பின்பற்றுபவர்கள்

22 அக்டோபர், 2007

திருமதி ஒரு வெகுமதி !

திருமணம் ஆகாத பெண்களை செல்வி என்று குறிப்பிடலாமா ? என்ற கேள்வியில் அவ்வாறு குறிப்பிடுவது நாகரீகம் இல்லாத செயல் என்றும், திருமணம் செய்து கொள்வதும், செய்யாதிருப்பதும் அவரவர் விருப்பம் ... இதில் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஆணையோ, பெண்ணையோ திருமணம் ஆனாவரா ? என்று காட்ட சொல்லில் அடையாளப்படுத்தத் தேவை இல்லை என்று குறிப்பிட்டு ஒரு இடுகையை சமர்பித்திருந்தேன். பின்னூட்டங்கள் அனைத்தும் முன் மொழிவதாக ( பாசிடீவ் ரெஸ்பான்ஸ்) இருந்தது. அனைவருக்கும் நன்றி !

செல்வன், செல்வி என்று திருமணமானவரை அடையாளப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு விதிவிலக்கென வாஜ்பாய், அப்துல்கலாம் இன்னும் பல தலைவர்களை என எவரையும் விட்டுவிடமுடியாது.

செல்வன் வாஜ்பாய், செல்வன் அப்துல் கலாம் என்று அழைப்பதை அபத்தமாகவே நினைப்போம். பிறகு ஏன் ஜெயலலிதா, பாத்திமா பீவி போன்றரோரை செல்வி என்று அடையாளப்படுத்த வேண்டும் என்ற ஆதங்கம் எழுகிறது. ஒருவரை அடையாளப்படுத்தும் போது ஆண் / பெண் என்று பெயரளவில் அடையாளப்படுத்துவது சில நன்மை அளிக்கிறது. ஏனென்றால் ஆணுக்கும் பெண்ணுக்கும் மனது ஒன்றாகிலும், உருவம் வேறே. இன்னும் சமநிலையை நாம் எட்டவில்லை என்பதால் இவர் ஆண்/பெண் என்று அடையாளப்படுத்துவது தேவை. இல்லை என்றால் எப்படியும் பாலினம் என்ற பிரிவில் அந்த அடையாளம் தெரிந்துவிடப் போகிறது, பல இடங்களில் பாலி இனம் குறிப்பிடுவது தேவையாகவும் இருக்கிறது. சில பெயர்கள் பொதுவானவை முத்து, மாணிக்கம் இன்னும் சில பெயர்கள் ஆணா ? பெண்ணா ?
என்று பெயரைக் கேட்டுச் சொல்வது மிக்க கடினம். அதாவது பெயருக்கு முன்னால் திரு/திருமதி/செல்வி/செல்வன் ஆகியவை வயதைக் குறித்ததாக இருப்பதே சிறப்பு, அதைத் தவிர்த்து திருமணம் ஆனவரா என்பதைக் குறிக்க வேண்டுமென்பது தேவை என்றால் ஆணுக்கும் அவ்வாறு குறிப்பிடவேண்டும் நடைமுறையில் 30 வயதை கடந்த ஆண்களுக்கு அவ்வாறு இல்லை. ஆனால் பெண்களை வலியவே அடையாளப்படுத்துகின்றனர்.

செல்வி / செல்வன் என்ற அடையாளம் திருமணம் ஆகாத இளையோர் தவிர்த்து ஏனையோருக்கு தேவை இல்லை என்று அனைவரும் பரிந்துரைக்க வேண்டும். அப்படியும் செல்வி என்ற அடையாளத்தை ஜெயலலிதா போன்றவர்கள் விரும்பினால் அது அவர்கள் விருப்பம், மதிக்கலாம், அப்படி அழைக்கலாம். விரும்பமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

பேரிளம் பெண்கள் மற்றும் பதின்மவயதை (டீன் ஏஜ்) கடந்த பெண்களை பொதுவாக திருமதி என்றே அழைக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். திரு + மதி > திரு என்பது அடைமொழி உயர்த்திச் சொல்லும் பொது அடையாளப் பெயர் (பகுதி), மதி என்பது பெண்பால் விகுதி. திருமதி - இது திருமணம் ஆனவரா ? இல்லை ? என்ற பொருளை எங்கேயும் சொல்லவில்லை. எனவே மேற்குறிப்பிட்ட பெண்களை திருமதி என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை என்ற முடிவுக்கு வருகிறேன்.

