பின்பற்றுபவர்கள்

13 அக்டோபர், 2007

வேழமுகத்து விநாயகன் அழுக்கு பிள்ளையார் ?

விநாயகர் வழிபாடு வேதகாலத்திலோ, அதற்கு பிற்பட்ட காலத்திலோ கிடையாது. கிபி 6 ஆம் நூற்றாண்டிற்கு பின்பு, அதாவது சிலப்பதிகாரத்துக்கு பிறகு, அல்லது களப்பிரர் ஆட்சி காலத்தில் தான் விநாயகர் வழிபாடு தமிழகத்தில் வந்தேறி இருக்கமுடியும் என்பது வரலாற்றிஞர்களின் மற்றும் தமிழ் ஆய்வலர்களின் துணிபு. புத்தவிகார்கள் இருந்த இடத்தை ஆக்கிரமித்தில் விநாயக பெருமானுக்கு பெரும்பங்கு உண்டென்பர். ஆரசமரத்தடியும், ஆற்றங்கரையும், துணையற்ற ஒற்றை அருள்வடிவம் புத்தருக்கும் உண்டு என்பதை ஒப்பு நோக்குக. விலங்குவழிபாடின் நீட்சியாக ஆனை வடிவத்தை மனித உடலுடன் பொருத்தி வழிபடும் ஒரு முறையாகவும் விநாயக வழிபாட்டைச் சொல்கிறார்கள். வேத வியாசர் பிள்ளையாரை வைத்து மகாபாரதம் எழுதியதாக புராணக் கதை இருந்தாலும் வியாசர் வாழ்ந்த காலத்தில் உருவாகியிருந்த நான்கு பிராகிருத (பாலி) வேதங்களான இருக்கு - சாம வேதத்தில் பிள்ளையார் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை.

வடபுலத்தார் - தென்புலத்தார் ஒற்றுமைக்காக இரண்டிற்கும் தொடர்பில்லாதா ஒரு உருவ வழிபாட்டை வழியுறுத்தும் வண்ணம் விநாயக வழிபாடு பரவியிருக்க வேண்டும். முருகனுக்கு உள்ள நீண்ட சங்ககாலப் பின்னணிகள் விநாயகருக்கு இல்லை. இருந்தும்.. விநாயகரை சொந்தமாக்கிக் கொள்ள விநாயகனை மூத்தமகனாக அறிவித்தது சைவம். அதாவது முருகனுக்கு முன் பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் அறிய பெற்றதன்று. வைணவமும் விநாயக வழிப்பாட்டை புறம் தள்ளவில்லை. இருந்தாலும் 'நாராயண நமோ' விற்கு அடுத்தது தான் கனபதி வணக்கம்.

நன்கு கவனித்து உற்று நோக்கினால் சோழர் காலத்து பெரிய கோவில்களில் விநாயகர் உருவங்கள் இருந்தது கிடையாது. இப்பொழுது நீங்கள் பார்பதெல்லாம் பின்பு ஒட்டவைக்கப்பட்டது. சில அமைப்பின், நிறத்தின், கலையில் அது ஒட்டவைக்கப்பட்டது தான் என்பது நன்கு தெரியும் படி இருக்கிறது. நான் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலிலும் தஞ்சை பெரிய கோவிலும் ஒட்டவைக்கப்பட்ட விநாயக சிலைகளைப் பார்த்திருக்கிறேன். அதே போன்று அந்த கோவில்களில் புத்தருக்கென்ற தனி சன்னதியும் இருக்கிறது.

புராணக்கதைகள் பெரும்பாலும் அருவருக்கத்தக்கதாகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாதையாகவையாகவே இருக்கும். உதாரணத்துக்கு பார்வதி என்கிற உமையாள் குளிக்கும் போது உடலில் உள்ள அழுக்குகளை திரட்டி ஆற்றங்கரையில் வைத்ததாகவும் ( அவ்வளவு அழுக்கா ?) அது பிள்ளையாராக மாறியதாகவும் இழிவான புராணக் கதைகளைக் கேட்டதாலேயே பிள்ளையாரின் தோற்றம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று என்று பகுத்தறிவாளர்கள் இராமனுக்கு கொடுத்த அதே தண்டனையை பிள்ளையாருக்கும் கொடுத்தனர்.

