விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எவரும் இல்லை என்பது எனது நம்பிக்கை. ஆனால் தனக்கான விளம்பரத்திற்கு என்று எதையும் வேண்டுமென்றே தூண்டாமல் இருக்கும் ஒருவருக்கெதிரான வன்மம், விஷமத்தனம் ஆபாச அர்சனைகளை விமர்சனமாக பாக்கும் பக்குவம் எனக்கு இல்லை.
*****
மருத்துவர் ருத்ரன் செய்த தவறு ?
வினவு குழுவுடன் தொடர்பு வைத்துள்ளார், அவர்களின் கருத்துகளை ஆதரிக்கிறார். பார்பனர்களின் நிலைப்பாட்டு அரசியலை எதிர்க்கிறார், எம்எப்ஹுசைனுக்கு ஆதரவு கொடுத்து இந்துத்துவாக்களை கண்டித்தார்.
இவ்வளவு தவறுகள் செய்த்த மருத்துவரை மன ரீதியில் டார்சர் கொடுத்து பதிவுலகை விட்டு துறத்துவது எப்படி ?
Anonymous said...
ஐயா,
தயவு செய்து பார்ப்பனர் மீதான தனிமனித தாக்குதல் வேண்டாமே.
உமா மேடம்,மனிதம் வளர்ப்போம்.நாளையே உங்களுக்கோ அல்லது ருத்ரன் சாருக்கோ பெரிய ஆக்ஸிடெண்ட் ஆகி பெரிய ரத்த இழப்பு,அரிய வகை ரத்தம் எங்கும் கிடைக்கவில்லை. உங்களுக்கு ஒரு பார்ப்பனர் ரத்தம் கொடுத்தால் வேண்டாம் என்பீர்களா ?
பார்ப்பான் நல்லவன் என்று நம்புவதற்கு ருத்ரனுக்கு ஆக்சிடெண்ட் ஆகனுமாம். என்ன ஒரு நல்ல எண்ணம் !!!
- இதை ஒரு முதிர்ச்சியற்ற முதியவர் (அப்படி என்றால் 65 வயது இளைஞன்...நம்புங்க !!!) மற்றும் சாதி பிரியரின் பதிவில் படித்தேன். மேலும் பல தனிமனித தாக்குதல் , தனிமனித தாக்குதலுடன் கூடிய பெரும்பாண்மையான அனானி கமாண்டுகளை அந்த முதிர்ச்சியற்ற முதியவர் தனக்கு தானே போட்டு மகிழ்ந்து கொள்வார் என்பதை பலர் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். முதிர்ச்சி சிறிதும் அற்ற அந்த முதியவர் குஷ்பு மேட்டரை மறுப்பதிவு செய்து இன்னொரு போலி டோண்டு உருவாக்கத்திற்கு முயற்சி செய்தார்... எல்லோரும் புரிந்து கொண்டு அந்த பக்கமே போகவில்லை. இப்படியெல்லாம் அந்த முதிர்சியற்ற முதியவரைப் பற்றிச் சொல்கிறேன் என்றால் அவர் எனக்கு எதிரி என்று பொருள் இல்லை.
தன்னை மதிக்காத அந்த முதிர்ச்சி அற்ற முதியவரின் பதிவில் தெரியாத்தனமாக பின்னூட்டம் போட்டு சிக்கியவர் மருத்துவர் ருத்ரன்.
*****
மருத்துவர் ருத்ரனின் பின்னூட்டம் முதன் முதலில் கிடைக்கப் பெற்ற பதிவர்கள் அதை (வரமாக) நினைத்து பெருமைபட்டார்கள். தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட மருத்துவர்களில் மருத்துவர் ருத்ரன் முகத்துடன் உடனே நினைக்கப்படுபவர் அந்த அளவுக்கு தொழிலிலும், மீடியாக்களிலும் அறியப்பட்டவர்.
நம்ம வியந்து பார்ப்பவர்கள் நம்முன் அடிக்கடிவந்தால் அவரும் சாதரண மனிதர்கள் ஆகிவிடுகிறார்கள். பின்னூட்ட பினாமிகளால் அர்சிக்கப்படும் ருத்ரன் பாவம் !!! என்று சொன்னால் மருத்துவர் ருத்ரன் சிரிக்கக் கூடும். இருந்தாலும் ருத்ரன் ஐயாவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, தகுதியற்றவர்களிடம் மோதி அவர்களை வளர்த்து விடாதீர்கள்.
ருத்ரனின் மீதான வெறுப்பு அவருடைய பார்பனிய எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு என்பதைத் தாண்டி, அவர் மீதான தாக்குதல்களுக்கான உளவியல்,
ஒட்டுமொத்தமாக தாடியுடன் பார்த்தால் ருத்ரன் ஒரு 'பெரியார் பிம்பம்'
பெரியார் மீது வெறுப்பு உள்ளவர்களின் இலக்கு, மருத்துவர் ருத்ரனாகவும் இருக்கிறார்,
அவர் மற்றும் அவரது மனைவியை விமர்சனம் செய்தால் அவர் நிச்சயம் ஓடிவிடுவார் என பதிவுலகை விட்டு ருத்தரனை துறத்த முயற்சிக்கும் கூட்டம் வெற்றி பெரும் என்றெல்லாம் நான் நம்பவில்லை :)
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
57 கருத்துகள்:
உள்ளேன் அய்யா
// ருத்ரனின் மீதான வெறுப்பு அவருடைய பார்பனிய எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு என்பதைத் தாண்டி, அவர் மீதான தாக்குதல்களுக்கான உளவியல், //
நீங்கள் சொல்வதையே கொஞ்சம் மாத்தியும் யோசிக்கலாமா?. இந்து மத விமர்சனம்,பார்ப்பன எதிர்ப்பு என்பதால் தான் நீங்கள் ஆதரிக்கின்றீர்கள் என்று.இது சும்மா ஒரு மாற்று சிந்தனை அவ்வளவுதான்.
ருத்திரன் முதன் முதலில் என் பதிவில் பின்னூட்டம் போட்ட போது, நானும் மகிழ்ந்தேன். நானும் அவரின் மனேதத்துவ கட்டுரைகளை விரும்பிப் படிப்பவன். ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் மதிக்கும் திருவுருவங்களை அசிங்கமாக வரைந்த ஒருவனின் செயலை நியாயப் படுத்துவதும்,அதை நானும் செய்துள்ளேன் என்பதும் நல்லாவா இருக்கு. நீங்களே உங்க மனசாட்சி கிட்ட கேட்டுக்கேங்க. நன்றி.
அண்ணா,
நேற்று என் நண்பரிடம் கேட்ட கேள்வி, ‘அவர் மனநலம் பாதித்தவர்களை சரிப்படுத்துபவரா, இல்லை பாதிக்கப்பட்டவர்களுல் ஒருவரா?’
நான் 89ல் கல்லூரியில் படிக்கும்போது சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாய் நினைத்தேன், சில வருடங்களுக்கு முன்பு வரை.
யாரையும் நம்பாதே என்பதற்கு இது ஓர் நல்லா உதாரணமாய் ஆகிவிட்டது!
பிரபாகர்...
அய்யய்யோ, அய்யய்யோ, அந்தப்பெரியவர் நானில்லைங்கோ, நான் 75 வயது இளைஞனுங்கோ.
Sorry for the humour. Hope you don't mind. If it is offensive, kindly delete it.
கண்ணன்,
ருத்ரன் பற்றி இதுவரை (பதிவுகள்) வாசித்ததில்லை. இன்று தான் வினவு பக்கம் போனேன். மொத்தம் 5 இடுகைகள்தான் ருத்ரன் எழுதியிருக்கிறார்.
ஆன்மீகச் சந்தை ஒரு முன்னுரை - என்பதை லேசாகக் கொறித்தேன். நன்றாயிருந்தது.
நீங்கள் இங்கு குறிப்பிடும் வடை ஸாரி விஷயம் எங்கு கிடைக்குங்க?
:))
//ருத்திரன் முதன் முதலில் என் பதிவில் பின்னூட்டம் போட்ட போது, நானும் மகிழ்ந்தேன். நானும் அவரின் மனேதத்துவ கட்டுரைகளை விரும்பிப் படிப்பவன். ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் மதிக்கும் திருவுருவங்களை அசிங்கமாக வரைந்த ஒருவனின் செயலை நியாயப் படுத்துவதும்,அதை நானும் செய்துள்ளேன் என்பதும் நல்லாவா இருக்கு. நீங்களே உங்க மனசாட்சி கிட்ட கேட்டுக்கேங்க. நன்றி.
11:06 AM, April 01, 2010
//
பித்தனின் (அருள்) வாக்கு ஐயா,
சம்பந்தா சம்மந்தம் இல்லாமல் உங்களால் பேசமுடிவது வியப்பாக இருக்கு. நான் ருத்ரனை விமர்சனம் செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. விமர்சனம் என்பது தனிமனித தாக்குதலாக இருக்கக் கூடாதுன்னு தான் சொல்லி இருக்கிறேன். உங்க கருத்தை மறுப்பதற்கு உங்க வீட்டைப் பற்றி ஒருவன் கேள்வி எழுப்பினால் அதை விமர்சனம் என்பீர்களா ?
பதிவை ஒழுங்க படித்துவிட்டு அப்பறமும் உளறவும்.
//ருத்ரன் ஐயாவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, தகுதியற்றவர்களிடம் மோதி அவர்களை வளர்த்து விடாதீர்கள்.// நானும் இதையே நினைத்தேன்.
you have a pattern of creating controversies for the heck of wasting everyone's time and now it seems to have expanded to have included inviting people with misleading headings.
you seem to have fairly good knowledge in many subjects but choose to wear colored glasses and end up with tinted views.
please try to approach issues without any pre-conceived notions.
I agree that you have the liberty / right to not publish my comments / ignore my advise / laugh at me!
//Ravi said...
you have a pattern of creating controversies for the heck of wasting everyone's time and now it seems to have expanded to have included inviting people with misleading headings.
you seem to have fairly good knowledge in many subjects but choose to wear colored glasses and end up with tinted views.
please try to approach issues without any pre-conceived notions.
//
சரிங்கோ.......ண்ணா !
/ருத்ரன் ஐயாவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, தகுதியற்றவர்களிடம் மோதி அவர்களை வளர்த்து விடாதீர்கள்/
அதெல்லாம் சரிதான், திரு.கோவி.கண்ணன்!