இதுபற்றி நற்கருத்து பகிர்ந்தோர் :


லக்ஷ்மி said...
நல்ல பதிவு.

PPattian : புபட்டியன் said...
ஆம். ஆங்கிலத்தில் கூட Miss., Mrs. இரண்டுக்கும் சேர்த்து Ms. என்பது இப்போது பயன்படுத்தப் படுகிறது.

Mr = திரு
Ms = திருவாட்டி

சரிதான் என்று தோணுகிறது.

கையேடு said...
முதல் பின்னூட்டம் குறிப்பிடுவதைப் போல தலைப்பைப் பார்த்து ஏமாற்றத்துடன் துவங்கினேன் - ஏமாற்றம் பொய்த்துப் போன நிறைவோடு சென்றேன்.

துளசி கோபால் said...
நீங்க சொல்வது முற்றிலும் சரிதான் ஜிகே.

செல்வியும் செல்வனும் தேவையில்லாத அடைமொழிகள்தான்.

இன்னும் சொல்லப்போனால் திருமதி,திருவாட்டி எல்லாம் கூட வேணாம். அம்மா, ஐயாகூட என்னத்துக்கு? பேசாம பெயரின் பின்னால் 'அவர்கள்' என்ற சொல்லை அனைவருக்கும் பொதுவாகப் பயன்படுத்தலாம்.

பொண்ணு கல்யாணம் ஆனவளா இல்லை ஆகாதவளான்னு தெரிஞ்சு என்ன ஆகப்போகுது?

குமரன் (Kumaran) said...
Good Point.

ஜமாலன் said...

பிரச்சனையை பெண்ணிய நோக்கில் அனுகியிருப்பதுது அருமை. பொதுவாக பெண் நண்பர்கள நண்பர் அல்லது தோழர் என்ற அழைப்பதே எனது வழக்கம். திருமதி, திரு பொன்றவை எல்லாம்... பாலின வேறுபாட்டை அடிக்கடி நினைவூட்டவும் வேறுபடுத்தி காட்டவும் ஆன சொற்கள். இது ஒரு ஆணிய அரசியல்தான்.

நன்றி.

ஜிராகவன் said... ...
முதற்கண் திருமதி என்ற சொல்லை திருமணமான பெண்களுக்கு மட்டுந்தான் பயன்படுத்த வேண்டும் என்று எதுவும் சட்டம் இருக்கிறதா? இலக்கணம் இருக்கிறதா? மிஸ்டர் மிஸல்ல இருந்து கடன் வாங்குனதுதான. அப்புறமென்ன...எத்தனை தமிழ் இலக்கியங்கள்ள திருமதியைக் கல்யணாமான பெண்களுக்குப் பயன்படுத்தியிருக்காங்க?

பேரைப் பாத்ததும் அவங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சான்னு கண்டிப்பாத் தெரியனுமா? தெரியலைன்னா ஒலகம் இடிஞ்சிருமா?

பேசாம ஆண்ணா திரு...பெண்ணா திருமதி.... இளைஞர்களாக இருந்தா செல்வன் செல்வி. அத்தோட முடிச்சிட்டுப் போய்க்கிட்டேயிருக்கனும். அதுதான் சரீன்னு தோணுது.





அனைவருக்கும் நன்றி ! நான் இனி ஜெ. வை குறிப்பிடுவதென்றால் திருமதி ஜெயலலிதா என்றே குறிப்பிடுவேன். எவரும் தவறு என்று தகுந்த காரணங்களை சொன்னால் மாற்றிக் கொள்வேன். இருந்தாலும் அதை மறுக்கும் உரிமை தொடர்புடையவர்களுக்கே இருக்கிறது !


