பின்பற்றுபவர்கள்

14 ஏப்ரல், 2010

அண்ணல் அம்பேத்கார் !

இந்திய அரசியல் தலைவர் ஒருவரை சாதியினால் புறக்கணிக்கும் கொடுமை இன்றும் அம்பேத்காருக்கே நடந்துவருகிறது. புத்தாண்டு சித்திரை ஒன்று தான் என்று உறுதிப்பாட்டுடன் பரப்பிவரும் நாளிதழ்கள் எதுவும் இன்று அம்பேத்கார் பிறந்த நாள் என்று தகவலுக்காகக் கூட செய்தி வெளி இடக்காணும்.

அம்பேத்கார் சொன்னவைகளில் மிக முக்கியமானது என்று இந்துத்துவ வாதிகள் எடுத்துச் சொல்வது 'பார்பனர்கள் வந்தேறிகள் இல்லை' என்று அம்பேத்கார் தனது ஆராய்ச்சியில் குறிப்பிட்டார் என்பதைத்தான். இதை வைத்து அவர் இந்து மதத்திற்கு ஆதரவானவர் என்றும் மறைமுகமாக வருணாசிரமத்தை ஆதரித்தார் என்றும் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். 'நான் ஒரு இந்துவாக சாகவிரும்பவில்லை' என்பதில் உறுதியாக இருந்து புத்தமதத்திற்கு மாறியவர் அம்பேத்கார். அம்பேத்கார் ஒரு ஆன்மிகவாதி பல்வேறு மதங்களை ஆராய்ந்தே பின்னர் அவர் அம்முடிவுக்கு வந்திருக்க வேண்டும், பெண்களின் நிலை, குல ஏற்றத்தாழ்வு போன்ற பல்வேறு சமூகவியல் காரணங்களை ஆராய்ந்து இறுதியில் புத்த மதத்திற்கு மாறி இருக்கிறார். பார்பனர்களில் இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் உண்டு, ஆனால் பார்பனர்கள் அனைவருமே வெளியில் இருந்து வந்தவர்கள் இல்லை என்பதை நானும் நம்புகிறேன். பல்வேறு உடல் நிறங்கள் தவிர்த்து இந்தியர்கள் அனைவருக்குமே பொதுவான தோற்றம் உண்டு, அந்த வகையில் பார்பனர்கள் வெளியில் இருந்து வரவில்லை என்பதை அம்பேத்காரும் நம்பினார். ஆனால் அவரது இந்து மதம் குறித்த பார்வையில் பார்பனர்களின் மேலாதிக்கத்தையும், அதற்கு ஆதரவு நல்கும் இந்து மதத்தையும் கடுமையாக எதிர்த்தார் என்பதே உண்மை.

அம்பேத்கார் வாழ்கை வரலாறுகளை பதிவு செய்த அம்பேத்கார் படம் சரியாக ஓடவில்லையாம். இது இயல்பான ஒன்று தான். அவதார புருஷர்கள் சாய்பாபா, ராகவேந்திரா, அண்ணமாச்சாரியா என்று படம் எடுத்தால் ஓடும், ஏனெனில் அவர்கள் அற்புதங்கள் செய்திருக்கிறார்கள் என்கிற பசைகளுடன் வருவதால் ஆன்மிக வியாபாரமாக படங்கள் ஓடிவிடுகின்றன. மற்றபடி தனி நபர் குறித்த வரலாறுகள் நடந்தவை என்பதால் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. பெரியார் படம் ஓரளவுக்கு ஓடியது. மற்றபடி தலைவர்களின் படங்கள் ஒரு ஆவணம் என்ற வகையில் தொகுப்பட்டிருப்பது வருங்காலத்தில் சுறுக்கமாக அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுக்கும் அவ்வளவு தான் அதன் பயன்பாடு, மேலும் தலைவர்களை நினைவு கூறத்தகுந்த காரணங்கள் இன்றைய சமூகத்தில் அவ்வளவாக இல்லை, அவர்கள் போராட்டத்தின் நோக்கம் நிறைவேறி இருக்கலாம், அல்லது அது இன்றைய தேவையாக இல்லாமலும் போய் இருக்கலாம். இன்றைய காலத்தில் விதவை மறுமணம் என்பது பொதுவான நிகழ்வுகள் ஆகிவிட்டபடியால், விதவை மறுமணத்திற்கு போராடுகிறவர் என்கிற லேபிளை அணிந்து கொண்டு ஒரு தலைவர் உருவாகி விட முடியாது. அதே போல் உடன்கட்டை மற்றும் இத்யாதிகள். சமூகமாற்றத்திற்கான தேவைகள் தற்போது எதுவும் இல்லாத சூழலில் ஏற்கனவே அம்மாற்றம் குறித்து போராடியவர்கள் நினைவு கூறப்படுவர் மற்றபடி எப்போதும் மக்கள் அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதெல்லாம் உண்மை இல்லை. இவை அண்மையில் மறைந்த காமராசர், எம்ஜிஆர் ஆகியோருக்கும் பொருந்தும். எனவே அம்பேத்கார் படம் ஓடவில்லை என்கிற கவலையும், தூற்றலும் கூட தேவையற்ற சிந்தனையும், குழப்பம் ஏற்படுத்துவதன் வெளிப்பாடுகள் மட்டுமே.

தமிழக தென்மாவட்டங்களில் அதிகமாக உடைபடுவது அம்பேத்கார் சிலைகளே. தலித்துகளுக்காக போராடிய ஒருவரை பிறப்பு வழி சாதிய அடிப்படையில் ஒரு தலித்தாகவே பார்த்து சிலையை உடைப்பதும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை தொடர்வதையே ஆவணப்படுத்துகிறது. ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்த சூத்திரன் மாணிக்க வாசகர் இருக்கலாமா? பகவானுக்கே அபச்சாரம் திருப்பணாழ்வார் தலித் என்பதற்காக பெருமாள் பக்கத்தில் வைப்பது கூட பெருமாளுக்கு தீட்டு என்பதாக மதாச்சாரியார்களால் தீட்சிதர் ஒருவரால் சிலையிலும் தீண்டாமை முன்மொழியப்பட்டதையெல்லாம் நினைக்கும் போது வருணாசிரம சாதிய அடுக்கை ஒப்புக் கொண்டு அதன் படி நாம அதில் ஒரு சாதி என்றும் நமக்கும் கீழே வேறொருவன் இருப்பதால் எனது சாதி உயர்ந்தது தான் என்று நினைக்கும் சுய நினைவு அற்றவர்களின் செயலை நாம் எப்படி விமர்சனம் செய்ய முடியும் ?

இன்றைக்கும் சரி என்றைக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு போராட அவர்களுக்குள்ளேயே தான் ஒருவர் வரவேண்டும் என்பது விதியாக இருக்கிறது. வேறு யாராவது போராடினால் அவரது தனிமனித செயலை அவருடைய சாதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தனது சாதிக்கான பெருமையாக மாற்றிக் கொள்ளும் இழிசெயல் இன்றும் நடப்பதால் ஒடுக்கப்பட்டவர்கள் பிறர் போராடுகிறோம் என்று முன்வருவதை ஏற்கிறார்களோ இல்லையோ நம்புவதில்லை. தலித்துகளுக்கான ஒதுக்கீடு சட்டமன்ற தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்தி அதை தனது கட்சிக்கான வாக்கு பலமாகவும், சட்டமன்ற பலமாகவும் தான் அனைத்து கட்சிகளும் ஆக்கிக் கொள்கின்றன. மற்றபடி தலித்துகளுக்காக பெரிதாக எதையும் கட்சிகள் செய்வது கிடையாது. இதனை எதிர்த்து தான் தலித் கட்சிகளை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிவருகின்றன.

பெரியாரை நாயக்கர் என்றும் பலிஜா நாயிடு உட்பிரிவு வரை குறிப்பிடும் சாதிவெறியர்கள் அம்பேத்காரின் சாதியைக் குறிப்பிட்டு எழுதாதது அவர்களுக்கு அம்பேத்காரின் மீதான மரியாதை என்பதாக இல்லை மாறாக வன்கொடுமை வழக்கு வரும் என்பது தான்.

89 கருத்துகள்:

= YoYo = சொன்னது…

\\இன்றைக்கும் சரி என்றைக்கும் ஒடுக்கப்பட்ட போராட அவர்களுக்குள்ளேயே தான் ஒருவர் வரவேண்டும் என்பது விதியாக இருக்கிறது. வேறு யாராவது போராடினால் அவரது தனிமனித செயலை தனது சாதிக்கான பெருமையாக மாற்றிக் கொள்ளும் இழிசெயல் இன்றும் நடப்பதால் ஒடுக்கப்பட்டவர்கள் பிறர் போராடுகிறோம் என்று முன்வருவதை ஏற்கிறார்களோ இல்லையோ நம்புவதில்லை\\

உண்மை அதுதான்

\\தலித்துகளுக்கான ஒதுக்கீடு சட்டமன்ற தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்தி அதை தனது கட்சிக்கான வாக்கு பலமாகவும், சட்டமன்ற பலமாகவும் தான் அனைத்து கட்சிகளும் ஆக்கிக் கொள்கின்றன.\\

ஓட்டு வங்கிகள் தான் இன்றைய அரசியலின்
ஆதார மூலமே,அதற்காக தலித் தொகுதி என்ற
ஒதுக்கீடு வேறு

பெயரில்லா சொன்னது…

கடைசிபாரா:

எழுதுபவர்கள் தமிழர்கள். அவர்களுக்கு மராட்டியத்தைப்பற்றித் தெரியாது.

அம்பேத்கர் தலித்து. ம்ஹர் என்ற செருப்புத்தைக்கும் தலித்தினததைச் சார்ந்தவர்.

இதை ஆரும் மறுக்கவில்லையே!

உங்கள் போயிண்ட் என்ன?

பெயரில்லா சொன்னது…

முதல்பாரா:

தமிழ்நாட்டு நாளிதழ்களைச்சொல்கிறீர்கள்?

தேசிய நாளிதழ்கள் எழிதின. இந்திய அரசு முழுப்பக்க விழா விளமபரங்களைக் கொடுத்தன்.

உங்கள் கருத்தின் படி, தமிழ் நாளிதழ்கள் என்ன செய்ய்வேண்டும்?

பார்ப்ன திலகம் பாரதியின் பிறந்தநாள் கூட ஆரும் சட்டைசெய்யாமல் வந்து போகிறது! இல்லையா?

பெரியாரும், அண்ணாவும், திராவிடக்கட்சிகளில் அக்காலத்தலைவர்க்ள் இன்னும் இருக்கின்றபடியால் விழா எடுக்கப்படுகிறார்கள். மற்றபடி, தெ ஆர் அச் டெச் அச் டோ.

பெயரில்லா சொன்னது…

இரண்டாவது பாரா:

பார்ப்பன்ர்கள் வந்தேறிகள். ஆராலும் ஆர் வ்ந்தேறிகள் என்று சொல்லமுடியாது.

எல்லாமே ஒரு கற்ப்னை. அப்படியே இருந்தாலும், அதனால் என்ன பிரச்னை?

தோண்டிப்பார்த்தால், நானும் வந்தேறியே. நீங்களும் இருப்பீர்கள்.

அதனாலென்ன?

பெயரில்லா சொன்னது…

அம்பேத்கர் ஒரு ஜாதித்தலைவராகத்தான் பிறமக்களால் நோக்கப்படுகிறார். தலித்துகளின் ஒரே ஹீரோ. எனவே, அவரின் பொதுசேவை மற்றவர்கள் நினைப்பில் இல்லா போய்விட்டது.

பாரதி தப்பினார். அதற்கு காரணம் உங்களைப்போன்றவர்கள். ரிவர்ஸ். அவர் பார்ப்பன்ருக்குச்சார்பாக எழுதியவை முலாம் பூசப்பட்டு மறைக்கப்பட்டு அவர் இன்று பொது சேவகராக போற்றப்படுகிறார்.

இது அம்பேத்கர் விடயத்தில் நடக்கவில்லை. ஆர் காரணம்?

பெயரில்லா சொன்னது…

திருப்பாணாழ்வார் = பெருமாள் - ஐய்ங்கார்கள்

இந்த் ஆங்கில் தேவையா?

பிராமணர்கள் எனச்சொல்லிக்கொண்டு இன்னும் பிராடு பண்ணுபவர்கள் ‘சிலர்கள்’ இருக்கின்றார்கள்.

அன்று ‘ப்லர்கள்’ இருந்தார்க்ள். என்பதால் இதுபோன்றவை நிகழ்ந்தன.

ஆனால் அக்காலத்திலேயே இவை கண்டிக்கப்பட்டன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க் நியாயமில்லை. படித்துவிட்டு, அல்லது கேட்டுவிட்டு வந்து பதிவு போடுங்கள்.

நம்மாழ்வாரையும் வருணத்துவேசம் பண்ணிணார்கள் என்பது தெரியுமா?

திருமங்கை ஆழ்வாரையும் சம்பந்தர் ஆட்கள் (ஐயர்கள்) வருணத்துவேசம் பண்ணினார்கள் தெரியுமா?

திருமழிசை ஆழ்வாரையும் பண்ணினார்கள் தெரியுமா?

ஆனால், அனைத்தும் எந்த நூற்றாண்டிலே?

அதைப்பற்றி இன்று எழுதுகிறீர்கள்! இன்று எப்படி இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தீர்களா? ஆழ்வார்கள் ஜாதித்துவேசம் பண்ணப்படுகிறார்களா?

நுனிப்புல் நன்றாக மேய்கிறீர்கள்?

பெயரில்லா சொன்னது…

அம்பேதகர் சிலை உடைப்பு தேவர்களால் மட்டுமே நடாத்தப்படுகிறது தென்மாவட்டங்களில். ஏன்?

அம்பேத்கரை, எப்படி இந்துத்தவா கொலைக்கும்பல், அனுமார படத்தைப்போட்டு, பஜ்ரங்பலி எனச்சொல்லிக்கொண்டு, கொலைவெறியாட்டம் போடுகிறதேர், அப்படி அம்பேதகரைப்பயன்படுத்துகிறார்கள் தென்மாவட்டத்லித்துகள் என்பது தேவர்களில் குற்றச்சாட்டு.

இப்படியே, தேவர்கள், மு.லி.தேவரைப்பயன்படுத்துகிறார்கள் என்பது மற்றவர் குற்றச்சாட்டு.

ஆக, கோவி கண்ணன், இரு தலைவர்களில் சிலையுடைப்பு என்பது ஒரு சிம்பாலிக் ஆக்ட்.

பலிக்குப்பலி.

பெயரில்லா சொன்னது…

இன்னும் நிறைய் பாக்கி,. நாளை சந்திப்போம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Jo Amalan Rayen Fernando


கடைசிபாரா:

எழுதுபவர்கள் தமிழர்கள். அவர்களுக்கு மராட்டியத்தைப்பற்றித் தெரியாது.

அம்பேத்கர் தலித்து. ம்ஹர் என்ற செருப்புத்தைக்கும் தலித்தினததைச் சார்ந்தவர்.

இதை ஆரும் மறுக்கவில்லையே!//

கிறித்துவ டோண்டு சார்,

உங்களுக்குத்தான் சாதிகள் மீது எவ்வளவு ஆர்வம், அந்த அளவுக்கு 'ஆய்'ந்து வைத்திருக்கிறீர்கள். ஒருவரை பறையன் என்று சொல்லிப்பாறேன் பல்லு உடையும் என்றால் சொல்லிப் பார்க்கிறேன் உடைகிறதா என்பது போல் வந்து மார் தட்டுகிறீர்கள், இந்த கேவலத்தில் நான் வருணாசிரமத்தை எதிர்கிறேன் என்று முழ நீளத்துக்கு ஒவ்வொருவர் பதிவிலும் சவடால் வேற.

கோவி.கண்ணன் சொன்னது…

// Jo Amalan Rayen Fernando said...

இரண்டாவது பாரா:

பார்ப்பன்ர்கள் வந்தேறிகள். ஆராலும் ஆர் வ்ந்தேறிகள் என்று சொல்லமுடியாது.

எல்லாமே ஒரு கற்ப்னை. அப்படியே இருந்தாலும், அதனால் என்ன பிரச்னை?

தோண்டிப்பார்த்தால், நானும் வந்தேறியே. நீங்களும் இருப்பீர்கள்.

அதனாலென்ன?//

வந்தேறிகளை நாட்டைவிட்டு துறத்தனும் என்று நான் சொல்லவில்லை என்னும் போது உங்கள் கேள்விகள் சிறுபிள்ளைத்தனமானது.

கோவி.கண்ணன் சொன்னது…

//Jo Amalan Rayen Fernando said...

அம்பேத்கர் ஒரு ஜாதித்தலைவராகத்தான் பிறமக்களால் நோக்கப்படுகிறார். தலித்துகளின் ஒரே ஹீரோ. எனவே, அவரின் பொதுசேவை மற்றவர்கள் நினைப்பில் இல்லா போய்விட்டது.

