
ஊரில் உருப்படாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஊர் சுற்றி வாலிபர்களின் சாதகத்தை எடுத்துக் கொண்டு அவர்களுடைய பெற்றோர்கள் வசதிக்கு ஏற்றவாரு கிளி சோசியம் முதல் நம்பூதிரி வரை பார்க்கச் செல்வவர்கள். சோசியகாரர்கள் துட்டை கரந்ததற்கு பரிகாரமாக, எதாவது கோவிலுக்கு பரிகாரம் செய்யச் சொல்லுவார்கள். இதுவே எண்ணியல் சோதிடனாக இருந்தால் 'கார்த்திக்' என்ற பெயரில் 'கார்' என்பதை அழுத்தமாக கூப்பிட்டு பலர் உச்சரிப்பதால் உன் வாழ்கை விபத்தாகவே இருக்கிறது. எனவே கார்த்திக் என்ற பெயரில் சிறிது மாற்றம் செய்து 'கர்திக்' அல்லது 'கருதிக்' அல்லது 'காத்திக்' என்று மாற்றிக் கொண்டால் உன் வாழ்க்கை வி'மானம் (போல் காற்றில் ?) பறக்கும் என்று சொல்வார்கள். கேட்பவன் கேணையனாக இருந்தால் மண்டையை ஆட்டிக் கொண்டு பெயரையும் கெசட்டில் இருந்தும் மாற்றிக் கொள்வான். எனது நண்பர் ஒருவர் எண் கனித சோதிடத்தில் நம்பிக்கை உடையவர், தனது மகனுக்கு பெயர் வைக்க சோதிடரை பார்த்தார். 'உங்க பையன் பிறந்த நேரத்திற்கு சித்தார்த் என்ற பெயர் பொருத்தமானது, பேரும் புகழும் அடைவான். இருந்தாலும் சித்தார்த் என்ற புத்தர் சிறுவயதில் இல்லறத்தை துறந்தது போல் ஆகிவிடலாம் எனவே 'சிதார்த்' என்று வைத்துக் கொள்ளலாம் என்றாராம். எனது நண்பரும் தாம் பெற்ற பிள்ளைக்கு சோசியகாரனால் கொலை செய்யப்பட்ட 'சிதார்த்' என்ற பெயரை வைத்திருக்கிறார்.
திரையுலகில் தொடர்ச்சியாக படங்கள் பாதாளத்துக்கு போகும் போது அதில் நடிக்கும் கதைநாயகர்களுக்கு தம் பெயரில் 'டவுட்' வந்துவிடுகிறது. உடனே சோதிடத்தால் மாற்றிக் கொள்கிறார்கள். டி.ராஜேந்தர் என்ற பெயரில் கொடிகட்டி பறந்தவர், சரிவு ஏற்பட்டதன் காரணம் தன்னிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என்று உணராமல் 'விஜய' சேர்த்துக் கொண்டார். அதன் பிறகும் இவரது டப்பா(படம்) டான்சாடவே செய்கிறது. இன்னொமொரு முன்னாள் கடி(ச்சிரிப்பு?) நடிகர் பெயர் ஒய்ஜி மகேந்திரன். இவர் நடித்த சிறந்த படம் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவுமே இருந்ததில்லை. இருந்தும் தான் திரையுலகில் மறைந்து போனதற்கு பெயரே காரணம் என்று முடிவு செய்து 'ஒய்ஜி மகேந்திரா' ஆனார். அதன் பிறகும் ஹேராம் மற்றும் பெரியார் படத்தில் சிறுவேடங்களில் தோன்றியதைத் தவிர்த்து ஒண்ணும் பெருசாக நடக்கவில்லை.
அந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் அருண் குமார். அவரது திரைப்படங்களைப் பார்த்தவரை இவரது வேலையை சரியாகவே செய்திருக்கிறார். நல்ல நடிகர். கதைக்களம் சரியில்லாததால் இயற்கை, பாண்டவர் பூமி தவிர்த்து அருண் பிரகாசிக்கவில்லை. தற்பொழுது பெயருக்கு பின்னொட்டு போட்டு 'அருண் விஜய்' ஆகி நடித்துவருகிறார். இவரது புதுப் பெயர் ராசி, இவரது நம்பிக்கையை உண்மையாக்கி வெற்றிதந்தால் மகிழ்ச்சிதான். வாழ்த்துகிறேன்.
