ய மாட்டாரா நம்ம அண்ணண்?

விஜய் ஆனந்த் சொன்னது…

அய்யா!!!ஜாலி!!!

அப்போ எனக்கு பதிலா அண்ணனே ட்ரீட் கொடுத்துடட்டும்...நா வேணா வந்து மீ த பஸ்ட்ட்டூ அட்டென்டன்ஸ் போட்டுக்கறேன்....

வெண்பூ சொன்னது…

//அதனால் இன்று ஒருநாள் மட்டும் வலைப்பதிவை விட்டே செல்கிறேன்.//

மேலே இருக்கும் மற்ற வார்த்தைகளுக்கு முழு ஆதரவு தெரிவிக்கும் அதே நேரத்தில் போல்ட்(BOLD) வார்த்தைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை முதல் உண்ணும் விரதம் இருப்பதை அறிவிக்கிறேன். :)

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

வெண்பூ, நாளைக்கு உண்ணும் விரதம் இருந்துக்கங்க. ஆனா சிங்கப்பூருக்கு வர மறந்துராதீங்க. உங்க கடவு சீட்டோட நகலயும், புகைப்படத்தையும் அண்ணணுக்கு இப்பவே அனுப்பிருங்க. அப்போதான் குடியுரிமை சீட்டு வாங்க முடியும். ஆயிரம் பேருக்கு மேல வெளிநாட்டுல இருந்து வருவாங்க. முந்துபவர்களுக்கு முழுச் சலுகைகளும் கிடைக்கும்.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

நாளைக்கு நான் எழுதப்போற பதிவு: வாருங்கள் கோவி.கண்ணணை வழியணுப்பிவிட்டு துர்காவை கேள்வி கேட்போம். ( என்னையவே எப்டி நான் கேள்வி கேட்க முடியும்?)

கோவி.கண்ணன் சொன்னது…

கும்மிகளுக்கு நாளைக் காலை மொத்தமாக மறுமொழி அளிக்கப்படும், திருப்பணியை தொடர்க !

மங்களூர் சிவா சொன்னது…

அண்ணே!

மங்களூர் சிவா சொன்னது…

நீங்களுமா??

மங்களூர் சிவா சொன்னது…

/
வால்பையன் said...

சேவிங் பண்ண ஆயிரம் ரூபா கொடுப்பாராம் நமக்கு ட்ரீட் வைக்க மாட்டாரமா,
/

ரிப்பீட்டு

பரிசல்காரன் சொன்னது…

//அதனால் இன்று ஒருநாள் மட்டும் வலைப்பதிவை விட்டே செல்கிறேன்.///

இதை தினமும் மறுபதிப்பு செய்யவும்!

M.Rishan Shareef சொன்னது…

அப்ப இன்னும் போகலியா நீங்க? :P

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//பதிவர்: கோவி.கண்ணன் at 9/04/2008 11:07:00 PM

தொகுப்பு : பதிவர் வட்டம், மொக்கை//


வலை உலக மக்களே! வலையுலக ஜாம்பவான், பிரபல வலைப்பதிவர், எழுத்தாளர், சிங்கை கண்டெடுத்த சிந்தனைச் செல்வன் திரு.கோவியார் வலை உலகை விட்டு 53 நிமிடங்கள் ஒதுங்கியிருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்த இடைவேளையில் அவர் மாமல்லபுரம்,பெங்களூர்,கோவா, ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், ஊட்டி கொடைநாடு டீ எஸ்டேட் கஸ்ட் ஹவுஸ் போன்ற இடங்களில் ஓய்வு எடுக்கிறார். (அப்போது அவரை கலைஞரும், புரட்சித்தலைவியும் சந்திக்கிறார்கள்)

அவருக்கான பிரிவு உபசார விழா சிங்கப்பூர் வெஸ்டின் ஸ்டாம்போர்டு ஹோட்டலில் விமரிசையாக நடைபெறும். அனைவரும் வந்திருந்து வாழ்த்துங்கள்.(எல்லாம் அந்த 53 நிமிடத்துக்குள் தான். சார் ரொம்ப பிசி...!)