Physician! Cure Thyself! என்று மருத்துவத்தில் ஒரு பால பாடம் இருக்கிறதே, அதை மறந்துபோய்விட்ட மாதிரி இருக்கும் அவருக்கு,அதையும் சேர்த்தே நினைவுபடுத்தி வேண்டிக் கொள்ளுங்கள்!
அடுத்தவருக்கு மனநலம் போதிப்பதற்கு முன்னால், தன்னுடைய மன நிலையைச் செம்மையாக வைத்துக் கொள்ள முடியாத ஒருவராக மட்டுமே டோண்டு ராகவனின் இரண்டு பதிவுகளில், அவருடைய மற்றும் அவருடைய மனைவியின் பின்னூட்டங்களைப் பார்க்க முடிந்தது.
மிரட்டுகிற மாதிரி, வெள்ளித் தட்டில் வக்கீல் நோட்டீஸ் வரும் என்றெல்லாம் இருந்த பின்னூட்டங்களை சரியாகக் கவனித்தீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை! அனுப்பிப் பார்க்கட்டுமே!
அதை முதலில் சரி செய்து கொண்ட பிறகு அவருடைய மன நல மருத்துவத் திறமையைப் பற்றி பேசலாம்!
செய்கிற தொழிலும், ஒரு பொதுவான தளத்தில் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமும் கொஞ்சமாவது பொருந்திப் போக வேண்டாமா என்பதை அந்த மருத்துவர் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
பார்ப்பன வெறுப்பு இங்கே உண்மையில் முக்கியமான பிரச்சினையே இல்லை!
நான் அப்படித் தான் விஷத்தைக் கக்கிக் கொண்டே இருப்பேன்,அதைக் கேள்வி கேட்கிற எவரையும் மிதிப்பேன் என்கிற மாதிரியான மன நிலை! உளறிக்கொண்டே இருந்தால் உளறுவாயன் என்று தான் சொல்லுவார்கள்!
இது நல்ல, இயல்பான மனநிலைதானா என்பதை சோதித்து சான்றிதழ் கொடுக்கும் மருத்துவப் பட்டம் என்னிடம் இல்லை!அதற்காகக் கேள்வி கேட்காமல் இருந்து விட முடியுமா?
பார்ப்பன வெறுப்பு என்பது, பார்ப்பனர்களின் தவறைச் சாடுவதை விட, தாங்கள் செய்யும் அயோக்கியத்தனைத்தை மூடி மறைக்கும் ஒரு கருவியாகவே இங்குள்ள அரசியல், சீர்திருத்தம் வாயளவில் மட்டுமே பேசிவரும் இயக்கங்கள் பயன்படுத்திவருவதை, 1968 இல் கீழ வெண்மணியில் விவசாயக் கூலிகளை எரித்துக் கொன்றகொடூரம், அதை எப்படி சீர்திருத்தத் தலைகள் சப்பைக்கட்டுக் கட்டினார்கள், கொலைபாதகர்களுக்கே சாதகமாக இருந்தார்கள் என்பதையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!
தாராளமாக,வெறுப்பை, விஷத்தை உமிழுங்கள்!அதை மட்டுமே அடிப்படை உரிமையாகக் கருதுகிற ஒரு போக்கு, நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகப் பார்த்துப் புளித்துப் போன ஒன்று!
வீரியமிழந்து வெறும் கூச்சலாகவும் போஸ்டராகவும் மட்டுமே குறுகிப்போய் நிற்கும் ஒன்றும் கூட!அது சம்பந்தப் பட்டவர்களுக்குமே புரிகிற நேரம் வரும்!
கடைசியாக உங்களுக்கு ஒரு கேள்வி!
/தகுதியற்றவர்களிடம் மோதி.....!
தகுதியற்றவராக உங்களுக்குத் தோன்றுகிற ஒரு பதிவருடைய பதிவுகளில் இருக்கும் விஷயத்தைக் கூட விட்டு விட்டு, அவரைப் பற்றியே அடிக்கடி உங்களுடைய பதிவுகளில் எழுதி வீணாக ஏன் அவரை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
//அதெல்லாம் சரிதான், திரு.கோவி.கண்ணன்!
Physician! Cure Thyself! என்று மருத்துவத்தில் ஒரு பால பாடம் இருக்கிறதே, அதை மறந்துபோய்விட்ட மாதிரி இருக்கும் அவருக்கு,அதையும் சேர்த்தே நினைவுபடுத்தி வேண்டிக் கொள்ளுங்கள்!
அடுத்தவருக்கு மனநலம் போதிப்பதற்கு முன்னால், தன்னுடைய மன நிலையைச் செம்மையாக வைத்துக் கொள்ள முடியாத ஒருவராக மட்டுமே டோண்டு ராகவனின் இரண்டு பதிவுகளில், அவருடைய மற்றும் அவருடைய மனைவியின் பின்னூட்டங்களைப் பார்க்க முடிந்தது.
//
கிருஷ்ண மூர்த்தி ஐயா,
ருத்ரனின் மன நலம் பற்றி கேள்விகேட்கும் அளவுக்கு கேட்டவரின் மனநிலை மன நலமாக இருக்குமா என்பது ஐயமே.
ஒருவரின் எழுத்துகளை விமர்சனம் செய்யலாம். ருத்ரன் மன நல மருத்துவத்தில் மோசடி செய்தால் விமர்சனம் செய்யலாம். ஆனால் விமர்சனங்கள் தனிமனித தாக்குதலாக 'மன நலம்' குன்றியவர் என்று வருகிறது.
அவருக்கு மான நட்ட ஈடு வழக்குப் போட முழு உரிமையும் உண்டு
//பார்ப்பன வெறுப்பு என்பது, பார்ப்பனர்களின் தவறைச் சாடுவதை விட, தாங்கள் செய்யும் அயோக்கியத்தனைத்தை மூடி மறைக்கும் ஒரு கருவியாகவே இங்குள்ள அரசியல், சீர்திருத்தம் வாயளவில் மட்டுமே பேசிவரும் இயக்கங்கள் பயன்படுத்திவருவதை, 1968 இல் கீழ வெண்மணியில் விவசாயக் கூலிகளை எரித்துக் கொன்றகொடூரம், அதை எப்படி சீர்திருத்தத் தலைகள் சப்பைக்கட்டுக் கட்டினார்கள், கொலைபாதகர்களுக்கே சாதகமாக இருந்தார்கள் என்பதையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!
தாராளமாக,வெறுப்பை, விஷத்தை உமிழுங்கள்!அதை மட்டுமே அடிப்படை உரிமையாகக் கருதுகிற ஒரு போக்கு, நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகப் பார்த்துப் புளித்துப் போன ஒன்று!
//
ஒரு பார்பனர் செட்டியாரியம், முதலியார் இயம், வன்னியரியம், தேவரியம் என்று சாதிப் பெயர்களை விமர்சனம் செய்வதை யாரும் தடுக்கவில்லை. மற்றவர்கள் பார்பனர்களைச் சாடினால் பார்பனர்களும் சாதியை வைத்தே இழிவு படுத்தலமே. செய்ய மாட்டார்கள்.
சாதி என்பது சனாதானத்தின் ஆணிவேர், ஒரு பார்பனர் மற்ற உயர்சாதீயினரை குறிப்பிட்டு குறைகூறமாட்டார்கள். அதற்கு முன்வராமால் பார்பானை எல்லோரும் திட்டுகிறான் என்று புலம்புவது அர்தமற்றதாக தெரிகிறது
உரிமையியல் வழக்குப் போட மருத்துவருக்கு மட்டும் அல்ல, அவர் எழுதியிருக்கும் பழைய பதிவுகள், பின்னூட்டங்களினால் பாதிக்கப் பட்ட அனைவருக்குமே உரிமை உண்டு.
தவிர, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தொடர்ந்து இழிவு படுத்தி வரும் ஒரு செயல், நீங்கள் சுட்டிக் காட்டுகிற சட்டத்தில் கிரிமினல் வழக்காகவுமே தொடர முடியும்!
தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்த எனக்கு, கொஞ்சம் சட்ட ஞானமும் இருக்கிறது!
//கிருஷ்ணமூர்த்தி said...
உரிமையியல் வழக்குப் போட மருத்துவருக்கு மட்டும் அல்ல, அவர் எழுதியிருக்கும் பழைய பதிவுகள், பின்னூட்டங்களினால் பாதிக்கப் பட்ட அனைவருக்குமே உரிமை உண்டு.
தவிர, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தொடர்ந்து இழிவு படுத்தி வரும் ஒரு செயல், நீங்கள் சுட்டிக் காட்டுகிற சட்டத்தில் கிரிமினல் வழக்காகவுமே தொடர முடியும்!
தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்த எனக்கு, கொஞ்சம் சட்ட ஞானமும் இருக்கிறது!
//
எனக்கு தெரிந்து ஒருவரை பறையன் என்று இழித்து கூறினால் வன்கொடுமை சட்டம் பாயும். நீங்க சொல்லும் 'உயர்சாதி பார்பன அடையாளத்தை இழிக்கிறார்கள்' என வழக்கு போடும் வாய்ப்பு இல்லை.
நீங்கள் சொல்வது PCR act! Cr PC யில் வேறு நிறையப் பிரிவுகளின் மீது கிரிமினல் வழக்காகத் தொடர முடியும்! இங்குள்ள அரசியல் சூழ்நிலைகளில், அதன் மீதுநியாயம் கிடைக்குமா என்பதும், வழக்குத் தொடர்ந்தவர்கள் எப்படிக் கவனிக்கப் படுவார்கள் என்பதும் தனி!
பொது நலனுக்காக வழக்குத் தொடரும் ட்ராபிக் ராமசாமிபோன்றவர்களுக்கே என்ன நிலைமை என்பதும் இது விஷயமாகத் தெரிந்து கொள்ளவேண்டிய கூடுதல் சுவாரசியம்!
இங்கே நடந்து கொண்டிருப்பது எவருக்கும் வளைந்து கொடுக்காத சட்டத்தின் ஆட்சி அல்ல....!
.
//கிருஷ்ணமூர்த்தி
தவிர, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தொடர்ந்து இழிவு படுத்தி வரும் ஒரு செயல், நீங்கள் சுட்டிக் காட்டுகிற சட்டத்தில் கிரிமினல் வழக்காகவுமே தொடர முடியும்!
தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்த எனக்கு, கொஞ்சம் சட்ட ஞானமும் இருக்கிறது!//
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,
1. பார்ப்பனர் என்பது சாதியா ?
2.தமிழக அல்லது இந்திய சட்டங்களில் எந்த அட்டவணையில் பார்ப்பனர் என்ற சாதி சொல்லப்பட்டுள்ளது?
