பின்பற்றுபவர்கள்
31 ஆகஸ்ட், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
34 கருத்துகள்:
நடுத்துண்டு தான் வேணும்னு சொல்ல மாட்டேன் ... !!! எதுனாலும் ஓக்கே !!!
ஐயோ... எஸ்கேப்ப்ப்...
நான் அசைவம் ஆனாலும் எஸ்கேப் :-))
:)
இன்னாபா எல்லாம் தலைதெறிக்க ஓடுறிங்க.
இக்பால் தான் தைரியசாலி.
செய்யும் தொழிலே தெய்வம் என்கிற மாதிரி.
உண்ணும் பொருளே அமுதம்.
:)
இது என்ன மூட நம்பிக்கைன்னு யாராவது பதிவு போட்ட போறாங்க ஜாக்கிரதை
எதுக்கு எஸ்கேப்?
அதான் சீர்வரிசையில் பழத்தட்டு இருக்கே!
கோவி ,
படங்கள் அருமை, ஆனால் சீன உணவுகள் சுவையாக இருப்பதில்லை எனக்கு, நம்ம ஊரு மசாலா அரைச்சுவிட்டு இருந்தா சுவைக்கலாம் :-))
யாரோ ஒருத்தர் ஒரே தட்டில வாங்கன்னு சவால் விடுவார் அவருக்கு என்ன துண்டு வேண்டும்னு சொல்வாரா? :-))
கொன்ற பாவம் தின்றால் போச்சு!
இன்று வெள்ளிக்கிழமை, ஆனால் விலாப்பக்கம் , தொடைப் பக்கம் கொஞ்சமெடுத்து வைத்தால் நாளை சாப்பிடுவேன். நல்ல எண்ணை முழுக்குக்குப் பின்!
வணக்கம் சகோ,
நடுத் துண்டு எனக்கே எனக்கா!!!!!!!!!!
அருமையான படம்.ஆசையை தூண்டுகிறது.இன்று சைனீஸ் உணவகம் செல்ல வேண்டியதுதான்!!!
நன்றி
எந்த பகுதி துண்டு வெட்டி தந்தாலும் நன்றி சொல்வேன். அசைவமாக இருந்து பன்றி சாப்பிடாதோர் தங்கள் சுவையை தொலைத்தவர்கள்.
பன்றி கொஞ்சம் சின்னனாக இருக்கிறது. பரவாயில்லை.
//யாரோ ஒருத்தர் ஒரே தட்டில வாங்கன்னு சவால் விடுவார் அவருக்கு என்ன துண்டு வேண்டும்னு சொல்வாரா? :-))//
பன்றிக்கறி ஏன் ஆகாது என்பதற்கு அ(றி)வியல் விளக்கம் கொடுத்துட்டு எஸ்கே......ப் ஆகிடுவாய்ங்க
அழகா இருக்கு(பன்னிக்குட்டியா இருக்கும்போது அழகாதானே இருக்கும்?)
//குட்டிபிசாசு சொன்னது…
பன்றி கொஞ்சம் சின்னனாக இருக்கிறது. பரவாயில்லை.//
இது அவ்வ்ளவு குட்டி இல்லை, கொஞ்சம் பெரிசு தான், பக்கத்தில் ஒப்பிட அண்ணாசி பழம் இருக்கு பாருங்க
பன்றி கறியில் பாரோடு சேர்த்த இறைச்சி அருமையாக இருக்கும் எலும்புக்கு பக்கத்தில் இருக்கும் இறைச்சி என்பதால் அதிக ருசி அந்த பாகத்தை எனது மேசைப்பக்கம் தள்ளுங்கள்.. ;-))
இங்கு போத்துக்கல் நாட்டுக்காரர்கள் பன்றியின் எந்த பாகத்தையும் விடுவதில்லை.. அவர்களோடு சேர்ந்து அந்த பழக்கம் எனக்கும் தொற்றிக்கொண்டது..!!!
தலையைத் தவிர வேறு எதையும் விடமாட்டேன்.சீனர்கள் என்னிடம் போட்டிக்கு வரமுடியாது.
பொதுவாக பகலில் நான் உணவு எதையும் உண்பதில்லை.
ஆனால்...இந்த நிகழ்ச்சியில் பாதிப் பன்னி எனக்குத்தான்.
சீனர்களுக்கு ஏழாம் திங்கள் வழிபாடு...என்னைப் பொறுத்தமட்டும் இது பேய் ஓட்டும் திருவிழா..
இந்த மாதம் முழுவதும் வீதிகளில் பேய்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
என் நண்பனின்(சீனர்) மனைவிக்கு சாதாரண நாட்களிலே பேய்கள் கண்களுக்குத் தெரியும்.
இந்த மாதத்தில் அங்கே போகாதே...இங்கே பாக்காதே என்று கூறுவார்.
