பின்பற்றுபவர்கள்

24 ஆகஸ்ட், 2012

மருதாணி - வதந்தீ !


சன் தொலைகாட்சியின் மெகாத் தொடர் தலைப்பு தான், சென்ற வாரம் இஸ்லாமிய பெருநாளின் பின்னிரவிலும், மறுநாள் செய்தியாகவும் பரபரக்கப்பட்ட பெயர் மருதாணி. மருதாணி வைத்துக் கொள்பவர்களை அச்சுறுத்தி கிளப்பிவிடப்பட்ட வதந்ததி, வதந்திகள் நோக்கத்துடனும், நோக்கமின்மையாலும் கிளப்பிவிடப்படுவது வாடிக்கை தான். கண்ணதாசன் தாம் இறந்துவிட்டதாக அவரே ஒருமுறை வதந்தி கிளப்பி இருந்தார், தனக்காக வருந்துபவர் யார் என்று தெரிந்து கொள்ள அவ்வாறு செய்தாராம். கருணாநிதி, ரஜினி உள்ளிட்டோரைப் பற்றி கூட வதந்திகள் வந்து இருக்கின்றன, எம்ஜிஆருக்கும் பலமுறை வதந்தி கிளப்பி இருந்தனர்,  முன்பெல்லாம் வதந்தி பரவும் வேகத்தை ஒப்பிட அடங்க இரண்டு மூன்று நாள் பிடிக்கும், செல்பேசிகள் புழக்கத்திற்கு வந்த பிறகு பரவும் வேகமும் கூடுதலாகவும், அதே போன்று அடங்குவதும் கிட்டதட்ட அதே வேகத்தில் அடங்கிவிடுகிறது.

எந்த ஒரு சமயம் சார்ந்த பெரும் பண்டிகையில் பெண்கள் மருதாணி இட்டுக் கொள்வது இந்திய சமூகத்துப் பெண்களின் வழக்கமாக இருக்கிறது, நகைகள் போட்டுக் கொள்ளாத பெந்தகொஸ்தே அமைப்பு தவிர்த்து கிறித்துவர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் அவரவர் பண்டிகையின் போது மருதாணி இட்டுக் கொள்வது வழக்கம்.  இந்தியாவில் இருந்த வரை தீபாவளி நாள்களின் அக்கா- தங்கை வைத்துவிடும் மருதாணி என் கைகளிலும் நகங்களிலும் கூட இருந்தது,  தாள்களில் நட்சத்திர வடிவங்களை வெட்டி அதன் மீது மருதாணி வைத்து உள்ளங்கையில் அழகான மருதாணி சிவப்பு வடிவங்களை அமைத்துக் கொள்வோம், அதன் பிறகு கையை கழுவும் வரை சொறிய முடியாது, காலையில் எழுந்து பார்த்தால் சட்டை படுக்கை பாய் ஆகியவற்றில் மருதாணி அங்காங்கே அப்பி இருக்கும், கையைக் கழுவி யாருடைய கை நன்றாக சிவந்திருக்கிறது என்று பார்த்து பார்த்து ரசிப்போம். வீட்டில் மருதாணி செடி இருப்பது மகிழ்ச்சியுடன், கவுரவத்தையும் கூட கொடுப்பதாக நினைத்திருந்தேன், கடைசியாக திருமணத்தின் முந்தைய இரவில் கொஞ்சம் வைத்துவிட்டார்கள், இப்பவும் ஆண் மருதாணி வைத்துக் கொள்வது தவறு இல்லை என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும் கேலி செய்யப்படுவோம் என்பதால் வைத்துக் கொள்வதில்லை. 

