பின்பற்றுபவர்கள்

4 அக்டோபர், 2007

மூடநம்பிக்கைக்கு எல்லையே இல்லையா ?

வெறும் நம்பிக்கையை வைத்துக் கொண்டு இந்துத்துவாக்கள் ஆடும் ஆட்டம் சகிக்கவில்லை.

//மகாத்மா காந்தியால் நேசிக்கப்பட்ட ராமர் மீது சோனியா காந்திக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் தனது பெயரிலிருந்து காந்தி என்ற பெயரை சோனியா காந்தி நீக்கி விட வேண்டும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
//

ஐயா சாமிகளா, இந்திரா காந்தி என்ற இந்திரா நேரு 'பெரோஸ் காந்தியை திருமணம் செய்ததால் இந்திரா 'காந்தி' ஆனார், அவரது வாரிசுகளுக்கும் 'காந்தி' என்பது குடும்ப பெயராயிற்று. மகாத்மா காந்திக்கும் சோனியா காந்திக்கும் என்ன சம்பந்தம் ? ராஜிவ் காந்தியின் மனைவி என்பதால் பெயரில் தனது கனவரின் குடும்ப பெயரான காந்தியை சேர்த்து இருக்கிறார். இதுதான் இந்தியாவில் திருமணம் ஆனதும் பெரும்பாலும் மனைவியர், தமிழ்நாடு என்றால் தமது கணவரின் பெயரையோ, வேறு மாநிலங்களின் கணவரின் குடும்ப பெயரையே தம் பெயருக்கு பின்னால் சேர்த்து போட்டுக் கொள்வது வழக்கம். வெளிநாட்டுக்காரனுக்குத்தான் 'காந்தி' தெரியாது என்றால் குஜராத்தை தலைமையிடமாக கொண்ட பிஜேபி அண்ட் கோ வினருக்கு ?

கோட்சேக்கள் பிறந்தநாடு என்பதால் சோனியா 'காந்தி' எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சோனியா காந்தியின் பெயரில் 'காந்தியை' எடுக்கச் சொல்லி வாந்தி எடுப்பவர்கள், ராகுல் காந்தியையும் சொல்வார்களா ? சொல்ல மாட்டார்கள். சோனியா என்ன ராஜிவ் காந்திக்கு குழந்தை பெற்றுத் தந்த வாடகை தாயா ?

சோனியா காந்தி 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்தாலும், அவரது கணவரை இழந்தும் சொந்த நாட்டுக்கு திரும்பாமல் இதே நாட்டில் வாழ்ந்தாலும் அவர் வெளிநாட்டவர், மேலும் கிறித்துவராம். பிறப்பால் யார் யார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று பார்த்தால் பாஜகாவில் பலர் பாகிஸ்தான்காரர்களாகத் தான் இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் சோனியா காந்தியை குறித்து தொடர் அவதூறு வேறு. சில இந்தியர்கள் / வம்சாவளிகள் வெளிநாட்டில் (பிஜி, மாலத்தீவு, சிங்கை) அரசியலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். வெளிநாட்டு அரசியலில் இந்தியருக்கு என்ன வேலை என்று இவர்கள் கேள்வி எழுப்ப முடியுமா ? ஆனால் இந்த மண்ணிலேயே வாழ்ந்துதாலும் வீழ்ந்தாலும் சோனியா வெளிநாட்டுக்காரி ?

மேலும் இந்துத்துவ ஆதரவாளர்களுக்கு சில யோசனைகள்.

1. நாத்திகர் கருணாநிதி இந்து பெயர் வைத்துக் கொள்ளலாமா ?
2. சுனிதா வில்லியம்ஸ் என்ற கிறித்துவர் இந்தியவரலாமா ?
3. இஸ்லாமியரான அப்துல் கலாம் பகவத் கீதை படிக்கலாமா ?
4. ஐயப்ப பக்தர்கள் என்ற இந்து பக்தர்கள் 'வாபர் சாமி' என்னும் இஸ்லாமிய அரசனை தரிசிக்கலாமா ?
5. முசாரப் இந்தியாவில் பிறந்ததால் இந்திய தேர்த்தலில் போட்டி இடலாமா ?

