பின்பற்றுபவர்கள்

5 மே, 2010

கலவை 05/மே/2010 !

போலி(ஸ்) தகவல்: இன்னிக்கு இணைய செய்தியில் தமிழ் நாட்டில் இருவேறு இடங்களில் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதான தகவலைப் படித்தேன். போலி மருந்து தொடர்பான நடவடிக்கைகளின் போது உபரியாக இவர்களும் சிக்கி இருக்க வேண்டும், மக்கள் வசிக்கும் இடத்தில் எவர் வேண்டுமானாலும் சிகிச்சை மையம் தொடங்கலாம் என்னும் நிலை இருப்பதைத்தான் இவை உணர்த்துகின்றன. பொது இடத்தில் வெளிப்படையாக கஞ்சாவிற்பதை அரசு காவலர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பார்களா ? மக்கள் உயிருடன் தொடர்புடைய சிகிச்சை மையங்கள் புதிதாகத் தொடங்கப்படும் போது காவலர்கள் கண்டும் காணாமல் இருந்துவிட்டு திடிரென்று ஒரு நாள் கைது செய்வதாக அறிவிப்பதெல்லாம் நாங்களும் செயல்படுகிறோம் என்பதைக் காட்டும் வித்தையே. மாவட்ட மருத்துவ கவுன்சில் அனுமதி இல்லாமல் எந்த ஒரு கிளினிக்கும் புதிதாக துவங்க முடியாது என்ற நிலை இருந்து, அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்ட மருத்துவ மையங்களின் பட்டியல் உள்ளூர் காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்டு தொடர்ச்சியாக அவர்களால் கண்காணிக்கப்பட்டால் போலி மருத்துவர்களோ, மருத்துவ மனைகளோ உருவாகாது. விபத்துகளைவிட புற்று நோய் மோசமானது, வெளிப்படையான தீவிரவாதங்களை விட போலி அமைப்புகள் மோசமானவை. போலி துணை கண்காணிப்பாளர்கள் (எஸ்ஐ) என காவல்துறையின் கண்ணில் மண்ணை ஏற்கனவே அள்ளிப் போட்டுவிட்டதால் இவர்களின் பார்வைகள் சரிவர இயங்கவில்லை என்று தான் நினைக்க வேண்டி இருக்கிறது.

தேனீ உமர் : உலக தமிழ் மாநாட்டில் தேனீ உமருக்கான அங்கீகாரம் வேண்டும் என்ற தலைப்பில் வரும் பதிவுகளைப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலும் இஸ்லாமிய பதிவர்களின் பெயர்களின் தான் வருகின்றன. தமிழ் மணமும் உமரை நினைவு கூர்ந்து முகப்பில் அவரது படத்தை வைத்து, இணைப்புக் கொடுத்துள்ளது பாராட்டத்தக்கது. தமிழுக்காக பாடுபட்டு மறைந்த ஒருவரை அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் நினைவு கூற முடியும் என்கிற ஒரு மத அடிப்படையிலான நிலைக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று நினைக்க தமிழன் என்ற அடையாளம் போலியானதா என்று நினைக்கத் தோன்றுகிறது. தேனீ 'உமர்' என்கிற பெயரில் 'உமர்' - க்கு பதிலாக ஒரு இந்து பெயர் இருந்திருந்தால் அவருக்கான அங்கீகாரம் ஏற்கனவே கிடைத்திருக்கும் அளவுக்கு எடுத்துச் சென்றிருப்போமோ ? மத அடிப்படையில் பிரிந்து கிடக்கும் நம்மால் ஒன்றுபட்டு ஒருவரின் சாதனைகளைக் கூட எடுத்துச் சொல்ல முடியவில்லை என்று நினைக்கும் போது நாமெல்லாம் தமிழன் என்று எதை வைத்து பெருமைப்படுகிறோம் என்றே தெரியவில்லை. தேனீ உமர் பற்றி அறிந்து கொள்ள
சுட்டி 1, சுட்டி 2

கசாப் கசாப் : குற்றம் செய்தது உறுதி என்று நிரூபனம் செய்யப்பட்டதாம், தண்டனை ஒரு சில நாளில் அறிவிப்பார்கள் என்று படித்தேன். கசாப்பை பாதுக்காத்து விசாரணை செய்ய 10 கோடிக்கு மேல் பொது மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பணத்தை அந்த குறிப்பிட சம்பவத்தில் இறந்த பாதுகாப்பு வீரர்கள் உட்பட பொது மக்களுக்கு வழங்கி இருந்தால் 100 பேருக்கு தலா 10 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்க முடியும். நான் மரண தண்டனை கூடாது என்கிற கருத்து உடையவன். இறந்த ஒருவரை எழுப்ப முடியாத நமக்கு ஒரு உயிரை நசுக்கும் உரிமை அரசாங்கம் உட்பட யாருக்குமே கிடையாது என்று நம்புகிறேன். இப்போதைய மும்பை மக்களின் மனநிலையைப் பொருத்த அளவில் கசாப்பைப் அனைத்துலக இஸ்லாமிய சட்டப்படி பொது இடத்தில் நிறுத்தி கல்லால் அடித்து கொல்லுதல் என்ற அறிவிப்பு இட்டால் பெரிய அளவில் கூட்டம் கூடும். இருந்தாலும் காசப்புக்கான தண்டனை அம்புக்கு கிடைக்கும் தண்டனைதான் எய்தவர்கள் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் உட்பட பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

