மாட்டை புனிதம் என்பீர்,
மனிதனை ஈனன் என்பீர்.
மாட்டின் சிறுநீர், சாணி எல்லாம் புனிதம், அதை அகற்றுபவன் தீண்டத்தகாதவன்.
இராமேஸ்வரம் கோவிலில் பசுமாடு பட்டினியால் செத்துவிட்டதாம். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகவேண்டுமாம். ஜெயலலிதா அம்மையார் தான் இவ்வாறு சொல்கிறார்.
இந்த அம்மையார் ஆட்சியில் இவர் கும்பகோணத்தில் புனித நீராட சென்ற போது, இவர் சென்ற ஒரே காரணத்திற்காக நெரிசலில் சிக்கி இறந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்களின் மரணங்களுக்கு பொறுப்பேற்று இவர் பதவி விலகினாரா ? இந்த அம்மையார் ஆட்சியில் வெள்ள நிவாரணம் வழங்குகிறேன் என்று அறிவித்துவிட்டு அதை முறைப்படி செய்யாமல் நெரிசலில் சிக்குண்டு இறந்த பெண்களுக்கும், அவர்களின் குடும்பங்கள் சிந்திய கண்ணீருக்கு பொறுப்பேற்று இவர் பதவி விலகினாரா ?
ஜெ மேலும் சொல்கிறார் "வாயில்லா ஜீவன்களை பட்டினியால் சாகடிப்பது என்பது மிகப் பெரிய பாவச் செயல். பசுக்களின் பராமரிப்பு செலவிற்காக நாள் ஒன்றுக்கு ரூ. 900 மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதுவும் முழுமையாக அவைகளுக்காக செலவழிக்கப்படுவதில்லை என்றும் தெரியவருகிறது."
வாயுள்ள ஜீவன்கள் வறுமையில் வாடி, பட்டினிச்சாவை சந்தித்து செத்துவிழுந்த போது பொதுமக்களே பொறுக்க முடியாமல் கஞ்சி தொட்டி திறந்த நிகழ்வு இவரது ஆட்சியில் தான் நடந்தது, பட்டினியில் இறந்த வாய் உள்ள ஜீவன்கள் குறித்து கவலைப்பட்டு தனது ஆட்சியில் இழிநிலையா என்று எண்ணி பதவி விலகினாரா ?
இராமேஸ்வரம் கோவிலில் இருக்கும் அர்சகர் அடிக்கும் கொள்ளைகள் உலக பிரசித்தம், அவர்களிடம் உள்ள பணத்தில் ஆஸ்திரேலேயாவில் உள்ள மாடுகள் அனைத்திற்கும் தீனி போட்டு மேலும் கொழுக்க வைக்க முடியும், இராமேஸ்வர கோவில் மாடுகளுக்கு தீனி போடுவதா சிரமம் ? இறந்த மாடுகளை காரணம் காட்டி, கருணாநிதியை குறைச் சொல்லி அரசியல் நடத்தும் அளவுக்கு ஜெயலலிதாவின் நிலை இறங்கிவிட்டதா ? அல்லது 'புனித பசு' இந்துத்துவ கருத்தை வெளிப்படுத்துகிறாரா ? இரண்டும் தான்.
"இராமேஸ்வரத்தில் ஏற்கனவே அடிக்கிற கொள்ளை போதாது என்று எங்கள் இரத்தத்தையும் பாலாக உறிஞ்சுகிறார்களே...!" என்று பசுமாடுகள் தானாகவே பட்டினி கிடந்து இறந்திருந்தாலும் வியப்பு இல்லை. ஏனென்றால் அவை கோவில் மாடுகள், அவற்றிக்கு தெய்வீகத்தன்மை உண்டு. :)))))))
மாடு செத்துவிட்டால் பதவி விலகனும், பன்றி பேருந்தில் அடிபட்டு இறந்தால் தேசிய விடுமுறை அறிவிக்கனும், ஜெ அரசியல் செய்யவதற்கான சரக்கு தீர்ந்துவிட்டது போல் இருக்கிறது.
பின்பற்றுபவர்கள்
22 ஜனவரி, 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
13 கருத்துகள்:
மெய்யாலுமேவா ?
//
-L-L-D-a-s-u said...
மெய்யாலுமேவா ?
//
அம்மா குருவாயூர் கோவிலுக்கு யானை கொடுத்தது போல் ராமேஸ்வரத்துக்கு மாடு கொடுத்து இருப்பாங்க போல, அதனால் தான் ரொம்ப டென்சன் ஆகி இருக்காங்க.
பசு பராமறிக்க படவில்லை என்றால் கொடுத்தவருக்கு சாபம் விடும் என்று கேரள சோசியன் சொல்லி இருப்பான்.
