பின்பற்றுபவர்கள்

27 அக்டோபர், 2007

ஜிமெயில் / ப்ளாக்கர் பாஸ்வேர்டு திருடு போவது எப்படி ?

'pishing' என்று சொல்வார்கள். பொதுவாக இது பேங்க் கிரிடிட்கார்டு எண்களை திருடுவதற்கு பயன்படுத்தும் தொழில் நுட்பம்(?). ஆன்லைன் பேங்கிங் என்பது இப்பொழுதெல்லாம் உலகமெல்லாம் வழக்காகிவிட்டது. எனவே பணமாற்று நடவடிக்கை முதல் அனைத்து வங்கி நடவடிக்கைகளும் இணையம் வழியாகவே நடைபெறுகிறது.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திருட்டு கும்பல், அந்தந்த வங்கிகளின் இணைய பக்கங்களைப் போல் போலியாக இணைய பக்கங்களை திறந்து வைத்து, ஸ்பேம் மெயில் நிறுவணங்களிடமிருந்து இமெயில் முகவரிகளை பெற்றுக் கொண்டு பேங்க் வழியாக மெயில் அனுப்புவது போன்று அனுப்புவார்கள். "உங்கள் பாஸ்வேர்டு எக்ஸ்பயர் ஆக இருக்கிறது உடனடியாக மாற்றவும் " என்று வரும். அந்த மெயில் கிடைக்கும் நபர் அதிகம் கணனி வழி திருட்டுக்களை அறியதவராக இருந்து, போலி பேங்கின் பெயரில் இருக்கும் உண்மையான பேங்கில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால் உடனே அவசரப்பட்டு பாஸ்வேர்டை மாற்ற முயல்வார், முதலில் கணக்கு பெயரையும், ஒரிஜினல் பாஸ்வேர்டு கேட்கும், அதன் பிறகு புதிய பாஸ்வேர்டை அடிக்கச் சொல்லும். ஒரினினல் பாஸ்வேர்ட் முதலில் அடித்தவுடனே அதனை தனியாக கணக்கு எண்ணுடன் போலி இணையபக்கத்தின் டேட்டா பேஸில் சேமித்துவிடும்.

ஏமாளி கணக்கர் புதிய பாஸ்வேர்டு மாற்றியதும், "உங்கள் பாஸ்வேடு மாற்றப்பட்டுவிட்டது" என்று சொல்லிவிட்டு இணைய பக்கம் தன்னால் மூடிக் கொள்ளும். வெற்றிகரமாக போலி திருட்டு கும்பல் பாஸ்வேர்டை டேட்டா பேஸில் இருந்து எடுத்து ஒரிஜினல் பேங்கில் உள்ளே நுழைந்து அதிகபட்ச பணப் பரிவர்தனையை உடனே செய்துவிடுவர்.

இந்த திருட்டு 2002 ஆண்டு அதிகம் நடைபெற்றது, இண்டெர் நெட் குற்ற தடுப்புக்குப் பிறகு இணைய திருட்டு கும்பல்கள் கைவரிசை குறைந்திருக்கிறது.. ஏனென்றால் உலக அளவில் காவல் துறைகள் எச்சரிக்கை செய்து கடுமையான தண்டனையை அறிவித்திருக்கிறார்கள்.

அதே தொழில் நுட்பம் தான் தற்போது கூகுள் ஆர்குட்டை வைத்து ஜிமெயில் கணக்கையும், கடவு சொல்லையும் திருடுகிறார்கள். உள்ளே நுழையும் முன் அது ஆர்குட்டா வலைத்தளாமா ? என்று முதலில் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். http://www.orkut.com இதுதான் உண்மையான ஆர்குட் ஆனால் போலி ஆர்குட்டில் orkut.00bp.com என்று இருக்கும், அதாவது வேறு திருட்டு Server அது. இதனை பாஸ்வேர்டு பயன்படுத்தி திறந்துவிடக் கூடாது, தளத்தை லாகின் பண்ணாமல் லாகின் பக்கத்தை மட்டும் பார்வை இட்டால் உங்கள் கடவு சொல் களவு போகாது, அந்த தளத்திற்குள் சென்று லாகின் செய்தால் அவ்வளவுதான்..உடனே ஆட்டோமெடிக் மெயில் திருட்டு கும்பலுக்கு சென்றுவிடும். உடனே ஜிமெயில் பாஸ்வேர்டட மாற்றிவிடுவார்கள் அம்பேல் ... ஜிமெயில் பாஸ்வேர்டு, ப்ளாக்கர் பாஸ்வேர்டு எல்லாம் ஒன்று தான், அதன் பிறகு உங்களால் திறக்க முடியாது.

