பின்பற்றுபவர்கள்

28 மே, 2010

நினைவில் நிற்கும் வலைப்பதிவர்களின்.....

பதிவர் கல்வெட்டு அவர்கள் 'தேனீ உமர் தம்பிக்கு அங்கீகாரம் வேண்டுகோள்' குறித்த பதிவில் பின்வருமாறு பின்னூட்டமிட்டு இருந்தார்.

"உமர் போன்ற பலரை இணையத்தில் பதியும் நாமாவது அங்கீகரிக்க வேண்டும். பரிசுகள் போட்டிகள் நடத்துபவர்கள் உமர் நினைவுப் பரிசு, தேன்கூடு சாகரன் நினைவுப் பரிசு, சிந்தாநதி நினைவுப் பரிசு என்று மறைந்தவர்களுக்கு மரியாதை செய்யலாம். அது போல நம்முடன் இன்று இருப்பவர்களை அடையாளம் கண்டும் அவர்கள் பெயரிலும் பரிசுகள் வழங்கலாம். அவர்களையேகூட புரவலர்களாக இருக்கச் சொல்லலாம். உதாரணம் தமிழ்மண காசி பாரட்டுப் பதக்கம் என்று வழங்கி காசியிடம் இருந்தே வழங்கச் சொல்லலாம். யாரும் யாருக்காகவும் செய்யலாம்."

*****

அடுத்த ஆண்டு இதை நாம் செயல்படுத்துவோமா ? என இதைப் பற்றி சிங்கை வலைப்பதிவு நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது,

இதற்கு செயல்வடிவம் இந்த ஆண்டே நாமே கொடுத்து நல்ல துவக்கமாக இருக்கலாம்
என பதிவர் நண்பர் குழலி முன்மொழிந்தார், அதன் படி,


சிங்கப்பூர் வலைப்பதிவு நண்பர்கள் சார்பில் நடத்தப்பட்ட மணற்கேணி - 2009 ன் நிறைவு நிகழ்வாக வெற்றியாளர்களுக்கு விருது நிகழ்ச்சி இன்று மாலை 7 மணிக்கு லிட்டில் இந்தியா ஆர்கெட் பானா லீப் அப்பல்லோவில் கவிஞர் / எழுத்தாளர் புதுமைத் தேனீ மா.அன்பழகன் தலைமையில் நடைபெறுகிறது. அந்நிகழ்ச்சியில் மணற்கேணி 2009 வெற்றியாளர்களுக்கு மறைந்த நினைவில் நிற்கும் பதிவர்கள், தமிழ் இணையத்தில் பங்களித்தவர்கள் பெயர்களில் விருது வழக்கம்படுகிறது, இதன் படி,

தேனீ உமர் தம்பி
விருது தமிழ் மொழி / இலக்கியம் பிரிவின் வெற்றியாளர் திரு பிரபாகர் அவர்களுக்கும்,

'கேன்சருடன் ஓர் யுத்தம்' என்ற வலைப்பதிவின் பதிவர் மறைந்த அனுராதா சுப்ரமணியன் விருது தமிழ் அறிவியல் பிரிவின் வெற்றியாளர் திரு தேவன் மாயம் அவர்களுக்கும்,

தேன் கூடு சாகரன் விருது அரசியல் சமூகம் பிரிவின் வெற்றியாளர் திரு தருமி ஐயா அவர்களுக்கும்,

சிந்தாநதி
விருது திரு கையேடு அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

சிங்கைப் பதிவர்கள் வாசகர்கள் நிக்ழ்ச்சியில் நேரடியாக பங்கு கொள்ளலாம்.

மணற்கேணி 2009 போட்டியின் நோக்கம் வெற்றிபெற்றதா இல்லையா என்பதைப் பற்றி எந்த எண்ணமும் இல்லை, ஆனால் இந்த போட்டியின் வழியாக சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் ஒன்றிணையவும், இணைந்து செயல்படவும், துவங்கிய செயலை பல்வேறு தொய்வுகள் ஏற்பட்டாலும் முடித்துவிட முடியும் என்கிற மன உறுதியையும் இதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் உணர்ந்துள்ளார்கள். இந்த போட்டியின் வழியாக நினைவில் நிற்கும் பதிவர்களை பெருமை படுத்தும் நிறைவு நிகழ்ச்சி எங்கள் அனைவருக்கும் மனநிறைவை தந்துள்ளது.

மணற்கேணி தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் ஊக்கப்படுத்திய பங்கெடுத்தவர்கள் அனைவருக்கும், சிங்கைப் பதிவர்கள் சார்பாக நன்றி.

"பதிவர் பெயரில் விருதுகள்" - பரிந்துரை செய்த பதிவர் கல்வெட்டு அண்ணனுக்கு மிக்க நன்றி.

28 கருத்துகள்:

Cable சங்கர் சொன்னது…

மணற்கேணிக்கும் விருதுகளுக்கும் வாங்குபவர்களுக்கும் சிறப்பாக விழா நடந்திடவும் வாழ்த்துக்கள்.

Cable சங்கர் சொன்னது…

மணற்கேணிக்கும் விருதுகளுக்கும் வாங்குபவர்களுக்கும் சிறப்பாக விழா நடந்திடவும் வாழ்த்துக்கள்.

