"இடப் பங்கீடு" அதனால் பாதிக்கப்படுகிறோம் என்று உணர்ந்ததால் ஏற்படும் புலம்பல்கள், திடீர் சமத்துவ வாதிகளுக்கெல்லாம் திடிரென்று ஞானம் பிறந்து இட ஒதுக்கீடு சாதிய உணர்வை அதிகப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கு தரவுகளாக (ஆதாரமாக) புற்றீசல்களாக முளைத்த சாதி சங்கங்களைக் காட்டுகிறார்கள். இவர்களின் எழுத்துக்களைப் மேலோட்டமாக படித்தால் 'ஆமாம்ல' என்று தலையசைக்க வைக்கும். இவர்கள் ஆராய்ந்து தான் பேசுகிறார்களா ? உயர்சாதியினரின் கைக்கூலிகளாக பேசுகிறார்களா ? புலம்பல்களைக் கேட்ட புல்லரிப்பில் பேசுகிறார்களா ? இல்லை... இல்லை சமத்துவம் பேசும் சமூக முகங்களாக தங்களை நினைத்துக் கொண்டு அறியாமையில் பேசுகிறார்களா ? என்பது அவர்களே வெளிச்சம்.
சாதிகள் ஒழிய வேண்டும், மதங்கள் கூட ஒழிய வேண்டுமென்பதே என் விருப்பமும், படித்தவர்கள் மிக மிக (அதிகரிக்க)... சாதிப் பெருமை குறைய வில்லையே என்பதே பலரின் ஆதங்கமாக இருக்கிறது. சரிதான். படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் விஞ்ஞான முறையில் மாட்டிக் கொள்ளாமல் ஊழல் செய்வது போலவே, படித்தவர்கள் மிக மிக... அவர்களின் சாதியைக் கட்டிக் காக்கும் கேடயங்களாகவே மாறிவிடுகிறார்கள், அரசு பதவியில் தேர்தல் அதிகாரியாக இருந்த மலைச்சாமி போன்றவர்களே இதற்கு சாட்சி. இதன் பின்னனிக்குச் செல்லும் முன், இவற்றை மனதில் கொள்ளுங்கள்.
சாதிக் கொடுமைகள் ஓரளவு ஒழிந்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா ? 50 ஆண்டுகளுக்கு முன்பு நாடார்களும், வன்னியர்களும் தீண்டத்தகாதவர்கள், அதனாலேயே இந்த இருசாதிகளில் பலர் கிறித்துவத்தைத் தழுவினார்கள். தற்பொழுது அவர்களை தீண்டாத்தகாதவராக ஒதுக்கி வைக்க முடியுமா ? தலித்துகள் நிலையும் அவர்கள் பொருளாதாரம் கல்வி பெரும் போது உறுதியாக மாறும்.
சாதிய அடையாளம் என்பது குலப்பெருமைக்கும், பிறரைத் தாழ்த்துவதற்கும் என்று நிலையில் இயங்கிதன் புள்ளி கொஞ்சம் மாறி இருக்கிறது. தற்பொழுது உயர்சாதியினர் தவிர்த்து பிறரும் சாதிப் பெருமை பேசுவதற்குக் காரணம், எல்லோரும் நினைப்பது போல் சாதி வெறி என்பது அல்ல, ‘நாங்களும் தாழ்ந்தவர் இல்லை’ என்று சொல்வதே அதன் பொருள்.
எல்லோருமே அவரவர் சாதி உயர்ந்தது... தாம் எவனுக்கு தாழ்ந்தவன் என்று நினைக்கிறார்கள், இனியும் பிறரை சாதிச் சொல்லி தாழ்த்த முடியாத நிலை தான் இன்று. அப்படியும் மீறினால் வன்கொடுமை சட்டம் இருக்கவே இருக்கிறது.
உயர்சாதியினர் தங்கள் சாதியைச் சொல்வதற்கும், ஒடுக்கப்பட்டவர்கள் சொல்வதற்கும் பெரிய வேறுபாடு உண்டு, முன்னது குலப்பெருமை, பின்னது எழுச்சிக்கான அடையாளம். சாதி ஒழிகிறதோ இல்லையோ குலப்பெருமை பேசுவது ஒழிந்து கொண்டு தான் இருக்கிறது.
ஒரு தாழ்த்தப்பட்டவர் உங்கள் முன் வந்து ‘தாம் பறையர் குலத்தில் பிறந்ததற்காக பெருமை படுகிறேன், என் குலம் தாழ்ந்தது இல்லை’ என்று சொன்னால் அதை சாதி வெறியாக பார்க்க முடியுமா ?
