பின்பற்றுபவர்கள்

8 ஆகஸ்ட், 2012

யுனிக்ஸ் மற்றும் விண்டோஸின் மதங்கள் !


இன்றைக்கு பரவலாக இருக்கும் ஆப்ரேட்டிங்க் சிஸ்டம் (OS) எனச் சொல்லப்படும் இயங்கு தள மென் பொருள்கள் இவை இரண்டு தான். இவை வளர்ந்தவிதம் பற்றி எளிமையாக விளக்க ஆப்ரகாமிய மற்றும் இந்திய மதங்களை ஒப்பிட்டு விளக்கலாம், விண்டோஸ் இயங்கு தள மென் பொருள் ஆப்ரகாமிய மதங்களின் வளர்ச்சியைப் போன்றது அதாவது MS-DOS தான் ஆப்ரகாம், அதிலிருந்து பழைய விண்டோஸ் 3.1 வெர்சன், பின்னர் 3.2, 95, 98, 98SE, Me, 2000, XP, Win 7 மற்றும் தற்போதைய Windows 8 வரை ஒற்றையாக பரிணாமம் கண்டவை. அதே போன்று Unix இந்தியாவின் துவக்க மதம் , பின்னர் சமணம், பவுத்தம், சாக்கியம், சைவம், வைணவம் என்று பல பரிணாமங்களைக் கொண்டது போன்று BSD, Novel, Solaris, Linux, Red-hat Linuz, HpUX, Mac, Ubundu என்று தனித் தனியாக ஒன்றிலிருந்து கிளைந்து 100க் கணக்கான யுனிக்ஸ் வகை இயங்கு தளங்கள் தனித்தனியாக வளச்சி கண்டன. யுனிக்ஸ் வகை பரிணாமங்களில் இந்திய சமய அடிப்படையில் புதிய மதம் ஏற்படவும், புதிய சாமி(யார்)கள் ஏற்படவும் நிறைய வாய்ப்புகள்  உள்ளன என்பது போல் யுனிக்ஸ் அதன் அடிப்படையைச் சார்ந்து  நீங்களும் உங்களுக்கு தேவையானபடி யுனிக்ஸை வடிவமைத்துக் கொள்ளலாம், அப்படித்தான் லினெக்ஸ், மேக், உபுண்டு போன்றவை தனித்தனியாக ஆதிக்கம் செலுத்திவருகின்றன. 

விண்டோஸ் வளர்ச்சி விகிதம் இதற்கு மாறாக முன்பு இருந்த பழைய விண்டோக்களை புறக்கணிக்கும் படி வெளிப்படையாகவே கூறி புதிய வடிவத்தைப் பற்றி பேச வைக்கும், இருந்தாலும் XP அளவுக்கு, Win 7 அல்லது Vista வைப்பிடிக்க வில்லை என்று கூறி XP யிலேயே தொடர்வார்கள் உண்டு. Win 7 வைப் பொறுத்த அளவில் அதனால் XP ஐ புறக்கணிக்க முடியாது, ஏனெனில் அதன் பரிணாமமாக வளர்ந்தவை தான் Win 7. இதைவைத்து ஆப்ரகாமிய மதங்கள் அதாவது மைக்ரோ சாப்ட் மென்பொருளைப் போல் புகழ்பெற்றுள்ளன என்று சொல்லவரவில்லை, அப்படி ஒப்பிடப் போனால் மைக்ரோசாப்ட் இயங்குதளம் உறுதியான கட்டுமானம் கொண்டவை அல்ல போதிய பாதுகாப்பற்றது என்ற நிலையில் பெரிய நிறுவனங்களுக்கும், மென் பொருள் விலை தொடர்பில் பணம் இல்லாதவர்களாலும் வாங்க முடியாத நிலையில் இருக்கின்றது என்பதையும் ஒப்பிட வேண்டும். குறிப்பாக யுனிக்ஸ் தனிப்பட்ட நபரின் கண்டுபிடிப்பு அல்ல, அவை குழுவாக உருவாக்கிப் பின்னர் பல பரிணாமங்களில் வளர்ந்து சென்றவை, மைக்ரோ சாப்ட் ? ஆப்ரகாமைப் படைத்த ஜெஹோவா / அல்லாவைப் போல் (அல்லாவை ஜெஹோவாவிற்கு இணைவைக்கலாமா ? இஸ்லாமிய அன்பர்கள் விளக்கினால் ஏற்றுக் கொள்கிறேன்) பில்கேட்ஸ் ஒருவரால் உருவாகி வளர்ந்தது. இவை போன்ற காரணங்களால் யுனிக்ஸ் மற்றும் விண்டோஸ் முறையேயான ஒப்பிடுகளை செய்துள்ளேன். சரி அதைவிடுவோம், 