அங்கிருந்து புதிதாகக் கிளம்ப இருக்கும் கிங்க்பிஷர் விஷேட விமானத்தில் ஊட்டி கொடைநாடு எஸ்டேட் செல்கிறார். பின்னர் மாமல்லபுரம்,பெங்களூர்,கோவா, ஹைதராபாத் செல்கிறார். ஓய்வெடுத்த பின்னர் உலகின் நான் ஸ்டாப் விமானமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் இரவு 11.59.59 -க்கு சிங்கப்பூர் வந்து சேர்ந்து வழக்கம் போல் தனது பணியை ஆரம்பிக்கிறார்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

"கண்ணைப் பார் சிரி"
"கடன் அன்பை முறிக்கும்"
"இன்று கடன் இல்லை"

கடைகளில் பார்த்த ஞாபகம் வருதே...! ஞாபகம் வருதே...!

தமிழன்-கறுப்பி... சொன்னது…

அண்ணே நீங்களுமா?!

தமிழன்-கறுப்பி... சொன்னது…

என்ன கொடுமை இது...:)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

யாருப்பா அது மூத்த பதிவருக்கு டார்ச்சர் குடுக்கிறது...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

"இவர்களின் தொடர் டார்சரால் வலைப்பதிவை விட்டு விலகுகிறேன்..."

நல்ல காலம் பிறக்குது...
நல்ல காலம் பிறக்குது...!

தமிழன்-கறுப்பி... சொன்னது…

மங்களூர் சிவா said...
/
வால்பையன் said...

சேவிங் பண்ண ஆயிரம் ரூபா கொடுப்பாராம் நமக்கு ட்ரீட் வைக்க மாட்டாரமா,
/

ரிப்பீட்டு
/

நானும் ரிப்பீட்டு...:)

ஜெகதீசன் சொன்னது…

:)))

விஜய் ஆனந்த் சொன்னது…

// ஜோசப் பால்ராஜ் said...
நாளைக்கு நான் எழுதப்போற பதிவு: வாருங்கள் கோவி.கண்ணணை வழியணுப்பிவிட்டு துர்காவை கேள்வி கேட்போம். //

அவங்க பதிலுக்கு மசால் தோசை கேட்டா என்ன பண்ணுவீங்க??? நீங்களும் "இவர்களின் தொடர் டார்சரால் வலைப்பதிவை விட்டு விலகுகிறேன்..." அப்படின்னு பதிவு போடுவீங்களா?? அப்படி போட்டா உங்களை யாரு வழியனுப்பி வைப்பா???

விளக்கம் தேவை ப்ளீஸ்...

விஜய் ஆனந்த் சொன்னது…

// பரிசல்காரன் said...
//அதனால் இன்று ஒருநாள் மட்டும் வலைப்பதிவை விட்டே செல்கிறேன்.///

இதை தினமும் மறுபதிப்பு செய்யவும்! //

நீங்க நெனக்கிறது நடக்காது போட்காரரே !!!!

இது மாதிரியே நைட்டு 11:15-க்கு மறுபதிப்பு போட்டா,

அப்ப இன்னா பண்ணுவீங்க...

அப்ப இன்னா பண்ணுவீங்க...

அப்ப இன்னா பண்ணுவீங்க????

விஜய் ஆனந்த் சொன்னது…

// விஜய் ஆனந்த் said...
அய்யா!!!ஜாலி!!!

அப்போ எனக்கு பதிலா அண்ணனே ட்ரீட் கொடுத்துடட்டும்...நா வேணா வந்து மீ த பஸ்ட்ட்டூ அட்டென்டன்ஸ் போட்டுக்கறேன்.... //

ரிப்பீட்டேய்...
ரிப்பீட்டேய்...

மறுக்கா கூவிக்கிறேன்...
மறுக்கா கூவிக்கிறேன்...

இன்னோரு தபா சொல்லிக்கறேன்....
இன்னோரு தபா சொல்லிக்கறேன்....

விஜய் ஆனந்த் சொன்னது…

// வெண்பூ said...
போல்ட்(BOLD) வார்த்தைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை முதல் உண்ணும் விரதம் இருப்பதை அறிவிக்கிறேன். :) //

விரதத்துல கலந்துக்க எனக்கு முறையான அழைப்பு இல்லாததாலும், வெண்பூ ஒத்தை ஆளா சமாளிச்சுக்க முடிவு பண்ணிட்ட காரணத்தாலும், நான் வெளியிலிருந்து ஆதரவு மட்டும் தெரிவிச்சுக்கறேன்...