மேலும் சில சுவையான 'லாமா?' இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் !

இராமர் பிரச்சனையால் மத அடிப்படை வாதம் பெரிதாகவே தலைதூக்கிறது. இந்த லட்சணத்தில் சந்திரனுக்கு ராக்கெட் விடுகிறார்கள்.
:))

23 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

எல்லாம் "அரசியல்".

Unknown சொன்னது…

இந்திரா பிரியதர்சிணி நேரு எப்படி இந்திரா கான் ஆக மாறமல், இந்திரா காந்தியாக மாறினார் என்பதற்கு பல கதைகள் உள்ளது.

//Indira Priyadarshini Nehru. She fell in love and decided to marry Feroze Khan, a family friend. Feroze Khan’s father, Nawab Khan, was a Muslim, and mother was a Persian Muslim. Jawaharlal Nehru did not approve of the inter-caste marriage for political reasons (see http://www.asiasource.org/ society/indiragandhi.cfm). If Indira Nehru were to marry a Muslim she would loose the possibility of becoming the heir to the future Nehru dynasty. At this juncture, according to one story, Mahatma Gandhi intervened and adopted Feroze Khan, gave him his last name (family name/caste name) and got the name of Feroz Khan changed to Feroz Gandhi by an affidavit in England. Thus, Feroze Khan became Feroze Gandhi. //

மேலும் சுவராசியமான தகவல்களுக்கு http://www.vepachedu.org/Nehrudynasty.html

*****
ராமனைக் கும்பிடுபவர்கள் அல்லது நம்புவர்கள்தான் காந்தி என்ற பெயரை வைக்க வேண்டும் என்று பேட்டண்ட் ரைட் வாங்கலாம் காந்தியபிஜேபிசவாதிகள்.

பெயரில் என்ன இருக்கிறது? அந்த அம்மா க்வாட்ரோச்சி (Quattarochi ) வழக்கில் ஏன் சொதப்பினார் என்று கேட்காமல், ஏன் காந்தி பெயரை வைத்துள்ளார் என்று கேட்பதே இவர்களுக்கு முக்கியமாகப் போய்விட்டது :-(

**
"பால்" பாலாஜிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. பால்பாண்டிக்கும், பால்(Paul) தினகரனுக்கும் சொந்தமானதுதான். :-))

✪சிந்தாநதி சொன்னது…

//மகாத்மா காந்தியால் நேசிக்கப்பட்ட ராமர் மீது சோனியா காந்திக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் தனது பெயரிலிருந்து காந்தி என்ற பெயரை சோனியா காந்தி நீக்கி விட வேண்டும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.//

வரலாறு தெரியாத கற்றுக்குட்டிகள் எல்லாம் அரசியல் தலைவர்களாக இருந்தால் இப்படித்தான். இப்படிப்பட்ட மூடர்கள் பரப்பும் மூடநம்பிக்கைகளை நம்பி பின்னோடு செல்லும் தொண்டர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

கடவுள் நம்பிக்கை இருப்பது தவறில்லை தான்... அதை மூடநம்பிக்கையாக பரப்பி அரசியல் ஆதாயம் காணும் தலைவர்களும் அவர்களை நம்பி உணர்ச்சிவசப்படும் படித்த முட்டாள்களையும் நினைத்தால் தான்...

ஹே ராம்!

அருண்மொழி சொன்னது…

என்ன கொடுமை சார் இது!!!!

காந்தியை கொன்ற கூட்டம் இன்று காந்தி பெயரை வைத்து அரசியல் செய்கின்றது.

லொடுக்கு சொன்னது…

நீங்க இப்படியெல்லாம் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்க'லாமா'?

RATHNESH சொன்னது…

* பாகிஸ்தானியாகிய அத்வானியை நாடு கடத்தலாமா?

