பின்பற்றுபவர்கள்

3 மே, 2010

*வைரஸ்* - தமிழ் ஓவியா வலைத் தளத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் !

திக தலைவர் கி.வீரமணி அவர்களின் புகழ்பாடும் பதிவர் திரு தமிழ் ஓவியாவின் வலைதளத்தில் வைரஸ் புகுந்துள்ளது. அந்த வலைதளத்திற்கு செல்லுவோர்களை வைரஸ் தாக்கக் கூடும், ஜெயமோகன் வலைத்தளத்தில் இருந்தது போன்ற அதே வைரஸ்.

* தமிழ் ஓவியாவின் வலைதளம் கூகுள் ப்ளாக் ஸ்பாட் என்றாலும் இணைத்திருக்கும் ஏதேனும் ஒரு பாடாவதி விட்ஜெட் வைரஸ் வழங்கும் சேவையையும் சேர்த்தே வழங்குகிறது என்று நினைக்கிறேன்.

* தமிழ் ஓவியா தேவையில்லாத விட்ஜெட்டுகளை நீக்கினால் வைரஸ் சரியாகிவிடும்

* தமிழ் ஓவியாவின் தளத்தை ஆண்டவனே (சிவனோ, விஷ்னுவோ, அல்லாவோ, ஜீஸஸோ அல்லது சோ இராமசாமியோ, நித்யானந்தமோ) தண்டித்துவிட்டார்கள் என்போர்களின் வலைதளம் கூட ஒருநாள் தேவையற்ற விட்ஜட்டுகளினால் பாதிக்கப்படலாம்.

* வைரஸ் பிரச்சனை சரியாகிவிட்டது என்று தமிழ் ஓவியா அறிவிப்பு வெளியிடும் வரை யாரும் செல்லாதீர்கள், அதையும் மீறி படிக்க ஆவல் கொண்டால் நேரடியாக விடுதலை இணையத்தளத்திற்கு சென்று படிக்கலாம். அண்ணன் தமிழ் ஓவியா விடுதலையில் இருந்து எடுத்து தான் 90 விழுக்காடு இடுகைகள் போடுகிறார்

14 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

மறுபடியுமா?

போன ஆகஸ்ட் மாதம்தான் அவரை எச்சரிக்கை செய்தேனே. அவரும் சரி செய்ததாகக் கூறினார்.

பார்க்க: http://dondu.blogspot.com/2009/08/10082009.html

தேவயின்றி விட்ஜெட்டுகளை சேர்க்கக் கூடாது என்பது உண்மைதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Chittoor Murugesan சொன்னது…

கோ.வி.அய்யா,
ஏறக்குறைய இதே நிலை தான் என் வலைப்பூவுக்கும். என்ன ஒரு வித்யாசம் என்றால் ஏதோ ஸ்கான் ப்ராசஸ் ஆரம்பமாயிருதுன்னு நீக்கியிருக்கிறதா தமிழ் மணம் மெயிலியிருக்காங்க. ஓசில கிடைக்குதேனு ஆத்த மாட்டாத போட்ட விட்ஜெட்டுகளாலதான் பிரச்சினையா இல்லே பகுத்தறிவாளர்கள் பூக்களை குறிவச்சு பூச்சி விடறானுங்களா

Athisha சொன்னது…

வைரஸ் பிரச்சனை சரியாகிவிட்டது என்று தமிழ் ஓவியா அறிவிப்பு வெளியிடும் வரை யாரும் செல்லாதீர்கள், அதையும் மீறி படிக்க ஆவல் கொண்டால் நேரடியாக விடுதலை இணையத்தளத்திற்கு சென்று படிக்கலாம். அண்ணன் தமிழ் ஓவியா விடுதலையில் இருந்து எடுத்து தான் 90 விழுக்காடு இடுகைகள் போடுகிறார்..//


:-)))))))

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

கடைசி இரண்டு பாயிண்டுகளை ரசித்தேன் :)

Aranga சொன்னது…

jeyamohan.in வைரஸ் பிரச்சனை சரிசெய்யப் பட்டுவிட்டது - தகவலுக்காக.

