பின்பற்றுபவர்கள்

2 செப்டம்பர், 2008

அனுராதா அம்மாவிற்கு ...

அனுராதா அம்மாவிற்கு, எந்த அஞ்சலிலும் உங்களுக்கு அனுப்ப முடியாத, இதயம் சுமந்துவரும் இந்த கடிதத்தை பொறுமையாக எழுதவேண்டும் என்பதற்காகவே கண்ணீர் தீரும் வரை காத்திருந்துவிட்டு எழுதுகிறேன்.

செப்டம்பரில் புதுவீடு செல்ல இருப்பதாக இறுதி பதிவில் தாங்கள் சொல்லி இருந்தபடி தங்களின் நினைவு தீபத்தை எதிர்நோக்கிய படி தங்களின் புதுவீடு உங்களுக்காகவே காத்திருக்கிறது.

உலகில் தன்நோயே மிகப் பெரியது என்று அழுது புலம்பி, மருத்துவரால் உறுதி செய்யப்பட்ட எஞ்சி இருக்கும் வாழ்நாட்களை குறைத்துக் கொள்போர் இடையில் மன உறுதியோடு, உங்களிடம் தனது பசியை தீர்த்துக் கொண்ட அந்த நோயின் கொடுமை குறித்து விழிப்புணர்வையும், சிகிச்சை முறைகளையும் பதியவைத்து அந்நோயின் இறுமாப்பை அடக்க இறுதிவரை முயன்று இன்னுயிரைத் தந்து இருக்கிறீர்கள்.

உங்கள் எழுத்துக்களால் நீங்கள் என்றுமே அனுதாபம் தேட முயலாமல் அதை ஒரு விழிப்புணர்ச்சியாக்கி பதிவர்களில் ஒருவராகவே நீங்கள் உங்களைப் பதியவைத்தது உங்களின் தனிச்சிறப்பு. அது போன்ற சூழலில் பிறர் இருந்தால் தன்னுடைய துன்பத்தினால் சொந்தங்களையும் துன்ப உணர்விலேயே வைத்திருப்பர். உங்களுக்கான வேலைகளை இறுதிவரை செய்து கொண்டு, உங்கள் கணவரையும் நீங்கள் ஆறுதல் படுத்திவந்திருக்கிறீர்கள். 'நோய் பெரிதல்ல அதனால் எனது தலை மொட்டையாகி எனது உருவம் சீர்குழைக்கப்படுவதற்கு மட்டுமே ஒரு பெண்ணாக நான் வருந்துகிறேன்' என்று நீங்கள் எழுதிய உணர்வு வரிகள், தாங்கள் பயப்பட்டது மரணத்துக்கு அல்ல என்று உணர்த்திய உங்கள் பெண்மை பேற்றுதலுக்குறியது.

மரணத்தை வெல்வது என்பது உடல் மரணமடைவதைத் தடுப்பதல்ல மரணபயமின்றி அதை எதிர்நோக்குவதே என்று தான் ஆன்மிகப் பெரியவர்கள் சொல்கிறார்கள். ஆன்மிகவாதியான நீங்கள் மரணத்தை வென்று மனதில் வாழ்கிறீர்கள்.

என்றாவது ஒருநாள் உங்கள் அருகே ஒவ்வொருவராக நாங்களும் வருவோம் ... அதற்கு முன்பே நீங்கள், இன்னும் ஒராண்டோ அல்லது அதற்கும் மேற்பட்ட குறைவான ஆண்டுகளில் உங்களின் கணவரின் கைகளில் பேரப்பிள்ளையாகவோ, பேரப்பிள்ளையின் பிள்ளையாகவோ தவழ்வீர்கள்.

இறப்புகள் தற்காலிகமானவையே ! நீங்காத உங்கள் நினைவுகள் அதையும் பொய்யாக்கி தங்களுக்கு இறப்பே இல்லை என்கிறது !

9 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

(-:

பரிசல்காரன் சொன்னது…

மனசை என்னமோ பண்ணுது கண்ணன்...

:-(

கிரி சொன்னது…

அனுராதா அவர்கள் நம்மில் இருந்து பிரிந்தாலும், அவருடைய எழுத்துக்கள் என்றும் நம்முடனே இருக்கும்.

ஜெகதீசன் சொன்னது…

ம்ம்... :((((

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அஞ்சலிகள் செலுத்துவது, ஆழ்ந்த அனுதாபங்கள் என்று மட்டும் சொல்வது நாம் அவருக்கு செய்யும் மரியாதையாகாது. அவரது எழுத்துக்கள் புத்தகமாக்கப்பட வேண்டும். அவை எல்லோரையும் போய் சேரும் வகையில் புத்தகமாக்கப்பட வேண்டும்.

அவரது எழுத்துக்களோடு, நிபுணர்களின் கருத்துக்களையும் பெற்று புற்றுநோய் குறித்த தகவல்கள் அனைத்தையும் கொண்ட ஒரு முழுமையான புத்தகமாக எல்லோருக்கும் புரியும் தமிழில் அச்சிடப்பட்டு அது வெளிவர வேண்டும். அதுதான் அம்மையாருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும். இந்தப் பணிக்கு என்னால் செய்ய இயன்றதை நான் செய்ய தயாராக உள்ளேன்.

விஜய் ஆனந்த் சொன்னது…

:-(((

kanchana Radhakrishnan சொன்னது…

அருமையான வரிகள்..:-((((

rapp சொன்னது…

நானும் என் கண்ணீர் அஞ்சலிகளை செலுத்துகிறேன் :(:(:(

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

:(

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்