பின்பற்றுபவர்கள்

29 செப்டம்பர், 2008

வலைப்பதிவாளர் பயோடேட்டா - SP.VR.SUBBIAH

பெயர் : SP.VR.SUBBIAH

புனைப் பெயர் : வாத்தியார், ஆசிரியர், ஆசான்

வயது : ஆசையுடன் பாசம் வரும், அந்தரங்கமில்லாத வயது

வசிக்கும் இடம் : கோவை

தொழில் : டெக்ஸ்டைல் மார்கெட்டிங்

துணைத் தொழில் : இலவசமாக ஜோதிடம் சொல்வது

நீண்ட நாளைய சாதனை : பலரை வகுப்பறையில் கட்டிப் போட்டு, பிரம்பை சுழற்றி வருவது

அண்மை சாதனை : நட்சத்திர வாரத்தில் 34 பதிவுகள் எழுதியது, ஜோதிட பாடத்தில் 190 இடுகையை எழுதியது

அண்மைய எரிச்சல் : ஜோதிடப் பதிவின் தலைப்பில் டிஸ்கி போடும் முடிவுக்கு தள்ளிவிடப் பட்டது

மிகவும் பிடித்த பொருள் : ஒலிவாங்கி, பில்டர் காஃபி

மிகவும் பிடித்த கவிஞர் : கவியரசர் கண்ணதாசன்

மிகவும் பிடித்த பத்திரிக்கையாளர் : தமிழ்வாணன்பதிவுகள் :

1. வகுப்பு அறை (ஜோதிட பாடம் மற்றும் அனுபவ பாடம்)
2. பல்சுவை (நகைச்சுவை மற்றும் சிவகங்கை சீமை நாட்டுத் தகவல்கள்)

நண்பர்கள் : வகுப்பறை மாணவர்கள், ஆத்திகர்கள்

எரிச்சல் ஏற்படுத்த முயல்பவர்கள் : நாத்திகம் பேசுபவர்கள் மற்றும் ஜோதிடத்தை நம்பாதவர்கள் அடிக்கும் பின்னூட்ட கும்மி (ஆனால் அவர் எரிச்சல் அடைந்தது கிடையாது)

வாழ்நாள் சாதனை : நீண்டகாலமாக எழுதி வருவது, எதிரே அமர்ந்திருப்பவர் கேட்டுக் கொண்டு இருந்தால், தண்ணீர் குடிக்காமல், மூச்சுவிடாமல் பேசுவது

பொழுது போக்கு : பதிவர் சந்திப்புகளுக்குச் சென்று, பதிவர் நண்பர்களுக்கு பொன்னாடை போர்த்திவிட்டு (சுமார் இரண்டு மணி நேரம்) சிற்றுரை ஆற்றுவது

30 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

நான் தான் பர்ஸ்டா

வால்பையன் சொன்னது…

வாத்தியார் நல்லவர்ன்னு கேள்வி பட்டிருக்கிறேன்
ஆனா இவ்ளோ நல்லவர்ன்னு இப்போ தான் தெரியுது

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
வாத்தியார் நல்லவர்ன்னு கேள்வி பட்டிருக்கிறேன்
ஆனா இவ்ளோ நல்லவர்ன்னு இப்போ தான் தெரியுது

8:56 PM, September 29, 2008
//

வால்பையன், நீங்கள் வாத்தியாரைப் பார்த்ததோ, பேசியதோ இல்லையா ?

வால்பையன் சொன்னது…

//வால்பையன், நீங்கள் வாத்தியாரைப் பார்த்ததோ, பேசியதோ இல்லையா ? //

அந்த வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
//வால்பையன், நீங்கள் வாத்தியாரைப் பார்த்ததோ, பேசியதோ இல்லையா ? //

அந்த வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை
//

விரைவில் உங்களுக்கு அந்த பொன்னான வாய்ப்புக் கிட்ட வாழ்த்துகள்.

வால்பையன் சொன்னது…

//விரைவில் உங்களுக்கு அந்த பொன்னான வாய்ப்புக் கிட்ட வாழ்த்துகள். //

நன்றி

T.V.Radhakrishnan சொன்னது…

vaazhththukkal

தமிழ் பிரியன் சொன்னது…

எங்க ஆசானுக்கு நல்ல அறிமுகம்... :)
இதற்காக மாணவர்கள் சார்பாக ஒரு பொன்னாடை கோவி.கண்ணனுக்கு பார்சலில் வருகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் பிரியன் said...
எங்க ஆசானுக்கு நல்ல அறிமுகம்... :)
இதற்காக மாணவர்கள் சார்பாக ஒரு பொன்னாடை கோவி.கண்ணனுக்கு பார்சலில் வருகிறது.

9:17 PM, September 29, 2008 //

தமிழ் பிரியன்,

வாத்தியாரை அறிமுகம் செய்யவில்லை, அப்படிச் சொன்னால் சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல :)

SP.VR. SUBBIAH சொன்னது…

/////வாழ்நாள் சாதனை : எதிரே அமர்ந்திருப்பவர் கேட்டுக் கொண்டு இருந்தால், தண்ணீர் குடிக்காமல், மூச்சுவிடாமல் பேசுவது/////

மூச்சுவிடாமல் பேசுவதா? அது எப்படி முடியும்? குழப்புகிறீர்களே?