இனி அவர் படங்கள் 'அருண் விஜய்' நடிக்கும் என்று டைட்டிலுடன் வரும், அருணும் விஜயும் சேர்ந்து நடித்த படம் என்று நினைத்துவிடாதீர்கள்.
10 கருத்துகள்:
:)
அப்படியே நான் உருப்படுறதுக்கு என் பெயரை எப்படி மாற்றனும் ன்னு கேட்டுச் சொல்லுங்க....
வெற்றி அடைய வாழ்த்துவோம்.
அருணும் விஜயும் சேர்ந்து நடித்த படம் என்று நினைத்துவிடாதீர்கள்
சரி.
//ஜெகதீசன் said...
:)
அப்படியே நான் உருப்படுறதுக்கு என் பெயரை எப்படி மாற்றனும் ன்னு கேட்டுச் சொல்லுங்க....
//
ஜெகா...நீங்களும் இலைக்காரர் பதிவில் அம்மா புகழ்பாட ஆரம்பிச்சிட்டிங்களே உருப்பட்ட மாதிரிதான்.
:)))
//
ஜெகா...நீங்களும் இலைக்காரர் பதிவில் அம்மா புகழ்பாட ஆரம்பிச்சிட்டிங்களே உருப்பட்ட மாதிரிதான்.
:)))
//
அது சரி.. அப்ப நீங்க....
இன்னொன்னு கேள்விப்பட்டேன்,
உங்க கூட சேந்தாத்தான் உருப்படாம(வெளங்காம)ப் போயிடுவாங்களாமே..
தினமுமும் விஜய் தொலைக்காட்சியில் பெயரியல் பேராசிரியர் ஒருவர் பெயரை எல்லா தொடர்புபு முறைகளிலும் தொடர்பு கொண்டு மாற்றுகிறார். ஜெகதீசன் அவரை தொடர்பு கொள்ளலாம். இதெல்லாம் நவீன மூடநம்பிக்கை வகை....
விவேக் சொல்வதுபோல 100 பெரியார் வந்தாலும் காப்பாத்த முடியாது.
என் பெயரை இலைக்காரன் என்று மாற்றினால் நான் உருப்படுவேனா?
அட இந்த சினிமாக்காரங்களை விடுங்க கண்ணன்!
இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் வந்துள்ள செய்தி கொஞ்சம் சுவாரஸ்யம்தான். அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், டி.ஆர்.பாலுவும் தங்கள் பெயரை. Veera Swamy (முன்பு Veerasamy) என்றும், Baalu (முன்பு Balu) என்றும் மாற்றி ரொம்ப நாளாகுதாம்.பகுத்தறிவு இயக்கத்தில் இருக்குமிவர்களுமா இப்படி? ம். யாரைத்தான் நம்புவது?.
உங்க பெயரை, Govee.Kanaan என்று கெஜட்டில் பதிந்து தினம் 108 முறை ஒரு மண்டலம் எழுதிட்டுப் பாருங்க, என்ன ஆகுறீங்கன்னு.
முப்பது முக்கோடித் தேவர்களுக்கும், கிரகங்களுக்கும் அரசாங்க கெஜட் தான் சந்தா இல்லாமல் அனுப்பப்படும் பத்திரிக்கைன்னு நினைக்கிறேன். அதைப்படிச்சிட்டுத் தான் தங்கள் முடிவை மாத்திக்கறாங்க.
நீங்க சொன்ன வீணாப்போன லிஸ்ட் காரங்க, பேர் மாத்தி வெளியிட்ட கெஜட் இஷ்யூ மிஸ் ஆகி இருக்கலாம். அதனால பிரச்னை. அதனால இனிமே கெஜட் விளம்பரம் தொடர்ந்து ஒரு மண்டலத்துக்குக் கொடுக்கணும்னு விதி மாற்றம் அவசியம்னு நினைக்கிறேன்.
குறைந்த பட்சம் உங்க அருண்விஜய் -ஆவது அதைச் செய்யட்டும். தெரியப்படுத்த முயலுங்கள்.
அது சரி, இங்கே என்ன பண்றேள், அங்கே டோண்டு சார் பதிவில் உங்களைத் தேடிண்டிருக்கா ஒருத்தர்.
ஜமாலன் அவர்களே, உங்கள் ஆலோசனைக்கு நன்றி!!!!
உங்களுக்கு பின்னூட்டத்துக்கு பதில் தரவே தெரியவில்லை....
யாருக்கு பதில் தந்தாலும் முதலில்
"உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி" என்னும் வரியை சேர்க்கவேண்டும்....
கருத்துரையிடுக