பேய்களுக்கு உப்புமா கிண்டிக்கொடுக்கும் என்னையே பயப்பட வைப்பார்.
ஆஹா அருமை.. இதென்ன டிவிட்டர், fb ஸ்டேட்டஸ் போல இரு வரிகள், இரு படங்களுடன் முடித்து விட்டீர்??
***
சிங்கையில் வெஜிடேரியன்ஸ் மைனாரிட்டியா? எவ்ளோ சதவீதம்? எவ்ளோ வெஜ் வெரைட்டீஸ் கிடைக்கும்?
சிங்கையில் சைவ உணவுக்கு பஞ்சமில்லை, இந்திய மற்றும் சீன சைவ உணவு வகைகளை கட்டுகட்டலாம்
//அசைவமாக இருந்து பன்றி சாப்பிடாதோர் தங்கள் சுவையை தொலைத்தவர்கள்//
சீனாவில் மருந்து மூலம் பன்றிகளை இளைக்க செய்து அவற்றின் கறியை விற்றது தொடர்பாக 100க்கும் அதிகமானோருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது
சீனர்கள் பன்றி கறியை விரும்பி உண்கின்றனர். இங்கு பல பண்ணைகளில் இறைச்சிக்காக பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. ஆனால் பன்றியில் அதிக கொழுப்பு இருப்பதால் விற்பனை குறைந்தது.
இதையடுத்து கொழுப்புகளை கறைய வைக்கும் மருந்துகளை பன்றிகளுக்கு பண்ணை உரிமையாளர்கள் கொடுத்து வந்தனர். கிளன்பூடரோல் என்ற மருந்து சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தை பன்றிகளின் உடலில் செலுத்தி வளர்த்துள்ளனர். இந்த மருந்து மனிதர்களின் உடல்நலத்தை உடனடியாக பாதிக்கக் கூடியது.
இந்த மருந்து செலுத்தப்பட்ட பன்றிகள் கொழுக்காமல், இளைத்தே காணப்படும். அதன் இறைச்சியிலும் கொழுப்பு சத்து அவ்வளவாக இருக்காது. அந்த கறி அதிக விலையும் போகும்.
பன்றி கறியை விற்பனைக்கு முன் அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் தருவார்கள். ஆனால் தடை செய்யப்பட்ட மருந்து பன்றி கறியில் கலந்திருப்பது தெரிந்திருந்தும் அதிகாரிகள் பலர் சான்று கொடுத்துள்ளனர்.
இந்த மோசடியை சீனாவின் ஹெனான் மாகாண அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட பண்ணை உரிமையாளர்கள், 77 அதிகாரிகள் உள்பட 100க்கும் அதிகமானோருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான லியூ ஜியாங் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி ,றைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் , இது போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் - குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி
பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் - மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (Round Worm) ஊசிப்புழு (Pin Worm) கொக்கிப்புழு (Hook Worm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.
நல்ல வேளைப்பா நான் தப்பிச்சேன். :-)
சுவனப்பிரியன்,
உங்கள் 1400 ஆண்டு பழமையான அ(றி)வியல் விளக்கம் புல்லரிக்கிறது, நல்ல வேளை ஏமாற்றாமல் வந்து பின்னூட்டினீர்கள், இல்லை என்றால் பதிவில் பலன் பெற்றிருக்காது.
நன்றி
பன்னிக்கறி சாப்பிடுதல், ஆவியை வணங்குதல் நரகத்தில் இந்த பன்னியை வறுத்தது போலவே இவர்களும் வறுக்கப்படுவார்கள் என்கிற அறியாமையில் உழல்கிறவர்கள், இறைவன் இவர்களுக்கு நேர்வழி காட்டி நரகத் தீயில் இருந்து தப்பிக்க வைத்து......அப்புறந்தான் தெரியுமே.
சு.பி! ஆமா மாட்டுக்கறியில Taenia saginatum என்ற புழு இருக்கிறதாமே? ஆட்டுக்கறியில் Fasciola hepaticum என்ற புழு இருக்கிறதாமே? அதை எல்லாம் வெளிய எடுத்துப் போட்டுவிட்டு நீங்கள் சாப்பிடுவதைப் போலவே அவர்களும் பன்றிக்கறியில் உள்ள புழுக்களைச் சுத்தம் செய்து சாப்பிடுவார்கள்.
அறிவியலில் இருந்து தமக்கு சார்பானவற்றை மட்டுமே எடுத்து அடடே நம்மாளு இதை அன்னைக்கே சொல்லியிருக்காங்க என்று சுயதிருப்தி கொள்கிறீர்கள். மற்றவற்றை விட்டு விடுகிறீர்கள். உங்களுக்கான சுயதிருப்தியுடன் நிறுத்தி விட்டால் பரவாயில்லை. ஆனால் இதுதான் உண்மை என்று வாதிடும் போது எதிர்த்துக் கருத்திட வேண்டியதாகி விடுகிறது.
