பின்பற்றுபவர்கள்

21 மே, 2010

கூலிக்குக் கூட மாரடிக்காத ஆசிரியர்கள் - மறுகூட்டல் !

இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்களாம். அரசு ஊழியர்கள் மீது எனக்கு எந்த ஒரு நம்பிக்கையும், உயர்ந்த எண்ணங்களோ ஏன் ஏற்படுவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பொதுமக்கள் யாரேனும் அரசு ஊழியர்களை கேள்வி எழுப்பி கொஞ்சம் கடுமையாக கைநீட்டும் அளவுக்குச் சென்றுவிட்டாலோ, கடமையைச் செய்யவிடாமல் தடுக்கிறார்கள் என்று கூப்பாடு போட்டு அவர்களை சிறையில் தள்ளும் சட்டப் பாதுகாப்புடன் கடமை தவறும் அரசு ஊழியர்கள் கடமைகளைச் சரியாகச் செய்வதில்லை என்பதற்கு மற்றொரு சான்றாக இந்த மறுகூட்டல் என்னும் நடைமுறையை நான் பார்க்கிறேன்.

ஒரு மாணவனுக்கு கல்வி தான் எல்லாவித வாய்ப்புகளையும் எதிர்காலத்தில் பெற்றுத்தருகிறது என்பதும் அதில் பெறும் மதிப்பெண்கள் மிக மிக இன்றியமையாத ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தவை. இதுமிகவும் சாதாரண புரிதல் கூட, ஒரு மாணவன் தவறிழைத்தவனாக இருந்தால் சில பள்ளிகளில் அவனுக்கு எதிராக பள்ளியை விட்டு வெளியேற்றுவது அல்லது கடுமையான குற்றம் செய்த மாணவனை காவலர்களிடம் ஒப்படைக்கும் முடிவு என்னும் போது மாணவனின் எதிர்காலம் முற்றிலுமாக நலிவடையுமோ என்பதை நினைத்துப் பார்த்து எச்சரிக்கை செய்து அனுப்புவார்கள், நல்லதொரு சமூகம் அமையவேண்டும் என்பதன் பொறுப்புணர்வு என்பதாக நாம் அந்த செயலை எடுத்துக்கொண்டு தொடர்புடைய பள்ளிகளையும் ஆசிரியர்களையும் பாராட்டலாம்.

எவ்வளவோ (மோசமான, பொருளியல்) இல்லச்சூழலில் படிப்பைத் தொடரும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஆசிரியர்களின் கவனக்குறைவால் திசைமாறும் அல்லதும் முற்றிலுமாக நலிவடையும் சூழல்களை ஏற்படுத்துகிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. முன்பெல்லாம் ஒரு மாணவன் மிகச் சரியாக எழுதி இருந்து மதிப்பெண் குறைவாகப் பெற்றால், அந்த மாணவன் விண்ணப்பித்தால் தேர்வுத்தாளை மற்றொருமுறை வேறொரு ஆசிரியரால் திருத்தப்பட்டு சரிபார்க்கப்படும், இப்போது அத்தகைய நடைமுறைக்கு வாய்ப்பே இன்றி, நன்றாக தேர்வு எழுதிய மாணவன் குறைவாக மதிப்பெண் பெற்றிருப்பதற்குக் காரணம் ஒருவேளை தேர்வுத்தாளை திருத்திய ஆசிரியரின் கவனக்குறைவாக இருக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். தாம் நன்றாக எழுதியும் மதிப்பெண் குறைவாக வந்திருப்பதாக 1 1/2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில் அதில் ஐம்பது விழுக்காடு மாணவர்களாவது தாம் குறைவாக மதிப்பெண் பெற்றதை மறைக்கும் விதமாக பெற்றோர்களை ஏமாற்றவே மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கிறார்கள் என்றாலும் மீதம் 50 விழுக்காடு அதாவது 75,000 மாணவர்கள் நன்றாக எழுதியும் மதிப்பெண் சரிவர கிடைக்காத மாணவர்கள் என்று கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

75 ஆயிரம் மாணவர்கள் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிய ஆசிரியர்களின் கவனக்குறைவை கண்டிப்பது யார் ? இந்த நிலை தொடர்ந்தால் பொதுத்தேர்வு முறைகள் என்பதே கேலிக்கும் கேள்விக்கும் சென்று கொண்டிருக்கிறது என்பதின் பதிவாகத்தான் இந்த மறுகூட்டல் என்னும் ஒரு வழக்கத்தை நான் பார்க்கிறேன்.