பிள்ளையார் அழுக்கில் இருந்து பிறந்தது காட்டுக்கதை. ஆனால் பிள்ளையார் சிலைகளால் கடற்கரை அழுக்காவது நடப்பு கதைதான். :) . வினைதீர்க்கும் நாயகர்.. கலவர நாயகரானது சோகம் தான் :)

அதையும் மீறி நாடெங்கிலும் பிள்ளையார் சிலைகள் தெருவுக்கு தெரு இருக்கத்தானே செய்கிறது என்பது பக்தியாளர்களின் எதிர் கேள்வி. தற்காலத்தில் திருநெல்வேலி, மதுரை பகுதிகளில் 'இரவில் ஒரு பெண் குழந்தையுடன் வந்து கதைவை தட்டி தண்ணிக் கேட்பதாகவும், கொடுக்க மறுப்பவர்கள் வாந்தி பேதி கண்டு மாண்டுவிடுவதாகவும்' கதைகட்டி, அதை தவிர்பவர்கள் வீட்டுக்கு வீடு வேப்பிள்ளை கட்டி வைத்தால் தப்பிக்கலாம் என்று வதந்தி பரவியது. அது போன்றே 'திருடி கொண்டு வரும் பிள்ளையார், சக்தி வாய்ந்தவர்' என்று கட்டுக்கதை கட்டப்பட்டு, பிள்ளையார் சிலைகள் வீதிக்கு வீதி வந்தன.

சைவ சித்தாந்தக் கூற்றுப்படி பிள்ளையார் வடிவம் என்பது புராணக்கதை பின்னனிகள் கொண்டதல்ல. வேழ முகம் என்பது 'ஓ'ம் என்ற ஓங்கார வடிவத்தின் உருவகம் என்கிறார்கள். யானை முகத்திற்கும் 'ஓ' என்ற வடிவத்தையும் ஒப்பு நோக்குக. அதனுடன் இணைந்த பானை வயிறு உலகை குறிப்பதாகவும். ஓம் என்ற மந்திரத்துடன் இணைந்த உலக தத்துவமாக சொல்கிறார்கள். சைவ - வைணவ சண்டைகளை நிறுத்திக் கொள்வதற்க்காகவும் பொதுவான கடவுளாக விநாயக வழிபாடு பரவியிருக்கக் கூடும்.

அடுத்த பதிவில் ஆகம விதியில் அமைப்பட்ட சிவன் கோவில் நந்தி மற்றும் பலிபீடம் பற்றி பார்ப்போம்.









14 கருத்துகள்:

Subbiah Veerappan சொன்னது…

உள்ளேன் ஐயா!

ஜெகதீசன் சொன்னது…

பிள்ளையார் அழுக்கில் இருந்து பிறந்தது "காட்டுக்கதை"யா இல்லை "கட்டுக்கதை"யா?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
பிள்ளையார் அழுக்கில் இருந்து பிறந்தது "காட்டுக்கதை"யா இல்லை "கட்டுக்கதை"யா?
//

ஜெகதீசன்,

எழுத்துப்பிழைதான். இருந்தாலும் சரியாக பொருந்துகிறது. காட்டு(மிராண்டி) கதை என்று என்றும் சொல்லலாம். காட்டு என்றால் உதாரணம் எழுத்துக்காட்டு என்ற பொருளும் உண்டு. ஆபாச புராண கதைகளுக்கு அழுக்கில் இருந்து பிறந்ததாக சொல்லப்படும் விநாயக புராணக் கதை ஒரு காட்டுக் கதை. அதாவது எடுத்துக்காட்டு கதை !:)

ஜெகதீசன் சொன்னது…

காட்டு(மிராண்டி)களால் பரப்பப்பட்ட, ஆபாச புராண கதைகளுக்கு
(எடுத்துக்)காட்டாக இருக்கும் கட்டுக்கதை......
:))))

RATHNESH சொன்னது…

நீங்கள் சொன்னதெல்லாம் கடவுள் விநாயகர் பற்றி, என்னுடைய நண்பர் விநாயகர் பற்றி அல்ல என்பதால் எனக்கு சம்பந்தமில்லாத ஒருவர் குறித்த விஷயத்தில் பின்னூட்டம் இடுவதாக இல்லை.
//அடுத்த பதிவில் ஆகம விதியில் அமைப்பட்ட சிவன் கோவில் நந்தி மற்றும் பலிபீடம் பற்றி பார்ப்போம்//.
இதனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அதில் ந்ந்திக்கும் சிவனுக்கும் உள்ள தொடர்பு, திடீரென்று இப்போது பிரபலமடைந்திருக்கும் 'பிரதோஷம்' பற்ரிய விளக்கம், அந்தக் காலத்தில் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் யாரும் போககூடாது என்கிற விதி (அதனை ஒரு பக்தரும்(?) மதிப்பதில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும்), பிரதோஷகாலத்தில் சிவன் கோவிலை வேறு விதமாகச் சுற்றவேண்டிய விதி (இதையும் எந்த பக்தரும்(?) பின்பற்றுவதில்லை) ஆகியவை குறித்த விஷயங்களும் இடம் பெறுமா?