3. "ரேசிஸ்ட்" என்று சொன்னால் அது எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தைக் குறிக்குமா? அல்லது நிற வேறுபாடு பாட்டும் அனைவரையும் சுட்டுமா?
4. பாஸிஸ்ட் என்று சொன்னால் ஒரு கட்சியைக் குறிக்குமா அல்லது பாஸிசம் காட்டும் எல்லாக் குழுக்களையும் சுட்டுமா?
5. ஏன் பார்ப்பணிசம் என்றால் "அய்யர்" மற்றும் "அய்யங்கார்" என்ற சாதியினர் மட்டும் அது அவர்களைச் சுட்டுவதாகவே எடுத்துக்கொள்கிறார்கள்?
உங்களின் கொஞ்ச சட்ட ஞானத்தில் தெரிந்ததைச் சொல்லவும்.
**
டோண்டு ராகவன், தன்னுடைய பதிவில், கடுமையான வார்த்தைகளுக்காக வருத்தம் தெரிவித்து, நீண்டுகொண்டே போன ஒரு வெட்டி விவாதத்தை முடித்து வைத்திருக்கிறார். ருத்ரனும், அதை முகமதிப்பில் ஏற்றுக் கொள்வதாக அங்கேயே, இத்துடன் விஷயம் முடிந்தது என்று முடித்திருக்கிறார்.
கடுமையான வார்த்தைக்காக வருத்தம் தெரிவிக்கிற பண்பு டோண்டு ராகவனிடம் இருந்தது! ஒரு விஷயத்தை முடிவே இல்லாத விவகாரமாக ஆக்க வேண்டாமே என்ற அக்கறையும் தென்படுகிறது.
டோண்டுவின் வார்த்தைகளை விடக் கொடுமையான வார்த்தைகளைக் கொட்டுகிறவர்களுக்கும் அதே பண்பு இருந்தால், இதுபோல விவகாரங்கள் எதிர்காலத்தில் நிகழாதவண்ணம், கண்ணியமாக ஒரு விவாதக்களம், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிற இடமாக இணையமும், தமிழ் வலைப் பதிவுலகமும் இருக்கும்.
அப்படி இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும் கூட!
கிருஷ்ண மூர்த்தி ஐயா,
நீங்கள் குறிப்பிடுபவரின் வருத்தமும் முதலைக் கண்ணீரும் ஒன்றே. இரண்டுமே இயல்பாக வருவது இல்லை.
இருந்தாலும் உங்கள் நம்பிக்கையை மதிக்கிறேன்.
ஒருவரை செருப்பால் அடித்துவிட்டு சாரி சொல்லிவிட்டால் சரியாகிவிடும் என்று நான் நினைப்பது இல்லை.
கோவிஜி, அனைத்தும் விமர்ச்சனத்துக்கு உள்ளாவது போல், அனைவரும் விமர்ச்சனத்திற்கு உட்பட்டவர்களே... தரம் தாழ்ந்து விமர்ச்சிப்பவர்கள் எங்கும் இருக்கதான் செய்வார்கள், மிகவும் கேவலமாக தனிமனித தாக்குதலில் ஈடுபடுபவர்களை என்ன செய்ய முடியும்??? நான் தொடர்ந்து ருத்ரன் அவர்களின் பதிவுகளை படித்து வருகிறேன்...
<<<
அவர் மற்றும் அவரது மனைவியை விமர்சனம் செய்தால் அவர் நிச்சயம் ஓடிவிடுவார் என பதிவுலகை விட்டு ருத்தரனை துறத்த முயற்சிக்கும் கூட்டம் வெற்றி பெரும் என்றெல்லாம் நான் நம்பவில்லை :)
>>>
இதுதான் உண்மை... இதைப்போல் எவ்வளவு பேரை பாத்திருப்பார்... ம்ம்ம்... மனநல மருத்துவரை மனநலமாக காயப்படுத்துவது என்பது முடியாத செயல்.
ஒரு விசயங்களில் அக்கறை எடுக்க எடுக்கதான் அதனை பற்றி அதிக ஆவல் பிறக்கும், அதே போலத்தான் கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்கும், நாம் கண்டுக்காமல் விட்டு விட்டால், எந்த பிறச்சனையும் இல்லை.
ருத்ரன் பதிவுலகை மற்றவர்களை ஓட்டுவார்
மன்னிக்க வேண்டும் கல்வெட்டு,
உங்கள் பின்னூட்டம் என்ன காரணத்தினாலோ மின் அஞ்சலுக்கு வரவில்லை. வலைப்பதிவு டேஸ்போர்டில் இருந்து தான் வெளி இட்டேன். காலம் தாழ்ந்து விட்டதற்கு காரணம் அது தான்
//நீங்கள் சொல்வது PCR act! Cr PC யில் வேறு நிறையப் பிரிவுகளின் மீது கிரிமினல் வழக்காகத் தொடர முடியும்! இங்குள்ள அரசியல் சூழ்நிலைகளில், அதன் மீதுநியாயம் கிடைக்குமா என்பதும், வழக்குத் தொடர்ந்தவர்கள் எப்படிக் கவனிக்கப் படுவார்கள் என்பதும் தனி!
பொது நலனுக்காக வழக்குத் தொடரும் ட்ராபிக் ராமசாமிபோன்றவர்களுக்கே என்ன நிலைமை என்பதும் இது விஷயமாகத் தெரிந்து கொள்ளவேண்டிய கூடுதல் சுவாரசியம்!
இங்கே நடந்து கொண்டிருப்பது எவருக்கும் வளைந்து கொடுக்காத சட்டத்தின் ஆட்சி அல்ல....!
//
நான் டோண்டுவின் பதிவில் எழுதிய பதில்தான் இங்கேயும்.
முடிந்தால் கோர்ட்டுக்குப் போங்கள். முடியாவிட்டால் வாங்கிக்கட்டிக்கொள்ளுங்கள்.
‘சட்டத்தின் ஆட்சி அல்ல’ என்பது இந்தியாவையே கேலிப்ண்ணுவதாகும். ஒரு நொண்டிச்சாக்கு.
சுப்ர்ரிம் கோட்டுவடை போகலாம். சட்டத்தின் ஆட்சி அல்ல என்று குஸ்பு சும்மா இருந்தாரா? சுபிர்ரிம் கோர்ட்டு அவருக்கு சாதகமாகத்தானே தீர்ப்பு கொடுத்தது?
Robin
//ருத்ரன் ஐயாவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, தகுதியற்றவர்களிடம் மோதி அவர்களை வளர்த்து விடாதீர்கள்.// நானும் இதையே நினைத்தேன்.//
ருத்ரனை விமர்சிக்க தகுதியற்றவர்களிடம் பேசி வளர்த்து விடாதீர்கள் என(மாற்றி) நானும் கேட்டு கொள்கிறேன்!
//ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தொடர்ந்து இழிவு படுத்தி வரும் ஒரு செயல், நீங்கள் சுட்டிக் காட்டுகிற சட்டத்தில் கிரிமினல் வழக்காகவுமே தொடர முடியும்!//
அந்த கூறிப்பிட்ட சமூகம் தன்னை இன்றும் பெரிய .... சாதி என்று கூறி கொள்வதற்காக தான் சமூகத்தில் பல மாற்றங்கள் கொண்டு வர வேண்டியுள்ளது!
பார்ப்னீயம் காட்டி நான் உன்னை விட உயர்ந்தவன், நீ கோவிலுக்கு வெளியே, வீட்டிற்கு வெளியே என்பவர்களை தானே சாடுகிறோம், மொழி மாற்றம் செய்யும் டோண்டுவொக்கோ, வீட்டில் அமர்ந்து பல சோம்பேறிகளுக்கு அறிவுறை வழங்கும் உங்களுக்கோ ஏன் கோபம் என தெரியவில்லை! உங்கள் சாதி பாசம் புல்லரிக்க வைக்கிறது!
//பொது நலனுக்காக வழக்குத் தொடரும் ட்ராபிக் ராமசாமிபோன்றவர்களுக்கே என்ன நிலைமை என்பதும் இது விஷயமாகத் தெரிந்து கொள்ளவேண்டிய கூடுதல் சுவாரசியம்!//
அடடே, இனைய பார்பனர்கள் அனைவரும் பொதுநலனுக்காக போராடி கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் புதிதாக இருக்கிறதே!
டோண்டு அய்யங்காருக்கு ஆல் இன் ஆலில் வீல் பெண்டெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது!, பல சுவாரிசயமான கேள்விகளும் உண்டு வழக்கம் போல, நீங்களும் வழக்கம் போல ஒரு பதிவு போடலாம்!
அன்புள்ள கல்வெட்டு!
உங்களுடைய ஐந்து கேள்விகளில், ஐந்தாவதே மற்ற நான்கையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.
முதலில், ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்திக் கொண்டு விடவேண்டும்.
நான்காவது கேள்விக்கு, Fascisam or Fascist என்பது ஒருஅதிகார வெறி பிடித்த இயல்பு, குழு, கட்சி என்று தான் நான் படித்த வரலாறும், விக்சனரியும் அடையாளம் சொல்கிறது. பார்ப்பனர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்டவர்களாக, கல்வியைப் போதிக்கிறவர்களாக, வழிகாட்டிகளாக மட்டுமே இருந்திருக்கிறார்கள். ஒரு அரசனின் ஆணைக்குட்பட்டு,அதைப் பரப்பும் கருவிகளாகவே இருந்திருக்கிறார்கள்.
பாசிஸ்ட் என்று சொல்கிற மாதிரியே பார்ப்பனீயத்தையும் ஒன்றாகச் சொல்ல முடிகிற சாமர்த்தியம் இன்னும் எத்தனை நாள் எடுபடும் என்று நினைக்கிறீர்கள்?
சாதீயம், சாதீய ஒடுக்குமுறை என்பதில் பார்ப்பனர்கள் எப்போதுமே காரணமாக இருந்ததில்லை.
அதன்படி பார்ப்பான் என்று நாங்கள் ஒரு கூட்டத்தைச் சொல்லவில்லை, ஒரு இயல்பைத் தான் சொல்கிறோம் என்று அதற்குப் பார்ப்பனீயம் என்று பெயர்கொடுத்துச் சொல்வது வேடிக்கையாக அல்ல, வினையாகவே பரப்பப் படுகிற கொடும் விஷம்!
இந்த விஷத்தைத் தொடர்ந்து பரப்புகிறவர்கள், எதற்காக இப்படிச் செய்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்பதைக் கவனித்தாலேயே இதன் உண்மை தெரியும்.
