தாழ்வு மனப்பான்மை யாருக்கும் பிறவியிலேயே வருவது இல்லை. அதையும் மீறி வருகிறதென்றால் அதற்கு வாழும் சூழலே காரணம். நம்ம குடும்பத்தில் எல்லோரும் படித்தவர்கள் என்று திரும்ப திரும்ப சொல்லி வந்தால், வளரும் குழந்தை நாமும் அந்த நிலையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி எடுக்கும், உயர்ந்த வகுப்பு என்று சொல்லிக் கொள்ளும் சமூகத்தில் இவை தான் நடக்கிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ? நாமெல்லாம் இப்படித்தான் இருக்கனும் என்பது விதி என்றே குழந்தைக்கு சொல்லி வருவார்கள், அதற்கு மேல் அது சிந்திக்காது, படிப்பில் கவனம் வைக்காது. பெற்றோர்களின் நிலையை மாற்றவேண்டும், தன்னிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே ஏற்படுத்திக் கொள்ளாது அப்படியே வளர்ந்துவிடும்.
தன்னை உயர்த்திக் கொள்ளும் உயர்சாதி சமுகம் தன்னை உயர்த்திக் கொள்ள செய்யும் இன்னொரு உத்தி மற்ற சமூகங்களை தாழ்வாக சித்தரிப்பது. எல்லோருமே புலால் உண்ணும் சமூகத்தில் கூட பாருங்கள், 'அவன் செத்த மாட்டை திண்பவன்' என்று தாழ்வாக சொல்வார்கள், புலால் என்றால் அனைத்தும் புலால் தான் இதில் நாய் கறி என்ன ? செத்த மாடு என்ன ? கோழி என்ன ? எல்லாம் ஒன்று தான். ஆனால் ஒருவன் இறந்த மாட்டை திண்பதை இழிவாக சொல்லிவிட்டால் அவன் இழிவானவனாக காட்டமுடியும், அவ்னுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். அவனும் தனக்கு கிடைப்பது இதுதான். நான் தாழ்ந்தவன் தான் என்று நம்புகிறான். உனக்கு கருப்பு நிறம் நீ தாழ்ந்தவன் வெள்ளையர்கள் செய்யும் அரசியல். இன்னும் தொடர்ந்து கொண்டு இருந்தாலும் அறிவியல் பூர்வமாக அவ்வாறு சொல்வது அறிவான செயலே இல்லை என்று உணர்ந்திருக்கிறார்கள். அப்படியும் வெள்ளை இனத்தை உயர்த்திக்காட்ட நிற அரசியல் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
சாதி அடுக்கு சமூகம் அமைக்காப்பட்டதன் நோக்கமும் இதுதான். எல்லோரும் ஒரே மன்னரின் கீழ் வேலை செய்பவர்களாக இருக்கும், ஒருவர் அமைச்சாராக இருப்பார், இன்னொருவர் படைத்தளபதி, இன்னொருவர் ஆயுதம் செய்பவர், மற்றொருவர் உடல் உழைப்பாளி, உடல் உழைப்பை மூலதனமாக வைத்திருப்பவன் தாழ்ந்தவனாம் அறிவை மூலதனமாக வைத்திருப்பவன் எல்லோரைவிட உயர்ந்தவனாம், படைத்தளபதி அவனுக்கு அடுத்த நிலையாம். படிக்காதவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற கட்டமைப்பு வந்து அதன் பிறகு அது சாதிய அடிப்படையில் மாறி இருக்கிறது. இன்றைக்கு பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளவன், படிக்காதவானாக இருந்தாலும் உயர்வகுப்பினராக இருந்தால் வெட்கம் சிறிது கூட இல்லாதே பிச்சை எடுக்கிறார்கள். ஆனால் கலெக்டர் முதலிய பதவியில் இருந்து கொண்டு சென்னை போன்ற பெரும் நகரில் வசிக்கும் மக்கள் கூட தாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தால் பெருத்த அவமானமாகிவிடுமோ என்ற தாழ்வு மனப்பாண்மையிலேயே இருக்கிறார்கள்.
