பின்பற்றுபவர்கள்

21 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம் - அண்மைய நிகழ்வுகள் !

சுதந்திர இந்தியாவின் அரசியல் அடிப்படை இந்தியாவின் எந்தப் பகுதி மக்களும் எங்கும் வசிக்கலாம், நிலங்களை வாங்கலாம் என்பதே.  சென்னையிலும் பெங்களூரிலும் மும்பையிலும் வெளி மாநிலத்தினர் காலூன்றி இருப்பதற்குக் காரணம் இந்த அடிப்படை சட்ட உரிமை தான், ஆனால் அஸ்ஸாம் மாநிலத்தவர் மீதான தாக்குதல் என்ற தகவல் பரவ தென் மாநிலங்களை விட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளி ஏறுவதாக தகவலும் படங்களையும் பார்த்த பிறகு அண்டிப் பிழைப்பவர்களுக்கு சம உரிமைகள் என்பவையெல்லாம் வெறும் ஏட்டளவில் என்றே தெரிகிறது.  மாநில அரசுகள் தக்க பாதுகாப்புத் தருவதாக இருந்தாலும் மக்கள் நம்புவதற்கு தயாராகவில்லை, குஜராத் உள்ளிட்ட சொந்த மாநிலத்திலேயே சிறுபான்மை உயிருக்கு  பற்றுறுதி இல்லாத பொழுது சிறுபான்மையாக வெளி மாநிலங்களில் பிழைப்பவர்களை இந்த மாநில அரசுகள் எவ்வாறு காக்கும் என்று கேள்வியாகத்தான் அஸ்ஸாமியர்கள் வெளி ஏறினார்கள், கூடவே தம் வீட்டுக்கு ஆபத்து நேரிடாலாம் என்று வம்படியாக அவர்களை வீட்டைவிட்டு வெளியேறவும் வீட்டு உரிமையாளர்கள் செய்திருக்கிறார்கள் என்கிற தகவலும் வெளியானது. தமிழ்நாட்டில் கடைவிரிக்காத வெளி மாநிலத்தவர்களா ? கூலி வேலைக்கு வருபவர்களை ஏன் அடித்து துறத்த வேண்டும் ? 

பெரும்பாலும் கலவரங்களிலும் தீவிரவாத செயல்களும் பொதுமக்களையும் சாதாரண குடிமகன்களை தாக்குவதிலுமே வீரம் இருப்பதாக அவற்றில் ஈடுபடுபவர்கள் செயல்படுகிறார்கள், இவர்களை தாக்குவதும் எளிது தவிர அரசுகள் கண்டிப்பதுடன் நிறுத்திவிடும், எதிர்காலத்தில் பொது மன்னிப்பு கேட்டுவிட்டால் சரியாகிப் போய்விடும் என்றே நம்புகிறார்கள், தாக்குதல் பேசப்பட வேண்டும் ஆனால் அதன் பாதிப்புகள் மறக்கப்படும் நிலையில் இருந்தால் எதிர்ப்புகளை சமாளித்துவிடலாம் என்பதாகத்தான் இத்தகைய தாக்குதல் நடந்தேறிவருகின்றன, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் கூட ராஜிவ் காந்திப் படுக்கொலையும் கோவை குண்டுவெடிப்பும் ஒன்றாகிவிடாது என்பதை ஒப்பு நோக்குக. கோவையில் குண்டு வெடித்தது என்பதை எத்தனை மாநிலங்கள் நினைவு வைத்திருக்கும் ?  சாதாரணப் பொதுமக்களை கொல்வது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்கிற எண்ணத்தின் நீட்சியை உணர்ந்திருப்பதால் தான் என்னவோ நாங்கள் பாதுகாக்கிறோம் என்று சொன்னாலும் அஸ்ஸாமியர்கள் நம்புவதாக இல்லை.

வதந்தி ... வதந்தி என்றாலும் வதந்தியை நம்பும் சூழலும் முகாந்திரங்களும் இருப்பதை நாம் நம்ப மறுத்தாலும் அவர்கள் அதை வெறும் வதந்தி என்று நம்பத் தயாராக இல்லை, உலகில் எங்கு இஸ்லாமியர்களுக்கு அநியாயம் நடந்தாலும் கொதிக்கும் இஸ்லாமியர்கள் இந்தியாவெங்கும் உண்டு என்பதையும் அதற்காக இஸ்லாமியர்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்கள் என்பதை இஸ்லாமிய சமூகம் மற்ற சமூகத்தினருக்கு எண்ணமாக ஆக்கிவிட்டப்படியால், வட கிழக்கு மாநிலத்தவர் மீதான தாக்குதல் என்பவை வதந்தியாக இருந்தாலும் அஸ்ஸாமில் நடந்த அண்மைய வன்முறைகளை ஒப்பிட்டு பார்த்து அஸ்ஸாமியர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடப்பது உறுதி என்றே நம்பத் துவங்கி தான் வெளியேறி உள்ளனர் என்றே நினைக்கிறேன்,  வேலை செய்யும் சூழல், பாதுக்காப்பு ஆகியவற்றின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் அஸ்ஸாமில் இருக்கும் அவர்களது உறவினர்கள் நம்பாத போது அவர்கள் வெளி ஏறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