உங்கள் ஜிமெயிலில் இருந்து அந்த மெயிலை திறந்து பார்பதால் அவர்களால் திருட முடியாது, அதிலுள்ள லிங்கை சொடுக்கு ... அந்த தளத்திற்கு சென்று அதற்குள் நுழைய முற்பட்டு கடவு சொல்லை பயன்படுத்தினால் மட்டுமே கடவு சொல் திருட்டு கும்பல் கைகளில் போய்விடும். இப்படித்தான் இட்லிவடை மற்றும் தமிழச்சி ப்ளாக்கர் பாஸ்வேர்டு களவு போய் இருக்கிறது.

இதை எதற்கு செய்கிறார்கள் ?

ஜிமெயில் பலரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால், அதில் பேங்க் அக்வண்ட் எண்களையும் பாஸ்வேர்டையும் சேமித்து வைத்திருப்பார்கள், அதை கைப்பற்றி திருடலாம் என்பதற்குத்தான். மற்றபடி இதை திருடி வலைப்பூக்களை அழிப்பார்கள் என்று நினைப்பது சந்தேகம் தான்.

பிஸ்ஸிங்(pishing) என்பது ஹை டெக்னாலஜி... ஆதாயம் இல்லாமல் செய்ய மாட்டார்கள். கம்பிக்கு பின்னால் களிதிங்கும் அளவுக்கு நிறைய ரிஸ்க் இருக்கிறது.

நம் வலைப்பதிவாளர்களின் இமெயிலை பிஸ்ஸிங் திருட்டு கும்பல் திறந்தால், திராவிட, ஆரிய கூட்டணி கதைகள் / எவனை எவன் கவுக்கலாம், யாருக்கு அனானி ஆபாச பின்னூட்டம் போடலாம் என்ற கதைகளும், தனக்குத்தானே பின்னூட்டமிட்டு அதனை நண்பர்களுக்கு தெரிவித்து புலகாங்கிதம் அடைந்த கதைகள் தான் சாட்டின் சேமிப்பிலும், மெயிலிலும் இருக்கும், திருட்டு கும்பலை சேர்ந்தவன் தமிழனாக இருந்தால் அதையெல்லம் படித்துவிட்டு... 'த்தூ' வென்று துப்பிவிட்டு ... வெறுத்துப் போய் திரும்ப பாஸ்வேர்டை அந்த மெயிலில் சேமிக்கப்பட்டுள்ள வேறு நண்பர்களின் முகவரிக்கு அனுப்பி திரும்ப கொடுத்தாலும் கொடுத்துடுவானுங்க :))

orkut.00bp.com - இது போலி ஆர்குட் வெப்சைட் orkut க்கும் .com க்கும் இடையில் எதாவது சொல் இருந்தால் அதாவது 00bp போன்று அல்லது வேறு எதோ ஒன்று இருந்தால் அது போலி வெப்சைட், அந்த பக்கதில் சென்று ஜிமெயில் கணக்கு மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தாதீர்கள்

orkut.00bp.com - இதை சிலர் நண்பர்கள் இணைப்பாக (link) இணைத்திருக்கிறார்கள். அது தவறு ஏனென்றால் கவனம் தேவை, அதை சொடுக்கினால் அந்த போலி ஆர்குட் பக்கத்துக்கு சென்ரு விடும். கவனக்குறைவால் பாஸ்வேர்டுடன் நுழைந்து பார்த்துவிடாதீர்கள்.

ஜிமெயில் வழியாக கடவு சொல்லை திருட முடியாது. அந்த போலி ஆர்குட் பக்கத்தில் பாஸ்வேர்டுடன் நுழைந்தால் மட்டுமே ஆபத்து ! எனவே மெயில் வந்திருந்தால் பதட்டம் தேவை இல்லை.

33 கருத்துகள்:

Arun Kumar சொன்னது…

இந்த திருட்டுக்கு மலேசியாவில் என்ன தண்டனை என்பதை உங்களுக்கு தெரிதால் சொல்ல முடியுமா?