பாரதி தப்பினார். அதற்கு காரணம் உங்களைப்போன்றவர்கள். ரிவர்ஸ். அவர் பார்ப்பன்ருக்குச்சார்பாக எழுதியவை முலாம் பூசப்பட்டு மறைக்கப்பட்டு அவர் இன்று பொது சேவகராக போற்றப்படுகிறார்.

இது அம்பேத்கர் விடயத்தில் நடக்கவில்லை. ஆர் காரணம்?//

மதம் பறப்ப வந்த கால்டுவெல், ஐயோ போப் போன்றவர்கள் தமிழைக் கையில் எடுத்ததால் அவர்களை மிசனரிகள் என்று நாங்கள் பார்பதில்லை, இங்கேயே பிறந்த பாரதியை பார்பனராக மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்லத் துணியும் உங்களுக்கு இருக்கும் அளவுக்கு எனக்கு பார்பன வெறுப்பு கிடையாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//
நம்மாழ்வாரையும் வருணத்துவேசம் பண்ணிணார்கள் என்பது தெரியுமா?

திருமங்கை ஆழ்வாரையும் சம்பந்தர் ஆட்கள் (ஐயர்கள்) வருணத்துவேசம் பண்ணினார்கள் தெரியுமா?

திருமழிசை ஆழ்வாரையும் பண்ணினார்கள் தெரியுமா?

ஆனால், அனைத்தும் எந்த நூற்றாண்டிலே?

அதைப்பற்றி இன்று எழுதுகிறீர்கள்! இன்று எப்படி இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தீர்களா? ஆழ்வார்கள் ஜாதித்துவேசம் பண்ணப்படுகிறார்களா?

நுனிப்புல் நன்றாக மேய்கிறீர்கள்?//

எங்கோ ஒருசில வரிகளை படித்துவிட்டு எனக்கும் ஆழ்வார்கள் பற்றித் தெரியும் என்கிற முந்திரிக் கொட்டைத்தனம் தான் உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது. அதற்கு மேல் நீங்கள் ஆழ்வார்கள் பற்றி அகழ்வாராய்ச்சி செய்து இந்து மததிற்கு மாறப் போகிறீர்களா ? என்ன ? உங்களைப் பொருத்த அளவில் இந்துக்கள் காட்டுமிராண்டிகள், இந்து தெய்வங்கள் சாத்தான்கள் தானே.

பெயரில்லா சொன்னது…

//மதம் பறப்ப வந்த கால்டுவெல், ஐயோ போப் போன்றவர்கள் தமிழைக் கையில் எடுத்ததால் அவர்களை மிசனரிகள் என்று நாங்கள் பார்பதில்லை, இங்கேயே பிறந்த பாரதியை பார்பனராக மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்லத் துணியும் உங்களுக்கு இருக்கும் அளவுக்கு எனக்கு பார்பன வெறுப்பு கிடையாது.//

பார்ப்பன வெறுப்பு, விருப்பு எல்லாம் தேவையற்ற வாதங்கள். உண்மதான் ஆதாரம். You are covering up many facts.

கால்டுவெல்லும், போப்பும் மிசுனோரிகள்.

நான் தெளிவாக எழுதிவிட்டேன் டோண்டுவின் பதிலில், மதமும் மொழியும் என்ற கருத்து பற்றி. டோண்டுவைக்கேட்டேன்: ஆழ்வார்கள் இலக்கிய சேவை பண்ணினார்களா? அவர்களை நீங்கள் எப்படி படிக்கிறீர்கள என்று.

மிசுனோரிகள் தமிழ் கற்றது தங்கள் மத்த்தைப் பரப்பவே. தமிழ்மீது காதல் ஒரு incidental fall out. (இதை எப்படி தமிழில் பெயர்ப்பது?)

முதலும் கடைசியும் போப், கால்டுவெல், மிசுனோரிகள் என்பதே உண்மை.

அவர்கள் தமிழைக்கையில் எடுத்ததால் அவர்களை மிசுனோரிகள் என்று பார்ப்பதில்லை என்று சொல்லும் நீங்கள், இவன் சுவிசேசம் பண்ரான, அவன் பண்ரான், இந்து மதக்காழ்ப்புணர்ச்சி என இந்துத்வா வசனம் பேசுகிறீர்கள்.

வீரமாமுனிவர், கால்டுவெல், போப், நோபிலி தமிழை கையில் எடுத்தார்கள். இல்லயென்றால் இன்று தமிழகத்தில் கிருத்துவம் இருந்திருக்காது.

அவர்கள் சுவிசேசம் பண்ணினார்கள். இந்து மதத்தை இகழ்ந்தார்கள். கால்டுவெல் எழுதிய ஏதாவது சுவிசேச நூலைபபடித்திருந்தால், உங்கள் இந்துத்தவா வசனம் அவருக்குத்தான் போயிருக்கும்.

இந்துத்த்வாவினர் இருவரையும் வாங்கு வாங்குஎன்று வாங்குகிறார்கள்.

நீங்களோ இருகரையாளர்.

பெயரில்லா சொன்னது…

//உங்களைப் பொருத்த அளவில் இந்துக்கள் காட்டுமிராண்டிகள், இந்து தெய்வங்கள் சாத்தான்கள் தானே.//

இப்படி சொல்லியது கால்டுவெல்.

இந்துக்கள் காட்டுமிராண்டிகள்; இந்து தெய்வங்கள் சாத்தானக்ள்.


அப்படி சொன்னவரை இன்று நான் தமிழ் சேவையாளர்களாகப்பார்க்கிறேன் என சொல்லும் நீங்களே இரு கரையாளர் என்கிறேன்.

இரு கரையாளர் என்பதன் பொருள் hypocrite.

கோவி.கண்ணன் சொன்னது…

//Jo Amalan Rayen Fernando said...

//உங்களைப் பொருத்த அளவில் இந்துக்கள் காட்டுமிராண்டிகள், இந்து தெய்வங்கள் சாத்தான்கள் தானே.//

இப்படி சொல்லியது கால்டுவெல்.

இந்துக்கள் காட்டுமிராண்டிகள்; இந்து தெய்வங்கள் சாத்தானக்ள்.


அப்படி சொன்னவரை இன்று நான் தமிழ் சேவையாளர்களாகப்பார்க்கிறேன் என சொல்லும் நீங்களே இரு கரையாளர் என்கிறேன்.

இரு கரையாளர் என்பதன் பொருள் hypocrite.//

நான் மொழிக்கு கொடுக்கும் முதன்மைத்துவத்தை மதத்திற்கு கொடுக்கமாட்டேன். தமிழ் மொழிக்கு நல்லது செய்த பலர்களின் அவரும் ஒருவர். அவர் எந்த மதத்தை தூற்றினாலும் எனக்கு கவலை இல்லை. தமிழை பெரியார் தூற்றிய அளவை விட நல்லதும் செய்து இருக்கிறார். உங்களுக்கு வேண்டுமானால் மொழியை விட மதம் உயர்ந்ததாகத் தெரியலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவர்கள் சுவிசேசம் பண்ணினார்கள். இந்து மதத்தை இகழ்ந்தார்கள். கால்டுவெல் எழுதிய ஏதாவது சுவிசேச நூலைபபடித்திருந்தால், உங்கள் இந்துத்தவா வசனம் அவருக்குத்தான் போயிருக்கும்.//

கால்டுவெல் சுவேசம் போதனை செய்தாரா கிறித்துவம் போதனை செய்தாரா எனக்கு கவலை இல்லை, அவரால் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கிடைத்தது, தமிழின் தொன்மை உலகறிய செய்தது அவரது மற்ற பணிகளை விட அரும்பணி.

பெயரில்லா சொன்னது…

//உங்களுக்குத்தான் சாதிகள் மீது எவ்வளவு ஆர்வம், அந்த அளவுக்கு 'ஆய்'ந்து வைத்திருக்கிறீர்கள். ஒருவரை பறையன் என்று சொல்லிப்பாறேன் பல்லு உடையும் என்றால் சொல்லிப் பார்க்கிறேன் உடைகிறதா என்பது போல் வந்து மார் தட்டுகிறீர்கள், இந்த கேவலத்தில் நான் வருணாசிரமத்தை எதிர்கிறேன் என்று முழ நீளத்துக்கு ஒவ்வொருவர் பதிவிலும் சவடால் வேற.//

கோவி கண்ணன்!

நம் பார்வைதான் முக்கியம். நம் கண்ணில் தெரிபவை நமக்குப்பிடிக்கவில்லையென்றால், அது இல்லவேயில்லயென்று சாதிக்கமுடியாது.

சிலையுடைப்பு பற்றி நான் எழுதியது உண்மை. அதுவே தென்மாவட்ட இன்றைய வரலாறு.

எனக்கு பிடிக்கவில்லை. அவர்கள் தேவரை ஒரு மகாபுருசராகப்பார்க்கவேண்டும்; தேவர் ஜாதித்தலைவராக பார்க்கக்கூடாது. அதேபோல, இவர்க்ள் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக் தன் வாணாளைச்செலவிட்டார்; அவர் வெறும் ஜாதித்தலைவர் (மற்றவர்கள் டெபினிசன் படி உள்ளவர் அல்ல என்று பார்க்கவேண்டும் = என்றுதான் சமூக அக்கறையுள்ளவர்கள் நினைக்கிற்ரார்கள்.

ஆனால் அது idealism. நான் சொல்வது reality.

நீங்க்ள் ஏன் ஒரு உண்மை நிலவரத்தைப் பார்க்க மறுத்து, சொனன்வனை திட்டுகிறீர்கள்?

உண்மையின் மேல் வைக்கும் வாதம்தான் சரியாக வரும்.

Why dont you see how people behave ?
Why do attribute motive to persons like me who explain the bitter realities of our TN social life?

Why,Oh, why?

கோவி.கண்ணன் சொன்னது…

//எனக்கு பிடிக்கவில்லை. அவர்கள் தேவரை ஒரு மகாபுருசராகப்பார்க்கவேண்டும்; தேவர் ஜாதித்தலைவராக பார்க்கக்கூடாது. அதேபோல, இவர்க்ள் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக் தன் வாணாளைச்செலவிட்டார்; அவர் வெறும் ஜாதித்தலைவர் (மற்றவர்கள் டெபினிசன் படி உள்ளவர் அல்ல என்று பார்க்கவேண்டும் = என்றுதான் சமூக அக்கறையுள்ளவர்கள் நினைக்கிற்ரார்கள்.
//

கிறித்துவ டோண்டு சார்,

முத்துராமலிங்கத்தை யார் மகாபுருஷராகப் பார்க்க வேண்டும் தலித்துகளா ? அவ்வ்.....

முத்துராமலிங்கம் காமராசரைக் கூட சாதிப் பெயரைச் சொல்லித்தான் இகழுவாராம்.

உங்களைப் பொருத்த அளவில் சாதிகளின் மேலாண்மைக்கு பாடுபடுபவர்கள் மகாபுருஷர்களா ? நல்லவேளை மகாமனைவிகள் என்கிற பட்டம் எதுவும் இல்லை, இல்லை என்றால் சாதிமேலாண்மைக்கு ஆதரவு நல்கும் பெண்களுக்கு அந்தப்பட்டம் தரச் சொல்லுவீர்கள் போலும்.

உங்களுக்கு இந்த பதிவை பரிந்துரைக்கிறேன்

பெயரில்லா சொன்னது…

//கால்டுவெல் சுவேசம் போதனை செய்தாரா கிறித்துவம் போதனை செய்தாரா எனக்கு கவலை இல்லை, அவரால் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கிடைத்தது, தமிழின் தொன்மை உலகறிய செய்தது அவரது மற்ற பணிகளை விட அரும்பணி.
//

எனக்கு கவலை இல்லையென்று சொன்ன கண்ணன் ‘இந்து மதக்காழ்ப்புணர்ச்சி, இந்த் தெய்வங்கள் சாத்தானகள்’ என நான் சொன்னதாக எழுதியிருக்கிறார் இங்கே.

அதாவது, மதத்தின்மீது ஆழபற்று இருக்கிறது. இல்லாவிட்டால் இந்து மத்தத்தப்பற்றி ஏன் கவலை?

I find double standards in your comments.

கால்டுவெல் இந்துகடவுள்களை சாத்தான்கள் என்றார். அப்படி சொல்லித்தான் நாடார்களைக் கிறுத்தவர்களாக மாற்றினார்.

இஃது உண்மை. வரலாறு. படிக்கவும் :Demonlogy in Hindu religion கால்டுவெல்லில் கிருத்துவப்பிரச்சார நூல்.கால்டுவெல் இந்துமதத்தை ஆபாசமாக இழிவு செய்தார்.

ஆனால், கோவி கண்ணன் கால்டுவெல்லின் தமிழ்சேவையை மட்டும்தான் பார்ப்பராம்.

இடத்துக்கு, ஆளுக்கொரு பேச்சு.

இருகரையாளர் என்பதும் சரியில்லை. பல கரையாளர் இந்த பலே கண்ணன்!

பெயரில்லா சொன்னது…

தேவர் அப்படியே இருக்கட்டும். அதற்காக அவரை ஜாதித்தலவர் என்று பார்த்து தேவரகளோடு சண்டையிடுவது சரியா?

அவர்களும் அம்பேத்கரை ஜாதித்தலைவர் என்று உங்களோடு சண்டையிட்டால்?

போனவாண்டு லா காலேஜ் சண்டையின் அடிப்படையே இதுதானே?

கோவி.கண்ணன் சொன்னது…

//எனக்கு கவலை இல்லையென்று சொன்ன கண்ணன் ‘இந்து மதக்காழ்ப்புணர்ச்சி, இந்த் தெய்வங்கள் சாத்தானகள்’ என நான் சொன்னதாக எழுதியிருக்கிறார் இங்கே.

அதாவது, மதத்தின்மீது ஆழபற்று இருக்கிறது. இல்லாவிட்டால் இந்து மத்தத்தப்பற்றி ஏன் கவலை?

I find double standards in your comments.

கால்டுவெல் இந்துகடவுள்களை சாத்தான்கள் என்றார். அப்படி சொல்லித்தான் நாடார்களைக் கிறுத்தவர்களாக மாற்றினார்.

இஃது உண்மை. வரலாறு. படிக்கவும் :Demonlogy in Hindu religion கால்டுவெல்லில் கிருத்துவப்பிரச்சார நூல்.கால்டுவெல் இந்துமதத்தை ஆபாசமாக இழிவு செய்தார்.

ஆனால், கோவி கண்ணன் கால்டுவெல்லின் தமிழ்சேவையை மட்டும்தான் பார்ப்பராம்.

இடத்துக்கு, ஆளுக்கொரு பேச்சு.//

உங்களையும் உங்கள் இந்து காழ்புணர்வையும் நான் கால்டுவெல்லுடன் ஒப்பிடவில்லை. அவர் தமிழுக்கு எதோ செய்துவிட்டு தன் வேலையையும் பார்த்தார். உங்களையும் அவரையும் உங்களால் எப்படி ஒப்பிட்டு பார்க்க முடிகிறது.

சிறுபான்மையினர் என்று இஸ்லாமிய கிறித்துவகர்களை இந்துவெறியர்கள் தூற்றும் போது நான் அவர்களுக்கு எதிராகவும் தான் எழுதுகிறேன். ஒரு மதத்தை அந்த மதத்திற்கு தொடர்பு இல்லாதவர்கள் தூற்றுவது மதக்காழ்புணர்வு தான். மற்றபடி இந்து மதத்தில் இது நொள்ளை அது நொட்டை என்று சுட்டிக்காட்டும் நீங்கள், ஒருவேளை அவையெல்லாம் இல்லாத நிலை வரும் போது இந்து மததிற்கு திரும்பப் போறீர்களா என்ன ?

உங்களுடைய இந்துவெறுப்பும், கால்டுவெல்லின் வெறுப்பும் ஒன்று என்றாலும் கூட தமிழ் மொழிக்கு அவர் பணி ஆற்றி இருக்கிறார் என்பதான் அவரை வெறும் மதப் பரப்புரையாளராக மட்டுமே நான் பார்க்கவில்லை.

அருண்மொழிவர்மன் சொன்னது…

அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறை ஆழமாகப் படிக்கவேடும் என்றூ நிறைய நாளாக ஆழை உண்டு, அதை இன்னும் தூண்டி விட்டிருக்கின்றீர்கள்.

நன்றிகள் கோவி.