தமிழக வரலாறு, குறிப்பாக சோழர்களுடைய வரலாற்றைப் பார்த்ததாலேயே வேளிர் என்று அழைக்கப் பட்ட வெள்ளாளருடைய ஆட்சி அமைப்புக்குத் துதி பாடுகிறவர்களாகவே பார்ப்பனர்கள் இருந்ததும், அதற்காகவே மானியங்களும் நிபந்தங்களும் வழங்கப்பட்ட கதையும் தெரிய வரும். ஒரே ஒரு கல்லணை, ஆனால் ஆயிரக்கணக்கான கோவில்கள் என்று சோழர்கள் கட்டியது தங்களுடைய சுயநலத்துக்காகவே,ஆட்சி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே என்பதை சிறு குழந்தை கூட இன்றைய சூழ்நிலையில் எளிதாகப் புரிந்துகொல்லுமே!
கோவில்கள் அன்றைக்கு கம்யூனிகேஷன் செண்டர்களாக, பொழுதுபோக்கும் சானல்களாக இருந்தன என்பதும் இன்றைக்குத் தங்களைச் சோழர்களுடைய வாரிசுகளாகச் சொல்லிக் கொள்பவர்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கக் கூடும்.
பார்ப்பனர்கள் மீது நீங்கள் எழுப்பும் ஒவ்வொரு குற்றச்சாட்டும், சாதீய முறைகளின் மீது நிறுவப்பட்ட ஆட்சி அதிகாரக் குழுக்கள் மீது சுமத்தப் படவேண்டியது.
ஒவ்வொரு சாதியுமே, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், தங்களுடைய ஆதிக்கத்தை அடையாளம் காட்டிக் கொள்ளச் செய்பவை தான்! ஆனால் பழி சுமப்பதற்கு மட்டும் ஒரு சாதி!
பழியை, அடுத்தவன் மீது போடுகிற கலை, கீழ வெண்மணிக்கு முன்னாலேயே இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன்.
அந்த அடிப்படையில் பார்த்தாலும் சரி, தெரிய வந்துள்ள இந்திய வரலாற்றைப் பார்த்தாலும் சரி, பார்ப்பனர்கள் எப்போதுமே ஆட்சி அதிகாரத்தில் இருந்ததில்லை. ஆட்சி அதிகார வெறி பிடித்தவர்களாகவும் இருந்ததில்லை.
அதனால் அந்த வார்த்தையை வைத்து, அதே போலத் தான் பார்ப்பனீயமும் என்று சொல்ல முனைகிற பிரச்சாரங்களைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது.
அன்புள்ள கல்வெட்டு!
உங்களுடைய ஐந்தாவது கேள்வியிலேயே, அதற்கான பதிலும் இருக்கிறதே!
நாங்கள் பார்ப்பனர்களைக் குறை சொல்லவில்லை, ஆனால் பார்ப்பனீயத்தைத் தான் எதிர்க்கிறோம் என்று சொல்பவர்கள் குறிவைத்து தாக்குவது யாரை?
யூதர்களைக் குறிவைத்துக் கிறித்தவம் நடத்திய விஷமப் பிரச்சாரம், அவதூறு வெறுப்புக்களின் நீட்சியாகவே ஹிட்லருடைய யூத ஒழிப்பு இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.
இதைப் பேசுவதற்கு சட்ட ஞானம் தேவையில்லையே! கொஞ்சம் திறந்த மனதுடன் பேச முன்வந்தாலே போதுமே!
மாறுபட்ட கருத்தை மதிக்கிறேன்.
அன்புள்ள கல்வெட்டு,
தொழிற்சங்கம், சட்ட ஞானம் என்று சொன்னது, எனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்வதற்காக அல்ல.
ஒரு இடது சாரிச் சிந்தனையாளனாக தொழிற்சங்கத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட்ட வருடங்களில், திராவிடர் கழக நண்பர்களில் இருந்து, இன்னும் அதி தீவீரமாகப் பேசிக் கொண்டிருந்த தலித் இயக்கங்களின் முன்னணியில் இருந்தவர்கள், அவர்களுடைய வெளியீடுகள், கோபங்கள் எல்லாவற்றையுமே புரிந்துகொள்கிற வாய்ப்புக் கிடைத்திருக்கிறது, புதிதாகக் கற்றுக்கொள்கிற பழக்கத்தையும் மிக இயல்பாகவே தந்திருக்கிறது என்பதற்காக மட்டுமே சொன்னேன்.
இங்கே பின்னூட்டம் இட்டதுமே கூட டோண்டு ராகவனை நியாயப் படுத்துவதற்காகவோ, அல்லது கோவி கண்ணன் எதையோ சொல்லி விட்டாரே அதை எதிர்க்க வேண்டுமே என்பதற்காகவும் இல்லை.
ஒருதரப்பு நியாயங்களைப் பேசும் போது, இன்னொரு தரப்பையும் புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது என்பது மட்டுமே என்னுடைய கருத்து.
டாக்டர் ருத்ரனைப் பலபதிவுகளில் கொஞ்சம் அதிகப்படியான காட்டத்துடன் விமரிசித்து எழுதிக் கொண்டிருப்பவர்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தன்னுடைய பதிவு ஒன்றில், ஓவியர் ஹுசேன் பற்றியது, கொஞ்சம் கட்டுப் படுத்திக் கொண்டு வருத்தம் தெரிவித்திருந்ததைக் கூடப் படித்தேன்.என்னதான் மருத்துவராக இருந்தாலும் அவரும் மனிதர் தானே!
இதைப் புரிந்துகொள்கிற அதே நேரத்தில், அவரும், அவருடைய மனைவியும் டோண்டு ராகவனின் வலைப் பதிவில் தங்களுடைய கோபத்தை மொத்தமாகக் கொட்டித் தீர்த்து விட்ட மாதிரியே எனக்குப் பட்டது.
சமநிலை என்பது இருதரப்பும் சேர்ந்து செயல்பட்டுக் கண்டாக வேண்டிய ஒன்று! ஒரு தரப்பு மட்டுமே அதை செய்ய வேண்டும், அல்லது, ஒரு தரப்பு மட்டுமே அதற்கு முழுக் காரணம் என்று பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதைப் பதிவு செய்வதாக மட்டுமே என்னுடைய பின்னூட்டத்தை எழுதினேன்.
உங்களை அது வேறு ஒரு கோணத்தில் உசுப்பி விட்டிருக்கிறது போல....!
dear kovi
leave them to me.
அனைவரும் தாங்கள் வைக்கும் விமர்சனத்திற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்களே! இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை!
ஒருவரை மட்டரகமாக விமர்சிக்க, தனிமனிதத் தாக்குதல் செய்ய, தனது வலைப்பூவில் உள்ள ”பெரியரிலி” ஆப்சனைத் தவறாக பயன்படுத்துபவர்கள் ஒரு நாள் அம்மணமாக்கப்படுவது நிதர்சனம்.
தனது வலைப்பூவில் மட்டுருத்தல் வசதி இருந்தும் இது போன்ற மறுமொழியை வெளியிடுவது, அவருக்கு உகந்ததாகவே அல்லது சில நேரங்களில் அவர்களின் கருத்தாகவே எண்ணத் தோன்றுகிறது!
நாகரீகமான விமர்சனத்தை வைக்கத் தவறாத போது யாரும், யாரையும் பதிவுலகை விட்டு நீக்கி விட அல்லது துரத்த முடியாது!
.
கிருஷ்ணமூர்த்தி,
//உங்களை அது வேறு ஒரு கோணத்தில் உசுப்பி விட்டிருக்கிறது போல....!//
????
எதற்காக உசுப்பி விட்டது போன்ற வார்த்தைகள்?
சரி விடுங்கள் உங்களுக்கு தெரிந்ததை சொல்கிறீர்கள்
நல்லாயிருங்கய்யா!
.
-------------------
உங்களுக்கான கேள்விகள்:
**
1. பார்ப்பனர் என்பது சாதியா ?
2. பார்ப்பனர் என்பது என்ன ?
3. யார் யார் பார்ப்பனர்கள்?
4. எப்படி அவர்கள் பார்ப்பனர் ஆனார்கள்?(சட்ட வரைவு?)
5. தமிழக அல்லது இந்திய சட்டங்களில் எந்த அட்டவணையில் பார்ப்பனர் என்ற சாதி சொல்லப்பட்டுள்ளது?
6. "ரேசிஸ்ட்" என்று சொன்னால் அது எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தைக் குறிக்குமா? அல்லது நிற வேறுபாடு பாட்டும் அனைவரையும் சுட்டுமா?
7.பாஸிஸ்ட் என்று சொன்னால் ஒரு கட்சியைக் குறிக்குமா அல்லது பாஸிசம் காட்டும் எல்லாக் குழுக்களையும் சுட்டுமா?
8.ஏன் பார்ப்பணிசம் என்றால் "அய்யர்" மற்றும் "அய்யங்கார்" என்ற சாதியினர் மட்டும் அது அவர்களைச் சுட்டுவதாகவே எடுத்துக்கொள்கிறார்கள்?
என்ற கேள்விகளுக்கான உங்களின் பதிலை நேரடியாக எந்த தொடுப்பும் இல்லாமல் உங்கள் புரிதலாகச் சொல்லுங்கள்.
விதிமுறைகள்:
---------------------
A. மறுபடியும் "உசுப்பு" போன்ற உங்களின் வார்த்தைப் பிரயோகம் வந்தால் அந்த ஆட்டைக்கு நான் வரவில்லை.
என்னைக் கேள்வி கேட்கத்தூண்டியது, நீங்கள் அறிவித்துக்கொண்ட சட்ட ஞானம் மட்டுமே. அந்தத்தூண்டலை உசுப்பு என்று வார்த்தைகளில் விளையாடிக்காட்டினால் ....நீங்கள் சொல்வதே சிறந்தது. நீங்கள் வல்லவர் நல்லவர் என்று எழுதிக்கொடுத்திவிட்டு சென்றுவிடுகிறேன்.
B.ஒவ்வொரு கேள்விக்கும் நேரடிபதில் அவசியம்.
C.பதில் இல்லை என்றால் "தெரியாது" என்று சொல்லலாம்.
D.எந்தக் கேள்வியையும் சாஸ்சில்விட்டால் உரையாடல் தொடராது.