இன்று எனக்கு வந்த தகவல் பின் நோக்கி சென்றதில் மலேசியாவில் இருந்து அனுப்பட்டு இருக்கிறது. ஐபி எண் இருக்கிறது. நீங்கள் சிங்கபூரில் இருப்பதாக அறிகிறேன். இது தொடர்பாக தகவலை நீங்கள் அளித்தால் பேருதிவாய இருக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த திருட்டுக்கு மலேசியாவில் என்ன தண்டனை என்பதை உங்களுக்கு தெரிதால் சொல்ல முடியுமா?

இன்று எனக்கு வந்த தகவல் பின் நோக்கி சென்றதில் மலேசியாவில் இருந்து அனுப்பட்டு இருக்கிறது. ஐபி எண் இருக்கிறது. நீங்கள் சிங்கபூரில் இருப்பதாக அறிகிறேன். இது தொடர்பாக தகவலை நீங்கள் அளித்தால் பேருதிவாய இருக்கும்//

பிஸ்ஸிங் கும்பல் ஐபி தெரிவது போல் அனுப்பி மாட்டிக் கொள்ளமாட்டார்கள். அது பெரிய கேங்க் ஆக இருக்கும். தனிநபர் செய்ய முடியாது, நிறைய உபகரணங்கள், பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் தேவை. சைபர் க்ரைமுக்கு எல்லா நாட்டிலும் ஒரே சட்டம் தான்.

Arun Kumar சொன்னது…

//பிஸ்ஸிங் கும்பல் ஐபி தெரிவது போல் அனுப்பி மாட்டிக் கொள்ளமாட்டார்கள். அது பெரிய கேங்க் ஆக இருக்கும். தனிநபர் செய்ய முடியாது, நிறைய உபகரணங்கள், பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் தேவை. சைபர் க்ரைமுக்கு எல்லா நாட்டிலும் ஒரே சட்டம் தான்.//

இந்தியாவில் இதை போல குற்றங்களை அதிகார பலம் இருந்தால் தான் தண்டிக்க முடியும். ஏற்கனவே படை எடுத்து நொந்து போய் இருக்கிறேன்.

இந்த மைல் fishing வகையில் வரவில்லை. ஒரு proxy domain ல் இருந்து SMTP 110 அல்லது 545 துணையோடு போலியாக மடல் அனுப்பி இருக்கிறார்கள்.

நடத்தபட்ட திருட்டு என்னை பொருத்தவரை பாங்க் அக்கவுண்ட் திருட்டு இல்லை.
ஏற்கனவே ஐசிஐசிஐ முதல் சிட்டிபாங்க் தொடங்கு முட்டுசந்து கோ ஆப்பரேட்வி வங்கிவரை ஆன்லைன் வசதி தரும் வங்கிகள் நம் பாஸ்வேர்ட் களவாடபட்டாலும் நம் பணத்தை திருடிய எதிர் உடனடியாக தன் கணக்குக்கு கொண்டு செல்ல முடியாதவரை செயல்பாடுகள் செய்து விட்டார்கள்.
உதாரணம் பணம் மாற்றும் போது நமது மொபைலுக்கு எஸ் எம் எஸ் வழியாக குறியீடு வரும் அதை தளத்தில் உறுதி செய்தால் தான் பணம் மாற்றபடும்

எதிரியால் நம் பாஸ்வேர்டை தான் திருட முடியும். நம் சிம்கார்டு மொபைல் போன் போன்றவற்றை அல்ல.

சிவபாலன் சொன்னது…

ஜிகே

பகிர்வுக்கு நன்றி!

மேலும் சில விளக்கங்கள்

உங்கள் லேப் டாப்பில் உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல்கள் முழுவதும் சேமிக்கலாம். அதாவது உங்கள் Outlook Express பயன்படுத்தி செய்யலாம்.

தினம் ஒரு முறையோ அல்லது வாரம் ஒரு முறையோ ஜிமெயிலில் இருந்து டவுன் லோடு செய்து உங்கள் Outlook Express சேமிக்கலாம்.

இது நிச்சயம் உதவும்.

என்னுடைய எல்லாம் மின்னஞசலும் என்னுடைய சேமித்து வைத்துள்ளேன்.

முடிந்தவரை கடவுச் சொல்லை அடிக்கடி மாற்றிவிடுங்கள். அது நிச்சயம் பயனளிக்கும்.

