பின்பற்றுபவர்கள்

6 அக்டோபர், 2007

பொடா இல்லையே ! மூக்கு சிந்துகிறார் இல.கனேசன் !

பொடா சட்டத்தை தூக்கிவிட்டதால் இந்தியா பயங்கரவாத நாடாகிறாதாம்... வைகோ 'வெளியில்' வந்தது இல.கனேசனுக்கு பிடிக்கவில்லை போலும் :). பொடா சட்டம் இல்லாமல் பயங்கர வாதத்தை ஒழிக்க முடியாதாம். அந்த பொடா சட்டத்தை வைத்துக்குக் கொண்டு ஜெயலலிதாம்மா ஆடிய ஆட்டங்களை மறந்துவிட்டார் போலும். தருமபுரியைச் சேர்ந்த 14 வயது சிறுவர்களை பொடா சட்டத்தில் அடைத்து நீதிபதிகளால் கண்டனம் பெற்றதும், நக்கீரன் கோபால், வைகோ,சுபவீரபாண்டியன், நெடுமாறன் மற்றும் பல தமிழர்களை அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப் பயன்படுத்தியதையும் தவிர்த்து இந்திய அளவில் எந்த பயங்கரவாதியையும் அந்த சட்டத்தால் ஒன்னும் பிடுங்க முடியவில்லை.

பொடா சட்டம் இருந்த போது காஷ்மிர் தீவிரவாதிகளும், உல்பாக்களும் துப்பாக்கியை தூக்கிப் போட்டுவிட்டு பரமபதம் ஆடியதுபோலவும் :) காஷ்மீர் பிரச்சனையும், அசாம் உல்பா தீவிரவாதிகள் இப்போதும் செயல்படுவதற்கும் பொடா சட்டம் நீக்கப்பட்டதே காரணம் என்று சொல்லுகிறார்.

காங்கிரஸ் ஆட்சியிலூம் வன்முறையில் இறங்குபவர்கள் இந்துத்துவாக்களே, முன்பு நரசிம்மராவ் ஆட்சியின் போது பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்கள். அதற்கு இந்த நாள் வரை வெட்கப்பட்டது போல் தெரியவில்லை. இவர்களின் பிஜேபி ஆட்சியும் முன்பு தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்கவில்லை. கூட்டணி ஆட்சிதான் அமைத்தது. அதே வழியில் தான் காங்கிரஸ் பிஜேபியை வரவிடக்கூடாது என்பதற்காகவே கூட்டணி கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது காங்கிரஸ் ஆட்சி நீடிக்கக் கூடாது என்பதற்காகவே,

தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைவிட பாராளுமன்றம் கூடும் போதெல்லாம் பிஜேபி கட்சி எம்பிக்கள் அனைவரும் சபாநாயகரை பாராளுமன்ற கூட்டம் நடத்தவிடாமல் ஜனநாயக ஆட்சியை கேலி கூத்தாக்குகிறார்கள். ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்திற்குச் செலவு செய்யப்படும் கோடிக்கணக்கான பொதுமக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது. இவர்கள் இந்திய வளர்ச்சியில் அக்கரை கொண்டுள்ளது போன்ற பாசாங்கிற்காக 'காங். ஆட்சியால் இந்தியா பயங்கரவாத மையமாக மாறி விட்டது' மூகாரி பாடுகிறார்.

பயங்கரவாதங்களை தூண்டிவிடுபவர்கள் இவர்களே என்பதற்கு சாட்சியாக மோடியின் ரத்த தாண்டவங்கள் இன்னும் எவர் நெஞ்சிலிருந்தும் மறையாது இருக்கும் போது, அண்மையில் கர்நாடகாவில் சங்கர்பரிவார் அமைப்புகளால் இரு தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் கட்சியின் வழி எம்பி பதவி வகித்த 'மனு சாஸ்திரம், மற்றும் பகவத் கீதை' வழி நாக்கை வெட்டு, தலையை கொண்டுவா எடைக்கு எடை பணம் கொடுப்பதாக சாது(வேசமிட்ட) ராம்விலாஸ் 'வேடா'ந்தி, இவர்கள் ஆட்சியில் இல்லாத போதே அறிவிக்க முடிகிறதென்றால்... கலைஞரின் ஸ்டேட்மெண்டுக்கு..இவர்கள் ஆட்சியும், பொடாவும் இருந்திருந்தால் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தாலும் பிடித்துப் போட்டு இருப்பார்கள்.

மதவாதம்..தீவிரவாதத்தைவிட பயங்கரமானது ஏனென்றால் அது ஆட்சி அதிகாரத்தை வைத்தே காரியத்தை சாதித்துக் 'கொல்லும்' என்பதை பிஜேபியின் ஆட்சிக்குப் பிறகு மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். பிஜேபி மதவாதகட்சியாக இருக்கும் வரை மற்ற கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சிப்பதிற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.