:)
அம்மாவுக்கு "வாய்" இல்லா ஜீவன்களிடம் எப்பவுமே ஒரு தனிப்பாசம் உண்டு.
கோவி கண்ணன் நெத்தியடி அடிச்சிறுக்கீங்க... அம்மாவின் கடைக்கண் பார்வை இந்துத்துவா மேல் விழுந்தது மட்டுமல்ல. அதனை தமிழகத்திலும் மோடி வித்தைகள் காட்டி மக்களை மயக்கலாம் என்பதாகத்தான் இருக்கிறது. அதான் இந்த திடீர் பாசம்... அது சரி! கருப்பு துண்டு அண்ணாச்சி என்ன பண்ணிட்டு இருக்கிறார்...
"அம்மாவுக்கு "வாய்" இல்லா ஜீவன்களிடம் எப்பவுமே ஒரு தனிப்பாசம் உண்டு."
வைகோவ இப்பிடியா கேவலப்படுத்துறது.
/*கோவி கண்ணன் நெத்தியடி அடிச்சிறுக்கீங்க... அம்மாவின் கடைக்கண் பார்வை இந்துத்துவா மேல் விழுந்தது மட்டுமல்ல. அதனை தமிழகத்திலும் மோடி வித்தைகள் காட்டி மக்களை மயக்கலாம் என்பதாகத்தான் இருக்கிறது. அதான் இந்த திடீர் பாசம்... */
இங்கு கூடி இருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம்.
நமது அண்ணன் திரு. கோவியார், அவர்களுக்கு இந்த 33 பதிவர் "செங்கோணம்" (வட்டம், சதுரம், என்று சிறு வரைமுறையில் இல்லாமல் அனைத்தையும்)சார்பாக ஒரு கோலி சோடா கொடுத்து ஒரு ஸால்வையும் அளிக்கிறோம்.
"அண்ணன் பேச்சு என்றுமே நெத்தி அடி - அதை அறியாதவன் மண்டையில் சுத்தியை தூக்கி அடி."
நமது அண்ணன் திரு. சந்திப்பார் கூறிய கூற்றில் சிறு தவறு உள்ளது ( அச்சு பிழை என்று கருதுகிறேன்). அது "மயக்கலாம்" அல்ல, அதனை "மாய்கலாம்" என்று படிப்பீராக.
இத்துடன் எனது பேருறையை முடித்து கொள்கிறேன்.
( ஏ தம்பீங்களா.... 3 கோலி சோடா கொண்டா.....)
தான் ஆடா விட்டாலும், தன் தசை ஆடும்.
BLOOD IS THINKER THAN WATER.
PLEASE VISIT:
http://naiyaandinaina.blogspot.com
சொம்மா அம்மாவை கொற சொல்லிகினேகீறிங்களே கொஞ்சம் அவுங்களுக்கு எல்ப் பண்ணனும்னு யாருக்காச்சும் தோணுச்சா. இங்க போய் பாருங்க...
http://maalaimayakkam.blogspot.com/2008/01/blog-post.html
Sorry For the mistake:
Read as
BLOOD IS THICKER THAN WATER.
PLEASE VISIT:
http://naiyaandinaina.blogspot.com
இஸ்லாத்திற்கு ஒரு முகம்மதுவைப் போல கிறிஸ்துவத்திற்கு ஒரு ஏசுவைப் போல இந்துத்வாவிற்கு மோடி அவருக்கு எரா,வரா(விரால்) சுரா, ஆடு மாடு கோழி விருந்து படைத்த ஜெயலலிதாவா கோமாதா வைப் பற்றி பேசுவது.
பாவம் தானே அம்மையார்? இப்படி போட்டு தாக்கியிருக்கீங்களே? இந்தப் பதிவ பார்த்தாங்கன்னா இராமேஸ்வரத்திலுள்ள மாடுகள் எல்லாத்தையும் தான் பார்த்துக்கொள்றதா அறிக்கை விடப்போறாங்க.
The guys who donate the cows, don't donate the food.
If soem idiot donates elephant, temple should feed
the elephant?
if there is something like sin, it belongs
to the person who donated the cows.
what do they do with these cows anyway? After being used
for little abishekam, rest will be used by the archakars
to make paayasam, thiratu paal, thayir saadham,paal
kozhakkatai, nei in their houses. Let them pay for the feed.
The guys who donate the cows, don't donate the food.
If some idiot donates elephant, temple should feed
the elephant?
if there is something like sin, it belongs
to the person who donated the cows.
what do they do with these cows anyway? After being used
for little abishekam, rest will be used by the archakars
to make paayasam, thiratu paal, thayir saadham,paal
kozhakkatai, nei in their houses. Let them pay for the feed.
கருத்துரையிடுக