மங்கை சொன்னது…

நேத்து பதிவு போட்டேன்...தெரிந்தவர் ஒருவரின் ஜிமெயில் இப்படித்தான் ஆச்சு..அந்த ஜிமெயில் இருந்துதான் எனக்கு மின்னஞ்சல் வந்துச்சு..

//"உங்கள் பாஸ்வேர்டு எக்ஸ்பயர் ஆக இருக்கிறது உடனடியாக மாற்றவும் //

லட்சிமிக்கு இபப்டித்தான் ஒரு ஈமெயில் வந்திருக்கு

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

கடைசியில் போட்ட கருப்பு போல்ட் லெட்டர் பாரா படிச்சு பயங்கர காமெடிங்க... சூப்பர்.. :))

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

மங்கை சொன்னது போல வந்த மெயில் யாஹூ மெயில் அப்டேட் அப்படின்னு சில நம்பர்களோடு @யஹூ.காம்ன்னே இருந்தது ... அவசரத்தில் கவனித்தல் உண்மை போலவே இருந்தது.. ஆனால் என் ச்ந்தேகபுத்திக்கு நன்றி சொன்னேன் ..அன்னைக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த மைல் fishing வகையில் வரவில்லை. ஒரு proxy domain ல் இருந்து SMTP 110 அல்லது 545 துணையோடு போலியாக மடல் அனுப்பி இருக்கிறார்கள்.//

அருண்,

மெயில் சர்வர்வழியாகத்தான் மெயில் அனுப்புவார்கள். அதன் பிறகு தான் பிஸ்ஸிங் வெப்சைட்டில் தெரியாமல் சென்று சிக்கிக் கொள்ள நேரிடும்.

அதற்கென்றே ஸ்பேம் மெயில் சர்வர் போன்று டைனமிக் ஐபி சர்வர் வைத்திருப்பார்கள். மெயிலை திறக்கலாம். அது சுட்டும் வலைப்பதிவுக்குத்தான் கடவு சொல்லுடன் செல்லக் கூடாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//முத்துலெட்சுமி said...
கடைசியில் போட்ட கருப்பு போல்ட் லெட்டர் பாரா படிச்சு பயங்கர காமெடிங்க... சூப்பர்.. :))
//

முத்துலெட்சுமி அவர்களே,

ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக் கொண்டு சிலர் தூக்கமில்லாமல் ஆகிவிடக் கூடாது இல்லையா ?
:)) அதனால் தான் காமடி !

cheena (சீனா) சொன்னது…

தகவலுக்கு நன்றி.

Tamil KeyBoard சொன்னது…

The person behind the attach is pathivan@gmail.com ,The site which helped him/her is http://www2.fiberbit.net/form/mailto.cgi
and the site is hosted in Japan.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

// திருட்டு கும்பலை சேர்ந்தவன் தமிழனாக இருந்தால் அதையெல்லம் படித்துவிட்டு... 'த்தூ' வென்று துப்பிவிட்டு ... வெறுத்துப் போய் திரும்ப பாஸ்வேர்டை அந்த மெயிலில் சேமிக்கப்பட்டுள்ள வேறு நண்பர்களின் முகவரிக்கு அனுப்பி திரும்ப கொடுத்தாலும் கொடுத்துடுவானுங்க :))//
படித்துச் சிரித்தேன். விளக்கமாக எழுதியதற்கு நன்றி

நெல்லை சிவா சொன்னது…

அருமையான விழிப்புணர்வுப் பதிவு. நன்றி கோவி.கண்ணன்.

VSK சொன்னது…

விவரமான, தேவையான, விளக்கமான ஒரு பதிவுக்கு நன்றி, கோவியாரே!