தருமி ஐயாவின் இந்தப் பதிவைப் படித்த பிறகு தான், அங்காங்கே அமைப்பு சார்ந்து இயங்கும் ஒரு சிலரின் தூண்டுதலால் ஒட்டு மொத்த இந்திய இஸ்லாமிய சமூகம் மற்றவர்களின் பார்வையில் எப்படி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது, தேவையற்ற உணர்ச்சி கொந்தளிப்புகளால் புற சமூகத்தினருக்கும் அவர்களுக்குமான இடைவெளிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்பதை ஏன் நம்ப மறுக்கிறார்கள் என்பது விளங்கவில்லை. அஸ்ஸாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தியை இஸ்லாமியர்கள் தூண்டினார்களா ? பாகிஸ்தான் தூண்டியதா ? என்ற கேள்விகளை புறந்தள்ளிவிட்டு பார்த்தால் இத்தகைய தூண்டுதல் கண்டிப்பாக செயல்படும் என்ற நிலை இந்தியாவில் உருவாகி இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா ?

இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் எந்த பகுதியிலும் இஸ்லாமியர் பெயர்களைச் சொல்லி தூண்ட முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு யாரைக் குறைச் சொல்வது ? உதாரணத்திற்காக இணையத்தில் உலாவும் இந்த இரண்டு படங்களைப் பாருங்கள், இவற்றில் ஒன்று தான் உண்மையானதாக இருக்கும், மற்றது உருவாக்கப்பட்டது.

இதில் ஒன்றின் பொருள் "எங்கள் மதத்தை இழிவாகப் போசுபவர்களின் தலையை எடுப்போம்" , மற்றது கிராபிக்ஸ் செய்யப்பட்டு பல்வேறு இணையத் தளங்களில் இஸ்லாமியர்களை இழிவு படுத்தும் நோக்கதுடன் வெளி இடப்பட்டுள்ளது, இதன் பொருள் "எங்கள் மதம் ஆபத்தானது என்று சொல்லுபவர்களின் தலையை எடுப்போம்" என்பது. கிராபிக்ஸ் செய்தவர்களின் நோக்கம், "அமைதி மார்க்கம் என்று சொல்பவர்கள் தலை வெட்டுவது பற்றிப் பேசுகிறார்கள், எவ்வளவு முரண்பாடுடையதாக இருக்கிறது!" என்று காட்டுவதாகவும், அதாவது 'இவர்கள் தாங்கள் அமைதி மார்க்கம் என்று கூறிக் கொண்டாலும் இவர்களது செயல் தலையை வெட்டுவதே'என்பதாகும்.  கிராபிக்ஸில் மாற்றும் முன் இருந்த  "எங்கள் மதத்தை இழிவாகப் போசுபவர்களின் தலையை எடுப்போம்"  என்பது மட்டுமே உண்மையான பதாகை, மேலும் உணர்வு பூர்வமானவை, ஞாயமானவை என்றாலும் கூட  "தலைவெட்டுவது" குறித்த எச்சரிக்கை எவராலும் சகிக்க முடியாத ஒன்றே. இஸ்லாமியர்கள் மீதான பிறரின் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன, எப்படி பரிணமிக்கின்றன என்பதற்கு இந்த இரண்டு படங்கள் குறித்த பார்வையே புரிந்து கொள்ளக் கூடியதாகவும்.

எதற்கும் உணர்ச்சி வசப்படும் ஒருவனை உணர்ச்சி வசப்பட வைத்து தன்னிலை இழக்கச் செய்வது எளிது,  மிதமிஞ்சிய உணர்ச்சி வசப்படும் சமூகமாக இருக்கும் வரை, அவை அவர்களின் மீதான தூண்டுதல், வதந்திகள் பரப்புவர்களின் செயல்களுக்கான வாய்ப்பு என்றே பார்க்க முடிகிறது. விழித்துக் கொண்டால் ஒட்டுமொத்த மனித குலத்திற்கே நன்மை. இந்திய சமூக பெரும் இடைவெளி / இடைஞ்சல்களாக பிராமின் / நான்பிராமின் என்ற கோட்பாடுகள் வலுப்பெற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு வேட்டு வைத்தது போல் உலக அளவில் இஸ்லாமியர் / இஸ்லாமியர் அல்லோதோர் என்ற நிலை உருவாகி சமூகம் சீர்குழையும் ஆபத்துகளுக்கான முகாந்திரங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்து என்பதற்காகவும், கிறித்துவர் என்பதற்காகவும் உணர்ச்சிவசப்படுபவர்கள் மிகக் குறைவே, அதற்காக அவர்களை உணர்ச்சி அற்றவர்கள் என்று கூறிவிட முடியாது, மதத்தை வைத்து இஸ்லாமியர்களை தூண்டுவதும், உணர்ச்சி வசப்பட வைப்பதும் எளிது என்பதால் இந்த வதந்திகள் பரவுவதுடன் அவை நடைபெறக் கூடியவை என்கிற நம்பகத் தன்மை எட்டியுள்ளதன் விளைவை அஸ்ஸாமியர்கள் அலறிக் கொண்டு இரயில் ஏறியது உறுதிப்படுத்துகிறது.