RATHNESH

பெயரில்லா சொன்னது…

'பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் அமைந்தது'

என்று தமிழில் வழங்கும் பழமொழியைக் கேட்டிருக்கிறேன். ஆனால் பிள்ளையாரைக் குரங்காக்கியவர்கள் யார்
என்பது இப்போது வெளிச்சமாகிவிட்டது.

நல்ல வேளை உங்கள் பதிவு அவ்வாறு அமையவில்லை.. :)

ஜமாலன் சொன்னது…

விநாயக வழிபாடுபற்றி பைத்தியக்காரன் பதிவில் ஒரு விவாதம் நடந்தது. வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

தமிழ் ஐந்திணைக் கடவுளில் விநாயகர் இல்லை. மருதநிலக்கடவுளான வேந்தன் (வேதகால இந்திரனுடன் பின்னாலில் இணைக்கப்பட்டவன்) யானைகளுடன் காணப்படுவதால், விநாயக வழிபாடு அதிலிருந்து உருவாகியிருக்கலாம் என்கிற P.T.Srinivasa Iyangar ஒரு கருத்து கூறுகிறார். அதற்கு போதுமான ஆதாரம் இல்லை.

விநாயகரின் மூலம் மகாராட்டிரமாக இருக்கலாம். அங்குதான் இதன் மூலத்தை தேட வேண்டும். கடவுள்களுக்கு குழந்தை பிறப்பதில்லை. காரணம் பிரசவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் துவங்கி தீட்டு போன்ற விஷயங்களைப்பற்றி நீங்கள் கேட்கக்கூடும் என்பதால். பிள்ளகைள் பிறப்பிற்கு.. வெவேறு நடைமுறைகள், கதைகள். விநாயக பிறப்பும் அப்படிப்பட்ட் கதைதான். சிவனின் சக்தி ஆறு தாமரைகளில் விழுந்து ஆறுமுக கார்த்திகேயன் பிற்ததைப்போல. பார்வதி அழுக்கு என்பதை,சராசரி மனித அழுக்குடன் இணைத்து பார்க்க வேண்டாம். சைவ சித்தாந்தம் கூறும் மும்மலம் போன்ற ஒரு மாசு என்று வைத்துக் கொள்ளுங்கள். அத ஒருவகை ஆற்றல் அல்லது dynamic force என்றும் வைத்துக் கொள்ளலாம். சொல்லப்படும் செய்தி விநாயகர் பார்வதியின் ஒரு extension என்பதுதான். விநாயகர் அம்மா பிள்ளை. முருகர் அப்பா பிள்ளை. இது ஏதொ அப்பா, அம்மா பாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. குடும்பத்தில் இந்த இரண்டுவகை பிள்ளைகள் தவிர வேறு வாய்ப்பு இல்லை என்பதால் உருவான ஒரு உளவியல் கட்டுமானம். புராணங்கள் ஒருவகை தொண்மரீதியான குறியீட்டு வாசிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டியவை. அவற்றை பகுத்தறிவு கொண்டுமட்டும் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

அரசியல்ரீதியாக உங்கள் கருத்துக்களை நான் முழுமையாக ஏற்கிறேன்.

-அன்புடன்
ஜமாலன்.

வேல்பாண்டி சொன்னது…

பழனியில் முருகன் ஆண்டியாய் நிற்க பிள்ளையார்தானே காரணம்?
பழனி ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்ததே?

-வேல்-

கோவி.கண்ணன் சொன்னது…

//வேல்பாண்டி said...
பழனியில் முருகன் ஆண்டியாய் நிற்க பிள்ளையார்தானே காரணம்?
பழனி ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்ததே?

