பின்பற்றுபவர்கள்

7 மே, 2010

சேவல்காரன் கதை வெளியாகியது !

படத்தின் கதை(?) முன்னமே வெளியாகுவது பிரபல இயக்குனர்களுக்கு நடிகர்களுக்கு பிடிக்காது, இருந்தாலும் கஜய் படத்தின் கதைகள்(?) பெரும்பாலும் மாறுவதில்லை என்பதால் நடிகர் கஜய் கதைவெளியாகுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

கஜயின் தந்தை கஜயை எப்படியும் தமிழக முதல்வர் ஆக்குவது அதன் பிறகு இந்திய பிரதமர் ஆக்கி இந்திய இளைஞர்களுக்கு நல்வாழ்வு அமைத்து தரவேண்டும் என்று சபதம் எடுத்து கஜயை பின்னால் இருந்து இயக்கிவருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

கஜய் நகரத்து இளைஞனாக வேசம் கட்டினால் தமிழக கிராமங்கள் வரையிலும் கஜயின் புகழ்பரவாது என்று உணர்ந்து எம்சிஆர் மற்றும் கஜினி பானியில் மீனவ கூட்டாளி, திரட்டு காளை என்பது போன்ற கிராமத்து பாத்திரங்களாக கஜய்க்கு தேர்வு செய்கிறார். சேவல்காரன் படத்தில் கஜய்க்கு ஆட்டோ ஓட்டுனர் ரோலாம். சேவலுக்கும் ஆட்டோவுக்கும் என்ன தொடர்போ என்று நினைப்பவர்கள் திரையிடும் நாள் வரை காத்திருக்கத் தேவையில்லை.

படத்தின் ஓப்பனிங்க் காட்சியில் தனது கிராமத்து நண்பர்களுடன் கஜய் விசிலடித்தபடி பெரும் கூட்டத்தில் நின்று கொண்டு இருக்க அங்கே ... கஜய் வளர்க்கும் சண்டை சேவலுக்கும் வில்லன் குரூப் சண்டை சேவலுக்கும் கடுமையான சேவல் சண்டை போட்டி நடக்கிறது. அந்த சமயத்தில் வில்லன் குரூப் ஆளுங்க ஒரு பெட்டைக் கோழியை தூக்கி சண்டை நடக்கும் இடத்தில் வீச, அதைப் பார்த்த கஜயின் சேவல் தடுமாற வில்லனின் சண்டைக் கோழியின் கால்களில் கட்டியிருந்த கத்தி கஜயின் சேவலை பதம் பார்த்துவிடுகிறது, இதைக் கண்ட கஜய் சுட்டெரிக்கும் விழிகளுடன் ஆவேசம் அடைகிறார். சுதாரித்து கொண்ட கஜய்சேவல் மீண்டும் பாய்ந்து சண்டையிடும் முன் பாய்ந்து அதனை பிடித்து கக்கத்தில் வைத்துக் கொண்டே வில்லன் கும்பலை பிரட்டி எடுக்கிறார். சண்டையெல்லாம் முடிந்த ஒரு குத்துப்பாட்டு, அது முடிந்த பிறகு கஜய் சேவலைத் தேட அந்த சேவல் இன்னொரு பெட்டைக் கோழியை துறத்திக் கொண்டு இருந்தது, பெட்டைக் கோழி ஒரு வீட்டுக்குள் நுழைய அங்கே அழகான பெண் (காமன்னாவோ, கனுஷாவோ) துறத்தி வரும் சேவலை துறத்துகிறார். அங்கே சொக்கிப் போய் நின்றிருந்த கஜய் சுதாரித்துக் கொண்டு வம்பிலுக்க முயன்று கொண்டிருக்க, அங்கே சேவலும் கோழியும் ராசி ஆகிவிடுகின்றன, அதைப் பார்த்த கஜயும் நாயகியும் ஒருவருக்கொருவர் வெட்கப்பட பத்திக் கொள்கிறது காதல், இந்த காட்சிக்கு பிறகு நீயுசியில் கிராமத்து செட்டுப் போட்ட பாடலில் கஜயும் நாயகியும் இருபது துணை நடிகர், நடிகைகள் ஆடுகிறார்கள்.