சீனர்களில் பல்வேறு பிரிவினர் இருந்தாலும் அவற்றை குடும்ப பெயராக (சர் நேம்) பயன்படுத்துவதுடன் சரி, அவர்களுக்குள் எந்த பேதமும், அந்த சர் நேம் கொண்டவர்களுடன் தான் மணம் முடிப்பு என்றெல்லாம் இல்லை.
பேதங்கள் ஒழிந்தால் அதன் பிறகு சாதி ஒழிந்தாலும் ஒன்று தான் ஒழியாவிட்டாலும் ஒன்று தான், விருப்பபட்டவர்கள் சர் நேம் போலவே தங்கள் சாதிப் பெயரை பெயருக்கு பின்னால் தாரளமாகப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் மற்றவர்களிடம் சென்று "நீ காலில் இருந்து பிறந்தாய், நான் முகத்தில் இருந்து பிறந்தேன்" என்று சொன்னால் "நான் என் அம்மாவின் கால்களுக்கு இடையே தான் பிறந்தேன்... நீ முகத்தில் இருந்து தான் பிறந்தாயா என்பதை உங்கள் அம்மாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் வந்து சொல்லட்டும் அதன் பிறகு நம்புகிறேன்.." என்பான்.
இது போன்றே 'போலி மதச்சார்பின்மை' என்ற சொல்லும் மிகுந்தவையாகவே உலாவருகின்றன, திராவிடக் கட்சிகள் கிறித்து மற்றும் இஸ்லாமிய அமைப்புடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அது போலி மதச்சார்பின்மையாம். 'ஆமாம்ல' என்று நினைக்கத் தோன்றுகிறதா ? அவர்கள் சிறுபான்மையினர் எனவே அவர்களை நசுக்க வேண்டும் என்றே இந்துத்துவ சக்திகள் எப்போதும் சொல்லி வருகின்றன. அதனாலேயே அவர்கள் தங்கள் மதத்தின் பெயரால் ஒன்றினைந்து ஒரே தலைமையில் இயங்குகின்றனர், இவர்களிடம் கூட்டணி வைத்துக் கொள்வது போலி மதச்சார்பின்மையா ? அவர்களை இந்திய மக்கள் என்பதிலிருந்து பிரித்துச் சொல்லவே 'சிறுபாண்மையினர்' என்ற அடைமொழியை இந்துதுவாக்கள் பயன்படுத்துகிறார்கள். அதனைப் புரிந்து கொண்டவர்கள் திராவிட அமைப்பினர் தான், இப்போது சொல்லுங்கள் கிறித்துவ / இஸ்லாமியர்களை அரவணைப்பது போலி மதச் சார்பின்மையா ?
இந்தியராகவே பிறந்து இந்தியர்களாகவே மடியும் இம்மண்ணின் மக்களை சிறுபாண்மையினர் என்று தூற்றுவது எந்த வகையில் ஞாயம் ? இவர்களை முறியடித்து அம்மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது மதம் வெறி இல்லாத அனைத்து இந்துக்களின் கடமையல்லவா, நாம் செய்யத் தவறியதை திராவிட அமைப்பினர் செய்து வருகின்றனர், அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளாவிட்டாலும் இந்து மதத்தைவிட்டு ஓடிவிடவில்லையே ? 'போலி மதச்சார்பின்மை' என்ற குற்றச் சாட்டு புறம் தள்ளப் படவேண்டிய ஒன்று.
நவீன சொல்லாடல்கள் மூலம் ஆதிக்க சக்திகள் எப்போதும் தம்மை புதுப்பித்துக் கொண்டே புரட்சி, புரிந்துணர்வு என்றெல்லாம் குழப்பம் உருவாக்கும் அத்தனை உத்திகளையும் மேற்கொள்வார்கள். நடுநிலையாளர்கள் குழப்பத்திற்கு ஆளாகமல் நன்றாக சிந்தித்தே அவர்களின் திரித்தல்களை அடையாளம் காணவேண்டும்.
பின்குறிப்பு : கீழ்கண்ட இருபதிவுகளுக்காக பின்னூட்டமாக எழுதினேன், பெரியதாகிவிட்டதாலும், பயன் கருதியும் தனி இடுகை ஆக்கி இருக்கிறேன்.
சாதி - எதிர்ப்போரே வளர்க்கிறோமா?
சாதி என்னும் பெருங்கேடு - எங்கே போகிறோம்?