பெயரில்லா சொன்னது…

திரு கண்ணன் அவர்களே,எனது வலையில் தங்களது எதிர்ப்பை படித்தேன்.நாங்கள் மற்ற மதங்களை காட்டிலும் இந்துமதமே சிறந்தது என்பதற்காகவோ,மற்ற ஜாதியை விட பிராமணர்களே உயர்ந்தவர்கள் என்பதை பரைசாற்றவோ பிளாக் துவங்கவில்லை.ஜாதியில் உயர்வு எது?தாழ்வு எது?என்ற விமர்சனம் அதில் வராது.முற்றிலும் ஆன்மீகத்தை நம்புபவர்களுக்காக மட்டுமே எனது ப்ளாக்.உங்களைப்போன்ற ஒரு தனி மனிதனைக் கூட மதிக்கத்தெரியாத அவன் பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காக அவன் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் செயல் அனைத்தும் தவறு என்றும்.பார்பனன் என்றால் அவன் குடுமியை வெட்டு,பூணூலை பிடுங்கு ஏன் அவன் தனிமையில் அகப்பட்டால் ஜாதி என்ற காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவனை கொலை கூட செய்ய தயங்காத நாத்திகம் என்ற பெயரில் தனிமனிதனை கூட அனாகரீகமாக சாடும் தங்களைப்போன்றோர்களுக்கு நான் பிளாக் எழுதவில்லை.நல்ல விஷயம் எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்வோம்.அதில் சொந்தம் என்ன?இரவல் என்ன?

பெயரில்லா சொன்னது…

என்ன கண்ணன்,நீங்க ஒரு கற்பனையில் வாழரிங்க.நீங்கள் பள்ளியில் படித்த காலம்.யாரோ திரித்துவிட்டு எழுதிய வரலாற்று நூலை படித்துவிட்டு பிதற்றுகிறீர்கள்.தற்போதய தமிழகத்தில் இப்படித்தான் உள்ளதா?பிராமணர்கள் மற்றவரை அடிமைப்படுத்துகின்றனர்களா?தனி மனித ஒழுக்கமே உங்களுக்கு தெரியவில்லை.உங்கள் பேச்சிக்கே வருகிறேன்.பிராமணர்கள் மற்ற வகுப்பினரை அடிமைபடுத்தினர்,துன்புருத்தினர் என்கிறீர்கள்.அதற்காக அவர்களை பழிதீர்க தற்போது பிராமணரை வெறுப்பது,அவர்களை வார்த்தைகளால் கொல்வது,எவ்வளவு கேவலமாக பேசவேண்டுமோ அவ்வளவு கேவலமாக பேசுவது,என்று செய்தால் உங்களும் பிராமணர்களுக்கும் உள்ள வித்யாசம் என்ன?பழிதீர்க புரப்பட்டால் நானும் அதே குட்டையில் ஊரிய மட்டை என்பதை தானே காட்டுகிறது.நேற்று உன்னை ஒருவன் அடித்தால் அவனை சமயம் கிடைக்கும்போது நீயும் அடித்துவிடு,இது தான் நாத்திகத்தின் கொள்கையா?இதுதான் உங்கள் ஆசான் கற்றுத்தந்த பாடமா?,முதலில் மனிதனை மனிதன் மரியாதையுடன் பேசுங்கள்,எழுதுங்கள்.
என் பின்னூட்டத்தில் உள்ள உண்மையை ஏற்கும் மணபக்குவம் இல்லாமல் குதர்கமாக பதில் எழுதுவீர்கள் என்பது நான் அறிந்ததே,
நாய் வாலை நிமிர்த்தமுடியாது என்று கூறி முடிக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

//கிறித்துவ டோண்டு சார்,//

நான் முசுலீம் பெயரை வைத்து எழுதினால், முசுலீமாம்.

இந்து பெயரை வைத்து எழுதினால், இந்துவாம்.

கிருத்துவப்பெயரில் எழுதினால்,
கிருத்துவனாம்.

பெந்தோகோஸ்தோ ஒரு நீக்ரோ அடிமையால் அடிமைகளுக்கென்றே ஏற்படுத்தப்பட்ட கிருத்துவமத்த்தின் ஒரு பிரிவு என்றால், நான் பெந்தேகோஸ்தோவின் சுவிசேச ஊழியனாம்.

வருணக்கொள்கை கோடிக்கணக்கான் தலித்துகளை சமுதாயத்தில் வாழவிடாமல் ஒடுக்கியது என்றால் நான் இந்துமத துரோகி. இந்து மத்த்தின் காழ்ப்புணர்வாளன். எல்லாரையும் கிருத்துவராக்க வந்தவனாம்.

வருணக்கொள்கை ஒன்றே எனக்குப்பார்ப்பனீயத்தில் பிடிக்காது என்றால், நான் பார்ப்பன வெறுப்பாளனாம்.

நாடார்கள் சாதிக்கட்டமைப்பை உடைத்து முன்னேறிய்வர்கள் என்ற் வரலாற்று உண்மையைச்சொன்னால், நான் ‘அண்ணாச்சி’யாம்!

அடுக்கிக்கொண்டே போகலாம்.

கோவி கண்ணன் மிகக்குழப்பத்தில் இருக்கிறார்.

இராபர்டு கால்டுவெல்லில் அவர் போடும் இரட்டைவேடம் அசிங்கமாக இருக்கிறது. கால்டுவெல்லின் தமிழ்பற்று அன்னாரின் இந்துமத ஆபாசமானது அது பேய்களை வணங்கும் மதம் என்றப்பிரச்சார்ததை இல்லயென்று ஆக்கிவிடுமாம். இவருக்குத் தமிழே பிரதானமாம்.

அப்ப்டியென்றால் ஒரு தமிழ்ப்புலவர் கொள்ளையடிக்கலாம். தண்டனை கிடையாது. அவர்தான் தமிழுக்கு சேவை செய்திருக்கிறாரே!

ஆழ்வாரகளைப்பற்றி ஒன்றுமே தெரியாமல், இன்று திருப்பாணாழ்வாரை ஐயங்கார்கள் அவமானத்தப்படுத்துகிறார்கள் - அதாவது பெருமாள் பக்கத்தில் இருக்கவைக்க மறுப்பார்களாம். இவர் போய் பார்த்தாராம். திருப்பாணாழ்வாரை இவர் படித்தாரா? கோனார் நோட்சை வைத்துப்படித்து விடலாம் என நினைக்கிறாரா?

கோவி.கண்ணன் சொன்னது…

// venkatesa sivam & sivaramamurthy sivam said...

என்ன கண்ணன்,நீங்க ஒரு கற்பனையில் வாழரிங்க.நீங்கள் பள்ளியில் படித்த காலம்.யாரோ திரித்துவிட்டு எழுதிய வரலாற்று நூலை படித்துவிட்டு பிதற்றுகிறீர்கள்.தற்போதய தமிழகத்தில் இப்படித்தான் உள்ளதா?பிராமணர்கள் மற்றவரை அடிமைப்படுத்துகின்றனர்களா?தனி மனித ஒழுக்கமே உங்களுக்கு தெரியவில்லை.உங்கள் பேச்சிக்கே வருகிறேன்.பிராமணர்கள் மற்ற வகுப்பினரை அடிமைபடுத்தினர்,துன்புருத்தினர் என்கிறீர்கள்.//

பிராமணனா ? எங்கே இருக்கிறான் ? சோ இராமசாமி தேடுறாராம். கொஞ்சம் காட்டிக் கொடுங்க ஐயர்வாள்.

//அதற்காக அவர்களை பழிதீர்க தற்போது பிராமணரை வெறுப்பது,அவர்களை வார்த்தைகளால் கொல்வது,எவ்வளவு கேவலமாக பேசவேண்டுமோ அவ்வளவு கேவலமாக பேசுவது,என்று செய்தால் உங்களும் பிராமணர்களுக்கும் உள்ள வித்யாசம் என்ன?//

எனக்கு தெரிஞ்சு பிராமணன் என்று எவனுமே இல்லை, பின்னே நான் எங்கே பிராமண துவேசம் செய்தேன். பார்பன துவேசம் என்றால் கூட ஒப்புக் கொள்வேன்.

//பழிதீர்க புரப்பட்டால் நானும் அதே குட்டையில் ஊரிய மட்டை என்பதை தானே காட்டுகிறது.நேற்று உன்னை ஒருவன் அடித்தால் அவனை சமயம் கிடைக்கும்போது நீயும் அடித்துவிடு,இது தான் நாத்திகத்தின் கொள்கையா?இதுதான் உங்கள் ஆசான் கற்றுத்தந்த பாடமா?,முதலில் மனிதனை மனிதன் மரியாதையுடன் பேசுங்கள்,எழுதுங்கள்.
என் பின்னூட்டத்தில் உள்ள உண்மையை ஏற்கும் மணபக்குவம் இல்லாமல் குதர்கமாக பதில் எழுதுவீர்கள் என்பது நான் அறிந்ததே,
நாய் வாலை நிமிர்த்தமுடியாது என்று கூறி முடிக்கிறேன்.//

நாய்வாலை ஏன் சார் நிமிர்த்த முயற்சி செய்கிறீர்கள். பாவம் சார் நாய். அதையாவது விட்டு வையுங்கோ.

கோவி.கண்ணன் சொன்னது…

//என்ன கண்ணன்,நீங்க ஒரு கற்பனையில் வாழரிங்க.நீங்கள் பள்ளியில் படித்த காலம்.யாரோ திரித்துவிட்டு எழுதிய வரலாற்று நூலை படித்துவிட்டு பிதற்றுகிறீர்கள்.//

சூத்திரன், சண்டாளன் என்கிற சொற்கள், இவை எல்லாம் எவனோ திரித்ததா ? வேத சாக்கடையில் மிதக்கும் கழிவுகள் தானே இவை, இதில் திரிக்க பிதற்ற என்ன இருக்கு, உள்ளதைத்தான் எடுத்துச் சொல்கிறோம். மூக்கைப் பிடித்துக் கொண்டு. எந்த ஒரு சண்டாளனும், சூத்திரனும் கூட கருவரையில் தேவ நாத்தன் அடித்த அளவுக்கு கூத்து அடித்ததில்லையே சார். இதையெல்லாமா எவாளோ வந்து திரித்துட்டு போனாள்

கோவி.கண்ணன் சொன்னது…

//venkatesa sivam & sivaramamurthy sivam said...

திரு கண்ணன் அவர்களே,எனது வலையில் தங்களது எதிர்ப்பை படித்தேன்.நாங்கள் மற்ற மதங்களை காட்டிலும் இந்துமதமே சிறந்தது என்பதற்காகவோ,மற்ற ஜாதியை விட பிராமணர்களே உயர்ந்தவர்கள் என்பதை பரைசாற்றவோ பிளாக் துவங்கவில்லை.//

சூத்ராள் பூஜை செய்ய உரிமை லேது, ஆகமம் அதற்கு அலோவ் பண்ணல என்று சொல்றவா இல்லையா நீங்கள் ?

நாத்திகன் யார் ஆத்திகன் யார் என்று அருமையாகச் சொல்றேள், கோவில் சொத்துகளை உட்கார்ந்து திண்பவன், திருநீர் உள்ளங்கையில் தூக்கிப் போட்டு நன்னா பிடிக்கிறார்களா என்று பார்ப்பவன், தேவ நாதன், சதிவேதி இவாளெல்லாம் ஆத்திகனா நாத்திகனா சார் ?

//பூணூலை பிடுங்கு ஏன் அவன் தனிமையில் அகப்பட்டால் ஜாதி என்ற காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவனை கொலை கூட செய்ய தயங்காத நாத்திகம் என்ற பெயரில் தனிமனிதனை கூட அனாகரீகமாக சாடும் தங்களைப்போன்றோர்களுக்கு நான் பிளாக் எழுதவில்லை.//

எனக்கு தெரிந்து எவனும் பூணூல் அறுத்தானே ஒழிய கொலை செய்ய முயற்சிக்கக் கூட வில்லை. கொலைகள் எல்லாம் கோவிலுனுள் அம்பாள் சாட்சியாக அப்பு & கோவினரை ஏவிவிட்டு கொல்லப்பட்ட சங்கரராமனையாவது இதை எழுதும் போது நினைச்சுப்பார்த்தேளா ? நீங்க இவாளுக்கும் எழுதலை என்று சொல்லி இருக்கலாமே.

நான் எந்த ஒரு தனிமனிதனையும் அனாகரீகமாக அவன் அப்படி நடந்து கொள்ளாவிட்டால் சாடுவதில்லை. ரொம்ப கொழப்பத்தில் இருக்கேள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முற்றிலும் ஆன்மீகத்தை நம்புபவர்களுக்காக மட்டுமே எனது ப்ளாக்.//

பெருவாரியான பார்பனர்களின் ஆன்மிகம் என்பது வேதம், அதன் தொடர்சியில் வரும் வருணாசிரமம், இதை ஒப்புக்கொண்டவா தான் ஆன்மிக வாதின்னு நீங்க நம்புறேள்னு நான் நினைக்கிறேன். நல்லா இருங்கோ, பேஷா எழுதுங்கோ, நான் வேண்டான்னு சொல்லவில்லையே.

கோவி.கண்ணன் சொன்னது…

//வருணக்கொள்கை கோடிக்கணக்கான் தலித்துகளை சமுதாயத்தில் வாழவிடாமல் ஒடுக்கியது என்றால் நான் இந்துமத துரோகி. இந்து மத்த்தின் காழ்ப்புணர்வாளன். எல்லாரையும் கிருத்துவராக்க வந்தவனாம்.//

அமலன் சார், இது உங்களுக்கே ஓவராகத் தெரியவில்லையா ? ஒரு மத நம்பிக்கையாளன் அந்த மதத்தில் இருந்து கொண்டு அதை பிழைப்புக்காக பயன்படுத்திக் கொண்டு
தூற்றிக் கொண்டு இருந்தால் தான் அவன் துரோகி. உங்களை நான் அவ்வாறு சொல்லவில்லை, உங்கலை இந்து மதக் காழ்புணர்வாளர் என்றே குறிப்பிட்டேன். கிறித்துவத்தில் இருக்கும் தலித்துகளின் நிலையை மாற்ற நீங்கள் எந்த ஒரு அதரவும் வழங்காமல் இந்து மதம் பற்றி மட்டுமே நீங்கள் பேசுவதால் உங்களுக்கு தலித்துகளின் மீதோ வருணாசிரம கருமாசிரத்தின் மீதோ எந்த ஒரு வெறுப்பும் இல்லை. ஆனால் அதை சாக்கிட்டு இந்து வெறுப்பை மட்டுமே கக்குகிறீர்கள். இதை நான் 1008 ஆவது முறையாகச் சொல்லிவிட்டேன்


//வருணக்கொள்கை ஒன்றே எனக்குப்பார்ப்பனீயத்தில் பிடிக்காது என்றால், நான் பார்ப்பன வெறுப்பாளனாம்.//

கிறித்துவத்தில் இருக்கும் வருணக் கொள்கை உங்களுக்கு உவர்ப்பாக இல்லையே சார். அப்போ நீங்க செலக்டீவ் வருணாசிரம எதிர்பாளரா ?

//நாடார்கள் சாதிக்கட்டமைப்பை உடைத்து முன்னேறிய்வர்கள் என்ற் வரலாற்று உண்மையைச்சொன்னால், நான் ‘அண்ணாச்சி’யாம்!

அடுக்கிக்கொண்டே போகலாம்.//

அண்ணாச்சி என்று நான் சொல்லவில்லை, அதுவும் நீங்கள் உங்களை ஏற்கனவே ஆங்கிலோ இந்தியன் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள், ஆங்கிலோ இந்தியன் இந்திய வருணாசிரம சாதிப் பிரிவுக்குள் வருவார்களா ? சாதிகளை துறந்து விட்டார்களா எனக்கு தெரியாது. ஆனால் அப்படிச் சொல்லிக் கொள்வோர்களில் சிலர் நான் இந்த சாதிப் பிரிவைச் சேர்ந்தவன் என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன்

//கோவி கண்ணன் மிகக்குழப்பத்தில் இருக்கிறார்.

இராபர்டு கால்டுவெல்லில் அவர் போடும் இரட்டைவேடம் அசிங்கமாக இருக்கிறது. கால்டுவெல்லின் தமிழ்பற்று அன்னாரின் இந்துமத ஆபாசமானது அது பேய்களை வணங்கும் மதம் என்றப்பிரச்சார்ததை இல்லயென்று ஆக்கிவிடுமாம். இவருக்குத் தமிழே பிரதானமாம்.//

இராபர்ட் கால்டுவெல் மட்டுமே சொல்லவில்லை, அது கிறித்துவ பிரச்சாரம், அவர் ஒரு கிறித்துவர். அதனால் அவர் மட்டுமே சொன்னார் என்பதாக நான் கணக்கில் கொள்வது இல்லை. அவரும் சொன்னார் அம்புட்டு தான்.

//அப்ப்டியென்றால் ஒரு தமிழ்ப்புலவர் கொள்ளையடிக்கலாம். தண்டனை கிடையாது. அவர்தான் தமிழுக்கு சேவை செய்திருக்கிறாரே!//

தமிழுக்கும் பாடுபட்ட கிறித்துவ மிசனரிகள் கொள்ளையடிக்க வந்தார்கள் என்று நான் சொல்லவில்லை. அவ்வாறு நீங்கள் தான் கற்பனையாகச் சொல்கிறீர்கள்.