காட்சி முடிந்து சேவல் சூதாட்டக்காரனுக்கு எங்கப்பா பொண்ணு கொடுக்கமாட்டார் என்று நாயகி சொல்ல, அது சைடு எனக்கு மெயின் பிஸ்னஸ் ஆட்டோ ஓட்டுவது தான் நான் ஒரு ஆட்டோகாரன் என்கிறார் கஜய். இதற்கிடையே ஆட்டோக்களை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வரும் வில்லன் ஆட்டோ ஓட்டுனர்களை மிரட்டி அவர்கள் மூலமாக போதைப் பொருள் கடத்துகிறான். இதில் ஒரு ஆட்டோ ஒட்டுனர் சிக்கி 10 ஆண்டு கடும் காவல் தண்டனை பெறவே, அவனுடைய குடும்பம் மொத்தமாக தற்கொலைக்கு தயாராகும் அந்த நிமிடத்தில் கஜய் அங்குவர, ஆட்டோ ஓட்டுனரின் மொத்த குடும்பமும் ஆட்டோ ஓட்டுனர்கள் எவ்வாறு மிரட்டப்படுகிறார்கள், சூடுவச்ச மீட்டரோடு ஓட்டச் சொல்கிறார்கள், வசூல் எல்லாத்தையும் ரவுடிகளை வச்சு மிரட்டி வாங்கிக் கொள்கிறார்கள் அவர்களுக்கான நாள் கூலி கூட சரியாகக் கிடைக்கவில்லை, போதை பொருள் கடத்த வைக்கிறார்கள், கஞ்சா விற்கச் சொல்கிறார்கள், எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களையும் கடத்தி வந்து வில்லன் கும்பலுக்கு கொடுக்கச் சொல்கிறார்கள், இதைச் செய்யாத ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆட்டோ கிடைக்காது, குடும்பம் பட்டினியாக இருக்கவேண்டும். இப்படியான சிக்கலில் மாட்டிக் கொண்ட ஒருவர் தான் பத்தாண்டு கடும்காவல் பெற்றிருக்கிறார். வில்லன் குருப் ஆட்டோ திருடு போய்விட்டது என்று கூறி ஆட்டோவை மீட்டுவிட்டு இப்பொழுது வேறொரு ஓட்டுனர் கொடுத்துவிடுகிறது, அவர் என்னிக்கு மாட்டுவாரோ, எங்க குடும்பம் போல் அவங்க குடும்பமும் என்னிக்கு நடுத்தெருவுக்கு வருதோ, இதையெல்லாம் ஆண்டவன் தடுக்கல, ஆண்டவனுக்கு நாங்க சாகுறதிலேயும் விருப்பம் என்று விசம் கலந்த கோகோ கோலாவை பருக துவங்க, நரம்பு முறுக்கேறிய கஜய் அதனை தட்டிவிட்டு 'உங்களை மட்டும் இல்லை, இங்க உள்ள எல்லா ஆட்டோகாரர்களையும் நானே காப்பாற்றுகிறேன் என்று கிளம்புகிறார். அப்போது 'சிறுத்தை வரான் சிறுத்தைவாரன் உன் சிரத்தை அறுக்க சிறுத்தைவரான்...' என்ற பாடல் தூள்கிளப்புகிறது.

'நான் கையை ஓங்க மாட்டேன்.....அப்படி ஓங்கிட்டா நீ தாங்கமாட்டே' ஒவ்வொரு முறை சண்டைக்காட்சிக்கும முன் பேசும் இந்த பஞ்ச் வசனம் திரையரங்குகளில் விசில் பறக்க வைக்கும் என்று இப்பொழுதே பேசிக் கொள்ளப்படுகிறது

ஆட்டோவை வாடகைக்கு விட்டு சமூகத்தை சீரழிக்கும் வில்லனை கஜய் எப்படி வென்றார் என்பதுடன் நாயகியுடன் ஆடும் இன்னும் இரு பாடல்களையும் சேர்த்து வெள்ளி திரையில் பார்க்கவும். கேவிஎம் புரடெக்சன் என்று பெயர் போட்டு தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கும் சேவல் கறி பிரியாணி போட்டு போண்டியானதால், பன் டிவி நிர்வாகம் மொத்தமாக வாங்கிக் கொள்ள பன் லேபிளில் இந்தப்படம் வெளியிடப்படுகிறது.