* தங்கை திருமணத்திற்கு வந்த கள்ளலழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது திருமணம் முடிந்துவிட்ட சேதி அறிந்து கோபம் தணிக்க துலுக்க நாச்சியாரிடம் போனதால் அவரை மதப் பிரஷ்டம் செய்யலாமா?

இப்போதைக்கு இவ்வளவு தான். தொடரலாம்.

RATHNESH

Darren சொன்னது…

///இராமர் பிரச்சனையால் மத அடிப்படை வாதம் பெரிதாகவே தலைதூக்கிறது. இந்த லட்சணத்தில் சந்திரனுக்கு ராக்கெட் விடுகிறார்கள்///

http://manamay.blogspot.com/2007/09/blog-post_20.html

Thamizhan சொன்னது…

ராஜ் நாத்தம் தன்னுடைய மத வெறியை தனக்குள்ள களிமண் மூலம் தெரிவித்துள்ளார்.

இவரை உச்ச நீதி மன்ற நீதிபதியாக்குவதைத் தவிர வேறு வழி்யில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//Thamizhan said...
ராஜ் நாத்தம் தன்னுடைய மத வெறியை தனக்குள்ள களிமண் மூலம் தெரிவித்துள்ளார்.

இவரை உச்ச நீதி மன்ற நீதிபதியாக்குவதைத் தவிர வேறு வழி்யில்லை.
//

அது..........!
:)

குமரன் (Kumaran) சொன்னது…

//தங்கை திருமணத்திற்கு வந்த கள்ளலழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது திருமணம் முடிந்துவிட்ட சேதி அறிந்து கோபம் தணிக்க துலுக்க நாச்சியாரிடம் போனதால் அவரை மதப் பிரஷ்டம் செய்யலாமா?//

இது என்ன புதிய கதை ரத்னேஷ்? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தகுந்த ஆதாரத்துடன் சொல்வது போல் இருக்கிறதே?!

குமரன் (Kumaran) சொன்னது…

காந்தி என்ற மகாமந்திரத்தின் வலிமை குறைய மாட்டேன் என்கிறதே என்ற கடுப்புடன் அவரை தங்களுக்குரியவராகக் காட்டத்தொடங்கினார்கள் இந்துத்துவவாதிகள். இப்போது அந்த காந்தி என்ற பெயரைக் கொண்டு சோனியா காந்தி பெயர் வாங்கிவிடுகிறாரே என்ற கடுப்பு ரொம்ப நாளாக இருந்திருக்கும். இராஜீவ் காந்தி மனைவி என்பதோடு மகாத்மா காந்திக்கும் சோனியா காந்தி சொந்தக்காரர் என்று நினைத்து நம் நாட்டு மக்கள் அவருக்கு ஆதரவு தருகிறார்களோ என்ற எண்ணமும் இருந்திருக்கும். இப்போது இப்படி ஒரு உளரலைக் கொட்டியிருக்கிறார்கள்.

பலூன் மாமா. இந்திரா கான், இந்திரா காந்தி ஆனது இப்போது தான் எனக்குத் தெரியும். தகவலுக்கு நன்றி. சின்ன வயதில் என் தந்தையார் இதனைச் சொன்னதாக நினைவு. அவர் ஒரு ஜனதாக்காரார் - மொரார்ஜி பிடிக்கும் இந்திரா என்றாலே மகா கடுப்படைவார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
காந்தி என்ற மகாமந்திரத்தின் வலிமை குறைய மாட்டேன் என்கிறதே என்ற கடுப்புடன் அவரை தங்களுக்குரியவராகக் காட்டத்தொடங்கினார்கள் இந்துத்துவவாதிகள்.
//

குமரன்,

இது உங்கள் பின்னூட்டம் தானா என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். பொதுவாக 'இந்துத்துவ' பற்றி கண்டிக்க விரும்பினாலும் வெளிப்படையாக சொல்லமாட்டீர்கள் என்று தான் நினைத்திருந்தேன்.