E. உங்களின் ருத்ரன், டோண்டு மற்ற இன்னபிற விளையாட்டுக்கு எனது கேள்விகளைப் பயன்படுத்தி யாருக்கும் விளக்கம் கொடுக்க கூடாது. நீங்கள் எழுதியுள்ள பத்திகள் எனக்கானது அல்ல எனவே அது பற்றிப் பேசப்போவது இல்லை.
.
///சாதீயம், சாதீய ஒடுக்குமுறை என்பதில் பார்ப்பனர்கள் எப்போதுமே காரணமாக இருந்ததில்லை.///
அடடே அப்படியா? பின் எதற்க்காக நரெந்திர மோடி விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டார்? ஓஓ, அது மத ஒடுக்குமுறை என சொல்ல போகிறீர்களா? பலே பலே
ருத்ரன் எழுதுகிற பின்னூட்டங்கள் மக்கள் மனதில் அவருக்கு இருந்த இமேஜை சில படிகள் இறக்கிக் காட்டுமோ என்று நானும் அஞ்சுகிறேன். ஒரு மனோ தத்துவ நிபுணரின் டிப்ளமசி அவைகளில் மிஸ்ஸிங்.
http://kgjawarlal.wordpress.com
@கார்மேகராஜா,
மோடி ஒரு பார்ப்பனரா, அல்லவா என்பது எனக்குத் தெரியாது. எனக்கு அதைத் தெரிந்துகொள்வதில் அக்கறையுமில்லை.
அவரை விசாரனைக்குட்படுத்தியது என்பது என்பது முழுக்க முழுக்க அரசியல்! காங்கிரஸ் அரசியல்! மாநில அளவில், நிர்வாகத்தில் நல்ல பெயர் எடுத்திருக்கிறார், கட்சியில் மற்றவர்களை முந்திக் கொண்டு பிரதமர் பதவிக்குப் போட்ட வேட்பாளராக வரக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது என்பதால் அவரை முடக்கி வைக்க காங்கிரஸ் இந்தப் பிரச்சினையில் கொஞ்சம் அதிகமாகவே ஈடுபாட்டுடன் செயல் படுகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்!
@வால் பையன்!
நீங்கள் ஒருவர் தான், சிறுபிள்ளைகள் பட்டாசுச் சரத்தைக் கொளுத்திப்போட்டுவிட்டு ஓடிப்போவதைப் போல, பதிவுகளில் அங்கே ஒன்று இங்கே ஒன்று என வார்த்தைகளை உருவிப் போட்டுப் பின்னூட்டச் சர வெடிகளாக வெடித்துக் கொண்டு "வேலை" "வெட்டி" உள்ளவராக இருக்கிறீர்கள் என்று நினைத்தேன்!
உங்களையும் மிஞ்சுகிற மாதிரி, சேக்காளி ராஜன் போல, இணையத்தில் இன்னும் சிலரும் கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றுமறியேன் வலைஞர்களே ரகத்தில் இருப்பது புரிகிறது!
கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க!
@கல்வெட்டு,
கேள்விகள் ஐந்தில் இருந்து,எட்டாகி இருக்கிறது!எண்ணிக்கை என்னவாக இருந்தாலும், புரிந்துகொள்ளத் தயாராக இருப்பவர்களுக்குச் சொல்லலாம்! ஆட்டத்திற்கு விதிகள் வேறு வகுத்திருக்கிறீர்கள்!
ஆடுங்க, ஆடுங்க!
துறைவாரி பிரபலங்களில் பலரும் பார்ப்பனராகவோ, பார்ப்பனரை நக்கிப் பிழைப்பவராகவோ இருக்கின்றனர். (வேறு நாகரீகமான வார்த்தையை இங்கே பயன்படுத்த எனக்கு மனம் ஒப்பவில்லை; மன்னிக்கவும்). அவ்வாறு இல்லாத ஒரு சிலரில் டாக்டர் ருத்ரன் அவர்களும் ஒருவர். அதனால், சாதித்திமிர் பிடித்த பார்ப்பனர்கள், மிகவும் கீழ்த்தரமான் வார்த்தைகளை வீசி, அவர்மீது வசை பாடுகின்றனர்.
அவர்மீது கீழ்த்தரமான வார்த்தைகளை வீசியப் பதிவுகளை பார்க்கும், சமூக அக்கறை கொண்ட பதிவர்கள், அங்கேயே அவற்றைக் கண்டிக்க தொடங்கினால், எதிர்ப்பைக் கண்டு அவ்வாறான வார்த்தைகளின் பிரயோகம் குறையக்கூடும். டாக்டர்தான் பதில் கூறிவிட்டாரே, நாம் அமைதியாய் இருப்போம் என்னும் போக்கு, சாதி வெறி மிருகங்களின் அகங்காரத்தைதான் அதிகமாக்கும்.
அவற்றை கண்டித்து யாரும் பின்னூட்டமிட்டால், உடனே பிரச்சினையை திசைதிருப்பும் பார்ப்பன குயுக்தி கீழ்வெண்மணியும் பெரியாரும் என்று தொடங்கி திராவிடக் கழகங்கள் என்பது வரை செல்லும். இங்கேயும் அதே போன்று பின்னூட்டமிட்டுள்ள கிருஷ்ணமூர்த்தி போன்ற சிலருக்காக:
நான் திராவிடக் கழகங்களின் உறுப்பினனோ, ஆதரவாளனோ, அபிமானியோ அல்ல; பெரியார் செய்த அனைத்தையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பவனுமல்ல. பதிவின் பொருள் என்னவோ அதைப் பற்றி மட்டும் பேசுங்கள்.
நீங்கள் வேறு ஏதேதோ உளறியதை அடிப்படையாக வைத்தே கல்வெட்டு சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார். உங்கள் பதிலை எதிர்பார்த்து ...
@கும்மி,
ஏதேதோ உளறியது என்று முடிவு செய்த பிறகு, எதற்காகப் பதிலை எதிர் பார்க்கிறீர்கள்?
கீழ வெண்மணி சம்பவத்தைப்பற்றிப் பேசினாலே சிலருடைய சாயம் வெளுத்து விடுகிறதே!
தங்களுடைய குற்றத்தை மறைக்கத் தான் பார்ப்பன வெறுப்பை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நேரடியாகத் தானே சொன்னேன்!
நீங்கள் திக அபிமானியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், பதில் ஒன்று தான்.
மாற்றுக் கருத்து இருந்தாலும் கூட, மனிதப் பண்போடு பழகுகிற நிறையப் பேர் என்னுடைய நண்பர்களாக இருக்கிறார்கள். என்னுடைய குடும்பமாகவும் இருக்கிறார்கள்.
கவியோகி சுத்தானந்த பாரதியார் என்று இங்கே தமிழ்நாட்டில் ஒரு துறவி இருந்தார்! பன்மொழிப் புலவர், சுதந்திரப் போராட்ட வீரர், எல்லா மதங்களிலும் ஒருமையைக் கண்டவர், சேரி வாழ் மக்களோடு கல்விப்பணி செய்தவர். அவருடைய சுய சரிதையில் ஒரு சுவாரசியமான பகுதி, ஒருவர் அவரிடத்தில் உம்மூர் எது என்று கேட்க, ஒரு கவிதை வந்து விழுகிறது!
"என்னூர் தமிழகமே! ஏன்புலமை தமிழன்பே!
என்சாதி ஆண்சாதி என்னினமோ-உன்னினமாம்
மானிடமே! என்சமயம் வாய்மையே என் கடவுள்
ஊனிடமே ஒன்றாம் உயிர்."
இப்படி அன்பை விதைத்து,சமதர்மம் காண முனைந்த பெரியோர்களை மதித்துப் பின்பற்றுகிறவன் என்ற முறையில், எது நல்லது, எது கொடிது என்று பகுத்துப் பார்க்கும் திறனும் இருக்கிறது.
அது போதும்!
@கிருஷ்ணமூர்த்தி
//கீழ வெண்மணி சம்பவத்தைப்பற்றிப் பேசினாலே சிலருடைய சாயம் வெளுத்து விடுகிறதே! //
நான் எப்பொழுதுமே பெரியார் செய்தவை அனைத்துமே சமூகத்தில் நன்மை விளைவித்தன என்று கூறியதில்லை.
//தங்களுடைய குற்றத்தை மறைக்கத் தான் பார்ப்பன வெறுப்பை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நேரடியாகத் தானே சொன்னேன்!//
இங்கே டாக்டர் தன்னுடைய எந்தக் குற்றத்தை மறைக்க பார்ப்பன எதிர்ப்பை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார் என்று கூறுங்களேன். இந்தப் பதிவே டாக்டர் மீதான தாக்குதல் குறித்து பேசும்போது, குற்றத்தை மறைக்கவே பார்ப்பன வெறுப்பு என்னும் ஆயுதம் என்று நீங்கள் பேசியது தொடர்பில்லாததாகவே எனக்குத் தோன்றியது.
//மாற்றுக் கருத்து இருந்தாலும் கூட, மனிதப் பண்போடு பழகுகிற நிறையப் பேர் என்னுடைய நண்பர்களாக இருக்கிறார்கள். என்னுடைய குடும்பமாகவும் இருக்கிறார்கள்//
தொடர்பில்லாத விஷயங்கள் குறித்து நீங்கள் பேசியதால், ஏதேதோ உளறியதாக நான் குறிப்பிட்டிருந்தேன். உளறியது அல்லது வேறு ஏதேனும் வார்த்தைகள் உங்களைக் காயப்படுத்தியிருந்தால், மன்னித்துக்கொள்ளுங்கள். நான் ஆரோக்கியமாகவே விவாதிக்க விரும்புகின்றேன். :-)
என்னால முடிந்தது http://jeyarajanm.blogspot.com/2010/03/blog-post_324.html
இந்த விவாதம் நன்றாக இருந்தாலும் சட்டென குழு சேர்வது போல தெரிகிறதே தவிர நண்பர் கிருஷ்ணமூர்த்தி நினைக்கும் வகையில் மிகுந்த ஆக்கபூர்வமாக போகவில்லை..
எனினும் பார்வையாளனாக இருக்கிறேன்..
.
//@கல்வெட்டு,
கேள்விகள் ஐந்தில் இருந்து,எட்டாகி இருக்கிறது!எண்ணிக்கை என்னவாக இருந்தாலும், புரிந்துகொள்ளத் தயாராக இருப்பவர்களுக்குச் சொல்லலாம்! ஆட்டத்திற்கு விதிகள் வேறு வகுத்திருக்கிறீர்கள்!
ஆடுங்க, ஆடுங்க!//
கிருஷ்ணமூர்த்தி,
என்ன சொல்ல வருகிறீர்கள்?