14 கருத்துகள்:

VSK சொன்னது…

'செல்வி', 'திருமதி' இரண்டுமே இலக்குமியைக் குறிக்கும் சொல். எப்படி அழைத்தால் என்ன?
அது அவரவர் விருப்பம்.
:))

ஜெகதீசன் சொன்னது…

ஒரு முறை கலைஞர் அவர்கள் ஜெயலலிதாவை "திருமதி" என்று விளித்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
'செல்வி', 'திருமதி' இரண்டுமே இலக்குமியைக் குறிக்கும் சொல். எப்படி அழைத்தால் என்ன?
அது அவரவர் விருப்பம்.
:))
//

விஎஸ்கே ஐயா,
வழக்கமான உங்கள் ... சொல் பின்னூட்டம், இதற்கு கருத்து கூறமல் கூட இருந்திருக்கிலாம் என்பது எனது எண்ணம். ஏனென்றால் பின்னூட்டத்தில் கருத்து என்று எதுவும் இல்லை. எல்லாம் அப்படியே இருப்பதற்கு விருப்பம் உள்ளவர்களைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள் ? மாற்றம் வேண்டும், வேண்டாம் என்று நினைப்பவர்கள் கருத்தே தேவை என நினைக்கிறேன். பொதுக்கருத்துக்கள் எப்போது இருப்பவை தான் அதைச் சொல்வதில் யாதொரு பயனும் இல்லை.

எப்படியோ பின்னூட்டத்திற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
ஒரு முறை கலைஞர் அவர்கள் ஜெயலலிதாவை "திருமதி" என்று விளித்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.
//

ஜெகதீசன்,

:)

அப்படி அழைக்கும் முறை இல்லாததால் கண்டனங்கள் எழுந்தது. ஆனால் பழக்கத்திற்கு வந்தால் எதுவும் சரியாகிவிடும் !

திருமதி சரியில்லை என்று நினைப்பவர்கள், திருவாட்டி என்று சொல்லலாம்

bala சொன்னது…

//திருமதி சரியில்லை என்று நினைப்பவர்கள், திருவாட்டி என்று சொல்லலாம்//

ஜிகே அய்யா,
ஏன் ,அம்மணி,சீமாட்டி,துரைசாணி,மூதாட்டி,கிழவி,மிஸ்ஸியம்மா, என்று அழைக்கக்கூடாது?சூப்பரா இருக்குமே.இந்த மாறி மக்கள் மனதை வாட்டி வதைக்கும், முக்கியமான பிரச்சினைகளுக்கு, தீர்வு கொண்டு வரும் ஜிகே என்னும் இளைஞன்,சூரன்,தீரன்,அடலேறு,தகறாறு,வரலாற்று நாயகனுக்கு நன்றி,நன்றி,நன்றி.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...

ஜிகே அய்யா,
ஏன் ,அம்மணி,சீமாட்டி,துரைசாணி,மூதாட்டி,கிழவி,மிஸ்ஸியம்மா, என்று அழைக்கக்கூடாது?சூப்பரா இருக்குமே.இந்த மாறி மக்கள் மனதை வாட்டி வதைக்கும், முக்கியமான பிரச்சினைகளுக்கு, தீர்வு கொண்டு வரும் ஜிகே என்னும் இளைஞன்,சூரன்,தீரன்,அடலேறு,தகறாறு,வரலாற்று நாயகனுக்கு நன்றி,நன்றி,நன்றி.

பாலா
//

பாலா அம்பி,

மணி அடிப்பதை விட்டுண்டு, கிரீமி லேயரை பிடித்து தொங்குறேளே,அந்த அளவுக்கு ஜன பிரச்சனைகளை நேக்கு நோக்கத்தெரியாது.
:)

RATHNESH சொன்னது…

இதிலே இன்னொரு கூத்து திருமணமான பெண்கள் திருமதி என்று தொடங்கி (தன் பெயர் கூட இன்றி) கணவனின் பெயரைப் போட்டுக் கொள்ளும் வழக்கம். தன்னுடைய திருவும் மதியும் அவனுக்கே சொந்தம் என்று ஆக்குகிறார்களாம்.

ஆனால் கோவி.கண்ணன், திருமதி என்ற சொல் திருமணமான பெண்களுக்கே ஆகி வந்து விட்ட படியாலும், திருமதி ஜெ என்றது ஏற்கெனவே பிரச்னை தந்திருப்பதாலும் தங்களுடைய இன்னொரு SUGGESTION ஆன "திருவாட்டி" பொருத்தமாகப் படுகிறது. 'திரு'க்களை வாட்டி எடுப்பவர்கள் என்கிற பொருளில் காரணப் பெயராகவும் அமையும்.