அவர்களில் 75 ஆயிரம் மாணவர்கள் மறுகூட்டலில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறுகிறார்கள் என்றாலும் கூட அது விண்ணப்பிக்கும் அவர்களின் மறுமுயறிசியினால் கிடைத்த பலன்மட்டுமே, நன்றாக எழுதியும் குறைந்த மதிப்பெண் பெற்று விண்ணப்பிக்காத மாணவர்கள் பெறும் பாதிப்பை யார் சரி செய்வது ? ஏறக்குறை 75 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு அடையும் அளவுக்கு கவனக்குறைவாக இருக்கும் ஆசிரியர்கள் என்ன விதமான கடமையை ஆற்றினார்கள் ? அவர்களுக்கு ஏன் மாணவர்களின் எதிர்காலம் குறித்த அக்கரையே இல்லாமல் போயிற்று ?

ஒருகாலத்தில் ஆசிரியர் மருத்துவர்கள் தெய்வம் என்பதாக் போற்றப்பட்டனர், காரணம் அவை தொழில் என்பது தவிர்த்து தனிப்பட்ட மனிதர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் அக்கரை கொண்டவர்கள் என்கிற புரிதலை அவர்கள் ஏற்படுத்தி இருந்தனர். இப்போது இருப்பவர்கள் பெரும்பாலும் கூலிக்கு மாரடிக்கிறவர்களாக மாறிவிட்டார்கள் என்கிற புரிதல் இருந்தாலும் அதையும் சரியாக செய்வதில்லை என்னும் போது இவர்களையெல்லாம் எப்படித்தான் திருத்துவது ?

இப்போதெல்லாம் அரசு ஊழியர்களின் போராட்டங்களெல்லாம் சுயநல பிசாசுகளின் போராட்டமாகவே எனக்கு தெரிகிறது, அரசு அலுவலகங்கள் பொதுமக்களால் சூறை என்று படிக்கும் போது எந்த ஒரு உணர்ச்சியும் ஏற்படுவது இல்லை, அரசு ஊழியர்கள் தாக்கப்பட்டால் அவன் எந்த அளவுக்கு மோசமாக செயல்பட்டு இருப்பான் என்று எதிர்மறையாகவே நினைக்கத் தோன்றுகிறது.

ஆசிரியர் பணி என்பது புனிதப்பணி என்பதை ஆசிரியர்கள் மட்டுமே இன்று சொல்லிக் கொள்ளும் படி அவர்கள் நடந்து கொள்ளும் சூழலில் மறுகூட்டலுக்கு ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்று செய்தி ஆசிரியர்கள் முகத்தில் மாணவர்கள் உமிழ்வதாக உணர்த்துகிறது.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட அரசு ஊழியர்களை நினைத்தாலே. கூலிக்கு மாரட்டிக்கும் ஆசிரியர்களிலும் சரியாக அடிக்காதவர்கள் 'ஆசிறியர்களா ?'

27 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

லக்கிலுக் தனது அனுபவத்தை அவரது பதிவில் எழுதியுள்ளதை பார்ப்போம்:
//ஆயினும் பின்னர் மதிப்பெண்கள் வந்தபிறகு கிடைத்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. மேத்ஸ் எக்ஸாம் ஆனந்தராஜை பார்த்து எழுதினேன். அந்த தறுதலை ஏகப்பட்ட அடிஷனல் ஷீட் வாங்கி எழுதினான். உலகத்திலே மேத்ஸ் எக்ஸாமை கற்பனை செய்து எழுதிய ஒரே நாயாக அவன் தான் இருப்பான். அந்த ராஸ்கலுக்கு கிடைத்த மார்க் இருநூறுக்கு பதிமூன்று. அவனைப் பார்த்து அட்சரம் பிசகாமல் எழுதிய அப்பாவியான நான் பெற்றதோ இருநூறுக்கு முப்பத்தொன்று. என்னைப் பார்த்து எழுதிய சிவராமன் எழுபது மதிப்பெண் பெற்று வெற்றியே பெற்றுவிட்டான். என்னத்தை தான் பேப்பர் திருத்தினான்களோ தெரியவில்லை.//
பார்க்க: http://www.luckylookonline.com/2009/06/2_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

புருனோ Bruno சொன்னது…

அது சரி

இந்த மறுகூட்டல் என்றால் என்ன
ஏன் அது மறு மதிப்பீடாக இருக்க கூடாது

ஏன் கூட்டல் மட்டும் என்ற கேள்விக்கு (நிர்வாக வசதி என்ற சப்பை காரணத்தை தவிர) விடை உள்ளதா

--

நுழைவு தேர்வு நிறுத்தப்பட்ட பின்னர் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்தனவா ??