1.முதலில் நான் உங்களிடம் கேட்ட கேள்விகளுக்கு எந்த நேரடிபதிலும் கொடுக்காமல் கல்லணை வரலாரு என்று சொன்னதால் ஒருவேளை புரியவில்லொயோ என்று எண்ணி மேலும் கேள்வியைப் பிரித்துக் கொடுத்தேன்.
2.நான் புரிந்து கொள்ளத்தயாரக இல்லை என்று உங்களிடம் சொன்னேனா?
3.பதில் சொல்வதும் சொல்லாததும் உங்களின் உரிமை.
4. உரையாடலில் ஒரு இலக்கும் அதற்கான விதிகளும் வேண்டும் என்னளவில். இல்லையென்றால் அது நேரவிரயம்.
5. எனக்கு என்னமோ நீங்கள் "ஆடுங்க, ஆடுங்க!" என்று என்னை நோக்கி சொல்லியுள்ளது உங்களுக்கு இதைத் தொடர விருப்பமில்லை என்று எண்ணவைக்கிறது. அப்படியாயின் நன்றி !
6. நானும் தொடரப்போவது இல்லை.
நன்றி!
.
//பார்ப்பான் நல்லவன் என்று நம்புவதற்கு ருத்ரனுக்கு ஆக்சிடெண்ட் ஆகனுமாம். என்ன ஒரு நல்ல எண்ணம் !!!//
உனக்கு கை, கால் போனா தெரியும்னு நீங்க சொன்னதேயில்லயா?
//Raja said...
//பார்ப்பான் நல்லவன் என்று நம்புவதற்கு ருத்ரனுக்கு ஆக்சிடெண்ட் ஆகனுமாம். என்ன ஒரு நல்ல எண்ணம் !!!//
உனக்கு கை, கால் போனா தெரியும்னு நீங்க சொன்னதேயில்லயா?
//
அப்படியா ? "உங்க பொண்டாட்டி பிள்ளைக் குட்டி ஆக்சிடெண்டில் செத்துப் போனால் தெரியும் !!!" என்று ஒருவன் ஒருவருக்கு உதா'ரணம்' சொன்னால் அவன் தீர்க்க தரிசி என்று போற்றுனுமா ? சொனனவன் பல்லை உடைக்கனுமா ?
//உங்களையும் மிஞ்சுகிற மாதிரி, சேக்காளி ராஜன் போல, இணையத்தில் இன்னும் சிலரும் "கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றுமறியேன் வலைஞர்களே" ரகத்தில் இருப்பது புரிகிறது!//
கிருஷ்ணமூர்த்தி,
:(
நன்றி மேற்கோளுக்கு
//தருமி said...
//உங்களையும் மிஞ்சுகிற மாதிரி, சேக்காளி ராஜன் போல, இணையத்தில் இன்னும் சிலரும் "கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றுமறியேன் வலைஞர்களே" ரகத்தில் இருப்பது புரிகிறது!//
கிருஷ்ணமூர்த்தி,
:(
நன்றி மேற்கோளுக்கு
//
ஆமாம் அவர் செய்வது ஊஉ டைப் பின்னூட்டங்கள். நான் எல்லா அரசியலையும் விட்டு அரவிந்தரை நாடிவிட்டேன் என்பார். எங்காவது பார்ப்பான் என்று எழுதியிருந்தால் அரவிந்தருக்கும், அன்னைக்கும் தற்காலிக பை சொல்லிவிட்டு அங்கு ஆஜார் ஆகிவிடுவார். பார்பனர்களின் செயல் அனைத்திற்கும் இவர் ஏன் ஒட்டுமொத்தமாக பொருப்பேற்றுக் கொள்கிறார் என்று தெரியவில்லை :(
தருமி ஐயா!
திருவிளையாடல் பட "தருமி" நாகேஷ் எனக்குக் கேக்க மட்டும் தான் தெரியும் நானே கேக்கறேன் என்ற வசனத்தை கொஞ்சம் வலைஞர் என்று ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்து நீங்கள் பன்ச் லைனாக வைத்திருக்கிறீர்கள்! இந்தப் பதிவில் பின்னூட்டங்கள் எழுதிக் கொண்டிருந்த தருணத்திலோ, அல்லது முன்னாலோ உங்களை நான் நினைக்கவே இல்லை.
அதனால், இங்கே உங்களை மனதில் வைத்து அதைச் சொல்லவில்லை, நான் கேள்வி மேல கேட்டுக் கிட்டே தான் இருப்பேன் ஆனாக்க நீ என்ன பதில் சொன்னாலும் காதுல போட்டுக்க மாட்டேன்னு இருக்கும் ரகத்தை நினைத்துச் சொன்னது அது!
AP நாகராஜன் திருவிளையாடல் படத்தின் அந்த வசனத்தை உங்களுக்கு காபிரைட் செய்து கொடுத்திருப்பது எனக்குத் தெரியாது.
@கோவி கண்ணன்!
நான் காவித்துணி கட்டி கொண்டோ, கட்டிக் கொள்ளாமலோ எங்கும் ஓடிப் போய் விடவில்லை!அல்லது பயந்து ஒளிந்துகொண்டு விடவும் இல்லை.
கட்சி அரசியலை விட்டு இப்போது கூட ஒதுங்கித் தான் இருக்கிறேன், அதற்காக அரசியலைப் பட்டிக் கருத்துச் சொல்லாமல் இருந்துவிட வேண்டும் என்கிறீர்களா?
ஸ்ரீ அரவிந்தரை நாடியதும் தேடுவதும் என்னுடைய சொந்த அனுபவம். எவர்மீதும் திணித்ததில்லை.
அதே மாதிரி, பார்ப்பனர் என்பதற்காக ஓடி வந்து எவருக்காகவோ ஒட்டு மொத்தமாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறமாதிரி....!
உங்களால், நீங்கள் எழுதிய இந்தப் பகுதியை நம்ப முடிந்தால்...அதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை! அவசியமுமில்லை!
சொன்ஃபில் இயக்கத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லி இருக்கிறேன், நினைவிருக்கிறதா?
//....உங்களை நான் நினைக்கவே இல்லை.//
ச்சே ... ஏமாந்தே போய்ட்டேன்!!
:(
நண்பர் கோவி,
D.R.Ashok என்பவர் சங்கம் அமைபது பற்றிய ’பதிவர் சந்திப்பில் பார்பானியம்’ என்று ஒரு பதிவு எழுதியிருந்தார். அப்பதிவை பலரும் ஏற்க்கவில்லை. (அசோக்கை நன்கு அறிந்த பல பதிவர்கள் அவரை கண்டித்து எழுதிய முதல் பின்னூடங்களை பார்த்திருப்பீர்கள்). நானும் அந்த கூட்டத்திற்க்கு சென்றேன். அப்பதிவில் அசோக் எழுதியது மிக தவறான, immature and totally unwarranted and unwanted view point. ஆனால் அப்பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். ‘வெளிப்படையாக’ எழுதியதற்க்கு பாராட்டியிருந்தீர்கள். அசோக எழுதியதை விட உங்கள் பின்னூடம் எம்மை மிக வருத்தமுற செய்தது.
அந்த பதிவின் கருத்தை ஏற்க்கிறீர்கள் நீங்கள் ? மிக முட்டாள்தனமாக எழுதப்பட்ட பதிவு அது. ஆனால் உங்களுக்கு அது ’பார்பனீய எதிர்பாக’ தெரிந்தது ! தண்டோரா தம் பதிவில் எழுதிய பின்னூட்டம் முக்கியமானது.
மருத்துவர் ருத்திரன் அவர்களும் இதை கண்டிக்காமல் பின்னூட்டம் இட்டிருந்தார். அவர் மீது கொண்டிருந்த மரியாதையை குறைத்துக்கொண்டு விட்டார். பின்னூட்டமே இடமால் இருந்திருந்தால் கூட பரவாயில்லை. அந்த சந்திப்பில் இருந்த seating arrangement unplanned and random தான். மிக இயல்பாக அமர்ந்தனர். வந்திருந்தவர்கள் யாருக்கும் தோன்றாத ‘கோணம்’ ;
டோண்டு அந்த பதிவில் ஒரு வகையான கிண்டலோடு பின்னூட்டம் எழுதியிருந்தார்.
அவ்வளவுதான். அவரின் இரு பதிவுகளில் நடந்தது பின்னர் தான்.
இந்த விசியத்தில் நீங்கள் நடுனிலைமையோடு இல்லை என்றுதான் கருதுகிறேன்.
//ருத்ரன் எழுதுகிற பின்னூட்டங்கள் மக்கள் மனதில் அவருக்கு இருந்த இமேஜை சில படிகள் இறக்கிக் காட்டுமோ என்று நானும் அஞ்சுகிறேன். ஒரு மனோ தத்துவ நிபுணரின் டிப்ளமசி அவைகளில் மிஸ்ஸிங்.//
jawahar!
ருத்ரன் எழுதுகிற பின்னூட்டங்கள் மக்கள் மனதில் அவருக்கு இருந்த இமேஜை சில படிகள் இறக்கிக் காட்டுமோ என்று நானும் அஞ்சுகிறேன். ஒரு மனோ தத்துவ நிபுணரின் டிப்ளமசி அவைகளில் மிஸ்ஸிங்.//
காட்டாது.
ஒரு மனதத்துவ நிபுணனும் ஆன்கிகவாதியும் ஒன்றல்ல.
’ஒரு முனிவன் தன் சீடனுடன் நடந்து போய் கொண்டிருந்தார். வழியில் ஒரு பாம்பு அவரைக்கடித்தது. அவர் அப்பாம்பை எடுத்து அதன் இருப்பிடத்தில் விட்டுவிட்ட்ச் சென்றார். சிறிது பின்னர் ஒரு பாம்பு அவரைக்கடித்தது. மீண்டும் முன்பு செய்த்தையே செய்தார். இப்படி பலமுறை நடந்த்து.
சீடன் கேட்டான்: ‘ஏன் அதைக் காப்பாற்றுகிறீர்கள்? உங்களை மீண்டும் மீண்டும் கடிக்கிறீர்களே?’
முனிவர் சொன்னர்ர்: ‘கடிப்பது பாம்பின் சுபாவம். காப்பது என் சுபாவம்’
***
கதை சொன்னது : இராமகிருஸ்ணர்.
மனோத்தத்துவ நிபுணன் சொல்வான்: ஒரு கன்னத்தில் அறைந்தால், உன்னிடத்தில் நியாய்ம் இருப்பின், அவனைத் தெளிவுபடுத்தப்பார். மீண்டும் அவன் செய்வானாயின், திருப்பிக்கொடுத்து விடு. என்பான்.