பின்பற்றுபவர்கள்
7 செப்டம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
15 கருத்துகள்:
உங்களைப்போல தெளிவாக எழுத வராவிட்டாலும், நான் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
//
திடீர் சமத்துவ வாதிகளுக்கெல்லாம் திடிரென்று ஞானம் பிறந்து இட ஒதுக்கீடு சாதிய உணர்வை அதிகப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.அதற்கு தரவுகளாக (ஆதாரமாக) புற்றீசல்களாக முளைத்த சாதி சங்கங்களைக் காட்டுகிறார்கள்.
//
இதற்கு இட ஒதுக்கீடு மட்டும் காரணமல்ல. வன்னியர் சங்கமாக இருந்த பா.ம.க ஒரு அரசியல் சக்தியாக மாறி இருப்பதும் காரணம். சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு எனும்போது ஒவ்வொரு ஜாதியும் தங்கள் பலத்தை காட்ட சங்கம் அமைக்கிறார்கள் என்பதில் லாஜிக் இருக்கிறதா இல்லையா??
//
படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் விஞ்ஞான முறையில் மாட்டிக் கொள்ளாமல் ஊழல் செய்வது போலவே, படித்தவர்கள் மிக மிக... அவர்களின் சாதியைக் கட்டிக் காக்கும் கேடயங்களாகவே மாறிவிடுகிறார்கள், அரசு பதவியில் தேர்தல் அதிகாரியாக இருந்த மலைச்சாமி போன்றவர்களே இதற்கு சாட்சி.
//
நீங்கள் சொல்வது மிகவும் சரி. அதற்கு காரணம் வேலையில் சேர்ந்த நாள் முதல் ஊழலில், அடுத்தவர்களுக்கு ஜால்ரா அடித்தே வாழ்ந்த அரசு அதிகாரிகள், பதவி போனப்பின் ஜாதி சங்க தலைவர் ஆவதில் ஆச்சரியம் இல்லை. மலைச்சாமி அரசு அதிகாரியாக இருக்கும் போதே "புரட்சித் தலைவி" என்று தான் சொல்வார்.
//
தலித்துகள் நிலையும் அவர்கள் பொருளாதாரம் கல்வி பெரும் போது உறுதியாக மாறும்.
//
மிக நிச்சயமாக உயர வேண்டும். அது அவர்களின் உரிமை. ஆனால், பொருளாதார நிலையில் கடை மட்டத்தில் இருக்கும் உரிமைகள் ஏற்கனவே முன்னேறி விட்ட தலித்துகளாலே பறிக்கப்படுவதை குறித்து என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் சொன்னதா இல்லை வேறு ஏதேனும் பதிவில் படித்ததா என்று நினைவில்லை. ஆனால், படிப்பதை தவிர வேறு எ ந்த வேலையும் செய்யாத ஒரு தலித் டாக்டரின் மகன் 75% மார்க் எடுத்து டாக்டராகிறான். ஆனால், பகுதி நேர வேலை செய்து கொண்டு 74% மார்க் எடுக்கும் மற்றொரு தலித் தொழிலாளியின் மகன் இடம் கிடைக்காமல் போனால், இது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா??
இட ஒதுக்கீடு கொடுக்கட்டும். இப்பொழுது இருக்கும் அளவே இருக்கட்டும். ஆனால், பொருளாதார நிலையில் முன்னேறியவர்களுக்கு ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமா??
10% தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு என்றால், அந்த 10% ஏழை தலித்துகளுக்கு என்றால், மேலும் முன்னேற்றம் வருமா வராதா??
//
இது போன்றே 'போலி மதச்சார்பின்மை' என்ற சொல்லும் மிகுந்தவையாகவே உலாவருகின்றன, திராவிடக் கட்சிகள் கிறித்து மற்றும் இஸ்லாமிய அமைப்புடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அது போலி மதச்சார்பின்மையாம். 'ஆமாம்ல' என்று நினைக்கத் தோன்றுகிறதா ? அவர்கள் சிறுபான்மையினர் எனவே அவர்களை நசுக்க வேண்டும் என்றே இந்துத்துவ சக்திகள் எப்போதும் சொல்லி வருகின்றன.
//
இந்துத்துவ சக்திகள் என்று நீங்கள் ராம கோபாலன், அத்வானி போன்றவர்களை சொன்னால் அது சரியே. ஆனால், சிறுபான்மையினர் என்று அவர்கள் மட்டும் சொல்லவில்லை. சிறுபான்மையினர் என்று சொல்வது நீங்கள் சொல்லும் கிறித்துவ, முஸ்லிம் அமைப்புகளும் கூடத்தான். சிறுபான்மையினர் பள்ளி, கல்லூரி என்று அவர்களே சொல்வதுண்டு.