21 ஆம் நூற்றாண்டு, உலகமயம் எல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும் இன்னும் கூட சில உயர்வகுப்பினர் தங்களை மற்றவர்களைவிட அறிவாளிகள் என்று காட்டிக் கொள்ளும் உத்தியும் மற்றவர்களை தாழ்வுபடுத்துவது தான். இது பயத்தினால் அவர்களுக்கு ஏற்படும் மனநிலை, மனதில் பயம் உள்ளவன் அலறுவான், ஆனால் அந்த அலறல் தன் பயத்தை வெளியே காட்டிவிடப் போகிறது என்பதற்காக வீரன் போல உறக்க பேசுவான். தன் பயத்தை மறைக்கும் உத்திகளில் ஒன்று அதிகமாகவே குரல் எழுப்புவது. சென்னை போன்ற நகரங்களில் அதிகமாக சத்தம் போட்டு சண்டை போடுவார்கள். வெட்டு குத்து இரத்தம் என்றால் ஒருவரும் அருகில் இருக்க மாட்டார்கள். இதெல்லாம் பயமில்லாமல் நடிக்கும் உத்திகள்.
நம்மை தாக்கவரும் ஆயுதம் எதுவோ அதை சரியாக பிடித்தால் எதிரியை நோக்கி தாக்கலாம். நம்மை ஒருவன் தாழ்ந்தவன் என்றால் உன்னைவிட தாழ்ந்தவன் இல்லை என்று திரும்ப சொல்லவேண்டும். நான் உழைத்துவாழ்கிறேன் இதில் தாழ்வு எங்கே இருக்கிறது ? உழைக்காமல் வாழும், சாதிபெருமை பேசும் நீயே தாழ்ந்தவன் என்று சொல்ல பழகிக் கொண்டால் ஒரு தாழ்வுணர்ச்சியும் நம்மை அண்டாது.
சாதிய ரீதியில் ஆன இட ஒதுக்கீட்டிற்கும் முட்டாள் தனமான வாதம் வைக்கப்படும், சாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே சாதியின் பெயரால் இடஒதுக்கீடு அபத்தமாக இல்லை ? என்று முட்டாள்கள் தங்களை அறிவாளிகளாக காட்டிக் கொண்டு பேசுவார்கள். எந்த பெயரில் ஒடுக்கி வைத்திருக்கிறோமோ அதே பெயரில் தான் எழுச்சி பெற முடியும் என்பது உலக சித்தாந்தாக ஆகிவிட்டது, இனபுரட்சி வெடிப்பதற்கும் இதுவே காரணம். மனிதர்கள் அனைவரும் சமம் என்று பேசும் புத்தமதத்தில் தமிழர்களை தனியாக பிரித்து சலுகை பறிக்கப்பட்டதாலேயே தமிழர்கள் இலங்கையில் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். எதைவைத்து ஒடுக்கப்படுகிறோமோ, அதையே ஆயுதமாக வைத்துக் கொள்வது இயற்கையாகவே அமைந்துவிடும். இது நடைமுறைக்கு வரும் போது உண்மையில் எதிரிகள் ஆடித்தான் போய்விடுவார்கள்.
தமிழர்கள், தமிழ் ஒடுக்கப்பட்டால் அதன் பெயரால் தான் எழமுடியும், தாழ்த்தப்பட்டவன் என்றால் ஆமாம் நான் தாழ்த்தப்பட்டவனாக வைக்கப்பட்டிருந்தேன் முன்னேற விரும்புகிறேன் வழியை விடு இல்லையேல் தள்ளிவிடுவேன் என்று சொல்வதுதான் சரியான பதிலடி.
நம்மை ஒருபோதும் எவரும் முட்டாள், தாழ்வானவன் என்று சொன்னால் அரண்டுவிடாதீர்கள், திரும்ப திரும்ப சொல்லிப் பார்ப்பார்கள், அப்படி திரும்ப திரும்ப சொல்லும் போது எதாவது ஒரு சந்தர்பத்திலாவது நம்மை நாமே முட்டாளாக உணர்ந்துவிடுவோம் என்ற தப்பான நப்பாசையே காரணம். உஞ்சவிருந்தி செய்பவனுக்கும் பிச்சை எடுத்து சாப்பிடுவனுக்கும் அதிக வேறுபாடு இல்லை. வெறும் மொழிவேறுபாடுதான். தமிழில் சொல்லும் போது அருவெறுப்பாக இருக்கிறது தாழ்வு மனப்பாண்மை வேண்டாம் என்று பிச்சை எடுப்பதையே வடமொழியில் மாற்றிக் கொண்டு சொல்லும் போது உழைத்து வாழ்பவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை தேவையா ?