சிங்கையில் ஆண் முகப்பவுடர் அடித்திருந்தாலும் 'மேக்கப் ?' என்று கேலி செய்வார்கள்,  ஆண்கள் யாரும் முகத்தில் பவுடர் அடிப்பது கிடையாது, பவுடரை உடலில் தடவிக் கொள்வார்கள். சென்னையிலோ தமிழகத்திலோ இரு நண்பர்கள் கைகோர்த்து நடப்பது போல் இங்கு நடந்தால் 'அவ(னா)ர்களா இவ(ன்)ர்கள் ?' என்பது போல் பார்பார்கள். பொது நீச்சல் குளங்கலின் ஆண் பெண்ணுக்கு தனித்தனியாக உடைமாற்று அறைகள் உண்டு, உடைமாற்று அறைகளில் எந்த வெட்கமுமின்றி ஆடையின்றி குளிபார்கள், அங்கேயே உடைமாற்றுவார்கள், உடைமாற்று அறையில் முன்பெல்லாம் ஷவர்கள் வரிசையாக இருக்கும் இடையே தடுப்பு இருக்காது, தற்பொழுது அறைகள் அமைத்து ஷவர் வைத்திருக்கிறார்கள். குளித்த பிறகு  தடுப்பில் இருந்து வெளியே வந்து  (அறையினுள்)  உடைமாற்றுவார்கள்,  ஆணுக்கு முன் ஆணின் நிர்வாணம் இங்குள்ளவர்களின் வெட்க வரையறைனுள் வராது,  பொதுவாகவே சீனர், ஜப்பானிய கலாச்சாரம் பரவிய இடங்களில் பொது இடம் தவிர்த்த தனிப்பட்ட இடங்களான பொதுக் குளியல் அறைகளில் அம்மணம் ஒரு பிரச்சனையே இல்லை.  அப்பனும் - மகனும் கூட குளியல் அறையில் ஒருவருக்கும் முன் ஒருவர் நிர்வாணமாகத்தான் நிற்பார்கள்,  முதன்முதலில் அவர்களைப் பார்க்க கொஞ்சம் அதிர்சியாக இருந்தது அவ்வளவு தான். இவர்களின் அகராதிபடி ஆண்மை பெண்மை இவையெல்லாம் வெறும் பாலியல் உறுப்புகள் சார்ந்தது கிடையாது, சீனா, ஜப்பான், தைவான் மற்றும் கொரியாவில்  வெப்ப நீருற்றுகளில் (Hot Spring) ஆண் பெண்ணுக்கு அமைக்கப்பட்ட தனித்தனிப் பகுதியில் நிர்வாணக் குளியல் மிகவும் இயலபாக நடைபெறும் ஒன்று. Hot Spring Tour என்ற வகையில் வெளிநாட்டினர் விரும்பிச் செல்லும் இடங்கள் அந்தநாடுகளில் ஏராளம் உண்டு. ஆண் இயல்புகள் பெண் இயல்புகள் என்ற அடைப்படையில் ஆண் பவுடர் அடிப்பதையும், ஒத்தப் பாலினர் கைகோர்த்துச் செல்வதையும் இவர்கள் இயலாக எடுத்துக் கொள்வது கிடையாது.

இஸ்லாமியப் பெண்கள் கைகள், முகம்  தவிர்த்து உடலை முழுவதும் மறைத்துக் கொண்டிருந்தாலும், ரம்சான் பண்டிகையின் போது மருதாணி வைத்துக் கொள்வதை தடுக்கும் நோக்கத்தில் ஏன் வதந்தி கிளம்பி இருக்க வேண்டும் ? யார் கிளப்பி இருப்ப்பார்கள் ? பெண்களின் வெளியே தெரியும் கையில் வைத்துள்ள மருதாணி கவர்ச்சியைத் தூண்டும் என்றும் என்ற அடிப்படைவாத நம்பிக்கைத் தவிர்த்து இதைத் தடுக்கும் நோக்கம் வேறெதும் இருப்பதாகத் தெரியவில்லை,  பின்னிரவில் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என்ன ஆகுமோ  பதைப்புடன் உயிர் பயத்துடன் மருத்துவமனைகளுக்கு ஓடியதை வதந்தி கிளப்பியவர்களே கூட ரசித்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். இது வதந்தீ என்றே நிருபணம் செய்யப்பட்ட நிலையிலும் அடுத்தாண்டு மருதாணி வைக்கும் பழக்கம் பாதியாக குறைந்துவிட வாய்ப்புள்ளது, வதந்தி கிளப்ப எவ்வளவோ நிகழ்வுகள் இருந்தும், மருதாணி வைத்துக் கொள்வது பிரச்சனை (தான்) என்ற அளவில் மசூதி மைக்குகளில் அறிவிக்கும் அளவுக்கெல்லாம் சென்றிருக்கிறது.  கீழே உள்ளது ஒரு மாதத்திற்கு முன்பு வந்த செய்தி. மருதாணி வதந்தியுடன் ஒப்பிட்டுப் பார்க்க, யார் கிளப்பி இருப்பார்கள் ? ஏன் கிளப்பி இருப்பார்கள் ? கீழே உள்ள இணைப்புகள் பல்வேறு  ஊகங்களைக் கிளப்பிவிடுகிறது.

இணைப்புகள் :



ஒரு சிலரால் அவர்களின் சமூகத்தை வலிந்தே  1400 ஆண்டு பின்தங்க வைப்பதை நினைத்து வருத்தப்படாமல் / பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை, இவற்றிற்கெல்லாம் அவர்களைச் சார்ந்த சில பெண்களே ஆதரவு அளிப்பதும் கூட அவர்களுக்கு கிடைக்கும் ஆசிகளாகத்தான் அமைகிறது.