தாய் மதத்துக்கு திரும்புங்கள் என்று ராம கோபாலன் சொல்வது மத வெறி. இதை ஒப்புக்கொள்ள முடியும். ஆனால், "பாவிகளே வாருங்கள். ஏசு அழைக்கிறார்" என்று சொல்வதும், மதத்தை பரப்புவதும் மத வெறியே!
//
இப்போது சொல்லுங்கள் கிறித்துவ / இஸ்லாமியர்களை அரவணைப்பது போலி மதச் சார்பின்மையா ?
//
அரவணைப்பது போலி மதச்சார்பின்மை இல்லை. ஆனால், திராவிட இயக்கங்களின் மூலமான தி.க.வின் உண்மையான் கொள்கை என்ன? எந்த மதமும் இல்லை என்பதே. எந்த கடவுளும் இல்லை என்பதே. ஆனால், இ ந்து என்றால் திருடன் என்று சொல்லும் திராவிட தலைவர் கருணானிதி, ஒரு மதம் சம்பன்தமான அமைப்புடன் கூட்டணி வைத்தால் கேள்வி வருமா வராதா?? ஒன்று அவர் எ ந்த மதத்தையும் திட்டாமல் இருக்க வேண்டும், இல்லை எல்லா மதங்களையும் திட்ட வேண்டும். ஒரு குறிப்பிட்ட மதத்தை திட்டுவதால் தான் இந்த பிரச்சினை.ஒரு மதத்தை திட்டுவதும், மற்றொரு மத அமைப்புடன் கூட்டணி செய்வதும், போலி மதச்சார்பின்மையே!
//
இந்தியராகவே பிறந்து இந்தியர்களாகவே மடியும் இம்மண்ணின் மக்களை சிறுபாண்மையினர் என்று தூற்றுவது எந்த வகையில் ஞாயம் ? இவர்களை முறியடித்து அம்மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது மதம் வெறி இல்லாத அனைத்து இந்துக்களின் கடமையல்லவா,
//
இது குறித்து எனக்கு எ ந்த கேள்வியும் இல்லை. எந்த மதமாக இரு ந்தாலும், பாதுகாப்பு தரவேண்டியது அரசின் கடமை.
//அது சரி said...
உங்களைப்போல தெளிவாக எழுத வராவிட்டாலும், நான் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.//
எல்லாம் பழக்கத்தில் வருவதுதான், நீங்களும் நன்றாக எழுதிப்பழகினால் பின்பு எல்லாமே தெளிவாகத்தான் இருக்கும். எண்ண ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து என்னால் எழுத முடியவில்லை என்பதே உண்மை.
//இதற்கு இட ஒதுக்கீடு மட்டும் காரணமல்ல. வன்னியர் சங்கமாக இருந்த பா.ம.க ஒரு அரசியல் சக்தியாக மாறி இருப்பதும் காரணம். சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு எனும்போது ஒவ்வொரு ஜாதியும் தங்கள் பலத்தை காட்ட சங்கம் அமைக்கிறார்கள் என்பதில் லாஜிக் இருக்கிறதா இல்லையா??//
இட ஒதுக்கீடில் தனிபிரிவு பெரும் முன்பே, தீண்டத்தகாதவர்கள் என்ற ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்ததிலுருந்து வன்னியர்கள், நாடார்கள் மீண்டுவிட்டார்கள். அதைத்தான் குறிப்பிட்டேன். பாமக சாதி அரசியல் கட்சி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
//மிக நிச்சயமாக உயர வேண்டும். அது அவர்களின் உரிமை. ஆனால், பொருளாதார நிலையில் கடை மட்டத்தில் இருக்கும் உரிமைகள் ஏற்கனவே முன்னேறி விட்ட தலித்துகளாலே பறிக்கப்படுவதை குறித்து என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் சொன்னதா இல்லை வேறு ஏதேனும் பதிவில் படித்ததா என்று நினைவில்லை. ஆனால், படிப்பதை தவிர வேறு எ ந்த வேலையும் செய்யாத ஒரு தலித் டாக்டரின் மகன் 75% மார்க் எடுத்து டாக்டராகிறான். ஆனால், பகுதி நேர வேலை செய்து கொண்டு 74% மார்க் எடுக்கும் மற்றொரு தலித் தொழிலாளியின் மகன் இடம் கிடைக்காமல் போனால், இது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா??
இட ஒதுக்கீடு கொடுக்கட்டும். இப்பொழுது இருக்கும் அளவே இருக்கட்டும். ஆனால், பொருளாதார நிலையில் முன்னேறியவர்களுக்கு ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமா??
10% தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு என்றால், அந்த 10% ஏழை தலித்துகளுக்கு என்றால், மேலும் முன்னேற்றம் வருமா வராதா??//
இந்த நிலை உயர்வகுப்பில் இல்லை என்கிறீர்களா ? பொதுப்பிரிவில் போட்டியிடும் அத்தனை உயர்சாதிக்காரர்களின் அம்மாக்களும் அப்பளம் விற்றுதான் படிக்க வைக்கிறார்களா ? வசதி படைத்தவர்கள் பெய்டு சீட்டுக்கு விண்ணப்பித்து செல்ல வேண்டியதுதானே, 92 % விழுக்காடு மதிப்பெண் பெற்று இடம் கிடைக்கும் ஒரு பணக்கார உயர்சாதி மாணவன், 91.5% பெற்று இடம் கிடைக்காமல் போகும் மற்றொரு ஏழை உயர்சாதி மாணவனின் இடத்தை எடுத்துக் கொள்கிறான் என்கிறேன், இதற்கு பதில் சொல்லுங்கள்.
//தாய் மதத்துக்கு திரும்புங்கள் என்று ராம கோபாலன் சொல்வது மத வெறி. இதை ஒப்புக்கொள்ள முடியும். ஆனால், "பாவிகளே வாருங்கள். ஏசு அழைக்கிறார்" என்று சொல்வதும், மதத்தை பரப்புவதும் மத வெறியே!//
சரிதான்.
அவர்கள் தாங்கள் பாவம் செய்துவிட்டே இங்கு வந்தோம் என்று பறைசாற்றுகிறார்களோ என்னவோ. :)))
//அரவணைப்பது போலி மதச்சார்பின்மை இல்லை. ஆனால், திராவிட இயக்கங்களின் மூலமான தி.க.வின் உண்மையான் கொள்கை என்ன? எந்த மதமும் இல்லை என்பதே. எந்த கடவுளும் இல்லை என்பதே. ஆனால், இ ந்து என்றால் திருடன் என்று சொல்லும் திராவிட தலைவர் கருணானிதி, ஒரு மதம் சம்பன்தமான அமைப்புடன் கூட்டணி வைத்தால் கேள்வி வருமா வராதா?? ஒன்று அவர் எ ந்த மதத்தையும் திட்டாமல் இருக்க வேண்டும், இல்லை எல்லா மதங்களையும் திட்ட வேண்டும். ஒரு குறிப்பிட்ட மதத்தை திட்டுவதால் தான் இந்த பிரச்சினை.ஒரு மதத்தை திட்டுவதும், மற்றொரு மத அமைப்புடன் கூட்டணி செய்வதும், போலி மதச்சார்பின்மையே!
//
கலைஞர் 'திருடன்' என்று சொல்லிவிட்டு 'உள்ளம் கவர் கள்வன்' என்று விளக்கம் கொடுத்தாரே அதனை ஏன் யாருமே சுட்டுவதில்லை. தி.க ? திக அரசியல் கட்சியல்ல, அது யாருடனும் கூட்டணி வைப்பது இல்லை, சிறுபாண்மையினர் என்று அடையாளப்படுத்தப்படுத்தபடுவதால் கிறித்துவ, இஸ்லாமியர்களின் நலனுக்காக அவர்கள் குறித்து அக்கரை கொண்டு இருப்பார்கள்.
இந்தப் பதிவுக்கு நான் எழுத ஆரம்பித்த பின்னூட்டம் மிக பெரிதாய் போய்கொண்டு இருக்கின்றது. தனிப்பதிவாகவே போட்டுவிடுகின்றேன்.
அன்புள்ள கோவி.கண்ணன்,
நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ள பதிவை
sikkimukkikokkan.wordpress.com வலைப்பதிவில் எழுதியவன் நானே!
உங்கள் பின்னூட்ட உரைக்கும் மறுமொழி இட்டுள்ளேன். படிக்கும்படி கோருகிறேன்.
// இவர்கள் ஆராய்ந்து தான் பேசுகிறார்களா ? உயர்சாதியினரின் கைக்கூலிகளாக பேசுகிறார்களா ? புலம்பல்களைக் கேட்ட புல்லரிப்பில் பேசுகிறார்களா ? இல்லை... இல்லை சமத்துவம் பேசும் சமூக முகங்களாக தங்களை நினைத்துக் கொண்டு அறியாமையில் பேசுகிறார்களா ? என்பது அவர்களே வெளிச்சம்.//
எவரொருவரின் கைக்கூலியாகவோ வேறு எதுவாகவோ இன்றி இயல்பாக எனக்குத் தோன்றிய எண்ணத்தையே எழுதியுள்ளேன். என் எழுத்துக்களே சான்று கூறும்.
