பின்பற்றுபவர்கள்

5 செப்டம்பர், 2012

முட்டாள்களுக்காக எழுதவேண்டியுள்ளது .....!

வாலிப வயோதிக அன்பர்களை துன்புறுத்தும் சுய இன்பம் பற்றிய  'விழிப்புணர்வு' பழனி / சேலம் சித்த வைத்தியர்களைத் தாண்டி பதிவுகளாகவும் வந்து கொண்டி இருக்கிறது, விழிப்புணர்வு என்ற பெயரில் அறிவு வெளிச்சத்தை அணைக்கும் செயலாக தன்னின்பம் பற்றிய தவறான விளக்கங்களை கொடுக்கிறார்கள், வெற்றிலைப் போட்டால் கோழி முட்டும் என்று சிறுவர்களை அந்தப் பழக்கத்தில் இருந்து காக்க நகைச்சுவையாகக் கூறுவதுண்டு, கோழி எப்படி முட்டும் ? என்று யோசித்துக் கொண்டே வெற்றிலையை மறந்துவிடுவான் சிறுவன், காம்பைக் கிள்ளிக் திண்ணக் கொடுப்பார்கள், வெற்றிலையால் கெடுதல் எதுவும் இல்லை என்றாலும் சிறுவயதில் பற்களில் கறை படுவது முகத் தோற்றத்தையும் சிரிப்பழகையும் கெடுத்துவிடும் என்பதால் அவ்வாறு கூறி தடுப்பார்கள். பருவ வயதில் கைப் பழக்கம் எனப்படும் தன்னின்பம் பற்றிய விழிப்புணர்வுகளும் அத்தகையது என்றாலும் அவை எந்த வயதிற்கு ஏற்ற பரிந்துரை அல்லது விழிப்புணர்வு என்று அடிப்படை அறிவே இல்லாமல் பொதுவாக அவை தவறு என்கிற ரீதியில் எழுதப்படுகிறது, தவறுதலாக சித்தரிக்கப்படுகிறது.

பெண் பூப்பெய்தும் பருவம் தான் ஆணின் திருமண வயதையும் முடிவு செய்கிறது என்கிற நிலையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமண வயது ஆணுக்கு 15 பெண்ணுக்கு 12 - 13 என்ற நிலையில் இருந்தது. ஆண் பெண்ணைவிட இரண்டு வயதாவது கூடுதலாக இருக்க வேண்டும் என்கிற சமூக எண்ணங்களின் செயல்பாடுகளாக ஆணின் திருமண வயது 16 என்று முடிவு செய்து வைத்திருந்தனர். ஆண் உடல் ரீதியாக வளர்சி அடைந்து கிளர்ச்சி அடையும் பருவம் 15 - 16 வயது தான், அந்த காலகட்டத்தில் திருமணம் செய்வது நடைமுறையாக இருந்தது, அன்றைய ஆண்களுக்கு பொருளாதார வழிநடத்தல்களாக இல்லம் சார்ந்த தொழில்கள் இருந்ததால் திருமணத்தைத் தள்ளிப் போட வேறு காரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் பருவ வயதில் திருமணம் செய்துவைப்பது நடைமுறையாக கடைபிடிக்கப்பட்டுவந்தது.  சேலம் சித்த வைத்தியர்களின் அறிவுறுத்தல்கள் 16 வயதினருக்கு ஏற்றதாக இருந்திருக்கலாம், காரணம்  சுய இன்ப நாட்டத்திலோ அல்லது பாலியல் தொழிலாளியை நாடும் எண்ணங்களையோ வளர்த்துக் கொண்டிருந்தால் திருமண வாழ்க்கைப் பற்றிய எண்ணங்கள், அதன் நன்மைகள் ஆகியவற்றை புறந்தள்ளக் கூடும் என்பதால் விலைமாந்தர்களிடம் செல்வது முறையற்ற உறவு என்ற வகையில் தடுக்கப்படுவது போலவே சுய இன்பப் பழக்கம் உடல் ரீதியாக கேடுவிளைவிக்கக் கூடியவை என்கிற அறிவுறுத்தல்களை செய்வதால் முறையான பாலியல் வடிகாலுக்கு திருமண உறவை நம்பி, விரும்பி செய்து கொள்வார்கள் என்று உளவியல் ரீதியாக கிளப்பிவிடப்பட்டவையே சுய இன்பம் பற்றிய கட்டுக்கதைகள். 