விஜய் ஆனந்த் சொன்னது…

// வால்பையன் said...
சேவிங் பண்ண ஆயிரம் ரூபா கொடுப்பாராம் நமக்கு ட்ரீட் வைக்க மாட்டாரமா,
அதெல்லாம் முடியாது ட்ரீட் கொடுத்தே ஆகணும் //

என்ன ட்ரீட் மட்டும் கேக்கறீங்க??? பாஸ்போர்ட், டிக்கட்டெல்லாம் வேணாமா?? நேத்து பின்ன சொன்னீங்க??? அப்புறம் இந்த ஊரு குஜிலிங்களெல்லாம் எப்படி உங்கள பாக்குறது????

விஜய் ஆனந்த் சொன்னது…

// ஜோசப் பால்ராஜ் said...

சேவிங் பண்ண ஆயிரம் ரூவா கொடுத்துட்டு டிப்ஸ் 100 ஆ வேற கொடுத்துருக்காரு, பார்ட்டிக்கு வந்துட்டு போறவங்களுக்கு செலவு செய்ய மாட்டாரா நம்ம அண்ணண்? //

வெளியூர்க்காரங்களுக்கு வந்து போற செலவயும் ஏத்துக்குவாரு...சரி....அப்போ உள்ளூர்க்காரங்களுக்கு???

விஜய் ஆனந்த் சொன்னது…

// மங்களூர் சிவா said...

அண்ணே!

நீங்களுமா?? //

அண்ணே!!!!

நீங்களுமா?????

ஓரே ஒரு "ரிப்பீட்டு"-தான் போட்டிருக்கீங்க????

வழக்கம் போல, நெறையா போடுங்க...

கோவி.கண்ணன் சொன்னது…

கும்மி நண்பர்கள் தயவு செய்து அடுத்த பதிவில் தொடரவேண்டும் !
:)

1000 ரூபாய் ஷேவிங் விளக்கம் :

நான் அதை எதிர்கொண்டே செல்லவில்லை. அதைப் பதிவில் தெளிவாக எழுதி இருந்தேன். அங்கே நான் சூழ்நிலை கைதியாக்கப்பட்டேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

:)

ஜோ/Joe சொன்னது…

//1000 ரூபாய் ஷேவிங் விளக்கம் :

நான் அதை எதிர்கொண்டே செல்லவில்லை. அதைப் பதிவில் தெளிவாக எழுதி இருந்தேன். அங்கே நான் சூழ்நிலை கைதியாக்கப்பட்டேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
//

நீங்க 1000 ரூபா கொடுத்தாலும் சரி 10 ரூபா கொடுத்தாலும் சரி ..ஷேவிங் ஆரம்பிச்சுட்டாங்கண்ணா முடியுற வரைக்கும் நாம சூழ்நிலை கைதி தான் .

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said... நீங்க 1000 ரூபா கொடுத்தாலும் சரி 10 ரூபா கொடுத்தாலும் சரி ..ஷேவிங் ஆரம்பிச்சுட்டாங்கண்ணா முடியுற வரைக்கும் நாம சூழ்நிலை கைதி தான் .

10:57 AM, September 05, 2008
//

சரியாச் சொன்னிங்க ஜோ,

கழுத்துல கத்தி வச்ச பிறகு கத்தவும் முடியாதே !
:)

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//1000 ரூபாய் ஷேவிங் விளக்கம் :

நான் அதை எதிர்கொண்டே செல்லவில்லை. அதைப் பதிவில் தெளிவாக எழுதி இருந்தேன். அங்கே நான் சூழ்நிலை கைதியாக்கப்பட்டேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன் //

இப்போ மட்டும் துர்காவுக்கு மசால் தோசையும், எனக்காக ட்ரீட்டும் நீங்களாவா எதிர்கொண்டு போறீங்க, நாங்களும் உங்கள சூழ்நிலை கைதியாத்தானே மாத்துறோம். ஓ, நீங்க சரியான சூழ்நிலை கைதியா இருக்கனும்னா கத்திய கழுத்துல வைச்சாத்தான் நடக்குமா? துர்கா, ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//அவங்க பதிலுக்கு மசால் தோசை கேட்டா என்ன பண்ணுவீங்க??? நீங்களும் "இவர்களின் தொடர் டார்சரால் வலைப்பதிவை விட்டு விலகுகிறேன்..." அப்படின்னு பதிவு போடுவீங்களா?? அப்படி போட்டா உங்களை யாரு வழியனுப்பி வைப்பா??? //

