உலகில் இருவகைப் பொருள்கள் தான் உண்டு, ஒன்று உயிருள்ளவை மற்றது உயிரற்றவை. உயிருள்ளவற்றில் தானியங்கி இயக்கம் இருக்கும், மிகப் பெரிய திடப் பொருள்களான பூமி உள்ளிட்ட கோள்களான உயிரற்றவற்றில் இருக்கும் இயக்கம் புறத்தூண்டல்களினால் ஏற்படுவது. இந்த புறத்தூண்டல் பால்வெளி, பரவெளி ஆகியவற்றில் பிணைந்(த்)திருக்கும் காந்தவிசை.
அசைவு என்பது தவிர்த்து உயிருள்ளவை, உயிரற்றவை இவற்றின் வேறுபாடுகள் அவை மாற்றத்திற்கு உட்படப் போகும் காலம் மட்டும் தான். இரண்டிற்குமே சிதைவு என்பது என்றோ ஒரு நாள் ஏற்படும் உறுதியான ஒன்று. உயிருள்ளவை குறுகிய காலத்திற்குள் முழுவளர்ச்சி அடைந்த பிறகோ, விபத்துகளாலோ சிதைவைடையும், உயிரற்றவை சுற்றுச் சூழல் (குறிப்பாக நீர் மற்றும் காற்றின் இரசாயன சேர்க்கை) இவற்றினால் என்றோ ஒரு நாள் மூலக் கூறுகளில் மாற்றம் ஏற்பட்டு சிதைவடையும், அல்லது அதை மனிதர்களே சிதைப்பதன் மூலம் அவற்றின் தன்மை மற்றும் அமைப்பு மூலக் கூறு ஆகிய அனைத்தும் சிதைந்து பிற வடிவம் எடுக்கும். ஆனால் எந்த ஒரு பொருளையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது அதன் வடிவங்களை மூலக்கூறுகளை மாற்றி அமைக்கலாம் இது தான் இயற்பியல் தத்துவத்தின் பேருண்மை. மனிதன் வரலாறுகளின் வரையரை காலம் முதல் இன்று வரை (நிலவின் மண் என்பதைத் தவிர்த்து) புதிய பொருள்கள் என்று எதுவுமே 'தோன்றியது' இல்லை. இருப்பவற்றைத் தான் பயன்படுத்துகிறோம். வெறும் கடற்கரை மணல் அதில் கடல் நீரைச் சேர்த்து பிசைந்து அவற்றை உருவங்கள் ஆக்குவது போன்றது தான் நமது கண்டுபிடிப்புகள் அனைத்துமே. குறிப்பாக சொல்லப் போனால் ஆற்றல்களின் தன்மைகளை மாற்றி பயன்படுத்திக் கொள்வது (நீரின் விசையில் இருந்து மின்சாரம், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் என்பது போல்) இவற்றைத்தான் மனித அறிவின் வழி செய்திருக்கிறோம்.
மனிதன் எத்தனை ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தாலும் அழியாத பொருள், மாற்றத்திற்கு உட்படாத பொருள் என்று எந்த ஒன்றையும் அடையாளப்படுத்துவிட முடியாது. அதற்கு சாட்சியாக சிதைந்த வடிவத்தில் இருக்கும் எகிப்து பிரமீடுகளைப் பார்க்கிறோம். அவை 5 ஆயிரம் ஆண்டுகள் கடந்து நின்றாலும் அவற்றின் சிதைந்த வடிவத்தைக் காண்கிறோம், இன்னும் ஓர் 5 ஆயிரம் ஆண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளிலோ அங்கு பிரமீடுகள் இருந்தன என்கிற தடயமே இல்லாமல் போய்விடும்.
பிரமீடுகள் மட்டும் அல்ல அனைத்துவகையான மத வழிபாட்டுத்தளங்களும், கோவில் சிலைகளும் கூட சிதைவுக்கு உட்பட்டவையே. ஒரு காலத்தில் மிகப் பெரிய அளவில் வணங்கப்பட்ட புத்தர் சிலைகள் ஆசிய நாடுகளில் சிதைந்த வடிவில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. கவனிப்பார் இன்றிய கோவில்கள் பல சிதலமடைந்து கிடக்கின்றன. கவனிப்பு கவனிப்பு இன்மை இவை இரண்டு காரணிகள் தவிர்த்து எந்த ஒரு பொருளும் சிதைவை நோக்கிய பயணத்தில் தான் இருக்கின்றன, கவனிப்பினால் அந்த சிதைவின் காலம் சற்று தள்ளப்படும் மற்றபடி எந்த ஒரு பொருளின் சிதைவையும் முற்றிலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பொருள்கள் அனைத்துமே சிதைவுக்கு உட்பட்டவை. பொருள்கள் அனைத்தும் சிதைவுக்கு உட்பட்டவை என்பது தத்துவமோ, புதிய சிந்தனையோ, கண்டுபிடிப்போ இல்லை, காலம் காலமாக நாம் கண்ணுறும் உண்மை.