இலவச அல்வா : இலவசமாக நாங்க எல்லாத்தையும் தருகிறோம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறோம் என்று கூறித்தான் திமுக ஆட்சிக்கட்டிலில் ஏறியது, அதன் படி கோடிக்கணக்கில் 14" வண்ணத் தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டன, இலவச தொலைகாட்சி சரி, அதற்கு இணைப்பு ? அரசே கேபிள் நிறுவனம் நடத்துவதாகக் கூறியது, அதன் படி துவங்கப்பட்டது. இப்போது நட்டத்தில் ஓடுகிறதாம்.

வாங்கிய தொலைகாட்சிப் பெட்டிகளின் அரிசி கொட்டிவைக்கவும் முடியாது, பார்த்து பழக்கப்பட்டவர்கள் எப்படியேனும் கேபிள் இணைப்பு பெற்றால் தான் பார்க்க முடியும் என்கிற நிலை. அதற்கான தனியார் மாதக்கட்டணம் 75லிருந்து 100 வரை. பெரும்பாலும் கேபிள் நிறுவனங்களை நடத்துவது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஒரு தொலைகாட்சி இணைப்புக்கு மாதம் 75 ரூ என்றாலும் ஒரு கோடி இணைப்புக்கு மாதம் கிடைப்பது 75 கோடி ரூபாய், ஆண்டுக்கு 75 x 12 = 900 கோடி. இந்த வருமானத்தை அரசு சார்பில் கேபிள் நடத்தினால் தனியாருக்கு கிடைக்குமா ? அரசு கேபிள் திட்டம் மூடப்படுவதற்கு நட்டம் ஒன்றே காரணம் என்றால் மக்கள் இலவசமாக வாங்கிய தொலைகாட்சிகளை தெருவில் தூக்கிப் போட்டு எதிர்ப்பு காட்டினால் தான், அடுத்த முறை இலவசம் என்கிற பெயரில் அரசியல்வாதிகள் பகல் இரவு கொள்ளையை தொடரமாட்டார்கள்.

அரசு சார்பில் என ஒரு இலவசத்திட்டதை துவங்கி தனது குடும்பத்தின் வருமானத்திற்கான முதலீடுகளாக மாற்றும் திறமை எந்த ஒரு மாநில முதல்வருக்கும் இல்லை. நாம் பெருமைப்படலாம்.

இலவசம் என்று எதையும் பெறாத நடுத்தர மக்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி கட்ட, அந்த பணம் அரசின் இலவச திட்டம் என்ற பெயரில் சொந்த நலனுக்கான மறு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. தட்டிக் கேட்கவேண்டிய எதிர்கட்சிகளுக்கும் இதில் பங்கு இருக்கிறதோ.......நாம யோசிக்கும் அளவுக்கு அவங்க யோசிக்கமாட்டார்களா ?

விஞ்ஞான முறை ஊழலாமே - அப்படி என்றால் என்ன ?

40 கருத்துகள்:

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

விஞ்ஞான முறையில் "ஊழல்" என்ற வார்த்தையே இவர்களுக்காகத்தானே சர்க்காரியா கமிஷனால் கண்டு பிடிக்கப் பட்டது. என்னத்த சொல்லறது போங்க...

பெரிய நாடு, அதிகமான மக்கள் தொகை, கட்டுபாடில்லாத அரசியல்வாதிகள், கண்டிப்பில்லாத சட்டங்கள், இவைதான் இந்த நாட்டின் பலமும், பலவீனமும்

ப.கந்தசாமி சொன்னது…

பதிவிற்கு சம்பந்தமில்லாமல் ஒரு கேள்வி. ஸ்வாமி ஓம்காரின் சிங்கைப்பயணத்தைப்பற்றி ஒரு பதிவும் காணோமே. நாம் நம்பும் ஒரு விஷயத்தைப்பற்றி பதிவு போட ஏன் தயக்கம்?

நிகழ்காலத்தில்... சொன்னது…

கோவிச்சுக்காதீங்க கோவியாரே..

வருகிற தேர்தல்ல இலவச கேபிள் இணைப்பும், கூடவே dvd player ம் கொடுத்திருலாம்.