4 கருத்துகள்:

Arun Kumar சொன்னது…

வணக்கம்
உங்கள் பதிவில் பாபர் மசூதி அயோத்யா ராமர் தொடர்பாக எந்தவித கருத்தும் எனக்கு கிடையாது

ஆனால் பொடா சட்டம் தொடர்பாக நான் பேச விரும்புகிறேன்

எனது நெருங்கிய உறவினர் இந்த வாரம் கழ்மீரில் நடந்த ஒரு சண்டையில் உயிர் துறந்தார்.. அவர் தொடர்பான செய்தி

இந்த செய்தியை பார்க்கவும்
http://www.hindu.com/2007/10/04/stories/2007100461891200.htm


நாட்டுக்காக உயிரை நீர்த்த இவருக்கு இந்த மாதம் திருமணம் நடக்க இருந்தது உங்களுக்கு தெரியுமா?

எந்த வித பிரதி பலனும் எதிர்பார்காமல் நாட்டுக்காக உழைக்கும் இவர்கள் போல ஆட்களுக்கு என்ன மரியாதை??

ஆனால் மொள்ள மாரிகளும் பகல் கொள்ளைகாரர்களும் பொடாவில் அடைபட்டால் கூச்சல்

எப்படியாவது சாதாரண பொது மக்களை வதைக்கும் சமூக விரோதிகள் எப்படி செத்தால் என்ன??

ஆனா ஒன்னு
பிரபாகரன் முதல் பின் லேடன் வரை எல்லாரும் ரொம்ப safe.

அப்பாவி மக்கள் தான் அடிச்சுகிட்டு சாகிறாங்க

இது என் கருத்து என் ஆற்றாமை
இதை நான் விவாதிக்க விரும்பவில்லை

நான் பொதுவாக பதிவுகளை படிப்பது மட்டும் வழக்கம்
உங்களின் பொடா எதிர்ப்புக்கு எதிராக என்னை போன்ற சாதாரண எந்த வித கொள்கையும் இல்லாத ஒரு சராசரி மனிதனின் பார்வையை பதிவு செய்ய விரும்புகிறேன் .

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

நண்பர் அருண்குமார்,

உங்கள் உறவினரின் இழப்பு பெரும் சோகம். உங்கள் சோகத்தில் எனக்கும் பங்கு உண்டு. :(

தீவிரவாதம் சட்டங்களுக்கு கட்டுப்பட்டதல்ல.

பல அப்பாவிகளை அரசியல் ரீதியாகவே தமிழக அரசியலில் பழிவாங்கவே பொடா பயன்படுத்தப்பட்டது என்று உங்களுக்கும் தெரிந்தே இருக்கும்.

Arun Kumar சொன்னது…

//நண்பர் அருண்குமார்,

உங்கள் உறவினரின் இழப்பு பெரும் சோகம். உங்கள் சோகத்தில் எனக்கும் பங்கு உண்டு. :(

தீவிரவாதம் சட்டங்களுக்கு கட்டுப்பட்டதல்ல.

பல அப்பாவிகளை அரசியல் ரீதியாகவே தமிழக அரசியலில் பழிவாங்கவே பொடா பயன்படுத்தப்பட்டது என்று உங்களுக்கும் தெரிந்தே இருக்கும்.//

யாருங்க அப்பாவி?
வைகோ? நெடுமாறன் இவங்க எல்லாம் அப்பாவியா?

இவங்க எல்லாம் வருங்கால தமிழ்நாட்டு சமுதாயம் முன்னேறும் படியாக ஏதாச்சும் ஏதாவது உருப்படியா செய்து இருக்காங்களா?? உருப்படியாக என்று நான் சொல்வது பொருளாதரீதியாக அறிவுரீதியான முன்னேற்றம்


தமிழ் நாட்டு அரசியல் ஒரு சாக்கடை
ஜெயலலிதா கருணாநிதி இருவரும் இருக்கும் வரை ஒன்றும் நடக்க போவதில்லை

என் ஆற்றாமை எல்லாம் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருபவர்களை பொடாவில் போடும் போது ஆதரவு தருபவர்கள் ஏன் நாட்டுக்காக உண்மையாகவே போராடும் வீரர்களுக்கு மரியாதை வேண்டாம் atleast ஏன் ஒரு அனுதாபம் கூட தெரிவிபதில்லை?

அதிரைக்காரன் சொன்னது…

பொடாச் சட்டம் இருந்தபோதுதான் பா.ஜ.க. (மோடி,அத்வானி etc), வி.இ.ப. (தொக்காடியா+) போன்ற தீவிர(இந்துத்துவா)வாதிகளும் ஆட்டம் போட்டார்கள்.

பொடா சட்டம் மீண்டும் தேவை! அட்லீஸ்ட் வேதாந்தி மாதிரியான பயங்கரவாதிகளையாச்சும் புடிச்சு களி திங்க வெக்க! :-)))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்