**********

கணிணிகளைப் பொருத்த அளவில் அதன் ப்ராசசர் (Intel, AMD உள்ளிட்ட CPU or Processor) எனப்படும் கணிணி சில்லு தான் முதன்மையானவை,  இதனுடன் நேரடி தொடர்பில் இருக்கும் கணிணி மொழியை Machine Languageஅல்லது Binary Language என்று சொல்லுவார்கள், Machine 
Language புரோக்கிராம் வடிவத்திற்கு கடினமானவை என்பதால் இயங்கு தள மென் பொருள் புரோகிராம் (VB, C, Java)  மொழிகள் மூலம் எழுதப்பட்ட அப்ளிகேசன் எனப்படும் பயனீட்டு மென்பொருள்களை அமைத்து அதனை Kernel (Core OS) எனப்படும் தொடர்பு அமைப்பில் தொடர்பு கொள்ள Kernel அதனை மெசின் லாங்க்வேஜிற்கு மாற்றி கணிணி சில்லுடன் தொடர்பு கொண்டு பேச நமக்கு தகவல்கள் கிடைக்கின்றன.


இந்த Kernel வடிவமைப்பில் இருந்து தான் UNIX and Windows மாறுபடுகின்றன, ஒவ்வென்றும் தமக்கேற்ற Kernel அமைத்து அதன் பிறகு User Interface எனப்படும் பயனீட்டாளர் தொடர்பு முகப்பு மென்பெருளை அமைக்கின்றன, User Interface இதைத்தான் ஆப்ரேட்டிங்க் சிஸ்டம் அல்லது இயங்குதளம் என்கிறோம், மைக்ரோசாப்ட் விண்டோஸ்களில் என்ன பிரச்சனை என்றால் வாங்குபவருக்கு பயன்படுகிறதோ இல்லையோ Buffet உணவு போல் எல்லாவித அப்ளிகேசன்களையும் சேர்த்தே தருவார்கள், பயன் இருக்கிறதோ இல்லையே பல மென்பொருள்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். 

இதற்கு மாற்றாக யுனிக்ஸ் பயனீட்டாளர் எது தேவையோ அதை மட்டும் தேவையின் போது பயன்படுத்தும்படி அமைத்துக் கொள்ளலாம், அதனால் தான் யுனிக்ஸ் பலரால் பலவடிவங்களில் பல பயனீடுகளுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டு சந்தையில் கிடைக்கிறது, ஆனாலும் அடிப்படையில் அவற்றின் செயலாக்கம் ஒன்று தான். உதாரணத்திற்கு ஆப்பிள் கணிணி Mac மென் பொருளில் இயங்குகிறது, இதுவும் யுனிக்ஸ் வகை தான், ஒரு ஆப்பிள் கணிணியில் பயனீடு என்ற வகையில் கிராபிக்ஸ் அப்ளிகேசன் மற்றும் இணைய உலவி மற்றும் எழுதி (வேர்ட் ப்ராசசர்) இவற்றை மட்டுமே வைத்து விற்பனைக்கு அனுப்புவார்கள், வேறு எதாவது குறிப்பாக மைக்ரோசாப்ட் ஆபிஸ் போன்றவை நிறுவத் தேவையாக இருந்தால் அதனை வாங்கிப் பொருத்திக் கொள்ளலாம். இதுபோல் மற்ற யுனிக்ஸ் இயங்குதளங்களான Solaris, HpUX மற்றும் Redhat Linux and Ubundu போன்றவை பயனீட்டாளரின் பயனுக்கு ஏற்ற வகையில் அதன் Graphical User Interface எனப்படும் முகப்புகளும், அப்ளிகேசன்களும் அமைக்கப்பட்டு இருக்கும். அதாவது உணவகங்களில் எல்லாமே இருக்கும், நமக்கு தேவையானதும் இருக்கும் அது தவிர அவர்கள் Value Meals என்று சிறப்பு வகை உணவுகளும் இருக்கும், நமக்கு தேவையானதை, நமக்கு பயனானதை நாம் வாங்கிக் கொள்ளலாம். அது போன்றதே யுனிக்ஸ் வகை இயங்கு தளங்கள்.