நான் இங்கு இழிவாகவோ, இட்டுகட்டியோ எதையும் எழுதவில்லை,  வெளியே சொல்லத் தயங்குபவர்களின் கருத்துகள் எத்தகையவை என்று அவர்களும் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் என்ற அளவில் தான் இதை எழுதுகிறேன், எந்த மதமும் தனிமனிதனுக்கு சோறுபோடாது, உடைமைக்கு உத்திரவாதம் அளிக்காது என்கிற நம்பிக்கைகள் எனக்கு உண்டு எனவே எதையும் தாழ்வாக, இழிவாக, உயர்வாக எழுதும் தேவை எனக்கு இல்லை.

17 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

கோவி,

வழக்கம்போல் உங்கள் பாணியில் தெளிவானக்கட்டுரை,ஆனால் இதன் உண்மையை உணராமல் உடனே ஒரு கும்பல் ஓடி வரும் ;-))

//மதத்தை வைத்து இஸ்லாமியர்களை தூண்டுவதும், உணர்ச்சி வசப்பட வைப்பதும் எளிது //

மற்ற எந்தமதமும் சொல்லாத "ஜிகாத்' புனிதப்போரை இஸ்லாம் முன்னிறுத்துவதே, மதத்திற்காக உயிரை விட்டால் சொர்க்கம் கிடைக்கும், மதத்தினைக்காக்க கொல்லலாம் என சொல்லும் "அன்பு மார்க்கம்" இஸ்லாம் மட்டுமே :-))

மற்ற மத்திலும் வனுமுறை இல்லையா எனலாம், இருக்கு ஆனால் மதப்புனித நூலில் அப்படி சொல்லி இருக்காது, இடையில் மனிதர்கள் தான் தூண்ட வேண்டும்,ஆனால் இங்கோ வேதநூலிலேயே வன்முறை செய்யலாம் என அனுமதி இருக்கு,ஆனால் சொல்வது அன்பு ,அமைதி , செய்வது புனிதக்கொலை, இதனால் தான் வாள்முனையில் வளர்ந்த மதம் என பேர் வாங்கியது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வழக்கம்போல் உங்கள் பாணியில் தெளிவானக்கட்டுரை,ஆனால் இதன் உண்மையை உணராமல் உடனே ஒரு கும்பல் ஓடி வரும் ;-))//

பூனை இரவில் கண்ணை மூடி உலகம் இருட்டு என்று சொன்னால் நம்பலாம். பகலில் ? வழக்கம் போல் படிக்காமலேயே மைனஸ் ஓட்டு வழங்கியவர்களுக்குத் தான் எல்லாம் தெரியும் போல :)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது சார்... நன்றி...

பொன் மாலை பொழுது சொன்னது…

குறிப்பிட்ட தேதிகளில் எனக்கு மும்பை, பெங்களூரு, சென்னை என்று பயணிக்க நேர்ந்ததால் அந்த நாட்களை நான் அங்கு இருந்து நேரில் கண்டது. முதன் முதலில் இந்த வெளியேறும் பிரச்னை ஆரம்பித்து பெங்களூரில்தான். அதன் பின்னர் தான் மும்பை மற்றும் சென்னை போன்ற இடங்களிலும் இது நிகழ ஆரம்பித்து.

உண்மையில் அஸ்ஸாம் மற்றும் வேறு எந்த மாநில மக்களுக்கும் மேற்கூறிய இடங்களில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதே உண்மை. வெறும் "வதந்தியால்" மட்டுமே அந்த குறிப்பிட பகுதி மக்கள் மட்டுமே வெளியேற முற்பட்டனர் அன்றி அவர்களுக்கு வேறு காரணங்களும் இருந்தன. சொந்த மாநிலத்தில் அவர்களின் தாய் தந்தை, உறவினர்களின் "இன்றைய" நிலையை மனதில் கொண்டும் தான் அவர்கள் வெளியேறினர் அன்றி காரணங்கள் இல்லை. வெளியேறும் அவர்கள் "மீண்டும் வருவோம்" என்று உறுதியாக சொல்லுகின்றனர்.