மக்களுக்கு தொண்டு செய்ய இன்னொரு வாய்ப்பு வேணுமில்லையா:))

கோவி.கண்ணன் சொன்னது…

// Dr.P.Kandaswamy said...

பதிவிற்கு சம்பந்தமில்லாமல் ஒரு கேள்வி. ஸ்வாமி ஓம்காரின் சிங்கைப்பயணத்தைப்பற்றி ஒரு பதிவும் காணோமே. நாம் நம்பும் ஒரு விஷயத்தைப்பற்றி பதிவு போட ஏன் தயக்கம்?//

கந்தசாமி ஐயா,

சிங்கைக்கு ஸ்வாமி ஓம்கார் மற்றும் கேபிள் சங்கர் இருவருமே வந்தார்கள், இருவருமே அதைப் பற்றி அவர்கள் பதிவுகளில் பகிர்ந்து கொண்டார்கள், எனவே முழுத்தகவல்கள் அவர்களால் ஏற்கனவே அளிக்கப்பட்டது என்பதால் நானும் அதன் தொடர்பில் எழுதவில்லை. ஆனால் அவர் வருவதற்கு முன்பே விரிவான அறிவிப்பைவெளியிட்டேன். அப்போது நித்தியானந்தன் பற்றி ஊடகங்களிலும் பதிவுகளிலும் சுனாமி அடித்துக் கொண்டிருந்ததால் அன்னேரம் ஸ்வாமி ஓம்காரின் நிகழ்ச்சி பற்றி எழுதி இருந்தாலும் பலரால் பழிக்கப்படும் என்பதால் சூழல் கருதி தவிர்த்தேன் என்றும் சொல்லலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆரூரன் விசுவநாதன் said...


பெரிய நாடு, அதிகமான மக்கள் தொகை, கட்டுபாடில்லாத அரசியல்வாதிகள், கண்டிப்பில்லாத சட்டங்கள், இவைதான் இந்த நாட்டின் பலமும், பலவீனமும்

9:47 AM, May 05, 2010//

உலகநாடுகளின் பணக்காரர் வரிசைகளில் இடம் பிடிக்க இந்தியர்கள் முயற்சி செய்கிறார்கள். அப்படி நடந்துவிட்டால் இந்தியா பணக்கார நாடு இல்லையா ?
:)

Unknown சொன்னது…

அடுத்த தேர்தலுக்கு பணத்த கொடுப்போம் இல்லியா, அத வச்சு டிவி பாருங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...

கோவிச்சுக்காதீங்க கோவியாரே..

வருகிற தேர்தல்ல இலவச கேபிள் இணைப்பும், கூடவே dvd player ம் கொடுத்திருலாம்.

மக்களுக்கு தொண்டு செய்ய இன்னொரு வாய்ப்பு வேணுமில்லையா:))//

dvd player-ல் போட இலவசம் என்ற பெயரில் திமுக குடும்ப தயாரிப்பு படங்களையும் சேர்த்தே வாங்கி விற்றுவிடுகார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//கே.ஆர்.பி.செந்தில் said...

அடுத்த தேர்தலுக்கு பணத்த கொடுப்போம் இல்லியா, அத வச்சு டிவி பாருங்க//

குறைந்த வருமானக் குடும்பங்கள் ரேசன் கார்டு காட்டினால் திரையரங்கில் இலவசக்காட்சி என்று இலவசஅறிவிப்பு கூட வரலாம், குப்பைப் படங்களுக்கு மானியம் கொடுத்தது போலவும் ஆகும். திரைத் துறையும் நட்டத்தில் ஓடாது.
*********
செந்தில்,
300 ஆவது பின் தொடர்பவராக இணைந்ததற்கு நன்றி.

அருண்மொழிவர்மன் சொன்னது…

தேனீ உமர் பற்றி மிகக் கொஞ்சமே அறிந்திருந்தேன்,
அவர் பற்றிய விரிவாக தந்த பயனுள்ள சுட்டிகளுக்கு நன்றிகள்

Sanjai Gandhi சொன்னது…

குற்றத்தை பொறுத்து மரணதண்டனை விதிக்கலாம். 166 பேரைக் கொன்றுகுவித்த கும்பலைச் சேர்ந்த ஒருவனிடம் உயிரெடுக்கும் அதிகாரம் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. குற்றங்கள் குறைய தண்டனைகள் கடுமையாகனும்..

விஞ்சான முறை ஊழலா அப்டின்னா? சண்டை போட்டு சேனலும் கேபிள் கம்பனியும் ஆரம்பிக்கனும்.. தன் மக்கள் காசுல ஆரம்பிச்ச சேனைலை வச்சிகிட்டு மக்கள் காசுல ஆரம்பிச்ச கேபுள் கம்பெனிக்கு சங்கூதனும்.. இதுக்கு பேர் தான் விமுஊ என்று கழகக் கண்மணிகள் சொல்றாய்ங்க..