//பேதங்கள் ஒழிந்தால் அதன் பிறகு சாதி ஒழிந்தாலும் ஒன்று தான் ஒழியாவிட்டாலும் ஒன்று தான்//
இந்த நாட்டைப் பொறுத்தவரை, சாதியே
குமுகாய வேறுபாட்டு இழிவு படுத்தங்களுக்குக் காரணம் என்பதை விளக்கத் தேவையில்லை.
அருள் கூர்ந்து நான் எழுதிய செய்தியில் உள்ள உள்ளார்ந்த கவலையைப் புரிந்து கொள்ளுங்கள்.
//நவீன சொல்லாடல்கள் மூலம் ஆதிக்க சக்திகள் எப்போதும் தம்மை புதுப்பித்துக் கொண்டே புரட்சி, புரிந்துணர்வு -என்றெல்லாம் குழப்பம் உருவாக்கும்... //
-நானும் அறிவேன். என்னை எண்ணி இவற்றைச் சொல்ல வேண்டா! அவை எனக்குப் பொருந்தா!
கருத்தேற்றங்களின் வலிவான பிடிகளினின்றும் உங்களை நீங்களே சற்றே தளர்த்திக் கொண்டு எந்தச் சார்புமின்றி நடுவுநிலைத் தமிழராய் இருந்து, எண்ணிப் பாருங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன்.
அன்பன்,
சிக்கிமுக்கிகொக்கன்.
//எவரொருவரின் கைக்கூலியாகவோ வேறு எதுவாகவோ இன்றி இயல்பாக எனக்குத் தோன்றிய எண்ணத்தையே எழுதியுள்ளேன். என் எழுத்துக்களே சான்று கூறும்.
//பேதங்கள் ஒழிந்தால் அதன் பிறகு சாதி ஒழிந்தாலும் ஒன்று தான் ஒழியாவிட்டாலும் ஒன்று தான்//
இந்த நாட்டைப் பொறுத்தவரை, சாதியே
குமுகாய வேறுபாட்டு இழிவு படுத்தங்களுக்குக் காரணம் என்பதை விளக்கத் தேவையில்லை.
அருள் கூர்ந்து நான் எழுதிய செய்தியில் உள்ள உள்ளார்ந்த கவலையைப் புரிந்து கொள்ளுங்கள்.
//நவீன சொல்லாடல்கள் மூலம் ஆதிக்க சக்திகள் எப்போதும் தம்மை புதுப்பித்துக் கொண்டே புரட்சி, புரிந்துணர்வு -என்றெல்லாம் குழப்பம் உருவாக்கும்... //
-நானும் அறிவேன். என்னை எண்ணி இவற்றைச் சொல்ல வேண்டா! அவை எனக்குப் பொருந்தா!
கருத்தேற்றங்களின் வலிவான பிடிகளினின்றும் உங்களை நீங்களே சற்றே தளர்த்திக் கொண்டு எந்தச் சார்புமின்றி நடுவுநிலைத் தமிழராய் இருந்து, எண்ணிப் பாருங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன்.
அன்பன்,
சிக்கிமுக்கிகொக்கன்.
//
திரு சிக்கிமுக்கிகொக்கன்,
உங்களைக் குறித்த கருத்து அல்ல. பொதுவானது தான்.
//
நவீன சொல்லாடல்கள் மூலம் ஆதிக்க சக்திகள் எப்போதும் தம்மை புதுப்பித்துக் கொண்டே புரட்சி, புரிந்துணர்வு என்றெல்லாம் குழப்பம் உருவாக்கும் அத்தனை உத்திகளையும் மேற்கொள்வார்கள். நடுநிலையாளர்கள் குழப்பத்திற்கு ஆளாகமல் நன்றாக சிந்தித்தே அவர்களின் திரித்தல்களை அடையாளம் காணவேண்டும்.//
வழக்கம்போல நல்ல பதிவு கோவி. திரித்தல்களை இனம் காணவேண்டும் என்று கூறி நீங்கள் போட்ட பதிவை வாசித்த நண்பர் ஜோசப் பால்ராஜ் ஒரு நகைச்சுவைப் பதிவு போட்டிருக்கிறார். அவருக்கு மறுபடியும் ஆரம்பத்திலிருந்து இடஒதுக்கீடு க்ளாஸ் எடுக்க வேண்டும் போலிருக்கிறது :-(
ஒரு பிரச்சினையை பற்றி முழுமையாக தெரிந்தவர்கள் பேசுவது நல்லது. அரைகுறையாக தெரிந்துகொண்டு ஆர்வக்கோளாறில் எதையோ சொல்லப்போக அதைப் பார்த்து நான்கு பேர் குழம்பிப்போகும் நிலை தான் இப்போது இருக்கிறது.
இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல என்று மிகத் தெளிவாகவே பலமுறை எடுத்துக் கூறியும் இன்னமும் க்ரீமி லேயரை பிடித்து சிலர் தொங்கிக் கொண்டிருப்பது வெட்கக்க்கேடு.
//
லக்கிலுக் said...
//
இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல என்று மிகத் தெளிவாகவே பலமுறை எடுத்துக் கூறியும் இன்னமும் க்ரீமி லேயரை பிடித்து சிலர் தொங்கிக் கொண்டிருப்பது வெட்கக்க்கேடு.
//
லக்கி சார்,
வெட்கக்கேடோ இல்லையோ, இதை பிடித்து தொங்குபவர்களில் நானும் ஒருவன் என்பதால், இதைப்பற்றி நான் விளக்கமாக அப்புறம் சொல்கிறேன். சரியோ தவறோ, தொங்குவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
என்னதான் சாதி ஒழியனும்...! சாதி ஒழியனும்...! அப்படின்னு சொன்னாலும் சமயம் பார்த்துக் கழுத்து அறுக்குதே...!
//ஒரு பிரச்சினையை பற்றி முழுமையாக தெரிந்தவர்கள் பேசுவது நல்லது. அரைகுறையாக தெரிந்துகொண்டு ஆர்வக்கோளாறில் எதையோ சொல்லப்போக அதைப் பார்த்து நான்கு பேர் குழம்பிப்போகும் நிலை தான் இப்போது இருக்கிறது.//
வழிமொழிகிறேன்
//இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல என்று மிகத் தெளிவாகவே பலமுறை எடுத்துக் கூறியும் இன்னமும் க்ரீமி லேயரை பிடித்து சிலர் தொங்கிக் கொண்டிருப்பது வெட்கக்க்கேடு.//
கிருமி லேயர் வேண்டுமென்று கேட்பவர்கள் ஏன் இடப்பங்கீட்டை எதிர்க்கிறார்கள் என்று சிந்தித்தாலே உண்மை புரியும் :) :)
லக்கி, கிருமி லேயர் என்பதற்கு (இடப்பங்கீட்டிற்கு எதிராக வாதாடிய) வக்கீல் வேணுகோபால் நீதிமன்றத்தில் கிருமி லேயர் என்பது வேண்டும் என்று திரும்ப திரும்ப கூறினார். ஆனால் பொருளாதார அடிப்படையில் அல்ல. அவர் கேட்ட அடிப்படை என்ன தெரியுமா - 12ஆம் வகுப்பு தேர்வானாலே கிருமி லேயராம்.
இது எப்படி இருக்கு !!
-
டாக்டர் புரூனோ,
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !
*******
பொதுப்பிரிவில் போட்டியிடும் அத்தனை உயர்சாதிக்காரர்களின் அம்மாக்களும் அப்பளம் விற்றுதான் படிக்க வைக்கிறார்களா ? வசதி படைத்தவர்கள் பெய்டு சீட்டுக்கு விண்ணப்பித்து செல்ல வேண்டியதுதானே, 92 % விழுக்காடு மதிப்பெண் பெற்று இடம் கிடைக்கும் ஒரு பணக்கார உயர்சாதி மாணவன், 91.5% பெற்று இடம் கிடைக்காமல் போகும் மற்றொரு ஏழை உயர்சாதி மாணவனின் இடத்தை எடுத்துக் கொள்கிறான் என்கிறேன், இதற்கு பதில் சொல்லுங்கள்.
- இதைப் படித்தீர்களா ?
//லக்கி சார்,
வெட்கக்கேடோ இல்லையோ, இதை பிடித்து தொங்குபவர்களில் நானும் ஒருவன் என்பதால், இதைப்பற்றி நான் விளக்கமாக அப்புறம் சொல்கிறேன். சரியோ தவறோ, தொங்குவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.//
அப்படியா. சில கேள்விகள்
1. அப்படி யென்றால் இடப்பங்கீடு வேண்டுமென்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா.