//ஆழ்வாரகளைப்பற்றி ஒன்றுமே தெரியாமல், இன்று திருப்பாணாழ்வாரை ஐயங்கார்கள் அவமானத்தப்படுத்துகிறார்கள் - அதாவது பெருமாள் பக்கத்தில் இருக்கவைக்க மறுப்பார்களாம். இவர் போய் பார்த்தாராம். //

எம்ஜிஆர் செத்துவிட்டார் என்று சொல்ல போய் பார்த்திருக்க வேண்டும் என்ற தேவை இருப்பது போல் தெரியவில்லை.

//திருப்பாணாழ்வாரை இவர் படித்தாரா? கோனார் நோட்சை வைத்துப்படித்து விடலாம் என நினைக்கிறாரா?//

திடிரென்று ஆழ்வார்கள் மீதும் பாசம் ஏன் ? தமிழ்பற்றா ? அவ்வ்வ்.

gvsivam சொன்னது…

அந்த மறுமொழியில் எழுதியது போலவே குதர்கமான பதில் அளித்துள்ளீர்கள்.நன்றி.நீங்கள் சுற்றி சுற்றி ஜாதி,மதம் இதைப்பற்றி தான் பேசுகிரீர்கள்.நான் உங்களைப்போன்ற ஜாதி வெறிபிடித்து மனிதத்தன்மை அற்றவர்களுக்காக பிளாக் எழுதவில்லை.அவரவர் முன்னோர்கள் சென்ற பாதையிலேயே செல்கின்ற கோயில்,பூஜை,பக்தி.வழிபாடு இவைகளை நம்புபவர்களுக்காகவே பிளாக் எழுதுகிறேன்.உங்கள் நோக்கம் சமுதாயத்தில் தவறு எங்கு நடந்தாலும் அதை கேட்பதாக இருந்தால் நான் பாராட்டுவேன்.ஆனால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் யாரோ சிலர் செய்யும் தவறுகளை மிகைப்படுத்தி அந்த இனமே அதை செய்வதாக கொச்சைப்படுத்தி எழுதுகிரீர்கள்.இதற்கு என்ன பெயர்?ஜாதிவெறி இல்லையா?தமிழகத்திலுள்ள ஒரு ஆலயத்தில் ஒரு அர்ச்சகர் தவறு செய்தான்.அதுவும் அது தனிமனித தவறே,சமுதாயம் அல்ல.அதற்காக எல்லா அர்ச்சகர்களையும் ஏன் கொச்சைபடுத்துகிறீர்?டாக்டர் பிரகாஷ் என்பவர் இதை விட கொடுமையாக தவறுசெய்தார்.தேவநாதனாவது விலைமாதுக்களிடமும் தன்விருப்பத்தை ஏற்ற பெண்களிடம்தான் பாலியல் உறவு கொண்டதாக ஊடகம் கூறுகிறது.அதில் அவன் செய்த தவறு புணிதமான இடத்தில் அசிங்கம் செய்ததே.ஆனால் டாக்டர் தொழில் என்பதும் இன்று மக்களால் கடவுளுக்கு சமமாக கருதப்படுவதே,அப்படி இருக்க தன்னிடம் மருத்துவம் பார்க்க வந்த பெண்களை அவன் என்ன செய்தான் என்பது நாம் அறிந்ததே.இதற்கு தாங்கள் என்ன விளக்கம் இட்டீர்கள் அப்போது?அல்லது இப்போது என்ன சாக்குபோக்கு சொல்கிறீர்கள்?ஒரு டாக்டர் தவறு செய்ததால் எல்லா டாக்டரும் தவறு செய்பவர் தான் என்று கூறவில்லையே நீங்களும் உங்கள் குதர்கவாதிகளும்.இது உங்கள் ஜாதிவெறிதானே?

பெயரில்லா சொன்னது…

அடடே கண்ணன் சார்,எனது மறுமொழிக்கு நான் சொன்னபடியே பதில் கொடுத்துள்ளீர்.நிற்க.எனது வலைப்பூவில் வெளிவரும் இடுகைகளை படிப்பதால் தங்களுக்கு ரத்தகொதிப்பு மற்றும் மண அழுத்த நோய் வர வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் எனது வலைப்பதிவை படிக்கவோ,மறுமொழி இடவோ முயற்ச்சிக்கவேண்டாம்.(உங்கள் நன்மைக்காகத்தான்)

கோவி.கண்ணன் சொன்னது…

// venkatesa sivam & sivaramamurthy sivam said...

அடடே கண்ணன் சார்,எனது மறுமொழிக்கு நான் சொன்னபடியே பதில் கொடுத்துள்ளீர்.நிற்க.எனது வலைப்பூவில் வெளிவரும் இடுகைகளை படிப்பதால் தங்களுக்கு ரத்தகொதிப்பு மற்றும் மண அழுத்த நோய் வர வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் எனது வலைப்பதிவை படிக்கவோ,மறுமொழி இடவோ முயற்ச்சிக்கவேண்டாம்.(உங்கள் நன்மைக்காகத்தான்)//

இந்த பண்டம் நெய்யினால் செய்யப்பட்டது......அல்ல

என்னும் விளம்பரம் போல் இருக்கு,

நீங்க உலகம் அமைதியாக இருக்க யாகம் செய்றிங்க, நான் அதுல குழப்பம் விளைவிக்கிறேன்.

கொடுமை ஐயரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு டாக்டர் தவறு செய்ததால் எல்லா டாக்டரும் தவறு செய்பவர் தான் என்று கூறவில்லையே நீங்களும் உங்கள் குதர்கவாதிகளும்.இது உங்கள் ஜாதிவெறிதானே?//

ஒரு டாக்டர் தவறு செய்தால் அதற்கு எல்லா டாக்டரும் டாக்க மாட்டாங்க.

ஆனால் ஒரு பாப்பான் தவறு செய்தால் எல்லோரும் செய்வதைத்தானே அவனும் செய்கிறான் என்று முதலில் சொல்பவர் பார்பனரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//அந்த மறுமொழியில் எழுதியது போலவே குதர்கமான பதில் அளித்துள்ளீர்கள்.நன்றி.நீங்கள் சுற்றி சுற்றி ஜாதி,மதம் இதைப்பற்றி தான் பேசுகிரீர்கள்.நான் உங்களைப்போன்ற ஜாதி வெறிபிடித்து மனிதத்தன்மை அற்றவர்களுக்காக பிளாக் எழுதவில்லை.அவரவர் முன்னோர்கள் சென்ற பாதையிலேயே செல்கின்ற கோயில்,பூஜை,பக்தி.வழிபாடு இவைகளை நம்புபவர்களுக்காகவே பிளாக் எழுதுகிறேன்.//

முன்னோர் சென்ற பாதை என்றால் என்ன ? இவாளெல்லாம் துஷ்டாள், சூத்ராள் இவளை தொட்டாலே பார்த்தாலே பாவம் என்று தள்ளி வைத்தா ? இதை நம்புறவாளுக்கு எழுதுறேளா ? நன்னா எழுதுங்கோ.

//உங்கள் நோக்கம் சமுதாயத்தில் தவறு எங்கு நடந்தாலும் அதை கேட்பதாக இருந்தால் நான் பாராட்டுவேன்.ஆனால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் யாரோ சிலர் செய்யும் தவறுகளை மிகைப்படுத்தி அந்த இனமே அதை செய்வதாக கொச்சைப்படுத்தி எழுதுகிரீர்கள்.இதற்கு என்ன பெயர்?//

எல்லா இடத்திலும் யாரோ தான் தவறு செய்றாள், ஆனால் அவாளையெல்லாம் அவாளைச் சேர்ந்தவா காப்பற்ற முயற்சிப்பது இல்லை. எவாளையோ தவறு செய்தவாளைத்தானே வையிறா என்று நினைக்க வேண்டியது தானே சார். நீங்க ஏன் ஒட்டு மொத்தமாக பொறுப்பேற்றுக்கொள்ள முயற்சிக்கிறேள்.

பார்பன சங்கம் அன்றும் இருந்தது இன்றும் இருக்கிறது, அன்னிக்கு பாரதியை தள்ளி வைத்தவதான் இன்னிக்கு அவரோட புகைப்படத்தை சங்கத்துல மாட்டி இவாளும் நம்மவா....இவாதான் சமத்துவத்திற்காக பாடுபட்டா என்று சொல்றாள், இதுல யாருக்கு பெருமை பாரதிக்கா ?

//ஜாதிவெறி இல்லையா?தமிழகத்திலுள்ள ஒரு ஆலயத்தில் ஒரு அர்ச்சகர் தவறு செய்தான்.அதுவும் அது தனிமனித தவறே,சமுதாயம் அல்ல.அதற்காக எல்லா அர்ச்சகர்களையும் ஏன் கொச்சைபடுத்துகிறீர்?டாக்டர் பிரகாஷ் என்பவர் இதை விட கொடுமையாக தவறுசெய்தார்.தேவநாதனாவது விலைமாதுக்களிடமும் தன்விருப்பத்தை ஏற்ற பெண்களிடம்தான் பாலியல் உறவு கொண்டதாக ஊடகம் கூறுகிறது.//

அடேங்கப்பா தேவநாதன் விலைமாதர்களிடம் மட்டும் தான் சில்மிசம் செய்தானா ? அல்லது அவன் சில்மிசம் செய்தவர்களெல்லாம் விலைமாதர்களா ? போய் வெளியே சொல்லிப்பாருங்க சார், அவாளெல்லாம் சேர்ந்து நன்னா....

//அதில் அவன் செய்த தவறு புணிதமான இடத்தில் அசிங்கம் செய்ததே.//

அவன் ஒருத்தன் தான் ஆதரத்துடன் சிக்கி இருக்கிறான். மத்தவா யாரும் செல்போன் எடுத்துட்டுப் போறதில்லைன்னு சொல்லலாம், அதில் பலர் தவறு செய்யாமலும் இருக்கலாம். தேவநாதன் மட்டும் தான் என்பதை நான் நம்புவதில்லை.

//ஒரு டாக்டர் தவறு செய்ததால் எல்லா டாக்டரும் தவறு செய்பவர் தான் என்று கூறவில்லையே நீங்களும் உங்கள் குதர்கவாதிகளும்.இது உங்கள் ஜாதிவெறிதானே? //

என்ன ஐயர்வாள் இப்படியெல்லாம் பேசுறேள், என் சாதி இதுன்னு எதாவது ஒரு கருமாசிரம சாதிப் பெயரைச் சொல்லி பெருமை தேடுகிறேனா ? பின்பு எப்படி சாதிவெறு வரும்.

நல்லது செய்பவன் நல்லவன் என்றால் சும்மா இருக்கிறவனை கெட்டவன் என்பேள் போலும். நன்னா இருங்கோ.

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

ஐ ஆம் என்சாய் த பின்னூட்டம்ஸ்.. :)

கோவி.கண்ணன் கலக்குங்க.. ! :)))

Kesavan சொன்னது…

//புத்தாண்டு சித்திரை ஒன்று தான் என்று உறுதிப்பாட்டுடன் பரப்பிவரும் நாளிதழ்கள் எதுவும் இன்று அம்பேத்கார் பிறந்த நாள் என்று தகவலுக்காகக் கூட செய்தி வெளி இடக்காணும்.//

ஆமாம் , புத்தாண்டை யார் மாற்றினார்களோ அவர்களே சித்திரை திங்கள் முதல் நாள் என்று தான் தொலைகாட்சியில் நிகழ்ச்சி ஒளிபரபினார்களே தவிர அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சி என்று யாரும் சொல்ல வில்லை.

Kesavan சொன்னது…

//புத்தாண்டு சித்திரை ஒன்று தான் என்று உறுதிப்பாட்டுடன் பரப்பிவரும் நாளிதழ்கள் எதுவும் இன்று அம்பேத்கார் பிறந்த நாள் என்று தகவலுக்காகக் கூட செய்தி வெளி இடக்காணும்.//

ஆமாம் , புத்தாண்டை யார் மாற்றினார்களோ அவர்களே சித்திரை திங்கள் முதல் நாள் என்று தான் தொலைகாட்சியில் நிகழ்ச்சி ஒளிபரபினார்களே தவிர அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சி என்று யாரும் சொல்ல வில்லை.

Kesavan சொன்னது…

//திருப்பணாழ்வார் தலித் என்பதற்காக பெருமாள் பக்கத்தில் வைப்பது கூட பெருமாளுக்கு தீட்டு //

ithu என்று , எங்கு நடந்தது என்று தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும். எந்த மதச்சாரியார் சொன்னார் என்பதையும் சொல்லுங்கள் .

Kesavan சொன்னது…

//தலித்துகளுக்கான ஒதுக்கீடு சட்டமன்ற தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்தி அதை தனது கட்சிக்கான வாக்கு பலமாகவும், சட்டமன்ற பலமாகவும் தான் அனைத்து கட்சிகளும் ஆக்கிக் கொள்கின்றன. மற்றபடி தலித்துகளுக்காக பெரிதாக எதையும் கட்சிகள் செய்வது கிடையாது.//

மிகவும் சரி

//இதனை எதிர்த்து தான் தலித் கட்சிகளை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிவருகின்றன. //

அனால் இவர்களும் பணம் சம்பாதிக்க தான் வருகிறார்களே தவிர அந்த மக்களுக்கு சேவை செய்ய அல்ல.

பெயரில்லா சொன்னது…

1.தாங்கள் நாத்திகரா?கடவுள் வழிபாட்டை எதிர்ப்பவரா?உருவ வழிபாட்டை எதிர்ப்பவரா?இந்து சயத்தை எதிர்ப்பவரா?அனைத்து கிருத்தவ,இசுலாமிய முதலிய அனைத்து சமயங்களையும் எதிர்ப்பவரா?பிராமண (அ)பார்ப்பன (அ) ஐயர் சமுதாயத்தை எதிர்ப்பவரா?,உயர் ஜாதியினரை எதிர்ப்பவரா?
2.உங்கள் சான்றிதழில் மதம்,இனம்,ஜாதி குறிப்பிடாமல் மதம் அற்றவன்,ஜாதி அற்றவன் என்றா உள்ளது?அல்லது இன்ன ஜாதி என்று போட்டுள்ளீர்களா?தங்கள் பிள்ளைகள்,குடும்ப நபர்களுக்கும் அப்படியே உள்ளதா?
3.தங்கள் சந்ததிகளுக்கு மத ரீதியான எந்த சடங்குகளையும் செய்யவில்லையா?

பெயரில்லா சொன்னது…

1.தாங்கள் நாத்திகரா?கடவுள் வழிபாட்டை எதிர்ப்பவரா?உருவ வழிபாட்டை எதிர்ப்பவரா?இந்து சயத்தை எதிர்ப்பவரா?அனைத்து கிருத்தவ,இசுலாமிய முதலிய அனைத்து சமயங்களையும் எதிர்ப்பவரா?பிராமண (அ)பார்ப்பன (அ) ஐயர் சமுதாயத்தை எதிர்ப்பவரா?,உயர் ஜாதியினரை எதிர்ப்பவரா?
2.உங்கள் சான்றிதழில் மதம்,இனம்,ஜாதி குறிப்பிடாமல் மதம் அற்றவன்,ஜாதி அற்றவன் என்றா உள்ளது?அல்லது இன்ன ஜாதி என்று போட்டுள்ளீர்களா?தங்கள் பிள்ளைகள்,குடும்ப நபர்களுக்கும் அப்படியே உள்ளதா?
3.தங்கள் சந்ததிகளுக்கு மத ரீதியான எந்த சடங்குகளையும் செய்யவில்லையா?

கோவி.கண்ணன் சொன்னது…

//1.தாங்கள் நாத்திகரா?//

சாதி/மதவெறியையும் போலி சாமியார்களையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்ப்பவனுக்கு
என்ன பெயர் ? நாத்திகனா ? இதை நீங்கள் எதிர்கிறீர்களா ஆதரிக்கிறீர்களா ?

//கடவுள் வழிபாட்டை எதிர்ப்பவரா?உருவ வழிபாட்டை எதிர்ப்பவரா?//

கோவிலுக்குள் / மசூதிக்குள் குண்டு வைப்பவன் கடவுள் வழிப்பாட்டை எதிர்க்கிறானா ஆதரிக்கிறானா ? கோவிலுக்குள் / மசூதிக்குள் குண்டு வைப்பவன் உருவ வழிபாட்டை எதிர்க்கிறானா ஆதரிக்கிறானா ?