Sketch Sahul சொன்னது…

நண்பர் வவ்வாலுகாக

http://www.youtube.com/watch?v=Ykq5eRyTYXE

suvanappiriyan சொன்னது…

//மதத்தை வைத்து இஸ்லாமியர்களை தூண்டுவதும், உணர்ச்சி வசப்பட வைப்பதும் எளிது என்பதால் இந்த வதந்திகள் பரவுவதுடன் அவை நடைபெறக் கூடியவை என்கிற நம்பகத் தன்மை எட்டியுள்ளதன் விளைவை அஸ்ஸாமியர்கள் அலறிக் கொண்டு இரயில் ஏறியது உறுதிப்படுத்துகிறது.//

இது ஓரளவு உண்மை. இப்படி எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு பிரச்னைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று பல மக்களிடம் பிரசாரம் செய்ததன் எதிரொலியாக தமிழகத்தில் அத்தகைய நிலையை பல ஆண்டுகளாக காண முடியாது. முறையான அமைப்பை ஏற்படுத்தி நியாயமான கோரிக்கைகளுக்கு அரசிடம் அனுமதி வாங்கி எவ்வாறு போராட வேண்டும் என்று பயிற்சி அளித்தோம். அதன் பலனாக இன்று பெண்களும் ரோட்டில் இறங்கி அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதை பார்க்கலாம்.

பங்களியர்களை பொறுத்த வரையில் இயற்கையிலேயே உடன் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இஸ்லாமிய சட்ட திட்டஙகளை சரி வர பின்பற்றுவதில் அக்கறை இல்லாதவர்கள். எந்த வகையிலாவது பணம் சம்பாரிப்போம் என்ற மன நிலை பலரிடம் இருக்கும். பணத்துக்காக ஒரு நாளில் 20 மணி நேரம் வேலை செய்யச் சொன்னாலும் செய்ய தயாராக இருப்பர். இது உள்ளூரில் சொகுசாக கூலி வேலை பார்த்து வருபவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணுகிறது. அது பின்னர் கலவரமாகவும் வெடிக்கிறது.

Sketch Sahul சொன்னது…http://www.youtube.com/watch?v=Fi8BaPSp-z8&feature=relmfu

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

வதந்தி ... வதந்தி என்றாலும் வதந்தியை நம்பும் சூழலும் முகாந்திரங்களும் இருப்பதை நாம் நம்ப மறுத்தாலும் அவர்கள் அதை வெறும் வதந்தி என்று நம்பத் தயாராக இல்லை, உலகில் எங்கு இஸ்லாமியர்களுக்கு அநியாயம் நடந்தாலும் கொதிக்கும் இஸ்லாமியர்கள் இந்தியாவெங்கும் உண்டு என்பதையும் அதற்காக இஸ்லாமியர்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்கள் என்பதை இஸ்லாமிய சமூகம் மற்ற சமூகத்தினருக்கு எண்ணமாக ஆக்கிவிட்டப்படியால், வட கிழக்கு மாநிலத்தவர் மீதான தாக்குதல் என்பவை வதந்தியாக இருந்தாலும் அஸ்ஸாமில் நடந்த அண்மைய வன்முறைகளை ஒப்பிட்டு பார்த்து அஸ்ஸாமியர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடப்பது உறுதி என்றே நம்பத் துவங்கி தான் வெளியேறி உள்ளனர் என்றே நினைக்கிறேன்.//

உண்மை இதுதான்! வதந்தியோ, தந்தியோ ஆராய்வு செய்யும் மனநிலை இராது.நான் இலங்கையில் 83 கலவரத்தில் சிங்களப்பகுதியில் சிக்குண்டவன் அதனால் , கிடைக்கும் செய்தியை ஆயும் மனநிலை வராது.
இது வாழ்வா? சாவா? எனும் உயிர்ப் போராட்டம் , தப்பி ஓடிவிடுவோம் என்ற எண்ணமே மேலோங்கும், அதனால் தமக்குக் கிடைத்த செய்தியைக் கொண்டு தப்பிச் செல்லமுற்பட்டோர் , பயந்தாங்கொள்ளைகள் என யார் பரிகாசம் செய்தாலும் அவர்கள் செய்ததில் தவறேயில்லை.
ஊரோடில் ஒத்தோடு.....பெரியவங்க சொல்லியுள்ளார்கள்!!!!
இவர்கள் அன்றாடம் காச்சிகள் இவர்களை எந்த அரசும் காப்பாற்றாது, முடிந்தபின் லட்சம் ரூபா கொடுக்கும், அதுவும் கைக்கு வருமுன் கரைச்சே அதிகாரிகள் கொடுப்பார்கள். இது தேவையா?

உதயம் சொன்னது…

பொதுவாகவே ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை மத ரீதியாக தூண்டுவதும் தூண்டப்படுவதும் எளிது. ஏனெனில் மத ரீதியாக உணர்ச்சிவசப்பட்டவர்கள். அதிலும் குறிப்பாக இந்திய பாகிஸ்தான் வங்கதேசத்தை சேர்ந்த மக்கள்.

//"இந்து என்பதற்காகவும் கிறித்துவர் என்பதற்காகவும் உணர்ச்சிவசப்படுபவர்கள் மிகக்குறைவே"//
தவறான வாதம். இந்துக்களின் மத உணர்வுகளைத் தூண்டி தான் இந்தியாவில் மதவெறி அரசியலே நடக்கிறது.

