பின்பற்றுபவர்கள்

25 அக்டோபர், 2007

ஞானியும் பூணூலும் !

இருவாரங்களுக்கு முன்பு நண்பர் சிறில் அலெக்ஸ் சாட்டில் வந்து என்ன கண்ணன் நீங்க ஞானியை திட்டி கட்டுரை எழுதவில்லையா ? என்று கேட்டு ஆதங்கப்பட்டார் (கிண்டல் அடித்தார்) :))

திரு ஞானி எழுத்துக்களை முதன் முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் தான் வாசித்தேன். ஆழமாக எழுதக்கூடிய ஆற்றல் உடையவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒருவர் நல்ல எழுத்தாளர் என்பது அவரது எழுத்தின் ஆளுமைக்கு கிடைக்கும் தகுதியேயன்றி அவரது 'எழுத்துக்களை' விரும்பிப் படிப்பவர்கள் எல்லோருமே அவரது 'கருத்துக்களை' ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. ஞானி போன்ற எழுத்தாளர்களின், அவர்களது வாதத்திறமையில், சிந்தனையில் எழுதுவது எதிர்கருத்துக்கள் என்றாலும் எடுத்துவைக்கும் தரவுகளுக்கும், கட்டுரை நடைக்கும், பொருளுக்கும் பாராட்டுக்கள் எப்பொழுதுமே கிடைக்கும். ஞானியின் வாசகர்கள் எல்லோருமே ஞானியின் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. நல்ல எழுத்தாளர் என்ற அளவில் ஞானிக்கு உரிய மதிப்பு வலையுலக எழுத்தாளர்களுக்கு இடையில் இருக்கிறது.

கர்நாடக இசைக்குயில் சுப்புலட்சுமி அம்மா மறைந்த போது ஞானி திண்ணையில் எழுதிய கட்டுரை பலரையும் திகைக்க வைத்தது. அதில் அவர்
'எம் எஸ் சுப்புலட்சுமி அன்றாட வாழ்க்கையில் ஓர் அய்யர் மாமியாகவே வாழ்ந்திருக்கிறார் ' என்று எழுதியதும், திண்ணை வாசகர்கள் பலரும் கொதித்துவிட்டனர். அதன் பிறகு ஞானி திண்ணையில் எழுதுவதை நிறுத்திவிட்டார். அப்போதெல்லாம் ஞானி ஒரு பார்பனர் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். சிலருக்கு தெரிந்திருந்தாலும் அவரது அந்த கருத்துக்கு அவரை பார்பனராக பார்த்திருப்பார்களா ? என்று தான் கேட்கத்தோன்றுகிறது.

கருத்து ஒவ்வாமைகள் ஏற்படும் போது சொல்லுபவரை எள்ளி நகையாட அவரது சாதியை இழுப்பது என்பது கவலை அளிக்கிறது. சாதி வேண்டாம் என்று ஒதுங்கி வருபவர்களை இதுபோல் அடையாளப்படுத்தினால், வேண்டாம் என்று ஒதுங்குபவர்களுக்கு சமூகம் கொடுக்கும் மதிப்பு பிற்காலத்தில் சாதியை வைத்தே கேள்வி குறி ஆக்கப்பட்டுவிடுமோ ? என்ற எண்ணமும் பின் சாதியை துறக்க நினைப்பவர்களுக்கு ஏற்படும் பெரிய அச்சமாக மாறிவிடுமோ ? என்றும் ஞானியை பார்பனராக, சுகுணாவை பிள்ளைமாராக சிலர் அடையாளம் கண்டதில் இருந்து நினைக்கத் தோன்றுகிறது.

ஞானி கலைஞரின் வயதை குறிப்பிட்டு எழுதியதில் எனக்கும் உடன்பாடு இல்லை. ஓய்வெடுப்பது என்றால் என்ன முதியோர் இல்லத்தில் முடங்கி இருப்பதா ? கருணாநிதி போன்ற பல தலைவர்கள், சினிமா கலைஞர்கள் ஆகியோருக்கு ஓய்வென்பதே கிடையாது, திரு ஜெமினிகனேசன், காக்கா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தள்ளாத வயதிலும் நடிப்புத் தொழிலை செய்து கொண்டுதான் இருந்திருக்கின்றனர். அரசுவேலை போன்றவற்றில் ஓய்வு உண்டு. அரசியலில் வயது என்பது அனுபவ அறிவு என்றாகிவிடும் போது அரசியலில் ஓய்வென்பது இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மூட்டுக்கு முட்டுக் கொடுத்து அடுத்த பிரதமர் ஆகும் வாய்பு கிடைக்கும் என்ற ஆசையில் அவர் இல்லாவிட்டாலும், அவரது கட்சிக்காரர்களுக்கு அவரை விட்டால் மாற்று இல்லை. ஞானி கருணாநிதியுடன் சேர்த்தே பல தலைவர்களை குறிப்பிட்டு இவர்களும் ஓய்வெடுக்கலாம் என்று சொல்லி இருக்கலாம். அவ்வாறு சொல்லாத ஒரே காரணத்தினால் ஞானியிடம் பூணூல் தேடுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.