--

ஆசிரியரின் தனிப்பட்ட தவறுக்கு வழி வகுக்காத MCQ பாணி தேர்வு நடத்தினால் என்ன

--

நுழைவு தேர்வு என்று தனியாக வேண்டாம்

பொது தேர்விலேயே ஒவ்வொரு பாடத்திலும் 50 மதிப்பெண்களுக்கு MCQ நடத்தி அந்த 50 மதிப்பெண்களின் (ஒவ்வொரு பாடத்திற்கும் 50 - மொத்தம் 150) அடிப்படையில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் அளிக்கலாமா

--

இந்த 50 வினாத்தாள்களையும், விடைக்களையும் இணையத்தில் வெளியிடலாம். யாருக்கும் சந்தேகம் வராது.

2003லேயே அண்ணா பல்கலைகழகம் அனைவரின் நுழைவுத்தேர்வு விடைத்தாள்களையும் இணையத்தில் வெளியிட்டார்கள்

இன்று இருக்கும் தொழிற்நுட்பத்தில் இது ஜூஜூபி

--

objective exam ஒன்றே இதற்கு நிரந்திர தீர்வு. பக்கம் பக்கமாக எழுதும் subjective exam அல்ல

--

உங்கள் 50 சதத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது.

சென்ற ஆண்டு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் எத்தனை பேருக்கு மதிப்பெண் அதிகரித்தது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால் உண்மை தெரிந்து விடும்

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் 50 சதத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது.//

உங்கள் பின்னூட்டம் (இந்த பதிவுக்கு) எதிர்பார்த்தது தான். :) ஒரு அரசு ஊழியர் இந்த பதிவை ஆமாம் சாமி போடுவார் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. :)

//சென்ற ஆண்டு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் எத்தனை பேருக்கு மதிப்பெண் அதிகரித்தது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால் உண்மை தெரிந்து விடும்//

10 பேர், 5 பேர், ஒரே ஒருவர் கூட இல்லை என்று உங்களால் சொல்ல முடியாது. 5 பைசா திருடினால் குற்றமா ? அன்னியன் வசனம் நினைவுக்கு வருதா ?

ஒரு ஆசிரியரின் கவனக்குறைவால் ஒருவர் பாதித்தாலும் அந்த பாதிப்பின் வலி வாழ்க்கை மாற்றம் அந்த மாணவனுக்கு ஏற்படும், எனவே எண்ணிக்கைகள் அடிப்படையிலான தவறுகள் புறக்கணிக்கக் கூடியவை என்பதாக சுட்டும் உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை

புருனோ Bruno சொன்னது…

//உங்கள் பின்னூட்டம் (இந்த பதிவுக்கு) எதிர்பார்த்தது தான். :) ஒரு அரசு ஊழியர் இந்த பதிவை ஆமாம் சாமி போடுவார் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. :)//

நான் உங்கள் பதிவை மறுக்கவில்லை

உங்களது பதிவில் இருக்கும் ஒரு (ஒரே ஒரு) புள்ளிவிபரத்தை கூட கேள்வி கேட்கக்கூடாது என்பது எனக்கு தெரியாது

//சென்ற ஆண்டு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் எத்தனை பேருக்கு மதிப்பெண் அதிகரித்தது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால் உண்மை தெரிந்து விடும்//

கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது தானே

ஒரு வேளை அது ஐம்பது சதத்திற்கும்
அதிகமாக இருக்கலாம் அல்லவா

ஏன் அது ஐம்பது சதத்திற்கு குறைவாக உள்ளதாக எடுத்துக்கொள்கிறீர்கள்

:) :) :) :)

புருனோ Bruno சொன்னது…

//
10 பேர், 5 பேர், ஒரே ஒருவர் கூட இல்லை என்று உங்களால் சொல்ல முடியாது. 5 பைசா திருடினால் குற்றமா ? அன்னியன் வசனம் நினைவுக்கு வருதா ?
//