இந்த அடிப்படை கூடத் தெரியாதவர்கள் என்று நாம் நமது சோதிடக்காரர்களை சொல்லிவிட முடியாது, இது முற்றிலும் படிக்காத பாமரனுக்குக் கூடத் தெரிந்த உண்மையே. ஆனாலும் சோதிடக்காரர்கள் ஏன் 'காளகஸ்தி கோவில் கோபுரம் இரண்டாக பிளந்ததை வைத்து பல்வேறு தரப்புகளை பயமுறுத்துகிறார்கள் என்றால் வெறும் பிழைப்பு வாதம் தான். மனிதனுக்கு இருக்கும் அடிப்படை பயம் அதைப் பயன்படுத்திக் கொண்டு இன்னின்ன ராசிக்காரர்களுக்கு கோபுரம் சிதைந்தால் பாதிப்பு என்று கிளப்பிவிட்டால் கல்லா நிறையாதா என்கிற பேராசையே. நாட்டில் நாடுகடுத்தப் படவேண்டியவர்களில் போலி சாமியார்களுக்கு அடுத்தபடியாக போலி சோதிடர்களைச் சேர்க்கலாம். மதப் பழமைவாதிகள் எப்படி மக்களை கற்காலத்துக்கு கட்டி இழுத்துச் செல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தட்டிக் கொடுத்து கூடவே சேர்ந்து கயிறு இழுப்பவர்கள் இந்த சோதிடர்கள் தான்.
கோபுரம் இடிந்ததால் நாட்டுக்கு ஆபத்தாம், அரசாள்பவர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கு ஆபத்தாம், ஆறு ராசிக்காரர்களுக்கு ஆபத்தாம். பாபர் மசூதியை இடித்த பிறகு ஏற்பட்ட ஆபத்துகளைவிடவா ஏற்பட்டுவிடப் போகிறது ?
போலி சாமியார்களை விரட்டுவது போலவே போலி சோதிடர்களையும் விரட்டினால் தான் பில்லி சூனியம் போன்ற ஒரு மாய நம்பிக்கையின் வழியில் வழிபாட்டு நம்பிக்கைகள் செல்லாது.
தொடர்புடைய செய்தி : காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
25 கருத்துகள்:
"சோதிடர்களுக்கு சுண்ணாம்பு தடவினால் என்ன ?"//
அவங்க என்ன கள்ளா? சுண்ணாம்பு தடவி பதநீராக்க!?
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
"சோதிடர்களுக்கு சுண்ணாம்பு தடவினால் என்ன ?"//
அவங்க என்ன கள்ளா? சுண்ணாம்பு தடவி பதநீராக்க!?//
கற்காலத்திலிருக்கும் அவர்களுக்கு கற்கால கழுதை மேல் ஏற்றும் தண்டனை கொடுக்கனும். அதுக்கு தான் சுண்ணாம்பு
சுண்ணாம்பு தமிழருக்கே உரிய சங்குல இருக்கு!
அத இந்த நத்தைகளாகிய ஜோதிட சிகாமணிகளுக்கு ஊதலாமே!
சுண்ணாம்பு காளாவையில வச்சு நீக்குறதுன்னு சொல்வாங்களே அத சொல்ல வர்றியளா!
இருந்தாலும் கோபுரம் இடிந்ததில் உங்களுக்கு இருக்கும் கவலையை அறிய முடிகிறது.:)
போலி சாமியார்களை விரட்டுவது போலவே போலி சோதிடர்களையும் விரட்டினால் தான்(சுண்ணாம்பு தடவினால் தான்!!!) பில்லி சூனியம் போன்ற ஒரு மாய நம்பிக்கையின் வழியில் வழிபாட்டு நம்பிக்கைகள் செல்லாது.
நல்ல பதிவு...
Kovi,
jothidam entrale poli than,appuram enna extra polijothidam? Mothama ellarukum su..sunnambu than.but koodave vethalai,seeval,pannir pogalai kettalum kepanunga!
Kovi,
jothidam entrale poli than,appuram enna extra polijothidam? Mothama ellarukum su..sunnambu than.but koodave vethalai,seeval,pannir pogalai kettalum kepanunga!