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...

மூச்சுவிடாமல் பேசுவதா? அது எப்படி முடியும்? குழப்புகிறீர்களே?

10:05 PM, September 29, 2008
//

ஐ மீன் தம் கட்டி பேசுவது,
மூச்சு விட்டுவிட்டால் பேச முடியாது
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
vaazhththukkal
//

சுப்பையா வாத்தியார் சார்பில் நன்றி ஐயா.

SP.VR. SUBBIAH சொன்னது…

//////துணைத் தொழில் : இலவசமாக ஜோதிடம் சொல்வது////

தவறு. துணைத் தொழில் ஒன்றுதான் அதுவும் பைசாவிற்குப் பிரயோஜனமில்லாத வேலை. அது என்ன வென்று என் பதிவுகளில் அடிக்கடி குறிப்பிடுவேன். ஜோதிடம் எழுதுவதோடு சரி. பார்த்துப் பலன் சொல்வதற்கெல்லாம் நேரம் இல்லை! அது என் தொழிலும் அல்ல!

SP.VR. SUBBIAH சொன்னது…

///////நீண்ட நாளைய சாதனை : பலரை வகுப்பறையில் கட்டிப் போட்டு, பிரம்பை சுழற்றி வருவது/////

இதுவும் தவறு. வகுப்பறைக்கு வரும் கண்மணிகள்தான் என்னைக் கட்டிப்போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். அவ்வப்போது வந்து அவிழ்த்துவிடுவது உனா தானா!

SP.VR. SUBBIAH சொன்னது…

//////அன்மைய எரிச்சல் : ஜோதிடப் பதிவின் தலைப்பில் டிஸ்கி போடும் முடிவுக்கு தள்ளிவிடப் பட்டது/////

அதை எரிச்சலாக நான் நினைத்ததில்லை. என் கருத்தை ஓங்கி ஒலிக்க அவர்கள் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாகவே கருதினேன்.

SP.VR. SUBBIAH சொன்னது…

//////பதிவுகள் :
1. வகுப்பு அறை (ஜோதிட பாடம் மற்றும் அனுபவ பாடம்)
2. பல்சுவை (நகைச்சுவை மட்டும் நாட்டுச் சரக்கு)//////

அதென்ன சாமி நாட்டுச் சரக்கு? கொஞ்சம் விளக்கினால் உயிர்கள் உங்களை வணங்கும்!

SP.VR. SUBBIAH சொன்னது…

///////நண்பர்கள் : வகுப்பறை மாணவர்கள், ஆத்திகர்கள்////

இதில் தவறு உள்ளது எனக்கு அனைவரும் நண்பர்களே. லக்கியாரைக் கேளுங்கள் சொல்வார்!
நட்சத்திர வாரத்தில் இதற்காக ஒரு பாட்டையே காணிக்கையாக எழுதிப் பதிவிட்டேன். பார்க்கவில்லையா நீங்கள்?

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...

அதென்ன சாமி நாட்டுச் சரக்கு? கொஞ்சம் விளக்கினால் உயிர்கள் உங்களை வணங்கும்!
//

சிவகங்கைச் சீமை, செட்டி நாட்டு வீடுகளையெல்லாம் படத்தோடு போட்டு இருந்திங்களே :)

SP.VR. SUBBIAH சொன்னது…

///////எரிச்சல் ஏற்படுத்துவர்கள் : நாத்திகம் பேசுபவர்கள் மற்றும் ஜோதிடத்தை நம்பாதவர்கள் அடிக்கும் பின்னூட்ட கும்மி/////

இல்லை! எனக்கு எரிச்சல் ,கோபம் இரண்டும் வராது. மாறாக நம்பாதவர்களுக்கு பதில் எழுதும்போது அதிக உற்சாகத்துடன் பதில் எழுதுவது என் வழக்கம்! எப்போதும் இருகரம் நீட்டி அவர்களை நான் வரவேற்பேன் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
///////நண்பர்கள் : வகுப்பறை மாணவர்கள், ஆத்திகர்கள்////

இதில் தவறு உள்ளது எனக்கு அனைவரும் நண்பர்களே. லக்கியாரைக் கேளுங்கள் சொல்வார்!
நட்சத்திர வாரத்தில் இதற்காக ஒரு பாட்டையே காணிக்கையாக எழுதிப் பதிவிட்டேன். பார்க்கவில்லையா நீங்கள்?

10:23 PM, September 29, 2008
//

உங்கள் 34 பதிவுகளையும் படித்து இருக்கிறேன். நண்பர்கள் என்று பொதுவாகக் குறிப்பிட்டேன். பிடித்த நண்பர்கள் என்றால் அதில் நான் லக்கியெல்லாம் கூட வருவார்கள்.