பாதிப்படைவது நடந்து கொண்டு தானிருக்கிறது

அதனால் தான் நான் objective முறை வேண்டும் என்று கூறினேன்

கோவியாரே

நீங்கள் subjective ஆக சிந்திப்பதை நிறுத்தி விட்டு objective ஆக சிந்தித்து பாருங்கள்

புருனோ Bruno சொன்னது…

//ஒரு ஆசிரியரின் கவனக்குறைவால் ஒருவர் பாதித்தாலும் அந்த பாதிப்பின் வலி வாழ்க்கை மாற்றம் அந்த மாணவனுக்கு ஏற்படும், எனவே எண்ணிக்கைகள் அடிப்படையிலான தவறுகள் புறக்கணிக்கக் கூடியவை என்பதாக சுட்டும் உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை
//

தவறுகளை புறக்கணிக்க வேண்டும் என்று நான் கூறவே இல்லை

தவறுகளை இல்லாத objective முறை வேண்டும் என்றே கூறினேன்

மீண்டும் வாசித்து பாருங்கள்

புருனோ Bruno சொன்னது…

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்காதவர்களின் நிலையையும் சேர்த்து பாருங்கள்

சுமார் பத்து சதம் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளார்கள்

90 சதம் விண்ணப்பிக்கவில்லை

இங்கு விண்ணப்பத்திவர்களில் 10000 பேருக்கு மதிப்பெண் மாறுகிறது என்று வைத்துக்கொண்டால் விண்ணப்பிக்காத 90000 பேர்களின் நிலை என்ன

அதனால் தான் objective முறை வேண்டும் என்றேன்

நுழைவு தேர்வு நடக்கும் போது அதில் யாராவது மறுகூட்டல் கேட்டார்களா

ஆனால் நுழைவு தேர்வு என்று தனியாக நடத்துவது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானதே

அதற்கு பதில் பொது தேர்விலேயே ஒவ்வொரு பாடத்திலும் 50 மதிப்பெண்களுக்கு MCQ நடத்தி அந்த 50 மதிப்பெண்களின் (ஒவ்வொரு பாடத்திற்கும் 50 - மொத்தம் 150) அடிப்படையில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் அளிக்கலாமா என்ற கேள்வி கேட்டிருந்தேனே

வாசிக்கவில்லையா

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...


தவறுகளை புறக்கணிக்க வேண்டும் என்று நான் கூறவே இல்லை

தவறுகளை இல்லாத objective முறை வேண்டும் என்றே கூறினேன்

மீண்டும் வாசித்து பாருங்கள்//

objective இது எதிர்காலத்தில் செய்யலாம் என்பதற்கு மாற்று. இப்போதைய பிரச்சனையைச் பேசும் இப்பதில் மற்றபடி உங்கள் பின்னூட்டத்தில் தகவல் அறியும் சட்ட்டத்தில் ஏன் தெரிந்து கொண்டு எழுதக் கூடாது என்பதைப் போல் கேட்டு இருக்கிறீர்கள்.

நான் 50 விழுக்காடு அதாவது 75,000 மாணவர்களை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதி இருக்கிறேன். மறுகூட்டலுக்கு போகிறவர்களில் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு பாடத்தில் குறைவாக பெற்றதால் ஏற்பட்ட ஐயம் காரணமாகச் செல்பவர்கள் தான் மிகுதியாக இருப்பார்கள். ஒருசில மாணவனுக்கு கணக்கு / அறிவியல் / வரலாறு இவற்றில் எதோ ஒன்று சரிவராமல் இருக்கலாம், ஆனால் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்குமே ஒன்றோ இரண்டோ பாடத்தில் குறைவாக மதிப்பெண் வருவதால் தான் விண்ணப்பிக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

டோண்டு சார்,

ஆதரவான பின்னூட்டத்திற்கு நன்றி !