புல்லரிக்குது ! :)
நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
இந்திரா பிரியதர்சிணி நேரு எப்படி இந்திரா கான் ஆக மாறமல், இந்திரா காந்தியாக மாறினார் என்பதற்கு பல கதைகள் உள்ளது.
//

இந்த தகவல் தெரிந்துமா ? பிஜேபி குருப்......இஸ்லாமியரான இராஜிவ் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமியரான ராகுல் காந்தியையும் ஆதாரிக்காதீர்கள்,என்று இராஜிவுக்கும், இராகுலுக்கும் இஸ்லாமிய முத்திரை குத்தாமல் இருக்கிறார்கள் ?
:)

குமரன் (Kumaran) சொன்னது…

//குமரன்,

இது உங்கள் பின்னூட்டம் தானா என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். பொதுவாக 'இந்துத்துவ' பற்றி கண்டிக்க விரும்பினாலும் வெளிப்படையாக சொல்லமாட்டீர்கள் என்று தான் நினைத்திருந்தேன்.

புல்லரிக்குது ! :)
நன்றி !
//

கோவி. கண்ணன். அது எல்லோரும் செய்வது தான். மற்றவர் கருத்துகளையும் பின்னூட்டங்களையும் அவர்கள் மேல் நமக்கிருக்கும் புரிதலில் தான் படிக்கிறோம். நான் வெளிப்படையாக என் கருத்துகளைக் கூறியிருந்தாலும் நீங்கள் படிக்கும் போது புரிந்து கொள்ளவில்லையோ என்னவோ? இல்லை அந்தப் பின்னூட்டங்களையே (மற்றவர் இடுகைகளில்) படித்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். மற்றவர் இடுகைகளில் நீங்கள் இட்ட பின்னூட்டங்கள் எல்லாவற்றையும் நான் படித்துவிட்டேனா என்ன? :-)

எல்லோரையும் எல்லாரும் மறு வாசிப்பு செய்ய முடியாது. ஆனால் சில பேரை மறு வாசிப்பு செய்ய வேண்டிய தேவையை எப்போதும் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட சில பேரை மறு வாசிப்பும் செய்திருக்கிறேன். என்னுடைய பழைய இடுகைகளில் சிலவற்றில் உங்கள் பின்னூட்டங்களைப் படித்தேன். இப்போது நீங்கள் கேட்கும் கேள்விகளையே ஒரு வருடத்திற்கு முன்பும் கேட்டிருக்கிறீர்கள். இப்போது இருக்கும் புரிதல் அப்போது இல்லாததால் வேறு மாதிரி விடை சொல்லியிருக்கிறேன். மறு வாசிப்பு செய்ய வேண்டியவை உங்கள் பின்னூட்டங்களும். :-)

அரசியலில் எந்த கட்சியின் சார்பில் நான் இருக்கிறேன் என்பதில் இன்னும் எனக்குத் தெளிவு ஏற்படவில்லை. இதுவரை தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பும் ஏற்படாததால் (தேர்தலின் போதெல்லாம் வெளியூரிலோ வெளிநாட்டிலோ இருந்திருக்கிறேன்) எந்தக் கட்சிக்கும் இதுவரை வாக்களித்ததில்லை. எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டாலும் எந்த அரசியல் கருத்தாக்கத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் மூடத்தனமும் உண்மையும் கலந்து இருப்பதாகத் தான் தோற்றம் தருகிறது.

குறைந்தது அந்தக் கட்சியின் தலைவர்கள் அரசியலுக்காக மூடக்கருத்துகளைச் சொல்லிச் செல்கிறார்கள். அவர்களுக்கே அது மூடக்கருத்து என்று தெரியும். அப்படித் தெரிந்தே சொல்வதன் காரணம் என்ன என்று பார்க்க சில நேரம் இயல்கிறது. அப்படிப் பார்த்த காரணங்களைத் தான் இங்கே சொல்லியிருக்கிறேன். இந்துத்துவக் கருத்தாக்கத்தில் மட்டுமின்றி மற்ற கருத்தாங்களில் ஈடுபாடு கொண்ட தலைவர்களின் உளரல்களிலும் பின்புலத்தை ஆய்ந்தால் இப்படி பல காரணஙக்ளைப் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்.