//மதத்தை வைத்து இஸ்லாமியர்களை தூண்டுவதும், உணர்ச்சி வசப்பட வைப்பதும் எளிது என்பதால் இந்த வதந்திகள் பரவுவதுடன் அவை நடைபெறக் கூடியவை என்கிற நம்பகத் தன்மை எட்டியுள்ளதன் விளைவை அஸ்ஸாமியர்கள் அலறிக் கொண்டு இரயில் ஏறியது உறுதிப்படுத்துகிறது.//

அசாமியர்கள் கும்பலாக வெளியேறுவதே அந்தந்த மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களுக்கு பயந்து தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறீர்கள். இங்கு முஸ்லிம்களே அச்சமுற்ற சமூகமாக முடங்கி தான் வாழ வேண்டியுள்ளது. ஏனெனில் இந்துத்துவ பயங்கரவாதம் அந்தளவு மிரட்டி வருகிறது. போகிற போக்கில் ஒரு கலவரத்தை நடத்துவதன் மூலம் முஸ்லிம்களை கொத்தாக கொன்றொழிக்கவும் சொத்துக்களை அழிக்கவும் அபகரிக்கவும் அதன் பின் எந்த ஒரு வழக்கும் இன்றி சுதந்திரமாக திரியவும் வழி செய்வது இந்து மக்களின் மத உணர்வுகளை தூண்டி தான் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். ஆகவே மத உணர்வுக்கு ஆட்படுபவர்களில் முஸ்லிம்களும் இந்துக்களும் இந்தியாவை பொறுத்தவரை சமமானவர்களே.

//அங்காங்கே அமைப்பு சார்ந்து இயங்கும் ஒரு சிலரின் தூண்டுதலால் ஒட்டு மொத்த இந்திய இஸ்லாமிய சமூகம் மற்றவர்களின் பார்வையில் எப்படி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது,//

இந்திய முஸ்லிம்கள் இயங்கங்கள் கட்டுவது கண்ணை உறுத்துவது மாதிரி எழுதி இருக்கிறீகள். இருக்கிற அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒன்றில் இருந்து விட்டுப் போ என்கிறீர்களா? அப்படி தானே இருந்தார்கள்.. "இந்துத்துவா" அரசியல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தானே, தங்கள் பாதுகாப்பை கருதி ஒன்றிணைய துவங்கியிருக்கிறார்கள். அதற்குள்ளே உறுத்தலா?

அடுத்து.. வதந்தி. பொதுவாக எல்லோரையும் பாதிப்பது போல் முஸ்லிம்களையும் தான் பாதிக்கிறது. சமீபத்தில் கூட ..

(ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் நாட்டு சுதந்திர தினமாகும். இந்தநிலையில் ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சிலர் கடந்த 14ம்தேதி பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று, அந்நாட்டு கொடியை ஏற்றி கொண்டாடியதாக வதந்தி இ-மெயில் பரவியது. இந்த செய்தியில் சிலர் குழுவாக நின்று பாகிஸ்தான் கொடியை ஏற்றுவது போன்ற படம் வெளியாகி இருந்தது.

அதன் அருகில் வெளியான செய்தியில், "ஆந்திராவை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் உள்ள முஸ்லீம் மக்கள் பாகிஸ்தானின் 65வது சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதி அளித்துள்ளது. இது போன்ற ஒரு வெட்கக்கேடான சம்பவத்திற்கு, உலகில் வேறெந்த நாட்டிலும் அனுமதி அளிக்கப்பட்டது இல்லை. வேறெந்த நாடும் சுதந்திர தினத்தை இப்படி கேவலப்படுத்தியது இல்லை.

பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்படும் காங்கிரஸ் கோழைகளால் இந்தியா ஆட்சி செய்யப்படுகிறது என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்? ஆந்திரா மாநில முதல்வர் என்.கிரண் குமார் ரெட்டி, இதற்கு சிறந்த மாதிரியை காட்டியுள்ளார். இந்தியாவிற்கு நல்லது நடக்க வேண்டும் விரும்பும் நபர் நீங்கள் என்றால், இந்த செய்தியை பரப்புங்கள்" என்று அந்த இ மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இ-மெயில் கிடைத்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர், இதை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த இ-மெயில் குறித்து விசாரித்தபோது, பாகிஸ்தான் நாட்டின் சிந்து பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போட்டோவை, ஹைதராபாத்தில் கொண்டாடியது போல உருமாற்றி இன்டர்நெட்டில் வெளியிட்டது தெரியவந்தது.

மேலும் ஹைதராபாத்தில் இது போன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை என்பது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த சிலர் தவறான தகவல்களை அனுப்பியது தெரியவந்தது.