தற்பொழுது வயதும் பருவமும் திருமணத்தை முடிவு செய்ய முடியாத நிலையில் தனிமனித பொருளாதார மையம் பெரும் அறை கூவலாக அமைந்துவிட்டபடியால் கல்லூரிப் படிப்பை முடித்து பின்னர் வேலை தேடி, வேலை வாய்ப்பு பெற்று,  ஓரளவு கால் ஊன்றிவிட முடியும் என்கிற நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட நிலையில் திருமணம் என்கிற முடிவை எடுக்க 25 வயதிற்கு மேல் ஆகிறது. பெற்றோர்களே விரும்பிக் கொடுத்தாலும் 20 வயது பெண்ணை மணந்து கொள்ள 25 வயது இளைஞர்கள் முன்வருவதில்லை. பெண்ணுக்கான திருமண வயது அரசு 18 என்று வழிகாட்டினாலும் 22 வயதிற்கு மேல் தான் திருமணப் பேச்சு துவங்குகிறது.  ஓரளவு நிலையான வருமானம் உள்ள ஆணை பெண்ணுக்கு மணம் முடிக்க ஆணின் வயது 28 வரை காத்திருக்க வேண்டிய நிலையில் பெண்ணையும் படித்தவளாகவே கொடுப்பது தான் அவர்கள் இருவருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதால் பெண்ணும் படித்து வேலைக்குச் சென்ற பிறகே திருமணம் செய்விப்பது வழக்கமாகி இருக்கிறது. முதிர்கன்னி பற்றி கண்ணீர் கவிதை எழுதுபவர்கள் குறைந்துவிட்டதற்குக் காரணம் சமூகப் புரட்சி நடந்துவிட்டது என்பதல்ல. முதிர்கன்னி என்றால் எத்தனை வயதிற்கு மேற்பட்டவர்முதிர்கன்னி ? என்கிற வயது பற்றிய முடிவெடுக்கத் திணற வேண்டிய நிலையில் முதிர்கன்னிக் கவிஞர்களின் சிந்தனை சிறகுகள் படபடக்க மறுத்துவிட்டன. திருமணம் பற்றிய முடிவுகளுக்கு பருவமும், வயதும் காரணிகள் இல்லை, பொருளாதாரமே முதன்மைக் காரணம்.

தனிமனித பொருளாதார மேம்பாடு திருமணம் எப்போது என்பது பற்றித் தான் முடிவு செய்யும். ஆனால் பருவ வயதை எட்டி ஒரு சில ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் உடல் ரீதியான இச்சைகளுக்கு அவை பொறுப்பேற்றுக் கொள்ளாத போது தனிமனித பாலியல் தேவையின் வடிகாலுக்கு தீர்வு ? அரசுகளைப் பொருத்த அளவில் பாலியல் தொழிலை ஊக்குவிக்க முடியாத நிலைக்குக் காரணம் குடும்ப அமைப்புகள் சீர்கெட்டுவிடும் என்கிற அக்கரை கிடையாது, பாதுகாப்பற்ற உறவினால் நோய் பெருகும் என்பதே காரணம், ஏனெனில் தனிமனித பாலியல் தேவைக்கு வடிகால் இவை என்று திருமண பந்தம் தவிர்த்து வேறெதையும் காட்ட முடியாத நிலையில் ஒருவர் பாலியல் தொழிலாளியை நாடுவதைத் தடுக்கும் உரிமையையும் அரசுகள் கையில் எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் பாலியல் நோய சார்ந்த விழிப்புணர்வுகளை செய்வதை மட்டும் அரசுகள் நடைமுறைப்படுத்தியுள்ளன.

தனிமனித வக்கிரம், மித மிஞ்சிய பாலியல் உணர்வுகள், வண்புணர்வுகள், கள்ள உறவுகள்  என்பதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு அடிப்படை ரீதியிலான திருமண உறவற்ற தனிமனித பாலியல் தேவைக்கான தீர்வுகள் என்கிற வகையில் இருக்கும் வாய்ப்புகள் சுய இன்பம் அல்லது பாலியல் தொழிலாளியை நாடுவது ஆகிய இரண்டு மட்டுமே. பாலியல் தொழிலாளியை நாடுவதில் உள்ள ஆபத்துகள்  கடுமையான பாலியல் நோய் தொற்றுகள், அதனை பிறருக்கும் பரப்புதல் கூடவே பண விரயம். ஆனால் சுய இன்பம் எந்த ஆபத்தும் அற்றது என்பதால் தனிமனித பாலியல் தேவைக்கு சரியான தீர்வு அது மட்டுமே. 

மதங்கள் அனைத்துமே சுய இன்பத்தை பாவம் என்றும் ......செய்துவிட்டால் நரகம் என்றெல்லாம் பயமுறுத்துகின்றன, மதங்களின் கோட்பாட்டின் படி சுய இன்பத்திற்கு தண்டனைக் கிடைக்கும் என்றால் 99.9X விழுக்காடு ஆண்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு. ஒரு நகைச்சுவைக்காக சுய இன்பத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு ஒரு கைவெட்டப்படும் என்று வைத்துக் கொண்டால் யாருக்கு கை மிஞ்சும் ? ஒரு வேளை தண்டனை எதுவும் கிடைக்காதவருக்கு ஏற்கனவே கைகள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும், அல்லது செயல்படாத உறுப்பு கொண்டவராக இருக்க வேண்டும்.  மதங்கள் வேண்டுமென்றால் வேறு பிரச்சாரங்கள் செய்யலாம் அடுத்தவர் உறுப்பை அனுமதியின்றித் தொடுவது பாவம், தண்டனைக்குறியது. இது போன்ற கோட்பாடுகள் இருந்தால் வரவேற்பேன். வெளிநாடுகளில் தனிமையில் வசிக்கும் திருமணம் ஆன  ஆண்களுக்கு இதைவிட்டால் வேறு என்ன தீர்வை மதங்கள் சொல்லும் ?