திரு ஞானி மட்டுமல்ல...ஞானி போன்று நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்கள் (திரு ஜெயகாந்தன், திரு சுஜாதா போன்றோர்) தமது எழுத்துக்களுக்கு கிடைக்கும் மதிப்பை தவறாக எடைப்போட்டு சமூகத்தில் அவர்களது கட்டமைப்பு கருத்தை திணிக்க முயல்கிறார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. அறிவு ஜீவித்தனம் வளர வளர சமூக வழிகாட்டி என்று தங்களைத் தாங்களே நினைத்துக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். இது தான் காரணமேயன்றி உதிர்க்கும் சொற்கள், கருத்துக்கள் இவற்றை ஞானியின் பார்பன அடையாளமாக தோய்து எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஞானியின் எழுத்துக்களில் பார்பனீயமா ? என்பது கேள்வி எழுப்பியவர்களும், ஞானியும், ஞானியின் வாசகர்கள் மட்டுமே தீர்மாணிக்க முடியும். ஆனால் ஞானியின் எழுத்துக்களில் பார்பனீயம் இல்லை என்பதை தேவையே இல்லாமல் பார்பனர்கள் வந்து கொடிபிடிப்பது நகைப்புக்கு இடமாக இருக்கிறது. ஞானியின் மீது பார்பனர்களுக்கு ஏன் திடீர் பாசம் ? தன்னை பார்பனராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத ஞானிக்கு ஏன் பார்பனர்கள் ஓடி வந்து ஞானி பார்பனீய கருத்தாக்கம் கொண்டவர் இல்லை என்று வரிந்து கட்டவேண்டும் ? இந்த கேள்விக்கு 'தான் ஆடாவிட்டாலும் பூணூல் ஆடுமோ ?' என்ற பதில் தான்கிடைக்கிறது. ஞானி ஒரு பார்பனராக தெரிந்துவிட்ட காரணத்தினால், ஒரு பார்பனரை பலரும் குற்றம் சொல்கிறார்கள் என்று தானே ? பார்பனர்கள் பொறுக்க முடியாமல் கருத்து சொல்கிறார்கள்.

ஞானியை பார்பனராக சுட்டிக் காட்டுபவர்களும் சரி ... ஞானிக்கு திடீர் ஆதரவு கொடுக்கும் பார்பனர்களும் சரி ... அவரவர் அளவில் ஞானியை பார்பனராகவே அடையாளப்படுத்துகின்றனர். அவர் 'ஞானி' புரிந்து கொள்வார் !

36 கருத்துகள்:

அருண்மொழி சொன்னது…

கோவியாரே,

//ஞானியின் மீது பார்பனர்களுக்கு ஏன் திடீர் பாசம் ? //

அது பூணூல் பாசம் இல்லை. கருணாநிதியை attack செய்து எழுதியதால் ஞானி மீது பாசம் வந்திடுத்து.

கோவி.கண்ணன் சொன்னது…

//அருண்மொழி said...
கோவியாரே,
அது பூணூல் பாசம் இல்லை. கருணாநிதியை attack செய்து எழுதியதால் ஞானி மீது பாசம் வந்திடுத்து.
//

நீங்கள் சொல்வது ஓரளவுக்கு சரி, ஏனென்றால் ஞானி இருவாரங்களுக்கு முன்பு 'பாரதியார் ஒரு நாத்திகர் 'எனபது போல் பாரதியாரின் கவிதைகளை சுட்டிக்காட்டி கருத்து சொல்லி இருந்தால். உடனே பலர் அவரை திட்டி தீர்த்தனர்.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

சில பின்னூட்டங்களில் சொன்னதையே இங்கும் சொல்கிறேன்.

ஞாநியை விமர்சிப்பவர்கள் அவரது கடந்தகால செயல்பாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டே விமர்சிக்க வேண்டும் என்பது எனது கருத்து. அவர் பார்ப்பனீய மறுப்பாளராகவே செயல்பட்டிருக்கிறார்.

விகடன் கட்டுரை ஏற்றுக் கொள்ள முடியாதது தான்; அதற்காக அவரை பார்ப்பன வெறியர் என்பது போல் சித்தரிப்பது தேவையற்றது.

லக்கிலுக் சொன்னது…

//இருவாரங்களுக்கு முன்பு நண்பர் சிறில் அலெக்ஸ் சாட்டில் வந்து என்ன கண்ணன் நீங்க ஞானியை திட்டி கட்டுரை எழுதவில்லையா ? என்று கேட்டு ஆதங்கப்பட்டார்.//

சிறிலோட டவுசர இங்கே உருவினது ரொம்ப முக்கியமோ?

ஜமாலன் சொன்னது…

கோவியாரே,

உங்களால் மட்டும்தான் இப்படி நடுநிலையோடு எழுதமுடியும். அதற்கு ஒரு ஜனநாயகப் பண்பும் மனநிலையும் தேவை. பாராட்டுக்கள்.

//கருத்து ஒவ்வாமைகள் ஏற்படும் போது சொல்லுபவரை எள்ளி நகையாட அவரது சாதியை இழுப்பது என்பது கவலை அளிக்கிறது. சாதி வேண்டாம் என்று ஒதுங்கி வருபவர்களை இதுபோல் அடையாளப்படுத்தினால், வேண்டாம் என்று ஒதுங்குபவர்களுக்கு சமூகம் கொடுக்கும் மதிப்பு பிற்காலத்தில் சாதியை வைத்தே கேள்வி குறி ஆக்கப்பட்டுவிடுமோ ? என்ற எண்ணமும் பின் சாதியை துறக்க நினைப்பவர்களுக்கு ஏற்படும் பெரிய அச்சமாக மாறிவிடுமோ ? என்றும் ஞானியை பார்பனராக, சுகுணாவை பிள்ளைமாராக சிலர் அடையாளம் கண்டதில் இருந்து நினைக்கத் தோன்றுகிறது.//

பார்வையில் உள்ள தீர்மானமும் நிதர்சனமும் சிந்தனையைத் தூண்டக் கூடியவை. ஆணால், சுஜாதா ஜெயகாந்தன் போன்றவர்கள ஞானியுடன் சேர்க்க முடியாது. ஞானி ஒரு ஜனநாயகத் தன்மையுள்ள தனது சாதிய அடையாளத்தை துறக்க முனைந்தவர். சமரசம் செய்துகொள்ளாதவர். மற்றவர்கள் அப்படி இல்லை.