புருனோ Bruno சொன்னது…

//நான் 50 விழுக்காடு அதாவது 75,000 மாணவர்களை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதி இருக்கிறேன். //

நான் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்காதவர்களில் 50 விழுக்காடு, அதாவது 5 லட்சம் மாணவர்களை மனதில் வைத்து எழுதுகிறேன்

//objective இது எதிர்காலத்தில் செய்யலாம் என்பதற்கு மாற்று.//
objective முறை ஏற்கனவே இருந்தது என்பது உங்களுக்கு தெரியாதா

// இப்போதைய பிரச்சனையைச் பேசும் இப்பதில் மற்றபடி உங்கள் பின்னூட்டத்தில் தகவல் அறியும் சட்ட்டத்தில் ஏன் தெரிந்து கொண்டு எழுதக் கூடாது என்பதைப் போல் கேட்டு இருக்கிறீர்கள்.//

இந்த பிரச்சனைக்கான ஒரு தீர்வை நான் கூறினேன்

உங்களுக்கு தீர்வில் அக்கறையில்லையா. பிரச்சனை மட்டும் தான் வேண்டுமா

இந்த பிரச்சனைக்கு தீர்வு வேண்டி இந்த இடுகையை எழுதினீர்கள் என்று எண்ணியது என் தவறா :) :)

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த பிரச்சனைக்கான ஒரு தீர்வை நான் கூறினேன்

உங்களுக்கு தீர்வில் அக்கறையில்லையா. பிரச்சனை மட்டும் தான் வேண்டுமா

இந்த பிரச்சனைக்கு தீர்வு வேண்டி இந்த இடுகையை எழுதினீர்கள் என்று எண்ணியது என் தவறா :) :)//

நீங்கள் சொல்வது எதிர்காலத் தீர்வு, அதற்கான நடைமுறை கூறுகளை ஆய்ந்து அவை ஏற்கப்படுவதோ, நடைமுறையில் கொண்டுவரும் முயற்சியோ எதுவும் தற்போது இல்லை.

ஆனால் இப்போது இருக்கும் நடைமுறையில் ஏற்படும் கவனக்குறைவிற்கு யார் பொறுப்பு ஏற்றுக் கொள்வது ?

முறைகேடுகள் நடப்பதைப் பற்றிப் பேசும் போது மாற்றுவழியாக நீங்கள் சொல்வது பரிந்துரை மட்டுமே.

புருனோ Bruno சொன்னது…

//ஆனால் இப்போது இருக்கும் நடைமுறையில் ஏற்படும் கவனக்குறைவிற்கு யார் பொறுப்பு ஏற்றுக் கொள்வது ?//

விடைத்தாளை திருத்தியவர்கள் தான்
இதில் என்ன சந்தேகம்

ஆனால் இதே நடைமுறையை கடைபிடித்தால் நிலை மாறிவிடுமா

//முறைகேடுகள் நடப்பதைப் பற்றிப் பேசும் போது மாற்றுவழியாக நீங்கள் சொல்வது பரிந்துரை மட்டுமே.//

இதில் முறைகேடு என்ற சொல் பொருத்தமா என்று தெரியவில்லை

இது தவறு / பிழை / கவனக்குறைவு என்றே நினைக்கிறேன்

பணம் பெற்றுக்கொண்டு வினாத்தாளை விற்பது, மதிப்பெண்களை திருத்துவது போன்றவை தான் “முறைகேடு” என்பதின் கீழ் வரும்

//முறைகேடுகள் நடப்பதைப் பற்றிப் பேசும் போது மாற்றுவழியாக நீங்கள் சொல்வது பரிந்துரை மட்டுமே.//
நான் சொல்லும் பரிந்துரை என்பது தீர்வு நோக்கி ஒரு வழி

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால் இதே நடைமுறையை கடைபிடித்தால் நிலை மாறிவிடுமா//

தற்போதைய நடைமுறையை நான் சரி என்றும் செயல்படுத்தும் விதம் தான் தவறு என்று சொல்லாத போது உங்கள் கேள்வி பொருளற்றது.
:)

//இதில் முறைகேடு என்ற சொல் பொருத்தமா என்று தெரியவில்லை

இது தவறு / பிழை / கவனக்குறைவு என்றே நினைக்கிறேன்//

கூலி வாங்கிக் கொண்டு கடமையை சரியாகச் செய்வது என்பது முறைதானே. அதைச் சரியாகச் செய்யாமல் மாணவனுக்கு கேடுவிளைவிப்பதை முறைகேடு என்று சொல்வது தான் முறைகேடா ?

//பணம் பெற்றுக்கொண்டு வினாத்தாளை விற்பது, மதிப்பெண்களை திருத்துவது போன்றவை தான் “முறைகேடு” என்பதின் கீழ் வரும்//

அதுவும் முறைகேடுதான்,பேராசை, லஞ்சம் என்ற முறைகேட்டுப் பிரிவுக்குள் ஒன்று, நான் சொல்லும் முறைகேடு கடமை என்னும் செயலை முறைதவறிச் செய்வது.