//இந்து சயத்தை எதிர்ப்பவரா?அனைத்து கிருத்தவ,இசுலாமிய முதலிய அனைத்து சமயங்களையும் எதிர்ப்பவரா?//

அனைத்து சமய சாக்கடைகளும் என்னுள் கலக்கின்றன என்று பகவான் கிருஷ்ணன் கீதையில் சொல்கிறார். :) நான் கிருஷ்ணன் இல்லை. கண்ணன் தான், சாக்கடைகள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றே சொல்கிறேன்

//பிராமண (அ)பார்ப்பன (அ) ஐயர் சமுதாயத்தை எதிர்ப்பவரா?,உயர் ஜாதியினரை எதிர்ப்பவரா?//


ஏற்கனவே பிராமணன் என்பவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டேன் பதிலே இல்லை. எனக்கு தெரிந்து பிராமணன் எவனுமே இல்லை, இல்லாத பிராமணனை நான் ஏன் எதிர்க்கப் போகிறேன். பார்பன எதிர்ப்பு ? எனக்கு குறிப்பிட தக்க அளவில் பார்பன நண்பர்கள் வலைப்பதிவிலும் கூட உண்டு. எனவே அனைத்து பார்பன எதிர்ப்பு செய்வது போல் தெரியவில்லை. உயர் சாதின்னு எந்த சாதியும் கிடையாது. உயர் சாதி என்றால் என்ன ? 8 உயரம் உள்ள மனிதர்கள் இருக்கும் சாதியா ? எந்த சாதிக்காரனும் 6 அடிக்கும் மேல் வரல, ஒருத்தன் இரண்டு பேர் வளர்ந்திருப்பானுங்க, அதுவும் எல்லா சாதியிலும் அந்த உயரம் உண்டு.

கோவி.கண்ணன் சொன்னது…

//2.உங்கள் சான்றிதழில் மதம்,இனம்,ஜாதி குறிப்பிடாமல் மதம் அற்றவன்,ஜாதி அற்றவன் என்றா உள்ளது?அல்லது இன்ன ஜாதி என்று போட்டுள்ளீர்களா?தங்கள் பிள்ளைகள்,குடும்ப நபர்களுக்கும் அப்படியே உள்ளதா?//

நாயை நாம் நாய் என்று அழைக்கிறோம் என்பதற்காக நாயும் (ஒருவேளை) பேசினால் தன்னை நாய் என்றே அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டுமா ?

சாதி என்பது நமக்கு தெரியாமல் நம்மீது விழுந்த ஒரு அழுக்கு, முடிந்த அளவில் நாம அழுக்கையும்
அகற்றிக் கொண்டு இருப்பது தான் நாகரீகம். உடலினுள் கூட அழுக்கு உண்டு, அதுவும் மறைவாக இருப்பது தான் நமக்கும் பிறருக்கும் நன்மையாக இருக்கும்.

//3.தங்கள் சந்ததிகளுக்கு மத ரீதியான எந்த சடங்குகளையும் செய்யவில்லையா?
//

என்னால் பார்பனர்களின் வருமானம் கெட்டுப் போவது போல் தெரியவில்லை. மதரீதியான சடங்கு என்றால் என்ன ? எங்கவா கோவிலில் ஆடுவெட்டுவா, அதையும் கூடாது மதுரைவீரன், முனியாண்டி, பெரியாச்சி, அங்காளம்மா எதுவாக இருந்தாலும் சாமி சக்கரை பொங்கல் மட்டும் தான் சாப்பிடும்ன், தூக்கிட்டு சுடுகாட்டுக்கு போய் வெட்டுங்கோ என்கிறேள். பிறகு நான் எதைத்தான் மதரீதியான சடங்கு என்று சொல்வது ? ஆடுவெட்டுவது மதரீதியான சடங்கா இல்லையா ? சொல்லுங்கோ ஐயரே.

வால்பையன் சொன்னது…

மிஸ் பண்ணிட்டேனே!

அடுத்து வரட்டும்!

குமரன் (Kumaran) சொன்னது…

////திருப்பணாழ்வார் தலித் என்பதற்காக பெருமாள் பக்கத்தில் வைப்பது கூட பெருமாளுக்கு தீட்டு //

ithu என்று , எங்கு நடந்தது என்று தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும். எந்த மதச்சாரியார் சொன்னார் என்பதையும் சொல்லுங்கள் .//

இதைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று வந்தேன். வந்தால் பின்னூட்டச் சண்டை பலமாக இருக்கிறது. கேட்கலாமா வேண்டாமா என்று தயங்கிய போது கேசவன் ஏற்கனவே கேட்டுள்ளதைக் காண்கிறேன். அதனால் சரி நாமும் கேட்கலாம் என்று கேட்கிறேன். தெரிந்து கொள்ளக் கேட்கிறேன். சொல்லுங்கள் கண்ணன்.

Kesavan சொன்னது…

//நான் மொழிக்கு கொடுக்கும் முதன்மைத்துவத்தை மதத்திற்கு கொடுக்கமாட்டேன். தமிழ் மொழிக்கு நல்லது செய்த பலர்களின் அவரும் ஒருவர். அவர் எந்த மதத்தை தூற்றினாலும் எனக்கு கவலை இல்லை. தமிழை பெரியார் தூற்றிய அளவை விட நல்லதும் செய்து இருக்கிறார். உங்களுக்கு வேண்டுமானால் மொழியை விட மதம் உயர்ந்ததாகத் தெரியலாம். //

//கால்டுவெல் சுவேசம் போதனை செய்தாரா கிறித்துவம் போதனை செய்தாரா எனக்கு கவலை இல்லை, அவரால் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கிடைத்தது, தமிழின் தொன்மை உலகறிய செய்தது அவரது மற்ற பணிகளை விட அரும்பணி//

இது எப்படி இருக்கிறது என்றால் ஒருவன் தகாத வார்த்தைகளை சொல்லி நம் மொழியில் நம்மை திட்டும் பொது , ஆஹா என்ன அழகாக நம் மொழியில் திட்டுகிறான் என்று பாராட்டுவது போல் இருக்கிறது . நீ என்னவேண்டுமானாலும் என்னை திட்டி கொள் , அதை பற்றி எனக்கு கவலை இல்லை , அனால் நீ என் மொழியில் திட்டும் பொது ஆஹா ஒரு புது இலக்கணம் கிடைக்கிறதே என்று இருக்கிறது .

கோவி.கண்ணன் சொன்னது…

//இது எப்படி இருக்கிறது என்றால் ஒருவன் தகாத வார்த்தைகளை சொல்லி நம் மொழியில் நம்மை திட்டும் பொது , ஆஹா என்ன அழகாக நம் மொழியில் திட்டுகிறான் என்று பாராட்டுவது போல் இருக்கிறது . நீ என்னவேண்டுமானாலும் என்னை திட்டி கொள் , அதை பற்றி எனக்கு கவலை இல்லை , அனால் நீ என் மொழியில் திட்டும் பொது ஆஹா ஒரு புது இலக்கணம் கிடைக்கிறதே என்று இருக்கிறது .//

பட்டுக்கோட்டைக்கு வழி சொன்னவனிடம் சென்று உனக்கு கொட்டைப் பாக்கு எங்கே விற்கிறான் என்றும் தெரியும் என்று வம்படியாக கேட்பது போல் இருக்கு. கற்பனைகளுக்கு பதில் சொல்ல முடியாது. நாளைக்கு நீ கூட என்னை அசிங்கமாக திட்டுவாய் என்று என்னால் கற்பனை செய்ய முடியாது கேசவ்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இதைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று வந்தேன். வந்தால் பின்னூட்டச் சண்டை பலமாக இருக்கிறது. கேட்கலாமா வேண்டாமா என்று தயங்கிய போது கேசவன் ஏற்கனவே கேட்டுள்ளதைக் காண்கிறேன். அதனால் சரி நாமும் கேட்கலாம் என்று கேட்கிறேன். தெரிந்து கொள்ளக் கேட்கிறேன். சொல்லுங்கள் கண்ணன்.//

அக்னிகோத்ரம் தாத்தாச்சாரியார் அவர் நாத்திகர் இல்லை, வைதீக சமயம் சார்ந்தவர், 100 வயதை ஒட்டி மறைந்தவர், சாகுமுன் பொய் சொல்லிவிட்டு செத்துப் போக பெரிய காரணம் எதுவும் இல்லை. அவர் நக்கீரினில் தொடராக எழுதிய இந்து மதம் எங்கே போகிறது ? என்று எழுதிய தொடரில் இருந்த தகவல்களில் ஒரு பகுதியில் பெருமாள் பக்கத்தில் தலித் ஆழ்வார் இருக்கக் கூடாது...... என்ற சர்சை குறித்து எழுதி இருந்தார்.

நான் இந்த தகவலை இந்த ஒரு பதிவில் மட்டுமே எழுதவில்லை, 4 - 5 பதிவில் ஏற்கனவே இது பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறேன்.

திருபானாழ்வார் கதையே அவரை ஒதுங்கிப் போகச் சொல்லியதில் இருந்து தானே தொடங்குது.

Kesavan சொன்னது…

//அக்னிகோத்ரம் தாத்தாச்சாரியார் அவர் நாத்திகர் இல்லை, வைதீக சமயம் சார்ந்தவர், 100 வயதை ஒட்டி மறைந்தவர், சாகுமுன் பொய் சொல்லிவிட்டு செத்துப் போக பெரிய காரணம் எதுவும் இல்லை. அவர் நக்கீரினில் தொடராக எழுதிய இந்து மதம் எங்கே போகிறது ? என்று எழுதிய தொடரில் இருந்த தகவல்களில் ஒரு பகுதியில் பெருமாள் பக்கத்தில் தலித் ஆழ்வார் இருக்கக் கூடாது...... என்ற சர்சை குறித்து எழுதி இருந்தார்.//

//திருபானாழ்வார் கதையே அவரை ஒதுங்கிப் போகச் சொல்லியதில் இருந்து தானே தொடங்குது. //

திருபானாழ்வர் கதை அவரை ஒதுங்கி போக சொன்னதில் தான் தொடங்குகிறது என்பதை நான் மறுக்க வில்லை . நீங்கள் சொன்ன அக்னிகோத்ரம் தாத்தாச்சர் ஒரு மடாதிபதி அல்ல . நீங்கள் சொல்லும் பத்திரிகை ஒரு இந்து மத எதிர்ப்பு பத்திரிகை . அதில் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள் . அதை பற்றி இங்கு தேவை இல்லை . ஒரு வேலை அவர் அப்படி சொல்லி இருந்தால்!!! அது அவருடைய தனி பட்ட கருத்து தானே ஒழிய பொதுவான கருத்து அல்ல . எல்லா பெருமாள் கோவில்களிலும் திருபானழ்வர் இருக்கிறார் . அதுவும் இல்லாமல் அவர் எழுதிய அமலனாதிபிரான் என்று தொடங்கும் பாடல்களை தினமும் சொல்கிறார்கள் . இது எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை .

Kesavan சொன்னது…

//பட்டுக்கோட்டைக்கு வழி சொன்னவனிடம் சென்று உனக்கு கொட்டைப் பாக்கு எங்கே விற்கிறான் என்றும் தெரியும் என்று வம்படியாக கேட்பது போல் இருக்கு. கற்பனைகளுக்கு பதில் சொல்ல முடியாது. நாளைக்கு நீ கூட என்னை அசிங்கமாக திட்டுவாய் என்று என்னால் கற்பனை செய்ய முடியாது கேசவ்//

கற்பனைக்கு எல்லாம் பதில் சொல்ல தேவை இல்லை திரு கோவியாரே. ஆனால்வேறு ஒரு மதத்தை சேர்ந்த கால்டுவெல் அவருடைய மதத்தை நிலை நிறுத்துவதற்காக இந்து மதத்தை பற்றி கேவலமாக பேசும் பொது அவன் பேசும் பேச்சை விடுத்தது அவன் நம் மொழியில் பேசும் பொது ஒரு புதிய இலக்கணம் கிடைகிறது என்கிறீர்களே அதை தான் கேட்கிறேன் .

Kesavan சொன்னது…

//அனைத்து சமய சாக்கடைகளும் என்னுள் கலக்கின்றன என்று பகவான் கிருஷ்ணன் கீதையில் சொல்கிறார். :) நான் கிருஷ்ணன் இல்லை. கண்ணன் தான், சாக்கடைகள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றே சொல்கிறேன் //

தூய்மைபட வேண்டும் என்று சொல்லி விட்டு மூச்சுக்கு மூச்சு பார்பனரை பற்றி எதிர் கருத்து கூறி வருவது அவ்வளவாக சரி இல்லை. இன்றைய நிலையில் அனைத்து மக்களுடைய மூட நம்பிகைகளை விட்டு விட்டு திரும்ப திரும்ப பார்பனர்களை பற்றி தான் எழுதுகிறீர்கள் . இது தூய்மைபடுத்த அல்ல. இது குட்டையை கலக்குதல் ஆகும் . எதுவுமே இன்று என்ன நடக்கிறது என்று பார்க்காமல் அன்னைக்கு பண்ணியே அதனால இப்ப நான் பேசறேன் சொல்றது பார்பன எதிர்ப்பு தானே தவிர வேறு என்னன்னு சொல்றது .

குமரன் (Kumaran) சொன்னது…

கண்ணன்,

நீங்கள் சொல்லும் நக்கீரன் தொடரான 'இந்து மதம் எங்கே போகிறது?' என்ற தொடரை இணையத்தில் தான் நான் படித்தேன். அந்த வலைப்பதிவிற்குச் சென்று திருப்பாணாழ்வார் என்று தேடியதில் நீங்கள் நாலைந்து முறை சொன்ன மடாதிபதி திருப்பாணாழ்வாரைப் பெருமாள் பக்கத்தில் வைக்க விடாத கதையைப் பார்க்க இயலவில்லை. தேடியதில் திருப்பாணாழ்வாரைப் பற்றிய செய்தியைக் கூறும் பகுதி இந்தப் பகுதி மட்டுமே என்று பக்கத்தேடல் சொல்கிறது. இந்தப் பகுதியில் திருப்பாணாழ்வாரின் வரலாறு தான் சொல்லப்படுகிறதே ஒழிய இக்காலத்தில் அவரைப் பெருமாள் பக்கத்தில் இருக்க விடுவதில்லை என்று சொல்லப்படவில்லை. நீங்கள் நாலைந்து முறை சொல்லிய இந்தக் கதையை தாத்தாச்சாரியார் இந்தத் தொடரின் எந்த பகுதியில் சொன்னார் என்று தயைசெய்து காட்டுங்கள்.

http://ariyaamai.blogspot.com/search/label/Article%20From%20Nakkeeran%20%28Parts%201%20-%20100%29?updated-max=2009-03-12T05%3A01%3A00-07%3A00&max-results=20

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
கண்ணன்,

நீங்கள் சொல்லும் நக்கீரன் தொடரான 'இந்து மதம் எங்கே போகிறது?' என்ற தொடரை இணையத்தில் தான் நான் படித்தேன். அந்த வலைப்பதிவிற்குச் சென்று திருப்பாணாழ்வார் என்று தேடியதில் நீங்கள் நாலைந்து முறை சொன்ன மடாதிபதி திருப்பாணாழ்வாரைப் பெருமாள் பக்கத்தில் வைக்க விடாத கதையைப் பார்க்க இயலவில்லை.
//

எனக்கு ஒரு விசயம் புரியல, வைணவத்தில் இது போல் தீண்டாமை கொடுமையே நடக்காது என்று கண்ணபிரான் இரவி சங்கர் சொல்லிவருவதைத்தான் தாங்களும் நம்புகிறீர்களா ? அறியேன். இருந்தாலும் இங்கே நான் குறிப்பிட்டு இருந்தவை நடந்திருக்குமா ? என்கிற ஆவலில் கேட்கிறீர்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் அப்படித்தான் நானாகவே நினைத்துக் கொள்கிறேன்.

*****

தாத்தாச்சாரியாரின் தொடரைப் படித்து ஒரு 6 ஆண்டுகளாக ஆகி இருக்கும். நான் குறிப்பிட்ட சம்பவம் படித்தவுடன் மனதில் நின்றதால் அது பற்றி அவ்வப்போது அதைக் குறிப்பிடுகிறேன். என்ன படித்தேன் என்று வரிக்கு வரி நினைவு வரவில்லை என்றாலும் பெருமாள் - அடியார் சிலை - சூத்திரன் - தீட்டு என அலங்கல் வடிவில் தான் நினைவுக்கு இருக்கிறது.(தளபோட்சுத்ரி)

இருந்தாலும் நீங்கள் இவ்வளவு ஆவலாக இருப்பதால் நான் தேடி எடுத்துப் படித்துப் பார்த்தேன். பெருமாளுக்கு பதிலாக ஆண்டாள், திருப்பணாழ்வார் பெயருக்கு பதில் மாணிக்கவாசகர் என்று இருந்தது.

******
ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்த சூத்திரன் மாணிக்க வாசகர் இருக்கலாமா?

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

மன்னார்குடி வந்தோம். பொது வீதியில் மேடை போட்டோம். இந்தப் பக்கம் ஆண்டாள். பக்கத்தில் மாணிக்கவாசகர். வைணவமும், சைவமும் பக்கத்துப் பக்கத்தில் இருப்பதை பார்த்து சிலரது கண்கள் அனல் கக்கின. அந்த அனலை அடக்க முடியாமல் என்னிடம் ஓடோடி வந்தார் மன்னார்குடி ராஜகோபால் தீட்சிதர்.