நேற்று சித்த வைத்தியம் என்ற பெயரில் சுய இன்பம் பற்றி உளறி எச்சரித்த பதிவு ஒன்றை படிக்க நேரிட்டதால் தான் இதை எழுதுகின்றேன், மதவாதிகள் இதுபற்றி பெரிதாக எச்சரிக்கைக் கொடுப்பதில்லை, எழுதினால் ஏன் வம்பு என்று நக்கைக் கடித்துக் கொள்வதுடன் தன்கையையே கட்டிப் போட்டுக் கொண்டு தான் எழுத நேரிடும் என்பதால் அவர்கள் சுய இன்பம் பற்றி எழுத வெட்கம் அடைந்துள்ளார்கள் மற்றபடி நாமும் எழுதலாம், கைப் பழக்கம் இல்லாத சமூகத்தை உருவாக்கி சொர்கத்திற்கு அனுப்புவோம் என்று கனவு காணுவார்கள் ஆனாலும் அதற்கு அவர்கள் கை அனுமதிக்கனுமே ? காலத்துக்கும் ஏற்றக் கருத்துகள் எங்கள் மதப் புத்தக்கத்தில் முத்துகளாகக் கோர்க்கப்பட்டுள்ளன என்று அளந்துவிடும் எவரும் சுய இன்பம் பற்றி எழுதுவதை அடக்கி வாசித்தே வருகின்றனர்.  தனிமனிதன் யாருக்கும் தொல்லை இன்றி தாம் ஈடுபடும் சுய இன்பத்தை எந்த ஒரு அரசும் வெளிப்படையாக தடையாக அறிவிவிக்கவில்லை என்பதிலிருந்தே இது பற்றிய கருத்துகள் காலம் கடந்துவிட்டவை என்பது உறுதியாகின்றது, மதப் புத்தகங்களில் குறிப்பிட்ட பக்கங்களை பிய்து எரியுங்கள். கடவுள் மனிதர்களை எல்லை மீறி சோதிப்பது இல்லை, அதனால் தான் மனிதர்களின் உறுப்பை எட்டும் அளவுக்கு நீளமான கைகளையும் விரல்களையும் வழங்கியுள்ளான் - நம்புங்கள். :).  எந்த ஒரு அறிவியல் ஆய்வும் கட்டுப்பாடான சுய இன்பப் பழக்கத்தை தவறு என்று சொல்லவில்லை, மாறாக உடல் ரீதியான நன்மைகள் என்றே பட்டியல் இடுகின்றன. தேவையின் போது நாய் உள்ளிட்ட விலங்கினங்களும்  நாவினால் தனக்கு தானே செய்து கொள்கின்றன.  இணைப்பு

பசி, தூக்கம், உடல் அரிப்பு போன்று தனிமனித பாலியல் வேட்கையும் அதற்கான தீர்வும் தேவையான ஒன்றே, இதற்கு எளிய வழி தன்னின்ப தீர்வு தான்.  தன்னின்ப / கைப்பழக்க செயல்பாடுகள் தவறு என்றால் ஏன் தவறு ? எந்த வயதினருக்கு தவறு ? என்றெல்லாம் விளக்கிவிட்டு அதன் பிறகு அது பற்றிப் பேசலாம். மொட்டையாக விந்துவிட்டான் நொந்து கெட்டான் இவையெல்லாம் எதுகை மோனையாக எழுதப்பட்டது என்பது தவிர்த்து வேறெதும் அறிவுபூர்வமாக சொல்லவில்லை என்பதே உண்மை.

சுய இன்பம் தவறு என்கிற  முட்டாள்களின் தவறான வழிகாட்டல் மூலம் அரைகுறையாக புரிந்து கொள்ளும் பருவ வயதை எட்டிய ஒருவர் / திருமணம் ஆகாத ஒருவர், ஆண்/பெண் உறவே சரி என்று எண்ணி பாலியல் தொழிலாளியை நாடும் வழிகாட்டலாக எடுத்துக் கொள்வர், அதன் ஆபத்துகள் மிகுதி, கூடவே சிறுவர் / சிறுமியர்களையும் சீண்டிப்பார்க்க முயற்சிப்பார்கள் என்றாவது எழுதும் மடையர்களுக்கு தெரியுமா ? தெரிந்திருந்தால் அவ்வாறு எழுதமாட்டார்கள்.

39 கருத்துகள்:

JP சொன்னது…

அண்ணா, நல்லா கருத்து , நுணுக்க சிந்தனை. :), " 'விழிப்புணர்வு' - முட்டாள்களுக்காக எழுதவேண்டியுள்ளது. "

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்தும் உண்மை...

Rajan சொன்னது…

உங்கள் கருத்துக்கள் சரியே. இதனுடன் எது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றும் எழுதினாலேயே இந்த பதிவு முழுமை பெரும் என நினைக்கிறேன்

Yaathoramani.blogspot.com சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Yaathoramani.blogspot.com சொன்னது…

இதனைப் பெரிது படுத்திப் பிழைக்கும் முட்டாள்கள்
படித்தால் நல்லது தெளிவூட்டும் பதிவு
பகிர்வுக்கு நன்றி

suvanappiriyan சொன்னது…

:-))))))))))

:-((((((((((

Barari சொன்னது…

முட்டாள்களுக்காக எழுத வேண்டி உள்ளது //
இந்த தலைப்பே உங்களை பற்றி மதிப்பீடு செய்ய போதுமானது என்று எண்ணுகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த தலைப்பே உங்களை பற்றி மதிப்பீடு செய்ய போதுமானது என்று எண்ணுகிறேன்//

முட்டாள்களுக்கும் அது போதுமானதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்

வடுவூர் குமார் சொன்னது…

கவிஞர்களின் சிந்தனை சிறகுகள் படபடக்க மறுத்துவிட்டன
சமீபமாக உங்கள் கவிதை பதிவில் ஒன்றையும் பார்க்க முடியைவில்லையே!