நான் குமுதம் ஆணந்தவிகடன் போன்ற இதழ்கள் தொடராக படிப்பதில்லை. வாங்குவதும் இல்லை. இணையத்திலும் படிப்பதில்லை. அதனால் இது குறித்து எனக்கு தனிப்பட்ட எந்த கருத்தம் இல்லை. பொதுவா ஞானியின் பல நிலைபாடுகளுடன் எனக்க உடன்பாடு உண்டு. இப்பிரச்சனையில் தாங்களது கருத்து விவாதத்தை ஒட்டி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திட்டீங்க. உங்கள் பதிவொன்றில் ரஜனிக்கு வாக்களிப்பதாக கூறியிருப்பதை மட்டும் என்னால் ஏற்க முடியாது. பேய்க்கு பயந்து பூதத்திடம் மாட்டிக் கொள்ளக்கூடாதல்லவா. பாட்சா பாட்சா பட்சா....

வாசகன் சொன்னது…

///உதிர்க்கும் சொற்கள், கருத்துக்கள் இவற்றை ஞானியின் பார்பன அடையாளமாக தோய்து எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஞானியின் எழுத்துக்களில் பார்பனீயமா ? என்பது கேள்வி எழுப்பியவர்களும், ஞானியும், ஞானியின் வாசகர்கள் மட்டுமே தீர்மாணிக்க முடியும். ஆனால் ஞானியின் எழுத்துக்களில் பார்பனீயம் இல்லை என்பதை தேவையே இல்லாமல் பார்பனர்கள் வந்து கொடிபிடிப்பது நகைப்புக்கு இடமாக இருக்கிறது. ஞானியின் மீது பார்பனர்களுக்கு ஏன் திடீர் பாசம் ? தன்னை பார்பனராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத ஞானிக்கு ஏன் பார்பனர்கள் ஓடி வந்து ஞானி பார்பனீய கருத்தாக்கம் கொண்டவர் இல்லை என்று வரிந்து கட்டவேண்டும் ? இந்த கேள்விக்கு 'தான் ஆடாவிட்டாலும் பூணூல் ஆடுமோ ?' என்ற பதில் தான்கிடைக்கிறது. ஞானி ஒரு பார்பனராக தெரிந்துவிட்ட காரணத்தினால், ஒரு பார்பனரை பலரும் குற்றம் சொல்கிறார்கள் என்று தானே ? பார்பனர்கள் பொறுக்க முடியாமல் கருத்து சொல்கிறார்கள்.///

Class!

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன் சார்,

// சாதி வேண்டாம் என்று ஒதுங்கி வருபவர்களை இதுபோல் அடையாளப்படுத்தினால், வேண்டாம் என்று ஒதுங்குபவர்களுக்கு சமூகம் கொடுக்கும் மதிப்பு பிற்காலத்தில் சாதியை வைத்தே கேள்வி குறி ஆக்கப்பட்டுவிடுமோ ? என்ற எண்ணமும் பின் சாதியை துறக்க நினைப்பவர்களுக்கு ஏற்படும் பெரிய அச்சமாக மாறிவிடுமோ ? //

ஆயிரம் முறை ஓங்கிச் சொல்ல வேண்டிய நல்ல கருத்து. இதனையே ஞாநியும் தன் கடிதத்தில் சொல்லி இருந்தார்.

எழுத்துக்களில் காலமும் ஒரு கூடுதல் பரிமாணமே. "டைமிங்" எழுத்துக்கள் பத்திரிக்கைகளில் முக்கியத்துவம் பெற்று வருவதால், அவர் எழுதிய நேரம், அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை வெளியிட்டவர்களின் வியாபார எதிர்பார்ப்பு (சில மாதங்களுக்கு முன் விகடனுடைய என்சைக்ளோபிடியாவை கருணாநிதி கையால் வெளியிட வைத்த போது கருணாநிதி துள்ளித் திரிந்து கொண்டிருந்தாரா? என்கிற பொருளில் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்ததை நினைவு கூர விரும்புகிறேன்) எல்லாம் சேர்ந்து பனைமரத்தடியில் அவர் வெள்ளைத் திரவம் குடித்த கதையாக்கி விட்டன.

அது பால் தானா கள்ளா என்பது ஞாநியின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.

செல்வம் சொன்னது…

நானும் தங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.ஞாநி அவர்கள் கடந்த 21/2 ஆண்டுகளாக எவ்வளவோ நல்ல கருத்துகளை எழுதி உள்ளார்.அப்போதெல்லாம் தெரியாத பூநூல் இப்போது பளீரெனத் தெரிகிறது என்பது நகை முரண்.கருத்தை கருத்தால் எதிர்ப்போம்.சாதி பெயரை சொல்லி அல்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...

சிறிலோட டவுசர இங்கே உருவினது ரொம்ப முக்கியமோ?//

இங்கே டவுசரை கிழிக்கலைங்க...

ஞானியைப் பற்றி நான் எழுதவேண்டும் என்பது அவரது ஆசை அல்ல...