டார்சருக்கே டார்சரா? யாரது என்னைய டார்ச்சர் பண்ற எண்ணத்துல இருக்கது?
விடாமா பதிவு எழுதி நான் பண்ற பதில் டார்ச்சர்ல அப்றம் தூங்கிக்கிட்டு இருக்க மசால் தோசைன்னு சொன்னாக்கூட துர்கா எழுந்திருச்சு ஓடுறமாதிரி செஞ்சுருவேன்.

ஆமா, இந்த துர்கா யாருப்பா? அதுவே எனக்கு தெரியாது.

பெயரில்லா சொன்னது…

அண்ணா உங்களுக்கு பொய்யைத்தவிர வேற எதுவுமே எழுத தெரியாது போல இருக்கே...உங்க டார்ச்சர் தாங்காம நான் வலைப்பதிவை விட்டு இன்னும் ஒரு வருசத்துக்கு விலகுகிறேன்...

இது வரைக்கும் ஒரு கிளாஸ் தண்ணீ கூட வாங்கி தந்தது இல்லை..அதுக்குள்ள இம்புட்டு சவுண்டு!!

லக்கிலுக் சொன்னது…

ஆ.. இவ்ளோ நல்லவரா கருத்து கந்தசாமி? இத்தனை நாளா தெரியாம போயிடிச்சே?

செந்தழல் ரவிக்காக சென்னையிலிருந்து லக்கிலுக்

கணேஷ் சொன்னது…

//
இன்று ஒருநாள் மட்டும் வலைப்பதிவை விட்டே செல்கிறேன். //

அண்ணே! இதுக்கு ட்ரீட் ????

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
ஆ.. இவ்ளோ நல்லவரா கருத்து கந்தசாமி? இத்தனை நாளா தெரியாம போயிடிச்சே?

செந்தழல் ரவிக்காக சென்னையிலிருந்து லக்கிலுக்

1:01 PM, September 05, 2008 //

லக்கி ஐயங்கார்,

பின்னனி கொடுப்பது ஓகே தான், துப்பறிய சென்றுவிடாதீர்கள் அப்பறம் உங்களிடம் பழகுபவர்களுக்கு பய உணர்வும், சந்தேகமும் வர ஆரம்பித்துவிடும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//கணேஷ் said...
//
இன்று ஒருநாள் மட்டும் வலைப்பதிவை விட்டே செல்கிறேன். //

அண்ணே! இதுக்கு ட்ரீட் ????

1:26 PM, September 05, 2008
//

கணேஷ்,

ட்ரீட்டுக்காகத்தான் ஓடுவதே, விதி துரத்தி துரத்தி அடிக்குது !

கோவி.கண்ணன் சொன்னது…

//துர்கா said...
அண்ணா உங்களுக்கு பொய்யைத்தவிர வேற எதுவுமே எழுத தெரியாது போல இருக்கே...உங்க டார்ச்சர் தாங்காம நான் வலைப்பதிவை விட்டு இன்னும் ஒரு வருசத்துக்கு விலகுகிறேன்...

இது வரைக்கும் ஒரு கிளாஸ் தண்ணீ கூட வாங்கி தந்தது இல்லை..அதுக்குள்ள இம்புட்டு சவுண்டு!!

11:16 AM, September 05, 2008
//

துர்கா,

எங்களுக்கு ஒரு க்ளாஸ் தண்ணி என்றால் டாஸ்மாக்கு தான், பரவாயில்லையா ? உங்க அண்ணனிடம் உதை வாங்குவது யார் ?

கோவி.கண்ணன் சொன்னது…

அடிச்சு ஆடிய (செல்லமாக தட்டித்தான்) பால்ராஜ், விஜய் ஆனந்த், மங்களூர் சிவா ஆகியோரின் பொன்னான பின்னூட்ட சேவைக்கு பெரிய நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்