இதையடுத்து இன்டர்நெட்டில் இது குறித்து செய்தி வெளியிட்ட 80க்கும் மேற்பட்ட இணையதளங்களில் இருந்து அந்த செய்தி நீக்கப்பட்டது. சமுதாய இணையதளங்களில் மேற்கொண்டு இந்த செய்தி பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.)

இது மட்டும் தடுக்கப்படவில்லை என்றால் "ஹைதராபாத்" நகரின் முஸ்லிம்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்.

//எதற்கும் உணர்ச்சி வசப்படும் ஒருவனை உணர்ச்சி வசப்பட வைத்து தன்னிலை இழக்கச் செய்வது எளிது, மிதமிஞ்சிய உணர்ச்சி வசப்படும் சமூகமாக இருக்கும் வரை, அவை அவர்களின் மீதான தூண்டுதல், வதந்திகள் பரப்புவர்களின் செயல்களுக்கான வாய்ப்பு என்றே பார்க்க முடிகிறது. விழித்துக் கொண்டால் ஒட்டுமொத்த மனித குலத்திற்கே நன்மை.//

இது முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல என்றே எடுத்துக்கொள்கிறேன்.

வேகநரி சொன்னது…

//வெளியே சொல்லத் தயங்குபவர்களின் கருத்துகள் எத்தகையவை என்று அவர்களும் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் என்ற அளவில் தான் இதை எழுதுகிறேன்//
வெளியே சொல்லத் தயங்குபவர்களில் இன்னொருவகையும் உண்டு நாங்க இஸ்லாமியர்களை சகட்டு மேனிக்கு புகழ்ந்து கொண்டிருப்போம் ஆனால் அவர்களுக்கு சொல்ல வேண்டியதை மற்றவர்கள் சொல்லி கொள்ளட்டும் என்பவர்கள்.தமிழ் புரச்சிகாரர்களை கேட்கவே தேவையில்லை. இஸ்லாமியபோபியா என்று திசைதிருப்பி மதவெறியை ஊக்குவிக்கிறார்கள்.

மதுரை சரவணன் சொன்னது…

// இந்திய சமூக பெரும் இடைவெளி / இடைஞ்சல்களாக பிராமின் / நான்பிராமின் என்ற கோட்பாடுகள் வலுப்பெற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு வேட்டு வைத்தது போல் உலக அளவில் இஸ்லாமியர் / இஸ்லாமியர் அல்லோதோர் என்ற நிலை உருவாகி சமூகம் சீர்குழையும் ஆபத்துகளுக்கான முகாந்திரங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.//

marukka mudiyaatha unmai.

கோவி.கண்ணன் சொன்னது…

//பொதுவாகவே ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை மத ரீதியாக தூண்டுவதும் தூண்டப்படுவதும் எளிது. ஏனெனில் மத ரீதியாக உணர்ச்சிவசப்பட்டவர்கள். அதிலும் குறிப்பாக இந்திய பாகிஸ்தான் வங்கதேசத்தை சேர்ந்த மக்கள்.//

ஆசியர்கள் / சீனர்கள் மீது ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடந்த பொழுது எந்த சீனரும் தெருவில் வந்து போராடவில்லை, அவர்களது எதிர்ப்புகளை தெரியவைத்தார்கள், அண்மையில் சீக்கியர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அமெரிக்கா அமெரிக்கர்களை பஞ்சாப் பக்கம் செல்லவேண்டாம் என்று எச்சரித்தது போலும் தெரியவில்லை, அதுவே அமெரிக்காவில் இந்திய முஸ்லிம்களின் மசூதியினுள் தொழுகையின் போதான தாக்குதல் என்றாகி இருந்தால் இந்தியா பக்கம் கொஞ்ச நாளைக்குச் செல்லாதீர்கள் என்று கண்டிப்பாக அமெரிக்கர்களை அமெரிக்க எச்சரித்திருக்கும்.

//இந்துக்களின் மத உணர்வுகளைத் தூண்டி தான் இந்தியாவில் மதவெறி அரசியலே நடக்கிறது.//

பாகி - பங்களாதேஷ் பிரிவிணையைக் காட்டி ஒட்டுமொத்த இந்துக்களையும் தூண்டி இருக்க முடியும். அதற்கான முயற்சிகளாகத்தான் காந்தியும் கொல்லப்பட்டார், ஆனால் நடந்ததா ? மனிதர்களைவிட மதம் பெரிதல்ல என்று நினைக்கும் எண்ணமும் எல்லாக் கடவுளும் ஒன்றே என்று நினைக்கும் பண்பு பெருவாரியான இந்துக்களுக்கு இருக்கிறது என்பதால் தான் பிஜேபி என்ன முயன்றும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவோ, புதிதாக ஏற்படுத்திக் கொள்ளவோ இயலவில்லை.