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் கூறியது...
கவிஞர்களின் சிந்தனை சிறகுகள் படபடக்க மறுத்துவிட்டன
சமீபமாக உங்கள் கவிதை பதிவில் ஒன்றையும் பார்க்க முடியைவில்லையே!//

கவிதைவாசிப்பவர்கள் கொஞ்ச பேர் தான் என்பதால் எழுதுவதில்லை அண்ணா

Unknown சொன்னது…

கோவி கண்ணன் .... இயற்கையான உடல் உறவின் போது முதலில் இச்சை நீர் வெளிப்படும்,,,பின்பு விந்து வெளிப்படும்...இது தான் உடலுக்கு ஏற்ற முறை....ஆனால் சுய இன்பத்தின் போது இச்சை நீர் வெளிவராமல் விந்து நேரடியாகவே வெளிவந்து விடும்...இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்...அதனால் மனைவி இடத்தில செல்வதற்கு கூட சக்தி அற்றவர்களாக ஆகி விடுவோம்...இன்று பெரும்பாலான கள்ள தொடர்பிற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்...முடிந்தவரை அதை தவிற்பதற்கு தான் நம் ஆலோசனை தர வேண்டும் மாறாக அதை ஆதரிப்பதாக இருக்க கூடாது...

நன்றியுடன்
நாகூர் மீரான்

கோவி.கண்ணன் சொன்னது…

//இயற்கையான உடல் உறவின் போது முதலில் இச்சை நீர் வெளிப்படும்,,,பின்பு விந்து வெளிப்படும்...இது தான் உடலுக்கு ஏற்ற முறை....ஆனால் சுய இன்பத்தின் போது இச்சை நீர் வெளிவராமல் விந்து நேரடியாகவே வெளிவந்து விடும்...இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்//

எல்லாத்திலும் எல்லாமும் வெளிப்படும், எவ்வளவு நேரம் ஈடுபடுத்தப்படுகிறது, எந்த அளவு உணர்வு இருக்கிறது என்பதைப் பொறுத்ததே.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

அந்த பதிவில் கொஞ்சமும் சமூக அக்கறை இன்றி எழுதப்பட்ட பதிவு என்று நீங்கள் சாடியிருக்கிறீர்கள்...

இந்தப் பதிவு இன்னும் அதிகமாகச் சாடப் பட வேண்டிய பதிவு.

:((

சிறார்களையும், விலை மாதர்களிடம் செல்வதையும் தவிர்ப்பதற்காக இந்தப் பதிவு என்ற தொனியில் எழுதி, உங்கள் 'சமூக அக்கறை'யை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..

திருடுவது தவறு என்று ஒருவர் சொன்னால், கொலை செய்து திருடுவதும்,கற்பழித்துத் திருடுவதும் அதிகப்பட்டு விடும் எப்படித் திருடுவதைக் குறை சொல்லலாம் என்பது போல இருக்கிறது இந்த வாதம்.

முழுக்க முழுக்க கண்டனம் செய்யப் பட வேண்டிய பதிவு.

விழித்துக்கொள் சொன்னது…

arivirpoorvamaana padhivu nandri
surendran

வேடிக்கை மனிதன் சொன்னது…

Ithu pavam endru munpellam vayathu vantha siruvarkalin kaikalai iravil katti pottu viduvarkal endru kooda paditha gnabakam

வேடிக்கை மனிதன் சொன்னது…

Ithu pavam endru munpellam vayathu vantha siruvarkalin kaikalai iravil katti pottu viduvarkal endru kooda paditha gnabakam

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

// முட்டாள்களுக்காக எழுதவேண்டியுள்ளது // எப்பொழுதும்

பாண்டியன் சொன்னது…

கோவி.கண்ணன் said

எனக்கு தெரிந்து 15 வயதில் இருந்தே சுய இன்பப் பழக்கம் உள்ளவர்கள் கூட நல்ல தான் இருக்கிறார்கள் ///

இது தவறான கூற்று . எதையும் தெரிந்து கொள்ளாமல் பேசக்கூடாது கோவி.கண்ணன். "விந்து விட்டான். நொந்து கெட்டான்" என்கிற பழமொழி உள்ளது. பழமொழிக்காக சொல்லவில்லை என்றாலும் - 15 வயதிலிருந்து இதை செய்கிறவன் சக்கையாக தான் மனைவியிடம் போவான். ஆங்கில மருத்துவர்கள் "ஒரு அளவுடன் வைத்து கொண்டால் தவறில்லை" என்பார்கள். அளவாக குடித்தால் தவறில்லை என்பது போல தான் இதுவும்... மீள முடியாமல் செய்துவிடும். ஆனால் சித்த மருத்துவமோ, "தவறான பழக்கம்" என்று சொல்லும். அப்படி அறிவுறுத்துகிற பட்சத்தில் - குறைவான எண்ணிக்கையில் செய்து தப்பிக்கக்கூடும்.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,
நல்ல பதிவு.

இம்மாதிரி விடயங்களும் பதிவுலகில் விவாதிக்கப்படுவது வரவேற்கத் தக்கது.