சு.பி.சுவாமிகள் ,
எங்கே தப்பித்தீர், மேட் கவ் சிண்ரோம் உள்ள மாட்டினை சாப்பிட்டு மன்நோய்தான் தாக்கியுள்ளது :-))
வயதான ,நோய் வாய்பட்ட , ஏன் இறக்கும் தருவாயில் உள்ல மாட்டினை எல்லாம் இறைச்சியாக உண்பதால் பல நோய்களும் வருகின்றன.
மேலும் மாட்டின் கொழுப்பினை எடுத்து பிரியாணியில் போட்டு சமைப்பதாலும் ,சமோசா, இன்ன பிற வறுப்பதாலௌம் ரத்த அழுத்தம் கேன்சர் எல்லாம் வருதாம்.
மாடு வெட்டிய பின் அதன் கொழுப்பினை என்ன செய்கிறார்கள் என அறிய அல்லாசாமி கடவாது :-))
நீங்கள் சொல்லியிருப்பது, Taenia solium என்ற புழு. அதனுடைய சொந்தக்காரப் புழு தான் மாட்டுக்கறியில் இருக்கக் கூடியது.
//மேலும் மாட்டின் கொழுப்பினை எடுத்து பிரியாணியில் போட்டு சமைப்பதாலும் ,சமோசா, இன்ன பிற வறுப்பதாலௌம் ரத்த அழுத்தம் கேன்சர் எல்லாம் வருதாம்.//
நான் மாட்டுக் கறி சாப்பிடுவதில்லை. ஆனால் ஆட்டுக் கறி ஒரு பிடி பிடிப்பேன்.:-)
நான் ஐயர்...ர்..ர்..ர். இதை நம்ம நாசர் அவ்வை ஷன்முகியில் சொல்கிறா மாதிரி சொல்கிறேன்!
எந்த சிகப்பு கறி சாப்பஈட்டலும் Colon Cancer வருது அப்படின்றான்.
மரக்கறி ,பண்ணி கறி,நாய் கறி ,கொரங்கு கறி இப்படி அல்லா கறியிலும் புழு பூச்சி இருக்கு சரியா சமச்சி சாப்பிடலன மூளைல புளுவசி சாவு நிச்சயம் .
பொதுவாக பன்றி இறைச்சி உண்ணும் மேலை நாட்டவர்கள் இப்புழுத் தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்ள அல்பென்டசோல் என்ற மருந்து வகைகளை உட்கொள்கிறார்கள் என்று எங்கேயோ படித்ததாக நினைவு. நான் ஆடு,மீன் மட்டுமே உண்கிறேன் அதிலும் அதன் உதிரிப்பாகங்களை உண்பது இல்லை,எலும்பைக் கூட கடிப்பதில்லை.ஹி..ஹி...
இனியவன்...
சவூதியிலே மந்தி சோருல முழுசா வேவிச்ச ஆட்டை வச்ச மாதிரியிலே வச்சிருக்கான். startன்னு சொன்னா நடுத்துண்டுக்கு அடிசுகுவனுன்களோ.
பண்ணிபய என்ன பொறுமையா படுத்திருக்கான் பாரு.பாக்கவே பயமா இருக்கு.
சு.பி.சுவாமிகள்,
//நான் மாட்டுக் கறி சாப்பிடுவதில்லை. ஆனால் ஆட்டுக் கறி ஒரு பிடி பிடிப்பேன்.:-)//
அப்படியே ஆட்டுக்கறி எல்லாம் விட்டுவிட்டு மரக்கறிக்கு மாறினீர்கள் என்றால் குஜாராத்துக்கு போனால் மோடிக்கு பக்கத்தில் ஒரு இருக்கை கிடைக்கலாம்,
வர வர இந்துத்வத்தின் வழி நடக்க ஆரம்பிச்சிட்டிங்க, அவங்க தன் பசுவதை கூடாதுன்னு சொல்வாங்க,மாட்டுக்கறி உண்ணவில்லை என்றால் "ஹராம்" என ஜிட்டிசன் சொல்லிடப்போறார் :-))
ஹி..ஹி நான் கூட மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன் ,அப்போ நீங்களும் நம்ம கட்சி தான் அப்புறம் என்ன எங்களுக்கு மட்டும் சுவனம் கிடைக்காம போகும்னு சொல்லிக்கிட்டு :-))
எனக்கு கோவிக்கெல்லாம் சுவனத்தில் ஃபர்ஸ்ட் கிளாஸ் இடம் கொடுத்தாலும் கொடுப்பாங்க :-))
கருத்துரையிடுக