
"தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் அப்பீல் மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தெரிவித்தது"
இதுபோன்ற வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்படுவது குறித்து பல கருத்துக்கள் மரண தண்டனைக்கு எதிராக இருக்கின்றன. எனக்கும் அதில் உடன்பாடு உண்டு. ஆனால் குற்றவாளிகள் தங்களுக்கு கொடுக்கப்படும் மரண தண்டனையை குறைக்கச் சொல்ல எந்த ஒரு யோக்கிதையும் இல்லை.
குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கிடைத்த பிறகுதான் தனக்கும் ஒரு குடும்பம் என்று இருக்கிறது, வாழவேண்டும் என்று நினைத்துப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். ஒரு பாவமும் அறியாமல் கொலையுண்டவர்களின் குடும்பத்திற்கும் இவர்களால் என்ன பதில் சொல்ல முடியும். இவர்கள் இவர்களால் நடந்த கொடுமைக்கு உண்மையில் மனம் வருந்தினால், "நாங்கள் செய்த படுபாதக செயலுக்காக மனம் வருந்துகிறோம், அதற்கான மரண தண்டனையை ஏற்றுக் கொள்கிறோம்" என்று சொல்லி கிடைத்த மரண தண்டனையை நியாமாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இவர்கள் மீது கருணை அடிப்படையில் இரக்கம் கொள்ளலாம். வாழும் ஆசை இந்த கோழைகளுக்கு மட்டும் தான் இருக்கிறதா ?
இவர்களுக்கு தண்டனை வேண்டுமா ? வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம், மனித உரிமை அமைப்பு. அதில் கருணை காட்டச் சொல்ல இதில் ஈடுபட்ட கோழைகளுக்கு எந்த அருகதையும் இல்லை. இவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்களுக்கும் கருணை அடிப்படையில் வேண்டுமானால் வாதாடலாம். இவர்களைப் போன்றவர்கள் தங்களுக்கு பொதுமன்னிப்பு வேண்டும் என்று அவர்களே கேட்டுப் பெருவது கோழைத்தனம். இவர்களுக்காக இவர்கள் குடும்பத்தினர் வேண்டுமானால் கருணை கோரலாம். இதுபோன்ற குற்றவாளிகள் தங்களுக்கு இரக்கம் காட்டச் சொல்வதற்கு எந்த தகுதியும் கிடையாது.
கும்பகோணத்தில் குழந்தைகள் எரிந்ததற்கான வழக்கும் விரைவில் முடிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
5 கருத்துகள்:
//கும்பகோணத்தில் குழந்தைகள் எரிந்ததற்கான வழக்கும் விரைவில் முடிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.//
ஒரு மாதம் முன்பு தண்டனை வழங்கபட்டு விட்டதாக நினைவு. ஆயுள் தண்டனை!
என்னுடைய கருத்தும் இதுவே.இந்த மூன்று கொலையாளிகளுக்கு ஆறுதல்
கூற அ.தி.மு.க பெரும்புள்ளிகள் தினமும் கோவை சிறைக்கு வந்து செல்வதாக கேள்விபட்டேன்.
ஒருவராவது மூன்று மாணவிகளின் பெற்றோரை சந்தித்திருப்பார்களா;.
ஆயுள் தண்டனையும் கூட மாற்றப்பட்டு வெற்றுச் சிறைத் தண்டனையானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..இது எதிர்பார்த்த ஒன்றுதான்... கும்பகோணமும் அப்படியேதான்.
உங்கள் கோபமும்,நோக்கமும் மிக்க நியாயம் வாய்ந்தது.
ஒரே மாதிரி சிந்தித்திருக்கிறோம் ஆச்சர்யமாக இருக்கிறது.
இன்றுதான் பதிந்தேன் பாருங்களேன்.
http://surekaa.blogspot.com/2008/01/blog-post.html
இவர்களுக்கு நிச்சயம் மரணதண்டனை கிடைக்க வேண்டும். இனிமேல் தங்களது கட்சித்தலைவர்களிடம் பேர் எடுக்க வன்முறையைக்கையாளும் அத்தனைபேருக்கும்(கட்சி பேதமில்லாமல்) இந்த மரணதண்டனை ஒரு பாடமாக இருக்கவேண்டும்.
கருத்துரையிடுக