ஜெகதீசன் சொன்னது…

//
இந்த தகவல் தெரிந்துமா ? பிஜேபி குருப்......இஸ்லாமியரான இராஜிவ் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமியரான ராகுல் காந்தியையும் ஆதாரிக்காதீர்கள்,என்று இராஜிவுக்கும், இராகுலுக்கும் இஸ்லாமிய முத்திரை குத்தாமல் இருக்கிறார்கள்
//
இலைக்காரனுக்கு அடுத்த பதிவுக்கு மேட்டர் கிடைச்சிருச்சி......

வவ்வால் சொன்னது…

கோவி,

கல்வெட்டு பெரோஸ் கான் பெயரில் இருந்து எப்படி இந்திரா காந்தி ஆனார் என்பதற்கு ஒரு விளக்கம் அளித்துள்ளார் அது சரி அல்ல என்றே நினைக்கிறேன்,

//Indira Priyadarshini Nehru. She fell in love and decided to marry Feroze Khan, a family friend. Feroze Khan’s father, Nawab Khan, was a Muslim, and mother was a Persian Muslim.//

பெரோஸ் கானின் தாய் பெர்சியான் முஸ்லீம் அல்ல அவர் ஒரு பார்சி , பார்சிக்களின் தாயகம் பெர்சியா என்பதால் அப்படி சொல்லிவிட்டார்களா எனத்தெரியவில்லை.

பெரோஸ் கானின் தந்தை முஸ்லிம், தாயார் பார்சி , அவர்கள் குடும்ப பெயர் தான் காந்தி ஆனால் அது காந்தி அல்ல "gandhy" அதனை காந்தே எனப்படிக்க வேண்டும்.

பெரும்பாலும் தந்தை பெயரை தான் குடும்ப பெயராக பயன்படுத்துவார்கள். இந்திராவுக்கு அரசியலில் எதிர்காலம் இருப்பதால் கான் என்று பெயர் பின்னால் சேர்த்தால் பாதிப்பு வரும் என இந்திரா , பெரோஸ் கான் திருமணத்தின் போதே காந்தி சொன்னதன் பெயரில் கெசட்டில் பெரோஸ் தனது அம்மாவின் குடும்ப பெயரைக்கொடுத்து பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

காந்தியே தத்து எடுத்துக்கொண்டார் என்பது போல யாரோ இணையத்தில் கதையே எழுதிவிட்டார்கள்!

இதில் கூடுதல் சுவாரசியம் இருக்கிறது ,
பெரோஸ் கானுடன் முதலில் இந்திராவுக்கு முஸ்லீம் முறைப்படி தான் திருமணம் நடந்தது , அதற்காக இந்திராவும் முஸ்லீமாக மதம் மாறினார். இது பெரோஸ்கானின் குடும்பத்தினருக்காக. பின்னர் ஊர் அறிய இந்து முறைப்படி ஒரு திருமணம் , அக்காலத்தில் கலப்பு திருமணங்கள் வைதீக முறையில் செல்லாது என்பதால் ரிஜிஸ்தர் கல்யாணம் வேறு நடந்தது, அப்பொழுது தான் காந்தி எனப்பெயர் வருமாறு ஏற்பாடூ செய்ய வைத்தார் மகாத்மா காந்தி!

குமரன் (Kumaran) சொன்னது…

வவ்வால். நீங்கள் சொல்லச் சொல்ல என் தந்தையார் சொன்னவை எல்லாம் நினைவிற்கு வருகிறது. நன்றி. :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//என்னுடைய பழைய இடுகைகளில் சிலவற்றில் உங்கள் பின்னூட்டங்களைப் படித்தேன். இப்போது நீங்கள் கேட்கும் கேள்விகளையே ஒரு வருடத்திற்கு முன்பும் கேட்டிருக்கிறீர்கள். இப்போது இருக்கும் புரிதல் அப்போது இல்லாததால் வேறு மாதிரி விடை சொல்லியிருக்கிறேன். மறு வாசிப்பு செய்ய வேண்டியவை உங்கள் பின்னூட்டங்களும். :-)
//