'ஸ்வாமி.. என்ன இப்படி பண்ணிட்டேள்?" என மொட்டையாக ஆரம்பித்தார்.

'எதை எப்படி பண்ணிட்டேன் விவரமா சொல்லுங்கோ". என நான் பதில் உரைத்தேன் 'தெரிஞ்சுண்டே கேக்கறீளே?" மறுபடியும் மொட்டை மொழிகளையே பேசினார் ராஜகோபால் தீட்சிதர்.

"தீட்சிதரே.. என்ன சொல்றீர்? நீர் கேக்கறது எனக்கு முன்கூட்டியே தெரியறதுக்கு நான் என்ன பகவானா?”

மறுபடியும் உரைத்தேன்.

தீட்சிதர் அப்போதுதான் தன் உள்ளக் கிடக்கையை உடைத்தார்.

"பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே... ஆண்டாள் யாரு? மாணிக்க வாசகர் யாரு? ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்த சூத்திரன் மாணிக்க வாசகர் இருக்கலாமா? இது பகவானுக்கே பாவம் பண்ற மாதிரி ஆகாதா? அந்த சங்கராச்சாரி சொன்னா நீர் கேக்கணுமா?”

http://ariyaamai.blogspot.com/2009/03/21-35.html

குமரன் (Kumaran) சொன்னது…

உங்கள் நினைவிலிருந்து எழுதுவதால் இத்தவறு நிகழ்ந்தது என்று சொல்கிறீர்கள். ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். மறதி என்பது எல்லோருக்கும் உள்ளது தானே. இனி மேல் நினைவு வைத்திருந்து தாத்தச்சாரியார் சொன்னது பெருமாள் பக்கத்தில் திருப்பாணாழ்வாரை ஏதோ ஒரு மடாதிபதி வைக்கக்கூடாது என்று சொல்லவில்லை; ஆண்டாள் பக்கத்தில் மாணிக்கவாசகரை வைக்கக்கூடாது என்று ஏதோ ஒரு தீட்சிதர் சொன்னார் என்று சொல்லி வாருங்கள். அதுவும் உண்மையாக நடந்தது என்று சொல்ல இயலாது; தாத்தாச்சாரியார் அப்படி சொன்னார்; அவர் வயதான காலத்தில் பொய் சொல்லத் தேவையில்லை; அவர் சொன்னதை நான் சொல்கிறேன் என்று சொல்லலாம்.

தாத்தாச்சாரியார் சொன்னதைப் பார்த்தாலும் அவர் ஏதோ நினைவில் இருந்து சொல்லியது போல் தான் இருக்கிறது; இது உண்மையிலேயே நடந்ததா என்ற ஐயம் எனக்கு உண்டு.

ஏன் என்று சொல்கிறேன் கேளுங்கள். தாத்தாச்சாரியார் சொன்னது போல் மாணிக்கவாசகர் சூத்திரர் என்று கருதப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் இல்லை. அவர் அந்தணர் வகுப்பைச் சேர்ந்தவர். இதோ தரவு: http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=4

இத்தரவினை நம்பவில்லை என்றால் மாணிக்கவாசகரின் குலத்தைப் பற்றிச் சொல்லும் வேறு எந்த தரவினையும் நீங்கள் தேடிப் பார்க்கலாம்.

ஆண்டாளும் அந்தண குலத்தவர் என்று எண்ணப்படுபவர்; மாணிக்கவாசகரும் அப்படியே. அப்படி இருக்க தாத்தாச்சாரியார் சொன்னது தீட்சிதர் மேல் சொல்லப்பட்ட அவதூறாகத் தான் தோன்றுகிறது. அத்தொடரில் தாத்தாச்சாரியார் சொன்னதை எல்லாம் விசாரித்து அவரிடமே மேற்கொண்டு கேட்டு சில நூல்கள் இத்தொடர் வந்த பின்னர் வந்ததாம்; அவை கிடைத்தால் படித்துப் பார்க்க வேண்டும்.

இவையெல்லாம் அக்காலத்தில் தீண்டாமை இருந்ததே இல்லை என்றோ இன்றைக்கு இல்லை என்றோ காட்டவில்லை. அப்படி நானும் எண்ணவில்லை. வைணவத்திலும் தீண்டாமை இருக்கிறது. இரவிசங்கரும் வைணவத்தில் தீண்டாமை இல்லை என்று சொல்லவில்லை. அவர் சொல்வதெல்லாம் வைணவத்தில் எல்லாச் சாதியினரும் அருச்சகராகலாம்; தமிழுக்கு முதலிடம் ஆலயங்களில் என்ற உண்மைகளைத் தான். அதனை 'நம்ப' வேண்டியதில்லை. அவர் சொல்லும் இடங்களுக்கு நேரே சென்று நீங்களே பார்த்துக் கொள்ளலாம். நானும் பார்த்திருக்கிறேன் - அதனால் அவர் சொல்வதை நான் சும்மா அவர் சொல்வதால் நம்புவதாக எண்ண வேண்டாம்.

தற்காலத்திலும் வைணவம் உட்பட எல்லா இந்து சமயத்தாரிடையேயும் தீண்டாமை இருக்கிறது. அது இருக்கிறது என்பதால் நடக்காததையெல்லாம் நீங்கள் சொன்னால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை.

திருப்பாணாழ்வாரைப் போற்றும் ஐயங்கார்கள் பலரும் சாதி வேறுபாடு பார்க்கிறார்கள் என்பதை நாம் பதிவுலகத்திலேயே பார்க்கலாம். அதனால் அதனை நான் மறுக்கவில்லை. நான் சொல்வதெல்லாம் நினைவிலிருந்து ஏதோ எழுதினோம் என்று நடக்காததை எல்லாம் எழுதுவதைப் பற்றி தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆண்டாளும் அந்தண குலத்தவர் என்று எண்ணப்படுபவர்; மாணிக்கவாசகரும் அப்படியே. அப்படி இருக்க தாத்தாச்சாரியார் சொன்னது தீட்சிதர் மேல் சொல்லப்பட்ட அவதூறாகத் தான் தோன்றுகிறது. //

அவர்களெல்லாம் என்ன சாதி என்பதில் எனக்கு அக்கறை இல்லை, திருவள்ளுவர் ஒரு பார்பனர் என்று பரப்புரை செய்ப்படுவதையும் தான் பார்க்கிறோம். 100 ஆண்டுகள் கழித்து இளையராஜாவின் புகழுக்கு ஏற்ப அவர் அந்தண குலத்தில் பிறந்தவர் என்று கூட வரலாறு எழுதப்படலாம்.

தாத்தாசாரியார் உண்மை சொன்னாரா பொய் சொன்னாரா என்பது எனக்கு கவலை இல்லை. அவர் சொன்னதை வைத்து தான் நான் குறிப்பிட்டேன்.

//தாத்தாச்சாரியார் சொன்னதைப் பார்த்தாலும் அவர் ஏதோ நினைவில் இருந்து சொல்லியது போல் தான் இருக்கிறது; இது உண்மையிலேயே நடந்ததா என்ற ஐயம் எனக்கு உண்டு.
//

உங்களுக்கு ஐயம் இருப்பது போன்றே..அவர் சொல்வது சரியாகக் கூட இருக்கும் ஏற்கும் மனநிலை எனக்கு உண்டு. அது அவரவர் உரிமை. நான் தவறு என்று சொல்லவரவில்லை.

***

முற்றிலும் கற்பனையில் இருந்து எழுதவில்லை என்பதை உங்களுக்கு காட்டிவிட்டேன். தாத்தாசாரியார் தவறு செய்தார், இல்லை என்கிற விவாதத்திற்கு நான் செல்லவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்தொடரில் தாத்தாச்சாரியார் சொன்னதை எல்லாம் விசாரித்து அவரிடமே மேற்கொண்டு கேட்டு சில நூல்கள் இத்தொடர் வந்த பின்னர் வந்ததாம்; அவை கிடைத்தால் படித்துப் பார்க்க வேண்டும்.
//

மேலும் அந்த தொடரில்...தாத்தாச்சாரியார் மாணிக்கவாசகர் என்னும் சைவரை தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லவில்லை, ஒரு தீட்சிதர் (அவ்வாறு நம்பி) சொன்னதாகவே சொல்லி இருக்கிறார். தீட்சிதர் மாணிக்கவாசகரை சூத்திரனாக அவருக்கு கிடைத்த தரவுகள் அடிப்படையில் சொல்லி இருக்கலாம் என்பதே தாத்தாச்சாரியாரின் கட்டுரையில் இருந்து நான் புரிந்து கொள்கிறேன். எனவே மாணிக்கவாசகரை தாழ்ந்த குலத்தவராக தாத்தாச்சாரியார் பார்த்தார் என்பதை அவர் எழுத்தில் இருந்து சொல்ல இயலாது. தீட்சிதருக்கு அந்த பார்வை இருந்தது என்பதாகத்தான் (என்னால்) நினைக்க முடிகிறது.

தாத்தாச்சாரியா அந்த கட்டுரைகளை எழுதவில்லை, நக்கீரன் ஆள் வைத்து எழுதியதாகவும் சிலர் என்னிடம் சொன்னதுண்டு. தாத்தாச்சாரியார் தரப்பு நக்கீரன் கட்டுரையை மறுக்கவில்லை என்பதால் சிலர் சொல்வதை நான் எடுத்துக் கொள்வதில்லை

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//மாறாக வன்கொடுமை வழக்கு வரும் என்பது தான்.//

சரியான கட்டுரை

dondu(#11168674346665545885) சொன்னது…

//இருந்தாலும் நீங்கள் இவ்வளவு ஆவலாக இருப்பதால் நான் தேடி எடுத்துப் படித்துப் பார்த்தேன். பெருமாளுக்கு பதிலாக ஆண்டாள், திருப்பணாழ்வார் பெயருக்கு பதில் மாணிக்கவாசகர் என்று இருந்தது.//

சமீபத்தில் 1957-ல் நான் படித்த சென்னை திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளி கட்டிடம் சம்பந்தமாக நான் என் அத்தை பிள்ளை ஸ்ரீதருக்கு ஒரு தகவல் சொன்னேன்.

அதாகப்பட்டது, சிப்பாய் கலகத்தின் போது ஹிந்து உயர்நிலை பள்ளி மீது பிளேனில் இருந்து குண்டு போட்டார்கள், இருப்பினும் கட்டிடம் தாக்கு பிடித்து நின்றது.

11 வயதே அப்போது ஆகியிருந்த நான் என்னை விட 4 மாதம் சின்னவனிடத்தில் இதை கூறியதும், அவனும் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகி என் அப்பாவை இது பற்றி கேட்க, அவர் எங்கள் இருவரையும் குறும்பு புன்னகையுடன் நோக்கி, கூறியதாவது:

1. சிப்பாய் கலகம் 1857-ல் நடந்தது.
2. அப்போது பிளேன் எல்லாம் கிடையாது
2. இந்து உயர்நிலை பள்ளியின் அக்கட்டிடமும் இருபதாம் நூறாண்டின் முதல் பத்தாண்டுக்குள்தான் கட்டப்பட்டது.
3. சிப்பாய் கலகம் தென்னிந்தியா பக்கமே வரவில்லை.
4. மற்றப்படி டோண்டு சொல்வது உண்மையே.

திடீரென இந்த நினைவுக்கு காரணமான ஹைப்பர் லிங் வாக்கியம் நீங்கள் சொன்னது, மேலே உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) சொன்னது…

//மேலும் அந்த தொடரில்...தாத்தாச்சாரியார் மாணிக்கவாசகர் என்னும் சைவரை தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லவில்லை, ஒரு தீட்சிதர் (அவ்வாறு நம்பி) சொன்னதாகவே சொல்லி இருக்கிறார். தீட்சிதர் மாணிக்கவாசகரை சூத்திரனாக அவருக்கு கிடைத்த தரவுகள் அடிப்படையில் சொல்லி இருக்கலாம் என்பதே தாத்தாச்சாரியாரின் கட்டுரையில் இருந்து நான் புரிந்து கொள்கிறேன். எனவே மாணிக்கவாசகரை தாழ்ந்த குலத்தவராக தாத்தாச்சாரியார் பார்த்தார் என்பதை அவர் எழுத்தில் இருந்து சொல்ல இயலாது. தீட்சிதருக்கு அந்த பார்வை இருந்தது என்பதாகத்தான் (என்னால்) நினைக்க முடிகிறது.

தாத்தாச்சாரியா அந்த கட்டுரைகளை எழுதவில்லை, நக்கீரன் ஆள் வைத்து எழுதியதாகவும் சிலர் என்னிடம் சொன்னதுண்டு. தாத்தாச்சாரியார் தரப்பு நக்கீரன் கட்டுரையை மறுக்கவில்லை என்பதால் சிலர் சொல்வதை நான் எடுத்துக் கொள்வதில்லை//
அடேங்கப்பா, ரொம்பத்தான் ஹானஸ்டாக ஒத்து கொள்கிறீர்களே. அரசன் நிர்வாணம் எனச்சொல்லிய குழந்தை குமரன் வாழ்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//1. சிப்பாய் கலகம் 1857-ல் நடந்தது.
2. அப்போது பிளேன் எல்லாம் கிடையாது
2. இந்து உயர்நிலை பள்ளியின் அக்கட்டிடமும் இருபதாம் நூறாண்டின் முதல் பத்தாண்டுக்குள்தான் கட்டப்பட்டது.
3. சிப்பாய் கலகம் தென்னிந்தியா பக்கமே வரவில்லை.
4. மற்றப்படி டோண்டு சொல்வது உண்மையே.

திடீரென இந்த நினைவுக்கு காரணமான ஹைப்பர் லிங் வாக்கியம் நீங்கள் சொன்னது, மேலே உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

1970க்கு முன்னான கீழ்வெண்மணி படுகொலை இருஞ்சூர் நாயுடு நடத்தியதை பலிஜா நாயுடு கண்டுகொள்ளவில்லை என்றும், சில சமயம் அதை ஆசிர்வாதம் செய்தார் என்றும் கூட 2008ல் கயிறு திரிக்கிறோமே... அது போலவா சார் ?

dondu(#11168674346665545885) சொன்னது…

//1970க்கு முன்னான கீழ்வெண்மணி படுகொலை இருஞ்சூர் நாயுடு நடத்தியதை பலிஜா நாயுடு கண்டுகொள்ளவில்லை என்றும், சில சமயம் அதை ஆசிர்வாதம் செய்தார் என்றும் கூட 2008ல் கயிறு திரிக்கிறோமே... அது போலவா சார் ?//
அவர் பெயர் இருஞ்சூர் நாயுடு அல்ல, கோபாலகிருஷ்ண நாயுடு.

கயிறெல்லாம் யாரும் திரிக்கவில்லை, பலீஜா நாயுடு ஆசீர்வாதம் செய்ததாகவும் கூறவில்லை.

ஆனால் கோபாலகிருஷ்ண நாயுடுவின் பெயரை மறந்தும் கூட உச்சரிக்கவில்லை, அதாவது கண்டு கொள்ளவில்லை என்பதுதான் நிஜம்.

அதுவே அந்த மிராசுதாரின் பெயர் கோபாலகிருஷ்ணய்யராக இருந்தால் என்னவெல்லாம் கூறியிருப்பார் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறோம்.

மற்றப்படி நீங்கள் சொல்வது தவறில்லை என்று வேண்டுமானால் வைத்து கொள்ளவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//கயிறெல்லாம் யாரும் திரிக்கவில்லை, பலீஜா நாயுடு ஆசீர்வாதம் செய்ததாகவும் கூறவில்லை.

ஆனால் கோபாலகிருஷ்ண நாயுடுவின் பெயரை மறந்தும் கூட உச்சரிக்கவில்லை, அதாவது கண்டு கொள்ளவில்லை என்பதுதான் நிஜம்.//

இதற்கு பலர் பலமுறை விளக்கம் சொல்லியாகிவிட்டது. அன்றைக்கு கம்யூனிஸ்டுகள் தூண்டுதலால், கிராமத்தினர் கோபால கிருஷ்ணனுக்கு எதிராக திரண்டனர், கோபால கிருஷ்ணனுக்கு மிராசுதார் என்கிற கருவம். நிகழ்ந்தவை அனைத்தும் கோபால கிருஷ்ணன் ன்னும் மிராசுதாரின் வெறி, இதனை சாதகமாக்கி அன்றைய திமுக அரசிற்கு பிரச்சனை கொடுக்க முயற்சித்தனர். முழுக்க முழுக்க கம்யூனிஸ்டுகள் தூண்டுதலால் நடந்த நிகழ்விற்கு பெரியார் எப்படி பொறுப்பேற்க முடியும்.... கோபால கிருஷ்ணனுக்கு ஆதரவாக பெரியார் எதையும் பேசி இருக்காத போது உங்கள் திரித்தல் வரலாற்று திரித்தல் மட்டுமே. 40 குழந்தைகள் கருகி இறப்பதற்குக் காரணமான கும்பகோணம் தீ விபத்திற்கும் ஒரு பார்பனரும் அவர் பள்ளியும் தான் காரணம், அதை சோ இராமசாமி கண்டிக்கவில்லை என்பதற்காக சோ இராமசாமி அந்த கும்பகோணம் பாப்பானுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று சொல்லுவீர்கள் என்றால் நீங்கள் சொல்வதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.