Server எனப்படும் வழங்கிச் சேவைகளில் 2000 ஆண்டு வரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் ஆதிக்கம் செலுத்த இயலவில்லை, அதற்கு முன்பு சிறிய அளவில் Win NT 4 உருவாக்கி இருந்தாலும் அதன் செயல்பாடுகள் சிறப்பாகவும் இல்லை, தவிர எப்போது நீல திரையைக் காட்டும் என்றே தெரியாத நிலையில் Window Server களை உருவாக்கிவதில் மைக்ரோசாப்ட் பின்னடைந்திருந்தது. Windows Server 2000 முதன் முறையாக பல குறைபாடுகளை நீக்கி வெளியிட்டார்கள். அதற்கு முன்பு மைக்ரோசாப்டின் விற்பனை உத்தி மிகவும் அபாரமானது, யுனிக்ஸ் ஒரு கணிணியில் நிறுவ ஓரளவு யுனிக்ஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டிய நிலையில் திருட்டு சீடி சீரியல் எண்ணுடன் (Pirated Windows CD with Serial No) கிடைத்தால் கணிணி பற்றிய குறைந்த அறிவுள்ளவரே விண்டோஸ் இயங்குதளத்தை கணிணியில் பொருத்திக் கொள்ள முடியும் என்ற நிலையில் காப்பிரைட்டுகள் பற்றி அதிகம் கவலைப்படாமல் தாரளமாக மைக்ரோசாப்ட் நடந்து கொள்ள Windows 98 SE Desktop user பயன்பாடு என்ற அளவில் தனிப்பட்டவர்கள் பயன்படுத்தும் 90 விழுக்காடு கணிணிகளில் நிறைய பயனீட்டாளர்கள் மைக்ரோசாப்ட் அடிக்டட் என்ற நிலைக்கு மாற மைக்ரோசாப்ட் கணிணி மென்பொருள் மற்றும் இயங்குதள உலகில் ஆழமாக கால் பதித்து அடுத்த XP உள்ளிட்ட வர்சன்களில் காப்பிரைட் ஆன்லைன் ஆக்டிவேசன் உள்ளிட்டவற்றை செயல்படுத்த, பயனீட்டாளர்கள் ஏற்கனவே விண்டோஸ் மட்டுமே பயன்படுத்திய நிலையில் அதனை வாங்கத் துவங்கினார்கள். இருந்தாலும் கார்ப்ரேட் வழங்கி (Server) சேவை மைக்ரோசாப்டிற்கு கைகொடுக்கவில்லை. ஆனால் பெரும்பாலன கார்ப்ரேட்டுகளின் டெஸ்க்டாப் விண்டோஸ் இயங்கு தளமாக இருக்கும் வண்ணம் Unix Server தொடர்பு மென்பொருளையும் அவற்றிற்கான Protocol எனப்படும் அடிப்படை இணைப்புகளையும் இணைத்திருந்ததே மைக்ரோசாப்டின் சிறப்பான் வியாபார உத்தி.