லக்கிலுக் சொன்னது…

//நம் வலைப்பதிவாளர்களின் இமெயிலை பிஸ்ஸிங் திருட்டு கும்பல் திறந்தால், திராவிட, ஆரிய கூட்டணி கதைகள் / எவனை எவன் கவுக்கலாம், யாருக்கு அனானி ஆபாச பின்னூட்டம் போடலாம் என்ற கதைகளும், தனக்குத்தானே பின்னூட்டமிட்டு அதனை நண்பர்களுக்கு தெரிவித்து புலகாங்கிதம் அடைந்த கதைகள் தான் சாட்டின் சேமிப்பிலும், மெயிலிலும் இருக்கும், திருட்டு கும்பலை சேர்ந்தவன் தமிழனாக இருந்தால் அதையெல்லம் படித்துவிட்டு... 'த்தூ' வென்று துப்பிவிட்டு ... வெறுத்துப் போய் திரும்ப பாஸ்வேர்டை அந்த மெயிலில் சேமிக்கப்பட்டுள்ள வேறு நண்பர்களின் முகவரிக்கு அனுப்பி திரும்ப கொடுத்தாலும் கொடுத்துடுவானுங்க :))//

சூப்பர். கலக்கிப்புட்டீங்க. புரளி கெளப்புபவர்களுக்கெல்லாம் நல்ல சாட்டையடி!!! :-))))))

எவனோ ஒருவன் சொன்னது…

முதலில் டோண்டு எனும் பதிவரின் ஜிமெயில் முகவரியில் இருந்து நிறைய பேருக்கு இந்த மெயில் போயிருக்கிறது. ஒருவேளை அவர்தான் அவரது அல்லக்கைகளை வைத்து திராவிட பதிவர்களின் பதிவுகளை ஹாக் செய்ய முயற்சித்தாரோ என்னவோ தெரியவில்லை. அருண்குமார் என்ற டோண்டுவின் நண்பர் இதுபோன்ற ஹாக்கிங்குகளில் கில்லாடி என்று தெரிகிறது. இந்த நாடகத்துக்கு ஒருவேளை இட்லிவடையும் துணை போயிருக்கலாம்.

ஜெகதீசன் சொன்னது…

//
நம் வலைப்பதிவாளர்களின் இமெயிலை பிஸ்ஸிங் திருட்டு கும்பல் திறந்தால், திராவிட, ஆரிய கூட்டணி கதைகள் / எவனை எவன் கவுக்கலாம், யாருக்கு அனானி ஆபாச பின்னூட்டம் போடலாம் என்ற கதைகளும், தனக்குத்தானே பின்னூட்டமிட்டு அதனை நண்பர்களுக்கு தெரிவித்து புலகாங்கிதம் அடைந்த கதைகள் தான் சாட்டின் சேமிப்பிலும், மெயிலிலும் இருக்கும், திருட்டு கும்பலை சேர்ந்தவன் தமிழனாக இருந்தால் அதையெல்லம் படித்துவிட்டு... 'த்தூ' வென்று துப்பிவிட்டு ... வெறுத்துப் போய் திரும்ப பாஸ்வேர்டை அந்த மெயிலில் சேமிக்கப்பட்டுள்ள வேறு நண்பர்களின் முகவரிக்கு அனுப்பி திரும்ப கொடுத்தாலும் கொடுத்துடுவானுங்க :))
//
நமது பதிவர்கள் மீது அவதூறு பரப்பும் இந்த வரிகளுக்கு இலைக்காரன் குழு சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//எவனோ ஒருவன் said...
முதலில் டோண்டு எனும் பதிவரின் ஜிமெயில் முகவரியில் இருந்து நிறைய பேருக்கு இந்த மெயில் போயிருக்கிறது. ஒருவேளை அவர்தான் அவரது அல்லக்கைகளை வைத்து திராவிட பதிவர்களின் பதிவுகளை ஹாக் செய்ய முயற்சித்தாரோ என்னவோ தெரியவில்லை. அருண்குமார் என்ற டோண்டுவின் நண்பர் இதுபோன்ற ஹாக்கிங்குகளில் கில்லாடி என்று தெரிகிறது. இந்த நாடகத்துக்கு ஒருவேளை இட்லிவடையும் துணை போயிருக்கலாம்.
//

புரளியை கிளப்பாதிங்க,

ஸ்பேம் சர்வர் மூலம், யார் பெயரில் (மெயில் ஐடியில்) இருந்தும் அனுப்புவது போல் அனுப்ப முடியும்.

பதிவர்கள் யாரும் இதனை செய்திருக்க மாட்டார்கள். டோண்டுவும் அவருடைய நண்பர்களும், டோண்டுவுக்கு போலியோ இதனை செய்வதற்கு எந்த காரணமும் இல்லை.

எனவே தவறாக எதையாவது குறிப்பிட்டு திசை திருப்ப முயலாதீர்கள்.

