வழக்கமாக ஆங்கில புத்தாண்டுக்குத்தான் தீர்மானம் போடுவோம். சரியாக இரவு 12:00 மணி தாண்டியதில் இருந்து பழக்கத்தையெல்லாம் மாற்றிக் கொள்ளனும். சரியாக 12:00 மணி ஆவதற்குள் சிலர் BAR ல் இருந்து வெளி ஆகிவிடுவார்கள். :) புகைப்பிடிப்பவர்களாக இருந்தால் இந்த ஆண்டாவது இந்த சனியனை விடனும் என்று தீர்மானிப்பார்கள். தீர்மானம் போடுபவர்கள் பலர் இருந்தாலும் தீர்மானம் தீர்மானமாக சிலருக்குத்தான் கட்டுப்படும்.
1. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வலையில் எழுதுவதை குறைக்க வேண்டும். (எப்போதாவது இது போன்ற விபரீத எண்ணங்கள் ஏற்படுவது உண்டு)
2. சின்னப்புள்ளத்தனமாக மொக்கை பின்னூட்டங்களை எவருக்கும் போடக் கூடாது. (இந்த எண்ணம் அடிக்கடி தோன்றினாலும் கட்டுப்பாடு இல்லை)
3. கருத்து செறிவுடன் எழுதப்பட்ட கட்டுரைகளை படித்து அதனை பலருக்கும் தெரியபடுத்த வேண்டும் (மேற்கண்ட இரு காரணங்களால் நேரம் கிடைக்கவில்லை)
4. நாம எழுதுவதால் எதும் மாறிடப் போறதில்லே அரசியல் பற்றி எழுதக்கூடாது. (தட்ஸ்தமிழ் படிப்பதை நிறுத்தினால் குறைக்க முடியும்)
5. திரைவிமர்சனம் எழுதக்கூடாது ( சிங்கையில் வெளியாகும் படத்துக்கு முதல் நாள் டிக்கெட் கிடைக்காமல் இருக்கனுமே )
6. ஜிடாக்கில் பேசுவதை தவிர்க்க வேண்டும் ( அலுவலகத்தில் யார் ஜிமெயிலை ப்ளாக் பண்ணிவிடுவாங்க ?, நான் தான் சிஸ்டம் அட்மின், செய்தால் நான் தான் செய்யனும், செய்துவிடுவேனா ?)
7.அலுவலகத்தில் அலுவலக வேலைக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் ( நான் மட்டும் தான் அப்படி என்று நினைப்பை ஏற்படுத்த எதாவது வழி இருக்கா ?)
8. வீட்டுக் சென்றால் கணனியை திறக்கக் கூடாது அப்படியும் தேவையின் காரணமாக திறந்தால் மறந்தும் www.thamizmanam.com பக்கம் சென்று விடக் கூடாது ( தமிழ்மணத்தில் போட்ட பதிவு கீழே போய்விட்டதா என்று தெரிந்து கொள்வதில் என்ன தப்பு ?)
இப்படியெல்லாம் வெளியில் சொல்லாமல் மனதுக்குள் சென்ற ஆண்டு புத்தாண்டின் போது தீர்மானம் செய்தேன் ஆனால் ஒன்றுமே நடக்கல. அப்பறம் இந்த ஆண்டுக்கு மட்டும் நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா ? இருந்தும் மனசு கேட்கல, இந்த ஆண்டு யாருக்காவது உதவி செய்யனும் என்று நினைத்தேன். ஒரு சின்னப்பையன் உதவி என்று கேட்டார், 'நீங்கள் கேட்பதை உதவுவதில் நான் கர்ண பிரபுத்தான் மறக்காமல் செய்துவிடுகிறேன்' என்று வாக்கு கொடுத்தாகிவிட்டது. என்ன உதவி என்று வெளியில் சொல்லி சொல்லிக் காட்டினால் நன்றாக இருக்கும் ? அப்படியும் தெரிந்து கொள்ள விரும்பினால் , நீங்கள் நாலுபேருக்கு நல்லது செய்ய நினைக்கிறவர் என்றால் கண்டிப்பா பாருங்க.
இன்னும் ஒரு உதவி மீதம் இருக்கிறது, எழுதியதில் பிடித்ததை எழுதனுமாம். எழுதியதால் பல நல்ல நண்பர்களை பிடித்தேன். அதுமட்டும் உண்மை,எழுதியதில் பிடித்தைத் தேடித்தான் பிடிக்கவேண்டும் எதுவும் மனதில் நிற்கவில்லை. அடுத்த இடுகையில் பார்ப்போம்.
பின்பற்றுபவர்கள்
16 ஜனவரி, 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
5 கருத்துகள்:
//
சின்னப்புள்ளத்தனமாக மொக்கை பின்னூட்டங்களை எவருக்கும் போடக் கூடாது.
//
இந்த தீர்மானம்தான் ரொம்ப சின்னபுள்ளதனமாக இருக்கிறது!!
வண்மையாக கண்டிக்கிறேன்!!
//
இப்படியெல்லாம் வெளியில் சொல்லாமல் மனதுக்குள் சென்ற ஆண்டு புத்தாண்டின் போது தீர்மானம் செய்தேன் ஆனால் ஒன்றுமே நடக்கல. அப்பறம் இந்த ஆண்டுக்கு மட்டும் நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா ?
//
அதுதானே பாத்தேன்!
சிங்கப்பூர்க்கு 'லாரி' அனுப்பனுமோன்னு ஒரு நிமிசம் நெனைச்சிட்டேன்!
எவ்வளவு நாளைக்குதான் ஆட்டோ அனுப்பறது!!
இந்த ஆண்டு சபதங்கள் நிரிவேறட்டும் என்று வாழ்த்த முடியாமைக்கு வருந்துகிறேன்...
அண்ணே !!! உங்க உதவியை ஆயுசுக்கும் மறக்கமாட்டேன்..
அட நம்ம அண்ணன் இப்புடி ஒரு கர்ணபிரபுன்னு தெரிஞ்சுருந்தா வேற ஏதாவது கேட்டிருக்கலாமே??
இந்த சபதங்களை முன் கூட்டியே தெரிவித்திருந்தால் யாராவது அவ்வப்போது நினைவு படுத்தி இருப்பார்கள்.:))))
நான் 'அடுத்த புத்தாண்டிலாவது ஒரு தீர்மானம் எடுத்து அதை நிறைவேற்ற வேண்டும்' என தீர்மானித்திருந்தேன்.
இந்த புத்தாண்டிலும் முடியவில்லை.
கருத்துரையிடுக