அரேபிய நாடுகளில் மருதாணி வைத்துக் கொள்ளுவது பாரம்பர்யமானது தான் , அதை ஏன் தமிழகத்தில் தடுக்கும் நோக்குடன் செயல்பட வேண்டும் என்றும் தெரியவில்லை. ஒருவேளை சவுதி போலிஸின் செயல்பாடுகள் தான் மதரீதியாக அனுமதிக்கப்பட்டது என்று கருதுகிறார்களோ. மருதாணி வதந்தி பற்றி எந்த ஒரு மதவாதப் பதிவரும் வருத்தப்பட்டோ / கண்டித்தோ பதிவு எழுதியது போல் தெரியவில்லை. இந்த வதந்தியின் வாய்ப்பு என்ற அடைப்படையில் இது முழுக்க முழுக்க எனது ஊகம்.  என் ஊகம் தவறு என்று சொன்னால் தமிழகத்தில் வசிப்பவர்கள் அடிப்படைவாதிகள் இல்லை என்று மகிழ்வேன்.

5 கருத்துகள்:

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,
தமிழ்நாட்டில் மருதாணி மரம் ஆங்காங்கே இருக்கும்.அதனை பறித்தெ அரைத்து இடுவார்கள். ஆண் பிள்ளைகள்க்கு கூட குளிர்ச்சிடா என்று சொல்லி வைத்து விடும் வழக்கம் உண்டு.
இந்த மெஹந்தி என்னும் வட இந்திய(?) பழக்கம் சமீபத்தில் வந்ததுதான்.இதுவும் பெருமளவில் த்யாரிக்கப்பட்டு விள்மபரதோடு எங்கும் இப்போது கிடைக்கிறது.

மருதாணி,மெஹந்தி என்பது இஸ்லாமில் அனுமதிக்கப் பட்டதே[ஹலால்]!.
பாருங்கள் எப்படி எது ஹலால் ,ஹராம் என நாமும் தெரிந்து வைத்து இருப்பதை!.எல்லாம் சக(கோ)வாசம் தான்!
இதில் மெகந்தி பற்றிய அனைத்து விளக்கங்களும் உள்ளன.
http://www.zikr.co.uk/content/view/71/112/
*********

இந்த மெகந்தி புரளி, அஸ்ஸாம் மக்களை ஓட வைத்த புரளி என பல வகைப் புரளிகள்.

புரளிய கிளப்பியவர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம்!

இரு புரளிகளுக்கும் நல்ல பலன் கிடைத்தது!


ஆகவே புரளிகள் ஜாக்கிரதை!!

நன்றி



வசந்தத்தின் தூதுவன் சொன்னது…

மருதாணி வதந்தியைப் பரப்பியவர்கள் இசுலாமிய அடிப்படைவாதிகளே.. அவர்களது நோக்கம் தங்கள் சமூகத்தினரின் இந்திய அடையாளங்களை முற்றிலுமாக ஒழித்து விட வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும். மருதாணி பற்றி டுவிட்டரிலும் புரளி கிளப்பி பரப்பப் பட்டது. கிளப்பியவர்களும் பரப்பியவர்களும் இசுலாமிய அடிப்படைவாதிகள்தான்.

இந்திய, தமிழ் அடையாளங்களைத் தொலைத்து அரபிக்களிடம், பண்பாடுகளற்ற, சுயமரியாதையற்ற, அகதிகளாய் அடைக்கலம் புகுவதில் மகிழ்வடையும் அவர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிக்க வேண்டியவர்களாகிறோம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல அலசல்...

மருதாணியின் அருமை தெரியாதவர்கள் பரப்பும் வதந்தீ...

இணைப்புகள் கொடுத்தமைக்கு நன்றி...

வேகநரி சொன்னது…

உங்கள் ஊகமே முழுக்க முழுக்க உண்மை.
பொதிகைச் செல்வன் சொன்ன இந்திய தமிழ் அடையாளங்களைத் தொலைத்து அரபிக்களிடம் பண்பாடுகளற்ற சுயமரியாதையற்ற அகதிகளாய் அடைக்கலம் புகுவதில் மகிழ்வடைபவர்களின் செயல்களே இவை.

Indian சொன்னது…

ஹைதராபாத் talking baby வதந்தி பற்றிக் கேள்விப்பட்டீர்களோ? :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்