//அதுவே அந்த மிராசுதாரின் பெயர் கோபாலகிருஷ்ணய்யராக இருந்தால் என்னவெல்லாம் கூறியிருப்பார் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறோம்.//

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று கூப்பிட முடியும், அத்தைக்கு என்றுமே மீசை முளைக்கவே முளைக்காது. அதற்காக பார்ப்பனர் பவிசு என்று சொல்லவரவில்லை. நாங்க தான் காஞ்சிபுரம் சங்கராமனுக்கு என்ன நடந்தது என்று அறிந்து கொண்டுள்ளோமே.

dondu(#11168674346665545885) சொன்னது…

//கோபால கிருஷ்ணனுக்கு ஆதரவாக பெரியார் எதையும் பேசி இருக்காத போது உங்கள் திரித்தல் வரலாற்று திரித்தல் மட்டுமே.//
ஆதரவாக பேசினார் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை என்பதை பின்னுட்டத்திலேயே சொல்லியாகிவிட்டது. ஆனால் அதற்காக கோபாலகிருஷ்ண நாயுடுவின் பெயரைக் கூட மறந்து உச்சரிக்கவில்லை. இவ்வளவு பேர் எரிக்கப்பட்டு இறந்ததற்கு வருத்தம் தெரிவித்ததாகவும் தெரியவில்லை. அதைத்தான் கூறினேன்.

கும்பகோணம் பள்ளி உரிமையாளர் பெயர் புலவர் பழனிச்சாமி என அறிகிறேன். அவர் பார்ப்பனர் என நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் செய்திகளில் அவரது சாதி கூறப்படவில்லை. ஒருவேளை பழனிச்சாமி அய்யரோ?

விபத்தையும் வேண்டும் என எரித்ததையும் கம்பேர் செய்ய ஒரு பெரிய மனதுதான் வேண்டும். அது உங்களிடம் உள்ளது.

//அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று கூப்பிட முடியும், அத்தைக்கு என்றுமே மீசை முளைக்கவே முளைக்காது.//
பார்ப்பனாராக இருந்தால் மட்டும் சாதிப்பெயரை போடுவதும் மற்றவராக இருந்தால் சமரச சன்மார்க்கத்துடன் நடப்பதுமான செலக்டிவ் அம்னீசியா நிறைந்த காலத்தில் நான் சொன்னதற்கு பெரிய ஊகம்கூட தேவைப்படாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆதரவாக பேசினார் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை என்பதை பின்னுட்டத்திலேயே சொல்லியாகிவிட்டது. ஆனால் அதற்காக கோபாலகிருஷ்ண நாயுடுவின் பெயரைக் கூட மறந்து உச்சரிக்கவில்லை.//

அது என்ன இராம நாமமா ? அப்படியே இருந்தாலும் அதை எப்படி இராமசாமி உச்சரிப்பார்.

//இவ்வளவு பேர் எரிக்கப்பட்டு இறந்ததற்கு வருத்தம் தெரிவித்ததாகவும் தெரியவில்லை. அதைத்தான் கூறினேன்.
//
இன்னும் 200 ஆண்டுகள் கழித்து பெரியார் ஆதரவாக இருந்தார் என்று உங்கள் பதிவைக் காட்டி கூட சிலர் சர்சை செய்யலாம். 40 ஆண்டுகள் கழித்து ஒரு நிகழ்வை திரிக்கும் போது, நிகழ்வின் போது என்ன என்னவெல்லாம் நடந்தது என்று யாருக்குமே தெரியாது என்பதால் திரிப்பது நமக்கு வசதி தான். 40 ஆண்டுகளுக்கு முன் பல பார்பன செய்தி இதழ்கள் இருந்தன. அவற்றி கோபால கிருஷ்ண நாயுடுவின் செயலைக் கண்டிக்கும் கட்டுரைகள் எதுவுமே இல்லை என்பதற்காக வருணாசிர சாதி அடுக்கில் ஒன்றான நாயுடு சாதிக்கு எதிராக சூத்திர சாதியைச் சேர்ந்த தலித்துகளை எரித்ததை பார்பன பத்திரிக்கைகள் கண்டுகொள்ளவில்லை என்று டோண்டு இராகவன் போல் நானும் எழுத முடியும், ஆனால் செய்ய மாட்டேன், செய்தால் அது முற்றிலும் கற்பனையான திரித்தலே.

//கும்பகோணம் பள்ளி உரிமையாளர் பெயர் புலவர் பழனிச்சாமி என அறிகிறேன். அவர் பார்ப்பனர் என நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் செய்திகளில் அவரது சாதி கூறப்படவில்லை. ஒருவேளை பழனிச்சாமி அய்யரோ?//

சங்கராமனுக்கு சாதி போட்டு தினமலர் போன்ற பத்திரிக்கைகள் வெளி இடுவதில்லை. காரணம் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்தவையே.

//விபத்தையும் வேண்டும் என எரித்ததையும் கம்பேர் செய்ய ஒரு பெரிய மனதுதான் வேண்டும். அது உங்களிடம் உள்ளது.//

விபத்தோ, கொலையோ தொடர்பில்லாதவரை அதில் தொடர்பு படுத்தும் செயல் எல்லாம் ஒன்று தான் டோண்டு சார்.

//பார்ப்பனாராக இருந்தால் மட்டும் சாதிப்பெயரை போடுவதும் மற்றவராக இருந்தால் சமரச சன்மார்க்கத்துடன் நடப்பதுமான செலக்டிவ் அம்னீசியா நிறைந்த காலத்தில் நான் சொன்னதற்கு பெரிய ஊகம்கூட தேவைப்படாது.//

இஸ்லாம் தீவிரவாதிகள் குண்டு வைத்தார்கள் என்று இந்துத்துவ பத்திரிக்கைகள் எழுதுவதில்லையா ? அவர்களிடம் சென்று உங்களுக்கு என்ன வகை அம்னீசியா என்று கேட்டு இருக்கிறீர்களா ? குற்றவாளி நித்யானந்தம் என்றால் அவன் தவறு இழைக்கக் கூடியவன், அதுவே காஞ்சி சங்கராச்சாரியார் என்றால்.......அவாளெல்லாம் அப்படி செய்திருப்பா என்று நினைப்பதே பாபம்......ஏழேழு சென்மத்துக்கு சண்டாளனாக பிறக்க வேண்டும்...சுனாமி வரும் என்று ஆசிகொடுப்பதெல்லாம் என்ன வகை அம்னீசியா சார்

dondu(#11168674346665545885) சொன்னது…

முக்கியமான விஷயத்துக்கு வாருங்கள். இப்போது நீங்கள் கூறியதைப் பாருங்கள்.
//அக்னிகோத்ரம் தாத்தாச்சாரியார் அவர் நாத்திகர் இல்லை, வைதீக சமயம் சார்ந்தவர், 100 வயதை ஒட்டி மறைந்தவர், சாகுமுன் பொய் சொல்லிவிட்டு செத்துப் போக பெரிய காரணம் எதுவும் இல்லை. அவர் நக்கீரனில் தொடராக எழுதிய இந்து மதம் எங்கே போகிறது ? என்று எழுதிய தொடரில் இருந்த தகவல்களில் ஒரு பகுதியில் பெருமாள் பக்கத்தில் தலித் ஆழ்வார் இருக்கக் கூடாது...... என்ற சர்சை குறித்து எழுதி இருந்தார்.

நான் இந்த தகவலை இந்த ஒரு பதிவில் மட்டுமே எழுதவில்லை, 4 - 5 பதிவில் ஏற்கனவே இது பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறேன்.

திருபானாழ்வார் கதையே அவரை ஒதுங்கிப் போகச் சொல்லியதில் இருந்து தானே தொடங்குது.//

அது கடைசியில் நீங்கள் சொன்னது போல் இல்லை என குமரன் நிறுவி விட்டார். நீங்களும் ஒத்து கொண்டீர்கள்.

குமரன், கூறுவது,
//இனி மேல் நினைவு வைத்திருந்து தாத்தச்சாரியார் சொன்னது பெருமாள் பக்கத்தில் திருப்பாணாழ்வாரை ஏதோ ஒரு மடாதிபதி வைக்கக்கூடாது என்று சொல்லவில்லை; ஆண்டாள் பக்கத்தில் மாணிக்கவாசகரை வைக்கக்கூடாது என்று ஏதோ ஒரு தீட்சிதர் சொன்னார் என்று சொல்லி வாருங்கள். அதுவும் உண்மையாக நடந்தது என்று சொல்ல இயலாது; தாத்தாச்சாரியார் அப்படி சொன்னார்; அவர் வயதான காலத்தில் பொய் சொல்லத் தேவையில்லை; அவர் சொன்னதை நான் சொல்கிறேன் என்று சொல்லலாம்.//
அவ்வாறு செய்வீர்களா? அது மட்டுமல்ல நீங்கள் இந்த தவறான செய்தியை மேலும் உங்களது நான்கைந்து பதிவுகளில் கூறியுளாதாக நீங்களே கூறியுள்ளீர்கள். அங்கெல்லாம் சென்று தேவையான திருத்தம் செய்யவியலுமா?

உங்களுக்கும் எனக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இந்த எனது வேண்டுகோளில் உள்ள நியாயத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) சொன்னது…

கீழ்வெண்மணி விஷயம் நடந்தபோது எனக்கு வயது 22. அக்கால கட்டத்திலேயே அதை நான் நேரடியாகவே அவதானித்தவன். ஆகவே எனது நினைவு அதை பொருத்த மட்டில் first hand தகவல்களின் அடிப்படையில்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//அவ்வாறு செய்வீர்களா? அது மட்டுமல்ல நீங்கள் இந்த தவறான செய்தியை மேலும் உங்களது நான்கைந்து பதிவுகளில் கூறியுளாதாக நீங்களே கூறியுள்ளீர்கள். அங்கெல்லாம் சென்று தேவையான திருத்தம் செய்யவியலுமா?//

தகவலின் சாரத்தில் தவறு இல்லை, பெயர்கள் மட்டுமே தவறு. ஒரு பதிவில் மாணிக்கவாசகருக்கு பதிலாக 'நந்தனார்' என்றும் எழுதி இருக்கிறேன்.


//உங்களுக்கும் எனக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இந்த எனது வேண்டுகோளில் உள்ள நியாயத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.//

என்னுடைய அசட்டு தனங்கள் எனக்கே தெரிவதற்காக நான் எழுதிய அசட்டுத்தனங்களையெலலாம் அழிக்காமல் வைத்திருக்கிறேன். என்று ஒரு பதிவில் உங்களைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். (வாக்கியம் நினைவு இல்லை சாரம் மட்டுமே நினைவு இருக்கிறது). அதற்காக நான் தகவல் பிழையாக கூறிய கருத்துகள் அசட்டுத்தனமானவை என்று நான் குறிப்பிடவில்லை.

உங்களுக்கு ஒரு ஞாயம் ஊருக்கு ஒரு ஞாயமா ?

உங்களுடன் மாறுபட்ட கருத்து உண்டு, அதைக் கருத்து வேறுபாடு என்று என்னால் சொல்ல முடியாது, அதற்காக மதிப்பை குறைப்பது கிடையாது. பதிவின் கருத்துகள் பதிவுக்கான மட்டுமே என்று உறுதியாகவே உள்ளேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கீழ்வெண்மணி விஷயம் நடந்தபோது எனக்கு வயது 22. அக்கால கட்டத்திலேயே அதை நான் நேரடியாகவே அவதானித்தவன். ஆகவே எனது நினைவு அதை பொருத்த மட்டில் first hand தகவல்களின் அடிப்படையில்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

அப்படி என்றால் அன்றைய பார்பன உரிமையாளர்களின் செய்தி இதழ்களில் அந்நிகழ்வுகள் குறித்து கூறியவற்றை நீங்கள் சேர்த்தே சொல்லலாமே.

priyamudanprabu சொன்னது…

நானும் படிசிக்கிட்டு இருக்கேனுங்கோ

dondu(#11168674346665545885) சொன்னது…

நான் ஆக்சுவலாக சொன்னது, என்னவென்றால்:

“பல விஷயங்களில் கருத்து சொல்லி எனது நிலையை தெளிவாக்கி விட்டேன். அக்கருத்துக்களில் மாற்றம் இல்லை. ஆனால் இனிமேலும் அதை சொல்லித் திரிய வேண்டாம் என்றே நினைக்கிறேன். ஆகவே இனிமேல் நடேசன் பூங்காதான். டோண்டு ராகவையங்காரும் வரமாட்டான் (ஓசை செல்லா அவர்கள் கவனிக்க).

ஆனால் ஒரு விஷயம். எந்தப் பழைய பதிவுகளையும் இப்போது எடுக்கும் முடிவுகள் காரணமாக திருத்தவோ நீக்கவோ போவது இல்லை. சொன்னவை சொன்னதுதான்”.

ஆக நான் மாற்ற மாட்டேன் என்னது சொன்ன கருத்துக்களைத்தான். அதுவும் அவற்றால் மனம் புண்பட்டனர் என்பதாலேயே. அவற்றில் மற்றப்படி தகவல் பிழை ஏதும் இல்லை. என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களிலு மாற்றம் இல்லை.

ஆனால் திருப்பாணாழ்வார் விஷயத்தில் அப்பட்டமான தகவல் பிழை இருக்கிறது. அதைத்தான் திருத்துமாறு கேட்டேன்.

மற்றபடி அதை செய்வதும் செய்யாததும் உங்கள் இஷ்டம்.

பை தி வே டோண்டு ராகவையங்கார் மட்டும் பிறகும் வந்திருப்பது அந்தந்த சந்தர்ப்பங்களின் extreme provocation-ஆல்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Kesavan சொன்னது…

//இன்னும் 200 ஆண்டுகள் கழித்து பெரியார் ஆதரவாக இருந்தார் என்று உங்கள் பதிவைக் காட்டி கூட சிலர் சர்சை செய்யலாம். 40 ஆண்டுகள் கழித்து ஒரு நிகழ்வை திரிக்கும் போது, நிகழ்வின் போது என்ன என்னவெல்லாம் நடந்தது என்று யாருக்குமே தெரியாது என்பதால் திரிப்பது நமக்கு வசதி தான்.//

அதே போலத்தான் இன்றைய கடவுள் எதிர்பாளர்களும் இந்து மத எதிர்பாளர்களும் பழைய விஷயங்களை திரிகிறீர்கள் போலும் :) இது திருபானாழ்வர் விஷயத்திலிருந்து நன்றாக தெரிகிறது

பித்தனின் வாக்கு சொன்னது…

&&&&

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆக நான் மாற்ற மாட்டேன் என்னது சொன்ன கருத்துக்களைத்தான். அதுவும் அவற்றால் மனம் புண்பட்டனர் என்பதாலேயே. அவற்றில் மற்றப்படி தகவல் பிழை ஏதும் இல்லை. என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களிலு மாற்றம் இல்லை.//

நான் ஏற்கனவே 4 - 5 பதிவுகளில் குறிப்பிட்ட தகவலைச் சொல்லி இருக்கிறேன் என்பது என்னுடைய ஒப்புதல் தான், எனவே திரும்ப போய் எங்கே எல்லாம் மாற்ற வேண்டும் என்பது தேவை அற்றது.

பிரச்சனை தகவல் பிழை குறித்தது மட்டுமே அல்ல, அப்படி ஒரு நிகழ்வு நடந்ததா இல்லையா என்பது குறித்து மட்டுமே, பெயர் மாற்றங்கள் தவிர்த்து நிகழ்வுகள் தாத்தாச்சாரியாரின் அடிப்படையில் உண்மை என்று எனது கருத்துக்களை கூறிவிட்டேன். தகவல் பிழை என்பது வேறு தகவழே பிழை என்பது வேறு என்பதால் தகவல் பிழையாக எழுதியவை அப்படியே இருந்துவிட்டு போகட்டும், உணர்ச்சி வசப்படுகிறவர்களுக்கு எனது தகவல் பிழை ஒரு பொருட்டே அல்ல. தகவல் 100 விழுக்காடு சரி என்று சொன்னாலும் கூட தன் கருத்துக்களை மாற்றிக் கொள்ளாத சமூகத்தில் தகவல் பிழையாக எழுதியது குறித்து நான் அலட்டிக் கொள்ளப் போவது இல்லை.

இந்த இடுகையில் தகவல் பிழையை ஏற்கனவே சரி செய்து இருக்கிறேன். இத்துடன் முடிந்தது.

