பேரங்காடி ஒன்றின் பின் ஒன்றாக பணம் செலுத்தி பொருள்கள் பெற்றுக் கொள்ள அமைக்கப்பட்ட இடத்தில் (Payment Counters) முன்பு நின்றவர் முதலில் இருக்கும் இடத்தில் பணம் செலுத்தி பெற்றுக் கொண்டு மூட்டைக் கட்டுகிறார் என்பதாக நினைத்து நான் அவரைத் தாண்டி அடுத்த இடத்தில் பணம் செலுத்தப் போனேன். பிறகு தான் தெரிந்தது எனக்கு முன்னால் இருந்தவரும் வரிசையில் இருந்தவர் தான் என்பது. ' மன்னிக்கவும் நீங்கள் பொருள் வாங்கிவிட்டீர்கள் என்பதாக நினைத்து முன்னே வந்துவிட்டேன், நீங்க முன்னால் போங்க' என்றேன், நான் கையில் வைத்திருந்தது ஒரே ஒரு பொருள் தான் என்பதாலோ அல்லது அவரின் இயல்பான குணத்தினாலோ சிரித்தபடி 'பரவாயில்லை......நீங்க வாங்கிட்டு போங்க' என்றார், பதிலுக்கு திரும்பவம் நானும் சிரித்துக் கொண்டே 'தவறு நிகழ்ந்துவிட்டது நீங்க போங்க' என்று சொல்ல அவரும் மறுபடியும் சிரித்து கொண்டு 'பரவாயில்லை' என்றார். நான் வாங்கிவிட்டு வந்துவிட்டேன்.

உலகத்தில் 600+ கோடியினர் இருந்தாலும் அதில் நமக்கு தெரிந்தவர் ஒரு 1000 (0.00000016 %) பேர் என்று வைத்துக் கொண்டாலும் கூட நாம் பழக, பேச இவர்கள் மட்டும், இவர்கள் மட்டுமே தான் நமக்கு கிடைத்திருக்கிறார்கள். அதிலும் கூட நமக்கு நெருக்கமானவர் நூறோ இருநூறோ தான். இந்த 1000 தவிர மற்றவர்களை நாம் சந்திக்க நேரிட்டால் கூட அந்த சந்திப்பு எதிர்பாராவிதமானது மற்றும் ஒரே ஒரு முறைதான், அதன் பிறகு நம் வாழ்க்கையில் அவர்கள் வரப் போவதே இல்லை, ஆனால் அம்முகம் தெரியாதவர்களிடம் கூட கடுப்பு அடித்து காயப்படுத்திவிட்டு பின்னால் வருந்தினால் நாம் யாரிடம் சென்று மன்னிப்பு கேட்க முடியும் ? அதனால் பயன் ஏதும் இல்லை. நன்கு தெரிந்தவர்களிடையே கூட தவறுக்கான மன்னிப்பு என்பது அவரவர் வாழ்ந்து கொண்டு இருக்கும் வரையில் மட்டுமே. நமக்கு தெரிந்த அந்த 1000 பேர்களில் சிலரிடத்தில் அன்பு செலுத்த முயற்சிக்காமல் கசப்பை தொடர்ந்தால், நாமும் ஒரு மனிதனாக பிறந்ததற்காக உலக மக்களிடத்தில் அன்பு செலுத்துகிறோம் என்று எண்ணுவது வெறும் எண்ணம் தான் செயலில் ஒன்றும் கிடையாது.
பொறுமை என்பதை இளிச்சவாய்த்தனம் என்பதாக பலர் கற்பிதம் செய்தும் கொள்கிறார்கள். 'நெருப்பை நெருப்பினாலோ, வெறுப்பை வெறுப்பினாலோ நீக்க முடியாதென்பது' புத்தனின் வாக்கு. எந்த ஒரு நிகழ்விற்கும் நாம் காரணம் ஆகவிட்டாலும் அதை பெரிது படுத்தாமல் கடந்து செல்வது நம் எண்ணத்தில் தான் உள்ளது.
20 கருத்துகள்:
அம்முகம் தெரியாதவர்களிடம் கூட கடுப்பு அடித்து காயப்படுத்திவிட்டு பின்னால் வருந்தினால் நாம் யாரிடம் சென்று மன்னிப்பு கேட்க முடியும்]]
நல்ல சிந்தனை.