ஜில்தண்ணி சொன்னது…

கசாப்பிற்க்கு மரண தண்டனை தான் உரியது,
ஈவு இரக்கம்,மனிதாபிமானம் என்று பார்த்தால்,மக்கள் கதி என்ன ஆவது

அரசும் இந்த விஷயத்தில் அனாவசிய செலவு தான் செய்கிறது,புடிச்ச உடனே அவன தூக்குல தொங்க விட்டிருக்கனும்,அதான் சரி

priyamudanprabu சொன்னது…

நான் மரண தண்டனை கூடாது என்கிற கருத்து உடையவன். இறந்த ஒருவரை எழுப்ப முடியாத நமக்கு ஒரு உயிரை நசுக்கும் உரிமை அரசாங்கம் உட்பட யாருக்குமே கிடையாது என்று நம்புகிறேன்
////////////

நசுக்கும் உரிமை இல்லை , ஆனா அவன் செய்துள்ளானே?!
அப்பாவிகள் பாதிக்க பட்டுள்ளார்கள்
அவனுக்கு தூக்கு மிக சரி
மனுசன கொல்லத்தான் யோசிக்கனும்

Kesavan சொன்னது…

//ஒரு தொலைகாட்சி இணைப்புக்கு மாதம் 75 ரூ என்றாலும் ஒரு கோடி இணைப்புக்கு மாதம் கிடைப்பது 75 கோடி ரூபாய், ஆண்டுக்கு 75 x 12 = 900 கோடி //

எப்ப விஜயகாந்த் கட்சியிலே சேர்ந்தீங்க. அவரு போடற மாதிரி கணக்கு சூப்பர போடறீங்க :)

எனக்கு இன்னும் டிவி கிடைக்கல.

//அரசு சார்பில் என ஒரு இலவசத்திட்டதை துவங்கி தனது குடும்பத்தின் வருமானத்திற்கான முதலீடுகளாக மாற்றும் திறமை எந்த ஒரு மாநில முதல்வருக்கும் இல்லை. நாம் பெருமைப்படலாம்.//

சன் டிவி செட்டாப் பாக்ஸ் இலவசமா தராங்க தெரியுமா . (மத்த பத்தி கேள்வி கேக்க கூடாது)

Kesavan சொன்னது…

//நான் மரண தண்டனை கூடாது என்கிற கருத்து உடையவன். இறந்த ஒருவரை எழுப்ப முடியாத நமக்கு ஒரு உயிரை நசுக்கும் உரிமை அரசாங்கம் உட்பட யாருக்குமே கிடையாது என்று நம்புகிறேன்.//

மரண தண்டனை கொடுத்தால் அவன் செத்து விடுவான். அது தேவை இல்லை . அவன் வாழ் நாள் முழுவதும் இப்படி பட்ட சம்பவத்தை செய்ததற்காக வருந்தும் படி ஒரு தண்டனை கொடுக்க வேண்டும் . உறவினரை இழந்து வாடும் மக்களின் துயரத்தை அவனும் வாழ் நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டும்

rajeshsubbu சொன்னது…

//இறந்த ஒருவரை எழுப்ப முடியாத நமக்கு ஒரு உயிரை நசுக்கும் உரிமை அரசாங்கம் உட்பட யாருக்குமே கிடையாது என்று நம்புகிறேன்.// இந்த வரிகளில் உண்மை இருக்கிறது ஒஷோ கூட சொல்வார் ஒருவன் தவறு செய்துவிட்டால் அவனை தண்டிப்பது தவறு. ஏன் என்றால் மனிதனுக்கு மரணதண்டனை கொடுப்பது அவன் தங்கிருக்கும் வீட்டை இடிப்பது போல் ஆகும். நான் உங்கள் பதிவுகளை பார்ப்பேன் ஆனால் இன்று தான் commends எழுதினேன்.நன்றி
அன்புடன்
ராஜேஷ்

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

//ஒரு தொலைகாட்சி இணைப்புக்கு மாதம் 75 ரூ என்றாலும் ஒரு கோடி இணைப்புக்கு மாதம் கிடைப்பது 75 கோடி ரூபாய், ஆண்டுக்கு 75 x 12 = 900 கோடி //

எப்ப விஜயகாந்த் கட்சியிலே சேர்ந்தீங்க. அவரு போடற மாதிரி கணக்கு சூப்பர போடறீங்க :)

எனக்கு இன்னும் டிவி கிடைக்கல.
//


அரிசி கொட்டி வைக்கனுமா ? :)

// சன் டிவி செட்டாப் பாக்ஸ் இலவசமா தராங்க தெரியுமா . (மத்த பத்தி கேள்வி கேக்க கூடாது)//

யானை வாங்கினால் சாட்டை இலவசம்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger rajeshsubbu said...