கோபுரம் இடிந்ததால் நாட்டுக்கு ஆபத்தாம், அரசாள்பவர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கு ஆபத்தாம், ஆறு ராசிக்காரர்களுக்கு ஆபத்தாம். பாபர் மசூதியை இடித்த பிறகு ஏற்பட்ட ஆபத்துகளைவிடவா ஏற்பட்டுவிடப் போகிறது ?
//////////
ha ha
பதிவு போட்டாச்சா
இவனுகளையெல்லாம் நாடுகடத்தனும்
கேக்குறவன் ....ன்னா என்ன வேனாலும் சொல்லுவானுக
என் அப்பாயி(அப்பாவின் அம்மா) சக்கரை நோயால் பாதிக்க பட்ட போது ஆறு மாதத்தில் உயிர் போய்விடும் என்றார்கள்,ஆறு வருடம் ஆச்சு
Kovi,
jothidam entrale poli than,appuram enna extra polijothidam?
///////////
இத நனும் ஆதரிக்கிறேன்
அண்ணே சுண்ணாம்பு தடவுனா எரியுமே?.
அதென்ன போலி சோதிடர்கள் மற்றும் போலி சாமியார்கள்?/
அப்போ உங்களுக்கு உண்மை சோதிடர்கள் மற்றும் உண்மை சாமியார்கள்(அப்படி இருக்குமா??) யார் என்கிற புரிதல் இருந்தால் என்னை மாதிரியான முட்டாள்களுக்கு விளக்கலாமே??
உலகில் பயனற்றவை என்றால் அது நம் வீண் (?) எண்ணங்கள் மட்டுமே !
இதைவிட வேறு வார்த்தைகள் வேண்டுமா?
நல்ல “காலம்” நான் சோதிடத்தை நம்புவதில்லை
,
காலம் காலமாய்ப் பின்பற்றுவதைக் இந்தக் “காலம்”
இப்படிச் சொல்லலாமா?
இந்தக் “காலம்”மில்ல கடவுள் வந்து நம்பவேண்டாம்
என்று சொன்னாலும்...
மூடமனிதர்கள்{சிலர்} நம்புகிறார்கள் பொய்யான
{சில} சோதிடர்களையும்,சோதிடங்களையும்!!
நன்றி
மிக காத்திரமான கட்டுரை தோழர் ...
வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன் ...
பொருள்கள் அனைத்தும் சிதைவுக்கு உட்பட்டவை என்பது தத்துவமோ, புதிய சிந்தனையோ, கண்டுபிடிப்போ இல்லை.... சிதைவென்பது காலம் காலமாக நாம் கண்ணுறும் உண்மை....
ஆமாம் தோழர் ... உண்மையை மறைப்பதற்குத் தாம் எத்தனை திரைகள்,சுரண்டலின் பொருட்டு ,அறியாமையின் பொருட்டு ,ஆறுதலின் பொருட்டு ...
எனதன்பை ஏற்றுக் கொள்ளுங்கள் கோவி கண்ணன் !
நீங்கள் ஜோதிடம் பற்றிக் கூறியது ஏதோ அறைகுறையாக சரி. மொத்த கட்டுரையின் விசயமே கடைசி இரண்டு வாக்கியங்களில் இருக்கிறதே பின் ஏன் இப்படி நீட்டி முழக்கி சொல்கிறீர்கள்!. ஓஹோ இதுதான் க.க.வழியோ!
உடனடியாக பின்னுட்டம் வெளியாவதன் மர்மம் என்ன? ;)
// நல்லதந்தி said...
நீங்கள் ஜோதிடம் பற்றிக் கூறியது ஏதோ அறைகுறையாக சரி. மொத்த கட்டுரையின் விசயமே கடைசி இரண்டு வாக்கியங்களில் இருக்கிறதே பின் ஏன் இப்படி நீட்டி முழக்கி சொல்கிறீர்கள்!. ஓஹோ இதுதான் க.க.வழியோ!//
நான் க.க என்றால் நீர் என்ன குடுமியாண்டியா ? தேவையற்று காழ்புணர்வுடன் பின்னூட்டம் அளித்தால் அதற்குரிய மரியாதை மட்டுமே கிடைக்கும். போன்ற பெருசுகள் தினந்தந்திக்கு கடிதம் எழுதினால் நல்லா இருக்குமே நல்லதந்திசார். வயதுக்குரிய மரியாதையை மெயின்டென் செய்ய முயற்சிக்கவும்
நான் சோதிடம் பற்றி இந்த கட்டுரையில் எழுதவில்லை பொருள்கள் அனைத்தும் சிதைவுக்கு உட்பட்டது என்பதை சோதிடத்தை நம்பும் முட்டாள்களுக்கு தெள்வு படுத்த எழுதினேன். அதனால் இதில் சோதிடம் என்பது கடைசியில் தான் வருகிறது.