//அசாமியர்கள் கும்பலாக வெளியேறுவதே அந்தந்த மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களுக்கு பயந்து தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறீர்கள். இங்கு முஸ்லிம்களே அச்சமுற்ற சமூகமாக முடங்கி தான் வாழ வேண்டியுள்ளது. ஏனெனில் இந்துத்துவ பயங்கரவாதம் அந்தளவு மிரட்டி வருகிறது. போகிற போக்கில் ஒரு கலவரத்தை நடத்துவதன் மூலம் முஸ்லிம்களை கொத்தாக கொன்றொழிக்கவும் சொத்துக்களை அழிக்கவும் அபகரிக்கவும் அதன் பின் எந்த ஒரு வழக்கும் இன்றி சுதந்திரமாக திரியவும் வழி செய்வது இந்து மக்களின் மத உணர்வுகளை தூண்டி தான் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். ஆகவே மத உணர்வுக்கு ஆட்படுபவர்களில் முஸ்லிம்களும் இந்துக்களும் இந்தியாவை பொறுத்தவரை சமமானவர்களே.//

நீங்கள் சொல்லும் நிலை இருந்திருந்தால் இந்தியாவில் இந்துக்கள் தவிர்த்து யாரும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும், துணை ஜனாதிபதி கூட இஸ்லாமிய சமூகத்தில் இருந்து வந்தவராகத்தானே உள்ளார், பின்னர் ஏன் அச்சுறுத்தல் இருப்பதாக சொல்கிறீர்கள், பாகிஸ்தானில் / பங்களாதேஷில் வசிக்கும் இந்துக்களுக்கு இருக்கும் அச்சம் என்ற அளவுக்கு இந்திய முஸ்லிம்களுக்கு அச்சமில்லை என்றே தான் சொல்லுகிறார்கள்,

//இந்திய முஸ்லிம்கள் இயங்கங்கள் கட்டுவது கண்ணை உறுத்துவது மாதிரி எழுதி இருக்கிறீகள். இருக்கிற அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒன்றில் இருந்து விட்டுப் போ என்கிறீர்களா? அப்படி தானே இருந்தார்கள்.. "இந்துத்துவா" அரசியல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தானே, தங்கள் பாதுகாப்பை கருதி ஒன்றிணைய துவங்கியிருக்கிறார்கள். அதற்குள்ளே உறுத்தலா?//

அமைப்பு சார்ந்த இயக்கங்கள் இன்றியமையாத ஒன்று தான், ஆனால் அமைப்பின் தலைமைகள் வெறும் அரசியல் லாப நோக்கில் உணர்ச்சித் தூண்டல்களைச் செய்வதைத் தான் குறிப்பிடுகிறேன், ஒரு தமிழ் மீணவன் சிங்களனிடம் அடிபடும் போது இந்து / கிறித்துவ மீனவனை அடித்துவிட்டான் வாருங்கள் போராடுவோம் என்று யாரும் களத்தில் இறங்குகிறார்களா ?

(ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் நாட்டு சுதந்திர தினமாகும். இந்தநிலையில் ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சிலர் கடந்த 14ம்தேதி பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று, அந்நாட்டு கொடியை ஏற்றி கொண்டாடியதாக வதந்தி இ-மெயில் பரவியது. இந்த செய்தியில் சிலர் குழுவாக நின்று பாகிஸ்தான் கொடியை ஏற்றுவது போன்ற படம் வெளியாகி இருந்தது.

//அதன் அருகில் வெளியான செய்தியில், "ஆந்திராவை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் உள்ள முஸ்லீம் மக்கள் பாகிஸ்தானின் 65வது சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதி அளித்துள்ளது. இது போன்ற ஒரு வெட்கக்கேடான சம்பவத்திற்கு, உலகில் வேறெந்த நாட்டிலும் அனுமதி அளிக்கப்பட்டது இல்லை. வேறெந்த நாடும் சுதந்திர தினத்தை இப்படி கேவலப்படுத்தியது இல்லை.//

உலகெங்கிலும் பிற நாடுகளில் வசிப்பவர்கள் அவர்களின் சொந்த நாட்டின் சுதந்திர தினத்தில் தூதரகங்களுக்குச் சென்று கொடி ஏற்றி தங்கள் நாட்டை நினைவு கூறுவது வாடிக்கையான ஒன்று, ஆனால் பிற நாட்டின் பொது இடத்தில் சொந்த நாட்டின் கொடி ஏற்றுவது கண்டிக்கத்தக்கது.

//இது மட்டும் தடுக்கப்படவில்லை என்றால் "ஹைதராபாத்" நகரின் முஸ்லிம்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். //

1992 பாபர் மசூதி இடிப்பின் போது ஹைதாராபாத்தில் தான் இருந்தேன், நீங்கள் நினைப்பது போல் மிகைப்பட்ட சம்பவங்களுக்கு வாய்பிருந்தும் எதுவும் நடக்கவில்லை