ப.கந்தசாமி சொன்னது…

நன்றி கோ.வி.

S.Gnanasekar சொன்னது…

உங்கள் எச்சரிக்கைக்கு மிக்க நன்றி நன்பர் கோவி.கண்ணன் அவர்களே.
சோ.ஞானசேகர்.

அறிவிலி சொன்னது…

:-))

bandhu சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தமிழ் ஓவியா சொன்னது…

//தமிழ் ஓவியா அறிவிப்பு வெளியிடும் வரை யாரும் செல்லாதீர்கள்//

தங்களின் நல்ல எண்ணத்திற்கு மிக்க நன்றி.

வாடிய பயிரைக் கண்ட போது வாடிய வள்ளலார் வாழ்க

தமிழ் ஓவியா சொன்னது…

//விட்ஜெட்டுகளாலதான் பிரச்சினையா இல்லே பகுத்தறிவாளர்கள் பூக்களை குறிவச்சு பூச்சி விடறானுங்களா//

எப்படி இடைஞ்சல் கொடுத்தாலும் நமது பகுத்திறிவுப் பிரச்சாரத்தை தடுத்து விட முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

// தமிழ் ஓவியா said...

//தமிழ் ஓவியா அறிவிப்பு வெளியிடும் வரை யாரும் செல்லாதீர்கள்//

தங்களின் நல்ல எண்ணத்திற்கு மிக்க நன்றி.

வாடிய பயிரைக் கண்ட போது வாடிய வள்ளலார் வாழ்க//

பின்னே அவங்க கணிணியில் வைரஸ் வந்தால் நீங்கள் சரி செய்து கொடுப்பீர்களா ?

ஆனாலும் உங்க ரெஸ்பான்ஸ் எம்ஜிஆர் செத்துட்டாரான்னு கேட்கிற மாதிரி

தமிழ் ஓவியா சொன்னது…

////தமிழ் ஓவியா அறிவிப்பு வெளியிடும் வரை யாரும் செல்லாதீர்கள்//

தங்களின் நல்ல எண்ணத்திற்கு மிக்க நன்றி.

வாடிய பயிரைக் கண்ட போது வாடிய வள்ளலார் வாழ்க//

பின்னே அவங்க கணிணியில் வைரஸ் வந்தால் நீங்கள் சரி செய்து கொடுப்பீர்களா ?//

சரியானதைக்கூட சொல்லாமல் இருப்பதைத்தான் இங்கே சுட்டிக் காட்டினேன். ஆனால் நீங்களோ மற்றவர் கணனி பற்றி பேசுகிறீர்கள்.சரியான பின் மற்றவர் கணனியில் வைரஸ் எப்படி வரும்?

உங்களின் நல்ல எண்ணத்தைக் கண்டு
உலகமே உற்சாகப் படுகிறது.

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//சரியானதைக்கூட சொல்லாமல் இருப்பதைத்தான் இங்கே சுட்டிக் காட்டினேன். ஆனால் நீங்களோ மற்றவர் கணனி பற்றி பேசுகிறீர்கள்.சரியான பின் மற்றவர் கணனியில் வைரஸ் எப்படி வரும்?

உங்களின் நல்ல எண்ணத்தைக் கண்டு
உலகமே உற்சாகப் படுகிறது.

நன்றி//

இது நல்லா இருக்கே, உங்க வலைத்தளத்தில் வைரஸ் பிரச்சனை போச்சா இல்லையான்னு எனக்கு எப்படி தெரியும் ? நீங்கள் தான் தற்பொழுது எனது வலைத்தளத்தில் வைரஸ் பிரச்சனை இல்லை என்று அறிவிப்பு போட்டிருக்கனும், உங்கள் வாசகர்கள் மேல் நல்லெண்ணத்தில் அவர்கள் உங்களால் பாதிக்கப்பட்டதாக புலம்பக் கூடாது என்பதற்கு நான் அறிவுறுத்தியதற்கு இது எனக்கு தேவை தான் சார். நீங்களாச்சு உங்கள் வலைதளமாச்சு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்