//நல்லதந்தி said...
உடனடியாக பின்னுட்டம் வெளியாவதன் மர்மம் என்ன? ;)//
ஆபாச பின்னூட்டம் போடுபவன் தான் அது பற்றி கவலைப்பட வேண்டும்.
ஏன் இந்த டென்ஷன்? :)
//ஆபாச பின்னூட்டம் போடுபவன் தான் அது பற்றி கவலைப்பட வேண்டும்.//
ஆபாச பின்னூட்டம் இப்படி கீழே உள்ளது போல் இருக்குமோ?. சும்மா தெரியாமல் கேட்கிறேன் அன்பு கோ.வி.கண்ணன்.
மன்னிக்கவும். எப்போதும் நான் ஆபாசமாக எழுதியது இல்லை நீங்கள் இப்படி நீங்கள் எழுதியதால் கேட்கத் தோன்றியது. மற்றபடி எனக்கு உங்கள் மேல் கோபம் இல்லை.
:)))
//சித்தூர் முருகேசனை பற்றியது தானே இது,பெயரை சொல்ல துப்பு இல்லை,நீயெல்லாம் என்னய்யா ஸ்மார்ட்.?தாவணியை போட்டுக்கொள் பூணூல் மறைக்கும் பார்ப்பானே!.உன் வீட்டு பொம்மனாட்டியையும் கூட்டி வந்தால் இன்னும் நன்றாய் பேசுவோம்.வெண்னைத்தனமான ஒரு பதிவு.
Comment by கோவி கண்ணன் | மே 18, 2010 | //
*
0
// நல்லதந்தி said...
//ஆபாச பின்னூட்டம் போடுபவன் தான் அது பற்றி கவலைப்பட வேண்டும்.//
ஆபாச பின்னூட்டம் இப்படி கீழே உள்ளது போல் இருக்குமோ?. சும்மா தெரியாமல் கேட்கிறேன் அன்பு கோ.வி.கண்ணன்.
மன்னிக்கவும். எப்போதும் நான் ஆபாசமாக எழுதியது இல்லை நீங்கள் இப்படி நீங்கள் எழுதியதால் கேட்கத் தோன்றியது. மற்றபடி எனக்கு உங்கள் மேல் கோபம் இல்லை.
:)))//
என்னுடைய பகுத்தறிவின் படி நான் அந்த பின்னூட்டத்தைப் போடவில்லை. ஒருவேளை நீங்களோ உங்கள் சகாவோ அந்த பின்னூட்டத்தை போட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். அது வேர்ட் பிரஸ் பதிவாக இருக்கிறது, அதில் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் பதிவு லிங்குடன் போட்டால் புகைப்படம் வரும்.
//ஒருவேளை நீங்களோ உங்கள் சகாவோ அந்த பின்னூட்டத்தை போட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன்.//
அன்புள்ள கோ.வி.கண்ணன் எனக்கு இணையத்தில் எந்த சகாவும் இல்லை, நான் அவ்வளவு பெரிய ஆளும் இல்லை. ஒரு வேளை அந்தப் பின்னுட்டத்தை நீங்கள் போட்டு இருக்கா விட்டால் அதை அங்கேயே தெளிவு படுத்தி இருக்கலாம். மற்றபடி வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
//அது வேர்ட் பிரஸ் பதிவாக இருக்கிறது, அதில் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் பதிவு லிங்குடன் போட்டால் புகைப்படம் வரும்.//
இது எனக்குப் புதுத் தகவல்தான்! நன்றி!
//அன்புள்ள கோ.வி.கண்ணன் எனக்கு இணையத்தில் எந்த சகாவும் இல்லை, நான் அவ்வளவு பெரிய ஆளும் இல்லை. ஒரு வேளை அந்தப் பின்னுட்டத்தை நீங்கள் போட்டு இருக்கா விட்டால் அதை அங்கேயே தெளிவு படுத்தி இருக்கலாம். மற்றபடி வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
//
முகம் தெரியாத பதிவர்களின் பதிவுகளை பற்றி எனக்கு எந்த எண்ணமும் இல்லை, பெரும்பாலான முகமூடி பதிவர்களின் நோக்கம் கொச்சையானது, போலியானது. ஒருவேளை குறிப்பிட்ட அந்த பதிவரே என் பெயரில் பின்னூட்டம் இட்டுக் கொள்ளலாம், அங்கெல்லாம் சென்று விளக்கம் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை.
என் பங்கிற்கு நான் தடவிட்டேன்!
http://allinall2010.blogspot.com/2010/05/blog-post_28.html
கருத்துரையிடுக