என்னை திராவிட கேடயம் என்று பலர் நினைப்பது போல் அவரும் நினைத்து கிண்டல் செய்தார்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Selvam M said...
நானும் தங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.ஞாநி அவர்கள் கடந்த 21/2 ஆண்டுகளாக எவ்வளவோ நல்ல கருத்துகளை எழுதி உள்ளார்.அப்போதெல்லாம் தெரியாத பூநூல் இப்போது பளீரெனத் தெரிகிறது என்பது நகை முரண்.கருத்தை கருத்தால் எதிர்ப்போம்.சாதி பெயரை சொல்லி அல்ல.
//

திரு செல்வம்,
ஒத்தக் கருத்தைச் சொல்லி இருப்பதில் மெத்த மகிழ்ச்சி. நகைமுரண் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//Jyovram Sundar said...
சில பின்னூட்டங்களில் சொன்னதையே இங்கும் சொல்கிறேன்.

ஞாநியை விமர்சிப்பவர்கள் அவரது கடந்தகால செயல்பாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டே விமர்சிக்க வேண்டும் என்பது எனது கருத்து. அவர் பார்ப்பனீய மறுப்பாளராகவே செயல்பட்டிருக்கிறார்.

விகடன் கட்டுரை ஏற்றுக் கொள்ள முடியாதது தான்; அதற்காக அவரை பார்ப்பன வெறியர் என்பது போல் சித்தரிப்பது தேவையற்றது.
//

Jyovram Sundar,
உடன்பிறப்புக்கள் ரொம்பவும் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கிறார்கள்.
நீங்கள் சொல்வது போல் ஞானியின் கடந்தகால எழுத்துக்களை ஒப்பிடாமல் செய்த அவசர தூற்றல் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

கருத்துக்கு மிக்க நன்றி !

ஜோ/Joe சொன்னது…

//உடன்பிறப்புக்கள் ரொம்பவும் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கிறார்கள்.//

இந்த விஷயத்தில் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எல்லாம் உடன்பிறப்புகள் அல்ல ..கலைஞர் வெறும் திமுக காரர்களுக்கு சொந்தமானவரல்ல .

நடுநிலை என்ற பெயரில் கலைஞரும் ,ஜெயலலிதாவும் ஒன்று தான் என்று சொல்லிவிட்டு போய்விடுவோர் மத்தியில் ,ஆயிரம் குறைகள் இருந்தாலும் கலைஞரின் இருப்பின் அவசியத்தை உணர்ந்துள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...

இந்த விஷயத்தில் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எல்லாம் உடன்பிறப்புகள் அல்ல ..கலைஞர் வெறும் திமுக காரர்களுக்கு சொந்தமானவரல்ல .

நடுநிலை என்ற பெயரில் கலைஞரும் ,ஜெயலலிதாவும் ஒன்று தான் என்று சொல்லிவிட்டு போய்விடுவோர் மத்தியில் ,ஆயிரம் குறைகள் இருந்தாலும் கலைஞரின் இருப்பின் அவசியத்தை உணர்ந்துள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள்.
//

ஜோ,

ஞானியின் கருத்தை நான் சரி என்று சொல்லவில்லை. அதை ஆயிரம் முறை மறுக்கவோ, காட்டமாக பதில் சொல்லவோ உடன்பிறப்புகளுக்கு உரிமை உண்டு. ஆனால் ஞானி மீது பூசும் பார்பன சாயம் தேவையற்றது என்று மட்டுமே சொல்கிறேன். இங்கே "உடன் பிறப்புக்கள் அவசரப்பட்டுவிட்டார்கள்" என்று நான் குறிப்பிட்டது இந்த பொருளில் தான்.

கையேடு சொன்னது…

//கருத்து ஒவ்வாமைகள் ஏற்படும் போது சொல்லுபவரை எள்ளி நகையாட அவரது சாதியை இழுப்பது என்பது கவலை அளிக்கிறது. //

//தமது எழுத்துக்களுக்கு கிடைக்கும் மதிப்பை தவறாக எடைப்போட்டு சமூகத்தில் அவர்களது கட்டமைப்பு கருத்தை திணிக்க முயல்கிறார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. அறிவு ஜீவித்தனம் வளர வளர சமூக வழிகாட்டி என்று தங்களைத் தாங்களே நினைத்துக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.//

அருமையான கருத்துச் செறிவுள்ள வரிகள். கருத்துக்களோடு முழுவதும் உடன்படுகிறேன்.

லக்ஷ்மி சொன்னது…

//ஞானியை பார்பனராக சுட்டிக் காட்டுபவர்களும் சரி ... ஞானிக்கு திடீர் ஆதரவு கொடுக்கும் பார்பனர்களும் சரி ... அவரவர் அளவில் ஞானியை பார்பனராகவே அடையாளப்படுத்துகின்றனர். அவர் 'ஞானி' புரிந்து கொள்வார் !//
ரொம்பச் சரியான கருத்து கண்ணன். இதில் முதல் தரப்பினரின் சந்தேகத்துக்காவது கொஞ்சம் நியாயம் உண்டு. ஆனால் இந்த திடீர்ப் பாசக்காரர்கள்தான் ஞானியை உண்மையிலேயே கேவலப்படுத்துகிறார்கள். நானே இதைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால்... அப்புறம் விவாதம் எங்கெங்கேயோ போயிடும்ன்றதால விட்டுட்டேன்...

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜமாலன் said...

கோவியாரே,

உங்களால் மட்டும்தான் இப்படி நடுநிலையோடு எழுதமுடியும். அதற்கு ஒரு ஜனநாயகப் பண்பும் மனநிலையும் தேவை. பாராட்டுக்கள்.//

ஜமாலன் அவர்களே,

இதற்கு விளக்கம் கொடுத்த்தால் 'புனித பிம்பம்' பட்டம் கிடைக்கலாம். ஏற்கனவே சில நண்பர்களே கொடுத்துவிட்டார்கள். உங்கள் உண்மையான மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி !

//பார்வையில் உள்ள தீர்மானமும் நிதர்சனமும் சிந்தனையைத் தூண்டக் கூடியவை. ஆணால், சுஜாதா ஜெயகாந்தன் போன்றவர்கள ஞானியுடன் சேர்க்க முடியாது. ஞானி ஒரு ஜனநாயகத் தன்மையுள்ள தனது சாதிய அடையாளத்தை துறக்க முனைந்தவர். சமரசம் செய்துகொள்ளாதவர். மற்றவர்கள் அப்படி இல்லை.//

ஜெயகாந்தன், சுஜாதாவை இங்கே குறிப்பிட்டது சாதி குறித்தல்ல, அவர்களது புகழை அவர்கள் எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பதற்குத்தான்.

//நான் குமுதம் ஆணந்தவிகடன் போன்ற இதழ்கள் தொடராக படிப்பதில்லை. வாங்குவதும் இல்லை. இணையத்திலும் படிப்பதில்லை. அதனால் இது குறித்து எனக்கு தனிப்பட்ட எந்த கருத்தம் இல்லை. பொதுவா ஞானியின் பல நிலைபாடுகளுடன் எனக்க உடன்பாடு உண்டு. இப்பிரச்சனையில் தாங்களது கருத்து விவாதத்தை ஒட்டி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//


இங்கு நான் எடுத்துக் கொண்டது ஞானிமீது சொல்லப்படும் 'பார்பனீய' குற்றச்சாட்டைத்தான். அவரது பல கட்டுரைகளை படித்துள்ளதால், இந்த விவாதத்தில் ஞானி திடீரென்று பார்பனராக பார்க்கப்பட்டதை பேசலாம் என்று எழுதினேன். ஞானியின் கருணாநிதியின் முதுமை குறித்த கருத்தில் உடன்பாடு இல்லை என்று தெளிவாக சொல்லிவிட்டேன்.

//லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திட்டீங்க. உங்கள் பதிவொன்றில் ரஜனிக்கு வாக்களிப்பதாக கூறியிருப்பதை மட்டும் என்னால் ஏற்க முடியாது. பேய்க்கு பயந்து பூதத்திடம் மாட்டிக் கொள்ளக்கூடாதல்லவா. பாட்சா பாட்சா பட்சா....
//

ரஜினி மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால் பலர் அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று திரை முகத்தை வைத்து சொல்கிறார்கள். ஆண்ட கட்சிகளே மீண்டும் மீண்டும் சுரண்டுவதற்கு பதில் புதுக்கட்சிகள் வந்தால் மக்கள் நலப்பிரச்சனையை பற்றி எல்லோரும் பேசுவார்கள். வெறும் தேர்த்தல் வாக்குறுதி அளித்து ஆட்சி நடத்திவிட முடியாது. கலைஞர் தொலைகாட்சி தருகிறேன் என்று சொன்னதை ஓர் ஆண்டாக ஆகியும் இன்னும் கொடுத்து முடிக்கவில்லை. இந்த இலவசம் மற்றும் பல்வேறு நலத்திட்ட அறிவிப்பெல்லாம் பலமான போட்டி இருந்ததால் தானே செய்ய முடிந்தது. ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கான மக்கள் செல்வாக்கு, ரஜினியின் பலம் தான் என்ன என்று தெரிந்திவிடும். ரஜினி தம் மகளை தமிழகத்தில் உள்ளவருக்கே மணமுடித்துக் கொடுத்து தமிழரோடு கலந்துவிட்டதாகத்தான் நினைக்கிறேன். சோனியாவை வெளிநாட்டுக்காராக பார்க்க முடியாத என்னால் ரஜினியையும் கர்நாடகத்தை சேர்ந்தவராக மட்டுமே நினைக்க முடியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//கையேடு said...

அருமையான கருத்துச் செறிவுள்ள வரிகள். கருத்துக்களோடு முழுவதும் உடன்படுகிறேன்.
//

கையேடு பாராட்டுக்கு மிக்க நன்றி.

சிறில் அலெக்ஸ் சொன்னது…

எதிர்பார்க்கவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்ஷ்மி said...
ரொம்பச் சரியான கருத்து கண்ணன். இதில் முதல் தரப்பினரின் சந்தேகத்துக்காவது கொஞ்சம் நியாயம் உண்டு. ஆனால் இந்த திடீர்ப் பாசக்காரர்கள்தான் ஞானியை உண்மையிலேயே கேவலப்படுத்துகிறார்கள். நானே இதைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால்... அப்புறம் விவாதம் எங்கெங்கேயோ போயிடும்ன்றதால விட்டுட்டேன்...
//

லக்ஷமி பாராட்டுக்கு நன்றி.
எனக்கு அதேதான் ஐயமே, ஞானி பார்பனர் என்பதால் ஞானிக்காக பேசுகிறார்களா ? இல்லை உண்மையிலேயே ஞானியில் எழுத்துகளால் கவரப்பட்டு ஞானிக்காக பேசுகிறார்களா ? என்று தெரியவில்லை. ஞானியின் எழுத்துக்களுக்கு என்று சொன்னால் பார்பனர்கள் பலர் 'ஞானியாக' மாறி இருக்கனும். ஆனால் அவ்வாறு இல்லையே. பார்பனீயம் என்று ஒன்று இல்லவே இல்லை என்போர் ஏன் ஞானிக்காக பொங்கி எழவேண்டும் ?