எவனோ ஒருவன் சொன்னது…

//பதிவர்கள் யாரும் இதனை செய்திருக்க மாட்டார்கள். டோண்டுவும் அவருடைய நண்பர்களும், டோண்டுவுக்கு போலியோ இதனை செய்வதற்கு எந்த காரணமும் இல்லை.
//

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். டோண்டுவே இதை செய்தது மூர்த்தி தான் என்று பதிவு போட்டிருக்காரே? அதைப்பற்றி என்ன சொல்லப் போறீங்க?

கோவி.கண்ணன் சொன்னது…

//எவனோ ஒருவன் said...

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். டோண்டுவே இதை செய்தது மூர்த்தி தான் என்று பதிவு போட்டிருக்காரே? அதைப்பற்றி என்ன சொல்லப் போறீங்க?
//

இந்த விசயத்தில் ஆதரம் இல்லாமல் யாரும் யாரையும் குற்றம் சொன்னால் குற்றம் சுமத்தப்பட்டவருக்கும், குற்றத்தை சுமத்தியவர் மீது குற்றம் சுமத்த உரிமை உண்டு.

எனவே அள்ளித் தெளிப்பவர்கள் ஆதாரம் இல்லாமல் பேசினால் அதற்கான விளைவுகளை பெற்றே ஆகவேண்டும்.

உங்கள் பின்னூட்டங்களை வெளி இட்டதற்கு காரணம் நான் வெளி இடாவிட்டாலும் வேறு ஒருவர் பதிவில் சென்று இதே கருத்தை சொல்வீர்கள்.

பதிவர்கள் இதை செய்வதனால் எந்த லாபமும் இல்லை. ஒருவர் பதிவை ஹேக் செய்து உள்ளே நுழைந்துவிட்டேன் என்று எவரும் வெளிப்படையாக சொன்னால் கம்பி எண்ணவே வேண்டி வரும்.

நாகை சிவா சொன்னது…

நல்ல உபயோகமான பதிவு கண்ணன்.. ஆனா பாருங்க இதையும் நம்ம த.ம. சாயத்தை பூசி பாக்குறாங்க...

என்னவோ போங்க...

ஜமாலன் சொன்னது…

நல்ல பதிவு கண்ணன்.

என்னைப்போன்ற புதுசுகளுக்கு இதெல்லாம் என்னான்னே புரியல. ஒன்னு மட்டும் புரியுது.

தெரியது அஞ்சலை திறக்கவேணாம்
புரியாது வலைத்தளத்தக்கு போகவேணாம்
புரளியான பதிவுகளுக்குள் புகவேணாம்.
அறியாத நபருக்க அஞ்சல் முகவவரி தரவேணாம்.

1. அவ்வப்பொழுது Backup செய்து கொண்டால் அதனை வேறொரு பதிய பதிவில் இடமுடியுமா என சோதித்து பார்க்க வேறொரு ஜிமெயில் ஐடியில் சோதனைப் பதிவாக தனியாக போட்டு வைத்துக் கொள்ளவது நல்லது.
2. ஜிமெயிலை அவுட்லுக்கில் இணைத்து தினசரி தானியங்கி பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது.
3. பீட்பிளிட்ஸ் போன்றவற்றின் மூலமாக நமது மற்றொரு யாகூ அல்லது ஹாட்மெயில் ஐடியில் பதிவுகளை newsletterr ஆக சேகரித்தக் கொள்வது நல்லது.

எல்லாவற்றையும்விட.. இந்த technocrazyலிருந்த விடுபட்டு பதிவுபோடாமல் தேமேன்னு இருப்பது நல்லது.

தகவலுக்கு நன்றி.

Arun Kumar சொன்னது…

//இந்த விசயத்தில் ஆதரம் இல்லாமல் யாரும் யாரையும் குற்றம் சொன்னால் குற்றம் சுமத்தப்பட்டவருக்கும், குற்றத்தை சுமத்தியவர் மீது குற்றம் சுமத்த உரிமை உண்டு.

எனவே அள்ளித் தெளிப்பவர்கள் ஆதாரம் இல்லாமல் பேசினால் அதற்கான விளைவுகளை பெற்றே ஆகவேண்டும்.

உங்கள் பின்னூட்டங்களை வெளி இட்டதற்கு காரணம் நான் வெளி இடாவிட்டாலும் வேறு ஒருவர் பதிவில் சென்று இதே கருத்தை சொல்வீர்கள்.