முறைகேடு என்று பின்னூட்டத்தில் எழுதிவிட்டு ஒருகனம் யோசித்தே அதை வெளிட்டேன். கவனக்குறைவு விழுக்காடு மிகுந்தாலும் அது கவனக்குறைவு தானா ? எப்போதாவது ஏற்படுவது கவனக்குறைவு, எண்ணிக்கை அளவில் மிகுதியாக தொடர்சியாக ஏற்படுவது முறைகேடு, கடமை தவறிய செயல்.

Karthick Chidambaram சொன்னது…

இது மிக பெரிய கொடுமை. ஒருவர் 18 மதிப்பில் இருந்து 81 மதிப்புக்கு மருகூட்டலில் மாறினாராம். கேட்டால் நம்பர் பெசகி போச்சுனான்கலாம்.
என்ன கொடுமை இது.

http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/

கோவி.கண்ணன் சொன்னது…

// Karthick Chidambaram said...

இது மிக பெரிய கொடுமை. ஒருவர் 18 மதிப்பில் இருந்து 81 மதிப்புக்கு மருகூட்டலில் மாறினாராம். கேட்டால் நம்பர் பெசகி போச்சுனான்கலாம்.
என்ன கொடுமை இது.

http://konjamalasalkonjamkirukkal.blogspot.com///

நன்றி கார்திக்,

கவனக்குறைவாக ஒரு டிஜிட் குறைத்து ஊதியம் கொடுத்தால் ஆசிரியர்கள் வாங்குவார்களா ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சென்னையில் முதல்வர் கருணாநிதிக்கு அரசு ஊழியர்கள் சார்பல் நடத்தப்படவுள்ள பாராட்டு விழாவையொட்டி, அதில் அரசு ஊழியர்கள் பங்கேற்க வசதியாக அவர்களுக்கு 2 நாள் தற்செயல் விடுப்பு எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில்,​​ முதல்வர் கருணாநிதிக்கு சென்னையில் நாளை பாராட்டு விழா நடக்கிறது.​ இதில் அரசு ஊழியர்கள்,​​ ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
//
அந்த முத்தமிழ் வித்தவரை நானும் பாராட்டுகிறேன்!

கோவி, உங்கள் பாராட்டும் தேவைப்படுகிறது. மற்ற எல்லோருடைய பாராட்டும் தேவைப்படுகிறது. விடுப்பும் வழங்கப்படுகிறது. சாவகாசமா வாழ்த்தி பாராட்டுகளை தெரிவியுங்கள். இந்த நாளை வரலாற்றில் எழுத எழுதுகோல்கள் காத்துக் கிடக்கின்றன.!

கிரி சொன்னது…

//கவனக்குறைவாக ஒரு டிஜிட் குறைத்து ஊதியம் கொடுத்தால் ஆசிரியர்கள் வாங்குவார்களா ?//

:-))

மணிகண்டன் சொன்னது…

மார்க் கொஞ்சம் குறைஞ்சா என்ன பெரிய பாதிப்பு ?

கோவி.கண்ணன் சொன்னது…

// மணிகண்டன் said...

மார்க் கொஞ்சம் குறைஞ்சா என்ன பெரிய பாதிப்பு ?//

200க்கு 70 தேர்ச்சி மதிப்பெண் என்றால் 69 மதிப்பெண் அதைவிட ஒன்றே ஒன்று தான் குறைவு ஆனால் தேரவில்லை என்று சொல்லுவார்கள்.

:)

Radhakrishnan சொன்னது…

நல்லதொரு பதிவு. சரியான ஆதங்கமும் கூட. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. எங்கேனும், எப்படியேனும் தவறு நடந்து கொண்டேதான் இருக்கிறது. காலக் கொடுமை. இதில் அரசு ஊழியர்கள் மட்டும் விதி விலக்கா? என்ன மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதை தீவிர சிந்தனை செய்ய வேண்டும், நல்லதொரு சிந்தனையை செயல்படுத்த வேண்டும். எல்லா நாடுகளிலும் இந்த பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

கல்வெட்டு சொன்னது…

.

அந்தக்காலத்தில் இல்லாத ஸ்கேன் பிடிஎப்ஃ கோப்பிற்கான வசதி இப்போது எளிதாக‌வே உள்ளது.

திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பிடிஎப்ஃ கோப்பாக எலக்ட்ரானிக் காப்பியாக சிடியில் மாணவர்களுக்கு வழங்கிவிட்டால் என்ன? இதில் என்ன பிரச்சனை உள்ளது.

நடைமுறைச் செலவிற்கு தேர்விற்கான கட்டணத்துடன் இதற்கு ஒரு தொகையையும் வாங்கிவிடலாம்.

இதை ஏன் செய்யக்கூடாது?
சிக்கல்கள் அல்லது விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பிடிஎப்ஃ கோப்பாக எலக்ட்ரானிக் காப்பியாக சிடியில் வழங்கக்கூடாது என்று நினைப்பவர்கள் அதற்கான காரணங்களிளைக் கூறலாம்.

டிஜிட்டல் சிக்னேட்சர் மற்றும் டிகிடல் செக்யூரிட்டி நிரல்களுடன் பாதுகாப்பாக வழங்கலாம். அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கதவைத் தட்டலாமே .எனி வாலண்டியர்ஸ்?


.

Bruno சொன்னது…

கல்வெட்டு சார்
//திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பிடிஎப்ஃ கோப்பாக எலக்ட்ரானிக் காப்பியாக சிடியில் மாணவர்களுக்கு வழங்கிவிட்டால் என்ன? இதில் என்ன பிரச்சனை உள்ளது.
//
கண்டிப்பாக செய்யலாம்

நான் கூறிய objective பகுதி மதிப்பெண்களை மட்டும் கல்லூரி சேர்க்கைக்கு எடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன

குறும்பன் சொன்னது…

///புருனோ Bruno...
//objective இது எதிர்காலத்தில் செய்யலாம் என்பதற்கு மாற்று.//
objective முறை ஏற்கனவே இருந்தது என்பது உங்களுக்கு தெரியாதா///

நுழைந்தேர்வில் இருந்த objective முறை பற்றி தானே சொல்றிங்க?



/// புருனோ Bruno...
அதற்கு பதில் பொது தேர்விலேயே ஒவ்வொரு பாடத்திலும் 50 மதிப்பெண்களுக்கு MCQ நடத்தி அந்த 50 மதிப்பெண்களின் (ஒவ்வொரு பாடத்திற்கும் 50 - மொத்தம் 150) அடிப்படையில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் அளிக்கலாமா என்ற கேள்வி கேட்டிருந்தேனே

வாசிக்கவில்லையா///
MCQ க்கு மட்டும் படித்தால் போதுமா?
இதற்கும் நுழைவுத்தேர்வுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.


வாங்கற காசுக்கு ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்பது உண்மை. இதனால் பாதிக்கப்படுவது மாணவனின் எதிர்காலம் என்பது தான் வேதனைக்குரியது.

Matra சொன்னது…

//டிஜிட்டல் சிக்னேட்சர் மற்றும் டிகிடல் செக்யூரிட்டி நிரல்களுடன் பாதுகாப்பாக வழங்கலாம். அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கதவைத் தட்டலாமே .எனி வாலண்டியர்ஸ்?//

இதில் அதிக‌ லாபம் அல்லது அரசியல் ஆதாயம் இருந்தால் கண்டிப்பாக செய்வார்கள்

Indian சொன்னது…

//objective exam ஒன்றே இதற்கு நிரந்திர தீர்வு. பக்கம் பக்கமாக எழுதும் subjective exam அல்லழ/

வழிமொழிகிறேன் டாக்டர்.

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல பதிவு.

புருனோ Bruno சொன்னது…

//MCQ க்கு மட்டும் படித்தால் போதுமா?
இதற்கும் நுழைவுத்தேர்வுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
//

என்ன வேறுபாடு என்று தெளிவாகவே கூறியுள்ளேன்

//வாங்கற காசுக்கு ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்பது உண்மை.//
இதை நான் மறுக்கிறேன். எவ்வளவு கவனத்துடன் வேலை பார்த்தால் சிறிய சதவிதம் human error என்பதை தவிர்க்கவே முடியாது - அது எந்த வேலை என்றாலும்.

// இதனால் பாதிக்கப்படுவது மாணவனின் எதிர்காலம் என்பது தான் வேதனைக்குரியது.//
அதனால் தான் objective முறை வேண்டும் என்று நான் கூறியது

--

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்