இறந்த மாட்டை தின்பதால் தாழ்வு என்கிறானா ? மாட்டின் உடலில் ஓடிய இரத்ததை பாலாக (இறந்த இரத்தம் ?) நீ குடிக்கும் போது இறந்த மாட்டை திண்பதும் கேவலமில்லை. கேள்விக்கு பதில் மவுனமாக இருந்தால் தாழ்வு மனப்பான்மைதான். கேள்விக்கு எதிர்கேள்வி தொடுத்தால் அதன் பிறகு பதிலே தேவையில்லை. வேறு கேள்வியும் பிறகு வரவேவராது.
நம்மை உயர்த்திக் கொள்ள அடுத்தவரை தாழ்த்தத் தேவை இல்லை, நாம் குறையற்றவர் என்று உணர்ந்தாலே போதும், நம்மை நோக்கிவரும் சுடுசொற்களை திருப்பிவிட்டாலே போதும், தாழ்வு மனப்பாண்மை காணாமல் போய்விடும்.
வெட்கமே இல்லாமல் பொய்யை பரப்புவர்கள், அடுத்தவன் உழைப்பை சுரண்டிவருபவர்கள், கைநீட்டி காசுவாங்குபவர்கள், வரலாற்றை திரிப்பவர்கள் எல்லாம் தாழ்வு மனப்பான்மை இல்லாது அதை மறைத்துக் கொண்டு சாதி பெருமை பேசிவரும் போது, நேர்மையாக உழைத்து வாழ்பவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏன் ?
தாழ்வு மனப்பான்மையா ? அப்படி என்றால் என்ன ?
பின்குறிப்பு : எங்கு படித்தேன் என்பது நினைவில் இல்லை. நினைவில் இருந்து எழுதினேன்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
6 கருத்துகள்:
நல்ல பதிவு திரு கோவி.கண்ணன்.
நல்ல விடயங்களை உள்ளிருத்தி இருக்கிறீர்கள்.
குழந்தைகளின் Mindset உருவாக்கம் பற்றிய கருத்து அருமை. உண்மையும் கூட.
அன்புடன்,
ஜோதிபாரதி.
//
ஜோதிபாரதி said...
நல்ல பதிவு திரு கோவி.கண்ணன்.
நல்ல விடயங்களை உள்ளிருத்தி இருக்கிறீர்கள்.
குழந்தைகளின் Mindset உருவாக்கம் பற்றிய கருத்து அருமை. உண்மையும் கூட.
அன்புடன்,
ஜோதிபாரதி.
//
மிக்க நன்றி !
காலம் தாழ்த்திய நன்றி என்றாலும், நன்றி மறவாதவர் என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டுவிட்டீர்களே..
///
கோவி.கண்ணன் said...
மிக்க நன்றி !
///
அருமையான தேவையான பதிவு.
குழந்தைகளிடம் வாயை மூடு,உனக்கென்ன தெரியும் என்பவர்களின் வாயை முதலில் தைக்க வேண்டும்.தெரிந்தால் புரியும் படி பதில் சொல்லு.இல்லை நீ மடத்தனமாய் நம்புகிறாய் விளக்கம் சொல்லத் தெரியாது என்று ஒத்துக்கொள்.
குழந்தைகளைப் பாராட்டி உற்சாகப்படுத்தி வளர்க்கும் பெற்றோரும் ஆசிரியப் பெருமக்களும் தேவை.
நாடோடிகளாக சோம பாணம் குடித்து,யாகங்கள் செய்து மிருகங்களைத் தின்று.பஞ்ச கவ்வியம் குடித்து,ஐவர்க்கும் பத்தினியாய் இருந்தவர்கள் யாரைப் பார்த்து தாழ்ந்தவர்கள் என்று சொல்வது?
பெருமையும் துணிவும் உள்ளத்திலேயிருந்து வரவேண்டும்.
TBCD said...
காலம் தாழ்த்திய நன்றி என்றாலும், நன்றி மறவாதவர் என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டுவிட்டீர்களே..
///
கோவி.கண்ணன் said...
மிக்க நன்றி !
///
டிபிசிடி ஐயா,
தாங்களுக்கு சிரமம் ஏன் என்று நானே....
:)
///Thamizhan said...
அருமையான தேவையான பதிவு.
குழந்தைகளிடம் வாயை மூடு,உனக்கென்ன தெரியும்
.......//
தமிழன் ஐயா,
கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி ! நன்றி !
கருத்துரையிடுக