பதிவர்கள் இதை செய்வதனால் எந்த லாபமும் இல்லை. ஒருவர் பதிவை ஹேக் செய்து உள்ளே நுழைந்துவிட்டேன் என்று எவரும் வெளிப்படையாக சொன்னால் கம்பி எண்ணவே வேண்டி வரும்.//
என் தொடர்பான குற்றசாட்டுக்கு சரிய்யான முறையில் பதில் கொடுத்க்தமைக்கு நன்றி

consider this as a personal mail
its your wish to publish it or not..i am writing here because i dont know ur personal email id.

i have all the eveidences about moorthi and luckylook @ krishna

i have shared everything to kuzhalai .

still i am having lot of chances to punish this krishna..but his poverty and family level prevents me to do that.

i think you are supporting anyone without knowing their background in terms of views.

again this mail is been sent from moorthi ..i am not damn kind of guy ..i have good exp in network tools.i suffered a lot with this krishna and moorthi

both are partners ..
even i called to moorthis father in law and told everything.. he kept quite for a while and started everything again

for me moorthi is a guy dont have any self thinking and self control
guys like mahendran and krishna using him for a bad purpose

i dont have any interest with caste fights ..but i was targeted badly because i am being a friend to dondu
you know i am the guy told krishna @luckylook to start a blog and write some thing usefull.finally ....

ok let us leave that..
i need your help now..
i have traces for this recent email frauds .its done by moorthi..if you need proofs i am ready to share with you..
i know you still have contact with moorthi

already i made everything if moorthi lands up in indian airports.

but it seems he is not going to come at this moment.

please help me to catch at either in singapore or in malayasia.
i lived for few months in singapore.i know the the rules over there.

thanks
Arun Kumar

cc to kuzhali and ravi

கோவி.கண்ணன் சொன்னது…

அருண்,

நான் இங்கே 'பிஸ்ஸிங்' பற்றிய விழிப்புணர்வுக்காக பதிவு எழுதினேன். நான் சிங்கையில் காவல் துறையிலோ, அல்லது நீதி துறையிலோ பணி புரியவில்லை. எனவே சட்ட சம்பந்தமான நடவடிக்கைக்கு உதவியாக / ஆலோசனையாக என்னால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள் ? எனக்கு இதற்கெல்லாம் நேரமும் இல்லை, இதில் தலையிட விருப்பமும் இல்லை.

உங்களிடம் ஆதாரங்களை வைத்து காவல் துறை மூலம் தீர்வு கண்டால் நானும் மகிழ்வேன்.

இதுபற்றி வேறு கருத்து என்னிடம் இல்லை !

கோவி.கண்ணன் சொன்னது…

நமது பதிவர்கள் மீது அவதூறு பரப்பும் இந்த வரிகளுக்கு இலைக்காரன் குழு சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
:)//

ஜெகதீசன்,

இலைக்காரனை கேட்டதாக சொல்லுங்கள் ! பதிவை பத்திரமாக பாத்துக்கச் சொல்லுங்க, திம்மிகள் கைவசம் போய்விடப் போகிறது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
நல்ல பதிவு கண்ணன்.

என்னைப்போன்ற புதுசுகளுக்கு இதெல்லாம் என்னான்னே புரியல. ஒன்னு மட்டும் புரியுது.

தெரியது அஞ்சலை திறக்கவேணாம்
புரியாது வலைத்தளத்தக்கு போகவேணாம்
புரளியான பதிவுகளுக்குள் புகவேணாம்.
அறியாத நபருக்க அஞ்சல் முகவவரி தரவேணாம்.

1. அவ்வப்பொழுது Backup செய்து கொண்டால் அதனை வேறொரு பதிய பதிவில் இடமுடியுமா என சோதித்து பார்க்க வேறொரு ஜிமெயில் ஐடியில் சோதனைப் பதிவாக தனியாக போட்டு வைத்துக் கொள்ளவது நல்லது.
2. ஜிமெயிலை அவுட்லுக்கில் இணைத்து தினசரி தானியங்கி பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது.
3. பீட்பிளிட்ஸ் போன்றவற்றின் மூலமாக நமது மற்றொரு யாகூ அல்லது ஹாட்மெயில் ஐடியில் பதிவுகளை newsletterr ஆக சேகரித்தக் கொள்வது நல்லது.