//இறந்த ஒருவரை எழுப்ப முடியாத நமக்கு ஒரு உயிரை நசுக்கும் உரிமை அரசாங்கம் உட்பட யாருக்குமே கிடையாது என்று நம்புகிறேன்.// இந்த வரிகளில் உண்மை இருக்கிறது ஒஷோ கூட சொல்வார் ஒருவன் தவறு செய்துவிட்டால் அவனை தண்டிப்பது தவறு. ஏன் என்றால் மனிதனுக்கு மரணதண்டனை கொடுப்பது அவன் தங்கிருக்கும் வீட்டை இடிப்பது போல் ஆகும். நான் உங்கள் பதிவுகளை பார்ப்பேன் ஆனால் இன்று தான் commends எழுதினேன்.நன்றி
அன்புடன்
ராஜேஷ்//

மிக்க நன்றி திரு இராஜேஷ்

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™ said...

குற்றத்தை பொறுத்து மரணதண்டனை விதிக்கலாம். 166 பேரைக் கொன்றுகுவித்த கும்பலைச் சேர்ந்த ஒருவனிடம் உயிரெடுக்கும் அதிகாரம் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. குற்றங்கள் குறைய தண்டனைகள் கடுமையாகனும்..//

ஆனாலும் செலக்டீவாகத்தான் இது போல தீர்ப்பு சொல்றிங்க :) எனக்கு சீக்கிய படுகொலை ஞாபகம் வருது.

//விஞ்சான முறை ஊழலா அப்டின்னா? சண்டை போட்டு சேனலும் கேபிள் கம்பனியும் ஆரம்பிக்கனும்.. தன் மக்கள் காசுல ஆரம்பிச்ச சேனைலை வச்சிகிட்டு மக்கள் காசுல ஆரம்பிச்ச கேபுள் கம்பெனிக்கு சங்கூதனும்.. இதுக்கு பேர் தான் விமுஊ என்று கழகக் கண்மணிகள் சொல்றாய்ங்க..//

தம்பி சஞ்செய், காங்-திமுக கூட்டணி மாறினால் தான் கூவனும், இப்பவே அட்வான்சாக நீ கூவுவதைப் பார்த்தால் கூட்டணி தெறிப்பு விடுவது போல தெரிகிறதே.
:)

Kesavan சொன்னது…

// அரிசி கொட்டி வைக்கனுமா ? :)

எனக்கு ஒரு ருபாய் அரிசியும் கிடைகல . அரிசி விலை 35 ருபாய். பெட்ரோல் விலை 55 ருபாய், சமையல் எண்ணை விலை 75 ருபாய் . கேபிள் கட்டணம் 100௦௦ ருபாய் . (விலைகள் + அல்லது - இருக்கலாம் ). கலைஞர் ஆட்சியில் எல்லாம் மலிவு . ஆமாம் மலிவு விலை மது எப்ப வரும்.

சமீபத்திய செய்தி . பெட்ரோல் டீசல் ஆறு ருபாய் விலை உயரலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

Kesavan சொன்னது…

//குற்றத்தை பொறுத்து மரணதண்டனை விதிக்கலாம். 166 பேரைக் கொன்றுகுவித்த கும்பலைச் சேர்ந்த ஒருவனிடம் உயிரெடுக்கும் அதிகாரம் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. குற்றங்கள் குறைய தண்டனைகள் கடுமையாகனும்//

அன்னைக்கு மன்னிக்கும் எண்ணம் அதிகம். அதனால் கசபாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி யாருக்கும் மரண தண்டனை கிடையாது .

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இலவச டிவி போனமாசம்தான் கிடைச்சிதாம்.

கசாப்பிற்கு விசாரணை முடிந்த உடனே மரணதண்டனை கொடுத்திருக்கலாம் என்பது என் கருத்து. தீவரவாதத்திற்கு உடனடி தண்டனைதான் சரியான தீர்வு.

தேனீ உமர் பற்றி அறிந்துகொண்டேன்.

Sanjai Gandhi சொன்னது…

//ஆனாலும் செலக்டீவாகத்தான் இது போல தீர்ப்பு சொல்றிங்க :) எனக்கு சீக்கிய படுகொலை ஞாபகம் வருது.//

ஆமாமா.. இதுக்குக் காரணமானவங்களுக்கு ஜனாதிபதி விருது குடுக்கனும்னு சொன்னது உங்களுக்கும் தெரிஞ்சிப் போச்சா? :(

கூட்டணி என்பதற்காக எல்லாவற்றையும் ஏத்துக்கனுமா என்ன? இலவச டிசி, அரசு கேபிள் பித்தலாட்டம், எமன் படம் போட்ட விளம்பரம் உள்ளிட்ட இன்னும் பலவற்றை கடுமையாகவே எதிர்த்திருக்கிறேன்.. கூட்டணியாவது புண்ணாக்காவது.. துதிப் பாடத்தான் சட்டமன்றத்துக்கு சில்ரை அனுப்பி இருக்கோமே.. நானும் அதே செய்யனுமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™ said...