சுய இன்பம செய்தால் நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு ஏற்படும் என்பதெல்லாம் அறிவியல் சான்றுகள் அற்றவை. எனவே வாலிப வயோதிக அனப்ர்களே என்னும் விளம்ப‌ரம் சார்ந்து எழுந்த கருத்துகளே.
இதில் பல நகைச்சுவை விடயங்கள் சொல்வார்கள்

சுய இன்பம் செய்யும் ஆண்கள் 99 %.மீதி 1% பொய் சொல்லும் பழக்கம் உடையவர்கள்.ஹி ஹி

கமலஹாசன் கூட ஒருமுறை இது பற்றி எழுதும் போது ஒரு மருத்துவரிடம் இப்படி செய்தால் நரம்புத் தளர்ச்சி வருமா என்ற போது ,அம்மருத்துவர் தன் கையை மடக்கி பார்த்து அப்படி ஒன்றும் தெரியவில்லையே என் கூறியதாக எழுதினார்.

ஆகவே இதுவும் இயல்பான விடயமே. ஆனால் இது பற்றிய குற்ற உணர்வு தவறு.அதிக நேரம் தனிமையில் இருப்பதை தவிர்த்தல் புத்தகம், இசை, இணையம் என சில ஈடுபாடுகளை ஏற்படுத்தினால் குறைக்க்லாம்!!
http://men.webmd.com/guide/masturbation-5-things-you-didnt-know

http://www.newscientist.com/article/dn3942-masturbating-may-protect-against-prostate-cancer.html

நன்றி

kk சொன்னது…

தைரியமான பதிவு... வாழ்த்துக்கள் //"முட்டாள்களுக்காக எழுதவேண்டியுள்ளது .....!"// சில சமயம் இப்படியான மூட நம்ப்க்கையுள்ளவர்களை நினைத்தால் தலையை எங்காவது முட்டிக்கொள்ளலாம என்று கூட தோன்றும் முடியலப்பா

கோவி.கண்ணன் சொன்னது…

//அந்த பதிவில் கொஞ்சமும் சமூக அக்கறை இன்றி எழுதப்பட்ட பதிவு என்று நீங்கள் சாடியிருக்கிறீர்கள்...//

அந்தப் பதிவில் இளைஞர்கள் என்று மொட்டையாக எழுதி இருந்தார்கள், எத்தனை வயது இளைஞர்கள் என்றெல்லாம் எந்தக் குறிப்பும் இல்லை. தனிமனித பாலியல் தேவை குறித்த அரைகுறைப் புரிதலுடன் எழுதுவது தவறு.

கோவி.கண்ணன் சொன்னது…

//"ஒரு அளவுடன் வைத்து கொண்டால் தவறில்லை" என்பார்கள். அளவாக குடித்தால் தவறில்லை என்பது போல தான் இதுவும்... மீள முடியாமல் செய்துவிடும். ஆனால் சித்த மருத்துவமோ, "தவறான பழக்கம்" என்று சொல்லும். அப்படி அறிவுறுத்துகிற பட்சத்தில் - குறைவான எண்ணிக்கையில் செய்து தப்பிக்கக்கூடும்.//

எல்லாம் அளவோடு தான், எல்லா நேரமும் நினைத்த மாத்திரத்தில் செய்யலாம் என்று நானும் எழுதவில்லை. மீள முடியாமல் செய்துவிடும் என்போர் தாம் அது போல் ஒருபோதும் செய்ததே இல்லை என்று சொல்லவும் துணிவார்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//இம்மாதிரி விடயங்களும் பதிவுலகில் விவாதிக்கப்படுவது வரவேற்கத் தக்கது.
//

நன்றி சார்வாகன்.

:)

இக்பால் செல்வன் அளவுக்கு குறிப்புகள், மேற்கோள்கள், இணைப்புகளோடு என்னால் எழுத முடியாது.

? சொன்னது…

பல முஷ்டி மைதுன எதிர்ப்பாளர்களை காணத்தக்கதாக உள்ளது. ஆனால் முஷ்டி மைதுனம் செய்யாமல் கட்டுப்படுத்துவது அவர்களுக்கு கடினமாக இருக்கலாம். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பல ஐட்டங்களை இந்த பிளாக்கில் விவரிக்கிறார்கள். இவற்றை அவர்கள் தானும் உபயோகப்படுத்தி தாங்கள் குழந்தைகளுக்கு வாங்கி தந்து சுவனத்தை உறுதிசெய்து கொள்ளலாம்.

எச்சரிக்கை: தொடுப்பு வயதுவந்தவர்களுக்கு மட்டும்.

ஜோதிஜி சொன்னது…

யானை படத்தை பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கேன். கருத்தை எழுத வந்தவனை கத்தி சிரிக்க வச்சுட்டீங்க.

சதீஷ் செல்லதுரை சொன்னது…

இது ஒரு இயற்கை.குற்ற உணர்ச்சி இல்லாமல் இருந்தாலே போதும்...ஏனென்றால் அது குற்றமில்லை.பல தனிவர்களுக்கு ஆறுதல் அதுவே.அனுபவிக்கட்டும் சார் பயங்காட்டாதிங்க...

குழலி / Kuzhali சொன்னது…

//இது தவறான கூற்று . எதையும் தெரிந்து கொள்ளாமல் பேசக்கூடாது கோவி.கண்ணன். "விந்து விட்டான். நொந்து கெட்டான்" என்கிற பழமொழி உள்ளது. பழமொழிக்காக சொல்லவில்லை என்றாலும் - 15 வயதிலிருந்து இதை செய்கிறவன் சக்கையாக தான் மனைவியிடம் போவான்//

அதெல்லாம் ஒரு வெண்ணையும் கிடையாது, 15 வயது என்ன 15 வயசு அதுக்கு முன்னாடியே இருந்தே தான் நடக்குது... அதுக்காக மனைவியிடம் சக்கையாகவா போறாங்க.... இதெல்லாம் டுபாக்கூர்....