-வேல்-
//

காஞ்சிப் போன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையுது..... அந்த தெய்வமே கலங்கி நின்னா அந்த தெய்வத்துக்கு ஆறுதல் சொல்ல யாரல முடியும் பாட்டுத்தான் பழனி ஆண்டவரைப் பார்த்தால் ஞாபகம் வருது. பழத்துக்கு கோபப்படுபவர் பக்தர் தம் மனக்குறைகளை தீர்ப்பது எங்ஙனம் ?என்று நினைத்தால் புராணக்கதைகளை முற்றிலும் ஒதுக்க முடியும் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...விநாயகரின் மூலம் மகாராட்டிரமாக இருக்கலாம். அங்குதான் இதன் மூலத்தை தேட வேண்டும். கடவுள்களுக்கு குழந்தை பிறப்பதில்லை. காரணம் பிரசவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் துவங்கி தீட்டு போன்ற விஷயங்களைப்பற்றி நீங்கள் கேட்கக்கூடும் என்பதால். பிள்ளகைள் பிறப்பிற்கு..//

ஜமாலன்,

ஆனை உருவத்தை வழிபடுவது இமயமலைச்சாரலில் இருந்த பழங்குடியினரின் மரபாக வேதகாலத்திற்கு முன்பே இருந்திருக்கிறது என்று படித்திருக்கிறேன். காட்டுயானைகள் தினைநிலங்களை அழித்ததால் அதனிடம் பாம்பை கண்டு பயப்படுவது போலவே பயத்தினால் வழிபாடு தொடங்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

மனித உருவில் கடவுளை வணங்குவதும், அதற்கு வாரிசுகளை கற்பிப்பதும் சிக்கல் தான். மனித உடல் அசுத்தங்கள் நிரம்பியது அதையே கடவுளுக்கும் வைத்தால் நாம் செய்வதையெல்லாம் அதுவும் செய்யுமா ? என்ற கற்பனையெல்லாம் கூட வருவது இயற்கைத்தான். ஆனால் உருவகத்திற்கு காரணங்களைச் சொல்கிறார்கள் இருந்தாலும் தவிர்க்க முடியாமல் உருவத்தை வணங்குகிறார்கள். உருவ வழிபாடுகள் பழங்குடியினர் வழிபாடு என்றும் பண்டையகாலத்தில் பழிக்கப்பட்டே வந்தது. தற்போது அவற்றிக்கு சொல்லப்படும் காரணம் உருவத்தை மனதில் நிறுத்து ஒருமுகப்படுத்துவது எளிதாம். அப்படி சொல்பவர்கள் காரணங்களை விட்டுவிட்டு அதற்கும் அபிசேகம் ஆராதனை என்று செய்யத்தான் செய்கிறார்கள்.

உருவ வழிபாட்டில் நிலை நிறுத்தி இருப்பது உருவம் அல்ல. வெளி அடையாளங்களான வேல், சூலம் நாமம், திருநீறு மற்றும் வாகனங்களே அதைத் தவிர்த்துப் பார்த்தால் எந்த சாமி எது என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது.

வேல்பாண்டி சொன்னது…

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம்
மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித்
தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
-அவ்வை

அவ்வையார் சங்க காலத்து புலவர். மேல் கண்ட பாட்டை அவ்வையார் இயற்றியதால் பிள்ளையார் சங்க காலத்து கடவுள்தானே?

-வேல்-

ஜமாலன் சொன்னது…

கோவி. கண்ணனுக்கு,

உங்கள் விளக்கம் அருமை. மிருகங்களை வழிபடும் வழக்கம் பற்றிய கருத்தும் புதியது.

நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
கோவி. கண்ணனுக்கு,

உங்கள் விளக்கம் அருமை. மிருகங்களை வழிபடும் வழக்கம் பற்றிய கருத்தும் புதியது.

நன்றி.

2:31 PM, October 17, 2007
//

ஜமாலன் சார்,

நன்றி !

டெல்லியில் இருந்து யாரோ இதை இன்று படித்திருக்கிறார்கள்.

Delhi, Delhi arrived from google.co.in on "காலம்: வேழமுகத்து விநாயகன் அழுக்கு பிள்ளையார் ?"

கோவி.கண்ணன் சொன்னது…

//வேல்பாண்டி said...
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம்
மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித்
தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
-அவ்வை

அவ்வையார் சங்க காலத்து புலவர். மேல் கண்ட பாட்டை அவ்வையார் இயற்றியதால் பிள்ளையார் சங்க காலத்து கடவுள்தானே?

-வேல்-
//

ஒளவையார்கள் பல உண்டு,
அவர்களில் யார் சங்க காலத்தவர் என்று சரியாகத் தெரியவில்லை, புறநானுற்றில் கூட யானை வழிபாடு இல்லை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்