ஆமாமா.. இதுக்குக் காரணமானவங்களுக்கு ஜனாதிபதி விருது குடுக்கனும்னு சொன்னது உங்களுக்கும் தெரிஞ்சிப் போச்சா? :(
//
விருதா ? ஏற்கனவே ஒரு சீக்கிய நிருபர் சிதம்பரத்துக்கு கொடுத்துட்டார் :)


// கூட்டணி என்பதற்காக எல்லாவற்றையும் ஏத்துக்கனுமா என்ன? இலவச டிசி, அரசு கேபிள் பித்தலாட்டம், எமன் படம் போட்ட விளம்பரம் உள்ளிட்ட இன்னும் பலவற்றை கடுமையாகவே எதிர்த்திருக்கிறேன்.. கூட்டணியாவது புண்ணாக்காவது.. துதிப் பாடத்தான் சட்டமன்றத்துக்கு சில்ரை அனுப்பி இருக்கோமே.. நானும் அதே செய்யனுமா?//

தம்பி, உன் நேர்மை எனக்கு புடிச்சிருக்கு

Sanjai Gandhi சொன்னது…

//விருதா ? ஏற்கனவே ஒரு சீக்கிய நிருபர் சிதம்பரத்துக்கு கொடுத்துட்டார் :)//

பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்டதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்துத் தொலைக்கிறது. ஓ.. விருது அல்லவா அது..

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger SanjaiGandhi™ said...

//விருதா ? ஏற்கனவே ஒரு சீக்கிய நிருபர் சிதம்பரத்துக்கு கொடுத்துட்டார் :)//

பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்டதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்துத் தொலைக்கிறது. ஓ.. விருது அல்லவா அது..//

கோழையாக சிலைக்கு யார்வேண்டுமானாலும் என்ன மாலை வேண்டுமானாலும் போட முடியும். சிதம்பரத்திற்கு, சு.சாமி (முட்டை வீச்சு) கிடைத்தது போல் நேரடி அனுபவம் கிடைப்பது தான் அரிது.

பெரியார் மீதும் செருப்பு வீச்சு நடந்திருக்கிறது, இன்னொரு செருப்பும் வந்தால் சோடியாக பயன்படுத்தலாம் என்பதால் பெரியார் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

Sanjai Gandhi சொன்னது…

//பெரியார் மீதும் செருப்பு வீச்சு நடந்திருக்கிறது, இன்னொரு செருப்பும் வந்தால் சோடியாக பயன்படுத்தலாம் என்பதால் பெரியார் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. //

சிதம்பரம் பெரிதாக எடுத்துக் கொண்டாரா? பெரியாருக்கு கிடைத்த அதே மரியாதை சிதம்பரத்துக்கு கிடைத்திருக்கிறது.. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//சிதம்பரம் பெரிதாக எடுத்துக் கொண்டாரா? பெரியாருக்கு கிடைத்த அதே மரியாதை சிதம்பரத்துக்கு கிடைத்திருக்கிறது.. :)//

சிதம்பரம் புகழோடு அவர் இராஜகண்ணப்பனை தள்ளிவிட்டு வெற்றி (வாங்கிச்) சூடிக் கொண்டதையும் சேர்த்து சொல்லுங்க. புகழ் நல்லா பரவும்.
:)

Sanjai Gandhi சொன்னது…

//சிதம்பரம் புகழோடு அவர் இராஜகண்ணப்பனை தள்ளிவிட்டு வெற்றி (வாங்கிச்) சூடிக் கொண்டதையும் சேர்த்து சொல்லுங்க. புகழ் நல்லா பரவும்.
:)//

இதை சம்பந்தமே இல்லாதவர்கள் தான் சொல்லிப் பொலம்பறிங்க.. கண்ணப்பன் கோர்ட்டுக்கு போக வேண்டியது தானே?. தோல்விய ஒத்துக்கக் கூட மனசில்லாம புலம்பினா எப்படி ரத்ததின் ரத்தமே :))

Kesavan சொன்னது…

//இதை சம்பந்தமே இல்லாதவர்கள் தான் சொல்லிப் பொலம்பறிங்க.. கண்ணப்பன் கோர்ட்டுக்கு போக வேண்டியது தானே?. தோல்விய ஒத்துக்கக் கூட மனசில்லாம புலம்பினா எப்படி ரத்ததின் ரத்தமே :)) //

சும்மா காமெடி பண்ணாதீங்க. கோர்டுக்கு போறதா .கோர்டே சிதம்பரம் கையில தான் இருக்கு. எப்படி அய்யா நியாயம் கிடைக்கும் ?