//"ஒரு அளவுடன் வைத்து கொண்டால் தவறில்லை" என்பார்கள். அளவாக குடித்தால் தவறில்லை என்பது போல தான் இதுவும்... மீள முடியாமல் செய்துவிடும். ஆனால் சித்த மருத்துவமோ, "தவறான பழக்கம்" என்று சொல்லும். அப்படி அறிவுறுத்துகிற பட்சத்தில் - குறைவான எண்ணிக்கையில் செய்து தப்பிக்கக்கூடும்.//
மருத்துவப்படி இதற்க்கெல்லாம் அளவும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது.... கை வலிக்கும் வரை, சாமான் வலிக்கும் வரை மனசு இடம் கொடுக்கும் வரை செய்து கொண்டே இருக்கலாம்...

சுய இன்பம் பற்றி ரொம்ப கவலைப்படுபவர்கள் மதவாதிகளும், லாட்ஜ் வைத்தியர்களும் மேலும் சில அறிவிலிகளுமே...

கோவி.கண்ணன் சொன்னது…

//மருத்துவப்படி இதற்க்கெல்லாம் அளவும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது.... கை வலிக்கும் வரை, சாமான் வலிக்கும் வரை மனசு இடம் கொடுக்கும் வரை செய்து கொண்டே இருக்கலாம்...//

:) கூடவே யாரும் பார்க்காத வரை ன்னு இருக்கனுமோ

thanjai gemini சொன்னது…

vidunga boss kalyanam anavanuku pondatingrathu kai mathuri ana kalyanam aagathavanukku kai than pondatiye

Gujaal சொன்னது…

// 15 வயதிலிருந்து இதை செய்கிறவன் சக்கையாக தான் மனைவியிடம் போவான். //

தவறான கருத்து :)

kamalakkannan சொன்னது…

கல்யாணம் ஆகாத வயசு பசங்க கூட சேராதிங்கன்னா அப்புறம் இப்படித்தான் எழுத தோணும் :)

naren சொன்னது…

ஓண்ணுமே செய்யாமல் விட்டாலும் அளவை அடைந்தவுடன் விந்து தானாக வெளியே வந்துவிடும், இதவும் ஒருவகை சுய இன்பம்தான். ஆனால் இந்த இயற்கையான நிகழ்வையும் தப்பு என்று கூறி பணம் செய்கிறார்கள் வாலிப வயோதிக சித்த வைத்தியர்கள்.

பெயரில்லா சொன்னது…

மிகவும் அருமையான பதிவு சகோ.

இந்தக் காலத்தில் மணம் முடிப்பது என்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆண்களுக்கு சராசரி 28 ஆகவும், பெண்களுக்கு 25 ஆகவும் மாறியுள்ளது.

மேற்கு நாடுகளில் இது ஆண்களுக்கு 30 வயதுக்கு மேலும், பெண்களுக்கு 30 வயதைத் தொடும் தருவாயில் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் ..

// திருமண உறவற்ற தனிமனித பாலியல் தேவைக்கான தீர்வுகள் என்கிற வகையில் இருக்கும் வாய்ப்புகள் சுய இன்பம் அல்லது பாலியல் தொழிலாளியை நாடுவது ஆகிய இரண்டு மட்டுமே. //

மிகச் சரி . இவற்றில் மூன்றாம் நிலையும் வந்துவிட்டது. அது களவொழுக்கம் என்படும் மணத்துக்கு முந்திய பாலியல் உறவுகள் !!! இந்தியா போன்ற நாடுகளில் இதன் போக்கு இப்போது தான் வரத் தொடங்கியுள்ளாது .. ஆனால் இதில் பல மனச் சிக்கல்கள் போன்ற சிக்கல்கள், பாதுகாப்பின்மை இருக்கின்றன. அது அவரவர் சமாளிப்புத் திறனைப் பொருத்தது !

//வெளிநாடுகளில் தனிமையில் வசிக்கும் திருமணம் ஆன ஆண்களுக்கு இதைவிட்டால் வேறு என்ன தீர்வை மதங்கள் சொல்லும் ?//

ஹிஹி ! சரியான கேள்வி !!! மத்தியக் கிழக்கில் கொடிக் கட்டிப் பறக்கும் மறைமுக பாலியல் தொழில்களும் இதனாலேயே !!!

மதங்களால் மனித உணர்வு வேட்கைக்கு தீர்வு தரமுடியவில்லை. உச்சப் பட்சமாக திருமணம் ஒன்றே தீர்வாக உள்ளன .

ஒருக் காலத்தில் ஐரோப்பாவில் பதின்ம வயதினரின் பிறப்புறுப்புக்களுக்கு பூட்டுப் போடும் வழக்கமும் இருந்தது. ஐயகோ !

இதில் கொடுமை இந்த லாட்ஜ் சித்த வைத்தியர்கள் பிரச்சாரம். வாழ்க்கையே போச்சு, அது பண்ணினால் செக்ஸ் பலமே போய்விடும், சத்துப் போய்விடும், இளைத்துவிடுவோம், பெண்டாட்டி ஓடியே போய்விடும் என்றெல்லாம் உதார் விடுவார்கள் .. அதனை இன்றளவும் பலர் நம்பவே செய்கின்றனர்.