வழங்கி சேவை இயங்குதளங்களை உருவாக்குவதும் அதனை பிழைகள் இன்றி இயக்குவதும் மைக்ரோசாப்டின் அரைகூவல் என்ற நிலையில் Windows Server 2000 க்கு பிறகு மேம்பட்ட வர்சனாக Windows Server 2003 ஐ உருவாக்கியது, அதுவரை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் வழங்கி சேவைகளுக்கு யுனிக்ஸ் வழங்கியைத் தான் பயன்படுத்தி வந்தது, பிறகு .Net Frame எனப்படும் புதிய தொழில் நுட்பத்துடன் வழங்கி சேவைகளை Windows Server 2003 புகுத்த மைக்ரோசாப்டின் வழங்கி சேவைகளை கார்ப்ரேட் நிறுவனங்கள் நுகரத் துவங்கியது, அதற்கு முன்பே வழங்கி சேவைகளின் RFC Std எனப்படும் பரிந்துரைகள், வழிகாட்டல் ஆகியவற்றுடன் யுனிக்ஸ் சேவைகள் திறம்பட செயல்பட அவற்றின் மாதிரிகளை மைக்ரோ சாப்ட் விண்டோஸ் வழங்கிகளில் உருவாக்குவதி மைக்ரோசாப்டிற்கு எளிதாக ஆகியது.

மைக்ரோசாப்ட் எதையுமே புதிதாக உருவாக்குவதில்லை, ஏற்கனவே அவை உருவாகி பிரபலம் அடைந்திருந்தால் அதை மைக்ரோசாப்ட் உள்வாங்கிக் கொண்டு தனக்கு ஏற்ற அளவில் மாற்றி அமைத்துக் கொள்ளும். Word Perfect > MS Word, Lotus 123 > Ms Excel, Story Board > Ms Power Point, (IBM) Lotus Notes > Ms Exchange,  Novell NDS > Ms Active Directory, Unix DNS > Ms DNS , Adobe Flash > Ms SilverLight இது போன்று எல்லாமும் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த நிலையில் அதன் விண்டோஸ் வடிவங்களாக மைக்ரோசாப்ட் மாற்றி க் கொண்டது தான் மைக்ரோசாப்ட் செய்தவை, Mac முகப்பைப் பார்த்து அதனை Vista மற்றும் Windows 7 ல் வடிவமைத்துக் கொண்டார்கள், புதிதாக எதையும் செய்துவிடவில்லை, ஏற்கனவே Sony PlayStation சக்கைப் போடு போட்ட பிறகு கேமிங் வடிவமைப்பில் இறங்கி  Xbox வெளியிட்டது மைக்ரோசாப்ட், பின்னர் அலைபேசி மென்பொருள் மைக்ரோசாப்டின் Windows CE அவ்வளவாக போகவில்லை என்றாலும் ஆப்பிள், ஆண்ட்ராய்டு அபாரமான வளர்ச்சியைப் பார்த்து விண்டோஸ் மொபைல் மென்பொருள்களை அமைத்துப்பார்த்தது, பெரிதாக விற்பனை ஆகவில்லை, இருந்தாலும் கொஞ்சம் காலத்திற்குபிறகு ஆப்பிள் ஆண்ட்ராய்ட் போல் முகப்புகளை மாற்றி விண்டோஸ் மொபைல் வெளிவரும் மேலும் ஆண்ட்ராய்ட் போல் இலவசமாக எவரும் பொருத்திக் கொள்ளவும் அனுமதிப்பார்கள் என்றே நினைக்கிறேன், முதலில் ஆழம் பார்ப்பது பின்னர் விற்பனைப் படகை செலுத்துவது மைக்ரோசாப்டின் கைவந்த கலை என்பதால் மொபைல் போன் இயங்குதள விற்பனையையை கண்டிப்பாக விட்டுவைக்கமாட்டார்கள்.

மைரோசாப்ட் இயங்குதளங்களில் Windows 95 to Windows 98SE பெரிய வேறுபாடுகள் இல்லை  Windows 95 Service Pack களையெல்லாம் ஒன்றாக இணைத்து முகப்பின் நிறத்தை மாற்றி Windows 98SE என்று புதுவர்சனாக விற்பனை செய்வார்கள், பின்னர் Vista மற்றும் Windows 7, Windows 2008 Std  to Windows 2008 R2 கூட அப்படித்தான். பிழைகளை சரிசெய்து அதை புதிய வர்சனாகவே மைக்ரோசாப்ட் அறிவிக்கும். அடுத்து Windows 8 மடிக்கணிணி மற்றும் மேசை கணிணி பயனீட்டாளர்களுக்கும், Windows 2012 Server வழங்கி சேவையாகவும் புதிய பரிணாமத்துடன் வெளி இட இருக்கிறார்கள்.