பாரதியையும் சாதிவைத்து போற்றுவதோ, தூற்றுவதோ நடைபெறுவதால் தான் பாரதியின் அடையாளம் மறைந்துவருகிறது என்ற வருத்தம் எனக்கு உண்டு.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிறில் அலெக்ஸ் said...
எதிர்பார்க்கவில்லை.
//

ஸ்மைலி போடவில்லையே ? என்னவென்று எடுத்துக் கொள்வது. லக்கி லுக்குக்கான மறுமொழியை பார்க்கவும்.

நீங்கள் எழுதத்தூண்டியதாக சொல்லவில்லை. நீங்கள் கிண்டல் அடித்ததாகத்தான் சொல்லி இருக்கிறேன். நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் மன்னிக்க.

நாகை சிவா சொன்னது…

//ஞானியின் கருத்தை நான் சரி என்று சொல்லவில்லை. அதை ஆயிரம் முறை மறுக்கவோ, காட்டமாக பதில் சொல்லவோ உடன்பிறப்புகளுக்கு உரிமை உண்டு. ஆனால் ஞானி மீது பூசும் பார்பன சாயம் தேவையற்றது என்று மட்டுமே சொல்கிறேன். இங்கே "உடன் பிறப்புக்கள் அவசரப்பட்டுவிட்டார்கள்" என்று நான் குறிப்பிட்டது இந்த பொருளில் தான்.//

அதே :)

ஜமாலன் சொன்னது…

கோவியார் அவர்களே..

//ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கான மக்கள் செல்வாக்கு, ரஜினியின் பலம் தான் என்ன என்று தெரிந்திவிடும். ரஜினி தம் மகளை தமிழகத்தில் உள்ளவருக்கே மணமுடித்துக் கொடுத்து தமிழரோடு கலந்துவிட்டதாகத்தான் நினைக்கிறேன். சோனியாவை வெளிநாட்டுக்காராக பார்க்க முடியாத என்னால் ரஜினியையும் கர்நாடகத்தை சேர்ந்தவராக மட்டுமே நினைக்க முடியவில்லை.//

விவாதத்தை திசை திருப்புவதாக எண்ண வேண்டாம், மன்னிக்கவும். எனது கருத்து தவறாக பதியாமல் இருக்க.. பொதுவாக ரஜனி நடிகர், கர்நாடகக்காரர் (உண்மையில் அவர் மகராஷ்டிரி என்கிறார்கள் அது தேவையற்றது) எனபதற்காக நான் எந்த கருத்தும் சொல்வதில்லை. அப்படி சொல்வது முறையும் அல்ல. அவர் அவ்வப்பொழத உதிர்க்கும் அபத்தங்களும் பெண் அடிமைத்தனமான கருத்துகளும் ஆண்மீகம் என்கிற பெயரில் உளறுவதும் அதாவது ஆன்மீத்தை புரிந்துகொள்ளாமலே தாந்ரா, மந்ரா, மூத்ரா... என பேசுவதும் இப்படியாக. (ஞாநி தனது கேள்வி பதில்களில் இதனை பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார்.) அவரது படங்கள் ஏற்படுத்தும் விளைவும் மக்கள் சக்தி என்கிற பெயரில் அவர் சேர்த்து வைத்திருக்கும் கூட்டமும் அதனை அவர் பயன்படுத்தம் விதமும்.. மிகவும் பிற்போக்கானவை. முன்னுக்குபின் முரணாக பேசுவது துவங்கி என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுவது வரை... மற்றபடி தமிழ்நாடு தலை எழுத்தை யார்தான் மாற்றமுடியம் போங்கள். கொஞ்ச நேரத்தில் இதற்கு மறுப்பு எழுதும் ரஜனியின் தொண்டர் படையைப் பாருங்களேன்.. அவர்கள் புரிதலின் லட்சனம் புரியும். கருத்தியல்ரீதியாத்தான் எனது எதிர்ப்பே ஒழிய தனிமனிதர் என்ற நிலையில் இல்லை.

நன்றி...

Bala சொன்னது…

கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ள முடியாதவர்கள் தான், ஏதோ ஒரு கொழுகொம்பைத் தேடி, சாதி, சமயம் என்று புகுந்து எதிர் வாதம் புரிகிறார்கள்.

அவர்கள் எழுதியது தமக்கு சாதகமாய் இருந்தால், அவர்களே எங்களை ஆதரிக்கிறார்கள் என்பது, பாதகமாய் இருந்தால், சாதி, சமயத்தைத் துணைக்குக் கூப்பிடுவது.

அனுபவ அறிவு அரசியலில் முக்கியம், மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஆட்சிக்கு, புத்துணர்வும், புதிய சிந்தனைகளும், எதிர்காலத் தொலை நோக்கும் முக்கியம். அதற்கு அனுபவ சாலிகள் பக்கத்துணையாக செயல் பட வேண்டும். ஜோதி பாசு, சுர்ஜித் சிங் நல்ல உதாரணங்கள். அரசியலுக்கும், ஆட்சிக்கும் நிறைய இடைவெளி உண்டு.