காரிகன் சொன்னது…

நீங்கள் யாரை திருப்பதி படுத்த இந்த பதிவை எழுதினீர்கள் என்று இதுவரை தெரியவில்லை. வடகிழக்கு அடிமட்ட மக்கள் தங்கள் உயிர் தப்பினால் போதும் என்று விலங்குகள் போல ஓடி கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த அளவுக்கு ஓட வாய்த்த கும்பலை பற்றி வசை பாடாமல் கிராபிக்ஸ் செய்து இஸ்லாமிய வெறியை சில ஊடங்கள் வெளியிடதாலையே இப்படி நிகழ்ந்தது என்று நீங்கள் சொல்வது உண்மைக்கு புறம்பானது. அந்த கிராபிக்ஸ் வேலையை செய்ததே சில தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகள்தான் என்று எல்லோருக்குமே தெரியும். உடனே இது ஒரு அமெரிக்க சதி என்று வழக்கம் போல பல்லவி பாடி எங்கள் மதத்தில் மனித நேயம் பற்றி அல்லா இப்படி சொல்லி இருக்கிறான் என்று பின்னூட்டம் எழுத ஒரு கூட்டமே வரும்.மியான்மார் போன்று இந்தியாவுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத நாடுகளில் முஸ்லிம்களை அடித்தால் கூட இங்கே கூச்சலிடும் ஒரு புதிய பாணியை இவர்கள் செய்வது ஒரு மிக பெரிய ஆபத்தான முன்னூதாரணம்.

Darren சொன்னது…

//உலக அளவில் இஸ்லாமியர் / இஸ்லாமியர் அல்லோதோர் என்ற நிலை உருவாகி சமூகம் சீர்குழையும் ஆபத்துகளுக்கான முகாந்திரங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன//
உருவாகி பல காலமாகிவிட்டது. மத அடையாளத்தை பெருமையாக வெளிக்காட்டுவதாக நினைத்து, மழிக்காத தாடியுடனும்,நீண்ட தொள தொள கால் சட்டையுடன் நான் வாழும் நாட்டின் ஏர்போர்ட் இமிக்கிரேசனில் எனக்கு முன்னால் இவர்கள் நின்று இருந்தால் நான் அடுத்த லைனுக்கு சென்று விடுவேன், ஏனெனில் இவர்கள் ஸ்டாம்ப் வாங்குவதற்குள் 10 பேர் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். இமிகிரேசனின் இந்த பொது புத்தி சில சமயங்களில் என்னை கோபப்படுத்தினாலும் அதை நான் ரசிப்பதுண்டு. ஏனெனில், கடவுளின் பெயரால் இவர்கள் சுமந்து கொண்டிருக்கும் அடையாளங்கள் எந்த அளவு அவர்களை அலைகழிக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியவேண்டும் மற்றும் யாருக்காக அவர்கள் இதை சுமக்கிறார்களோ அவரே இவர்களை காப்பதில்லையே.

கோவியாருக்கு நான் நாத்திகன் என்பது தெரியுமென்று நம்புகிறேன், இதை சொல்ல காரணம், என் பின்ணூட்டத்தை படித்த‌ உடனே முஸ்லீம் எதிரி என்று முத்திரை குத்தப்படுவதை தவிர்க்கவே. எனக்கு எம் மதமும் சம்மதமில்லை. மனிதம் போதுமானது.

வேகநரி சொன்னது…

//Dharan கூறியது...
கடவுளின் பெயரால் இவர்கள் சுமந்து கொண்டிருக்கும் அடையாளங்கள் எந்த அளவு அவர்களை அலைகழிக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியவேண்டும் மற்றும் யாருக்காக அவர்கள் இதை சுமக்கிறார்களோ அவரே இவர்களை காப்பதில்லையே//

தொலைகாட்சி செய்திகளில் சோமாலிய நாட்டு இஸ்லாமிய பெண் ஒரு கையால் பர்தாவை பிடித்து கொண்டு மற்ற கையால் ஐநா அதிகாரிகளிடம் உணவு பெறுவதற்காக கையேந்தி நிற்பதை பார்த்த போதெல்லாம் நானும் இதை தான் நினைத்தேன்.

கோவி,
நல்லாக சொல்லியியிருந்தீர்கள் "அவர்களுக்கு இஸ்லாமியர்கள் திரைப்படம் பார்க்கத் தடை என்னும் பொழுது அதில் காட்டப்படும் கேரக்டர் கழுதையாக இருந்தால் என்ன குதிரையாக இருந்தால் என்ன" :-)
அப்கானிஸ்தானில் இசை நடனம் பர்ர்த்தவர்களுக்கு 17 பேருக்கு இஸ்லாமிய தலிபான்கள் தலையை துண்டித்துவிட்டனர். இசை நடனம் திரைப்படம் இரசிக்க இஸ்லாமில் தடை. தமிழ் படங்களில் கேரக்டர்கள் தேவைபடுகிறதோ? தமிழ்படங்களில் குண்டு வைப்பவன், கொலை பாதகனாக காபிர்களை மட்டுமே காட்ட வேண்டும். இஸ்லாமியனை அமைதியும் சாந்தமும் நிறைந்த கதாநாயகனாக மட்டுமே காட்ட வேண்டும் என்பதே அவர்கள் ஆசை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்