12 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

முதல் வரவு, ஆஜர்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சரி! புறா படத்த பாத்ததுனால உங்களுக்கு ஏற்பட்ட பாந்தி, பயித்துப்போக்கு இப்ப தேவலாமா?

க.பாலாசி சொன்னது…

மொத்தத்தில் சேவல்காரன் = சிக்கன் பிரியாணி (மூணுநாளு மூடிவச்ச...)

தனி காட்டு ராஜா சொன்னது…

//'உங்களை மட்டும் இல்லை, இங்க உள்ள எல்லா ஆட்டோகாரர்களையும் நானே காப்பாற்றுகிறேன் //
ஆட்டோகாரர்களை காபத்தர ...சரி ...உன் படம் பாத்து பையிதியம் பிடிக்கற அளவுக்கு போயராங்கலே அவுங்கள எப்படி காப்பாற்ற போற ??

தனி காட்டு ராஜா சொன்னது…

http://thanikaatturaja.blogspot.com/2010/05/blog-post_7809.html

பனித்துளி சங்கர் சொன்னது…

/////'நான் கையை ஓங்க மாட்டேன்.....அப்படி ஓங்கிட்டா நீ தாங்கமாட்டே' ஒவ்வொரு முறை சண்டைக்காட்சிக்கும முன் பேசும் இந்த பஞ்ச் வசனம் திரையரங்குகளில் விசில் பறக்க வைக்கும் என்று இப்பொழுதே பேசிக் கொள்ளப்படுகிறது////////


இதை வச்சுதான் பொலப்பே ஓடுது . அதுவும் இல்லாவிட்டால் அப்பறம் செல்ல ஒட்டு தான் நடிகர் கஜய் .

ராஜரத்தினம் சொன்னது…

//வெளியீடு ஆகி இரண்டாம் நாள் என்பதால் படத்தின் பார்வையாளர்கள் 90 விழுக்காடு கஜய்ரசிகர்கள் தான். நான் கஜய் ரசிகன் இல்லை, இருந்தாலும் கஜய் படம் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தே சென்றேன். படம் ஏமாற்றவில்லை.//

சேவல்காரன் படம் வந்தபிறகு நீங்களும் இதே மாதிரி எழுத போறீங்க. அதையும் சேர்த்து சொல்லிடுங்களேன்.

வால்பையன் சொன்னது…

அடுத்து தாவல்காரனா!?

நசரேயன் சொன்னது…

அண்ணே படத்தோட உண்மை கதையும் இப்படியே இருந்தா ஆச்சரியப் படுவதற்கில்லை

rajeshsubbu சொன்னது…

இனிய வணக்கம். ஒரு நல்ல கதை ஆசிரியர் கிடைத்து விட்டார். அதனால் அடுத்த படத்துக்கு உங்களை கூப்பிட கூடும். சினிமாவுக்கு சென்றவுடன் எங்களை மறந்துவிடாதீர்கள்.

நன்றி
அன்புடன் ராஜேஷ்

பின்குறிப்பு

சுவாமி ஓம்கார் அவர்கள் ஒரு நல்ல திட்டம் நம் பூமிக்கு செய்கிறார். அதனை நாம் ஆதரிக்க வேண்டும். அதனால் நீங்கள் அந்த செயலை பற்றி ஒரு Blog போடுங்கள். நீங்கள் எழுதினால் அனைவரும் பார்ப்பார்கள். இது எனது பணிவான வேண்டுகோள்

priyamudanprabu சொன்னது…

இப்படி கதையை(?) வெளியிட்டதால் உங்கள் மீது வழக்கொ போட கூடும்

ஜோதிஜி சொன்னது…

இன்றைய தினம் தினமணி (வலையில்) தலையங்கம் படித்தீர்களா? மொழி குறித்து சிங்கப்பூர் நிகழ்வுகள்?

எதுவும் நீங்கள் இதைப் பற்றி எழுதியதாக தெரியவில்லை?

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=243880&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்