இதற்கிடையே VMWare, Citrix ஆகியவை மெய்நிகர் (Virtual Server / Client OS)  மற்றும் Cloud Computing தொழில் நுட்பத்துறையில் கார்ப்ரேட் நிறுவனங்களை ஆட்கொள்ள அந்த மெய்நிகர் தொழில் நுட்பத்தையும் விட்டுவைக்கக் கூடாது என்பதாக் Hyper-V மற்றும் Windows Azure ஆகியவற்றை விற்பனையில் இறக்கிவிட்டிருக்கிறது மைக்ரோசாப்ட் அதன் வளர்ச்சி விகிதம் இனிமேல் தான் தெரியும் இருந்தாலும் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த பல இலவச அறிவிப்புகளையும் ஒண்ணு வாங்கினா ஒண்ணு ப்ரீ பாணியில் கடைவிரித்திருக்கிறது. இவை அனைத்தும் ஏற்கனவே Unix வழங்கிகளிலும் பயனீட்டு கணிணிகளும் வந்துவிட்டன. யுனிக்ஸை வீழ்த்தும் பல்வேறு முயற்சிகளில் யுனிக்ஸில் இருக்கும் Shell Script மற்றும் வெற்று இயங்கி (Core Operating System) எனப்படும் தொழில் நுட்பங்களையெல்லாம் இணைத்து Power Shell மற்றும் Windows Core ஆகியவற்றையும் மைக்ரோசாப்ட் அமைத்து சந்தைக்குள் இறக்கி இருக்கிறது. இன்னும் எழுத ஏராளம் உண்டு.

************

எனக்கும் மைக்ரோசாப்ட் தொழில் நுட்பம் தான் சோறு போடுது, மில்லியன் கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்றதற்கு மைக்ரோசாப்ட் தான் காரணம், தவிர 1000க் கணக்கான மில்லினியர்களை உருவாக்கியவர் பில்கேட்ஸ் என்பதால் பில்கேட்ஸ் மீது மதிப்பும், நன்றியும் உண்டு, அவருடைய தொழில் தர்மம் மற்றும் தொழில் நுட்ப நேர்மை மட்டுமே விமர்சனம் செய்யப்பட்டே வருகிறது. மைக்ரோசாப்ட்டினால் பல மென்பொருள் நிறுவனங்கள் மூடுவிழா கண்டது குறிப்பாக NDS க்கு பதிலாக MS Active Directory வழங்கி சேவையாகப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு Novell காலி, ஆனாலும் முழுதாக யுனிக்ஸ் வளர்ச்சியை அவர்களால் வீழ்த்த / கட்டுப்படுத்த முடியவில்லை.

மைக்ரோசாப்ட் தொழில் நுட்பமும் உத்தியும் ஓரிரைக் கொள்கையாளர்களைப் போன்றது மாறாக யுனிக்ஸ் வகை இயங்குதளங்கள் இந்திய சமயங்களைப் போன்று தனித்தனி பரிணாமம் பெற்றிருந்தாலும் ஒன்றுக் ஒன்று தொடர்ப்புடையது. வல்லவனுக்கு வல்லவன் என்ற ரீதியில் எதிர்காலத்தில் கூகுள் மைக்ரோசாப்டை வீழ்த்தலாம் ஏற்கனவே இணைய சேவைகளில் மைக்ரோசாப்டை வீழ்த்திவிட்டார்கள். அடுத்து இயங்குதளங்களை உருவாக்கிவருகிறார்கள்,  மைக்ரோசாப்ட் ஆட்டம் காணும் நாள் தொலைவில் இல்லை.

10 கருத்துகள்:

விருச்சிகன் சொன்னது…

கோவி சார். ரொம்ப டெக்னிக்கலான விஷயத்த எல்லாருக்கும் புரியும்படி எளிதி இருக்கீங்க.