குமரன்,

எனது பின்னூட்டங்கள், இடுகை எதிலுமே பிறள்வு இருக்காது என்றே கருதுகிறேன். ஆனாலும் பழைய கருத்துக்கள் புதிய பொழிவை பெரும் போது வேறுபட்டு தெரிவது உங்கள் பின்னூட்டங்களோ, அல்லது என் பின்னூட்டங்களோ ஒரே (அவரவர்) அடிப்படையில் தான் அமைந்திருக்கும். புதிய கருத்துக்களை உண்மையாக இருக்கும் என்ற எண்ணத்தில் ஏற்றுக் கொள்வது 'நிறைய தெரிந்து' கொண்டிருக்கிறோம், ஒப்புக் கொள்ளவேண்டியவற்றையும் ஒப்புக் கொள்வகிறோம், விலக்கவேண்டியவற்றை விலக்குகிறோம் என்ற அடிப்படையில் அமைவது என்றே நினைக்கிறேன்.

RATHNESH சொன்னது…

// இது என்ன புதிய கதை ரத்னேஷ்? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தகுந்த ஆதாரத்துடன் சொல்வது போல் இருக்கிறதே?!//

என்ன குமரன் சார், கிண்டல் செய்கிறீர்களா? நிஜமாகவே தெரியாதா? மதுரையில் தங்களுக்கு நண்பர்களே கிடையாதா? சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சித்ரா பவுர்ணமி அன்று, அழகர் ஆற்றில் இறங்கிய பிறகு அவர் கோபித்துக் கொண்டு வண்டியூர் சென்று துலுக்க நாச்சியாருடன் இரவு கழித்து மறுநாள் தீட்டுக் கழித்து தசாவதாரம் நிகழ்த்திக் காட்டி விட்டு அழகர் மலை திரும்பிச் செல்வது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே?

கூடுதல் செய்தி: திருமலைநாயக்கருக்கு முந்தைய நாட்களில் அழகர் மதுரைக்கு வந்ததில்லை. அலங்காநல்லூர் வழியாக தேனூர் சென்று கரையோரமாகவே வண்டியூர் சென்று அங்கே மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பது தான் வருடாந்தர வழக்கமாக இருந்தது. சைவ வைணவ ஒற்றுமைக்காக திருமலை நாயக்கர் ஏற்படுத்திய ஏற்பாடுதான் இந்த ஆற்றில் இறங்கும் நிகழ்வும் மற்றவைகளும்.

RATHNESH

ஜீவி சொன்னது…

// பிறப்பால் யார் யார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று பார்த்தால் பாஜகாவில் பலர் பாகிஸ்தான்காரர்களாகத் தான் இருக்கிறார்கள்.//

'பலரை'த் தெரியாது. ஒருவர் தெரியும். அத்வானி கூட, பிளவுபடாத இந்தியாவில் பிறந்தவர் தான். பின்னர், அவர் பிறந்த இடம்
பாக்கிஸ்தானுக்குச் சொந்தமானது.
முஷ்ரப் கூட இந்தியாவில் பிறந்தவர் தான். அவர் பிறந்த இடம், இப்பொழுது இந்திய யூனியனில் இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவி said...
'பலரை'த் தெரியாது. ஒருவர் தெரியும். அத்வானி கூட, பிளவுபடாத இந்தியாவில் பிறந்தவர் தான். பின்னர், அவர் பிறந்த இடம்
பாக்கிஸ்தானுக்குச் சொந்தமானது.
முஷ்ரப் கூட இந்தியாவில் பிறந்தவர் தான். அவர் பிறந்த இடம், இப்பொழுது இந்திய யூனியனில் இருக்கிறது.
//

ஜீவி சார்,

சோனியாவும் திருமணத்துக்கு முன்பு இத்தாலியில் இருந்தவர் என்று சொல்லலாமே.
:)

தற்போதைய (ஆணாதிக்க) இந்தியாவில் பெண்ணுக்கு புகுந்தவீடுதானே சொந்தம் ?