2. நீங்கள் கூறுவது படி செய்தால் - முற்பட்ட வகுப்பினர் பெறக்கூடிய இடங்கள் கூடுமா, குறையுமா
-
குறைந்த பட்சம் இந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் விடையளியுங்கள்
முடிந்தால் கீழுள்ள கேள்விகளுக்கும் விடையளிக்கலாம் :)
3. என் பதிவில் கிருமி லேயர் கூறுபவர்களின் சில காரணங்கள் ஏன் முட்டாள்தனமானவை என்று தெளிவாக இருக்கிறது. வேறு காரணங்கள் கூற முடியுமா.
4. நான் கிருமி லேயர் எவ்வாறு கடைபிடிக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறேன். அது குறித்து உங்கள் கருத்தென்ன
உங்கள் கருத்திற்கு பிறகு பதிலளிக்கிறேன்.
----
முதலில் மிக அபத்தமான கருத்துகளை கவ்னிப்போம்
//ஆனால், படிப்பதை தவிர வேறு எ ந்த வேலையும் செய்யாத ஒரு தலித் டாக்டரின் மகன் 75% மார்க் எடுத்து டாக்டராகிறான். ஆனால், பகுதி நேர வேலை செய்து கொண்டு 74% மார்க் எடுக்கும் மற்றொரு தலித் தொழிலாளியின் மகன் இடம் கிடைக்காமல் போனால், இது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா?? //
தமிழகத்தில் எத்தனை மதிப்பெண் எடுத்தால் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கும் தெரியுமா
2008 ஆண்டு மருத்துவ படிப்பிற்கான குறைந்த பட்ச மதிபெண் தேவை
முற்பட்ட வகுப்பினர் - எப்.சி - 197.25 / 200 = 98.625 %
பிற்படுத்தப்பட்டவர்கள் - பி.சி - 195.25 /200 = 97.625 %
கிருத்தவர்கள் - பி.சி.சி - 194.50 /200 = 97.250 % (இந்த பங்கீடு பலன் அளிக்கிறது என்பதற்கு இதுவே ஆதாரம்
முஸ்லிம்கள் - பி.சி.எம் - 193.25 / 200 = 96.625 %
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - எம்.பி.சி - 192.50 /200 = 96.250 %
அட்டவனை வகுப்பினர் - எஸ்.சி - 187.50 /200 = 93.750 %
பழங்குடியினர் - எஸ்.டி - 176.25 / 200 = 88.125 %
இது குறித்து நான் பல முறை விளக்கிய பின்னரும் சிலர் தொடர்ந்து தவறான தகவல்களையே பரப்புவது வருத்தமளிக்கிறது
FC - 197.25 / 200 = 98.625 %
BC - 195.25 /200 = 97.625 %
BC Christians BCC - 194.50 /200 = 97.250 % (A proof that this reservation works)
Muslims BCM - 193.25 / 200 = 96.625 %
Most Back ward Castes - MBC - 192.50 /200 = 96.250 %
Schedules Castes - SC - 187.50 /200 = 93.750 %
Scheduled Tribes - ST - 176.25 / 200 = 88.125 %
Difference between FC Cut Off and BC Cut Off is 1 %
Difference between FC Cut Off and SC Cut Off is less than 5 % (4.875)
Difference between BC Cut Off and SC Cut Off is less than 4 % (3.875)
//92 % விழுக்காடு மதிப்பெண் பெற்று இடம் கிடைக்கும் ஒரு பணக்கார உயர்சாதி மாணவன், 91.5% பெற்று இடம் கிடைக்காமல் போகும் மற்றொரு ஏழை உயர்சாதி மாணவனின் இடத்தை எடுத்துக் கொள்கிறான் என்கிறேன், இதற்கு பதில் சொல்லுங்கள்.//
கண்டிப்பாக உண்மைதானே
//இட ஒதுக்கீடு கொடுக்கட்டும். இப்பொழுது இருக்கும் அளவே இருக்கட்டும். ஆனால், பொருளாதார நிலையில் முன்னேறியவர்களுக்கு ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமா??//
சாமி, நீங்கள் அளிப்பது கல்வி. பணம் இல்லை. முதலில் அதை தெரிந்து கொள்ளுங்கள்
பொருளாதார நிலையில் முன்னேறியவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்
//10% தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு என்றால், அந்த 10% ஏழை தலித்துகளுக்கு என்றால், மேலும் முன்னேற்றம் வருமா வராதா??//
உதாரணமாக விமான ஓட்டி பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சேர விண்ணப்பிக்கிறார்கள். இங்கு நீங்கள் யாரை பொருளாதாரத்தில் முன்னேறியவர் என்று கூறுவீர்கள். உங்கள் பதிலை கூறுங்கள்
பல தகவல்கள் எனக்கு. நன்றி கோவி,புருனோ & லக்கி
கருத்துரையிடுக