இத படிக்கும்போது, அந்த காலத்துல Windows NT OS பக்கம் போனாலே நடுங்கிடும். ஏன்னா இந்த NT எப்போ தொங்கும்னு (hang) சொல்ல முடியாது. அதே மாதிரி, இந்த ப்ளூ ஸ்க்ரீன் எரர் வேற அப்பப்ப தல காட்டி நமக்கு தண்ணி காட்டிரும்.

இப்போ Windows எவ்வளவோ பரவாயில்ல. அந்த காலத்த நெனச்சா.. இப்பவும் கண்ண கட்டுது.

என்னதான் இருந்தாலும், நமக்கு சோறு போட்ட, போட்டுட்டு இருக்கற Windows வாழ்க.

Sivakumar சொன்னது…

MAINFRAME, IBM AIXஐ மேற்கோள் காட்டாதற்காக வண்மையாக கண்டிக்கின்றேன். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//அதே மாதிரி, இந்த ப்ளூ ஸ்க்ரீன் எரர் வேற அப்பப்ப தல காட்டி நமக்கு தண்ணி காட்டிரும்.//

:) எனக்கும் ஏராளமான அனுபவங்கள் உண்டு Domain Server தொங்குவதைவிடக் கொடுமையான நேரங்கள் வேற இல்லை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Sivakumar கூறியது...
MAINFRAME, IBM AIXஐ மேற்கோள் காட்டாதற்காக வண்மையாக கண்டிக்கின்றேன். :)//

அதுபக்கமெல்லாம் இப்பதான் மைக்ரோசாப்ட் எட்டிப் பார்க்கத் துவங்கி இருக்கிறது, மைக்ரோசாப்ட் மெசேஜிங்க் சர்வர் நல்லாப் போகுது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல தொகுப்பு... விரிவான விளக்கம்...

windows 98 - ரொம்ப காலங்கள்...
இப்போது XP (friendly user) விட்டு வர மனமில்லை..

நன்றி… தொடர வாழ்த்துக்கள்... (TM 2)

கோவி.கண்ணன் சொன்னது…

//windows 98 - ரொம்ப காலங்கள்...
இப்போது XP (friendly user) விட்டு வர மனமில்லை//

நீங்க மோசசைவிட்டு ஜீசஸுக்கு மாறி இருக்கிங்க, அப்பறம் முகமதுவிற்கோ, அகமதுவிற்கோ மாறுவிங்க.

நாங்களெல்லாம் சூஃபிகள் மாதிரி யுனிக்ஸ் விண்டோஸ் பேதமில்லை :)

suvanappiriyan சொன்னது…

யுனிக்ஸ் என்னதான் புரபகண்டா படுத்தப் பட்டாலும் விண்டோஸ் எக்ஸ்பிக்கு ஈடாகாது. :-)

muthukumaran சொன்னது…

நீங்கள் சொல்ல மறந்தது மைக்ரோசாப்ட் இன்
"User Friendliness". ஒரு காலத்தில் மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் இல் ஏகாதிபத்தியத்தை கொண்டு வர முயற்சிக்கிறது என்று எழுந்த கூக்குரல்கள் எல்லாம் இப்போது அப்படியே ஆப்பிள் பக்கம் திரும்பி நிற்கிறது. முன்பு இருந்ததற்கு இப்போது மைக்ரோசாப்ட் பரவாயில்லை என்றே கருதுகிறேன்.விண்டோஸ் 8 ஒரு சரியான முடிவு!!

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப் பிரியன் கூறியது...
யுனிக்ஸ் என்னதான் புரபகண்டா படுத்தப் பட்டாலும் விண்டோஸ் எக்ஸ்பிக்கு ஈடாகாது. :-)//

ஒரு யுனிக்ஸ் அட்மினிடம் கேட்டால் விண்டோஸ் ஒரு குப்பை இயங்குதளம் என்று சொல்லுவார். அது உண்மை தான்.

muthukumaran சொன்னது…

விண்டோஸ் ஒரு குப்பை இயங்குதளம் என்று சொல்வதை விட, நுகர்வோர் சந்தையில் முன்னே நிற்பதன் காரணம் பெரும்பாலனா பிரச்சினைகளி வெறும் restart மூலம் தீர்த்து விட முடியும்..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்