ஜீவி சொன்னது…

ஒரே இந்தியாவாய் இருந்தது, இரண்டாகப் பிரிந்ததால் அதைச் சொன்னேன். இல்லையென்றால்,
பின்னூட்டத்திற்கே அவசியம் இருந்திருக்காது.
வ்லிந்து வேறு அர்த்தம் எல்லாம்
கொள்ள வேண்டாம்.

குமரன் (Kumaran) சொன்னது…

//என்ன குமரன் சார், கிண்டல் செய்கிறீர்களா? நிஜமாகவே தெரியாதா? மதுரையில் தங்களுக்கு நண்பர்களே கிடையாதா? சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சித்ரா பவுர்ணமி அன்று, அழகர் ஆற்றில் இறங்கிய பிறகு அவர் கோபித்துக் கொண்டு வண்டியூர் சென்று துலுக்க நாச்சியாருடன் இரவு கழித்து மறுநாள் தீட்டுக் கழித்து தசாவதாரம் நிகழ்த்திக் காட்டி விட்டு அழகர் மலை திரும்பிச் செல்வது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே?

கூடுதல் செய்தி: திருமலைநாயக்கருக்கு முந்தைய நாட்களில் அழகர் மதுரைக்கு வந்ததில்லை. அலங்காநல்லூர் வழியாக தேனூர் சென்று கரையோரமாகவே வண்டியூர் சென்று அங்கே மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பது தான் வருடாந்தர வழக்கமாக இருந்தது. சைவ வைணவ ஒற்றுமைக்காக திருமலை நாயக்கர் ஏற்படுத்திய ஏற்பாடுதான் இந்த ஆற்றில் இறங்கும் நிகழ்வும் மற்றவைகளும்.
//

ரத்னேஷ். நான் மதுரைக்காரன் தான். நீங்கள் சொல்லும் கதையை ஒட்டிய கதையை அறிவேன். துலுக்க நாச்சியார் அழகர் கோவில் கதையில் வருவதே இல்லை. அதனால் 'ஒட்டிய' கதை என்கிறேன். ஆனால் எல்லாவற்றிலும் தீர விசாரித்து மெய்ப்பொருள் காண்பவராயிற்றே நீங்கள். உங்கள் இடுகைகளைப் படித்ததிலிருந்து இந்த புரிதல் தான் எனக்கு ஏற்படுகிறது. அப்படி இருக்க போகும் போக்கில் ஒரு கருத்தைச் சொல்லிச் சென்றீர்களே அது தான் கேட்டேன். திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்னர் அழகர் கோவில் திருவிழா எப்படி நடந்தது என்ற வரலாற்று நிகழ்ச்சியை அறிந்த நீங்கள் இன்றும் அந்த நிகழ்ச்சி எப்படி நடைபெறுகிறது என்று அறியவில்லையா? தேனூர் மண்டபத்தில் இன்று கூட மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுத்து முக்தி கொடுக்கும் விழா நடைபெறுகிறதே?! ராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறுகிறதே?! தசாவதாரத்திற்கு முன்னர் தீட்டு கழிக்கப்படுகிறது என்று தெளிவாகத் தெரியுமா? வண்டியூரில் 'துலுக்க நாச்சியார்' இருக்கிறார் என்று தெளிவாகத் தெரியுமா? அரங்கனைச் சார்ந்தே துலுக்க நாச்சியார் கதைகள் இருக்கின்றன. கள்ளழகரைச் சார்ந்து இல்லை.

மேலும் ஆராய்ந்து மக்கள் நடுவில் இருக்கும் கதைகளில் உள்ள உண்மைகளும் நாளாவட்டத்தில் எந்தக் கருத்து எப்படி திரிந்தது என்ற உண்மையையும் நீங்கள் இன்னும் கொஞ்சம் சிந்தித்தால் தெளிவடையும். உங்களிடம் அதற்குரிய தகவல்களும் திறனும் இருக்கிறது என்பது என் எண்ணம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்