பொறுமை என்பது நற்குணமே - இ.வா கிடையாது
நல்ல இடுக்கை அண்ணே!
GOOD ONE :)
நன்று !
அருமையான சிந்தனை பதிவு. !
//இந்த நிகழ்வில் நான் செய்தது அறிய பிழை, ஆனால் அதை அவர் நான் //
அர்த்தம் மாறுகிறது கோவி சார், அறியா பிழை என்றிருக்க வேண்டுமோ?
//ட்புடன் ஜமால் said...
அம்முகம் தெரியாதவர்களிடம் கூட கடுப்பு அடித்து காயப்படுத்திவிட்டு பின்னால் வருந்தினால் நாம் யாரிடம் சென்று மன்னிப்பு கேட்க முடியும்]]
நல்ல சிந்தனை.
பொறுமை என்பது நற்குணமே - இ.வா கிடையாது
நல்ல இடுக்கை அண்ணே!//
நன்றி
// Kesavan said...
GOOD ONE :)//
நன்றி
// snkm said...
நன்று !//
நன்றி !
/ முரளி said...
அருமையான சிந்தனை பதிவு. !
//இந்த நிகழ்வில் நான் செய்தது அறிய பிழை, ஆனால் அதை அவர் நான் //
அர்த்தம் மாறுகிறது கோவி சார், அறியா பிழை என்றிருக்க வேண்டுமோ?//
மிக்க நன்றி. சரி பிழையை செய்துவிட்டேன் :)
வாழ்க்கைக்கு தேவையான, அருமையான கருத்து. எல்லோரும் கடைப்பிடித்தால் அனைவரும் ஆனந்தமாக இருக்கலாம்.
இந்த அவசர உலகுக்குத் தேவையான இடுகை.
பலசமயம் பொறுமை இழிச்சவாய்த் தனமாகத் தான் பார்க்கப்படுகிறது.
இது கற்றவர்களில் அதிகம் உள்ளது, கசப்பான உண்மை.
பலர் கவனிக்கவில்லை; தெரியாமல் நடந்தது, மன்னிக்கவும் என்ற வார்த்தைகளை வைத்தே அடுத்தவரை இழிக்க வைத்துக் காரியம் சாத்தித்து விட்டு; பெருமையாகப் பீத்துகிறார்களே!
இவர்களை என்னென்பது?
அதனால் சில சமயம்; சிலருடன் " கொத்தாவிடிலும்; சீறாமல் இராதே" என்பதை பின்பற்ற வேண்டியுள்ளதே!
ஹ்ம்ம்.. இத்தனை நாட்களாக இழிச்சவாயத்தனம் என்ற சொல்லை இளிச்சவாயத்தனம் என்றே நினைத்து வந்திருக்கிறேன்.
எவ்வித சண்டையும் மன உளைச்சலை தந்து வந்தது. ஆனால் தமிழ் பதிவுகள் அவ்வாறான மனநிலையை சமன் செய்துவிட்டன. இப்பொழுது எல்லா வார்த்தைகளையும் மிக எளிதாக எடுத்துக்கொள்ளமுடிகிறது.
கருத்து நல்லா இருக்கு.
ஆனா.. எனக்கு ஒரு சந்தேகம். இளிச்சவாய் / இழிச்சவாய் எது சரி?
இல்ல, ரெண்டு வார்த்தையுமே இருக்கா?
//Dr.P.Kandaswamy said...
வாழ்க்கைக்கு தேவையான, அருமையான கருத்து. எல்லோரும் கடைப்பிடித்தால் அனைவரும் ஆனந்தமாக இருக்கலாம்.
//
மிக்க நன்றி ஐயா
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இந்த அவசர உலகுக்குத் தேவையான இடுகை.
பலசமயம் பொறுமை இழிச்சவாய்த் தனமாகத் தான் பார்க்கப்படுகிறது.
இது கற்றவர்களில் அதிகம் உள்ளது, கசப்பான உண்மை.
பலர் கவனிக்கவில்லை; தெரியாமல் நடந்தது, மன்னிக்கவும் என்ற வார்த்தைகளை வைத்தே அடுத்தவரை இழிக்க வைத்துக் காரியம் சாத்தித்து விட்டு; பெருமையாகப் பீத்துகிறார்களே!