ஜெகதீசன் சொன்னது…

//
'திரு'க்களை வாட்டி எடுப்பவர்கள் என்கிற பொருளில் காரணப் பெயராகவும் அமையும்.
//
:)

கோவி.கண்ணன் சொன்னது…

ரத்னேஷ்,

உங்க கதையை சொல்றிங்களாம் !

ஜெகதீசனுக்கு குஷியை பாருங்க. அவரு பேச்சிலர் அப்படித்தான் சிரிப்பார்.
:)

ஜமாலன் சொன்னது…

பதின்மர் நல்ல தமிழ்ச் சொல்லாக இருக்கிறது. முதல்தடவை கேள்விப்படுகிறேன்.

திரு - வாட்டி ரத்ணேஷ் விளக்கம் அருமை.

எதிர் கருத்துள்ளவரை மரியாதையாக அழைப்தும் நடத்துவதும் அடிப்படை ஜனநாயகம். அதுதான் இங்கு இல்லையே. நீங்களாவது அந்த பண்பாட்டைத் துவங்குங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
பதின்மர் நல்ல தமிழ்ச் சொல்லாக இருக்கிறது. முதல்தடவை கேள்விப்படுகிறேன்.

திரு - வாட்டி ரத்ணேஷ் விளக்கம் அருமை.

எதிர் கருத்துள்ளவரை மரியாதையாக அழைப்தும் நடத்துவதும் அடிப்படை ஜனநாயகம். அதுதான் இங்கு இல்லையே. நீங்களாவது அந்த பண்பாட்டைத் துவங்குங்கள்.
//

ஜமாலன்,

சிங்கை தமிழ் வானொலியில் இளையோரரை (டீன் ஏஜ்) பதின்ம வயதினர் என்று அழைப்பர். அதைக் கேட்டுதான் இங்கே பயன்படுத்தினேன்.

திரு...வாட்டி :)

ரெத்னேஷுக்கு 'ஓ'

ஜெகதீசன் சொன்னது…

//
சிங்கை தமிழ் வானொலியில் இளையோரரை (டீன் ஏஜ்) பதின்ம வயதினர் என்று அழைப்பர். அதைக் கேட்டுதான் இங்கே பயன்படுத்தினேன்.
//

வசந்தம் சென்ரல் தொலைக்காட்சியிலும் "பதின்ம வயதினர்" என்றே அழைப்பர்...
வசந்தம் சென்ரல் மற்றும் சிங்கை வானொலி மூலம் பல தூய தமிழ் சொற்களை அறிந்து கொள்ளலாம். இதற்காகவே தினமும் வசந்தம் தமிழ் செய்திகள் பார்த்து வருகிறேன்.

TBCD சொன்னது…

தோடா..மேட்டர் கிடைக்கலையின்னா இப்படி வச்சும் ஒப்பேத்தலாமா...:))))

கோவி.கண்ணன் அதிரடி- ஜெ.ஆவேசம் !
தினமலர்ல எதிர்பார்க்கலாமா..?

இல்லை..

80 கோடி இந்துக்களை காக்கும் இராமர் கோவி.கண்ணனை தண்டிப்பார் என்று இலைக்காரனில் எதிர்பார்க்கலாமா..?

தளைகளை தகர்தெறியும் கோவியார் அப்படின்னு சொல்லலாமின்னு பார்த்தா அதுக்குள்ள பாலா பல பட்டம் தந்திருக்காரு....அவரு பின்னுட்டத்தினாலே மக்கள் பிரச்சனைகளை பல தீர்த்து வச்சியிருக்காரு...அத கொஞ்சம் மக்களுக்கு சொல்ல தான் கூச்சப்படுறாரு....

கோவி.கண்ணன் சொன்னது…

//அதுக்குள்ள பாலா பல பட்டம் தந்திருக்காரு....அவரு பின்னுட்டத்தினாலே மக்கள் பிரச்சனைகளை பல தீர்த்து வச்சியிருக்காரு...அத கொஞ்சம் மக்களுக்கு சொல்ல தான் கூச்சப்படுறாரு....//

ஆமாங்க அரவிந்த்,

பாலா ஐயா அந்த சங்கத்தை கூட்டி டெல்லியில் கழிவரை சுத்தம் செய்யும் பார்பனர்களுக்கு பழனியில் பஞ்சாமிர்தம் பிசையும் வேலை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்காராம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்