Sanjai Gandhi சொன்னது…

//கோர்டே சிதம்பரம் கையில தான் இருக்கு.//

:)))))))))))))))))))))

Kesavan சொன்னது…

அதெல்லாம் விடுங்க. ஆமாம் ,மத்திய அரசின் சிக்கன நடவடிக்கை என்ன ஆச்சு ? போயே போச்சா , போயிந்தேவா :)

கோவி.கண்ணன் சொன்னது…

//இதை சம்பந்தமே இல்லாதவர்கள் தான் சொல்லிப் பொலம்பறிங்க.. கண்ணப்பன் கோர்ட்டுக்கு போக வேண்டியது தானே?. தோல்விய ஒத்துக்கக் கூட மனசில்லாம புலம்பினா எப்படி ரத்ததின் ரத்தமே :))//

ஆதாரங்களுடன் தான் தப்புகள் நடக்கும் அல்லது கோர்ட் வழக்கு என்று போனால் ஆதாரம் பயன்படாது என்ற உங்கள் நம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

அதெல்லாம் விடுங்க. ஆமாம் ,மத்திய அரசின் சிக்கன நடவடிக்கை என்ன ஆச்சு ? போயே போச்சா , போயிந்தேவா :)//

இந்த ஆண்டு பார்லிமெண்டுக்கு சிக்கன நடவடிக்கைக் காரணமாக சுண்ணாம்பு அடிக்கப் போவதில்லையாம். காங்கிரசு அலுவலகம் இருக்கும் சாலையை செப்பனிடுவார்களான்னு கேட்காதிங்க
:)

கையேடு சொன்னது…

//மத அடிப்படையில் பிரிந்து கிடக்கும் நம்மால் ஒன்றுபட்டு ஒருவரின் சாதனைகளைக் கூட எடுத்துச் சொல்ல முடியவில்லை என்று நினைக்கும் போது நாமெல்லாம் தமிழன் என்று எதை வைத்து பெருமைப்படுகிறோம் என்றே தெரியவில்லை//

உண்மைதாங்க.

Sanjai Gandhi சொன்னது…

//அதெல்லாம் விடுங்க. ஆமாம் ,மத்திய அரசின் சிக்கன நடவடிக்கை என்ன ஆச்சு ? போயே போச்சா , போயிந்தேவா :) //

செய்திகளை வாசிக்கும் பழக்கம் உள்ளவராக இருப்பின் இந்தக் கேள்வியை கேட்டிருக்க வாய்ப்பில்லை.. ஓராண்டு சிக்கன நடவடிக்கையின் பலனாக மிச்சமான தொகையைப் பற்றி நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார். எதுவுமே தெரியாமல் பில்டப் கொடுப்பதை தவிர்க்கவும் கேசவன்.

முடிந்தால் இது தொடர்பாக ஒரு பதிவு போடுங்கள். அங்கே விவாதிக்கலம். இந்தப் பதிவு இது தொடர்பானது இல்லை.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

//தமிழுக்காக பாடுபட்டு மறைந்த ஒருவரை அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் நினைவு கூற முடியும் என்கிற ஒரு மத அடிப்படையிலான நிலைக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று நினைக்க தமிழன் என்ற அடையாளம் போலியானதா என்று நினைக்கத் தோன்றுகிறது//

ஐயா உமர் தம்பி பற்றிய செய்தி வெளியிட்டதற்கு மிக்க நன்றி.

நீங்கள் சொல்வது உண்மை.

உமரின் கணினி தமிழ் சேவையை, எழுத்துருக்களை இணையப் பயன்பாட்டளர்கள் இதயத்தில் என்றோ அங்கீகாரம் தந்துவிட்டார்கள், ஆனால் கணினி தமிழ் வரலாற்றில் அவருக்கு நிரந்தர அங்கீகாரம் கிடைக்க முன்னின்று எந்த முயற்சிகளும் செய்யப்படவில்லை. இதில் தமிழ் இயக்கங்களும், இஸ்லாமிய இயக்கங்களும் விதி விளக்கல்ல. மதங்களையும் தாண்டி சுய ஆதாயத்தில் அரசியலால் சிதைந்து கிடக்கிறது நம் தாய்தமிழ் நாடு.

தம் தாய்மொழி இவ்வுலகில் ஜீவிக்க அயாராது பாடுபட்ட என்னற்ற தமிழர்களில் பட்டியலில் உமரும் இருக்க வேண்டும் என்பது தான் என்னைப் போன்ற தமிழார்வளர்களின் எண்ணம். நிச்சயம் காலம் பதில் சொல்லும்.