இவர்களை என்னென்பது?
அதனால் சில சமயம்; சிலருடன் " கொத்தாவிடிலும்; சீறாமல் இராதே" என்பதை பின்பற்ற வேண்டியுள்ளதே!
//
மிக்க நன்றி ஐயா,
100 பேர் நிற்கும் வரிசையும் ஏறக்குறைய 95 நிற்கும் வரிசையும் இருந்தால் 95ல் நிற்பதற்கு விருப்பப் படுவோம். ஆனால் 4 பேர் நிற்கும் வரிசையில் 4 ஆவது ஆளாக இருக்கும் போது வரிசை பொறுமையாக நகர்ந்தால் நமக்கு பொறுமை போய்விடும். மனித மனம் விரைவாக செயல்பட விரும்புது தடை ஏற்படும் போது கோபமாக வெளிப்படுகிறது.
கருத்துக்கு மிக்க நன்றி !
// மணிகண்டன் said...
ஹ்ம்ம்.. இத்தனை நாட்களாக இழிச்சவாயத்தனம் என்ற சொல்லை இளிச்சவாயத்தனம் என்றே நினைத்து வந்திருக்கிறேன்.
எவ்வித சண்டையும் மன உளைச்சலை தந்து வந்தது. ஆனால் தமிழ் பதிவுகள் அவ்வாறான மனநிலையை சமன் செய்துவிட்டன. இப்பொழுது எல்லா வார்த்தைகளையும் மிக எளிதாக எடுத்துக்கொள்ளமுடிகிறது.
//
மணி
அண்மை (பதிவு) அரசியல் நிகழ்வுகளால் இழிவு இழிவு என்று இழிவை நினைத்து கொண்டிருந்தால் இளித்த வாய்க்கு இழித்தவாய் என்று தவறாக எழுதிவிட்டேன்.
இழித்தவாய் என்பதே சரியான சொல்
// அறிவிலி said...
கருத்து நல்லா இருக்கு.
ஆனா.. எனக்கு ஒரு சந்தேகம். இளிச்சவாய் / இழிச்சவாய் எது சரி?
இல்ல, ரெண்டு வார்த்தையுமே இருக்கா?
7:24 PM, April 22, 2010
//
இளிச்சவாய் தான் சரியான சொல் அண்ணே
சரிதான். சில நேரங்களில் இதற்காக இவ்வளவு கோபப்பட்டிருக்க வேண்டாமே என்று நம்மை நாமே தூற்றிக் கொள்ள நேருகிறது. அந்தப் பொறுமையும் நிதானமும் எப்போதும் இருந்தால் அதுதான் நல்வாழ்வு.
//பொறுமை என்பதை இளிச்சவாய்த்தனம் என்பதாக பலர் கற்பிதம் செய்தும் கொள்கிறார்கள். 'நெருப்பை நெருப்பினாலோ, வெறுப்பை வெறுப்பினாலோ நீக்க முடியாதென்பது' புத்தனின் வாக்கு. எந்த ஒரு நிகழ்விற்கும் நாம் காரணம் ஆகவிட்டாலும் அதை பெரிது படுத்தாமல் கடந்து செல்வது நம் எண்ணத்தில் தான் உள்ளது.//
சிலரது பின்னூட்டங்களைப் படிக்கும் போது பொறுமை என்பது சுத்தமாக உங்களுக்கு இல்லை என்பது உறுதி.பொறுமை உள்ள மனிதன் வாழ்வது அரிது.இதற்கும் பொறுமை மீறி பதில் அளிப்பீர்கள் என்பது எனக்குத் தெரியுமே!!!!!சும்மா!!!
///நெருப்பை நெருப்பினாலோ, வெறுப்பை வெறுப்பினாலோ நீக்க முடியாதென்பது' புத்தனின் வாக்கு.///
Buddha, the only real saint this world has ever seen...
அன்புடன்
ஆட்டையாம்பட்டி அம்பி
அருமையான சிந்தனை.
இந்த அவசர உலகுக்குத் தேவையான இடுகை.
பலசமயம் பொறுமை இழிச்சவாய்த் தனமாகத் தான் பார்க்கப்படுகிறது.
இது கற்றவர்களில் அதிகம் உள்ளது, கசப்பான உண்மை.
கருத்துரையிடுக