டோண்டு ராகவன், சங்கச்செயல்களைப்பற்றி எழுதியதில், ருத்ரனை ‘மன்நலம் இல்லாதவர்; இவரிடம் போகும் நோயாளிகள் பாடு திண்டாட்டம்தான்’ என எழுதியிருந்தார்.
This remark is malicious and mischievous. Out of context.
மருத்த்துவர் பார்ப்பனர்களைப்பற்றி எழுதுவது பிடிக்கவில்லையானால், அதை எதிர்க்கவேண்டுமானால், தனிப்பதிவிலே எழுதலாம். சம்பந்தமில்லாத் இடத்தில், சங்கத்துக்கு தொடர்பில்லா ஒருவரை கேவலமான முறையில், தனிநபர் தாக்குதல் செய்வது unprovoked violence.
It is a clear offence which calls for immediate and swift reaction or retaliation.
அதைத்தான் ருத்ரன் செய்தார். அவர் செய்தது self defence.
இதைத்தான் அவர் தன் நோயாளிகளுக்கும் செர்ல்வார்:
Self-defence is to save you. Save yourself.
இங்கு டிப்ள்மசி செல்லாது.
சீனாவுக்கு இந்தியா போனவாரம் ஒரு புது தூதரை நியமித்தது.
அவர் தன் முதல் பேட்டியில் சொன்னார்:
சீனாவிடம் ஜெண்டில் டிப்ள்மசி செல்லாது. அக்ரசிவ் டிப்ள்மசியே செல்லும் என்றார்.
இது போல, எங்கு யாரிடம் எப்படி எதைச்சொல்வது என்பதில் வேறுபாடு உண்டு என்று சொல்பவ்ந்தான் மனோத்த்த்துவ நிபுணன்.
பாம்பு கடித்துக்கொண்டேயிருக்கும். நீ எடுத்து போட்டுக்கொண்டேயிருக்கும் என்பவன் ஆன்மிகவாதி.
ஜவஹரிடன் சொல்லவேண்டிய் முறை வேறு. டோண்டுவிடம் வேறு.
டோண்டு தன்னை விடாக்கண்டன் என்று பீற்றிக்கொள்பவர்.
நாம் என்ன? விட்டுவிடும் கண்டனாக இருக்க முடியுமா?
Every action has an equal reaction.
கிருஸ்ணமூர்த்தி!
பார்ப்பனர்கள் மற்றவரிடம் ஜாதிச்சண்டை போடுவதில்லை என்பது உண்மைதான்.
ஆனால், அவ்ர்க்ள் வருணாஷ்ரமதர்மத்தைக்கடைபிடிப்பவர்கள்.
தங்களைப் ‘பிராமணன்’ என சொல்லிக்கொள்பவர்கள்.
அவர்கள் எப்படிப்பட்டவராகயிருப்பினும்: தேவ்நாதன், சங்கராச்ச்சாரியார் ஆகயிருந்தாலும்.
என்வே எந்த ஜாதிமுறைகள் மக்களைப்பிளவுபடுத்தி சமூகத்தைச்சீரழித்ததோ, அதை விடாமல் பிடித்துக்கொண்டுவருபவர்கள்.
நேரடியாக ஜாதிச்சண்டை போடுவதைவிட இது ஒரு கொடிய சமூகவிரோதமாகும்.
டோண்டு மன்னிப்புக்கேட்டார் அது பெருந்தனமை என்கிறார்கள்.
கோவிகண்ணன் சொன்னதுபோல, செருப்பாலடித்துவிட்டு மன்னிப்பு கேட்கும்போது,
கேட்டவனைவிட, அம்மன்னிப்பை ஏற்றவனே பெருந்தகையாளன். ருத்ரன் மன்னித்தார்.
நானென்றால், மன்னிப்பே கிடையாது, திருப்பி வாங்கிகொள் என கொடுக்கும் செருபபடியில் என்பக்கமே அவன் வரமாட்டான்.
அதியமான்!
அசோக்கின் பதிவு வெறும் இருக்கைபற்றியல்ல.
இருக்கைபற்றி மட்டும் என எடுத்துக்கொள்பவர்கள் வெகுளிகள்.
அது ஒரு indirect way of saying that the dominance of brahmins and their chamchaas is coming. Beware! என்று சொல்லத்தான்.
யுவகிருஸ்னா எழுதியது போல, டுரூ தமிழன் யார்? அவருடன் சேர்ந்துவருபவர்கள் ஆர் என்றெல்லாம் தெரியும். அவர்கள் முன்னிருக்கையில் அமர்ந்தது பெரிய விஷயம் அல்ல. அவர்களே முன்னின்று சங்கத்தை அமைத்தால் அவர்கள் ஆதிக்கமே ஓங்கும் என்பதே அசோக் கொடுக்கும் சூசகம்னான் எச்சரிக்கை.
அது பார்ப்பனருக்கும் பார்ப்பன அடிவருடிகளுக்க்ம் கொடுக்க்ப்பட்டதல்ல. மற்றவர்களுக்கு.
ஏனென்றால், தமிழக வரலாறு அப்படி. ஒரு அங்குலம் கொடுத்தால், வீட்டையே பிடிப்பவர்கள் பார்ப்பனர்கள் என்பார்கள் அபார்ப்பனர்கள்.
பட்டறிவு இல்லாதவன் என்ன மனிதன்?
//K.R.அதியமான் said...
நண்பர் கோவி,
D.R.Ashok என்பவர் சங்கம் அமைபது பற்றிய ’பதிவர் சந்திப்பில் பார்பானியம்’ என்று ஒரு பதிவு எழுதியிருந்தார். அப்பதிவை பலரும் ஏற்க்கவில்லை. (அசோக்கை நன்கு அறிந்த பல பதிவர்கள் அவரை கண்டித்து எழுதிய முதல் பின்னூடங்களை பார்த்திருப்பீர்கள்). நானும் அந்த கூட்டத்திற்க்கு சென்றேன். அப்பதிவில் அசோக் எழுதியது மிக தவறான, immature and totally unwarranted and unwanted view point. ஆனால் அப்பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். ‘வெளிப்படையாக’ எழுதியதற்க்கு பாராட்டியிருந்தீர்கள். அசோக எழுதியதை விட உங்கள் பின்னூடம் எம்மை மிக வருத்தமுற செய்தது.
அந்த பதிவின் கருத்தை ஏற்க்கிறீர்கள் நீங்கள் ? மிக முட்டாள்தனமாக எழுதப்பட்ட பதிவு அது. ஆனால் உங்களுக்கு அது ’பார்பனீய எதிர்பாக’ தெரிந்தது ! தண்டோரா தம் பதிவில் எழுதிய பின்னூட்டம் முக்கியமானது.
மருத்துவர் ருத்திரன் அவர்களும் இதை கண்டிக்காமல் பின்னூட்டம் இட்டிருந்தார். அவர் மீது கொண்டிருந்த மரியாதையை குறைத்துக்கொண்டு விட்டார். பின்னூட்டமே இடமால் இருந்திருந்தால் கூட பரவாயில்லை. அந்த சந்திப்பில் இருந்த seating arrangement unplanned and random தான். மிக இயல்பாக அமர்ந்தனர். வந்திருந்தவர்கள் யாருக்கும் தோன்றாத ‘கோணம்’ ;//
என்னை பார்ப்பன எதிரி என்று கட்டமைக்கும் உங்கள் பின்னூட்ட கட்டமைப்பை கடுமையாக கண்டிக்கிறேன். நான் அசோக்கின் நிலையை ஆதரிக்கிறேன் / எதிர்க்கிறேன் என்று என் பின்னூட்டத்தில் சொல்லப்படவில்லை,
பாலா, நாட்டாமை, பஜ்ஜி, சொஜ்ஜி, ஹேரிபாட்டர், செர்வண்டீஸ், கோமணகிருஷ்ணன் என்ற அனானி பெயர்களில் பின்னூட்டம் என்ற பெயரில் பார்பன புத்தியைக் காட்டும் வகையில் அசோக் மறைந்து கொண்டு எழுதவில்லை. மனதில் பட்டதை ஒளிக்காமல் சொன்னார், அவர் நினைத்திருந்தால் அவரது கருத்துகளை எதோ ஒரு பதிவில் அனானி பின்னூட்டமாக போட்டி இருக்க முடியும், அதைத் தவிர்த்து இருந்ததால் 'மனதில் பட்டதை ஒளிக்காமல் எழுதி இருந்தீர்கள்' என்று குறிப்பிட்டேன். இதில் என்ன தவறு ?
//டோண்டு அந்த பதிவில் ஒரு வகையான கிண்டலோடு பின்னூட்டம் எழுதியிருந்தார்.
அவ்வளவுதான். அவரின் இரு பதிவுகளில் நடந்தது பின்னர் தான்.//
அவரு மனசுல நீங்களும் உங்க மனசுல அவரும் இருப்பதால் உங்களுக்குத்தான் அவர் என்ன பொருளோடு பின்னூட்டினார் என்று தெரியும்.
//இந்த விசியத்தில் நீங்கள் நடுனிலைமையோடு இல்லை என்றுதான் கருதுகிறேன்.
//
ஓ உங்களுக்கு தான் நடுநிலை கடைநிலை எல்லாம் நன்றாக தெரியுமோ ! நடுநிலை என்பது அடிவருடித்தனம் என்பதாக நான் புரிந்து வைத்திருக்காதது கூட காரணமாக இருக்கும் அதியமான் சார்
Jo Fernando,
பதிவர் சந்திப்பில், நண்பர்களாக, சமமாகத்தான் எல்லோரும் கூடியிருந்தோம். அங்கு Brahmin dominance ஏதும் இல்லை. அசோக்கின் ‘ஞானக் கண்களுக்கு’ மட்டும் அப்படி தெரிந்திருக்கிறது. நண்பர்களின் கூட்டத்தை இப்படி முட்டாள்தனமாக பேதம் பிரிக்கும் பதிவிற்க்கு உங்கள் வக்காலத்து வேறு. பார்பானீயம் என்றால் என்னவென்று நானும் அறிவேன்.