உங்களை போன்றவர்களின் கருத்துகள் உமர் குடும்பத்திற்கும், உமருக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுகோள் விடுக்கும் இணையத் தமிழார்வளர்களுக்கும் மிக்க ஆறுதல்.

மீண்டும் உமருக்கான உங்களின் கருத்துக்கும், பதிவுக்கும் மிக்க நன்றி.

தொடருங்கள் உங்கள் நல்ல எழுத்துச் சேவையை. வணக்கம்

தாஜூதீன்
http://thaj77deen.blogspot.com

கல்வெட்டு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கல்வெட்டு சொன்னது…

//மத அடிப்படையில் பிரிந்து கிடக்கும் நம்மால் ஒன்றுபட்டு ஒருவரின் சாதனைகளைக் கூட எடுத்துச் சொல்ல முடியவில்லை என்று நினைக்கும் போது நாமெல்லாம் தமிழன் என்று எதை வைத்து பெருமைப்படுகிறோம் என்றே தெரியவில்லை//

அம்பேத்காரும் காமராஜரும் ஒரு குழுவின் வழி வந்தவர்களுக்கு மட்டுமே என்றானது போல இயேசுவும் முகம்மதுவும் புத்தரும் ஒரு குழுவில் சேர்ந்தால் மட்டும் சொந்தம் என்பது போல இதுவும்....

மனிதர்களும் குழுவும் பிரிக்கமுடியாதது.

**

இன அழிவில்கூட ஒன்று பட முடியவில்லை. தமிழ் நாட்டில் இருந்து சில கடல் மைல் தொலைவில் ஒரு அதே தமிழ் இனம் அழித்தொழிக்கப்பட்டு ஒரு வருட காலத்தில் உலகத்தமிழர்விழா நடப்பது சிறந்தது. இதற்கு கோத்தாபாயைக் கோயம்புத்தூர் கூப்பிட்டு உயர்திரு திருமாவளவன் அவர்களைச் சால்வை போடச் சொல்ல‌ வேண்டும். அதைவிட கொழும்புவில் நடந்தால்கூட நல்லது. கோத்தாபாய்க்காக திருப்பதியில் பிரசாதம் வாங்கிக்கொண்டு , உலகத்தமிழர் அனைவரும் இராமேஸ்வரம் வழியாகச் சென்று அங்கே உள்ள இராமேஸ்வரத் தமிழனுக்கு புதிய மீன்பிடிச்சட்டம் பற்றிச் சொல்லி சங்கு ஊதிவிட்டு, அப்படியே இலங்கை சென்று அங்கே உள்ள தமிழனுக்கு கருமாதி செய்துவிட்டு கொண்டாடிவிட்டு வ‌ர ஏதுவாய் இருக்கும்.

**

அரசியல் அங்கீகரிக்காவிட்டால் என்ன அன்பர்கள் அங்கீகரிக்கலாம்.

உமர் போன்ற பலரை இணையத்தில் பதியும் நாமாவது அங்கீகரிக்க வேண்டும். பரிசுகள் போட்டிகள் நடத்துபவர்கள் உமர் நினைவுப் பரிசு, தேன்கூடு சாகரன் நினைவுப் பரிசு, சிந்தாநதி நினைவுப் பரிசு என்று மறைந்தவர்களுக்கு மரியாதை செய்யலாம். அது போல நம்முடன் இன்று இருப்பவர்களை அடையாளம் கண்டும் அவர்கள் பெயரிலும் பரிசுகள் வழங்கலாம். அவர்களையேகூட புரவலர்களாக இருக்கச் சொல்லலாம். உதாரணம் தமிழ்மண காசி பாரட்டுப் பதக்கம் என்று வழங்கி காசியிடம் இருந்தே வழங்கச் சொல்லலாம். யாரும் யாருக்காகவும் செய்யலாம்.

**

இதையெல்லாம் நான் சுலபமாகச் சொல்லிவிட்டாலும் அதில் இருக்கும் நடைமுறைச் சிக்கலை அறிவேன். இருந்தாலும் உமர் போன்றவர்கள் அம்பேத்கார் காமராஜர் போல ஒரு குழுவின் பிரதிநிதியாக அடையாளம் காணப்பட்டால் அது நம் தலைமுறையிலும் தொடரும் அசிங்கம்.

**

பிரச்சனையைத் தொட்ட கோவிக்கு நன்றி !

நட்புடன் ஜமால் சொன்னது…

உமர் அதிரை காரர் :) அதற்காக(வும்) நன்றி அண்ணா.


( கலவை முழுதும் படிக்கலை )

ப.கந்தசாமி சொன்னது…

நானும் அதுதான் காரணமாக இருக்கும் என்று யூகித்தேன். நீங்கள் செய்தது மிக சரி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்