*****

மேலும் கோபால கிருஷ்ண நாயுடுவை பலிஜா நாயுடு கண்டு கொள்ளவில்லை என்று சொல்லும் இடத்திலெல்லாம் வன்கொடுமைக்கு எதிராக வருணாசிரம கருமாந்திரமும் எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை என்பது பதிவு செய்யப்படாத உண்மை என்றும் இங்கே கூறிக் கொள்கிறேன்.

ஒருத்தன் நல்லவன் என்று சொல்லும் போது அங்கே இருக்கும் மற்றவன் கெட்டவன் கிடையாது. அதே போல் ஒருவனை கெட்டவன் என்னும் போது பக்கத்தில் இருப்பவன் நல்லவனாகவும் கொள்ள முடியாது. தலையிடாத நிகழ்வொன்றைக் குறித்து கேள்வி எழுப்பும் வினாக்களுக்கு இதுவே பதில்.

இது காஞ்சிபுரம் கொலையை எதிர்த்து கட்டுரை எழுதாத சோ அண்ட்கோ நடத்தும் துக்ளக் இதழுக்கும் பொருந்தும் என்பதைக் கூறிக் கொள்கிறேன்.

//ஆனால் திருப்பாணாழ்வார் விஷயத்தில் அப்பட்டமான தகவல் பிழை இருக்கிறது. அதைத்தான் திருத்துமாறு கேட்டேன். //

தகவல் பிழையை ஏற்கனவே பதிவில் திருத்தியாகிவிட்டது

கோவி.கண்ணன் சொன்னது…

//அதே போலத்தான் இன்றைய கடவுள் எதிர்பாளர்களும் இந்து மத எதிர்பாளர்களும் பழைய விஷயங்களை திரிகிறீர்கள் போலும் :) இது திருபானாழ்வர் விஷயத்திலிருந்து நன்றாக தெரிகிறது//

வாய்யா வா.....சந்துல சிந்தா ? பக்(கா)க வாத்தியமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// பிரியமுடன் பிரபு said...

நானும் படிசிக்கிட்டு இருக்கேனுங்கோ//

எக்சாம் எப்போ ?

Kesavan சொன்னது…

//வாய்யா வா.....சந்துல சிந்தா ? பக்(கா)க வாத்தியமா ? //

இந்த பதில் சரியானதாக இல்லை , எனக்கு சந்துல சிந்து பண்ற வேலை எனக்கு தெரியாது . நான் யாருக்கும் பக்க வாத்தியமும் கிடையாது. உங்கள் பதிலில் இருந்து தான் இந்த கேள்வியை கேட்டேன் ? முடிந்தால் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள் .

Kesavan சொன்னது…

//வாய்யா வா.....சந்துல சிந்தா ? பக்(கா)க வாத்தியமா ? //

இந்த பதில் சரியானதாக இல்லை , எனக்கு சந்துல சிந்து பண்ற வேலை எனக்கு தெரியாது . நான் யாருக்கும் பக்க வாத்தியமும் கிடையாது. உங்கள் பதிலில் இருந்து தான் இந்த கேள்வியை கேட்டேன் ? முடிந்தால் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள் .

கோவி.கண்ணன் சொன்னது…

// Kesavan said...

//வாய்யா வா.....சந்துல சிந்தா ? பக்(கா)க வாத்தியமா ? //

இந்த பதில் சரியானதாக இல்லை , எனக்கு சந்துல சிந்து பண்ற வேலை எனக்கு தெரியாது . நான் யாருக்கும் பக்க வாத்தியமும் கிடையாது. //

என்ன தம்பி இப்படி கோவிக்கிறிங்க. நான் கிண்டலுக்கு தானுங்க சொன்னேன். யாருக்கும் இல்லாட்டியும் உங்க வீட்டுல நீங்க பக்க வாத்தியம் தானே. எல்லா வீட்டிலும் நடப்பது தான். :)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இஸ்லாம் தீவிரவாதிகள் குண்டு வைத்தார்கள் என்று இந்துத்துவ பத்திரிக்கைகள் எழுதுவதில்லையா ? அவர்களிடம் சென்று உங்களுக்கு என்ன வகை அம்னீசியா என்று கேட்டு இருக்கிறீர்களா ? குற்றவாளி நித்யானந்தம் என்றால் அவன் தவறு இழைக்கக் கூடியவன், அதுவே காஞ்சி சங்கராச்சாரியார் என்றால்.......அவாளெல்லாம் அப்படி செய்திருப்பா என்று நினைப்பதே பாபம்......ஏழேழு சென்மத்துக்கு சண்டாளனாக பிறக்க வேண்டும்...சுனாமி வரும் என்று ஆசிகொடுப்பதெல்லாம் என்ன வகை அம்னீசியா சார்
//

ஐ லைக் இட்~!

கோவி.கண்ணன் சொன்னது…

//மற்றபடி அதை செய்வதும் செய்யாததும் உங்கள் இஷ்டம்.//

டோண்டு சார்,

உங்கள் கற்பனையில் உதித்த 'பலிஜா நாயுடு' உளரல்கள் அங்கங்ஏ அப்படியே இருக்கும் போது, நான் தகவல் பிழையாக எழுதியவற்றை ஒப்புக் கொண்டதே போதும் மாற்றத் தேவை இல்லை என்று விட்டுவிடுகிறேன். தகவல் பிழைகளை விட கற்பனை வாத உளரல்கள் நச்சுக்கருத்துகள் என்பது என் கணிப்பு.

dondu(#11168674346665545885) சொன்னது…

பலீஜா நாயுடு என ஈவேராவே தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டது கற்பனையில்லை.

கோபால கிருஷ்ண நாயுடுவை பெயர் குறிப்பிட்டு கண்டிக்காதது உண்மை.

44 தலித்துகள் எரிக்கப்பட்டதற்கு ஒப்புக்குக் கூட வருத்தம் தெரிவிக்காது வசவச அறிக்கை விட்டது நிஜம்.

ஆகவே இவற்றில் ஏதும் தகவல் பிழை இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said...

பலீஜா நாயுடு என ஈவேராவே தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டது கற்பனையில்லை.//

என்னைய 'ஒரு சாதிப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறார்கள்' என்று நான் சொன்னால் நான் சாதிமீது விருப்பப்பட்டு கூறுகிறேன் என்று பொருள் இல்லை. அது ஒருவேளை டோண்டு இராகவன் வடகலை ஐயங்காருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். உதாரணத்துக்கு உங்களை ஒருவர் 'மூடன்' என்று விமர்சனம் செய்கிறான் என்று கூறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதை நான் 'டோண்டு இராகவன் தன்னை மூடன் என்று பிரபலபடுத்திக்கொள்கிறார்' என்று சொன்னால் அதன் பெயர் திரித்தல். அதை நீங்கள் உண்மை என்கிறீர்களா ?

// கோபால கிருஷ்ண நாயுடுவை பெயர் குறிப்பிட்டு கண்டிக்காதது உண்மை. 44 தலித்துகள் எரிக்கப்பட்டதற்கு ஒப்புக்குக் கூட வருத்தம் தெரிவிக்காது வசவச அறிக்கை விட்டது நிஜம்.//

பார்பன பத்திரிகைகளும் கூடத்தான் கண்டிக்கவில்லை, அதற்காக சாதிக் கொடுமை என்னும் வருணசிரமம் போற்றுவதற்காக, அல்லது காத்ததற்காக கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு பார்பன பத்திரிக்கைகள் ஆதரவாக இயங்கின என்று சொல்ல முடியுமா ?

சங்கராச்சாரி சுப்புரமணி கைதின் போது, 'பெரியவா அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தன்னை நிருபனம் செய்யனும்...சீதையே தீக்குளிச்சிருக்கா தெரியுமோன்னோ என்று சங்கராச்சாரிக்கு சொல்லி இருக்கலாமே' அவ்வாறு வேண்டு கோள் விடுத்த பத்திரிக்கைகள் எவை ? அவை ஏன் மழுப்பின, அல்லது வெளிப்படையாக பேஷ மறுத்தன ?

// ஆகவே இவற்றில் ஏதும் தகவல் பிழை இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

நான் தகவல் பிழை என்றே சொல்லவில்லை, கற்பனையான திரித்தல் என்றே கூறினேன்.

Kesavan சொன்னது…

முதல்வர் கலைஞர் அவர்கள் ஒரு பேட்டியில் " நான் இசை வெள்ளாளர் (Isai Vellalar caste) வகுப்பில் பிறந்ததற்காக பெருமை படுகிறேன் என்று சொன்னாரே :). இதை தவறு என்று யாரும் அன்று கண்டிக்க வில்லையே . ஒரு பார்பனர் அவருடைய ஜாதியை சொன்னால் மட்டும் அவர் ஜாதி வெறியன் . மற்றவர்களுக்கு இல்லை:)

கோவி.கண்ணன் சொன்னது…

// Kesavan said...

முதல்வர் கலைஞர் அவர்கள் ஒரு பேட்டியில் " நான் இசை வெள்ளாளர் (Isai Vellalar caste) வகுப்பில் பிறந்ததற்காக பெருமை படுகிறேன் என்று சொன்னாரே :). இதை தவறு என்று யாரும் அன்று கண்டிக்க வில்லையே . ஒரு பார்பனர் அவருடைய ஜாதியை சொன்னால் மட்டும் அவர் ஜாதி வெறியன் . மற்றவர்களுக்கு இல்லை:)//

ஒரு பேட்டி அரை பேட்டி என்றெல்லாம் சொல்லக் கூடாது, யார் வேண்டுமானாலும் இவ்வாறு கூறினார்கள் என்று எதையும் சொல்ல முடியும், இணைப்பு இருந்தால் கொடு.

அப்படியே இருந்தாலும் கூட என் சாதி கேவலம் இல்லை என்று சொல்லும் உரிமை தலித்துகள் உட்பட அனைவருக்கும் உண்டு. சாதிப் பெருமை பேசும் சாதிவெறியர்களும், சாதியால் தாழ்த்தப்பட்டவர்கள் 'தாங்கள் தாழ்ந்தவர்கள் இல்லை' என்று சொல்லுவதும் ஒரே மனநிலையைக் குறிக்காது.

Kesavan சொன்னது…

//அப்படியே இருந்தாலும் கூட என் சாதி கேவலம் இல்லை என்று சொல்லும் உரிமை தலித்துகள் உட்பட அனைவருக்கும் உண்டு. சாதிப் பெருமை பேசும் சாதிவெறியர்களும், சாதியால் தாழ்த்தப்பட்டவர்கள் 'தாங்கள் தாழ்ந்தவர்கள் இல்லை' என்று சொல்லுவதும் ஒரே மனநிலையைக் குறிக்காது. //

ஒரு உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு ஜாதியை பார்க்காமல் நாடு நிலைமையுடன் ஆட்சி செய்ய வேண்டிய ஒரு முதல்வர் தான் தாழ்ந்த ஜாதி என்று சொல்லுவது எந்த மன நிலையை குறிக்கிறது என்று தெரிய வில்லை . ஒரு உயர்ந்த பதவியில் உள்ள ஒரு மதிய அமைச்சர் ஒரு ஊழல் வழக்கில் மாட்டிகொண்ட வுடன் அவர் தாழ்ந்த ஜாதியை சேர்ந்ததனால் அவர் மீது பழி சுமத்துகிறார்கள் என்று சொல்லுவது எந்த மன நிலையை குறிக்கிறது . ரிசர்வேஷேன் என்று ஒன்றை வைத்து கொண்டு நீ உயர்ந்த ஜாதியா உனக்கு அரசு தரப்பில் ஒன்றும் கிடையாது என்று சொல்லுவதும் , ஒரு FORWARD CAST ல் உள்ள ஒருவர் அரசாங்க உத்தியோகத்தில் அவருக்கு சரியான PROMOTION கொடுக்காமல் மற்ற பிரிவினருக்கு உடனடியாக கொடுப்பதும் எந்த விதத்தில் நியாயம் என்று தெரிய வில்லை .
உங்களை பொறுத்தவரை ஒரு பார்பனர் சாதாரணமாக ஒன்று சொன்னாலும் அதை பெரிது படுத்தி ஜாதி வெறியன் என்று சொல்லுவதும் , அதையே மற்றவர்கள் சொன்னால் அவர் சொல்லுவது நியாயம் என்று சொல்லுவதும் வழக்கமாக உள்ளது.

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்களை பொறுத்தவரை ஒரு பார்பனர் சாதாரணமாக ஒன்று சொன்னாலும் அதை பெரிது படுத்தி ஜாதி வெறியன் என்று சொல்லுவதும் ,//

உன்னை நான் அப்படி சொல்வது இல்லையே தம்பி.


//ரிசர்வேஷேன் என்று ஒன்றை வைத்து கொண்டு நீ உயர்ந்த ஜாதியா உனக்கு அரசு தரப்பில் ஒன்றும் கிடையாது எ//

முனிசிபல் வேலையில், வெட்டியான் வேலையில் அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது, பார்பனர்களில் படிக்காதவர்களே இல்லையா ? உங்களுக்கு தெரிந்து எத்தனை பார்பனர்கள் கடைநிலை ஊழியம் பார்க்கிறார்கள் ?

Kesavan சொன்னது…

//முனிசிபல் வேலையில், வெட்டியான் வேலையில் அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது, //

முடிந்தால் இந்த இடத்திலாவது வேலை வாங்கி தாருங்கள் . அங்கும் RESERVATION அல்லது கையூட்டு கொடுக்க வேண்டியதாக இருக்கும் .

//பார்பனர்களில் படிக்காதவர்களே இல்லையா ? உங்களுக்கு தெரிந்து எத்தனை பார்பனர்கள் கடைநிலை ஊழியம் பார்க்கிறார்கள் ? //

பார்பனர்களில் படித்து 98 சதவிகிதம் வாங்கியவனுக்கு கடை நிலை ஊழியம் தானா ? அதே வேறு ஜாதியில் 60 சதவிகிதம் எடுத்தவனுக்கு மருத்துவ படிப்பில் வாய்ப்பு ?

ஆமாம் இன்று பிராமணர்களை தவிர மற்ற ஜாதியினர் அவர்களை BC அல்லது MBC யில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்களே . இது பிராமனர்களின் சதியா :)

கிறிஸ்துவர்கள் , மற்றும் முஸ்லீம்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கும் இன்றைய அரசாங்கம் , பார்பனர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில்லையே ஏன் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger Kesavan said...

முடிந்தால் இந்த இடத்திலாவது வேலை வாங்கி தாருங்கள் . அங்கும் RESERVATION அல்லது கையூட்டு கொடுக்க வேண்டியதாக இருக்கும் .//

அதெல்லாம் வாங்கித்தருகிற வேளை இல்லை, சென்னை போன்ற பெருநகரங்களில் அரை ட்ராயரை போட்டுக் கொண்டு மேன் ஹோலில் இறங்கினால் நாளையில் இருந்து வேலைக்கு வந்துடுன்னு சேர்த்துக் கொள்வார்கள், தெரிந்தவர்கள் இருந்தால் முயற்சிக்கச் சொல்லவும்.

// பார்பனர்களில் படித்து 98 சதவிகிதம் வாங்கியவனுக்கு கடை நிலை ஊழியம் தானா ? அதே வேறு ஜாதியில் 60 சதவிகிதம் எடுத்தவனுக்கு மருத்துவ படிப்பில் வாய்ப்பு ?//

உளரல் மெடிக்கல் காலேஜ் கட் ஆப் பார்த்துவிட்டு உளரவும். எந்த சாதியிலும் எஸ்ஸி/எஸ்டி உட்பட கட் ஆப் 90 விழுக்காட்டிற்கும் கீழே கிடையாது. இன்னும் எல்லாம் படிக்காமல் தான் இலவசமாக சீட்டு வாங்குகிறார்கள் என்கிற மனநிலையை மாற்றிக் கொள்ளவும், அவ்வளவு இளப்பமாக யாரும் கிடையாது. என்னுடன் படித்த மாணவர்களில் பார்பன மாணவர்கள் முதல் இடம் வந்து நான் பார்த்ததே இல்லை.


//ஆமாம் இன்று பிராமணர்களை தவிர மற்ற ஜாதியினர் அவர்களை BC அல்லது MBC யில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்களே . இது பிராமனர்களின் சதியா :)//

பார்பனர்கள் ஏன் தங்கள் சாதியை தாழ்த்தப்பட்டவர்கள் என்று அறிவிக்க கோரிக்கை வைக்கக் கூடாது ? வைத்தால் நான் வரவேற்பேன்.

// கிறிஸ்துவர்கள் , மற்றும் முஸ்லீம்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கும் இன்றைய அரசாங்கம் , பார்பனர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில்லையே ஏன் ?//

மூன்று விழுக்காடு கொடுத்துவிட்டால் அப்பறம் (50 - 97) 43 விழுக்காட்டில் பார்பனர்கள் போட்டி இட முடியாமல் போகும் என்பதால் இருக்குமோ.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்