வால்பையன் சொன்னது…

சிறப்பான பணி!
வேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

விருது பெற்ற அண்ணன்கள் மேலும் சிறப்பான படைப்புகளை கொடுத்து எங்களை உற்சாகபடுத்த வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்!

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்!

வடுவூர் குமார் சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

துளசி கோபால் சொன்னது…

சிறப்பாக விழாவை நடத்திய சிங்கப்பூர் பதிவர்களுக்கும் விருதுபெற்றவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த இனிய பாராட்டுகள்.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

இணையத் தமிழ் மக்களிடம் நீங்கா இடம்பிடித்த தேனீ எழுத்துரு தந்த உமர் தம்பி மற்றும் இணைய தமிழுக்காக தன்னலமற்ற சேவைகள் செய்து வந்தவர்களையும், வருபவர்களையும் கவுரவிக்கு செய்தி படிக்கும் போது உண்மையில் எல்லையற்ற மகிழ்ச்சி.

கோவி. கண்ணன் ஐயா, இச்செய்தி வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

இந்நிகழ்ச்சியின் ஒலி ஒளி பதிவு செய்யப்படுமானால் தயவு செய்து வெளியிடுங்கள், நிச்சயம் இது தமிழ் இணைய ஆர்வளர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

கிரி சொன்னது…

பின்னர் பார்க்கலாம் என்று கூறாமல் உடனடியாக விருது கொடுத்தமைக்கு பாராட்டுக்கள்.

மணற்கேணி போட்டியை சிறப்பாக நடத்தி வெற்றியாளர்களை சிங்கை வரவழைத்து அசத்திய அனைத்து குழலி உட்பட அனைத்து சிங்கை பதிவர்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

பாலராஜன்கீதா சொன்னது…

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

மணற்கேணிக்கும் விருது வழங்கியமைக்கும், விருது பெற்றவர்களையும் ம்னமார வாழ்த்துகிறேன்

Adirai khalid சொன்னது…

வாழ்த்துக்கள் !!

ஆரோக்கியமான மற்றும் புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தும் ஒர் நிகழ்ச்சி

மேலும் இது போன்ற வலைப் பதிவுகளில் தமிழை வாழவைத்துக்கொண்டு இருக்கும் மறைந்த உமர் தம்பியின் தமிழுக்கு தந்த பங்களிப்பை அங்ககரித்து அவர் நினைவாக விருதுகள் வளங்கப்படுவது என்னைபோன்ற பாமர தமிழனை மகிழச்சொய்திருக்கின்றது.

Unknown சொன்னது…

மிகவும் நல்ல விசயம். :)

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மணிகண்டன் சொன்னது…

மாமா ! ஏன் என் பேருல விருது கொடுக்கல ?

அன்பரசு சொன்னது…

ஏற்பாடு செய்தவர்களுக்கு பாராட்டுகளும், விருது வாங்கியவர்களுக்கு வாழ்த்துகளும்!

Shameed சொன்னது…

உலகில் சிறந்த நாடகவிளங்கும் சிங்கப்பூரில் அதிரை உமர் தம்பி அவர்களின் பெயரில் விருது கொடுப்பது அதிரை வாசிகளான எங்களுக்கு பெருமையாக உள்ளது

ராமலக்ஷ்மி சொன்னது…

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Radhakrishnan சொன்னது…

வாழ்த்துகள் கோவியார். மேலும் சிறக்க வாழ்த்துகள்.

கல்வெட்டு சொன்னது…

.

கோவி,
இன்றே செய்வோம் அதை நன்றே செய்வோம்
பதிவர்களை பதிவர்களே அங்கீகரிப்பதும் சிறப்புச் செய்வதும் முதல்தேவை.

**

இதன் பின்னணியில் உள்ள ஒவ்வொரு சிங்கைப் பதிவரையும் அவர்களின் முயற்சியையும் பாராட்டுகிறேன்.

**

மின்மினி RS சொன்னது…

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

Sanjai Gandhi சொன்னது…

அற்புதம்.. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்..

கல்வெட்டுக்கு பாராட்டுகள்..

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நல்ல முயற்சி ..
பாராட்டுகள்..
விருதுபெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

அனைவருக்கும் முன்னுதாரணமாக செயல்பட்ட சிங்கை குழுமத்திற்கு வாழ்த்துகள்.

தேவன் மாயம் சொன்னது…

I cant say in words!! You all done a great job!!

தேவன் மாயம் சொன்னது…

I cant say in words!! You all done a great job!!

கையேடு சொன்னது…

விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இணையத்தில் மேலும் அறிவியல் துறை சார்ந்து எழுத ஊக்கப்படுத்துவிதமாக இருக்கிறது.

வெற்றிபெற்றோருக்கும், விழா சிறக்கவும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகளும்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துகள்.

வவ்வால் சொன்னது…

Kalvettu sariyaga sonnaar, neengal sariyaga seythulleerkal. Paarattukal! Without ego. Thats great!

Kaiyedu, prabhar, devan mayam?

Kandippaaga high grade personalities aaga irukkalam. I know only darumi! Vaazhthukal!

இரா. வசந்த குமார். சொன்னது…

இந்நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் இப்போட்டிகள் தொய்வின்றி நடத்த வாழ்த்துகிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்