கைமைதுனம் / சுய இன்பம் என்பது உயர் விலங்குகள் அனைத்திலும் காணப்படும் இயல்பான ஒரு குணமே !!! துணைக் கிட்டாத போது எழும் வேட்கையைத் தணித்துக் கொள்ள ஒரு உபாயம்.

மனிதர்களுக்கு துணைகள் பலக் கிட்டும் வாய்ப்பு இருந்தும், கலாச்சார, பொருளாதார நெருக்கடிகளால் பலருக்கும் பாலியல் தேவை என்பது வெறும் கனவாகவே போய்விடுகின்றன.

கிளர்ச்சிக்களை அடக்கி வைக்க வைக்க அது வெறியேற்றப்பட்டு கற்பழிப்புக்கள், சிறார் பாலியல் துன்புறுத்தல், பாலியல் தொழிலாளி என்று உச்சக்கட்டம் சென்றுவிடுகின்றன. பாலியல் தொழிலாளியிடம் போவது அடக்க முடியாதவர்கள் தான். ஆனால் அதில் தொற்று நோய்கள் வரக் கூடிய சாத்தியம் ஏராளம் ..

ஆகவே சுய இன்பம் என்பதே தனி மனித ஒழுக்கத்துடன் தனக்கும் பிறருக்கும் எவ்வித கேடும் இல்லாமல் தனது வேட்கையை தணித்துக் கொள்ள வழியாக அமையும் .. அல்லது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் !!!

பெயரில்லா சொன்னது…

மிகவும் அருமையான பதிவு சகோ.

இந்தக் காலத்தில் மணம் முடிப்பது என்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆண்களுக்கு சராசரி 28 ஆகவும், பெண்களுக்கு 25 ஆகவும் மாறியுள்ளது.

மேற்கு நாடுகளில் இது ஆண்களுக்கு 30 வயதுக்கு மேலும், பெண்களுக்கு 30 வயதைத் தொடும் தருவாயில் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் ..

// திருமண உறவற்ற தனிமனித பாலியல் தேவைக்கான தீர்வுகள் என்கிற வகையில் இருக்கும் வாய்ப்புகள் சுய இன்பம் அல்லது பாலியல் தொழிலாளியை நாடுவது ஆகிய இரண்டு மட்டுமே. //

மிகச் சரி . இவற்றில் மூன்றாம் நிலையும் வந்துவிட்டது. அது களவொழுக்கம் என்படும் மணத்துக்கு முந்திய பாலியல் உறவுகள் !!! இந்தியா போன்ற நாடுகளில் இதன் போக்கு இப்போது தான் வரத் தொடங்கியுள்ளாது .. ஆனால் இதில் பல மனச் சிக்கல்கள் போன்ற சிக்கல்கள், பாதுகாப்பின்மை இருக்கின்றன. அது அவரவர் சமாளிப்புத் திறனைப் பொருத்தது !

//வெளிநாடுகளில் தனிமையில் வசிக்கும் திருமணம் ஆன ஆண்களுக்கு இதைவிட்டால் வேறு என்ன தீர்வை மதங்கள் சொல்லும் ?//

ஹிஹி ! சரியான கேள்வி !!! மத்தியக் கிழக்கில் கொடிக் கட்டிப் பறக்கும் மறைமுக பாலியல் தொழில்களும் இதனாலேயே !!!

மதங்களால் மனித உணர்வு வேட்கைக்கு தீர்வு தரமுடியவில்லை. உச்சப் பட்சமாக திருமணம் ஒன்றே தீர்வாக உள்ளன .

ஒருக் காலத்தில் ஐரோப்பாவில் பதின்ம வயதினரின் பிறப்புறுப்புக்களுக்கு பூட்டுப் போடும் வழக்கமும் இருந்தது. ஐயகோ !

இதில் கொடுமை இந்த லாட்ஜ் சித்த வைத்தியர்கள் பிரச்சாரம். வாழ்க்கையே போச்சு, அது பண்ணினால் செக்ஸ் பலமே போய்விடும், சத்துப் போய்விடும், இளைத்துவிடுவோம், பெண்டாட்டி ஓடியே போய்விடும் என்றெல்லாம் உதார் விடுவார்கள் .. அதனை இன்றளவும் பலர் நம்பவே செய்கின்றனர்.

கைமைதுனம் / சுய இன்பம் என்பது உயர் விலங்குகள் அனைத்திலும் காணப்படும் இயல்பான ஒரு குணமே !!! துணைக் கிட்டாத போது எழும் வேட்கையைத் தணித்துக் கொள்ள ஒரு உபாயம்.

மனிதர்களுக்கு துணைகள் பலக் கிட்டும் வாய்ப்பு இருந்தும், கலாச்சார, பொருளாதார நெருக்கடிகளால் பலருக்கும் பாலியல் தேவை என்பது வெறும் கனவாகவே போய்விடுகின்றன.

கிளர்ச்சிக்களை அடக்கி வைக்க வைக்க அது வெறியேற்றப்பட்டு கற்பழிப்புக்கள், சிறார் பாலியல் துன்புறுத்தல், பாலியல் தொழிலாளி என்று உச்சக்கட்டம் சென்றுவிடுகின்றன. பாலியல் தொழிலாளியிடம் போவது அடக்க முடியாதவர்கள் தான். ஆனால் அதில் தொற்று நோய்கள் வரக் கூடிய சாத்தியம் ஏராளம் ..