:) சமாளிச்சிட்டேனா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
///////எரிச்சல் ஏற்படுத்துவர்கள் : நாத்திகம் பேசுபவர்கள் மற்றும் ஜோதிடத்தை நம்பாதவர்கள் அடிக்கும் பின்னூட்ட கும்மி/////

இல்லை! எனக்கு எரிச்சல் ,கோபம் இரண்டும் வராது. மாறாக நம்பாதவர்களுக்கு பதில் எழுதும்போது அதிக உற்சாகத்துடன் பதில் எழுதுவது என் வழக்கம்! எப்போதும் இருகரம் நீட்டி அவர்களை நான் வரவேற்பேன் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்!

10:25 PM, September 29, 2008
//

சரி, எரிச்சல் ஏற்படுத்த முயல்பவர்கள் என்று மாற்றிவிடுகிறேன். சரியா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...

தவறு. துணைத் தொழில் ஒன்றுதான் அதுவும் பைசாவிற்குப் பிரயோஜனமில்லாத வேலை. அது என்ன வென்று என் பதிவுகளில் அடிக்கடி குறிப்பிடுவேன். ஜோதிடம் எழுதுவதோடு சரி. பார்த்துப் பலன் சொல்வதற்கெல்லாம் நேரம் இல்லை! அது என் தொழிலும் அல்ல!
//

வாத்தியாரே, இருங்க இருங்க...மற்றவர்கள் கும்முவதற்கும் வாய்ப்புக் கொடுங்கள், எல்லாவற்றையும் இல்லை இல்லை என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் ஆசையோடு கும்ம வருபவர்கள் ஏமாந்துவிடுவார்கள்.

:)))))))))

பெயரில்லா சொன்னது…

கோவி,

சுப்பையா சாரிடம் எனக்குப் பிடித்தது அவரது வயது தான்ட்டிய உற்சாகம். அது மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும் வகையில் இருக்கும் அவரது உடலசைவு மொழி.

வாழ்த்துக்கள் சார்.

SP.VR. SUBBIAH சொன்னது…

/////வாத்தியாரே, இருங்க இருங்க...மற்றவர்கள் கும்முவதற்கும் வாய்ப்புக் கொடுங்கள், எல்லாவற்றையும் இல்லை இல்லை என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் ஆசையோடு கும்ம வருபவர்கள் ஏமாந்துவிடுவார்கள்.////

சரி, விட்டு விடுகிறேன்! உங்களுக்கும், இந்தப் பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்டவர்களுக்கும், இடப்போகிறவர்களுக்கும் சேர்த்து மொத்தமாக என் நன்றி உரித்தாகுக!

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...

சரி, விட்டு விடுகிறேன்! உங்களுக்கும், இந்தப் பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்டவர்களுக்கும், இடப்போகிறவர்களுக்கும் சேர்த்து மொத்தமாக என் நன்றி உரித்தாகுக!
//

வாத்தியாரே,
வேண்டுதலுக்கு உடனடியாக செவி சாய்ததற்கு கோடி நன்றிகள் !
மேல வடகரை அண்ணாச்சி நெகிழ வைக்கிறார் பாருங்க, வாத்தியாரோட உற்சாகம், பொறுமைதான் எனக்கும் மிகவும் பிடித்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
கோவி,

சுப்பையா சாரிடம் எனக்குப் பிடித்தது அவரது வயது தான்ட்டிய உற்சாகம். அது மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும் வகையில் இருக்கும் அவரது உடலசைவு மொழி.

வாழ்த்துக்கள் சார்.
//

அண்ணாச்சி,

அவருக்கும் நமக்கும் 10 வயது தான் வேறுபாடு, அவருக்கு (மட்டும்) வயது தாண்டிய உற்சாகம் என்று சொல்வது கொஞ்சம் மிகையாக தெரியல ?
:)))))))

பரிசல்காரன் சொன்னது…

கோவி. கலக்கல் ஐடியா!

சுப்பையா சாரின் வயது மீறிய உற்சாகமும், வயதுக்குரிய பண்பும் என்னைப் போன்ற இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை!

அவரைத் தனியாகச் சந்தித்து பேச ஆசை. (நானல்ல, அவர் பேச, நான் கேட்க) விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
கோவி. கலக்கல் ஐடியா!//

பரிசல், நீங்களும் பதிவர் படம் போட்டு அவர்களுக்கு சிறப்பு சேர்கிறிங்க. அதுவும் நல்ல சிந்தனைதான்.

//சுப்பையா சாரின் வயது மீறிய உற்சாகமும், வயதுக்குரிய பண்பும் என்னைப் போன்ற இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை!//

ரிப்பீட்டே.......

//அவரைத் தனியாகச் சந்தித்து பேச ஆசை. (நானல்ல, அவர் பேச, நான் கேட்க) விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்!
//

அதுதான் எல்லோருக்கும் நடக்கும். நமக்கும் சேர்த்து அவரே பேசிடுவார்.
:)

பெயரில்லா சொன்னது…

:)

நசரேயன் சொன்னது…

ஆசான் சுப்பையா அவர்களை வணக்குகிறேன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்