Chittoor Murugesan சொன்னது…

கண்ணன் அவர்களே..
ஞானியை பற்றிய உங்கள் கருத்து தான் என் கருத்தும். நன்றி

Arun Kumar சொன்னது…

அருமையான கட்டுரை நன்றி திரு கோவி கண்ணன்.
ஞானி அவர்கள் கருத்துகளை வாரந்த்தோறும் விகடனில் படிப்பது வழக்கம் தான். இவர் பெரும்பான்மையான கருத்துகளை எதிர்த்து எதிர் கருத்துகளை எழுதுவதில் வல்லவர்தான் என்று தோன்றுகிறது. குறிப்பாக திரு அப்துல்கலாம் மீதான இவரின் விமர்சனங்கள். எது என்ன சொன்னாலும் திரு அப்துல்கலாம் என்பவரின் சாதனைகளை விமர்சனம் செய்யவோ அல்லது அவரை கேலிகுரியாக ஆக்குவதோ மிகவும் மோசமான முன்னுதாரணம். இவரின் திரு அப்துல்கலாம் மீதான விமர்சனங்களை படித்த பின்னர் திரு ஞானி கட்டுரைகளை படிப்பதை நான் நிறுத்தி கொண்டேன்.

அடிக்கடி பேச படும் விழயமாக கலைஞரின் கட்டுரை தொடர்பான இடம் பெற்றதால் விகடனை தேடி படித்ததில் இவரின் மலிவான மாற்று கருத்து விளம்பர மோகம் மீண்டும் ஒரு முறை தெளிவானது.

மேலும் இதை போல தரமான பதிவுகளில் டவுசர் அவிழ்பது போன்ற தரக்குறைவான பின்னோட்டங்கள் தேவையா? ஏன் என்றால் அதை போல பின்னோட்ட்ங்கள் பதிவை விடுத்து தன் மன நிலை சிதைவை வெளிபடுத்தும் சிலரின் போக்கினால் கடத்தபடுகிறது.

நன்றி

We The People சொன்னது…

சபாஷ் கோவி,

தெளிவான சிந்தனை.

வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...

அதே :)
//

சிவா,

நமஸ்'தே' !

கோவி.கண்ணன் சொன்னது…

//Bala said...
கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ள முடியாதவர்கள் தான், ஏதோ ஒரு கொழுகொம்பைத் தேடி, சாதி, சமயம் என்று புகுந்து எதிர் வாதம் புரிகிறார்கள்.//

பாலா, நடப்பது இதே தான் !
ஹூம்...


//அவர்கள் எழுதியது தமக்கு சாதகமாய் இருந்தால், அவர்களே எங்களை ஆதரிக்கிறார்கள் என்பது, பாதகமாய் இருந்தால், சாதி, சமயத்தைத் துணைக்குக் கூப்பிடுவது.
//
கவலை அளிக்கிறது. இரட்டை நிலைப்பாடு !
//அனுபவ அறிவு அரசியலில் முக்கியம், மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஆட்சிக்கு, புத்துணர்வும், புதிய சிந்தனைகளும், எதிர்காலத் தொலை நோக்கும் முக்கியம்.
அதற்கு அனுபவ சாலிகள் பக்கத்துணையாக செயல் பட வேண்டும். ஜோதி பாசு, சுர்ஜித் சிங் நல்ல உதாரணங்கள். அரசியலுக்கும், ஆட்சிக்கும் நிறைய இடைவெளி உண்டு.//

ஒப்புக்கொள்கிறேன், பெரும்பதவிகள் இளைஞர் கைகளுக்கு செல்வது நல்லது அதே நேரத்தில் வயதை காரணம் காட்டி வீட்டுக் போகச் சொல்வதை ஏற்க முடியவில்லை. நீங்களும் இதே பொருளில் தான் சொல்கிறீர்கள் ! நன்றி !
//

கோவி.கண்ணன் சொன்னது…

//அருண்/ Arun Kumar said...
அருமையான கட்டுரை நன்றி திரு கோவி கண்ணன்.
ஞானி அவர்கள் கருத்துகளை வாரந்த்தோறும் விகடனில் படிப்பது வழக்கம் தான். இவர் பெரும்பான்மையான கருத்துகளை எதிர்த்து எதிர் கருத்துகளை எழுதுவதில் வல்லவர்தான் என்று தோன்றுகிறது. குறிப்பாக திரு அப்துல்கலாம் மீதான இவரின் விமர்சனங்கள். எது என்ன சொன்னாலும் திரு அப்துல்கலாம் என்பவரின் சாதனைகளை விமர்சனம் செய்யவோ அல்லது அவரை கேலிகுரியாக ஆக்குவதோ மிகவும் மோசமான முன்னுதாரணம். இவரின் திரு அப்துல்கலாம் மீதான விமர்சனங்களை படித்த பின்னர் திரு ஞானி கட்டுரைகளை படிப்பதை நான் நிறுத்தி கொண்டேன்.//

நீங்கள் சொல்வது சரிதான். அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்பதால் கருத்துக்களை மதிக்கலாம். ஆனால் ஏற்க முடியாது.

//அடிக்கடி பேச படும் விழயமாக கலைஞரின் கட்டுரை தொடர்பான இடம் பெற்றதால் விகடனை தேடி படித்ததில் இவரின் மலிவான மாற்று கருத்து விளம்பர மோகம் மீண்டும் ஒரு முறை தெளிவானது.//

பரபரப்புக்காக எழுதினாரா ? அல்லது 'புத்தி சொல்கிறேன் பேர்வழி' என்று எழுதினாரா தெரியவில்லை. :)

//மேலும் இதை போல தரமான பதிவுகளில் டவுசர் அவிழ்பது போன்ற தரக்குறைவான பின்னோட்டங்கள் தேவையா? ஏன் என்றால் அதை போல பின்னோட்ட்ங்கள் பதிவை விடுத்து தன் மன நிலை சிதைவை வெளிபடுத்தும் சிலரின் போக்கினால் கடத்தபடுகிறது.