எல்லாவற்றையும்விட.. இந்த technocrazyலிருந்த விடுபட்டு பதிவுபோடாமல் தேமேன்னு இருப்பது நல்லது.

தகவலுக்கு நன்றி.
//

ஜமாலன்,

நட்சத்திர பிசியிலும், நீண்ட பின்னூட்டம். மிக்க நன்றி !

கடைசியாக சொன்னிங்க பாருங்க அது "நச்", யுத்த பூமியில் ரத்தம் அப்பாவிகள் எதற்கு இரத்தம் சிந்தவேண்டும் ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
நல்ல உபயோகமான பதிவு கண்ணன்.. ஆனா பாருங்க இதையும் நம்ம த.ம. சாயத்தை பூசி பாக்குறாங்க...

என்னவோ போங்க...
//

பாரட்டுக்கு நன்றி சிவா,

சாயம் வெளுத்துப் போக போக புதுச்சாயம் வேண்டுமே !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
ஜிகே

பகிர்வுக்கு நன்றி!

மேலும் சில விளக்கங்கள்

உங்கள் லேப் டாப்பில் உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல்கள் முழுவதும் சேமிக்கலாம். அதாவது உங்கள் Outlook Express பயன்படுத்தி செய்யலாம்.

தினம் ஒரு முறையோ அல்லது வாரம் ஒரு முறையோ ஜிமெயிலில் இருந்து டவுன் லோடு செய்து உங்கள் Outlook Express சேமிக்கலாம்.

இது நிச்சயம் உதவும்.

என்னுடைய எல்லாம் மின்னஞசலும் என்னுடைய சேமித்து வைத்துள்ளேன்.

முடிந்தவரை கடவுச் சொல்லை அடிக்கடி மாற்றிவிடுங்கள். அது நிச்சயம் பயனளிக்கும்.
//

சிபா,

நீங்கள் அளித்த தகவல் பயனுள்ளவை. நான் ஜிமெயிலுக்கு இன்னும் அவுட் லுக் பயன்படுத்தவில்லை, தொடங்க வேண்டும் !

தக்க நேரத்தில் நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//நெல்லை சிவா said...
அருமையான விழிப்புணர்வுப் பதிவு. நன்றி கோவி.கண்ணன்.

//

நெல்லை சிவா,

பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//முத்துலெட்சுமி said...
மங்கை சொன்னது போல வந்த மெயில் யாஹூ மெயில் அப்டேட் அப்படின்னு சில நம்பர்களோடு @யஹூ.காம்ன்னே இருந்தது ... அவசரத்தில் கவனித்தல் உண்மை போலவே இருந்தது.. ஆனால் என் ச்ந்தேகபுத்திக்கு நன்றி சொன்னேன் ..அன்னைக்கு.
//

விரைவாக செயல்பட்டு இருக்கீறீர்கள். பகிர்ந்தற்கும் பாராட்டுக்கள் (சபாஷ்)

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
விவரமான, தேவையான, விளக்கமான ஒரு பதிவுக்கு நன்றி, கோவியாரே!
//

விஎஸ்கே ஐயா,
வழக்கம் போல் நீங்கள் சொல்வதற்காக எதையும் விட்டுவைக்கவில்லை என்று எனக்கும் ஏமாற்றமே !
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...
தகவலுக்கு நன்றி.
//

சீனா ஐயா உங்களுக்கும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்கை said...
நேத்து பதிவு போட்டேன்...தெரிந்தவர் ஒருவரின் ஜிமெயில் இப்படித்தான் ஆச்சு..அந்த ஜிமெயில் இருந்துதான் எனக்கு மின்னஞ்சல் வந்துச்சு..

//"உங்கள் பாஸ்வேர்டு எக்ஸ்பயர் ஆக இருக்கிறது உடனடியாக மாற்றவும் //

லட்சிமிக்கு இபப்டித்தான் ஒரு ஈமெயில் வந்திருக்கு
//

மங்கை அவர்களே,

தெரியாத மின் அஞ்சல்களை திறக்கலாம். ஆனால் அதில் உள்ளவற்றை செய்யும் முன் தகவல்கள் நம்பகமானவை தானா என்று உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.
ஓ ! பிரச்சனை இல்லாமல் மெயில் திறக்குதானே ?
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்