கோவி,
அசோக்கின் பதிவு மிக தவறானது, மேலோட்டமானது, நல்ல நண்பர்களின் கூட்டத்தை சாதிய கண்களோடு பிளவு படுத்தும் பதிவு என்றே பலரும் கருதுகின்றோம். அதை தம் பதிவில் வெளியிடும் போது, சொந்த பெயரில் தான் வெளியிட முடியும். வெளிப்படையாக எழுதினால் அது சரியாகிவிடுமா என்ன ? உங்கள் பின்னூட்டம் எனக்கு அப்படிதான் தெரிந்தது. கண்டிக்காமல் அப்படி எழுதியிருந்தது, அப்படி ஒரு தோற்றத்தை தந்தது.
////அவரது கருத்துகளை எதோ ஒரு பதிவில் அனானி பின்னூட்டமாக போட்டி இருக்க முடியும், அதைத் தவிர்த்து இருந்ததால் 'மனதில் பட்டதை ஒளிக்காமல் எழுதி இருந்தீர்கள்' என்று குறிப்பிட்டேன்.////
அப்படிபட்ட முட்டாள்தனமான பின்னூட்டத்தை யாரும் அனுமதித்திருப்பார்கள் என்று தோன்றவில்லை. பதிவர் சந்திப்பிற்க்கு வந்து, அதை பற்றி பதிவெழுதிய யாரும் அப்படி செய்திருக்கமாட்டார்கள்.
நாம் மெரினாவில் ஒரு பதிவர் சந்திப்பில் சந்தித்தோம். டோண்டுவும் இருந்தார். மிக நட்பாகதான் பழகினோம். டோண்டு அவர்களுடன் நீங்கள் மிக நட்பாக, அன்பாகதான் பழகினீர்கள். அவரும் அப்படியே. சென்னையில் வசிப்பதால் அவருடன் அதிகம் பழக்கும் வாய்ப்பு எமக்கு. முரண்பாடுகள் இருந்தாலும் நல்ல நண்பர். சாதி வித்யாசம் பாராட்டதவர் என்று தான் கருதுகிறேன். அவரின் அணுகுமுறைகள் (பதிவில் பின்னூட்டங்களை அனுமதிப்பது பற்றி) கருத்து வேறுபாடுகள் உண்டு. போலி விவகாரம் நடந்த போது, அவருக்கு அதை பற்றி பல தடவை வேண்டுகோள் விடுத்தோம். அது வேறு விசியம். ஆனால் இந்த விசியத்தில் உங்கள் பார்வை தவறு என்று தான் கருதுகிறேன்.
//அப்படிபட்ட முட்டாள்தனமான பின்னூட்டத்தை யாரும் அனுமதித்திருப்பார்கள் என்று தோன்றவில்லை. பதிவர் சந்திப்பிற்க்கு வந்து, அதை பற்றி பதிவெழுதிய யாரும் அப்படி செய்திருக்கமாட்டார்கள்.
//
முட்டாள் தனமான பின்னூட்டங்களை முதிர்ச்சியற்றவரின் பதிவுகளில் பார்ததே இல்லையா ? ஓ ஒருவேளை அவரைவிட D.R அசோக்கிற்கு உங்க மனதில் பெரிய இடம் ஒதுக்கி இருந்ததால் அவ்வாறு கூறுகிறீர்களோ ? நீங்கள் போடும் பின்னூட்டம் கூடத்தான் முட்டாள் தனமானதுன்னு வினவு குழு சொல்கிறார்கள். அதற்காக அவர்கள் உங்கள் பின்னூட்டங்களை முடக்கி வைத்திருக்கிறார்களா ?
//நாம் மெரினாவில் ஒரு பதிவர் சந்திப்பில் சந்தித்தோம். டோண்டுவும் இருந்தார். மிக நட்பாகதான் பழகினோம். டோண்டு அவர்களுடன் நீங்கள் மிக நட்பாக, அன்பாகதான் பழகினீர்கள். அவரும் அப்படியே. சென்னையில் வசிப்பதால் அவருடன் அதிகம் பழக்கும் வாய்ப்பு எமக்கு. முரண்பாடுகள் இருந்தாலும் நல்ல நண்பர். சாதி வித்யாசம் பாராட்டதவர் என்று தான் கருதுகிறேன். அவரின் அணுகுமுறைகள் (பதிவில் பின்னூட்டங்களை அனுமதிப்பது பற்றி) கருத்து வேறுபாடுகள் உண்டு. போலி விவகாரம் நடந்த போது, அவருக்கு அதை பற்றி பல தடவை வேண்டுகோள் விடுத்தோம். அது வேறு விசியம். ஆனால் இந்த விசியத்தில் உங்கள் பார்வை தவறு என்று தான் கருதுகிறேன்.//
உங்களைவிட பார்பன நண்பர்கள் எனக்கு மிகுதி, நான் யார் யாரை குறை சொல்கிறேன் என்பதை என் நண்பர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். நீங்கள் என்னை பார்பன எதிரி என்று கட்டமைப்பதில் எனக்கு நட்டமில்லை. நான் யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டும் என்கிற தேவையும் இல்லை. உங்க பதிவில் குறிப்பிட்டு இருப்பது அனைத்தும் சரி என்று நான் பதிவர் அசோக்கிற்கு பின்னூட்டம் இடாத போது உங்கள் தேவையற்ற திரித்தல் எனக்கு எரிச்சலையே தருகிறது.
ஒரு படத்தின் படப்பிடிப்பு நல்லா இருக்கிறது என்று சொன்னால் படம் சூப்பர் என்று சொல்வதாக பொருளா ?
என்னைப் பற்றிய உங்களுடைய கற்பனைகளுக்குள், நிலைப்பாட்டிற்குள் என்னை ஒட்டவைத்துப் பார்க்க வேண்டாம். கருத்து சுதந்திரம் என்பதால் உங்கள் பின்னூட்டத்திற்கு மறுமொழி போடுகிறேன்
@ அதியமான்
//நண்பர்களின் கூட்டத்தை இப்படி முட்டாள்தனமாக பேதம் பிரிக்கும் //
அது நண்பர்களின் கூட்டமாக இருந்தால் ஏன் இவ்வளவு எதிர்ப்பு!
சரி, அதை எதிர்த்து பதிவெழுதுபவர்கள் பதிவின் பின்னூட்டத்தில் சங்கத்தை நியாயபடித்தி பின்னூட்டும் இருபவர்கள் யார்!?
நீங்க அப்பாவியா!? அப்பாவி மாதிரி காட்டிகிறிங்களா?
ஜோ அமலன் சொல்வது தான் அசோக் செய்தது!
//முரண்பாடுகள் இருந்தாலும் நல்ல நண்பர்.//
நாங்க மட்டும் பார்பனர்கள் எங்க எதிரிங்கன்னு சொன்னோமா? நட்பு வேறு கருத்து வேறு தானே.
நானும் அவரின் கட்டுரைகளை விரும்பிப் படிப்பவள். ஆனால் இன்று..........
உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் உணர்வு மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
//பார்பானீயம் என்றால் என்னவென்று நானும் அறிவேன். //
அதியமானுக்கு நேற்றே பதில் போட நினைத்து முடியாமல் போய்விட்டது.
அதிய்மான்!
பார்ப்ப்னீயமும் பார்ப்ப்ன ஆதிக்கமும் ஒன்றாக இருக்க்த் தேவையில்லை. பார்ப்பனீயத்தைக்கடைபிடிக்காத பார்ப்பனரும் ஒன்றாகச்சேர்ந்து கொள்வர்: ‘இது நம்ம ஆளு’ அவர்கள் ஆதிக்கம் செய்யலாம்.
சங்கத்தில் ஆதிக்கம் என்பது, பணம், பொருள் என்றல்ல. கொள்கை.
வலைபதிவுகளில் பார்க்கிறோம். பெரியார், இந்து மதம், மூட நம்பிக்கை எதிர்ப்பு, நாத்திகவாதம்,சாமியார்கள், சங்கராச்ச்சாரியார்கள் - என்றெல்லாம் வரும்ப்போது, அங்கே, டோண்டு தனியாக பதிவு போட்டுவார்: பெரியாரும் நித்யாவும். அவருக்கு பின்னூட்டம் போட ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் தங்கள் வலைபதிவுகளுலும் பின்னூட்டங்களும் ஒரே கொள்கையைத்தார் பறைசாற்றுவர்ர்கள்.
இப்போது சங்கம் ஒன்று வந்து அதில் இவர்கள் ஆதிக்கம் செலுத்தினால், மற்றவர்கள் தங்கள் கருத்துகளை மாற்றிக்கொள்ள் வேண்டும், அல்லது அடக்கி வாசிக்கவேண்டும்.
மற்றவர்கள் சொல்வது செய்வது அனைத்துமே போலி என்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவதே அவர்கள் எண்ணம். அதற்கு சங்க ஆதிக்கம் உதவும்.
அதியமான்!
டோண்டுவைப்பற்றி இங்கே எழுதியதை நீங்கள் அவரின் பதிவிலும் எழுதியுள்ளீர்கள்.
He has no caste feelings as a private person என்று.
மனம் வேறு. பிறருடன் பழக்கம் வேறு. மன்மோகன்சிங்கை மோடி சந்தித்துப் பேசும்போது ‘இசுலாமியர்களையெல்லாம் கொல்வது சரி’ என்று சொல்வாரா? மாட்டார். மாறாக, இசுலாமியருக்கு என்னென்ன உதவிகள் செய்யலாம் என ஆலோசனை கேட்பார்.
டோண்டுவின் கொள்கைகள் அவர் எழுத்துகளின் மண்டிக்கிடக்கின்றன.
அதன்படி:
வருணாசிரம்தர்மம் மிகச்சரி. அதன்படி, பிராமணர்கள், சூத்திரர்கள், தலித்துகள் உண்டு. நான் பிராமணன். அதனால் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு பிராமண்னும் பெருமைப்படவேண்டும். ஐயர், ஐயங்கார் என ஓபனாகச்சொல்லி பெருமைப்படவேண்டும்.
2. குலக்கல்வித்திட்டம் ராஜாஜி கொண்டுவந்தார். அவர் செய்தது சரி. அதன்படி வாழ்ந்தால் சமூகம் நன்றாக்யிருக்கும்.
3. பெரியாரின் இயக்கத்தின் ஒரே குறிகோள். பார்ப்பனரே. அவரின் இயக்கத்தால் தமிழகத்துக்கு விளைந்த்து தீமையே.
இவைகள் சில கருத்துகளே.
உங்களிடம் நன்றாகப்பேசினார், அவர் நல்லவரென்றால், முசிலீம்களில் ஆயிரக்காணவர்கள் ஜிகாதிகள் நல்லவர்கள் என்கிறார்கள். எங்களைப்பொறுத்தவரை நல்லவர்கள்.
இது வாதமா?
கருத்துரையிடுக