நன்றி
//

நீங்கள் சொல்வது புரிகிறது. சொல்பவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுதான், யாரை சொல்கிறேன் என்றும் தெளிவாக சொல்லி இருக்கிறார். எனவே இதில் ஆபாசம் எதுவும் இல்லை. அதனால் வெளி இட்டேன். இருந்தாலும் சொன்னவர் உங்களுக்கு மறுமொழி இட்டு அதனை தெளிவு படுத்துவார் என்றே நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//We The People said...
சபாஷ் கோவி,

தெளிவான சிந்தனை.

வாழ்த்துக்கள்
//

பாராட்டுக்கு மிக்க நன்றி ஜெய்சங்கர் ஐயா !

லக்கிலுக் சொன்னது…

//சொன்னவர் உங்களுக்கு மறுமொழி இட்டு அதனை தெளிவு படுத்துவார் என்றே நினைக்கிறேன்.//

மொக்கைகளுக்கெல்லாம் எதையும் தெளிவுப்படுத்த வேண்டிய அவசியமில்லை கோவி சார்!

கருத்துச் செறிவு என்று எதுவுமில்லாமல், வெறும் பூணூலை ஆயுதமாக வைத்துக் கொண்டு சண்டைக்கு வருபவனை போய் நாம் என்னத்தை அடிக்கிறது. பாவமா இருக்கு :-)))))))

மகரநெடுங்குழைகாதன் அவர்கள் மனநிலையை சரியாக்கட்டும்!!

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...

மொக்கைகளுக்கெல்லாம் எதையும் தெளிவுப்படுத்த வேண்டிய அவசியமில்லை கோவி சார்!

கருத்துச் செறிவு என்று எதுவுமில்லாமல், வெறும் பூணூலை ஆயுதமாக வைத்துக் கொண்டு சண்டைக்கு வருபவனை போய் நாம் என்னத்தை அடிக்கிறது. பாவமா இருக்கு :-)))))))

மகரநெடுங்குழைகாதன் அவர்கள் மனநிலையை சரியாக்கட்டும்!!
//

ஐயையோ.....
இங்கிட்டும் சண்டையா.... வேண்டாமே.

Arun Kumar சொன்னது…

திரு கோவி கண்ணன் தங்கள் பதிலுக்கு நன்றிகள்.
டவுசர் அவிழ்பது தொடர்பாக
சொன்னவர் வெளிபடித்து கொண்டாலும் டவுசர் அவிழ்க்கபடுகிறது என்ன உதாரணம் காட்டபடுவர் மனம் புண்படாமல் இருந்தால் சரி. நாம் சிறு குழந்தைகள் இல்லை டவுசர் அவிழ்த்து விளையாட..எனக்கு தெரிந்து பெரியவர்கள் யாரும் டவுசர் அவிழ்த்து விளையாடுவது இல்லை :))))

மேலும் மன சிதைவு ஆசாமியை எனக்கு பல வருடங்களாக தெரியும்.. அதை எல்லாம் நான் சீரியஸாக எடுத்து கொள்வதில்லை :)))

என் தனிபட்ட வாழ்க்கை என்று ஏதும் தெரியாமல் அது வழக்கம் போல தனக்கு தெரிந்த மொழியில் பேசி விட்டு சென்றதையும் நீங்களும் ரசித்து
சண்டை வேண்டாம் என்று சொல்கிறீர்கள்..

சரி நான் பூனூல் போட்டு இருக்கிறேன் என்று அவருக்கு தெரியுமா?? இல்லை உங்களுக்கு தெரியுமா?

நான் என்றாவது இந்த சாக்கடை சாதி சண்டைகளுக்கு வந்து இருக்கிறேனா?

ஏன் சார் ஒழுங்கா இருந்தாலும் இப்படி எல்லாம்..

இந்த பின்னோட்டதை வெளியிடுவதும் வெளியிடாததும் உங்கள் விருப்பம்

Unknown சொன்னது…

//சினிமா கலைஞர்கள் ஆகியோருக்கு ஓய்வென்பதே கிடையாது, திரு ஜெமினிகனேசன், காக்கா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தள்ளாத வயதிலும் நடிப்புத் தொழிலை செய்து கொண்டுதான் இருந்திருக்கின்றனர்//

நடிகர்கள் தள்ளாத வயதில் நடிப்பது வருமானத்திற்க்காக. அவர்கள் ஒழுங்காக நடிக்காவிட்டால் அவர்களுக்குத்தான் நஷ்டம்.

இங்கே கலைஞர் முதுமை காரணமாக ஏது செய்தால் நட்டம் அவருக்கல்ல பொது மக்களுக்கு.

கலைஞரை ஞாநி பதவி விலக சொல்லவில்லை, அவருடைய பாரத்தை பங்கிடச் சொல்கிறார்.

ஞாநியின் கருத்து சரியா பிழையா என்பதைவிட, ஒருவர் சற்று விவாதிக்கும் அளவில் எழுதினால் எழுதியவரின் ஜாதி உடனே எல்லோருக்கும் ஞாபகத்திற்க்கு வருவது நல்லதல்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

//chittoor.S.Murugeshan said...
கண்ணன் அவர்களே..
ஞானியை பற்றிய உங்கள் கருத்து தான் என் கருத்தும். நன்றி
//

சித்தூர் முருகேஷன், நன்றி !

ஞானி சீசனுக்காக மறுமொழியை ஒரு ஆண்டு கழித்து இடுகிறேன் !

:)

வால்பையன் சொன்னது…

ஞானிக்கு ஆதரவு தெரிவிப்பவன் பார்பனனாகத் தான் இருக்க வேண்டுமா?

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் நட்பு பாராட்டலாமே

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்