ஆகவே சுய இன்பம் என்பதே தனி மனித ஒழுக்கத்துடன் தனக்கும் பிறருக்கும் எவ்வித கேடும் இல்லாமல் தனது வேட்கையை தணித்துக் கொள்ள வழியாக அமையும் .. அல்லது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் !!!

நன்னயம் சொன்னது…

"மலேசியாவில் முஸ்லிமல்லாத சமுதாயத்தின் நிலையைப் பற்றி தேசியப் பதிவு இலாகா பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் திருமணம் ஆகாமல் பெண்கள், குழந்தைகள் பெறும் சம்பவங்கள் கவலைக்குரிய கட்டத்தை அடைந்துள்ளது. இவர்களில் அதிகமானோர் கல்லூரிப் பெண்கள். 17 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதில் அதிகமாக இருக்கிறார்கள் என்று தேசிய பதிவு இலாகா இயக்குனர் டத்தோ அஜிகான் கூறுகிறார். ஆதாரம்: 5-1-2002 தேதியிட்ட மலேசியா நண்பன் நாளிதழ்.

இரண்டாம் தாரமாகவாவது மணந்து கொண்டு சட்டப்பூர்வ உரிமை தந்தால் மட்டுமே முஸ்லிம் பெண்கள் தங்களை ஆண்களிடம் ஒப்படைக்கிறார்கள். http://suvanappiriyan.blogspot.com/2011/12/blog-post_14.html

முஸ்லிமல்லாத பெண்களோ ஆசை வார்த்தை காட்டப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர். குழந்தை பெற்ற பின் நிராதரவாக விடப்படுகின்றனர்." இந்த பொன் மொழிகளை உதிர்த்தவர் திரு சுவன பிரியன். அவரது கருத்து படி முஸ்லிம் பெண்கள் படி தாண்டா பத்தினிகள் முஸ்லிம் அல்லாத இந்திய பெண்கள் XXXX. இது அவரது கருத்து. எனக்கு படியிலும், தாண்டுவதிலும் நம்பிக்கை இல்லை. அதை விடுவோம். ஆனால் சுவன பிரியன் கூறியதற்கு மாறாக நிலவரம் மலேசியாவில் காணப்படுகிறது.
Bear in mind that on average, there is an illegitimate Malay child being born every half an hour in Malaysia last year. This statistic is according to a Berita Harian report dated March 21, 2010 which said 17,303 Malay children were born out of wedlock in 2009 and given birth certificates.
http://suarakeadilanmalaysia.wordpress.com/2012/06/16/there-is-an-illegitimate-malay-child-being-born-every-half-an-hour-in-malaysia/

மேலும் அறிய
http://www.e-mfp.org/2012v7n1/pregnant-adolescents.html
http://www.themalaysianinsider.com/malaysia/article/sex-abstinence-campaign-is-not-oppressive-selangor-mb-says
http://www.google.com.my/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=55&cad=rja&ved=0CEAQFjAEODI&url=http%3A%2F%2Fwww.moh.gov.my%2Fattachments%2F2112&ei=s_lJUJnbBs_yrQfblIDYAQ&usg=AFQjCNH5osc9Nh7cT1QOJKeA5DZ-aDt-Ww&sig2=e4d90jYVaPCQZHZE8OFuLw

தற்போது மலேசியாவில் திருமனத்திட்க்கு முன்பதான உடலுறவு ஒரு சாதா விடயமாகி வருகிறது. மத வேறு பாடு கிடையாது. நோன்பு காலத்தில் மட்டும் செலங்கோர் மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 52 மலாய் ஜோடிகளை போலீஸ் கைது செய்தது. இனிமேல் சு.பி அவர்கள் இஸ்லாம் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள் என்று சாக்கு போக்கு கோரலாம்.

நன்னயம் சொன்னது…

யானை படம் அட்டகாசம்.

Gujaal சொன்னது…

அனுபவத்தில் கண்டது, அது ஒரு நல்ல stress-buster.

**இயற்கையான உடல் உறவின் போது முதலில் இச்சை நீர் வெளிப்படும்,,,பின்பு விந்து வெளிப்படும்...இது தான் உடலுக்கு ஏற்ற முறை....ஆனால் சுய இன்பத்தின் போது இச்சை நீர் வெளிவராமல் விந்து நேரடியாகவே வெளிவந்து விடும்.
**

தவறான கருத்து :)

**ஆனால் சித்த மருத்துவமோ, "தவறான பழக்கம்" என்று சொல்லும். அப்படி அறிவுறுத்துகிற பட்சத்தில் - குறைவான எண்ணிக்கையில் செய்து தப்பிக்கக்கூடும்.**

சித்த வைத்தியர்களும் ஓர் அளவோடு அறிவுரை சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம்.

தருமி சொன்னது…

அந்த ஐயா எம்புட்டு கண்ணீர் விட்டு, கவலைப் பட்டு பாடம் சொல்றார் தொலைக்காட்சிகளில். அவரப் பார்த்தா எனக்கே கண்ணு கசிஞ்சிருது. நீங்க என்னடான்னா இப்படி தூக்கி வீசிட்டு போறீங்களே!

n_mohan சொன்னது…

உண்மை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்